விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label பாசிச ஜெயா. Show all posts
Showing posts with label பாசிச ஜெயா. Show all posts

Monday, 13 October 2014

ஜெயாவுக்கான தண்டனை ஊழலுக்கு அல்ல; ஆணவத்திற்கு….

செப்- 27 கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாராவில் ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் ஜான் டி குன்கா அளித்த தீர்ப்பு இந்தியா முழுக்கவே பலமான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதுவரை இந்திய வரலாற்றில் பொருப்பில் இருந்த முதல்வர் ஒருவர் ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றிருப்பது இதுவே முதல்முறை. அதிலும் இந்திய மாநிலங்களிலேயே வேறு எவரும் கற்பனையிலும் கூட நினைத்துப்பார்க்க முடியாத வல்லமை மிக்கவர் என்று அவரும், அவரின் கட்சியினராலும் கருதப்படுபட்டவருக்கு நான்கு ஆண்டுகால சிறை தண்டனை!

ஜெய சர்வ வல்லமை மிக்கவர் என கருதிக்கொண்டதில் ஏதேனும் பொருள் உண்டா இல்லையா என்பதை செப்-27-க்கு பின்னர் தமிழகத்தில் ஜெயாவின் அமைச்சரவை சகாக்களும், அவரின் கட்சியினரும் வெளிப்படுத்திய உணர்வுகளிலிருந்தே நாம் கணிக்க முடியும்.

ஜெயாவை சகல வல்லமை மிக்க கட்சித்தலைவராக, முதல்வராக மட்டுமல்ல, அவரின் சகாக்கள் அவரை சகல வல்லமை மிக்க கடவுளாகவும் சித்தரித்ததை தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் அவரின் கட்சியினர் செய்துக் காட்டிய செயல்களில் இருந்தே நாம் உணர்ந்து கொள்ள முடிந்தது.இந்த உணர்விலேயே 1990- களுக்கு பின்னர் ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்த ஜெயாவுக்கும், அவரது சகாக்களுக்கும் இந்தத் தீர்ப்பு நம்பமுடியாததாக, தமது கால் நூற்றாண்டு கால இனியக் கனவு கலைந்து போன அதிர்வலைகள் அவர்களிடமிருந்து வெளிப்பட்டதில்,வெளிப்படுவதில் வியப்பேதும் இல்லை.










ஜெயாவின் இந்தப் பெரும்கனவுக்கும், இதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் அவரின் கட்சிகாரர்களுக்கு மட்டுமே பங்கிருப்பதாக நாம் கருதிவிடமுடியாது,கூடாது. அவரை சகல வல்லமை மிக்க தலைவராக மட்டுமல்ல கடவுளாகவும் உசுப்பேற்றி விட்டதில், அவருக்கு வாக்களித்த தமிழக பெருங்குடி மக்களுக்குத்தான் மிகமுக்கிய பங்கிருக்கிறது.
அவர் திரைப்பட நடிகையாக இருந்து, அதன்மூலம் எம்.ஜி.ஆரின் மனம் கவர்ந்தவராக ,கட்சியின் பொதுச்செயலாளராக, அவரின் வாரிசாக 1991-ல் ஆட்சிக்கட்டிலை பிடித்த போதே, அவரை தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுத்த போதே தமிழ்ச்சமூகம் தனது தரத்தை வெளிப்படுத்திக் கொண்டது.

சமூக அக்கறையோ,அரசியல் ஈடுபாடோ இவைகளில் எவ்வித அனுபவமோ அற்ற ஒருவர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு உரியவர் அதிலும் ஆசைநாயகி என்கிற சமூகத்தால் இழிவாக சித்தரிக்கப்படும் நிலையில் இருந்த ஒருவரை தமிழக முதல்வராக இரண்டாவது முறையாகவும் தெரிவு செய்த தமிழ்ச் சமூகத்தின் செயல்பாடுதான், அவர் தன்னை சகல சக்திமிக்கவராக, நிலவுகிற சமூகத்தின் சட்டம்,அரசு இயந்திரம்,நீதிமன்றம்,பாராளுமன்றம்,சட்டமன்றம் இன்னபிற ….. இவை எதுவுமே தன்னைவிட உயர்ந்தது அல்ல.இவைகள் அனைத்தும் தனக்கு கீழ்பட்டவையே . இந்த அமைப்புகள் எதுவும் தன்னை எதுவும் செய்துவிடமுடியாது என்ற ஆணவமே அவறை மிக அப்பட்டமான தவறுகளை கூட எவ்வித ஒளிவும்,மறைவும் இன்றி அனைத்தையும் மிக வெளிப்படையாக செய்ய வைத்தது.

ஜெயாவின் கட்சியினர் மட்டுமல்ல , அரசு அதிகாரிகள் கூட அவர் நினைத்த போதெல்லாம் பந்தாடப்பட்டனர்.அவரின் அபிமானத்தை, நம்பிக்கையை பெறுவதற்கான விசுவாசத்தின் அளவுகோல் என்னவென்று தெரியாமல் அமைச்சர் பெருமக்களும், அதிகாரிகளும் நித்தம்,நித்தம் ஆடித்தான் போயினர்.அந்த அளவுகோலை இலக்கண சுத்தமாக அறிந்த சிந்தாந்தவாதி இந்தியாவில் சோ மட்டுமே என்றால், அதன் வடிவ அடையாளம் தற்போதைய முதல்வர் மட்டுமே.
ஜெயாவிற்கு சட்டவிரோதமாக வந்த பணத்தை சட்டபூர்வமாக்கும் செயல் படாத பங்குதாரர்களாக 1990- களில் சசிகலா,இளவரசி,சுதாகரன் என்றால் இப்போதைய செயல்படும் பங்குதாரர் OPS.இந்த உண்மையும் ஒரு காலத்தில் வெளிச்சத்திற்கு வரும்……..

தானே சகலத்திலும் வல்லமை மிக்கவர் என்ற ஜெயாவின் ஆணவமே அவரின் தவறுகளுக்கான மூலமாகவும்,தண்டனைக்கான காரணியாகவும் அமைந்துவிட்டது.இந்த உண்மை பெங்களுர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பிலேயே உள்ளடங்கியிருப்பதை நாம் தெளிவாக காண முடியும்.
1.ஜெயா முதல்வராக 1991- ல் பதவியேற்ற போது அவரின் சொத்துமதிப்பு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 965 –க இருந்தது.

அதுவே 1996- ல் பதவி காலத்தின் முடிவில் அவரது சொத்து மதிப்பு ரூ.53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 – ஆக உயர்ந்துவிட்டிருந்தது.

