நம் உடலுக்கு வைத்துக்கொள்ளும் தீயை, இனி எதிரிகளுக்கு பரிசாய் தருவோம்
இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன் சாகடிக்கப்பட்ட நேரு குடும்பத்தின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற இந்திய அரசு முடிவு செய்தது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எட்டுவார கால இடைக்கால தடை விதித்து 30.08.11 அன்று உத்தரவிட்டுள்ளது.இம்முவரின் தூக்கு தண்டனை பிரச்சனையில்,கடந்த சில வாரங்களாக கொந்தளித்த தமிழகம், இந்த இடைக்கால தடையை வரவேற்று பட்டாசு வெடித்துள்ளது!.தூக்கு தண்டனையை நிறுத்த தனக்கு அதிகாரமில்லை என்று கூறிய முந்நாள் நடிகையும்,இந்நாள் முதல்வருமான ஜெயாவின் சட்டமன்றம் தூக்குதண்டனையை ரத்துசெய்துவிட்டு ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தூக்குமேடையில் தற்போது நிற்கும் மூவரும் ராஜுவ் கொலையில் நேரிடையாக சம்பந்தம் இல்லாதவர்கள்.கொலையாளிகளுக்கு உதவியவர்கள் என்பதுதான் அவர்களின் மீதான குற்றச்சாட்டு கொலையாளிகளுக்கு அவர்கள் தந்த பொருட்கள் எதற்காக பயன்படுத்த போகிறார்கள்,என்பது கூட தெரியாத அப்பாவிகள்.ராஜிவை கொலை செய்ததாக இவர்களே கூறும்,ஒற்றைக்கண் சிவராஜன்,தானு ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டனர்.ராஜீவை கொலை செய்ய உத்தரவிட்டதாக கூறுப்படும் விடுதலை புலிகள் இயக்கமே, இன்று அதன் தலைவர் பிரபாகரன்,உளவு பிரிவு தலைவர் பொட்டுஅம்மன் உட்பட அனைவரும் ஈழ இறுதிக்கட்ட போரில் கோரமாக கொல்லப்பட்டுவிட்டனர்.இவர்கள் மட்டுமல்ல இவர்களோடு சேர்த்து தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக முள்ளிவாய்க்காளில்,50 ஆயிரம் ஈழத்தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர்.தற்போது தூக்குமேடையில் நிற்கும் மூவரும் 21 ஆண்டுகளாக சாவோமா,பிழைப்போமா? என்றுகூட தெரியாமல் தனிமை சிறையில் வைத்து கோரமாக ரசித்த பின்னரும் கூட இந்திய அரசின், தமிழர்களை பழிவாங்கும் கோரப்பசி இன்னும் அடங்கவில்லை.இந்த அடங்கா பசிக்கு ராஜீவை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்பது மட்டும்தானா காரணம்? இல்லை இவர்களின் அடங்காப் பசிக்கு, இதுமட்டுமே காரணமல்ல.ராஜூவ் காந்தி கொலைக்கு பழிவாங்குவதுதான், இவர்களின் நோக்கம் என்றால் இதற்கு முன்னரே இந்திய அரசு தனது சொந்தநாட்டு மக்களாகிய தமிழ்நாட்டு தமிழர்களையே, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து பழிவாங்கிய இந்திய அரசின் நோக்கம்தான் என்ன? தமது உரிமைகளுக்காக போராடிய ஈழத்தமிழர் மீது 1987 ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம்போட்டு, ஈழத்திற்கு இந்திய ராணுவத்தை அனுப்பி ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்றும்,ஈழத்தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த இந்திய அரசின் நோக்கம்தான் என்ன? நிச்சயம் ராஜீவ் படுகொலை மட்டுமல்ல,தமிழர்கள் மீதான இந்திய ஆளும்வர்க்கத்தின்,பார்ப்பன கும்பலின் நலன்களுக்கு எப்போதுமே அது தமிழக தமிழனாக இருந்தாலும்சரி,ஈழத்தமிழனாக இருந்தாலும் சரி எப்போதுமே அடிபணிந்து போனதில்லை.வரலாற்று காலம் தொட்டு பார்ப்பன எதிர்ப்பு கோட்டையின் அடையாளமாக தமிழர்கள் விளங்குகிறார்கள்.மொழி,பண்பாடு,நாகரிகம் என அனைத்திலும் தனக்கென தனி ஒரு பண்பாட்டை உடையவர்கள்.இந்த சுயமரியாதை தன்மான உணர்வை,தமது வழ்க்கை முறையாகவே கொண்டவர்கள்.எப்போதுமே பார்ப்பன பண்பாட்டின் எதிர்ப்பு கோட்டையாகவும்,இதன் காரணமாகவே, அதன் இயல்பிலேயே இந்திய ஆளும்வர்க்கங்களுக்கு எதிரான சிந்தாந்த நடைமுறையை தமது வாழ்வியலோடு உள்ளடக்கியவர்கள்.
