விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label மிருகக்காதல். Show all posts
Showing posts with label மிருகக்காதல். Show all posts

Thursday, 28 March 2013

சகோதர முறை திருமணங்கள் : தனி மனித உரிமையா? பாலியல் சீரழிவா?

சகோதர முறை திருமணங்கள் தனிமனித உரிமைகள் என, போலீசும், மனித உரிமையாளர்கள், ஜனநாயக வாதிகள் எனப் தம்மை கூறிக்கொள்ளும் மகஇக குழுமத்தினரும் கூறுகின்றனர். இந்து திருமணச்சட்டம் சகோதர முறை திருமணங்களை அங்கீகரிக்கவில்லை. இப்படி சட்டம் அங்கீகரிக்காத ஒன்றை மீறி, திருமணம் செய்து கொண்டால் என்ன செய்வது என்பதைப்பற்றியும் சட்டம் ஏதும் குறிப்பிடவில்லை.



சகோதர முறை திருணத்தைப்பற்றி இப்படி சட்டம் ஏதும் குறிப்ப்பிடவில்லை என்பதாலேயே, அது தவறில்லை என்பதுதான் மேலே நாம் குறிப்பிட்டுள்ளவர்களின் வாதமாகும்.

இந்த விவகாரத்தை சட்டப்படி பரிசீலிப்பதா அல்லது சமூக ரீதியாக பரிசீலிப்பதா என்பதைப்பற்றி வினா எழுகிறபோது இவர்கள் அனைவரும் சட்டப்படிதான் பரிசீலிக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள். சமூக ரீதியான அம்சங்களை புறக்கணிக்கிறார்கள்.

இந்திய சட்டங்கள் ஆனாலும், உலகின் வேறு எந்த ஒரு நாட்டின் சட்டங்களானாலும் அவைகள் சமூகத் தேவையை முழுமுற்றாக நிறைவு செய்யக் கூடிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக ஒரு போதும் இருக்க முடியாது.

எப்போதுமே சமூக வளர்ச்சிக்கும், தேவைக்கும் ஏற்ப மாற்றத்திற்கு உள்ளாகக் கூடியவைகளாகத்தான் சட்டங்கள் இதுவரை இருந்துள்ளது மட்டுமல்ல இனி எப்போமே இருக்கும்.

இந்த வகையில் இந்திய அரசியல் சட்டம் தொகுக்கப்பட்ட போது இந்து என்று வறையறுக்கப்பட்ட மக்கள் குழுக்களின் பண்பாடுகள் அவற்றில் தொகுக்கப்பட்டன. இதன்படி இந்து திருமணச்சட்டம் தொகுக்கப்பட்டது. இப்படி தொகுக்கப்பட்ட இந்த சட்டம் நாடுமுழுக்க ஒரே விதமாய், ஒரே சீரானதாக அல்லாமல் வட்டார, சாதி, இனம் என வெவ்வேறு பண்பாடுகளை உள்ளடக்கியதாக அவைகள் அமைந்திருந்தன. இவைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவைகளாக இருந்தாலும் அவைகள் அவற்றை  கடைபிடிக்கும் அந்தந்த மக்கள் குழுக்களால் மீறப்படாத பண்பாடுகளாக நிலவி வந்தன.

இந்திய நாடு முழுக்க பல்வேறு வகைப்பட்ட திருமண உறவுகள் அதாவது இனப்பெருக்கத்திற்கான உறவு முறைகள் சிறு, சிறு வேறுபாடுகளை கொண்டிருந்தாலும், இவை அனைத்திலும் சகோதர முறை திருமண உறவு எந்த ஒரு மக்கள் குழுக்களிலும் ஏற்கப்படவில்லை.

இதன் காரணமாகவே இந்து திருமண சட்டம் இவை அனைத்தையும் உள்ளடக்கி சகோதரமுறை திருமண உறவுகளை அங்கீகரிக்காததோடு  நிறுத்திக்கொண்டுள்ளது.

அதாவது இவற்றை மீறுவது என்ற பிரச்சனையே எழாத போது, அது சமூகத்தில் விளைவுகள் எதையும் ஏற்படுத்தாத போது அவற்றிற்கு தீர்வு எதையும் ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமும் அன்று எழவில்லை போலும்!

ஆனால் இன்று சகோதர முறை திருமணங்கள் பரவலாக ஒவ்வோரு ஊரிலும் சமூக நியதிகளுக்கு மாறாக நிகழும்போது, இதனால் சமூகத்தில் அவைகள் குறிப்பிடும்படியான விளைவுகளை ஏற்படுத்தும் போது, இவற்றை எதிர்கொள்ளும் மக்கள் சமூகமும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளும் இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றத் தேவை இப்போதுதான் எழுகிறது.

சகோதர முறை திருமணம் என்ற ஒழுக்கக் கேடு மட்டுமல்ல, அனைத்துவிதமான பாலியல் ரீதியான ஒழுக்கக் கேடுகளும் இன்று இந்திய சமூகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியச் சமூகம் வெறெப்போதும் இல்லாத வகையில் முற்றிலும் புதிய வடிவிலான பாலியல் வன்முறைகளை சந்தித்து வருகிறது.

டெல்லி என்பது இந்திய நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல அது பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரத்திற்கும் தலைநகரம் என்பதை நிரூபித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அதிர்வுகள் அடங்குவதற்கு முன்பாகவே, கடந்த மார்ச் 1- ம் தேதி 7 வயதே நிரம்பிய பச்சிளம் பெண் தளிர் காமவெறி மிருகங்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள்.

டெல்லி மருத்துவ மாணவியின் மீதான பாலியல் பலாத்காரம், சாவு ஆகியவற்றிற்கு பின் அது நாடுமுழுக்க வெறேப்போதும் இல்லாத அளவுக்கு அதிர்வையும், இதனூடாக பெண்ணுரிமை பற்றிய விவாதங்கள், பாதுகாப்பு பற்றியெல்லாம் நீண்ட நெடிய விவாதங்கள் நடைபெற்றன.

இவற்றிற்கு எதிரான மிகக் கடுமையான சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. ஆனாலும் இவைகள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை அச்சுறுத்தவோ, தடுக்கவோ பயன்படவில்லை என்பதைத்தான் ஏழு வயது சிறுமியின் மீதான பாலியல் பலாத்கார சம்பவம் நிரூபித்துள்ளது.

இது நமக்கு உணர்த்தும் உண்மை என்னவென்றால் இவற்றை வெறுமனே சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்க்கக்  முடியாது, என்பதைத்தான். இது சமூக ரீதியாக விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்.

1990 – களுக்கு பின்னர் இந்திய ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தும் உலகமயக் கொள்கைகளின் தவிர்க்க வியலாத ஓர் அங்கமாகத்தான் நுகர்வு பண்பாடு இந்திய சமூகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது.

இந்தியச் சமூகம் நாகரீகம் அடைந்த காலத்திலிருந்து, ஒரே ஒரு சமூக வளர்ச்சியை, முன்னேற்றத்தைக்கூட தனது சொந்த தேவையிலிருந்து உருவாக்கிக் கொள்ளவில்லை. அன்று முதல் இன்று வரை திணிப்பின் ஊடாகத்தான் அனைத்து மாற்றங்களையும்,வளர்ச்சியையும் கண்டுள்ளது.

எனவே, இச்சமூகத்திற்கென்று தனித்துவமான பண்பாடுகள், வாழ்க்கை முறைகள்என எதையும் கொண்டிராமல் திணிப்பின் ஊடாக வரும் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் உலகிலேயே மிகவும் பிற்போக்கான சமூகம் என்பதால் தான், பாலியல் சீரழிவுகள் இப்போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இந்நாட்டில் வலிமைப்பெற்று திகழ்கிறது.