2.இந்த சொத்துமதிப்பு உயர்வுக்கான வருமானம் தனக்கு சரியான வழியில்தான் வந்தது என்பதை ஜெயாவால் நீதிமன்றத்தில் எந்த நிலையிலும் நிரூபிக்கவே இயலவில்லை.மாறாக அவைகள் தவறான வழியில்தான் வந்தது என்பதற்கான ஆதாரங்களை மிகத்தெளிவாக எவ்வித குழப்பமோ ,ஒளிவு மறைவோ இன்றி வெளிப்படையாக வைத்திருந்தார்.அந்த அளவிற்கு ஆணவம் அவரின் கண்களை மறைத்திருந்தது.

3.அதே போன்று தனது வீட்டில் வைத்திருந்த 27.588 கிலோ தங்க நகையில் வருவாய்க்கு பொருந்தாத வகையில் 20 கிலோ தங்கத்திற்கு அவரால் கணக்கேதும் காட்ட இயலவில்லை.

இப்படி அவரின் ஒளிவு, மறைவற்ற மிகவும் துணிச்சலான தவறுகளின் பட்டியலை அடிக்கிக் கொண்டே போகலாம்,
சட்டத்திற்குட்பட்ட,சமூக நியதிகளுக்கு உட்பட்டவராக தன்னை ஜெயா கருதியிருந்தால் 1 ஏக்கர் விளைநிலத்தை 10 ஆயிரம் ரூபாய்க்கும் , 900 ஏக்கர் தேயிலை தோட்டத்தை வெறுமனே ரூ.7 கோடியே 50 லட்சத்துக்கும் வாங்கியதாக சட்டபூர்வமாகவே பதிவு செய்திருப்பாரா?

எனவேதான் அவர் தனது ஆணவத்திற்கு கொடுத்த விலைதான் ஊழல் வழக்கில் அவர் அடைந்த இந்த சிறை தண்டனை.

ஆனால் அவரின் கட்சிக்காரர்களோ இன்னமும் அவரை உசுப்பேற்றும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வெளியே மொட்டையடித்து, தேங்காய் உடைத்து………………………..

அல்லாகு அக்பர்- அல்லாவே அனைத்திலும் பெரியவர் என்ற திருக்குரானின் புனித வாசகத்தை அவரின் கட்சியில் உள்ள சில கழிசடைகள் சிறைவளாகத்தில் ஓதுகின்றன. அதாவது ஜெயாவே அல்லாவிலும் பெரியவர் என்று……….
கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக தாங்களே தமிழகத்தின் ஆட்சியாளர்கள் என்பதை மறந்து சட்டத்திற்கு விரோதமாக அவர்கள் ஆடியக்கூத்துக்களை நாம் அனைவரும் அறிந்ததுதான்.

ஜெயா சகாக்களின் இந்த ஆட்டங்களும் ,கூத்துக்களும் எதிர்பாரா நிகழ்வுகள் அல்ல.பொய்வழக்கு, வேறு யாரும் ஊழல் செய்யவில்லையா,கருணாநிதி குடும்பம் ஊழல் செய்யவில்லையா போன்றக் கேள்விகள் அவர்கள் கேட்காமல் இருந்திருந்தால் மட்டுமே நாம் அதிசயப்பட வேண்டும்.

ஆனால் பிரச்சனையே தம்மை முற்போக்குகள் , புரட்சியாளர்கள் என்றுக் கருதிக் கொள்வோர் ஜெயா மீதான தீர்ப்பு பற்றியும் அதற்கான காரணம் பற்றியும் ஊதிப்பெருக்கி காட்டுவதுதான்!

ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கின் எழுத்துப்பூர்வ ஆதாரங்களை ஒரு வக்கீல் குமாஸ்தாவோ (அ) முதலாமாண்டு சட்டகல்லூரி மாணவரோ படித்தால் கூட மிக எளிமையாக இவ்வழக்கில் தீர்ப்பு சொல்லிவிட முடியும்.பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டாலும் மிகச்சாதாரண வழக்கு இது என்பதை ஒரு பாமரன் கூட சொல்லிவிட முடியும்.ஆனால் இவர்களோ இந்த தீர்ப்புக்கு பின்னால் பெரும் பூகம்பங்கள் ஒளிந்திருப்பதாக சரடு விடுகின்றனர்.தமது பங்குக்கு இவர்களும் ஜெயாவை அசகாய சூரராக ஊதிப்பெருக்கிக் காட்டி ஆனந்த மடைகின்றனர்..
அரசியல் பழிவாங்கல்,கார்ப்பரேட்டுகளின் சதி,காங்கிரசின் சதி,கருணாநிதியின் சதி,பாஜக விடம் மோதியதின் எதிர் விளைவு ……………….  போன்ற வெளிப்படுத்தல்களின் மூலம் இவர்கள் தம்முடைய மேதாவித்தனத்தை காட்டுவதாக கருதிக்கொள்கினறார்கள்.

எது எப்படியோ இவ்வளவு கலேபரத்திலும் இவர்கள் ஜெயாவும், அவரை சார்ந்தோரும் அனைவரும் தம்மையே அறிந்தும்,அறியாமலும் ஒரு உண்மையை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.
இந்தியாவில் அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு அங்கமும் நிர்வாக எய்ட்ஸ் நோயான லஞ்சம்-ஊழலால் பாதிப்பிற்குள்ளாகிவிட்டதைப் போன்றே நீதித்துறையும் ஆகிவிட்டுள்ளது.

ஆயிரமாயிரம் தமது குற்றவழக்குகளில் நீதித்துறையை விலைக்கு வாங்கியதை போன்றே இந்த வழக்கிலும் அதை விலைக்கு வாங்கிவிடலாம்,மிரட்டி பணிய வைத்துவிடலாம் என்ற அவர்களின் கணக்குத்தான் தவறாகிப் போனது.இதுதான் இவர்களை ஆத்திரம் கொள்ள வைக்கிறது.

நீதிபதி குன்கா வளைந்து கொடுக்காத நேர்மையாளராக கூட இருக்கலாம்,இப்படியும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.ஆனால் ஒட்டுமொத்த நீதித்துறை என்ற வகையில் ஒப்பிட்டு பார்க்கும்போது சாராயம் காய்ச்ச அனுமதி தந்துவிட்டு அதற்கு மாமுலும் வாங்கும் போலிசு,சில நேரங்களில் கள்ளச்சாராய கும்பலை பிடித்ததாக கூறி பரப்பரப்பாக ஊடகங்களுக்கு செய்தி தரும் நடவடிக்கைக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு!.