சென்னை உயர்நீதிமன்றம் 8 வார இடைக்கால தடை விதித்திருந்தாலும் இது நிரந்தரமாகுமா? இல்லையா? என்பது இக்காலக்கட்டத்தில் தமிழர்கள் எப்படி நடந்துகொள்ளபோகிறார்கள்.என்பதை பொருத்தே அமையபோகிறது.அது இந்திய ஆளும்வர்க்கங்களின் நலன்களுக்கு எஞ்சியதையும் இழக்க போகிறதா? அதாவது பல்லாயிரம் ஆண்டுகளாக நீருபூத்த நெருப்பாய் கனன்று கொண்டே இருக்கும் தமிழர்களின் தனித்த அடையாளங்களை விடப்போகிறதா,இல்லையா என்பதுதான். ஆகவே இந்த தூக்குதண்டனையும்,இடைக்கால தடையும் தமிழர்களுக்கு இந்திய ஆளும்வர்க்கங்கள் வைத்திருக்கும் பரிசோதனை!
இப்போது நம்முன்னே இரண்டு வழிகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு நமக்கு நிபந்தனை விதித்துள்ளது.இதில் முதலாவதை செய்து மூவரையும் காப்பாற்றுவது என்று தமிழின தலைவர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் அனைவரும் முடிவு செய்துவிட்டார்கள்.
ஆனால்,இதை எங்களால் ஏற்க முடியாது என்று முத்துக்குமார்,செங்கொடி தலைமையிலான சுயமரியாதை தன்மானத் தமிழர்கள் முழக்கமிடுகிறார்கள்.
ஆம் நாம் இரண்டாவதை தேரிவு செய்ய முடியுமே தவிர,முதலாவது நிபந்தனைக்கு கட்டுப்பட முடியாது.கெஞ்சவோ,கூத்தாடவோ முடியாது அப்படியானால் அம்மூன்று தமிழர்களின் சாவு நிச்சயம் தானா?அதை தடுப்பதற்கு வேறு வழிகள் இல்லையா?ஏன் இல்லை. வழி இருக்கிறது.அந்த வழிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆற்றலும் நமக்கிருக்கிறது.தேவை தலைமை மட்டுமே.எரிவதை இழுத்தால் கொதிப்பது நின்றுபோகும்.நம் உடலில் நாம் தீ வைத்துகொள்வதற்கு பதில் இந்தியாவின் தெற்காசிய பிராந்திய துணை வல்லரசு கனவுகளுக்கு கொல்லி வைப்போம்.இதை செய்வதன் மூலம் அம்மூவரின் உயிரை மட்டுமல்ல,பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் காத்துவரும் பார்ப்பன எதிர்ப்பு,தன்மானம்,சுயமரியாதை,நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை காப்பாற்றுவோம்.
பொதுவாய் தெற்காசிய துணை வல்லரசு என்ற வார்த்தையை கேட்ட உடனே பலரும் நம் நாடு வல்லரசு என்று பாமரத்தனமாய்,பெருமிதம் கொள்கிறார்கள்.இந்த பெருமிதத்தை தமிழினத் தலைவர்கள் என்று அழைத்துக்கொள்பவர்கள்,தங்களால் முடிந்த அளவிற்கு பரப்ப முயற்சிக்கிறார்கள்.அது முழுமையாக வெற்றி பெறுவதில்லை,என்றாலும் தமிழகத்தில் ஆகப்பெரும்பாலோனோரை சூடு,சொரணை அற்றவர்களாக- தமிழின தலைவர்களை போன்றே- பிழைப்புவாதிகளாக மாற்றிவிடுகிறது.இதையும் மீறி பற்றிகொள்ளும்,நெருப்பு தானே தனிந்து போகிறது.ஆகவே தெற்காசிய நலன் என்றால் என்ன என்பதை இனி சுருக்கமாக பார்ப்போம்.
இந்தியாவின் தெற்காசிய பிராந்திய துணை வல்லரசு நலன் என்பதன் பொருள்.
இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட ஆண்டு 1998. அது நடைமுறைக்கு வந்த ஆண்டு 2000.
முதலீடு
வர்த்தகம்.