பொதுவில் நாடுமுழுக்க பாலியல் சீரழிவுகளுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிப்பது போன்று நமக்கு தென்பட்டாலும் இவைகள் உண்மையில்லை. போலித்தனமான உண்மைகள்.

சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் ஆனாலும், சமூகவியலாளர்கள் ஆனாலும் பொதுமக்களானாலும் போலித்தனமான வாழ்க்கை முறைகளையே அடித்தளமாகக் கொண்டவர்கள்!

ஊடகங்களால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெரிதாக காட்டப்பட்டாலும், இவைகள் எழுவதற்கு அடிப்படையான காரணிகளை இவர்கள் அனைவரும் தழுவிக்கொள்பவர்களாகவே உள்ளனர். இதன் காரணமாகத்தான் சட்டங்களைப் பற்றி தவறுசெய்வோர் கவலைப்படுவதில்லை.

இந்திய சமூகத்தின் அனைத்து அங்கங்களும் குற்றவாளிகளை இல்லாமல் செய்வது என்பதற்கு மாறாக அவர்களை பாதுகாக்கும் வகையிலான நடைமுறைகளையே தமது அன்றாட வாழ்வியல் முறையாக கொண்டிருப்பவர்கள்.

இந்த வாழ்வியல் முறையின் செயல்வடிவம் சமூக உண்ர்வின்மையை அடிப்படையாகக் கொண்டது. அதாவது அனைத்தையும் தனக்கான தனிப்பட்ட ஆதாயத்தையே ஆதாரமாக கொண்ட சிந்தனா முறையாகும்.
இப்படியான ஆதாய சிந்தனா முறையே எதையும் தீர்மானிக்கும் அளவு கோலாக இருப்பதால், ந்த ஒரு சமூக சீரழிவானாலும், அநீதியானாலும், அதனால் தனக்கு தனிப்பட்ட முறையில் நேரிடையாக இழப்பு இல்லை என்றால் அது தனக்கு சம்பந்தமில்லாதவைகள் என்று ஒதுங்கிக் கொள்ள வைக்கிறது.

இதே சிந்தனாமுறைதான் தவறு செய்பவர்களை தனக்கு அதில் ஆதாயம் இருக்கிறது என்ற அடிப்படையில் ஒருங்கிணைத்து செயல்படவும் வைக்கிறது.

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் சமூகத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் அவற்றில் தம்மோடு ஈடுடபடுவோருக்கு, இச்செயலில் தான் ஈடுபடுவதன் மூலம் அடையும் ஆதாயத்தில் ஒருப்பகுதியை பங்காக தருகின்றனர்.

இந்த வகையில் இப்படிப்பட்ட குற்றங்களை தடுப்பதற்கான அதிகாரம் பெற்ற கட்டமைப்பை சேர்ந்தவர்களே முதன்மையான ஆதாயவாதிகளாக திகழ்கின்றனர்.

இந்த வலுவான அடித்தளம்  காரணமாகத்தான் குறிப்பிட்ட சில விவகாரங்கள் பெரும் அநீதியாக ஊடகங்களிலும், அபூர்வமாக சில நேரங்களில் சமூகத்திலும் விவாதிக்கப்பட்டாலும், அதனால் அதில் ஈடுபடுவோரிடம் அது பெருத்த மாற்றம் எதையும் ஏற்படுத்திவிடுவதில்லை. அதற்கு மாறாக தமது செயலை மேலும்  திறமையான வழிகளில் தொடர ஊக்கம் பெறுகிறார்கள்.

இந்திய சமூகத்தில் உள்ள ஒவ்வொரு சாதியும் தான் ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் அதே நேரத்தில் ஒடுக்கு முறையாளராகவும் உள்ளது. இது சிந்தனா முறை ஒடுக்கு முறையாக மட்டுமல்லாது நடைமுறை ரீதியான ஒடுக்கு முறையாகவும் உள்ளதால் அதிகார கட்டமைப்பில் உள்ளர்களின், சமூகத்தின் மேல்நிலையில் உள்ளவர்களின் செயல்பாடுகளை அநீதியானதாக காண்பதில்லை.  மாறாக அந்த இடத்தில் இருந்தால் அதைத்தான் தானும் செய்ய முடியும் என அங்கீகாரத்தையும் வழங்குவதோடு   தனது ஏக்கத்தையும் வெளிப்படுத்துபவர்களாகவும் உள்ளனர்.

சமூகத்தின் இந்த யதார்த்த நிலையை, சமூக நலனில் அக்கறை உடையோர் கணக்கில் கொள்வதேயில்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக சமூக அக்கறையற்றோர் இதை மிகத் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர். இதிலிருந்துதான் அவர்கள் தமது செயலை எவ்வித அச்சமும் இன்றி செய்கின்றனர்.

உண்மையில் சமூகத்தில் நடைபெறும் எந்த ஒரு அநீதியானாலும், அதிலும் குறிப்பாக பாலியல் சீரழிவுகள் சம்பந்தமாக சமூகத்தின் மேற்கண்ட எதார்த்த நிலையை சமூக நலனில் அக்கறையுடையோர் கணக்கில் கொண்டால் மட்டுமே தமது செயலில் முன்னேற்றம் எதையும் காணமுடியும்.

இதற்கு மாறாக சகோதர முறை திருமணங்கள் எனப்படும் ஒழுக்கக்கேட்டை பாலியல் சீரழிவாக கருதாமல் 
தனிமனித உரிமையாக காண்பதும், இவைகளுக்கு முற்போக்கு, இயங்கியல் முலாம் பூசுவதும் உலகமயமாக்கலுக்கு மேலும் வலுவையே தரும் என்பதை மறந்து விடக்கூடாது.

மனித இனத்தில் உறவு முறைகள் என்பவைகள் மனிதர்களால் இடையில் ஏற்படுத்தப்பட்டது. அவைகள் ஒரு நாளையில் இல்லாமலும் போகும்”.

”இப்போது நடைமுறையில் உள்ள உறவு முறைகள் நிலபிரபுத்துவ  கா பிற்போக்குத்தனம். இதை மதங்கள் தான் புனிதமானவைகளாக கருதி தூக்கிப் பிடிக்கின்றன”.

”மனிதர்களுக்கு இடையிலான உறவு முறைகள் சமூக வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் ஏற்ப மாறக்கூடியவைகள்  என்றும் இதனால் சகோதர முறை திருமண விவகாரங்களை இந்த வகையில் தான் பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் இது சரி, என்றோ, தவறு என்றோ கூறாமல் தந்திரமான நடைமுறைகளை கையாள வேண்டும்.

தவறு என்று முடிவெடுத்தால் அது நம்மை இயங்கியல் வாதிகள் என்பதை மறுப்பதோடு, பிற்போக்கு வாதிகளாகவும் ஆக்கிவிடும். இதனால் மக்களை சமூக மாற்றத்திற்காக திரட்டும் நமது இலக்கும், நோக்கமும் சீர்குலைந்து போகும் என்றும்”, நீண்ட நெடிய வகுப்பொன்றையும் நடத்துகின்றனர்.
இதன் மூலம் ஏகாதிபத்திய நுகர்வு வெறி, சீரழிவு ஆகியவற்றையும் சமூக இயக்கதின் தவிர்க்கவியலாத அங்கமாக வாழ்வியல் முறையாக அங்கீகரித்து விடுகிறார்கள். அவைகளை இவர்கள் சீரழிவுகளாக காண்பதில்லை.