                 

Saturday, 19 November 2011

பேருந்து,பால்விலை உயர்வு:நாய் என்றால் குரைக்கும்…கழுதை என்றால் உதைக்கும்...!

மாமா ஆட்சியாளர்கள் என்றால் மக்களின் வாழ்வை பறிப்பார்கள்! மேற்கண்டவைகள் இவைகளின் இயற்கை குணாம்சங்கள்.நவம்பர் 17- அன்று தமிழக அமைச்சரவை, ஜெயா தலைமையில் கூடி பேருந்துக் கட்டணம் உயர்வு,பால் விலை உயர்வு ஆகியவற்றை அறிவித்து, அன்று நள்ளிரவே அவைகள் நடைமுறைக்கும் வந்துவிட்டன.

1947 ஆட்சி மாற்றம் நள்ளிரவில்தான் நடந்தது.அதனால் தானோ என்னவோ ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்கள் அனைத்துமே, மக்கள் நன்றாக உறங்கும் நள்ளிரவில்தான் நடைமுறைக்கு வருகிறது.விரைவில் மின்கட்டணத்தையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தப் போவதாகவும் மக்களின் தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளார்.



நவம்பர்- 18 அன்று காலை வழக்கம் போல, அனைத்து கட்சித் தலைவர்களும், இது மக்கள் விரோத செயல் என்று அறிக்கை விட்டுள்ளனர்.இதில் கருணாநிதியும்,காங்கிரஸ்காரர்களும் அடக்கம்.கருணாநிதி ஆட்சி காலத்தில் பேருந்துக் கட்டணத்தை வெளிப்படையாக அறிவிக்காமல் மறைமுகமாக ஏற்றினார்.சாதாரணக்கட்டணத்தில் இயங்கும் ஒன்றிரண்டு பேருந்துகளை மட்டும் சாலையில் ஓடவிட்டுவிட்டு, எஞ்சியவற்றை பல்வேறு ரக பேருந்துகளாக தரம் பிரித்து பேருந்துக் கட்டணத்தை உயர்த்தினார்.

அந்த உத்தமர்தான் இப்போது ஜெயாவின் விலைவாசி உயர்வு அறிவிப்பை மக்கள் விரோத செயல் என்றகிறார்.கலைஞர் வீடு கட்டும் திட்டம் என்றப் பெயரில் ஏழைகளை அந்த வலையில் சிக்க வைத்துவிட்டு, சிமெண்ட்,செங்கல்,கம்பி ஆகியவற்றின் விலையை பன்மடங்கு உயர்த்தி ஏழைகளை நடுத்தெருவில் நிறுத்தியதுடன்,கடன்காரர்களாகவும் ஆக்கியவர். கருணாநிதி மக்களின் கழுத்தை ஒசை படாமல் அறுப்பவர்.ஆனால் ஜெயாவோ ஆரவாரமாக அறிவித்து மக்களின் கழுத்தை பன்னாட்டு முதலாளிகளுக்கு பலிகொடுக்கிறார்.

நிலப்பிரபு மூப்பனாரின் வாரிசு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இந்த விலை உயர்வு 
சாதாரண மக்களை பாதிக்கும் என்று வெட்கமே இல்லாமல் பத்திரிக்கைகளுக்கும்,தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி அளிக்கிறார்.மத்தியில் ஆட்சியாளும் மக்கள் விரோத ஆட்சியாளர்கள் பெட்ரோல்,டீசல்,சமையல் எரி வாயுவின் விலை உயர்வை நியாயப்படுத்தும், இந்த காங்கிரஸ் கழிசடை,தமிழகத்தில் பேருந்துக் கட்டண,பால் விலை உயர்வை எதிர்ப்பதாக நாடகம் ஆடுகிறது.

போலி கம்யூனிஸ்ட் கட்சிகளும் தாங்கள் ஆண்ட மாநிலங்களில் விலையை உயர்த்திவிட்டு, இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று ஜெயாவைப் போன்றே தமது செயல்களுக்கு நியாயம் கற்பித்து கொண்டார்கள்.ஆனால் தாங்கள் ஆளாத மாநிலங்களில் விலை ஏற்றத்தை எதிர்ப்பதாக ஊளையிடுகிறார்கள்.

ஒவ்வொரு ஓட்டு சீட்டு அரசியல் கட்சியும் எதிர்கட்சியாக இருக்கும் போது, விலை உயர்வை எதிர்ப்பதும்,ஆளும் கட்சியாக மாறியதும் விலை உயர்வை நியாயப்படுத்துவதும் தமது வழக்கமான செயல்களாக கொண்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள 100 கோடி உழைக்கும் மக்களும் நாட்டிற்கு தேவையற்றவர்களாக ஆட்சியாளர்கள் அனைவரும் கருதுகின்றனர்.தமக்கு ஓட்டுப் போடுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் தான் மக்கள்.இந்த 100 கோடி மக்களின் உழைப்பையும், நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தையும் அமெரிக்க,ஐரோப்பிய நாட்டு  கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்டுவதற்கும்,கொள்ளை அடிப்பதற்கும் இந்த மக்கள் விரோத கும்பலான முதலாளி மாமாக்களும்,ஆட்சி,அதிகாரத்தில் உள்ள மாமாக்களும்,அதிகார வர்க்க மாமாக்களும் அனுமதித்துவிட்டு, அதற்கு கைமாறாக பல்லாயிரம் கோடி ரூபாய்களை பெற்றுக்கொண்டு, அதை அன்னிய வங்கிகளில் மறைத்து வைத்துக்கொண்டு சொகுசாக வாழுகின்றனர்.

நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களான விவசாயம்,சில்லரை வியாபாரம்.சிறு தொழில்கள்,ஆடு,மாடு,கோழி என அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளே செய்வதற்கும், அவர்களே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்திகளாக மாற்றுவதற்கும், முன்னோட்டமாக விலைவாசி உயர்வை மக்கள் விரோத ஆட்சியாளர்கள் அறிவிக்கின்றனர்.