இலங்கைக்கான இந்திய ஏற்றுமதியின் அளவு ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி.
இலங்கையில் இருந்து இந்தியவிற்கான இறக்குமதியின் அளவு ரூபாய் 25 ஆயிரம் 825 கோடி.
வரித்தள்ளுபடி:
மேற்கண்ட விவரத்தை பார்க்கும் போது இலங்கைக்கு ஆதரவான முடிவாக நமக்கு இது தோன்றும்.உண்மையில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தேயிலை,ரப்பர்,தாவர எண்ணை,மரங்கள்-மரச்சாமான்கள்,ஏலம்,மிளகு,மீன் உணவு,தாது பொருட்கள்,ஆடைகள் போன்ற நவீன தொழில் நுட்பம் தேவையற்ற பொருட்களே ஆகும்.இப்படிப்பட்ட பொருட்களை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்து அவற்றிற்கு வரியையும் தள்ளுபடிசெய்வது, அப்பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும், சிறு உற்பத்தியாளர்களை கடுமையாக பாதிக்கும் என்றாலும்,அதை பற்றி கவலைப் படாமல்.இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்காக, இலங்கையை எப்பொழுதுமே,தனது அடிமையாக வைத்துக்கொள்ள இப்படிப் பட்ட சலுகைகளை தந்து இந்திய அரசு திட்டமிடுகிறது.அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் அனைத்தும் நவீன தொழிற்துறை பொருட்களாகும்.
இலங்கையில் இந்தியாவின் எந்தெந்த முதலாளிகள், எந்தெந்த துறைகளில் முதலீடு செய்து கொழுத்து வருகிறார்கள்,என்ற விவரத்தை இனி சுருக்கமாக பார்ப்போம்.
தேயிலை.
ஆட்டோ மொபைல்:
இம்மூன்று நிறுவனங்களும் இலங்கையின் மொத்த சந்தையில் பாதியை கட்டுப்படுத்துகின்றன.இதில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனம் அசோக் லேலண்டு.
எண்ணெய் எரிவாயு:
தொலைத்தொடர்பு:
தகவல் தொழில்நுட்பத்துறை:
இரும்பு,சிமெண்ட்:
பெயிண்ட்:
· மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் மொத்த தகவல்களில் சிறு அளவு மட்டுமே.அதாவது அரசியல்,பொருளாதாரம்,ராணுவ ரீதியாக இலங்கையை தமது அடிமையாக மாற்றத்தான் இந்திராகாந்தி தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமையை பறித்து, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார்.
· இலங்கையை மிரட்டிபணிய வைக்கத்தான் ஈழப்போராளிகளுக்கு இந்தியாவில் இராணுவ பயிற்சி தந்தார்.இலங்கை அடிபணிந்த பின்னர்,ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் போட்டு ஈழத்தை இந்திய ராணுவம் ஆக்கிரமித்தது.
· இந்திய ராணுவத்தின் போர்க்குற்றங்களுக்கான தண்டனைதான் ராஜீவ்காந்தியின் சாவு.பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை கொலைசெய்ய,பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய காரணமான ராஜீவ் அதற்கான தண்டனையை பெற்றது,அவரே தேடிக்கொண்ட முடிவாகும்.இதற்காக நாம் வருத்தப்படவோ,கண்ணீர் சிந்திக்கவோ தேவையில்லை.
இதற்கு பின்னர் 2000-த்தில் நடைமுறைக்கு வந்த இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை,இந்திய முதலாளிகளின் நலனை பாதுகாக்கத்தான் ஈழத்தில் இறுதிப்போரை இந்தியா நடத்தியது.
இதன் தொடர்ச்சிதான் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோரையும் தூக்கிலிட்டு இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்கு எதிரான தமிழனின் சுயமரியாதை,தன்மானம்,நாகரிகம்,பண்பாடு,பார்ப்பன எதிர்ப்பு ஆகியவற்றை கைவிட இந்த முதலாளிகள் சார்பில் இந்திய அரசாங்கம் தமிழர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளது..அதற்காக தமிழிர்களாகிய நமக்கு எட்டுவாரகால அவகாசத்தை சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்துள்ளது.
· ஆகவே,மூவரின் தூக்குத்தண்டனை என்பது அம்மூவரின் தனிப்பட்ட விவகாரம் அல்ல.பத்துகோடி தமிழனின் வாழ்வாதாரப்பிரச்சினை.எனவே,இந்திய முதலாளிகள் நமக்கு வைத்துள்ள இரண்டு நிபந்தனைகளையும் நிராகரிப்போம்!
