விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்

Pages

Showing posts with label தமிழக மீனவர்கள். Show all posts

Thursday, 8 August 2013

இந்தியாவின் காலனி தமிழ்நாடு!

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இந்திய அரசு கூறிக்கொள்ளும் ஜம்முகாஷ்மீர், வடகிழக்கு இந்திய மாநிலங்களில் உள்ள மக்கள் தங்களை எப்போதுமே இந்தியர்கள் என்று ஒப்புக்கொண்டதில்லை. ஆனாலும் இந்திய அரசு தனது இராணுவபலத்தின் மூலம் இப்பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

மேற்கண்ட பகுதிகளைப் போன்றல்லாமல் இந்திய மாநிலங்களில் ஒன்றாகவே உள்ள தமிழ்நாட்டை இந்திய அரசு தனது காலனியாகவேத்தான் கையாள்கிறது. இந்தியாவின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டை இந்திய அரசு கருதமுடியாமைக்கு  ஜம்முகாஷ்மீர், வடகிழக்கு இந்திய மாநில மக்களைப் போன்று தமிழ்நாட்டு மக்கள் தங்களை இந்தியர்களாக கருதவில்லை என்பதல்ல காரணம். இந்தியாவில் உள்ள ஏனைய மக்களைப் போன்று தமிழ்நாட்டு மக்கள் தம்மை பார்ப்பன மேலாதிக்கத்திற்கு உட்பட்டவர்களாக கருதாததே இதற்கு காரணமாகும்.

தமிழக மக்கள் பார்ப்பனியத்தை தமது பண்பாடாக ஏற்றுக்கொண்டிருந்தாலும், பார்ப்பனர்கள் தம்மை விட உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் ஒப்ப்புக்கொண்டிருந்தாலும், தமது அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் பண்பாட்டில் பார்ப்பன எதிர்ப்பு என்பதையும் உள்ளடக்கியே வாழுகின்றனர். அதாவது நூற்றுக்கு நூறு பார்ப்பன அடிமைகளாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அதிலும் குறிப்பாக பார்ப்பன சமஸ்கிருதத்தையும், சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியையும் ஏற்க வேண்டிய தேவையோ, அவசியமோ எழாத காரணத்தால் அவைகளை எப்போதுமே நிராகரித்தே வந்துள்ளனர். இவைகள்தான் தமிழக மக்களை அடிமைகளாகவும், தமிழ்நாட்டை காலனியாகவும் இந்திய ஆட்சியாளர்களை வன்மத்தோடு பார்க்கத்தூண்டுகிறது.

இந்திய ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், அதன் ஓர் அங்கமாகவும் கருதாதன் வெளிப்பாடுதான் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து துன்புறுத்தும் நிகழ்வுகளில் இந்திய அரசின் அலட்சியமான நடவடிக்கைகள்.
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசின் நிலைப்பாடும், இந்திய அரசின் நிலைப்பாடும் அச்சுப்பிசகாமல் ஒன்றாகவே உள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்கிறார்கள் என்பதே அதுவாகும்.

தற்போது தமிழ மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் கடற்பகுதியில் இன்று நேற்றல்ல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வருகின்றனர். இதற்கு காரணம் இப்பகுதிகளில் தான் மீன்கள் ஏராளமாக கிடைக்கின்றன. இப்பதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுப்பது அவர்களின் உயிர்வாழும் உரிமையையே மறுக்கும் செயலாகும்.

இந்திய அரசு இந்திராகாந்தி காலத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோதே தமிழக மீனவர்களின் உயிர்வாழும் உரிமையையும் பறித்துவிட்டதுதான் இலங்கையின் இப்போதைய நடவடிக்கைகளுக்கான மூலமாகும்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் போதெல்லாம் கைதானவர்கள் தமது குடிமக்கள் என்ற சிந்தனையே இந்திய அரசுக்கு இன்று வரை ஏற்பட்டதில்லை. இதை நிரூபிக்கும் ஆதாரத்தை இந்திய அரசின் நடவடிக்கைகளில் இருந்தே நாம் உணர்ந்து கொள்ள முடியும். 

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதும் அவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளில் இந்திய அரசு தானே ஈடுபட்டதில்லை. தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் நிர்ப்பந்தித்த பிறகுதான் இந்திய அரசு இதில் தலையிடுகிறது.