மேற்கண்ட மக்கள் விரோத கொள்கைகள்தான், நாட்டை முன்னேற்றுவதற்கான சிறந்தப் பாதை என்று ஆட்சியாளர்கள் சித்தரிக்கின்றனர்.கூடங்குளத்தில் அணு உலைப் பற்றிய தமிழக மக்களின் அச்சத்தை போக்க வக்கற்ற மாமா மன்மோகன்சிங், அமெரிக்க முதலீட்டாளர்களின் அச்சம் நீக்கப்படும் என அமெரிக்க அதிபரின் அகம் மகிழ அறிவித்துள்ளார்.அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் இந்தியாவில் அணு உலை அமைக்க வழங்கும் கருவிகள்,மூலப் பொருட்கள் உள்ளிட்டவைகளில் உத்திரவாதம் அளித்துள்ள காலத்திற்கு பின் விபத்து ஏற்பட்டால், அதற்கு அந்த நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்று மிகவும் விசுவாசமாக வாலை ஆட்டியுள்ளார் மாமா.
மேலே கண்ட கொள்கைகள்தான் அனைத்து ஓட்டுக்கட்சிகளும் கொள்கையாக கொண்டுள்ளன.தாங்கள் எதிர்கட்சியாக இருக்கும் போது, இதை எதிர்ப்பதாக நாடகம் ஆடிவிட்டு, ஆளும் கட்சியானதும் நடைமுறைப்படுத்துகின்றனர்.

மக்கள்தான் சொரணையற்றவர்களாக, மாற்று தெரியாதவர்களாக எப்படியாவது வாழ்ந்து விட முடியும் என்று கனவு காண்கின்றனர்.ஒருவர் மாற்றி ஒருவருக்கு மாறி,மாறி ஓட்டுப் போடுகின்றனர்.

ஓட்டுப் பொறுக்கிகள் தம்மைப் போன்றே தமக்கு வாக்களிப்பவர்களையும் மாற்றிவிட்டார்கள் என்பதற்கு ஒவ்வொரு உள்ளாட்சித் தேர்தல்களும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன.

எனவே,விலைவாசி உயர்வை எதிர்க்கிற அருகதையை,தார்மீக பலத்தை மக்கள் இழந்துவிட்டனர் என்பதை ஆட்சியாளர்களும்,ஓட்டுப் பொறுக்கிகளும் மிக நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.இந்த தைரியத்தில்தான் எவ்வித அச்சமும்,கூச்சமும் இன்றி விலையை உயர்த்துகின்றனர்.

கருணாநிதியும்,ஜெயாவும் ஒவ்வொரு ஓட்டையும் விலை கொடுத்துதான் வாங்கியுள்ளனர்.ஒரு முறைக்கு மேல் மக்கள் தமக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்று அறிந்தே வைத்துள்ளனர்.எனவே ஐந்தாண்டு ஓய்வுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு தேவையான பணத்தையும்,பல தலைமுறை உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களையும் குவித்துக்கொள்கின்றனர்.

எல்லா ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகளும் மக்கள் விரோதசக்திகள்தான். மக்கள் விரோத கொள்கைகளைத்தான் அவர்களால் நடைமுறைப்படுத்த முடியும்.

இதைப் பார்த்து புலம்புவதைத் தவிர வேறு எதையும் மக்களால் செய்ய முடியாது.அடுத்த முறை தங்களால் தூக்கி எரியப்பட்ட கருணாநிதிக்கு வாக்களிப்பார்கள்.அதற்கு அடுத்த முறை ஜெயாவுக்கு வாக்களிப்பார்கள்.

சொரணை அற்றவர்களாக மக்கள் இருக்கும் வரை,இதற்கு விடிவே இல்லை.ஜனநாயக சிந்தனையின் சாயல் கூட நமது மக்களிடையே கிடையாது.

ஆனால் மேலை நாட்டு மக்களோ, தத்தமது நாடுகளில் தமது சொந்த அனுபவத்தின் மூலமே, தமது நாட்டு ஆட்சியாளர்களை எதிர்த்து வீதிகளில் லட்சக்கணக்கில் திரளுகின்றனர்.தமது நாட்டின் ஆட்சியாளர்களை மிரள வைக்கிக்கின்றனர்.

இதைப்போன்று நமது நாட்டு மக்களையும் உருவாக்கும் அடிப்படையான பணியில், நாம் ஈடுபட வேண்டும்.நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயக சிந்தனையை உருவாக்குவதுதான் சமூக அக்கறையுள்ளவர்களின் தலையாய உடனடிப் பணியாகும்.

இதை சாதிக்காமல் விலை உயர்வை எதிர்ப்பதாக கும்பலோடு சேர்ந்துகொண்டு கோவிந்தா போடுவதன் மூலம் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை.மக்களுக்கு ஜனநாயக சிந்தனையை ஊட்ட மக்களின் வாழ்நிலையில் இருந்து ஆக்கப்பூர்வமான மாற்றுத்திட்ட்த்தை முன்வைக்காமல் இதை சாதிப்பது சாத்தியமும் இல்லை.

மக்களுக்கு புரியாத மொழியில்,மக்களின் வாழ்நிலையில் இருந்து மாற்றுத்திட்டம் எதுவும் இன்றி அமெரிக்க,ஐரோப்பிய மக்களிடம் பேசவதைப் போன்று, நமது நாட்டு பின் தங்கிய மக்களிடம் பேசி மக்களை வெறுமனே உண்டியலில் காசு போடுபவர்களாக மட்டுமே பார்க்கும் பார்வையுள்ளவர்கள்தான், தங்களை புரட்சியாளர்கள் என்று தமிழகத்தில் மார்தட்டிக்கொள்கின்றனர்.எவ்வித அரசுப் பதவியும் இன்றியே ஆபத்தற்ற வகையில் லட்சாதிபதியாகி உலகிலுள்ள புரட்சியாளர்கள் அனைவருக்கும், முன்னோடிகளாக,எடுத்துக்காட்டுகளாக உருவாகி வலம்வருகின்றனர்.

நாடெங்கும் அவன் ஊழல் செய்தான்,இவன் ஊழல் செய்தான் என்று பக்கம்,பக்கமாக எழுதிக் கிழிக்கும் இப்புரட்சியாளர்கள், தாங்கள் லட்சாதிபதியாகும் ரகசியத்தை மட்டும் சொல்ல முடியாது என்கிறார்கள்.இந்த புரட்சியாளர்களில் ஒருவர் இரண்டே மாதத்தில் அரை கோடி ரூபாய்க்கு அதிபதியாகியுள்ளார்.இவரும், இவரை போன்றவர்களும்தான் இப்போதைய ஜெயாவின் விலை உயர்வு அறிவிப்பை எதிர்ப்பதாக மார்தட்டி கொள்கிறார்கள்.மக்களே அணிதிரளுங்கள் என்று அறை கூவல் விடுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் புரட்சியாளர்களாக வலம் வரும்போது,இவர்களின் அறை கூவலை மக்கள் எப்படி ஏற்பார்கள்,நம்புவார்கள்? எவனும் யோக்கியன் இல்லை என்று மக்கள் கருதுவதில் தவறேதுமில்லை.இவர்களைப் பார்த்து ஒதுங்கிப்போவதும் இதை தடுப்பதற்கான சிறந்த வழியுமில்லை.மக்களின் ஒதுங்கும் போக்குதான் இப்படிபட்டவர்களுக்கான  சமூக அடித்தளமாகும்.