· எந்த இந்திய முதலாளிகளின் லாப வேட்டைக்காக பல்லாயிரக்கணக்கான ஈழம்தமிழர்களை கொன்று குவித்தார்களோ,எந்த முதலாளிகளின் நலன்களுக்காக பத்துகோடி தமிழர்களின் வாழ்வாதாரத்தையே நரபலி கொடுக்க கேட்கிறார்களோ அந்த முதலாளிகளின் நலன்களுக்கு நாம் தீ வைப்போம்!
· எந்தெந்த இந்தியமுதலாளிகள் இலங்கையின் வளத்தை கொள்ளையடிக்கிறார்களோ, தமிழகத்தில் இயங்கும் அந்த இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் நிறுவனங்களை செயல்படவிடாமல் முடக்குவோம்!அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை புறக்கணிப்போம்!
· சென்னை உயர்நீதிமன்றத்தின் எட்டுவார கால அவகாசம் தமிழர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியல்ல! அது இந்திய முதலாளிகளால் நமக்கு வைக்கப்பட்டுள்ள நிபந்தனை! ஆகவே இந்திய முதலாளிகளின் நிபந்தனையை ஏற்க முடியாது என்று வீதியில் இறங்கி கொக்கரிப்போம்!
· தூக்கு தண்டனையை எதிர்த்து வேலூர் கோட்டையை பத்து லட்சம் பேரைக்கொண்டு முற்றுகையிடப்போவதாக வெற்றுச்சவடால் அடிக்கும்,தமிழினத்தலைவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தமிழின துரோகிகளை புறந்தள்ளுவோம்!
· தமிழகத்தில் இருந்தே இலங்கையில் செயல்படும் இந்திய முதலாளிகளின் நிறுவனங்களை விரட்டும் பணியை இன்றே,இப்போதே துவக்குவோம்!
இது ஒன்றே அம்மூவரின் உயிரை மட்டுமல்ல, பத்துகோடி தமிழனின் வாழ்வாதாரத்தையும்,பாதுகாக்கும்!

சங்ககாலத்தில் சமயமற்று வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தில் சோழர்கள் பார்ப்பன சித்தாந்தத்தை அரச மதமாக ஏற்று அதை தமிழ் சமூகத்தின் மீதும் திணித்தனர்.இதனால் வெகுண்டெழுந்த தமிழர்கள் களப்பிரர்கள் தலைமையில் பார்ப்பன எதிர்ப்பு சமயங்களான சமண,பெளத்தத்தை தமது சித்தாந்தமாக தழுவிக்கொண்டனர்.300 ஆண்டுகள் களப்பிரர்கள் ஆட்சி தமிழகத்தில் கோலோச்சியது.ஆனாலும் பிற்கால களப்பிரர்களில் சிலர் தமது ஆளும்வர்க்க நலனுக்காக பார்ப்பனிய சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டனர்.இதன் பின் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் களப்பிரர்களை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றினர்.பார்ப்பனக்கும்பலின் துணையோடு சமண,பெளத்த மதங்களை கொடுரமாக கொன்றொழித்தனர்.தமிழர்கள் சாதிகளாக கூறுபோடப்பட்டனர்.ஆனாலும் பார்ப்பன எதிர்ப்பு என்பது தமது வாழ்வியலின் ஒரு அங்கமாக ஆக்கிகொண்டனர்.தென்னிந்தியாவில் ஆரியர்களாக அல்லாது பார்ப்பனர்களாகத்தான் ஊடுருவினர்,பிற்காலத்தில் சோழ மன்னர்கள் வட இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை அழைத்து வந்து சகல வசதிகளுடன் குடியமர்த்தினர்.தென்னிந்தியாவில் ஊடுருவிய பார்ப்பனர்களும்,அவர்களின் மொழியான சமஸ்கிருதமும் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகியவற்றில் ஊடுருவியது.தமிழகத்திலே பார்ப்பன பண்பாடு சமூகத்தின் எல்லா அங்கங்களிலும் ஊடுருவினாலும் தமிழ் மொழியின் குறைவற்ற வளம் காரணமாக தமிழ் மொழிக்குள் அதன் இலக்கண வரம்புக்குள் சமஸ்கிருத்தத்தால் ஒருபோது ஊடுருவ இயலவில்லை.