இதன் மூலம் இத்தகையோர் இப்பண்பாடுகளை உருவாக்குகிற உற்பத்தி முறையையும், சமூகத்தையும் தாங்கள் அங்கீகரிக்கிறோம் என்பதை நாம் அறியமாட்டோம் என்று கருதுகின்றனர் போலும்
மேலும் மனிதன் இன்று கடைபிடிக்கும் வாழ்வியல் முறைகள் நாகரீகம், பண்பாடு அனைத்தும் மனிதன் குரங்கிலிருந்து மனிதானக மாறிய காலத்திலிருந்து மனித சமூகம் அடைந்துள்ள வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றின் தொடர்ச்சி, தொகுப்புதான்.

மனித சமூகம் தன்னுடைய வளர்ச்சி, முன்னேற்றங்கள் ஒவ்வொன்றின் போதும் தனது செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் முன்னையதிலிருந்து மேலும், மேலும் மேம்படுத்திக்கொள்கிறது. ஒரு சமூக மாற்றம் நிகழ்ந்தவுடன் முந்தைய சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் தூக்கியெறிந்துவிட்டு, முந்தையதற்கு முற்றிலும் தொடர்பற்ற, முற்றிலும் புதியனவற்றை கட்டிக்கொள்வதில்லை.

அதற்கு மாறாக முந்தையதிலிருந்து சரியானதை, தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையற்றதை புறந்தள்ளுகிறது. மொத்தத்தில் ஒவ்வொரு சமூக முன்னேற்றம், மாற்றங்களின் போதும் தனது வாழ்வியல் முறையை மனித சமூகம் மேலும் செழுமைப்படுத்திக் கொள்கிறது. குறிப்பாக நாம் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ள மனிதர்களுக்கிடையிலான உறவு முறைகள் அதாவது இனப்பெருக்கத்திற்கான உறவு முறைக்கான வரையறை என்பது மனித இனம் உள்ளவரை  தவிர்க்கவியலாத தேவையாகும்.

இவற்றை நிராகரிப்பது என்பது மனிதனை மீண்டும் மிருக நிலைக்கு தாழ்த்தும் செயலாகும். அதாவது மனிதனை சமூக உணர்வற்றவனாக மாற்றும் உள்ளடக்கத்தைக் கொண்டதாகும்.

மனிதனை சமூக உணர்வற்றவனாக ஆக்குவதே, ஏகாதிபத்திய உற்பத்தியின் வாழ்வுக்கு அத்தியாவசியத் தேவையாகும். இந்த சமூக உணர்வின்மை பூமியில் உயிரினங்கள்  உயிர்வாழ்வதற்கு தேவையான வளங்கள் அனைத்தையும் சூறையாடும் ஏகாதிபத்திய உலகமயமாக்கலை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் இப்பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் அழிவுக்குள் தள்ளிவிடுகிறது. 

இச்சூறையாடும் பொருளாதார நலன்களுக்கு ஆதரவான வறைமுறையற்ற இனப்பெருக்க உரிமையான சகோதர முறை திருமணங்களை நிலபிரபுத்துவ  கால பிற்போக்குத்தனங்களுக்கு எதிரான கலகம் என வெட்கமின்றி இவர்கள் பிதற்றித் திரிகின்றனர்.

இக்கேடுகெட்ட தனத்திற்கு எதிராக போராட வக்கற்றவர்கள், இவைகளில் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்ளும் தந்திரத்தை கையாள வேண்டும் என்று உபதேசிக்கிறார்கள்.

இனப்பெருக்கத்திற்கான உறவு முறைகள் நிலபிரபுத்துவ கால பிற்போக்குத்தனம், தந்திரமாக  ஒதுங்கிக் கொள்ளல்  ஆகிய செயல்பாடுகள், அவற்றை வளர்தெடுத்து மனிதர்களை கார்த்திகை மாதத்து நாய்களாக மாற்றிவிட்ட பிறகு, இம்மிருகத்தனத்தை முன்னேற்றமாகத் கருதுவோர். இம்மிருகங்களை வைத்துத் கொண்டுதான் சமூக மாற்றத்தை  சாதிக்கப் போகிறார்களாம்?!

மனிதன் காட்டு மிராண்டி நிலையிலிருந்து நாகரீகமடைந்த காலத்திலிருந்து உருவாக்கிக் கொண்ட இனப்பெருக்கத்திற்கான உறவு முறைகள் தனது, வளர்ச்சி முன்னேற்றம் ஆகிய தேவையிலிருந்து உருவாக்கிக் கொண்டதே ஆகும்.

அதாவது இந்த இனப்பெருக்கத்திற்கான உறவு முறைகளை எந்த ஒரு தனிமனிதனின் கருத்துகளில் இருந்தும் அல்லாமல், அதற்கு முந்தைய சமூக நிகழ்வுகள், விளைவுகளில் இருந்து எழுந்த தேவையில் இருந்து உருவாக்கிக் கொண்டவைகள். இதை இன்னமும் பச்சையாக கூறுவதென்றால் உலகில் உள்ள உயிரினங்களில் மனிதனை தவிர்த்த ஏனையவற்றில் ஆண், பெண் சேர்க்கைக்கான காலம் குறிப்பிட்ட பருவகாலம் மட்டுமே ஆகும்.

ஆனால் மனிதனின் இனச்சேர்க்கைக்கான உந்துதல் மிருகங்களைப்போன்று வெறுமனே உடல் சார்ந்த தேவையாக மட்டுமல்லாது, அது மனம் சார்ந்த தேவையாகவும் இருப்பதால் இதற்கு பருவகாலம் ஏதுமில்லை. ஆண்டுமுழுக்க இதற்கான உந்துதல் மனிதர்களை ஆட்கொள்கிறது.

பருவமே ஆனாலும் இக்குறிப்பிட்ட காலத்தில் மிருகக் கூட்டத்தில் பெருத்த ஒற்றுமை இன்மையை ஏற்படுத்தி விடுகிறது. இப்பருவ காலம் முடிந்த பின்னர் அவைகள் இயல்பு நிலைக்கு திரும்புகினறன. இதற்கு நேர்மாறான விளைவுகளை மனிதர்களிடையே உருவாக்கும். நிரந்தர பகை, பழிவாங்குதல் ஆகியவைகள் ஒற்றுமை இன்மையையும், அழிவையும் நிரந்தரமாக்குவதில் இருந்து மனிதர்கள் காக்கும் தவிர்க்க வியலாத தேவைதான் உறவுமுறைகள்.

இந்த தவிர்க்க வியலாத தேவை, இன்றைய வரலாற்றுக் கட்டத்தில் மனித இனத்திற்கு இல்லாமல் போய்விட்டதா?

ஆண், பெண் இனச்சேர்க்கைக்கான உறவு முறைகளை மீறுபவர்களும், இதை ஆதரிப்பவர்களும், மேலே கண்ட நிலையிலிருந்துதான் இதை மீறுகிறார்களா, ஆதரிக்கிறார்களா?

நாகரீக மனித சமூகம் உருவாக்கியுள்ள பாலியல் உறவுகளுக்கான உறவு முறைகளை மீறுபவர்கள் மனித குலத்தின் முன்னேற்றம் நலன் ஆகியவற்றின் தேவையிலிருந்து இவற்றை மீறவில்லை. இவற்றை அழிவுகுள்ளாக்கும், மனிதனை மிருக நிலைக்கு தாழ்த்தும், ஏகாதிபத்திய சூறையாடும் பொருளாதார நலன்களிலிருந்து எழும் உந்துதல்களிலிருந்து இவற்றை மீறுகின்றனர்.

இந்திய சமூக அமைப்பை பற்றிய மிகையான தமது விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை அதன் மீது திணிக்க முயன்று தோற்றுப் போனவர்களும், திணிக்க முயல்பவர்களும் எந்த சமூக மாற்றத்திற்காக, முன்னேற்றத்திற்காக தாங்கள் பாடுபடுவதாக கூறிக் கொள்கிறார்களோ, இவர்கள் சமூக யதார்த்தத்திற்கு புறம்பான சமூக மதிப்பீடுகளால் வலது, இடது சந்தர்ப்பவாதிகளாக மக்களிடமிருந்து தனிமைப்பட்டு, எப்படியாவது தம்மை  நிலைநிறுத்திக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயங்குவதில்லை என்பதற்கான ஆதாரம் தான்.சகோதர முறை திருமண விவகாரங்களில் கையாளும் வழிமுறைகள் ஆகும்.