இப்பிரச்சனை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வந்தாலும் இந்திய அரசு இதை தீர்ப்பதற்கான எந்த உருப்படியான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லை. நாட்டு மக்களை பாதுகாக்கும் உருப்படியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாறாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தான் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகிறார்கள் என்று கூறி இலங்கை அரசின் நடவடிக்கையை இந்திய அரசு நியாயப்படுத்துகிறது.

இந்திய அரசின் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகளால் துணிவு பெறும் இலங்கை தனது நடவடிக்கையை இடைவிடாது தொடர்கிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறித்த இந்திய அரசுதான் அவர்களுக்கு மாற்று வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்க வேண்டும். அப்படி ஒரு கடமை, பொருப்பு தனக்கு இருப்பதாகவே இந்திய அரசு கருதவில்லை. தனது வாழ்வுக்கான மாற்று வாய்ப்பு ஏதும் இல்லாத போது   இப்போதைய தமது பாரம்பரிய வாழ் உரிமையை பாதுகாத்துக் கொள்வது எவ்வளவு தான் ஆபத்து நிறைந்ததாக இருந்தாலும் அதை தொடருவதைத் தவிர தமிழக மீனவர்களுக்கு வேறு வழியேயில்லை.ஒரு வேலை இலங்கை அரசின் அடாவடித்தனத்துக்கு தமிழக மீனவர்கள் பணிந்துபோவது என்பது தற்கொலைக்கு ஒப்பான செயலாகும்.

இந்திய அரசு தொடர்ச்சியாக தமிழக மீனவர்களை காட்டிக் கொடுக்கும் செயலுக்கு தமிழக அரசியல் கட்சியினரும், தமிழக அரசும் தங்களது பிழைப்புவாத நடவடிக்கைகளின் மூலம் துணைபோகின்றன.

கச்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை வலியுறுத்தி தொடர்ச்சியான, விடாப்பிடியான போராட்டங்களின் மூலம் இந்திய அரசை நிர்ப்பந்திக்காமல் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும்போது மட்டும் ஒரே விதமாக ஊளையிட்டு விட்டு இவர்கள் முடங்கிக் கொள்கின்றனர். இதன் மூலம் இவர்கள் இந்திய அரசுக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படுத்தாமல் இந்தியா தனது  வழமையான அணுகுமுறையை தொடர்வதற்கு துணைபோகின்றனர்.

இதற்கு முன்பு வரை விடுதலைப் புலிகளை காரணம் காட்டி இந்திய, இலங்கை அரசுகள் தமிழக மீனவர்கள் மீதான தத்தமது ஒடுக்குமுறையை நியாயப்படுத்தின. ஆனால் இப்போது அப்படி சொல்லிக் கொள்வதற்கு காரணம் எதுவும் இல்லாததால், இப்போதைய தமது ஒடுக்கு முறையை நியாயப்படுத்திக் கொள்வதற்கு புதிய வகையிலான உத்தியை கையாள ஆரம்பித்துள்ளன.

தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய மீன் பிடிப்பால் அவர்களின் ஒன்று விட்ட சகோதர்களான இலங்கை தமிழர்களே பாதிப்பிற்குள்ளாகின்றன”, என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் அண்மையில் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இலங்கை தூதரின் மேற்கண்ட கருத்து பத்தோடு பதினொன்றாக நாம் கருதி விட முடியாது. இது மிகவும் தந்திரமான, ஆபத்தான கருத்தாகும்.  தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களும், ஈழத்தமிழர்களும் சிந்தனை ரீதியாகவும்,நடைமுறையிலும் சகோதரர்களாகத்தான் இருந்து வருகின்றனர்.

இந்த இயல்பான உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்கான தந்திர நடவடிக்கையாகவே இலங்கை தூதரின் கருத்து அமைந்துள்ளது. இதனடிப்படையில் தமிழக, ஈழ மீனவர்களிடையே மோதலை உருவாக்கிவிட வாய்ப்புள்ளது. இதை சாதிக்க ஈழத்தமிழ் மீனவர்களின் பேரில், தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படை வெறித்தனமான தாக்குதல் தொடுக்கவும் வாய்புள்ளது.

