விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label கம்பம் விவசாயிகள். Show all posts
Showing posts with label கம்பம் விவசாயிகள். Show all posts

Tuesday, 13 December 2011

மலையாள இனவெறியும்,கம்பம் விவசாயிகளின் எழுச்சியும்!

முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு பொருளாதார முற்றுகையே தீர்வு என்ற எமது சென்ற கட்டுரைக்கு பதிவர்கள் நியாயமான தமது ஐயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் அதேபோல் தமிழகத்தில் பரவலாக இது பற்றிய விவாதங்களும் நடைபெற்றுவருகின்றன இவைகளுக்கு விடையளிக்கும் வகையில் இக்கட்டுரையை வெளியிடுகிறோம்!

கேரளத்தின் மீதான பொருளாதார முற்றுகையினால் தமிழக விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் என்பது தவிற்கவியலாத ஒன்றாகும்.நோயின் தீவிரம் அறுவைசிகிச்சையைத்தான் கோருகிறது.அறுவை சிகிச்சை செய்துகொண்டால் ரத்த இழப்பு ஏற்படும் என்பதால் மறுப்பது,தற்கொலைக்கு சமமானது ஆகும்.எனவே பொருளாதார முற்றுகை எனும் அறுவைசிகிச்சையை மேற்கொண்டுதான் ஆகவேண்டும்.இந்த உண்மையை கம்பம் வட்டார விவசாயிகள் உணர்ந்துதான் நீண்டகால நலனை கருத்தில் கொண்டு தற்காலிகமான இழப்பை மனப்பூர்வமாக ஏற்று தற்போது செயல்படுத்துகின்றனர்.விவசாயிகளின் இந்த போராட்டத்தை ஒழுங்குபடுத்துவதும்,கூர்மைபடுத்துவதும் மிகவும் அவசியமான செயலாகும்.



நாங்கள் எமது கட்டுரையில் இருப்பவர்கள் கொடுக்க மறுப்பதன் மூலமும்,பெறவேண்டியவர்கள் அதை விட்டுக்கொடுப்பதன் மூலமும் இந்திய ஆளும்வர்க்கங்களின் நோக்கத்திற்கு சேவை செய்வதாக கூறியிருந்தோம்.எமது இந்த வரையைறையை நிரூபிக்கும் வகையில் தமிழ ஆட்சியாளர்கள்,கம்பம் வட்டார விவசாயிகள் மீது போலிசின் மூலம் தடியடி நடத்தியுள்ளனர்.தமிழ அரசின் சட்டபூர்வ அணுகுமுறைகள் அதாவது,உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடுப்பது,மத்திய ஆட்சியாளர்கள் மூலம் இப்பிரச்சனையை தீர்ப்பதற்கான முயற்சிகள் அனைத்தும் பிரச்சனையை முடிவே இல்லாமல் இழுத்தடித்து ஆறப்போடுவதன் மூலம் தமிழகத்தின் உரிமைகளை மறைமுகமாக விட்டுக்கொடுக்கும் செயல்தான், தமிழகத்தில் யார் ஆட்சியாண்டாலும் இப்படிப்பட்ட அணுகுமுறையைத்தான் கையாள்வார்கள். தாங்கள் ஆட்சி பொருப்பில் இருப்பதைவிட  தமிழகத்தின்,தமிழக மக்களின் உரிமைகளும்,நலன்களும் இவர்களுக்கு முக்கியமானது அல்ல.

எனவே,விவசாயிகள் தான் தமது வாழ்வை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.கேரளத்தின் மீதான பொருளாதார முற்றுகையை ஒருபோதும் தமிழக ஆட்சியாளர்களின்,ஓட்டுகட்சிகளின்  உதவியோடு செயல்படுத்த முடியாது.விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு இவர்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள்.ஆகவே,தமிழக அரசு தமக்கு ஆதரவாக செயல்படும் என கருதி விவசாயிகள் எல்லையில் முற்றுகையிடுவது தவறான கணிப்பேயாகும்.

ஆகவே,கேரளத்திற்கு அனுப்பும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளும்,இவற்றை கேரளத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் வியாபாரிகளும் தமக்கிடையே கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம்தான் இந்த பொருளாதார முற்றுகையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியும்.

பொருளாதார முற்றுகை கேரள மக்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக நாங்கள் பரிந்துரைக்கவில்லை.மாறாக மலையாள இனவெறியில் இருந்து அவர்களை மீட்பதற்காகத்தான்.ஆகவே பொருளாதார முற்றுகை எனும் இந்த போராட்ட வடிவம் நிரந்தரமான ஒன்றல்ல.இது தற்காலிகமானது ஆயினும்,தமிழக விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை மாற்று சந்தையை ஏற்படுத்திகொள்வதன் மூலம் ஈடுசெய்துவிட முடியும்.விவசாயிகள்,வியாபாரிகள் கூட்டமைப்பால் நிச்சயம் இதை சாதிக்கமுடியும்.
:அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் ஒரு இலக்கை நோக்கி கொண்டு செல்லும் வகையில் ஒருங்கிணைக்கப்படவில்லை.கம்பம் வட்டாரத்தில் நடக்கும் போராட்டத்தை தவிர தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் மலையாளிகளின் நிறுவனங்களுக்கு  எதிராக நடத்தப்படும் தாக்குதல்களும்,போராட்டங்களும் எவ்வகையிலும் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உதவாது.அதற்கு மாறாக மலையாள இனவெறியை மேலும் வளர்ப்பதற்குத்தான் இந்த போராட்டங்கள் பயன்படும்.கம்பம் வட்டார மக்களின் போராட்டத்தின் வழியில் கேரளத்தோடு உள்ள 13 வழிகளிலும் பொருளாதார முற்றுகை போராட்டம் நடபெறும் வகையில் தமிழக போராட்ட சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