அப்படிப் பட்ட புரட்சியாளர்கள் யார் என்கிறீர்களா? அவர்கள்தான் மக இக மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் பினாமி அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் என்ற அமைப்பாகும்.இந்த உத்தம முதலாளிகளின் தயவில்தான் புரட்சியாளர்கள் சொகுசான வாழ்க்கை வாழுகின்றனர்.

இப்படிப்பட்ட போலி புரட்சியாளர்களை கண்டு உழைக்கும் மக்களே ஒதுங்கிப் போகாதீர்கள்.கோடிஸ்வர்களும்,லட்சாதிபதிகளும் தங்களுக்குள் ஆயிரம் கழுத்தறுப்புகள் இருந்தாலும் நம்மை ஏய்ப்பதில் மட்டும் ஒன்றுபட்டு நிற்கின்ற்னர்.இவர்களால் பஞ்சை பராரிகளாக ஆக்கபடும் நாமோ பிரிந்துகிடக்கிறோம்.

இனி நாம் இந்த நாட்டில் வாழவேண்டுமானால், நாம் ஒன்றுபட்டு அமைப்பாய் திரளுவதைத்தவிர வேறு வழியில்லை.இதை சாதிக்காமல் விலைவாசி உயர்வை தடுப்பதும் சாத்தியமில்லை!

தொடர்புக்கு:9842529188


தொடர்புடைய கட்டுரைகள்:



3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2









     

Friday, 23 September 2011

கூடங்குளம்:ஆறப்போடு அணைந்துவிடும்!

கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டத்துக்கு எதிராக அவ்வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 12.09.2011 அன்று முதல் 21.09.2011 வரை தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.இந்த போராட்டத்திற்கு நெல்லை மாவட்ட மக்கள் மட்டுமல்ல கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில மக்களும் ஆதரவு தந்தனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது என்று அம்மாவட்ட போலிஸ் தடைவிதிக்கும் அளவுக்கு போராட்டம் பரவ ஆரப்பித்தது.

தமிழக முதல்வர் ஜெயா கூடங்குளம் அணுமின்நிலையம் மிகவும் பாதுகாப்பானது. ஆகவே மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் ஏற்கவில்லை.முதல் நாள் மிகவும் பாதுகாப்பானது என்று கூறிய ஜெயா மறுநாளே பேச்சுவார்த்தைக்கு வருமாறு போரட்டக்குழுவினருக்கு அழைப்புவிடுத்து பேசினார்.அணுமின்நிலைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு போராட்ட குழுவினர் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.அமைச்சரவைக்கூட்டத்தை 21.09.2011 அன்று கூட்டிய ஜெயா போராட்டக்குழு கோரியபடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.இதனால் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர் மக்கள்.



ஜெயா அமைச்சரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், மக்கள் ஏற்கும் வரை அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்குமாறுதான் கோரியுள்ளார்.மேற்குவங்கம்,ஹரிபூர் அணுமின்நிலையத்தை அம்மாநில முதல்வர் நிராகரித்ததை போன்று நிராகரிக்கவில்லை.அப்படி நிராகரிப்பதற்கான தார்மீக பலம் ஜெயாவிற்கோ முன்னால் முதல்வர் கருணாநீதிக்கோ சிறிதுமில்லை.ஏனேன்றால் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தவர்கள் இவர்கள் இருவருமே. மக்கள் ஏற்கும் வரை அணுமின்நிலைய பணிகளை நிறுத்தி வைக்குமாறு கோரியதன் மூலம் இனி மத்திய,மாநில அரசுகள் இத்திட்டத்தை ஏற்குமாறு மக்களிடையே தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்ளுவர்.போராட்டக்குழு மற்றும் மக்களிடையே துரோகிகளை உருவாக்கி போராட்டத்தை பிளவுபடுத்துவதற்கான வேலைகளையும் செய்வார்கள். ஏதோ ஒரு வகையில் ஒருமுறை மக்களை சமாதானப் படுத்திவிட்டால் மீண்டும் போராட்டம் தொடர்வதை தடுத்துவிட முடியும்,என்று தான் மத்திய,மாநில அரசுகள் திட்டமிட்டிருக்கும். போராட்டக்குழுவில் உள்ளவர்கள் ”எங்களது போராட்டம் மத்திய அரசுக்கு எதிரானது தானே தவிர, மாநில அரசுக்கு எதிரானது அல்ல”, என்று கூறியிருப்பதிலிருந்தே மாநில அரசின் மீது தங்களுக்குள்ள அச்சத்தையே வெளிப்படுத்தியுள்ளனர்.மாநில முதல்வரின் கருத்தோ அணுமின்நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்பது தான்.எனவே கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்தப்படுவதை மாநில அரசு விரும்பாது. அதற்கு மாறாக அவ்வட்டார மக்களை அணுமின்நிலைய பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி வேறுஇடத்தில் குடியமர்த்துவது போன்ற செயல்களில் தான் மத்திய அரசின் உதவியோடு செய்ய முற்படும்.இதையும் மீறி போராட்டம் நடத்தும் அளவிற்கு போராட்டக்குழுவிற்கு ஆற்றல் இல்லை என்பதைத்தான் அவர்களின் அண்மைய அணுகுமுறைகள் வெளிப்படுத்துகிறது.

ஜப்பானின் புகுஷிமா அணுமின்நிலையம் நிலநடுக்கத்தால் பாதிப்படைந்து அணுகதிர்வீச்சினால் அந்நாட்டு மக்கள் மிகக்கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.உலகம் முழுவதுமே அணுமின்நிலையங்கள் பாதுகப்பற்றது என்பது மட்டுமல்ல,அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி அளவும் மிகவும் குறைவானதே!

