விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Thursday, 28 March 2013

சகோதர முறை திருமணங்கள் : தனி மனித உரிமையா? பாலியல் சீரழிவா?

சகோதர முறை திருமணங்கள் தனிமனித உரிமைகள் என, போலீசும், மனித உரிமையாளர்கள், ஜனநாயக வாதிகள் எனப் தம்மை கூறிக்கொள்ளும் மகஇக குழுமத்தினரும் கூறுகின்றனர். இந்து திருமணச்சட்டம் சகோதர முறை திருமணங்களை அங்கீகரிக்கவில்லை. இப்படி சட்டம் அங்கீகரிக்காத ஒன்றை மீறி, திருமணம் செய்து கொண்டால் என்ன செய்வது என்பதைப்பற்றியும் சட்டம் ஏதும் குறிப்பிடவில்லை.



சகோதர முறை திருணத்தைப்பற்றி இப்படி சட்டம் ஏதும் குறிப்ப்பிடவில்லை என்பதாலேயே, அது தவறில்லை என்பதுதான் மேலே நாம் குறிப்பிட்டுள்ளவர்களின் வாதமாகும்.

இந்த விவகாரத்தை சட்டப்படி பரிசீலிப்பதா அல்லது சமூக ரீதியாக பரிசீலிப்பதா என்பதைப்பற்றி வினா எழுகிறபோது இவர்கள் அனைவரும் சட்டப்படிதான் பரிசீலிக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள். சமூக ரீதியான அம்சங்களை புறக்கணிக்கிறார்கள்.

இந்திய சட்டங்கள் ஆனாலும், உலகின் வேறு எந்த ஒரு நாட்டின் சட்டங்களானாலும் அவைகள் சமூகத் தேவையை முழுமுற்றாக நிறைவு செய்யக் கூடிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக ஒரு போதும் இருக்க முடியாது.

எப்போதுமே சமூக வளர்ச்சிக்கும், தேவைக்கும் ஏற்ப மாற்றத்திற்கு உள்ளாகக் கூடியவைகளாகத்தான் சட்டங்கள் இதுவரை இருந்துள்ளது மட்டுமல்ல இனி எப்போமே இருக்கும்.

இந்த வகையில் இந்திய அரசியல் சட்டம் தொகுக்கப்பட்ட போது இந்து என்று வறையறுக்கப்பட்ட மக்கள் குழுக்களின் பண்பாடுகள் அவற்றில் தொகுக்கப்பட்டன. இதன்படி இந்து திருமணச்சட்டம் தொகுக்கப்பட்டது. இப்படி தொகுக்கப்பட்ட இந்த சட்டம் நாடுமுழுக்க ஒரே விதமாய், ஒரே சீரானதாக அல்லாமல் வட்டார, சாதி, இனம் என வெவ்வேறு பண்பாடுகளை உள்ளடக்கியதாக அவைகள் அமைந்திருந்தன. இவைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவைகளாக இருந்தாலும் அவைகள் அவற்றை  கடைபிடிக்கும் அந்தந்த மக்கள் குழுக்களால் மீறப்படாத பண்பாடுகளாக நிலவி வந்தன.

இந்திய நாடு முழுக்க பல்வேறு வகைப்பட்ட திருமண உறவுகள் அதாவது இனப்பெருக்கத்திற்கான உறவு முறைகள் சிறு, சிறு வேறுபாடுகளை கொண்டிருந்தாலும், இவை அனைத்திலும் சகோதர முறை திருமண உறவு எந்த ஒரு மக்கள் குழுக்களிலும் ஏற்கப்படவில்லை.

இதன் காரணமாகவே இந்து திருமண சட்டம் இவை அனைத்தையும் உள்ளடக்கி சகோதரமுறை திருமண உறவுகளை அங்கீகரிக்காததோடு  நிறுத்திக்கொண்டுள்ளது.

அதாவது இவற்றை மீறுவது என்ற பிரச்சனையே எழாத போது, அது சமூகத்தில் விளைவுகள் எதையும் ஏற்படுத்தாத போது அவற்றிற்கு தீர்வு எதையும் ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமும் அன்று எழவில்லை போலும்!

ஆனால் இன்று சகோதர முறை திருமணங்கள் பரவலாக ஒவ்வோரு ஊரிலும் சமூக நியதிகளுக்கு மாறாக நிகழும்போது, இதனால் சமூகத்தில் அவைகள் குறிப்பிடும்படியான விளைவுகளை ஏற்படுத்தும் போது, இவற்றை எதிர்கொள்ளும் மக்கள் சமூகமும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளும் இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றத் தேவை இப்போதுதான் எழுகிறது.

சகோதர முறை திருமணம் என்ற ஒழுக்கக் கேடு மட்டுமல்ல, அனைத்துவிதமான பாலியல் ரீதியான ஒழுக்கக் கேடுகளும் இன்று இந்திய சமூகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியச் சமூகம் வெறெப்போதும் இல்லாத வகையில் முற்றிலும் புதிய வடிவிலான பாலியல் வன்முறைகளை சந்தித்து வருகிறது.