களப்பிரர் ஆட்சிக்கு பின்னர் தந்தை பெரியார் தமிழகத்தை பார்ப்பன எதிர்ப்புக் கோட்டையாக மீண்டும் உருவாக்கினார்.ஆனாலும் தந்தை பெரியாரின் கண்முன்னாலேயே அவர் எழுப்பிய பார்ப்பன எதிர்ப்புக்கோட்டையை அண்ணாதுரை தலைமையிலான பிழைப்புவாத கும்பல் இந்திய ஆளும்வர்க்கங்களுக்கு காட்டிக்கொடுத்தது.
அன்றைய சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் முதல் இன்றைய அண்ணாதுரை,கருணாநிதி,வைகோ,ராமதாசு,திருமா போன்றோரை வைத்து, எப்போதும் கனன்று கொன்டிருக்கும் இந்த நெருப்பில் தண்ணீரை ஊற்றினாலும் அதனை முழுமையாக அணைக்க முடியவில்லை.அது எப்போதும் பற்றிக்கொள்வதற்கு தயாராக தம்மை உருவாக்கிகொண்டு காத்திருக்கிறது.பற்றவைக்கத்தான் தேவை ஒரு தீக்குச்சி மட்டுமே,அந்த தீ குச்சியாக ஈழ இறுதிப்போரின் போது முத்துக்குமாராகவும்,தற்போது செங்கொடியாகவும் இருக்கிறது!
மூவரின் தூக்குதண்டனையை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு,தமிழினத்தின் தலைவர்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் அனைவரும் ராஜீவ் கொலையை நாங்கள் ஆதரிக்கவில்லை,அது கோரமானது.இப்படிப் பட்ட நடவடிக்கைகளை நாங்கள் என்றும் ஆதரித்ததில்லை,ஆதரிக்க போவதுமில்லை என்றுதான் சத்தியம் செய்கிறார்கள்.இதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு,இந்தியாவின் தெற்காசிய மேலாதிக்க நோக்கத்திற்கு தாங்கள் எப்போதுமே எதிரிகளில்லை,என்றும் இந்தியாவின் பிராந்திய துணை வல்லரசு நோக்கங்களுக்கு சிங்களவர்களை விட,தமிழர்களே உண்மையான நண்பர்கள் என்று சாமியாடினாலும் இதை நம்புவதற்கு,இந்திய ஆளும்வர்க்கங்கள் தயாரில்லை.ஏனேன்றால் தமிழனின் தன்மானத்திற்கும்,சுயமரியாதைக்கும் சோதனை வரும்போதெல்லாம்,தனது உடலில் தீ வைத்துக்கொள்வதற்கு முன்னர் யாரென்றே தெரியாதவர்கள்,தனது சாவுக்கு பின்னர் தமிழர்களின் தலைவர்களாகிவிடுகின்றனர்.உயிரற்ற அவர்களின் உடல்கள் மொத்த தமிழினத்தையே தலைமையேற்று வழிநடத்துகிறது.
மூவரின் தூக்குதண்டனையை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு,தமிழினத்தின் தலைவர்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் அனைவரும் ராஜீவ் கொலையை நாங்கள் ஆதரிக்கவில்லை,அது கோரமானது.இப்படிப் பட்ட நடவடிக்கைகளை நாங்கள் என்றும் ஆதரித்ததில்லை,ஆதரிக்க போவதுமில்லை என்றுதான் சத்தியம் செய்கிறார்கள்.இதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு,இந்தியாவின் தெற்காசிய மேலாதிக்க நோக்கத்திற்கு தாங்கள் எப்போதுமே எதிரிகளில்லை,என்றும் இந்தியாவின் பிராந்திய துணை வல்லரசு நோக்கங்களுக்கு சிங்களவர்களை விட,தமிழர்களே உண்மையான நண்பர்கள் என்று சாமியாடினாலும் இதை நம்புவதற்கு,இந்திய ஆளும்வர்க்கங்கள் தயாரில்லை.ஏனேன்றால் தமிழனின் தன்மானத்திற்கும்,சுயமரியாதைக்கும் சோதனை வரும்போதெல்லாம்,தனது உடலில் தீ வைத்துக்கொள்வதற்கு முன்னர் யாரென்றே தெரியாதவர்கள்,தனது சாவுக்கு பின்னர் தமிழர்களின் தலைவர்களாகிவிடுகின்றனர்.உயிரற்ற அவர்களின் உடல்கள் மொத்த தமிழினத்தையே தலைமையேற்று வழிநடத்துகிறது.