இந்திய அரசு முன்பு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டதைப் போன்றே, இப்போது தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களிலும் இலங்கை அரசோடு கைகோர்த்துக் கொள்ளும் வாய்ப்பையும் நாம் நிராகரித்து விட முடியாது.

இதை எதிர்கொள்வதற்கும், முறியடிப்பதற்கும் நாம் இப்போதே தயாராகவேண்டும். ஆனால் தமிழ் நாட்டிலுள்ள அரசியல் கட்சியினர் இதையும் தமது பிழைப்பிற்கான மற்றுமொரு வாய்பாக்கிக் கொள்வதை தடுக்கும் வகையிலான உத்தியை உள்ளடக்கியதாக இத்தயாரிப்பு அமையவேண்டும்.

மொத்தத்தில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கான மூலமும், முதன்மைக் குற்றவாளியும் இந்தியாதான்.எனவே இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த  இந்தியாவிற்கு எதிரான போராட்டத்தை தொடங்குவதுதான் தீர்வாகும். 
தொடர்புடைய கட்டுரைகள்:

Monday, 18 March 2013

மாணவர் போராட்டம் - அன்று அறுவடை செய்தது அண்ணா! இன்று?

இராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தண்டனையை நிறுத்தக்கோரி தமிழகம் எங்கும் எழுந்த உணர்வலைகளுக்கு பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி தமிழகம் எங்கும் மீண்டும் ஓர் உணர்வலை தற்போது எழுந்துள்ளது.அதிலும் கல்லூரி மாணவர்களிடையே உருவாகியுள்ள இந்த உணர்வலை, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எழுந்த எழுச்சிக்கு இணையானதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
தமிழகத்தை கடந்த இரண்டாண்டுகளாக இருளில் மூழ்கடிக்கும் மின்வெட்டுக்குக் எதிராகக் கூட எழாத இந்த உணர்வலை ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராக எழுந்துள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களை அதிலும் மாணவர்கள், இளைஞர்களை உணர்ச்சி கொள்ள ஒரே அம்சமாக இருந்து வருவது ஈழத்தமிழர் பிரச்சனை மட்டுமே என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இல்லை.
ஆனால் இந்த உணர்வலை ஒரே சீரானதாக, ஒருங்கிணைக்கப்பட்டதாக அல்லாமல் வெவ்வேறான அளவிலும், தன்மையிலும் குழுக்குழுவான நடவடிக்கையாக சிதறிய அளவில் மட்டுமே இருந்துள்ளது. இந்த ஒப்புமை இப்போது எழுந்துள்ள உணர்வலைக்கும் பொருந்துவதாகும்.தமிழக அரசியல் கட்சியினரிடையே எத்துனை பிளவுகள், குழுக்கள், கருத்துக்கள் உள்ளனவோ அத்துணையும் மாணவர்களின் போராட்டங்களின் ஊடாக வெளிப்பட்டு வருகிறது.
இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற வகையிலான குரல்கள்தான் பெரும்பான்மையாக வெளிபட்டு வருகிறது.அமெரிக்காவின் இந்தத்  தீர்மானம் உண்மையில் இலங்கையின் போர்க்குற்ற நடவடிக்கையை அம்பலப்படுத்தக் கூடிய உள்ளடக்கத்தை கொண்டதல்ல என்ற மிகச்சாதரண உண்மைக் கூட மாணவர்களிடையே  காணப்படவில்லை.
இந்த தீர்மானத்திற்கு இந்தியா முன்மொழிந்துள்ள திருத்தம் இதை முழுமுற்றாக சாகடித்துவிட்டது.அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை மட்டுமல்ல இறுதிகட்டப்போரில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களையும் அன்று கொலைசெய்ததும் இந்தியாதான்.இந்திய நேரடி ராணுவ பங்கேற்புடன் தான் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தனது சொந்தநாட்டு அரசின் இந்த அநீதிக்கு எதிராக போராட முடியாத, நாம் இலங்கை அரசுக்கு எதிராக குரல் கொடுக்கிறோம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போவானாம்!
