விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label இனவெறி. Show all posts
Showing posts with label இனவெறி. Show all posts

Monday, 7 May 2012

முல்லை பெரியாறு: பார்ப்பனியத்திற்கெதிரான போராட்டம்!

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான நிபுணர்குழு,முல்லை பெரியாறு அணை மிகவும் பலமாக உள்ளது என்று தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.இக்குழு அறிவியல் பூர்வமான சோதனைகளை தகுந்த நிபுணர்களைக் கொண்டு நடத்திய பின்னரே தனது ஆய்வறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ளது.



இந்த ஆய்வறிக்கையின் மூலம் கேரள அரசுகள் இதுநாள் வரை எழுப்பிய சர்ச்சைகள அனைத்தும் மோசடியானைவை என்பது அம்பலத்திற்கு வந்துவிட்டது.தம்மை கம்யூனிஸ்டுகள் என்றுக்கூறிக்கொள்ளும் வலது,இடது போலிகள், இந்தியாவை அன்னியர்களுக்கு காட்டிக்கொடுக்கவும்,கூட்டிக்கொடுக்கவும், வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும், தமது இழிவான அரசியல் நோக்கத்திற்காகவே கேரள மக்கள் மத்தியில் மலையாள இனவெறியை தூண்டி அடையவே முல்லை பெரியாறு பிரச்சனையை கையிலெடுத்தன என்பது மீண்டும் ஒருமுறை இவ்வுலகிற்கு அம்பலமாகியுள்ளது.

முல்லை பெரியாறு அணை விவகாரம் மலையாள இனவெறியின் அடையாளம் மட்டுமல்ல.இந்த மலையாள இனவெறியின் உள்ளடக்கம் பார்ப்பனிய இழிவாகும்.

பொதுவில் தமிழர்கள் என்றாலே கீழானவர்கள் என்றக் கருத்தே கேரள மக்களிடம் விதைக்கப்பட்டு வேரூன்றி நிற்கிறது.

‘இப்படி தமிழர்களை கீழானவர்களாக பார்க்கும் கண்ணோட்டத்தை பார்ப்பனிய இழிசித்தாந்தமே இவர்களுக்கு அளிக்கிறது.இந்தியாவில் உள்ள மொழிகளிலே,தேசிய இனங்களிலேயே தமிழும்,தமிழர்கள் மட்டுமே, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக சமஸ்கிருதத்தை,பார்ப்பனிய பண்பாட்டை  எதிர்க்கும்,நிராகரிக்கும் பண்பாட்டை ,மரபை கொண்டுள்ளனர்.இம்மரபைச் சமூகம் கொண்டிருப்பதற்கான அடிப்படை தமிழ்மொழியின் வளமும், வளமான பண்பாடுமே ஆகும்.

தமிழ் மொழியின் வளமும்,தமிழ் பண்பாடும் தமிழ் மக்களுக்கு எந்த அளவிற்கு மேன்மையை தருகிறதோ,அதைவிட அதிகமாக பார்ப்பனிய பண்பாட்டிலும்,சமஸ்கிருதத்தாலும் செரிக்கப்பட்ட மொழியையும்,பண்பாட்டையும் கொண்டு உருவாகியுள்ள தேசிய இனங்கள், தமிழ் மக்களை பார்ப்பனிய கண்ணோட்டத்தில் இழிவாக பார்க்கும் மரபை கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களை மேற்கண்ட வகையில் இழிவாகக் கருதும் கண்ணோட்டத்தை இந்து பார்ப்பன மதம் ஒவ்வொரு முறை புதுப்பிக்கப்படும் போதும், மேற்கண்ட அவர்களின் கண்ணோட்டமும் மேலும் கூர்மையான வகையில் புதுப்பிக்கப்படுகிறது.