இவர்கள் எவருமே சமூக வாழ்வையும், தனது சொந்த வாழ்வையும் ஒன்றாக பார்ப்பவர்கள் இல்லை. இரண்டுக்கும் வெவ்வேறான வழிமுறைகளை கொண்டவர்கள்.
சகோதர முறை திருமணங்களை ஆதரிப்பவர் எவரும் தனது பிள்ளைகளுக்கும் அது பொருந்தும் என்பதை ஏற்பதில்லை!

சமூகத்தில் நடைபெறும் சகோதர முறை திருமணங்களில் தலையிடாமல் நைச்சியமாக நடந்து கொள்பவர்கள் தமது குடும்பத்திடம் அந்த முறையை கடைபிடிப்பதில்லை!

இவர்கள்தான் நம்முடைய அனைத்து உரிமைகளுக்காகவும் போராடும் தலைவர்கள், பிரதிநிதிகள்!
இப்படிப்பட்டவர்கள் இந்தியாவின் 120 கோடி மக்களுக்கும் தலைமை ஏற்க எப்படி முடிகிறது? நமது 

அறியாமையினாலா?
இல்லை! அவர்கள் ஜாடிக்கேற்ற மூடிகள்!

தொடர்புடைய கட்டுரைகள்:

 1.  காயடிக்கும் கட்சி 
                      


4.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2







Sunday, 3 June 2012

அக்காவையும், தங்கச்சியையும் கட்டிக்கலாங்கிற, மகஇக காரன பார்த்தா கேளுங்க..


உலகில் உள்ள உயிரினங்களிலேயே மனிதர்கள் மட்டுமே ஆறாவது அறிவை உடைய உயிரினம். இதனால் தான் மனிதர்கள் தமக்கிடையே உறவு முறைகளை உருவாக்கிக் கொண்டார்கள். இந்த உறவு முறைகளை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதாயினும், அவற்றை இன்றளவும் மனித குலம் கடைப்பிடித்து வருகிறது. மனித இனம் இந்த பூமியில் உள்ள வரை இது தவிர்க்கவியலாத அம்சமாகும். ஏனென்றால் ஏனைய உயிரினங்களிடையே, இனப்பெருக்க காலங்களில் ஏற்படும் ஒற்றுமையின்மை, சீர்குலைவு ஆகியவற்றிலிருந்து மனித குலத்திற்கு இது மிகச் சிறந்த பாதுகாப்பளிக்கிறது.





மனித குலம் காலத்தின் தேவைக்கேற்ப பழையனகழிதலும், புதியன புகுதலும் என்ற கோட்பாட்டை கடைபிடித்தாலும், இந்த உறவு முறைகள் என்றென்றும் இளமை மாறாமல் இன்று வரை நீடித்து நிற்பதற்கு காரணம், அது மனித குல வளர்ச்சிக்கு என்றுமே தீங்கிழைத்ததில்லை. இதிலிருந்து உறவு முறைகள் மனித வாழ்வின் தவிர்க்கவியலாத அங்கமாகி விட்ட பிறகு, அது தேவையா என்று கேள்வி எழ வேண்டிய அவசியம் என்ன  என்று நீங்கள் கேட்பது எமக்குப் புரிகிறது.

ஆனால் அது தேவையில்லை என்று கூறும் ஒரு கும்பல் உருவாகி இருக்கிறது என்றால் அதை உங்களால் நம்ப முடிகிறதா! ஆனால் இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு கும்பல் உருவாகி இருப்பது மட்டுமல்ல அது பகிரங்கமாக செயல்பட்டும் வருகிறது. அது தனது செயலை நியாயப்படுத்துவதுடன், தமிழகத்தில் தம்மை முற்போக்கு, புரட்சிகர சக்தி என்று கூறிக்கொண்டு திரியும் ஒரு கும்பலின் ஆதரவையும் பெற்றுக்கொண்டதோடல்லாமல், அதன் ஓர் அங்கமாகியும் இருக்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் செயல் பட்ட கிராமம் ஒன்றில் சகோதர உறவுடைய இருவர் ஊரை விட்டு ஓடி கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த மிருகங்கள் ஊருக்குள் நுழைய முயற்சித்த போது அதை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். அதோடு இவைகள்  எப்போதுமே ஊருக்குள் நுழையக்கூடாது என நிரந்தரமாகவும் தடைவிதித்தோம்.

இப்படி நாங்கள் தடை விதித்தவுடன் எங்களோடு இருந்த அம்மிருகத்தின் சகோதரன் ஒருவன் எங்களிடமிருந்து விலகிக்கொண்டதுடன், தம்மோடு பாலியல் ரீதியாக சீரழிந்த சிலரையும் சேர்த்துக்கொண்டு ஒரு குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.

வரைமுறையற்றவர்கள் ஊருக்குள் நுழையக்கூடாது என்று நாங்கள் தடைவிதித்தவுடன், அப்போது நாங்கள் செயல்பட்ட அமைப்பின் தலைமை எங்களின் செயல்பாட்டை ஏற்க முடியாது என்று நிராகரித்தது.  நாங்கள் ஏனென்று கேட்ட போது உறவு முறைகள் என்பது காலத்தின் தேவைக்கேற்ப மாறக்கூடியது. அதில் நாம் தலையிடக்கூடாது. இப்படி தலையிடுவதன் மூலம் அதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாததுடன், அதனால் நமது வழமையான பணிகளும் பாதிக்கப்பட்டு நமது இலக்கு திசை திரும்பி விடும் என்றனர்.

இதைப் போன்ற செயல்களை நாம் கண்டு கொள்ளாவிட்டால் மனித இனமே மிருகங்கள் ஆகி விடுமே, அப்போது யாரிடம் போய் நமது இலக்கைப் பற்றி பேச முடியும்! என்று நாங்கள் கேட்ட போது, நாங்கள் சொல்வதை சொல்லிவிட்டோம், நீங்கள் நமது வேலைகளுக்கு பாதிப்பில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்”, என்று மிகவும் சாமர்த்தியமாக நழுவிக்கொண்டனர்.

இதைப் போன்ற பல்வேறு காரணங்களால் அந்த அமைப்பில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் நாங்கள் வெளியேறி விட்டோம். நாங்கள் வெளியேறியதும் மேற்கண்ட சகோதர முறை திருமணத்தை ஆதரிக்கும் கும்பலை தமது அமைப்பில் இணைத்துக் கொண்டு ஆசி வழங்கியுள்ளனர்.

தமக்கு தமிழகம் தழுவிய தலைமை கிடைத்து விட்ட பூரிப்பில், இக்கும்பலில் உள்ள மேலும் மிருகம் தனது தங்கை முறை பெண்ணோடு திருமண உறவுக்கு கால் கோல் விழா நடத்திருக்கிறது.

மேற்கண்ட தகவல் எமக்கு கிடைத்து விட்டது என்பதை அந்த கும்பல்  தெரிந்து கொண்டவுடன், தமது நோக்கத்திற்கு எங்களால் இடையூறு ஏற்படும் என்பதை கணித்து எம்மை பயமுறுத்த முயற்சிக்கிறது.
·        
   இந்த விடயத்தில்  நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் சீரழிவுக் கும்பல் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பகிரங்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
·         
   ஆனால் சகோதர திருமண உறவை எதிர்ப்பவர்கள்தான் சமூகத்தில் பெரும்பான்மை என்றாலும் இவர்கள் தமக்கிடையே ஒருங்கிணைப்பின்றி பிரிந்து கிடக்கின்றனர்.