சென்னை உயர்நீதிமன்றம் 8 வார இடைக்கால தடை விதித்திருந்தாலும் இது நிரந்தரமாகுமா? இல்லையா? என்பது இக்காலக்கட்டத்தில் தமிழர்கள் எப்படி நடந்துகொள்ளபோகிறார்கள்.என்பதை பொருத்தே அமையபோகிறது.அது இந்திய ஆளும்வர்க்கங்களின் நலன்களுக்கு எஞ்சியதையும் இழக்க போகிறதா? அதாவது பல்லாயிரம் ஆண்டுகளாக நீருபூத்த நெருப்பாய் கனன்று கொண்டே இருக்கும் தமிழர்களின் தனித்த அடையாளங்களை விடப்போகிறதா,இல்லையா என்பதுதான். ஆகவே இந்த தூக்குதண்டனையும்,இடைக்கால தடையும் தமிழர்களுக்கு இந்திய ஆளும்வர்க்கங்கள் வைத்திருக்கும் பரிசோதனை!
இப்போது நம்முன்னே இரண்டு வழிகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
1.பார்ப்பன எதிர்ப்பு,சுயமரியாதை,தன்மானம்,நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை தூக்கியெறிந்துவிட்டு அடங்கிவிடு………..
2.மேற்கண்டவைகளை விட மறுத்தால் மூவரின் தூக்கு நிச்சயம்!
இதில் இரண்டில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு நமக்கு நிபந்தனை விதித்துள்ளது.இதில் முதலாவதை செய்து மூவரையும் காப்பாற்றுவது என்று தமிழின தலைவர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் அனைவரும் முடிவு செய்துவிட்டார்கள்.
ஆனால்,இதை எங்களால் ஏற்க முடியாது என்று முத்துக்குமார்,செங்கொடி தலைமையிலான சுயமரியாதை தன்மானத் தமிழர்கள் முழக்கமிடுகிறார்கள்.
ஆம் நாம் இரண்டாவதை தேரிவு செய்ய முடியுமே தவிர,முதலாவது நிபந்தனைக்கு கட்டுப்பட முடியாது.கெஞ்சவோ,கூத்தாடவோ முடியாது அப்படியானால் அம்மூன்று தமிழர்களின் சாவு நிச்சயம் தானா?அதை தடுப்பதற்கு வேறு வழிகள் இல்லையா?ஏன் இல்லை. வழி இருக்கிறது.அந்த வழிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆற்றலும் நமக்கிருக்கிறது.தேவை தலைமை மட்டுமே.எரிவதை இழுத்தால் கொதிப்பது நின்றுபோகும்.நம் உடலில் நாம் தீ வைத்துகொள்வதற்கு பதில் இந்தியாவின் தெற்காசிய பிராந்திய துணை வல்லரசு கனவுகளுக்கு கொல்லி வைப்போம்.இதை செய்வதன் மூலம் அம்மூவரின் உயிரை மட்டுமல்ல,பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் காத்துவரும் பார்ப்பன எதிர்ப்பு,தன்மானம்,சுயமரியாதை,நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை காப்பாற்றுவோம்.
இந்தியாவின் தெற்காசிய பிராந்திய துணை வல்லரசு என்ற வார்த்தைக்கான பொருளை புரிந்து கொண்டால் தான்,அதை கருக வைப்பதற்கான நெருப்பை எங்கே வைப்பது என்ற துல்லியமான முடிவுக்கு நாம் வரமுடியும்.
பொதுவாய் தெற்காசிய துணை வல்லரசு என்ற வார்த்தையை கேட்ட உடனே பலரும் நம் நாடு வல்லரசு என்று பாமரத்தனமாய்,பெருமிதம் கொள்கிறார்கள்.இந்த பெருமிதத்தை தமிழினத் தலைவர்கள் என்று அழைத்துக்கொள்பவர்கள்,தங்களால் முடிந்த அளவிற்கு பரப்ப முயற்சிக்கிறார்கள்.அது முழுமையாக வெற்றி பெறுவதில்லை,என்றாலும் தமிழகத்தில் ஆகப்பெரும்பாலோனோரை சூடு,சொரணை அற்றவர்களாக- தமிழின தலைவர்களை போன்றே- பிழைப்புவாதிகளாக மாற்றிவிடுகிறது.இதையும் மீறி பற்றிகொள்ளும்,நெருப்பு தானே தனிந்து போகிறது.ஆகவே தெற்காசிய நலன் என்றால் என்ன என்பதை இனி சுருக்கமாக பார்ப்போம்.
இந்தியாவின் தெற்காசிய பிராந்திய துணை வல்லரசு நலன் என்பதன் பொருள்.
இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட ஆண்டு 1998. அது நடைமுறைக்கு வந்த ஆண்டு 2000.
