தோழர் suryajeeva மற்றும் தோழர்கள்,வாசகர்களுக்கு ! மாஅக-வை வலிந்து குறை சொல்வது எமது இலக்கோ,நோக்கமோ அல்ல.இந்தியா அரைக்காலணி,அரைநிலபிரபுத்துவ நாடு இங்கு விவசாயிகளுக்கான விவசாயப்புரட்சி நடத்தப்பட வேண்டும் என்ற நக்சல்பரிகளின் அடிப்படை நிலைப்பாடுகளில் இருந்து இந்த அமைப்பினர் முற்றிலும் எதிராக கடந்த எட்டாண்டுகளாக, அடிப்படை நிலைப்பாடுகளில் மாற்றம் எதையும் செய்யாமலேயே, இந்தியாவில் விவசாயிகளுக்கான விவசாயப்புரட்சி சாத்தியமில்லை என்ற நிலைபாட்டை தன்னிச்சையாக எடுத்து அதை நடைமுறையும் படுத்தினர்.
இதன் அடிப்படையில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பையே கலைக்கப்போவதாகவும் எமக்கு தகவல் தந்தனர்.உழுபவருக்கே நிலம்,உழைப்பவருக்கே அதிகாரம் என்ற முழுக்கத்தை முற்றிலும் கைவிட்டு கிராமப்புற வேலைகளையே முற்றாக புறக்கணித்தனர்.இதை ஏற்க மறுத்த நாங்கள் விவசாயிகளிடம் விரிவான ஆய்வுகளை நடத்தி ஐந்து அம்ச கோரிக்கைகளை தொகுத்தோம்.இந்த ஐந்து அம்ச கோரிக்கைகள் இந்தியா ஒரு அரைக்காலணி,அரைநிலப்பிரப்புத்துவ நாடு என்ற அடிப்படை நிலைப்பாட்டின் பருண்மையான வடிவமாகும்.இதை நாங்கள் செய்ததற்காகவே கடந்த எட்டாண்டுகளுக்கும் மேலாக அமைப்பில் இருந்தே ஓரங்கட்டப்பட்டோம்.இந்த ஓரங்கட்டுதல் மாவட்ட அளவில்தான் நடப்பதை போன்று மாஅக-எமக்கு ஒரு பார்வையை உருவாக்கியது.இது அப்பட்டமான, நயவஞ்சகமான இரட்டை வேடமாகும்.எமது பகுதியை ஓரங்கட்டி,இழிவு படுத்திய செயல் மாஅக-வின் ஒப்புதலுடன் தான் நடந்தது என்பதை 2010-ம் ஆண்டு தொடக்கத்தில்தான் நாங்கள் ஆதாரத்துடன் கண்டுபிடித்தோம்.எமது ஐந்து அம்ச கோரிக்கை தொகுப்பிற்காக எம்மை ஓரங்கட்டியது என்பது மாஅக ஆவணங்களில் உள்ள அடிப்படை நிலைப்பாட்டிற்கு முற்றிலும் புறம்பாக நயவஞ்சகமாக நடந்து கொள்கிறது என்பதற்கான சிறந்த ஆதாரமாகும்.ஆகவே மாஅக-தான்,தான் வகுத்த அடிப்படை நிலைபாட்டிற்கே எதிராகவும் ,முரண்பாடாகவும் ,சொல்லொன்றும்,செயல் ஒன்றுமாக நேர்மையற்று நடந்துகொண்டது.நாங்கள் இந்த நிமிடம் வரை அடிப்படை நிலைப்பாட்டை உறுதியாக பற்றி நிற்கிறோம்.அதன் அடிப்படையிலேயே மக்கள் திரள்பாதையில் ஐந்து அம்ச கோரிக்கையை விவசாயிகள் மத்தியில் மட்டுமல்ல,அனைத்து தரப்பு உழைக்கும் மக்கள் மத்தியிலும் விரிவாக கொண்டு சென்றுள்ளோம்.
அடிப்படை நிலைப்பாட்டிற்கு விரோதமாகவும்,எதிராகவும் உள்ள மாஅக எப்படி மக்கள் விரோத நடைமுறையை கொண்டுள்ளது என்பதைத்தான் இப்போது அம்பலப்படுத்தி வருகிறோம்.எமது இந்தப் பணி கோட்பாட்டு ரீதியானதே தவிர,யாரையும் குறை சொல்வதோ,தனி நபர் தாக்குதலோ அல்ல என்பதை தோழமையுடன் அனைத்து தோழர்களுக்கும்,வாசகர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.
விரைவில் எமது எட்டாண்டுகால உட்கட்சி போராட்டம் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்து வெளியிட இருக்கிறோம்.அப்போது முழு உண்மையும் வெளிவரும்.
ஜெயாவின் மக்கள் விரோத விலைவாசி உயர்வு பற்றிய கட்டுரையில், இந்தியாவில் உள்ள ஓட்டுகட்சிகள் அனைத்தையுமே அம்பலப்படுத்தியுள்ளோம்.அவர்களின் வரிசையில் புரட்சிகர சவடால் அடித்துக்கொண்டு ஊழல்,லஞ்ச லாவண்கள் மூலம் முறைகேடாக மக்கள் விரோத தன்மையில் மாஅக-வின் அணிகளின் புதிய தலைமுறையை சேர்ந்தவர்கள் சொத்து சேர்த்து வருவதும், அதை மாஅக நியாயப்படுத்தி வருவதையுமே நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம்.இவர்கள் இப்படி சொத்து சேர்க்கும் விவகாரம் எமக்கு மட்டும் தெரிந்த ரகசியம் அல்ல.எமது பகுதியில் பெரும்பான்மை மக்கள் அறிந்து வைத்திருப்பதுதான்.
புரட்சியின் பெயரால் புரட்சிகர சவடால் அடித்துக்கொண்டு செயல்படும் இவர்கள்தான் புதிய ஜனநாயக புரட்சிக்கு முதன்மையான விரோதிகளும்,துரோகிகளும் ஆவார்கள்.இவர்களின் இந்த துரோகம்தான் ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகளின் பிழைப்புவாதத்தை விட மிகவும் தீவிரமான,நுட்பமான புரட்சிக்கு எதிரான செயல்களாலும்.ஆகவே ஓட்டு சீட்டு பொறுக்கிகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதை காட்டிலும்,இந்த புரட்சிகர சவடால் அடிக்கும்,துரோகிகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதுதான் உண்மையான புரட்சிகர சக்திகளின் உடனடிப்
பணியாகும்.
இப்பணியின் தொடக்கம்தான் அந்த கட்டுரையில் நாங்கள் எழுதியிருப்பது.அடுத்தடுத்து ஏராளமான செய்திகளை நாங்கள் தர இருக்கிறோம்.
அவை அனைத்தையும் படித்துவிட்டு துரோகிகளை அடையாளம் காணுங்கள்!
எமது இந்தப் பணிக்கு ஆதரவு தாருங்கள்! நன்றி.