நமது தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் நித்தம், நித்தம் சாகடிக்கப்படுகிறார்கள். இந்திய அரசின் ஆதரவோடுதான் நாங்கள் உங்களைத் தாக்குகிறோம் என்று இலங்கை கடற்படையினர் நமது மீனவர்களிடையே பகிரங்கமாக அறிவிக்கும் அளவுக்கு நமது பலவீனம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டப் பிறகும், அதற்கு எதிராக கிளர்தெழாமல் மீனவர்களை தன்னந்தனியாக தவிக்கவிட்டு வேடிக்கை பார்க்கும் நாம் ஈழத்தமிழர் உரிமைகளை  எப்படி பெற்றுத்தர முடியும்?
தனது அரசியல், பொருளாதார நலன்களுக்காக சொந்த நாட்டு மக்களின் உயிரைக் கூட காவு – காட்டி – கொடுக்கும் இந்திய அரசின்  கோரமுகத்தைக் கூட முற்றாக அடையாளம் காண முடியாமல், பாமர்களாக உள்ள நமக்கும், நமது போராட்டங்களுக்கும் இலங்கை அரசு எந்த அளவிற்கு மதிப்புக் கொடுக்கிறது என்பதற்கு ஆதாரம்தான் தமிழக மீனவர்கள் மீதான அதன் தாக்குதல்கள்.தமிழகத்தில் எந்த அளவிற்கு இலங்கை இனவெறிக்கு எதிரான உணர்வுகள் மேலோங்குகிறதோ, அந்த அளவிற்கு அது இலங்கை கடற்படையின் சிங்கள இனவெறியாய் தமிழக மீனவர்கள் மீது  பாய்கிறது.
தனது இரு கடற்படை வீர்ர்களுக்காக இத்தாலி அரசு இந்திய அரசுடனான தனது உறவையே முறித்துக் கொள்ள தயாராக இருக்கிறது.ஆனால் இந்திய அரசோ, தனது சொந்தநாட்டு மக்களின் ஆயிரக்கணக்கான உயிரையே இலங்கை அரசுக்கு காவு கொடுத்து அதனுடனான தனது உறவை பாதுகாத்துக்கொள்கிறது.
இத்தாலி அரசு தனது இரு கடற்படை வீரர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினால், அதனால் தனது சொந்த நாட்டு மக்களின்  எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்று அஞ்சுகிறது. இந்தியாவுடனான உறவை விட தனது நாட்டு மக்களின் உணர்வே மேலானது என்று தீர்மானிக்கிறது.ஆனால் இந்திய அரசோ இந்தியாவிலுள்ள எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளைப் பற்றி மயிரளவிற்கு கூட கவலைப்படவில்லை.
இப்படி இந்திய அரசு நமது உணர்வுகளை இந்த அளவிற்கு உதாசீனப்படுத்துகிறதே அது ஏன் என்பதைப்பற்றி என்றைக்காவது நாம் பரிசீலித்திருக்கிறோமா?இப்படி பரிசீலிப்பதற்கு அன்று நமது தந்தை பெரியார் இருந்தார். நமது  தந்தையின் கருத்துக்கள் நம்மை ஒருங்கிணைத்தது. இந்த ஒருங்கிணைப்புகள் இந்தி எதிர்ப்புப் போராட்டமாக, மாணவர்களிடையே வெடித்தது அன்று!இப்போது தமிழக மாணவர்களிடையே எழுந்துள்ள உணர்வலைகளை இந்தி எதிர்ப்பு  போராட்டத்தோடு ஒப்பிடுவதாலேயே இப்போராட்டம் அதனோடு இணைந்து விடாது.
இப்போராட்டம் ஒரு தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். சரியான இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.அன்று நமது தந்தையையே காட்டிக் கொடுக்க ஒரு அண்ணதுரை இருந்தார். இன்று ஆயிரம் அண்ணாதுரைகள் அணி, அணியாக  அணிவகுத்து நிற்கிறார்கள்!ஆயிரம் தடைகள் அணி வகுத்தாலும் அதையெல்லாம் தகர்க்கும் ஆற்றல் மாணவர்களுக்கு உண்டு. அதை அவர்கள் செய்து முடிக்க உறுதுணையாய், ஓரணியில் அணிதிரள்வோம், ஆதரவளிப்போம் !
தொடர்புடைய பதிவுகள்:

1.தீ:நமக்கல்ல இனி எதிரிக்கு வைப்போம்!

Monday, 30 July 2012