எனவே மக்களிடையே மேற்கண்ட கண்ணோட்டத்தையே மீண்டும்,மீண்டும் புதுப்பிக்கும் பார்ப்பன மயமாக்கப்பட்ட அரசு இயந்திரம் மற்றும் அரசியல்கட்சிகள் நீதிபதி ஆனந்த் தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கையை நிச்சயம் ஏற்கமாட்டார்கள். இவர்கள் மட்டுமல்ல உச்சநீதிமன்றமே இவ்வறிக்கையை ஏற்குமா என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை!

முல்லை பெரியாறு விசாரணை உச்சநீதிமன்றத்தில் 04.05.2012 அன்று நடைபெற்றது. அப்போது அணையை ஆய்வுச் செய்ய, நிபுணர்கள் இட்டத்துளையை மீண்டும் அடைக்க கேரள அரசு அனுமதிக்கவில்லை.அதை செய்வதற்கு தமிழக அரசுக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால்,உச்சநீதிமன்றமோ வழக்கு நிலுவையில் இருப்பதால் துளையை அடைக்க அனுமதி தரமுடியாது என்று மறுத்துள்ளது.முல்லை பெரியாறு அணையில் போடப்பட்ட துளை அணையின் பலத்தை ஆய்வு செய்வதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே போடப்பட்டதாகும்.வழக்கு நடக்கும்போது நீதிமன்ற வழிகாட்டலில் போடப்பட்ட துளையை நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படியே அடைப்பதால் வழக்கின் விசாரணையை எவ்விதத்திலும் பாதிக்கும் செயலாக அமைய முடியாது.

ஏனென்றால் மேற்கண்ட துளைகள் வழக்கிக்கு முன்பே போடப்பட்டவைகள் அல்ல. இருப்பவைகள்.வழக்கின் தேவைக்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் போடப்பட்ட துளைகளை மீண்டும் அடைப்பதில் தவறேதுமில்லை.இதற்கு மாறாக துளைகளை அடைக்க கூடாது என்ற முடிவுதான் அநீதியானது.வழக்கு தொடுக்கும் போது துளைப் போடப்படாத நிலையில்தான் அணை இருந்தது.எனவே அணையை வழக்கு தொடுக்கும் போதிருந்த நிலையில் வைத்திருக்க வேண்டியதுதான் இயல்பான நடைமுறையாக இருக்க முடியும்.

ஆனால் உச்சநீதிமன்றமோ இயல்பான நீதிமன்ற முறைகளுக்கு மாறான நிலையை எடுத்துள்ளது.இதுவே அதன் சார்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.இப்படி உச்சநீதிமன்றம் எடுத்துள்ள முடிவு அபூர்வமானதல்ல.ஏற்கனவே பாபர் மசூதி வழக்கு உட்பட பல முக்கிய வழக்குகளில் அதன் சார்புத்தன்மை வெளிப்பட்டேயுள்ளது.எனவே முல்லைபெரியாறு விவகாரத்தில் அதன் சார்புத்தன்மை வெளிப்பட்டுள்ளது அதிசய நிகழ்வல்ல.பார்ப்பனியமயமாக்கப்பட்டுள்ள கட்டமைப்பில் இருந்து சார்புத்தன்மை வெளிப்படுவது இயல்பான ஒரு நிகழ்வேயாகும்.அதே வேளையில் இப்படிபட்ட கட்டமைப்புகளில் இருந்து சார்பற்ற நிலை வெளிப்படுவதுதான் அதிசய நிகழ்வாகும்!

எனவே ஆயிரம் இழப்புகளையும்,பின்னடைவுகளை சந்தித்தாலும், அதைக் கண்டு நாம் துவண்டு போவதற்கு ஏதுமில்லை.பெருமைமிக்க நமது பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிப்போம்.தோல்விகள் பின்னடைவுகளில் இருந்து படிப்பினைகளைப் பெற்று முன்னேறுவோம்………!

தொடர்புடைய பதிவுகள்:


2.முல்லை பெரியாறு:தற்கொலைக்கு முயலும் கேரளா!