உலகம் முழுவதிலும் உள்ள அணுமின்நிலையங்கள் மின்சார உற்பத்திக்கென்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அவைகள் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு வேண்டிய மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.கல்பாக்கம் அணுமின்நிலையத்திலும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்பதே முழுமையான உண்மையல்ல. அணு மின்நிலையங்களால்  சாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும்,உலகம் முழுவதிலுமே அதனால் ஏற்படும் பாதகமே கூடுதலாகும். இதனால்தான் உலகம்முழுவதிலுமே அணுமின்நிலையங்களுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

கூடங்குளத்தில் மின் உற்பத்திக்குதான் அணு உலை கட்டப்படுவதாக கூறப்பட்டாலும்,இங்கு ரஷ்யாவின் அணுக்கழிவுகளை கொண்டுவந்து சேமித்து வைப்பதற்கான சாத்திய கூறுகளே அதிகமுள்ளது. இந்த அணுமின்நிலையத்தால் ஏற்பட போகும் பாதிப்புகள் பற்றி மிகக்குறைந்த அளவிற்கே மக்களிடம் பரப்புரை செய்யப்பட்டுள்ளது.ஆனால் பாதிப்புகளோ மிகக்கடுமையானதாகவும், தலைமுறை,தலைமுறையாக நீடிக்ககூடியதாகவும் இருக்கும்.அணுமின்நிலையங்களால் நிலம்,காற்று,நீர் ஆகியவை வெப்பமடைகிறது.அணுக்கழிவுகள் கடலில் கலப்பதால் மீன் வளம் அற்றுப்போகும்.இவைகளை பற்றிய முழு பரிமாணங்களை கூட ஜப்பான் மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்கள் உணர்ந்து கொண்டுள்ள அளவிற்கு தமிழக மக்கள் உணரவில்லை என்பதே உண்மையாகும்.இதனால் தான் இப்போராட்டம் ஒருவட்டார பகுதியின் போராட்டமாக வெளிப்படுகிறது.தமிழகத்தின் ஏனைய பகுதி மக்களை பொருத்தவரை கூடங்குளம் சம்பந்தமான நிகழ்வுகள் ஒரு பரபரப்பான செய்தி மட்டுமேயாகும்.

ஆட்சியாளர்களை பொருத்தவரை ரூபாய் 13 ஆயிரம் கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பரில் செயல்பட தயாராக உள்ள ஒரு திட்டத்தை இடைநிறுத்த முடியாது என்பதாகத்தான் இருக்கும்.தமிழக அமைச்சரவை ”மக்கள் ஏற்கும் வரை அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்குமாறு” தீர்மானம் நிறைவேற்றி  இருந்தாலும்,உண்மையில் இது இந்த விடையத்திற்காகத்தான் இயற்றாப்பட்டதாக நாம் முற்றிலும் நம்பிவிட முடியாது.மத்திய அரசை மிரட்டி பல்வேறு காரியங்களை சாதித்து கொள்வதற்கான ஒரு தந்திரமாகவும் இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கலாம்,என்பதையும் நாம் முற்றிலும் நிராகரித்துவிட முடியாது.ஏனேன்றால் இந்த அணுமின்நிலைய விவகாரத்தில் ஜெயா அரசுக்கு மத்திய அரசுக்கு மாற்றான கருத்தேதும் இல்லை,அதே பொன்று மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடிய நபரும் ஜெயா இல்லை என்பதையும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்
ஈழ இறுதிக்கட்ட போரின் போது இந்திய நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு போரை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொண்டது,அதே போன்று  தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள,உள்ளாட்சித்தேர்தலை கணக்கில் கொண்டுதான் ஜெயா அரசு இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பார் என்பதற்கான சாத்திய கூறுகளே அதிகமாகும்.
இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஈழமக்கள் மீதான தாக்குதலை மிகவும் மூர்க்கமாக நடத்தியதை போன்றே, கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடும் மக்கள் மீதும் ஜெயா அரசு மூர்க்கமான தாக்குதலை தொடுப்பதற்கான வாய்ப்புகளை நாம் நிராகரித்துவிட முடியாது.ஆனால் இதை எதிர்கொள்ளும் ஆற்றல் இப்போதையை போராட்டக்குழுவிற்கு இல்லை என்பதே உண்மையாகும்.இதை எதிர்கொள்வதற்குரிய ஆற்றல் புரட்சிகர,ஜனநாயக சக்திகளின் தலைமைக்கு மட்டுமே உண்டு.இப்படி போராட்டம் நடத்தப் பட்டால் மட்டுமே கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் வெற்றியை நோக்கி சொல்லும்!

தொடர்புடைய பதிவுகள்:

Wednesday, 14 September 2011

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு!

சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 11/09/2011 அன்று பரமக்குடியில் நடந்த இம்மானுவேல் சேகரனின்நினைவுநாள் விழாவில் மூவரைச் சுட்டுக்கொன்றதன் மூலம் மனித ரத்தம் குடிக்க வெறி பிடித்து அலைவதில் இந்திய ராணவத்திற்கும், அமெரிக்க ராணுவத்திற்கும், சிங்கள ராணுவத்திற்கும் நாங்கள் பங்காலிகள் எனக்காட்டியிருக்கிறது தமிழகப்போலீசு.