முதலீடு
* 1990-ல் இலங்கையில் இந்திய முதலாளிகளின் முதலீட்டு அளவு ரூபாய் 200 கோடி
* 2006-ல் இலங்கையில் இந்திய முதலாளிகளின் முதலீட்டின் அளவு ரூ.7500 கோடி
வர்த்தகம்.
* 2000-த்தில் ரூபாய் 32 ஆயிரத்து 900 கோடி
* 2007-ல் ரூபாய் 1 லட்சத்து 63 ஆயிரத்து 300 கோடி
இலங்கைக்கான இந்திய ஏற்றுமதியின் அளவு ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி.
இலங்கையில் இருந்து இந்தியவிற்கான இறக்குமதியின் அளவு ரூபாய் 25 ஆயிரம் 825 கோடி.
வரித்தள்ளுபடி:
1.இந்தியாவும்,இலங்கையும் 1998 சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிறகு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த 2000-த்திற்கு பிறகு மூன்றாண்டுகளில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் 4 ஆயிரத்து 150 பொருட்களுக்கு வரித்தள்ளுபடி செய்த்தது இந்திய அரசு.
2 இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யும் 3 ஆயிரத்து 932 பொருட்களுக்கு இறக்குமதி வரியை தள்ளுபடி செய்தது இலங்கை அரசு.
மேற்கண்ட விவரத்தை பார்க்கும் போது இலங்கைக்கு ஆதரவான முடிவாக நமக்கு இது தோன்றும்.உண்மையில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தேயிலை,ரப்பர்,தாவர எண்ணை,மரங்கள்-மரச்சாமான்கள்,ஏலம்,மிளகு,மீன் உணவு,தாது பொருட்கள்,ஆடைகள் போன்ற நவீன தொழில் நுட்பம் தேவையற்ற பொருட்களே ஆகும்.இப்படிப்பட்ட பொருட்களை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்து அவற்றிற்கு வரியையும் தள்ளுபடிசெய்வது, அப்பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும், சிறு உற்பத்தியாளர்களை கடுமையாக பாதிக்கும் என்றாலும்,அதை பற்றி கவலைப் படாமல்.இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்காக, இலங்கையை எப்பொழுதுமே,தனது அடிமையாக வைத்துக்கொள்ள இப்படிப் பட்ட சலுகைகளை தந்து இந்திய அரசு திட்டமிடுகிறது.அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் அனைத்தும் நவீன தொழிற்துறை பொருட்களாகும்.
இலங்கையில் இந்தியாவின் எந்தெந்த முதலாளிகள், எந்தெந்த துறைகளில் முதலீடு செய்து கொழுத்து வருகிறார்கள்,என்ற விவரத்தை இனி சுருக்கமாக பார்ப்போம்.
தேயிலை.
டாடா (பெரும்பாலான தேயிலை தோட்டங்கள் டாடாவுக்கு சொந்தம்)
ஆட்டோ மொபைல்:
1.அசோக் லேலண்டு
2.மாருதி.
3.பஜாஜ்.
இம்மூன்று நிறுவனங்களும் இலங்கையின் மொத்த சந்தையில் பாதியை கட்டுப்படுத்துகின்றன.இதில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனம் அசோக் லேலண்டு.
எண்ணெய் எரிவாயு:
1.இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்.
2.2006-க்கு பிறகு ரிலையன்ஸ்
தொலைத்தொடர்பு:
1.ரிலையன்ஸ் கம்யுனிகேசன்:-ரூபாய் ஆயிரத்தி 200 கோடி மூலதனம் போட்டு 50 லட்சம் இணைப்பு பெற இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
2.ஏர்டெல்:- ரூபாய் 7500 கோடி மூலதனத்துடன் 2009-ல் இலங்கைக்குள் நுழைந்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறை:
மகிந்திரா கட்டுநாயகாவில் 65 ஏக்கரில் சிறப்புபொருளாதாரமண்டலம் அமைத்துள்ளது.
இரும்பு,சிமெண்ட்:
1.அல்ட்ராடெக் 2.அம்புஜா
பெயிண்ட்:
ஏசியன் பெயிண்ட்.
· மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் மொத்த தகவல்களில் சிறு அளவு மட்டுமே.அதாவது அரசியல்,பொருளாதாரம்,ராணுவ ரீதியாக இலங்கையை தமது அடிமையாக மாற்றத்தான் இந்திராகாந்தி தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமையை பறித்து, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார்.
· இலங்கையை மிரட்டிபணிய வைக்கத்தான் ஈழப்போராளிகளுக்கு இந்தியாவில் இராணுவ பயிற்சி தந்தார்.இலங்கை அடிபணிந்த பின்னர்,ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் போட்டு ஈழத்தை இந்திய ராணுவம் ஆக்கிரமித்தது.