பெரும்பான்மை மக்களின் இந்த சமூக அக்கறையற்ற போக்கு, குறிப்பிட்ட இந்த விடயத்தில் மட்டுமல்ல, அனைத்து விடயங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது. இதுதான் சமூகத்தின் அனைத்து அங்கங்களிலும் நடைபெறும் எல்லாவித அநீதி, அக்கரமங்களுக்கும் உந்து சக்தியாக சமூக விரோதிகளுக்கு பயன்படுகிறது.

சகோதர உறவு முறைக்குள் திருமண உறவு கொள்வது என்பது எங்கோ ஓரிடத்தில் அரிதாய் நடைபெறும் செயல் என்பதற்கு மாறாக, இம்மிருகத்தனம் இப்போது பரவலாக நாடு முழுக்கவே தென்பட ஆரம்பித்து விட்டது. இது உருவாவதற்கான சமூக அடிப்படையும் நிலவுகிறது. வாழ்க்கை அனுபவிப்பதற்கே என்ற கோட்பாடுதான் இதற்கான அடித்தளமாகும். இதைத்தான் இன்றைய திரைப்படங்கள், தொலைக்காட்சிகளின் ஊடாக வலுவாக சமூகத்தின் மீது திணிக்கப்படுகின்றது.

வயிற்றுப் பசியைப்போன்று, காமமும் ஒருவித பசிதான், இவற்றை போக்கிக் கொள்வதற்கு தடையேதும் இருக்கக்  கூடாது. அப்படிபட்ட தடையான உறவு, முறைகள் தேவையில்லை என்பதுதான் இது போன்ற கும்பல்களின் நிலை.

காமப் பசிக்கு அண்ணன் தங்கை என்ற கட்டுப்பாடு கூடாது என்றால், வயிற்றுப் பசிக்கு இன்று புழக்கத்தில் உள்ள உணவு முறைகள் என்ற கட்டுப்பாடு தேவையா? இக்கட்டுப்பாட்டை மீறி பன்றியைப் போல இவர்கள் பீயைத் திண்பார்களா என்றுதானே கேட்கிறீர்கள்!

இந்தக் கேள்வியை சகோதர உறவு முறைக்குள் திருமண உறவை ஆதரித்து நடைமுறைப்படுத்தும் கும்பலை தம்மோடு இணைத்துக் கொண்டு தமது பலத்தை பன்மடங்கு அதிகரித்துக் கொண்டுள்ளதாகக் கருதும் ம.க.இ.க வினரை பார்த்தால் கேளுங்கள்!

அதோடு உங்கள் கருத்துக்களையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இப்படிச்செய்தால் புரட்சியாளர்கள் நம்மை பிற்போக்கு வாதிகள் என்று முத்திரை குத்துவார்கள் என்று தானே யோசிக்கிறீர்கள். பரவாயில்லை நாம் அப்படிப் பட்டவர்களாகவே இருந்து விட்டு போவோம்!



தொடர்புடைய கட்டுரைகள்:

 1.  காயடிக்கும் கட்சி 
                      


4.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2








Wednesday, 11 August 2010

சாராயம்-பிராந்தி இரண்டில் ஒன்றைக்குடி-II

சாராயம்-பிராந்தி இரண்டில் ஒன்றைக்குடி-II                                


 
                                   