நண்பர் தமிழ்மலர் அவர்கள் பொருளாதார முற்றுகையினால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பில்லை என்று மலையாள இனவெறியுடன் எமது கட்டுரைக்கு பின்னூட்டம் அனுப்பியுள்ளார்.அதோடு இந்த பிரச்சனைக்கு தீர்வாக கம்பம் மற்றும் இடுக்கி மாவட்ட விவசாய சங்கங்களின் தலைவர்களின் ஆலோசனையையும் எமக்கு அனுப்பி வைத்துள்ளார்.இந்த தீர்வு பிரச்சனையை தீர்ப்பதற்கு பதில் பிரச்சனையை திசைதிருப்புவதற்கு மட்டுமே பயன்படும்.ஏனென்றால்,முல்லை பெரியாறு அணை பலவீனம் அடைந்துவிட்டதாக கேரளாதான் முற்றிலும் உண்மைக்கு புறம்பான பொய்பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.கேரளத்தின் இந்த கூற்று அப்பட்டமான பொய் என்பதை தமிழகம் நிரூபித்துள்ளது.இதில் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டுகிறோம்.

முல்லைபெரியாறு அணையின் கொள்ளளவை விட இடுக்கி அணையின் நீர் கொள்ளளவு 7 மடங்கு அதிகமாகும்.அதே போன்று இடுக்கி அணையின் நீர் வெளியேற்றும் திறனும் வினாடிக்கு 60 லட்சம் கன அடியாகும்.இதனால் முல்லை பெரியாறு அணை உடைந்தாலும் இடுக்கி அணையில் தேக்கி வைக்கவோ அல்லது வெளியேற்றிடவோ முடியும்.முல்லைபெரியாறு அணை உடைந்து முழு தண்ணீரும் வெளியேறினாலும் அதனால் மக்கள் வாழும் பகுதிகளுக்கு எவ்வித பாதிப்பையும் அது ஏற்படுத்தாது.ஏனென்றால்,முல்லைபெரியாறு அணையில் இருந்து மேற்கு பகுதியில் மக்கள் குடியிருப்புகள் இருந்தாலும்,அவைகள் முல்லைபெரியாறு அணையை விட உயரமான பகுதிகளாகும்.எனவே,முல்லைபெரியாற்றில் 100 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றாலும்,மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.இதனால் பாதிப்பிற்கு உள்ளாகிறவர்கள் முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்துள்ளவர்கள் மட்டுமே.
எனவே,முல்லைபெரியாறு அணையின் கீழ் மட்டத்தில் இருந்து 34 அடி ஆழ்த்தில் இருந்து சுரங்கப்பாதைகள் வழியே தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லலாம் என்று இவர்கள் கூறி இருக்கிறார்கள்.இவர்கள் இருவரும் விவசாயிகளின் நிலையில் இருந்து இக்கருத்தை தெரிவித்துள்ளனர்.ஆனால்,முல்லை பெரியாறு அணைப்பற்றிய பிரச்சனையின் காரணகர்த்தாக்களான கேரள ஆட்சியாளர்கள்,அரசியல் கட்சிகளின் நோக்கம் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்பதுதான்!இவர்களின் இந்த நோக்கத்தை பற்றி நாங்கள் எமது முந்தைய கட்டுரைகளில் தெளிவாக நிரூபித்துள்ளோம்.

எனவே,இந்த தீர்வை முதலில் நண்பர் தமிழ்மலர் அவர்கள் கேரள ஆட்சியாளர்கள்,அரசியல் கட்சிகளிடம் கூறி ஏற்கவைக்கட்டும்.அதன் பின்னர்,தமிழகத்தில் இத்தீர்வை முன்வைக்கலாம்.

*தேவையற்றவன்,தேவையுள்ளவன் அதை பெறுவதற்கு உரிமையுள்ளவன் என்பதை மறுக்கும் அடாவடித்தனத்தை கைவிட தயாராக வேண்டும்!

*தமது உரிமையை பெறுவதற்கு உரிமையுள்ளவன் எப்போதும் தயாராகவே இருக்கிறான்,இருப்பான்! நன்றி.  

தொடர்புடைய பதிவுகள்:



2.முல்லை பெரியாறு:தற்கொலைக்கு முயலும் கேரளா!