கர்நாடக சட்டசபையில் கைப்பேசி மூலமாக ஆபாசப் படம் பார்த்ததாக அம்மாநிலத்தின் அமைச்சர்கள் லட்சுமண்சவதி,சி.சி.பாட்டீல் ஆகியோரும் இவர்களுக்கு அதை அனுப்பிவைத்த அமைச்சர் கிருஷ்ணபாளேமர் ஆகியோர் பாரதிய ஜனதா தலைமையின் உத்தரவுப்படி பதவி விலகியுள்ளனர்.இதோடு விசாரணை முடியும் வரை அம்மூவரும் சட்டப்பேரவைக்கு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆபாசப் படம் பார்த்ததன் மூலம் அவையின் புனிதத்தையும்,கண்ணியத்தையும் அம்மூவரும் பாழாக்கிவிட்டதால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்துள்ள பாரதிய ஜனதா,விசாரனையின் முடிவில் அம்மூவரும் குற்றமற்றவர்கள் என்று தெரிய வரும் என்று கூறியுள்ளது.
கர்நாடக சட்டசபை நிகழ்வுகளின் எதிரொலியாக தமிழக சட்டசபையில் கைப்பேசிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட விவகாரம் நாடுமுழுக்க உள்ள அரசியல் கட்சிகள்,செய்தி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.
கர்நாடகத்தில் பாரதிய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தொடர்ந்து ஏதாவதொரு நெருக்கடியை சந்தித்தே வருகிறது!
இதற்கு முன் ஏற்பட்ட பிரச்சனைகள் முறைகேடு,ஊழல் சம்பந்தப்பட்டவைகள்.இதனால் அது சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உட்பட்டது.முறைகேடு,ஊழல் ஆகியவை தார்மீக ரீதியாகவும் தவறானவை என்று கருதப்படுவை.
ஆனால் கைப்பேசியில் ஆபாசப்படம் பார்ப்பது சட்டப்படி குற்றச்செயலாக வரையறுக்கபட்டதா? இல்லை. அதே போல் ஆபாசப்படம் பார்த்தவர்கள் பாரதிய ஜனதாவை சேர்ந்தவகள்.இந்து மதத்தை பாதுகாப்பதற்கென்றே உருவாக்கப்பட்டு செயல்படும் ஒரு கட்சி.இந்திய அரசியல் சட்டத்தை விட இந்து மதத்தின் கோட்பாடுகளே அதற்கு தலையாய முக்கியத்துவம் உடையது.
மொத்தத்தில் இந்து மதத்தின் கோட்பாடுகளும்,தத்துவங்களுமே பாரதிய ஜனாதா கட்சியின் அடித்தளமாக உள்ளது.இந்த அடித்தளம் தவறு என்று இந்திய அரசியல் சட்டமோ,இந்தியாவில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சியோ கூறவில்லை.இப்படி தவறு என்று வரையறுக்கப்படாத போது அதன் நடைமுறை மட்டும் எப்படி குற்றமாகும்?
இந்து மதத்தின், எந்தக் கோட்பாடுகளும்,தத்துவங்களும் பாரதிய ஜனதா கட்சியின் அடித்தளமாக உள்ளதோ அதற்கு இந்தியாவில் உள்ள எந்த ஒரு கட்சியும் எதிரானதில்லை?
சட்டப்படியும் தார்மீக ரீதியாகவும் தவறு என வரையறுக்கப்படாத ஒரு நிகழ்வை நடைமுறையில் தவறு எனக் கூறுவது எப்படி சரியாக இருக்கும்!
எனவே, ஆபாசம் என்று எதை கூறுகிறார்களோ, அப்படி கூறுகிறவர்கள் அனைவரும் இரட்டை வேடம் போடுகிறார்கள்.நேர்மையற்ற வகையில் நடந்துகொள்கிறார்கள்.நிர்வாணமான மனிதர்களின் காட்சிகள்,ஆண்,பெண் உடலுறவு காட்சிகளையே ஆபாசம் என்றும் இந்த காட்சிகளை சட்டசபையில் பார்த்ததுதான் குற்றமென்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்து மதத்தின் இரு அச்சாணிகள் சைவமும்,வைணவமும். இவ்விரு பிரிவுகளுமே, இப்போது எது ஆபாசம் என்று விவாதிக்கப்பட்டு வருகிறதோ, அதைத்தான் ஆணிவேராக கொண்டவை.இந்து மதத்தை கடைபிடிப்பவர்கள்,ஏற்றுக்கொண்டவர்கள் அனைவரும் தனது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக ஆபாசத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள பல லட்சக்கணக்கான இந்துமதத்தின் கோவில்கள், புராணங்கள்,இதிகாசங்கள் என்று சொல்லப்படுவைகள் அனைத்தும் இதற்கு ஆதாரமாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்கின்றன.
சிவபெருமானை முழு முதற்கடவுளாக கொண்டுள்ள சைவம் சிவபெருமானின் லிங்கத்தைத்தான்-ஆணுறுப்பைத்தான் - அடையாளச்சின்னமாக கொண்டுள்ளது.சிவனின் ஆணுறுப்பும்,பார்வதியின் பெண்ணுறுப்பும் இணைந்த காட்சிதான் சிவலிங்கம்.அதாவது சிவனின் ஆணுறுப்பும்,பார்வதியின் பெண்ணுறுப்பும் இணைந்து உருவானதுதான் இவ்வுலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும். ஆண்,பெண் உடலுறவுதான் உயிரினங்களுக்கான அடிப்படை என்பதுதான் அதன் தத்துவமாம்!