உலக அளவில் நடைபெறும் கவுரவகொலைகள் பற்றியும்,அது இந்தியாவில் என்னென்ன காரணங்களுக்காக நடத்தப்படுகிறது என்பதைப்பற்றியும்,ஏகாதிபத்திய சந்தை நலன்களுக்காக பரப்பப்படும் சீரழிவுப் பண்பாட்டிற்கு பலியாகி மனிதனையும்,மிருகங்களையும் பிரித்துக்காட்டும் மிகத்தெளிவான உறவுமுறைகளை மீறுகிற, காம வெறிச்செயல்களையும்,சாதிமறுப்பு-தீண்டாமை மறுப்பு காதல்,கோத்திரம் மீறியக்காதல் ஆகியவற்றையும் ஒன்றாக்கி குழப்பும் உச்சநி(நீ)திமன்றம்,அரசு,பத்திரிக்கைகள்,தன்னார்வக்குழுக்கள் ஆகியவற்றின் நோக்கம்,தேவை என்ன என்பதை பற்றியும் சென்றத் தொடரில் பார்த்தோம்.சாதி-தீண்டாமை மறுப்பு காதல்.கோத்திரம் மீறிய காதல் ஆகியவற்றைப் பற்றியும், மற்றும் இவைகளின்  தேவை,அவசியம் ஆகியவைகளைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தவிர்க்கவியலாத தேவையாக உள்ளது.
        உலகில் உள்ள உயிரினங்களிலேயே, மனிதர்கள் மட்டுமே உறவுமுறைகளை வகுத்துக்கொண்டுள்ளார்கள்.இந்த உறவுமுறைகள் மிகவும் பழமையானது என்பதாலேயே இதை தேவையற்றது என்றதொரு தோற்றத்தை,கருத்தை நாகரீக போர்வையில் திரியும் மனிதமிருகங்கள் எற்படுத்தி வருகின்றன.மனித இனம் இன்று வரை அழிந்து போகாமல் இருப்பதற்கு மிகமுக்கிய காரணங்களில் ஒன்று தான்,இந்த உறவுமுறைகள். இப்படியொரு உறவுமுறைகளை உருவாக்கி மனிதர்கள் தம்மை முறைப்படுத்திக்கொண்ட செயல், அவனுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு உள்ளதற்கான அடையாளம் ஆகும்.இந்த உறவுமுறைகள் தனிமனித விருப்பத்திலிருந்தோ,நல்லெண்ணத்திலிருந்தோ உருவாகவில்லை.மாறாக மனிதனின் வாழ்க்கை தேவையிலிருந்து தவிர்க்கவியலாமல் உருவானது.உலகில் பல கோடிக்கணக்கான உயிரினங்கள் இருந்தாலும்,அவைகளில் மனிதர்கள் மட்டுமே ஆறாவது அறிவு எனும் பகுத்தறிவை பெற்றிருக்கிறார்கள்.இந்த பகுத்தறிவுதான் மிருகங்களிலிருந்து மனிதர்களை மிகத்தெளிவாக இனம் பிரித்துக்காட்டுகிறது.இதனாலேயே மனிதன் மிருகங்களைப் போன்று ஒருபோதும் வாழமுடியாது என்ற நிர்ப்பந்ததை ஏற்படுத்திவிடுகிறது.
        மிருகங்களுக்கு மனம் என்பது இல்லை.ஆகவே காம உணர்வு அவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே வருவதாகும். இனப்பெருக்கம் என்ற இயற்கை தேவைக்காக, அதாவது காம உணர்வு என்பது மிருகங்களுக்கு உடல் சார்ந்த தேவை மட்டுமேயாகும்.
        ஆனால் மனிதனுக்கோ காமம் உடல்சார்ந்த விடயம் மட்டுமல்ல.அது முக்கியமாக மனம் சார்ந்த விடயமாகும்.இதனால் காம உணர்வு மனிதர்களுக்கு ஆண்டு முழுவதும் உருவாகக் கூடியது.
        மனிதர்களாயினும்,மிருகங்களாயினும் ஆண்களிடையே.பெண்களை அடைவதற்கான போட்டியில் பொறாமை உணர்வை ஏற்படுத்துகிறது.இந்தப் பொறாமை உணர்வு மொத்த கூட்டத்திலும் அமைதி இன்மையை,ஒற்றுமை இன்மையை ஏற்படுத்தி விடுகிறது.இது மிருகங்களிடையே குறிப்பிட்ட காலப்பகுதியோடு முடிந்து விடுகிறது.பின்னர் ஆண் மிருகங்கள் தமக்கிடையிலான பகையையும் மறந்து விடுகின்றன.
        ஆனால் மனிதர்களிடையே இது ஆண்டு முழுவதும் ஒற்றுமை இன்மையை ஏற்படுத்துவது மட்டுமல்ல,ஆயுட்காலம் முழுக்க ஒருவரை ,ஒருவர் பழிவாங்கவும் தூண்டுகிறது.இதனால் மனித இனம் இயற்கையை எதிர்த்த தனது போராட்டத்தில் கவனம் கொடுக்க முடியாததாலும்,தமக்கிடையிலான சண்டையினாலும் இரட்டிப்பு அழிவை சந்தித்தது.இதை தவிர்ப்பதற்கு,தவிர்க்கவியலாத ஒரு தேவைதான் பாலியல் தேவையை முறைப்படுத்தும் உறவுமுறைகளாகும்.இதை மீற நினைப்பது மனித இனத்தை காட்டுமிராண்டிகளாக்கி அழிவுக்குள்ளாக்கும் செயலாகும்.ஆகவே இந்த காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்த போராட்டத்தை நாம் ஈவிரக்கமின்றி தான் நடத்தியாக வேண்டும்.
        உணவு தேடுவதை மட்டுமே வாழ்வின் இலக்காக  கொண்டிருக்கின்றன மிருகங்கள்.நுகர் பொருளை தேடுவது மட்டுமே மனித வாழ்வின் இலக்காக மாற்றுகின்றனர்,ஏகாதிபத்திய முதலாளிகளும்,அவர்களின் இந்தியக் கூட்டாளிகளும்.மனிதர்களை மனித மிருகங்களாக மாற்றும் இந்த இழிவுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியில் தான்,மனித வாழ்வும்,வளர்ச்சியும் அடங்கியுள்ளது.
        மனித வாழ்வை முறைப்படுத்தி,மேம்படுத்தி,வளர்த்து, வாழ வைத்த இந்த உறவு முறைகள்,மனித இனம் உள்ளவரை தவிர்க்கவியலாத, விஞ்ஞான பூர்வமான தேவையாகும்.ஆனால் சாதி,மதம்,குலம்,கோத்திரம் ஆகியவைகள் தேவையற்ற சதைப்பிண்டங்கள் மட்டுமல்ல, அவைகள் மனித குலத்தை அழிவுப்பாதையிலும் இட்டுச்செல்லும் பார்ப்பனிய பண்பாடுகளாகும்.மேற்கண்ட பிற்போக்குத் தனங்களை எதிர்த்து,மறுத்து நடைபெறும் காதல்,திருமணம் ஆகியவற்றை நாம் ஆதரிக்க வேண்டும்.இப்பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக விடாப்பிடியான,நீடித்தப்போராட்டங்களை நாம் நடத்தியாகவேண்டும்.
        அதே நேரத்தில் கோத்திரம் மீறிய காதல் அண்ணன்,தங்கைகிடையிலான நிகழ்வாக கூறப்படுவதால் இப்போது அதைப்பற்றி சிறிது பார்ப்போம்!
        கோத்திரம் மீறிய காதல் கொலைகளை தடுப்பது தான்,உச்சநி(நீ)திமன்றம் மற்றும் மைய அரசின் நோக்கம் என்பதை பகுதி I  ல் பார்ததோம்.இந்த கோத்திர வகைப்பாடு பார்ப்பனியப் பண்பாட்டின் ஒரு அங்கமாகும்.ஒரு சாதிக்குள்ளாகவே மக்களை கூறுபோடும் கோட்பாடு! மொத்த சாதியையும் குறிப்பிட்ட சில கோத்திரங்களாக வகைப்படுத்தி யார், யாரோடு திருமண உறவு கொள்ளவேண்டும் என்று எவ்வித நியாயமான தேவையும் இன்றி பார்ப்பனக் கும்பலால் உருவாக்கப்பட்டதாகும்.ஏற்கனவே நடைமுறையில் உள்ள உறவுமுறைகள் மனித இனத்தை முறைப்படுத்துவற்கு போதுமானவைகளாக இருக்கும் போது,கோத்திரம் தேவையற்ற ஒன்றாகும்.ரத்தவழி உறவு மற்றும் நெருக்கமான நட்பு என்ற அடிப்படையிலும், அண்ணன்,தங்கை உறவுமுறை என்பதற்கான அடிப்படை ஏதுமற்ற ஒரு பிற்போக்கு பார்ப்பனிய பண்பாடாகும் கோத்திரம்.இதை மீறுவதால் அவ்விடத்தில் வெற்றிடமோ,பாண்பாட்டு சிதைவோ தோன்றி விடுவதில்லை.அதே நேரத்தில் சிதறிக்கிடக்கும் மனிதர்களிடையே நெருக்கமான பிணைப்பையும்,உறவையும் ஏற்படுத்துகிறது என்ற சமூகவிஞ்ஞான அடிப்படையிலும் குறிப்பிட்ட வரம்புக்குள்-நெருங்கிய ரத்த உறவுக்குள்-திருமண உறவு கொள்வதால் ஆரோக்கியமற்ற குழந்தை பிறப்பை தவிர்க்கும் என்ற உடற்கூறுவிஞ்ஞான அடிப்படையிலும் கோத்திரம் மீறிய காதல் மிகச்சரியான ஒன்றே ஆகும்.
        சாதி,மதம்,குலம்,கோத்திரம் ஆகிய பிற்போக்கு தனங்களுக்கும் முந்தைய காட்டுமிராண்டிதனந்தான் அண்ணன்,தங்கைக்கிடையிலான உறவு.இது மிருக காமவெறி உணர்வே அன்றி காதல் அல்ல.ஆகவே இது மனிதகுல நாகரீகத்தையும்,வளர்ச்சியையும் அழிவுப்பாதையில் தள்ளிவிடுகிறது.இந்த அழிவுப் பண்பாட்டின் கர்த்தாக்கள் தான் ஏகாதிப்பத்தியங்கள்.ஏகாதிபத்தியங்கள் உள்ளவரை இந்த அழிவை நம்மால் ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
மனித சமூகத்தின் மேம்பாட்டிலும்,வளர்ச்சியிலும் அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதனும் ஏகாதிபத்தியத்திற்கும்,பார்ப்பனியத்திற்கும் எதிரான போராட்டத்தில் பங்கு பெறுவது தவிர்க்கவியலாத செயலாகும்.ஆகவே நாகரீக மனிதர்கள் அனைவரும் இவைகளை ஒழிப்பதற்கான  போராட்டங்களில் ஒன்றிணைவோம் வாரீர்!வாரீர்!!
                                                     சாராயம்-பிராந்தி இரண்டில் ஒன்றை குடி! பகுதி-I

Tuesday, 20 July 2010

சாராயம்-பிராந்தி இரண்டில் ஒன்றை குடி! பகுதி-I

       சாராயம்-பிராந்தி இரண்டில் ஒன்றை குடி! பகுதி-I


         ‘கவுரவக் கொலைகள்’ என்ற பெயரில் ஒரு ஆண்டுக்கு உலக அளவில் 5000 கொலைகள் நடப்பதாகவும்,இதில் 1000 கொலைகள் இந்தியாவில் நடப்பதாகவும் கடந்த சில மாதங்களாக செய்தி ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘சக்திவாகிணி’ என்ற தன்னார்வ அமைப்பு தொடுத்த வழக்கில் மத்திய அரசையும்,எட்டு மாநில அரசுகளையும் விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளது உச்சநி(நீ)திமன்றம்.இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் ‘கவுரவக் கொலைகள்’ நடைபெறுவதாக தன்னார்வக்குழுகள் செய்தி ஊடகங்களில் பரப்புரை செய்துவருகின்றன.