விழாவிற்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே ஏராளமான போலீசை கும்பல் கும்பலாக இறக்கிவிட்டு பரமக்குடி நகரில் அலையவிட்டிருந்தது தமிழக அரசு. மக்களைப் பீதியூட்டுகிற வழக்கமான நடைமுறை என்று அப்போது தோன்றினாலும், ஒரு பயங்கரமான சதிதிட்டத்தை அரங்கேற்றத்தான் இந்தப் போலீசுக் கும்பல் வந்திருக்கிறது என்பது பின்னால்தான் தெரிந்தது.
விழாவிற்கு வந்துகொண்டிருந்த ஜான்பாண்டியனை அவர் வந்தால் கலவரம் ஏற்படும் எனக்காரணம் கூறி காலை 11 மணிக்கு எட்டுக் குடியருகே கைது செய்கிறது போலீசு.  முத்துராமலிங்கம் குருபூசைக்கு வருகிற ஒட்டுக்கட்சித் தலைவர்களையெல்லாம் வப்பாட்டியைப் போல மிகப் பாதுகாப்பாக அணைத்துக் கூட்டிக்கொண்டு போய் விட்டுவிட்டு வருகிற போலீசு, ஜான்பாண்டியனை மட்டுக் கலவரம் செய்பவராகக் காட்டி தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியைத் துவக்கி வைக்கிறது.
தேவர்சாதிவெறியின் அடையாளமாக கொண்டாடப்படும் தேவர் குருபூஜைக்கு ஜெயா, மு.க.ஸ்டாலின், நடிகர்கள், போலிக் கம்யூனிஸடுத் தலைவர்கள் உட்பட பலரும் வருவார்கள். அவர்களுக்கு முறை வைத்து அழைத்துச் சென்று பாதுகாப்பாக கொண்டு விடுவதில் இந்த அடிமைப் போலீசுக்கு பிரச்சினை இல்லை. மேலும் அந்த குருபூஜை நாளில் தேவர் சாதிவெறியர்கள் வரும் வழிகளிளெல்லாம் தலித் மக்களை தாக்குவதும், வெறுப்பூட்டுவதும் வருடா வருடம் நடக்கும். அப்போதெல்லாம் போலீசின் துப்பாக்கி வேலை செய்யாது. ஆதிக்க சாதி வெறியர்களின் வன்முறைகளும் பயங்கரவாத நடவடிக்கைகளாக கருதப்பட மாட்டாது.
இதற்கு எதிர்வினையாக தலித் மக்கள் இம்மானுவேல் சேகரனது குருபூஜையை நடத்தத் துவங்கியதும் போலீசும், அரசும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பது வழக்கம். இந்த வருடம் குருபூஜைக்கு வரும் ஜான்பாண்டியனை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? கேட்டால் அவர் ஒரு ரவுடி, கட்டைப் பஞ்சாயத்து செய்பவர் என்று கூறுவார்கள். இந்த வேலைகளை எல்லாக் கட்சித் தளபதிகளும்தான் செய்கிறார்கள். எனில் ஜான்பாண்டியனை மட்டும் அப்படி சித்தரிப்பதற்கு ஆதிக்க சாதி வெறியே முக்கியக் காரணம். சரி தங்களது தலைவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜான்பாண்டியனின் ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்யக்கூடாதா? அவர்களை நாய்களைப் போல அடித்து நொறுக்க வேண்டிய அவசியம் என்ன?
ஆதிக்க சாதிக்கூட்டத்திற்கு பிரச்சனை ஏற்படுமென்றால் பிரச்னை ஏற்படுத்துபவர்கள் என தலித்துகளைக் கைது செய்வது, தலித்துகளுக்குப் பிரச்னை ஏற்படுமென்றால் பிரச்னை வராமல் தடுக்கிறோம் என்று தலித்துகளைக் கைது செய்வது தமிழகப் போலீசின் சாதி வழக்கம்.






இமானுவேல் சேகரன்
ஜான்பாண்டியன் கைது செய்யப்படுகிறார். பரமக்குடியில் இருக்கிற அவரது ஆதரவாளர்கள் உடனடியாக அவரை விடுதலை செய்யச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். விடுதலை செய்ய மறுக்கும் போலீசு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பரமக்குடி ஐந்துமுக்கு ரோட்டில் சாலைமறியல் செய்கிறார்கள். சாதாரணமாக, ஓட்டுக்கட்சிகள் உள்படப் பலரும் செய்கின்ற அதே சாலைமறியல்தான். ஆனால், இப்போது அதை ஒரு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதைப்போல மாற்ற முயலும் முயற்சியாகத் தனது வேட்டையைத் தொடங்கியது. காட்டடி, மாட்டடி என்று சொல்வார்களே அப்படிப்பட்ட  போலீசின் வழக்கமான காட்டுமிராண்டித்தனமான அடியை அடிக்க ஆரம்பிக்கிறது. இன்னோரு வகையில் சொல்லப்போனால் வெறிகொண்ட தெருநாய்கள் பாய்ந்து பிறாண்டிக் கடித்துக் குதறுமே அதைபோல அ(க)டிக்கத் துவங்கியது. சிதறி ஓடுகிறார்கள் மக்கள். விரட்டி விரட்டியடிக்கிறது போலீசு.      கருணாநிதி கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் திமுககாரர்களையோ, ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் அதிமுககாரர்களையோ என்றாவது தமிழகப்போலீசு விழுந்து பிறாண்டியிருக்குமா? இல்லை தேவர் சிலையில் காக்கா கக்கா போனதற்காக சாலை மறியல் செய்யும் தேவர் சாதி வெறியர்களை என்றாவது தாக்கியிருக்கிறார்களா? தலித்துக்கள் சாலை மறியல் செய்தால் மட்டும் அது பயங்கரவாத நடவடிக்கையா?
அடிதாங்க முடியாமல் சில இளைஞர்கள் அங்கிருந்த தனியார் மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்து கொள்கிறார்கள். மருத்துவமனைக்குள் புகுந்த போலீசு அங்கிருந்தவர்களை வெளியில் இழுத்து சாலையில் போட்டு அடித்துத் துவைக்கிறது. இப்படி அடித்துக்கொண்டிரும்போது டி.எஸ்.பி கீழே விழுகிறார். இனி அடிவாங்கியவர்களின் முறை ஆரம்பிக்கிறது. நையப்புடைக்கப்பட்ட அவரை போலீசு காப்பாற்றிக் கூட்டிச் செல்கிறது. தன்னுடைய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற நேரம் குறிக்கிறது. கடுமையான தாக்குதலுக்குள்ளான மக்கள் தங்களின் ஆத்திரத்தை அங்கிருந்த வஜ்ரா வாகனத்தை எரித்ததின் மூலம் தணித்துக் கொள்ள முயன்றனர். உணர்ச்சி வசப்பட்டிருந்த மக்கள் கூட்டத்தை தடுத்து நிறுத்த அங்கே போலீசு இல்லை. உணர்ச்சி வசப்படும் அவர்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் சற்றுத் தூரமாக இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கே போலீசுக் கும்பல் போய்விட்டிருந்தது. அதாவது தாங்கள் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்றே அவர்கள் சாதுர்யமாக முதலில் ஒதுங்கி இருக்கிறார்கள்.