· இந்திய ராணுவத்தின் போர்க்குற்றங்களுக்கான தண்டனைதான் ராஜீவ்காந்தியின் சாவு.பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை கொலைசெய்ய,பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய காரணமான ராஜீவ் அதற்கான தண்டனையை பெற்றது,அவரே தேடிக்கொண்ட முடிவாகும்.இதற்காக நாம் வருத்தப்படவோ,கண்ணீர் சிந்திக்கவோ தேவையில்லை.
இதற்கு பின்னர் 2000-த்தில் நடைமுறைக்கு வந்த இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை,இந்திய முதலாளிகளின் நலனை பாதுகாக்கத்தான் ஈழத்தில் இறுதிப்போரை இந்தியா நடத்தியது.
விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த 1000 கணக்கான போராளிகளையும்,ஐம்பதாயிரம் ஈழத்தமிழர்களையும் கோரமாக கொன்று குவித்தது.ஈழ இறுதிபோரில் இலங்கையின் போர்க்குற்றத்தை சர்வதேச சமூகம் விசாரிக்கவிடாமல் தடுத்துவருகிறது.
இதன் தொடர்ச்சிதான் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோரையும் தூக்கிலிட்டு இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்கு எதிரான தமிழனின் சுயமரியாதை,தன்மானம்,நாகரிகம்,பண்பாடு,பார்ப்பன எதிர்ப்பு ஆகியவற்றை கைவிட இந்த முதலாளிகள் சார்பில் இந்திய அரசாங்கம் தமிழர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளது..அதற்காக தமிழிர்களாகிய நமக்கு எட்டுவாரகால அவகாசத்தை சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்துள்ளது.
· ஆகவே,மூவரின் தூக்குத்தண்டனை என்பது அம்மூவரின் தனிப்பட்ட விவகாரம் அல்ல.பத்துகோடி தமிழனின் வாழ்வாதாரப்பிரச்சினை.எனவே,இந்திய முதலாளிகள் நமக்கு வைத்துள்ள இரண்டு நிபந்தனைகளையும் நிராகரிப்போம்!
· எந்த இந்திய முதலாளிகளின் லாப வேட்டைக்காக பல்லாயிரக்கணக்கான ஈழம்தமிழர்களை கொன்று குவித்தார்களோ,எந்த முதலாளிகளின் நலன்களுக்காக பத்துகோடி தமிழர்களின் வாழ்வாதாரத்தையே நரபலி கொடுக்க கேட்கிறார்களோ அந்த முதலாளிகளின் நலன்களுக்கு நாம் தீ வைப்போம்!
· எந்தெந்த இந்தியமுதலாளிகள் இலங்கையின் வளத்தை கொள்ளையடிக்கிறார்களோ, தமிழகத்தில் இயங்கும் அந்த இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் நிறுவனங்களை செயல்படவிடாமல் முடக்குவோம்!அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை புறக்கணிப்போம்!
· சென்னை உயர்நீதிமன்றத்தின் எட்டுவார கால அவகாசம் தமிழர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியல்ல! அது இந்திய முதலாளிகளால் நமக்கு வைக்கப்பட்டுள்ள நிபந்தனை! ஆகவே இந்திய முதலாளிகளின் நிபந்தனையை ஏற்க முடியாது என்று வீதியில் இறங்கி கொக்கரிப்போம்!
· தூக்கு தண்டனையை எதிர்த்து வேலூர் கோட்டையை பத்து லட்சம் பேரைக்கொண்டு முற்றுகையிடப்போவதாக வெற்றுச்சவடால் அடிக்கும்,தமிழினத்தலைவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தமிழின துரோகிகளை புறந்தள்ளுவோம்!
· தமிழகத்தில் இருந்தே இலங்கையில் செயல்படும் இந்திய முதலாளிகளின் நிறுவனங்களை விரட்டும் பணியை இன்றே,இப்போதே துவக்குவோம்!
இது ஒன்றே அம்மூவரின் உயிரை மட்டுமல்ல, பத்துகோடி தமிழனின் வாழ்வாதாரத்தையும்,பாதுகாக்கும்!
நம் உடலுக்கு வைத்துக்கொள்ளும் தீயை, இனி எதிரிகளுக்கு பரிசாய் தருவோம் !
புரட்சிகர வாழ்த்துக்களுடன்
சூறாவளி நிர்வாகக்குழு