இந்தியாவில் நடைபெறும் ‘கவுரவக் கொலை’களில் 75 சதவீதமானவை சாதி கடந்து காதலிப்பதாலும் மூன்று சதவீத கொலைகள் கோத்திரம் மீறி காதலிப்பதாலும்,எஞ்சியவை கள்ளக்காதலால் நடைபெறுவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.உண்மையில் இந்தியாவில் நடைபெறும் ‘கவுரவக் கொலை’களில் வெறுமனே 20 சதவீத கொலைகளே பதிவு செய்யப் படுவதாகவும்,ஏனையவை மூடிமறைக்கப்படுவதாகவும் இச்செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

மேலேக்கண்ட விவரங்கள் இப்போதுதான் புதிதாககண்டுபிடிக்கப் பட்டதை போன்று இவர்கள் நம்மிடையே பிரம்மிப்பை எற்படுத்துகின்றனர்.இவைகள் இந்தியாவில் காலம்காலமாக இந்து-சாதி-பெருமை என்ற பெயரில் நடைபெற்று வருபவைகள் தான். அப்போதல்லாம் இவற்றை சாதாரண கொலைகளாகவும், தனிநபர்களுக்கிடையிலான பிரச்சனைகளாகவும் பார்த்தவர்கள் இப்போது இதை சமூக விவகாரமாக உருவகப்படுத்துகின்றனர்.

1947-ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இந்தியாவில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்கள் தொடுத்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டோர் கோரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த கொலைகளையும்,தாக்குதல்களையும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கூட மறுத்துவரும் ஆட்சியாளர்கள், இப்போது ‘கவுரவக் கொலை’களை தடுப்பதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவருவதாக ஆரவாரமாக அறிவித்துள்ளனர்.

தன்னார்வக்குழுக்கள்,நி(நீ)திமன்றங்கள்,ஊடகங்கள்,ஆட்சியாளர்கள் ஆகிய அனைவரும் ஒரே நேரத்தில் திடீரென வரிந்துக்கட்டிகொண்டு ‘கவுரவக்கொலை’களை தடுக்கப் போவதாக கூறுவது உண்மையான அக்கறையால் தானா? அப்படியானால் இத்தனையாண்டு காலம் இப்படிப்பட்ட கொலைகள் பற்றி இவர்களுக்கு எதுவுமே தெரியாதா?இப்போது மட்டும் இவர்களுக்கு கரிசனம் வந்ததற்கான காரணம் என்ன? என்பதுபற்றி நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது.ஆதாயம் இல்லாத செட்டியார் ஆற்றைக்கட்டி ஊற்று இரைக்க மாட்டார் என்பது போல் இவர்களின் திடீர்கரிசனத்துக்கும் ஏதோ ஒரு காரணம் உள்ளது.

‘கவுரவக் கொலைகள்’ என்று கவுரவமாக பெயர் சூட்டப்பட்டு இருக்கும் இந்தக் கொலைகள் அனைத்துமே சாதியாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்குத் தான் நடத்தப்படுகிறது.சாதி மறுப்பு காதலர்களை கொலை செய்வதை அநீதியான செயலாக இவர்கள் கருதியிருந்தால் இப்போது காட்டும் அக்கறையை பலப்பத்தாண்டுகளுக்கு முன்னரே காட்டியிருக்க வேண்டும்.உச்சநி(நீ)திமன்றத்துக்கு உண்மையிலேயே இந்தக் கொலைகளைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறை இருந்திருந்தால் மத்திய அரசு மற்றும் எட்டு மாநில அரசுகளை மட்டும் அல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளையும் விளக்கம் அளிக்குமாறு உத்தரவு போட்டிருக்க வேண்டும்.ஆனால் உச்சநி(நீ)திமன்றமோ கோத்திரம் மீறி காதலிப்பதால் கொலைகள் நடைபெறும் மாநில அரசுகளிடம் மட்டுமே விளக்கம் கேட்டிருப்பதில் இருந்தே, இவர்களின் நோக்கம் கோத்திரக்கொலைகளை தடுப்பது மட்டுமே என்பது தெளிவாகிவிட்டது.

கோத்திரக் கொலைகள் மொத்த ‘கவுரவக்கொலை’களில் வெறுமனே 3 சதவீதமே ஆயினும்,இந்திய பொருளாதாரத்திலும்,சந்தையிலும்,ஆட்சியிலும் செல்வாக்கு செலுத்தும் ஏகாதிபத்திய முதலாளிகள் இவர்களின் இந்திய பிரதிநிதிகளான இந்திய முதலாளிகளும் தமது சந்தை நலன்களுக்காக பரப்பும் சீரழிவுப் பண்பாட்டுக்கு-மிருக உணர்வுக்கு- ஆட்பட்டவர்கள் இவர்கள். இதனால் தான் இவர்கள் இந்தக் கொலைகள் தமக்கு எதிரானது என்று கருதுகிறார்கள்.இதைத்தான் தன்னார்வக்குழுக்களும்,ஆட்சியாளர்களும்,நி(நீ)திமன்றங்களும்,ஊடகங்களும் பிரதிபலிக்கின்றன.தமது செயலுக்கு முற்போக்கு முலாம்பூசுவதற்காகத்தான் சாதிமறுப்பு காதல் கொலைகளையும் இதனோடு சேர்த்துக்கொள்கிறார்கள்.

இதோடு கோத்திரம் மீறிகாதலிப்போர் பட்டியலில் அண்ணன்,தங்கைக்கு இடையிலான மிருகக்காம உணர்வை ‘காதல்’ என்ற பெயரில் சேர்த்துவிடுவதன் மூலம் மொத்த சமூகத்தையும் குழப்பி,குழம்பியக்குட்டையில் இவர்கள் மீன்பிடிக்க பார்க்கிறார்கள்
இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக எல்லா பிற்போக்குத் தனங்களும்,சமூகவிரோத செயல்களும் பார்ப்பனியத்தின் உதவியோடு தான் நடைபெற்று வருகிறது.எப்படிப்பட்ட பிற்போக்கு தனமாயினும் அது எங்கிருந்து வந்தாலும் மிகவும் இயல்பாக அதன் ஒரு பகுதியாக இணைந்து கொள்வதன் மூலம்தான் பார்ப்பனியமும்,பார்ப்பனர்களும் சுகமாக வாழ்ந்து வருகின்றனர்.கோத்திரம் மீறி காதலிப்பது தவறு என்று பார்ப்பனியமும்-பார்ப்பனர்களும்-கூறினாலும் இதை இவர்கள் என்றுமே கடைபிடித்ததில்லை. தமது சுகபோகத்திற்காக உறவுமுறைகளை மீறி திருமண உறவு வைத்துக்கொள்வது பார்ப்பனர்களுக்கு கைவந்தக்கலை. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் தில்லை தீட்சித பார்ப்பனர்கள்.இதனாலேயே இவர்கள் ஏனைய பார்ப்பனர்களை விட தாங்களே உயர்வானவர்கள்! என்று கூறிக்கொண்டு தில்லையின் எல்லைக்கு வெளியே திருமண உறவை வைத்துக்கொள்வதில்லை.இதன் காரணமாக அண்ணன்,தங்கை என்று கூட பாராமல் தங்களுக்குள்ளாகவே பல நூற்றாண்டுகளாக திருமண உறவு கொள்வதால், ஆரோக்கிய மற்ற சந்ததியினர் பிறந்தாலும், இதனால் இவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போனாலும், இந்த மூடர்கள் இப்பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

கடலைத்தாண்டுபவன்பார்ப்பானே அல்ல என்று மனுதர்மத்தில் எழுதிவைத்துள்ள பார்ப்பனக்கும்பல் தான் அமெரிக்காவிலும், அய்ரோப்பாவிலும் சுகபோகமாக வாழ்ந்து வருகிறது. பார்ப்பனர்களும், ஆதிக்கசாதியினரும் தாம் எழுதிவைத்துள்ள சாதிய சட்டங்களை என்றுமே மதித்ததில்லை.இவற்றை கீழ்சாதிகள் அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதிகள் மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என்றுதான் இவர்கள் அன்று முதல் இன்று வரை வன்முறை மூலம் நிர்ப்பந்தித்து வருகின்றனர்.