எனவே இவ்வுலகில் உயிரினங்களின் தோற்றத்துக்கு காரணமான ஆண்,பெண் உறுப்புகளை உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும், ஏன் அனைத்து உயிரினங்களும் வணங்கினால்தான் உலகில் உயிர்கள் செழித்து வளரும் என்பதுதான் இதன் தத்துவ விளக்கம்.
இந்து மதத்தின் மற்றொரு பிரிவு விஷ்ணுவை முழு முதற்கடவுளாகக் கொண்டு செயல்படும் வைணவமாகும்.இதுவும் ஆண்,பெண் இணைவில்தான் உலக உயிரினங்கள் பிறப்பெடுக்கின்றன.எனவே அவைகளை நாம் எப்போதும் மறக்ககூடாது.
இப்படி மறக்கக்கூடாது என்பதை நினைவுப்படுத்திக்கொள்ளும் வகையில்தான் ஆண்,பெண் உடலுறவு கொள்ளும் குறியீடாகத்தான் நெற்றியில் நாமம் இடுவதை கொண்டுள்ளனர்.
ஆண்,பெண் உடலுறவு காட்சிகள் ஆபாசம் என்று வரையறுத்து அவைகளை நவீன சாதனங்களான
புகைப்படம்,திரைப்படம்,தொலைக்காட்சி,கைப்பேசிகளில் வெளியிடுவது தடை செய்வதானால் ஆண்,பெண் உடலுறவை நேரடி,மறைமுக குறியீடுகளாக கொண்டுள்ள சைவ,வைணவ இந்து மதப் பிரிவுகளை தடைசெய்ய வேண்டி வருமே.அது முடியுமா?
இப்படிக் கோருவது இந்து மதத்திற்கு எதிரானதாயிற்றே? இப்போதும் இதை ஆபாசம் என்றுக் கூறுவதற்கு யாராவது தயாராக இருக்கிறார்களா?
தமிழ்க் கடவுளான முருகனை ’சூ’ பிராமணியமாக்கி அதாவது சுப்ரமணியனாக்கி வழிபாடு செய்கிறார்கள்.முருகன், சுப்ரமணியனாக மாறிய பிறகு அவர் சிவனின் பிள்ளையாக்கப்பட்டார்.அப்படி ஆக்கப்பட்ட சுப்ரமணியன் சிவனின் விந்து சிதறியதால் ஆறுமுகத்துடன் உருவானான் என்று புராணம் எழுதப்பட்டுள்ளது.இது ஆபாசம் இல்லையா?
அடுத்து பெண் வேடத்தில் இருந்த விஷ்ணுவின் அழகில் மயங்கி, அவரை சிவபெருமான் கட்டிபிடித்த போது வெளிப்பட்ட விந்து பூமியில் விழுந்தால் பூமி தாங்காது என்பதால், அதை கையில் பிடித்த விஷ்ணுவின் கையில் பிறந்தவன் ஐயப்பன் என்று ஐயப்ப புராணம் சொல்கிறது.
கர்நாடக அமைச்சர்கள் ஆபாசப் படம் பார்த்ததை குற்றம் என்று சொல்பவர்கள் அனைவரும் இந்து மத கடவுளர்களின் செயல்களையும்
குற்றம் என்று கூறுகிறார்கள்.கைப்பேசியில் இதை பார்ப்பதை குற்றம் என்று சொல்பவர்கள் கையப்பனின் - ஐயப்பனின் பிறப்பையும் குற்றம் சொல்கிறார்கள்.இது மட்டுமா இந்து மத கோவில்களிலும், தேர்களிலும் ஆண்,பெண் உடலுறவுக்காட்சிகளை சிலைகளாக செதுக்கியும்,வடித்தும் வைத்துள்ளனர்.கைப்பேசியில் அவற்றை பார்ப்பது குற்றம் என்று சொல்வதன் மூலம் கோயில்களில் உள்ள சிலைகளையும் தவறு என்று சொல்கிறார்கள்!
ஆகவே இந்துமதத்தின் எதிரிகள் மட்டுமே இதை ஆபாசம் என்று சொல்ல முடியும்! எதிரிகள் சொல்லும் குற்றச்சாட்டை, இந்துமதத்தை பாதுகாப்பதற்கென்றே உள்ள பாரதிய ஜனதாக் கட்சி ஏன் ஏற்க வேண்டும்?
ஆண்,பெண் உடலுறவுக்காட்சிகளை ஆபாசம் என்று கூறுவதை பாரதிய ஜனதா கட்சி ஏற்காது என்பது நமக்குத் தெரியும்.அதே நேரத்தில் அந்தக் கட்சியும் தற்கால கருத்துருவாக்கத்திற்கு பணிந்து போகிறது.மக்களிடையே இந்த கருத்துருவாக்கம் செல்வாக்கு செலுத்துவதாலும் மக்களின் இவர்களின் வாக்குகளை பெறவேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாகவே பாரதிய ஜனதா பணிந்து போகிறது என்பதையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது!
இந்த கருத்துருவாக்கத்தினால்தான் பாரதிய ஜனதா அடிபணிந்து போகிறது என்பதால் அதை மக்களிடையே உடைத்தெறிவதற்கு நீண்ட கால திட்டம் ஒன்றை பாரதிய ஜனதாக் கட்சி உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்!
அதைவிட முக்கியமாக தற்போது கர்நாடக சட்டசபை, நெருக்கடியில் இருந்து பாரதிய ஜனதாக் கட்சி மீள்வதற்கு உடனடி உத்தி ஒன்றை நாங்கள் தருகிறோம்.இதை விசாரணையில் கூறுங்கள்.
எமது அமைச்சர்கள் பார்த்தது மனிதர்களின் ஆபாசப்படத்தை அல்ல.எம்பெருமான்களின் புனிதமான காமலீலைகளை என்று!
பெப்ப……………………..ப்பே, இப்ப என்ன பண்ணுவீங்க?