பிறகு அங்கிருந்து திரும்புகிறார்கள், சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசாகிய நாங்கள் என்பதை மீண்டுமொருமுறை நிரூபிப்பதற்கான உத்தரவோடு வந்தார்கள். சுட்டார்கள். பொதுமக்களில் மூன்று பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஆபத்தான காயங்களோடு இரண்டுபேர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏழுபேர் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. சுடப்பட்டவர்கள் யாரென்கிற விவரம் இன்னும் தெரியவில்லை. சுடப்பட்டவர்களின் உடல்கள் ஐந்துமுனை ரோட்டிலேயே கிடக்க போலீசு மீண்டும் நின்று கொண்டிருந்த மக்களை விரட்டிக்கொண்டு ஒடியது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். அப்போதும் போலீசு சுடுகிறது. மதுரை ராமநாதபுரம் ரோட்டில், நடுச்சாலையில் நின்றுகொண்டு ஓடுகின்ற மக்களை நோக்கிக் குறிவைத்துச்சுடுகிறது போலீசு.
ஒரு போர்க்களத்தை நினைவூட்டுகிறது அந்தக்காட்சி.
ஏற்கனவே சாதி வெறியூட்டப்பட்ட ரெளடிக் கும்பலாக வளர்க்கப்பட்டிருக்கிற போலீசு, ஒரு பக்கா பாசிஸ்ட்டான, சாதித்திமிரின் மொத்த உருவமான, பார்ப்பன ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்தோடு தங்களின் வெறியைத் தீர்த்துக்கொள்வதற்காகவே சுடுகிறது. மேலும் பாசிச ஜெயா பதவிக்கு வந்த உடன் போலீசுக்கு அனைத்து அதிகாரமும் வழங்கி அவர்களை குளிப்பாட்டி பலமுறை பேசியிருக்கிறார். இப்படி ஜெயாவால் அதிகார போதை வெறியேறிய போலீசு இப்படி அப்பாவி மக்களை சுட்டுக் கொல்வதற்கு எந்த தயக்கத்தையும் காட்டவில்லை. எல்லாம் அம்மா கொடுத்திருக்கும் அதிகாரம் என்பது போல நடந்திருக்கிறது.
முத்துராமலிங்கம் குருபூசையின் போது அனைத்து ஓட்டுக்கட்சித் தலைவர்களும் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால், இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளின் போது எந்த ஓட்டுக்கட்சித் தலைவனும் வருவதில்லை. ஏன் வருவதில்லை என்பதைப்பற்றிக்கூடச் சிந்திக்காமல் அந்த ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித் இளைஞர்கள் தங்கள் தலைவர்களின் படங்களைத் தாங்களே பிளக்ஸ் பேனர்களில் போட்டுக்கொண்டு அவர்களும் இந்த விழாவிலே கலந்துகொள்வது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறார்கள்.
இதோ, திட்டமிட்டே, ஜெயாவின் ஆசிகளோடுதுப்பாக்கியால் சுட்டு 4 பேரைக்கொலை செய்திருக்கிறது போலீசு. ஓரிடத்தில் இன்ஸ்பெக்டர் கைத்துப்பாக்கியினால் சுட்டு இருவரைக் கொன்றிருக்கிறார். மதுரையிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள். பத்திரிகைகளிலே என்ன எழுதப்போகிறார்கள்? கலவரம் செய்தார்கள், அதை அடக்கப்போன போலீசாரைத் தாக்கினார்கள், கலவரத்தை அடக்க போலீசார் சுட்டனர் என்றுதான் எழுதப்போகிறார்கள்.
இவெங்களும் ஆட்டம் அதிகமாகத்தான போட்ராங்கஎன்கிற, ஆதிக்க சாதிப்பார்வையில் ஊறிக்கிடக்கும் மக்களும்இதைக்கலவரம் என்றே நம்புவார்கள். பரப்புவார்கள். கலவரம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றுதான் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். அவர்களது அகராதியில் போலீசு எப்போதுமே கலவரம் செய்யாது. எதிர்க்கட்சியாக இருப்பவர்களோ, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பார்கள். ஆனால், சட்டம் ஒழுங்கைக் கெடுத்தது போலீசுதான் எனச்சொல்லமாட்டார்கள்.
இந்த துப்பாக்கி சூட்டில் இறந்து போனவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயை வீசியிருக்கும் பாசிச ஜெயா யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். வன்முறையில் ஈடுபட்டது ஜெயாவில் காவல் நாய்களான தமிழக போலீசு. வன்முறைக்கு பலியானது தலித் மக்கள். எனில் ஜெயாவின் வேண்டுகோளுக்கு என்ன பொருள்?   இனி இந்த கலவரவழக்குகளுக்காக நூற்றுக்கணக்கான தலித்துக்கள் மீது பொய் வழக்கு போடப்படும். அவர்கள் இனி வரும் ஆண்டுகள் முழுவதும் வழக்கு, வாய்தா, சிறை என்று அலைய வேண்டும். இது கொடியங்குளம் கலவரம்போதே நடந்திருக்கிறது. அந்த வழக்குகளுக்காக பல கிராம தலித் மக்கள் இன்றும் நீதிமன்றங்களுக்கு அலைகிறார்கள். சுட்டுகொன்றது போதாது என்று இப்படி நீதிமன்றங்கள் மூலமும் சித்திரவதை செய்கிறார்கள்.
ஆதிக்க சாதிக்கும்பல்கள் ஆடாத ஆட்டங்களெல்லாம் ஆடுகையில் அவர்களோடு சேர்ந்து கொண்டு, போதையில் மிதக்கும் போலீசு, தலித்துகள் உணர்வுபூர்வமாக ஏதேனும் செய்தால் கீச்சாதிப்பயலுக்கு திமிரப்பாருடா எனக் குமுறுகிறது. எல்லாத்துறைகளிலும் ஆதிக்கசாதி உணர்வுதான் வெளிப்படுகிறது. அதுதான் இப்போது ஆறு பேரைப் பழிவாங்கியிருக்கிறது. இனியும் இது அதிகரிக்கவே செய்யும். இதை யார் உணர்கிறார்களோ இல்லையோ, போலீசில் வேலை பார்க்கும் தலித்துகளும், ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித்துகளும் உணரவேண்டும்.
இப்போது பாசிச ஜெயா போலீசை வைத்து செய்திருக்கும் இந்தக் கொலைக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, சே.கு தமிழரசன் போன்ற விலை போன தலித் அமைப்புத் தலைவர்கள் வக்காலத்து வாங்குவார்கள். இத்தகைய பிழைப்புவாதிகளையும் தலித் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பதும் ஜெயாவின் ஆட்சிக்காலங்களில் அது இரட்டிப்பாகிறது என்பதும், ஒட்டுக்கட்சிகள் இதை எப்போதும் சுட்டிக்காட்டுவதில்லை என்பதும் மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிற இந்நேரத்தில் போலீசிலும் ஓட்டுக் கட்சிகளிலும் இனியும் நாம் இருக்கமுடியுமா என தலித்துகள் உடனடியாக முடிவு செய்யவேண்டும். வெளியேற வேண்டும். உங்களுக்காக புரட்சிகர அமைப்புகள் காத்திருக்கின்றன.
_____________________________________________________________
- குருசாமி மயில்வாகனன்
_______________________________________________

முதல் பதிவு:வினவு.