ஆகவே பார்ப்பனியத்தின் – சாதியத்தின் – லட்சியமே உழைப்பாளர்களிடம் இருந்து உழைப்பின் பலன்களை அதாவது சமூக செல்வத்தை அபகரிப்பதுதான்.இதனால் தான் அன்னிய ஆக்கிரமிப்பாளர்களான அராபியர்கள்,மங்கோலியர்கள்,அய்ரோப்பியர்கள் ஆகிய அனைவரையும் வரவழைத்து,வரவேற்று,ஆதரித்து,காட்டிக்கொடுத்து, தமது வாழ்வை அன்று முதல் இன்று வரை தக்கவைத்து கொள்கின்றனர்.இன்றைய மறுகாலனியாக்கத்தை ஆதரிப்பதன் மூலம் தமது சுகபோக வாழ்வை மேலும் உத்தரவாதப் படுத்திக்கொண்டுள்ளனர்.பார்ப்பனக்கும்பல் காலத்திற்கு ஏற்ப எல்லாவித பிற்போக்கு தனங்களோடும் ஒன்று கலந்துவிடுவதும்,இந்த பிற்போக்குத் தனங்களை எதிர்த்து உருவாகும் முற்போக்கு சிந்தனை, செயல்பாடுகளில் ஊடுருவி அவற்றை குலைப்பதும், ஆதிக்கசாதிகளை பயன்படுத்தி அவற்றை அழித்துவிடும் செயலையும் எப்போதுமே செய்து வருகிறது.

இப்படித்தான் பவுத்தத்தையும்,சமணத்தையும்,வள்ளலாரையும் சீரழித்தனர், அழித்தொழித்தனர்.பார்ப்பனர்களின் இந்த நயவஞ்சகமான நடைமுறையை உடனடியாக புரிந்து கொண்டு தம்மை மாற்றிக்கொள்ள முடியாமல்தான் பார்ப்பனியத்தின் அடியாட்களான ஜாட்,வன்னியர்,தேவர் போன்ற சாதிகள் தங்களது சாதிப்பெருமையை காப்பது என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மனித உயிர்களை ஈவிரக்கமின்றி ஆண்டுதோறும் காவுகொள்கின்றனர்.இதன் மூலம் பார்ப்பனக்கும்பல் பார்ப்பனியத்தை மீறுகின்றவர்களை,மீற நினைப்பவர்களை பீதியூட்டி பார்ப்பனியத்தை பாதுகாத்து கொள்ளும் அதே நேரத்தில்,இன்னொரு பக்கம் ஆட்சியாளர்கள் மூலம் ஏகாதிபத்திய பண்பாட்டிற்கு சட்டபூர்வ பாதுபாப்பையும் எற்படுத்திக்கொள்கின்றனர்.பார்ப்பனியம் சாதிக்கொரு நீதியையும்,இழிவையுமே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதை கடைபிடிப்பவர்களும் அப்படிப்பட்டவர்களாகவே மாறிவிடுகின்றனர்.

தமது வீடுகளிலும் கிராமத்திலும் தீண்டாமையை கடைபிடிக்கிற ஆதிக்கசாதிகள் ரயில்களிலும், பேருந்துகளிலும் அதை கடைபிடிப்பதில்லை.
தாழ்த்தப்பட்டோர் வீடுகளில் சாப்பிட மறுக்கும் இவர்கள் தாழ்த்தப்பட்டோர் பெருமளவில் வேலை செய்யும் நகர உணவகங்களில் சாப்பிட  மறுப்பதில்லை. சாதிமறுப்பு திருமணங்களின் மூலம் ஏற்படும் ரத்தக்கலப்பை தடுக்க நினைக்கும் இவர்கள் ரத்தவங்கிகளில் ரத்தம் பெறுவதை மறுப்பதில்லை.கிராமப்புற கோவில்களில் தாழத்தப்பட்டோர் நுழைவதை தடுக்கும் இவர்கள், நகர கோவில்களில் அதை செய்வதில்லை, அங்கு தாழ்த்தப்பட்டோர் நுழைவதால் நாங்கள் அங்கு வரமாட்டோம் என்று கூறுவதுமில்லை.தம்மை மேல்சாதி என்று கருதிக்கொள்ளும் அனைவரும் இப்படித்தான் நேர்மையற்றவர்களாகவும், இழிகுணங்களின் இருப்பிடமாகவும், முரண்பாடுகளின் மூட்டைகளாகவும், இரட்டை வேடதாரிகளாகவுமே வாழ்கின்றனர்.

சாதியும், தீண்டாமையும் இறைவனால் படைக்கப்பட்டது . அதனால் அது புனிதமானது என்று கருதுவதற்குரிய அம்சங்கள் அனைத்தும் இல்லாது ஒழிந்துவிட்டது. இப்போது அது சுரண்டல். அடக்குமுறை, பாசிசம் ஆகியவற்றின் அப்பட்டமான வடிவமாகவும் ஏகாதிபத்தியம், மறுகாலனியாக்கம் ஆகியவற்றின் உற்றத் தோழனாகவும், அதன் பிரிக்கமுடியாதஅங்கமாகவும் திகழ்கிறது, ஆகவே ஆதிக்க சாதிகளின் ‘கவுரவக் கொலை’களும்,மறுகாலனியாக்கத்தை ஆதரித்துக்கொண்டே ‘கவுரவக்கொலை’களைத் தடுக்க வேண்டும் என்ற கூப்பாடுகளும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல. இவைகள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

பார்ப்பனிய பிற்போக்கு பண்பாட்டையும், ஏகாதிபத்திய சீரழிவு பண்பாட்டையும் இவற்றிற்கான சமூக அடிப்படையையும் எதிர்த்து முறியடிப்பதன் மூலம்தான் இந்தியாவில் நடைபெறும் ‘கவுரவக்கொலை’கள் உள்ளிட்ட அனைத்து விதமான அநீதிகளையுமம் நாம் முறியடித்து வெற்றிபெற முடியும். இதற்கு நாம் சாதி மறுப்பு காதல், கோத்திரம் மீறிய காதல், அண்ணன்,தங்கைக்கு இடையிலான மிருகக்காம உணர்வு ஆகியவைகள் பற்றியும் இவைகளுக்கு இடையிலான வேறுபாடுகளையும், இவைகள் சமூக வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் உதவுகின்றனவா? அல்லது கேடுவிளைவிக்கின்றனவா? என்பதைப் பற்றி நாம் தரப்படுத்தி பார்க்க வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் தான் இவைகளில் எவற்றை நாம் ஆதரிக்க வேண்டும் எவற்றை எதிர்க்க வேண்டும் என்பதையும், இவற்றைத் தடுப்பதற்கு எப்படிப்பட்ட வழிமுறைகளை கையாள வேண்டும் என்பதையும் முடிவு செய்ய முடியும். இப்படி அல்லாமல் இரண்டில் ஒன்றை தேர்வு செய் என்று கூறுவது அயோக்கியத்தனம்! இதை ஏற்பது மூடத்தனம்!
-தொடரும்

தொடர்புடைய கட்டுரை


சாராயம்-பிராந்தி இரண்டில் ஒன்றைக்குடி-II