டெல்லி என்பது இந்திய நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல அது பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரத்திற்கும் தலைநகரம் என்பதை நிரூபித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அதிர்வுகள் அடங்குவதற்கு முன்பாகவே, கடந்த மார்ச் 1- ம் தேதி 7 வயதே நிரம்பிய பச்சிளம் பெண் தளிர் காமவெறி மிருகங்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள்.

டெல்லி மருத்துவ மாணவியின் மீதான பாலியல் பலாத்காரம், சாவு ஆகியவற்றிற்கு பின் அது நாடுமுழுக்க வெறேப்போதும் இல்லாத அளவுக்கு அதிர்வையும், இதனூடாக பெண்ணுரிமை பற்றிய விவாதங்கள், பாதுகாப்பு பற்றியெல்லாம் நீண்ட நெடிய விவாதங்கள் நடைபெற்றன.

இவற்றிற்கு எதிரான மிகக் கடுமையான சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. ஆனாலும் இவைகள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை அச்சுறுத்தவோ, தடுக்கவோ பயன்படவில்லை என்பதைத்தான் ஏழு வயது சிறுமியின் மீதான பாலியல் பலாத்கார சம்பவம் நிரூபித்துள்ளது.

இது நமக்கு உணர்த்தும் உண்மை என்னவென்றால் இவற்றை வெறுமனே சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்க்கக்  முடியாது, என்பதைத்தான். இது சமூக ரீதியாக விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்.

1990 – களுக்கு பின்னர் இந்திய ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தும் உலகமயக் கொள்கைகளின் தவிர்க்க வியலாத ஓர் அங்கமாகத்தான் நுகர்வு பண்பாடு இந்திய சமூகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது.

இந்தியச் சமூகம் நாகரீகம் அடைந்த காலத்திலிருந்து, ஒரே ஒரு சமூக வளர்ச்சியை, முன்னேற்றத்தைக்கூட தனது சொந்த தேவையிலிருந்து உருவாக்கிக் கொள்ளவில்லை. அன்று முதல் இன்று வரை திணிப்பின் ஊடாகத்தான் அனைத்து மாற்றங்களையும்,வளர்ச்சியையும் கண்டுள்ளது.

எனவே, இச்சமூகத்திற்கென்று தனித்துவமான பண்பாடுகள், வாழ்க்கை முறைகள்என எதையும் கொண்டிராமல் திணிப்பின் ஊடாக வரும் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் உலகிலேயே மிகவும் பிற்போக்கான சமூகம் என்பதால் தான், பாலியல் சீரழிவுகள் இப்போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இந்நாட்டில் வலிமைப்பெற்று திகழ்கிறது.

பொதுவில் நாடுமுழுக்க பாலியல் சீரழிவுகளுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிப்பது போன்று நமக்கு தென்பட்டாலும் இவைகள் உண்மையில்லை. போலித்தனமான உண்மைகள்.

சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் ஆனாலும், சமூகவியலாளர்கள் ஆனாலும் பொதுமக்களானாலும் போலித்தனமான வாழ்க்கை முறைகளையே அடித்தளமாகக் கொண்டவர்கள்!

ஊடகங்களால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெரிதாக காட்டப்பட்டாலும், இவைகள் எழுவதற்கு அடிப்படையான காரணிகளை இவர்கள் அனைவரும் தழுவிக்கொள்பவர்களாகவே உள்ளனர். இதன் காரணமாகத்தான் சட்டங்களைப் பற்றி தவறுசெய்வோர் கவலைப்படுவதில்லை.

இந்திய சமூகத்தின் அனைத்து அங்கங்களும் குற்றவாளிகளை இல்லாமல் செய்வது என்பதற்கு மாறாக அவர்களை பாதுகாக்கும் வகையிலான நடைமுறைகளையே தமது அன்றாட வாழ்வியல் முறையாக கொண்டிருப்பவர்கள்.

இந்த வாழ்வியல் முறையின் செயல்வடிவம் சமூக உண்ர்வின்மையை அடிப்படையாகக் கொண்டது. அதாவது அனைத்தையும் தனக்கான தனிப்பட்ட ஆதாயத்தையே ஆதாரமாக கொண்ட சிந்தனா முறையாகும்.
இப்படியான ஆதாய சிந்தனா முறையே எதையும் தீர்மானிக்கும் அளவு கோலாக இருப்பதால், ந்த ஒரு சமூக சீரழிவானாலும், அநீதியானாலும், அதனால் தனக்கு தனிப்பட்ட முறையில் நேரிடையாக இழப்பு இல்லை என்றால் அது தனக்கு சம்பந்தமில்லாதவைகள் என்று ஒதுங்கிக் கொள்ள வைக்கிறது.

இதே சிந்தனாமுறைதான் தவறு செய்பவர்களை தனக்கு அதில் ஆதாயம் இருக்கிறது என்ற அடிப்படையில் ஒருங்கிணைத்து செயல்படவும் வைக்கிறது.

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் சமூகத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் அவற்றில் தம்மோடு ஈடுடபடுவோருக்கு, இச்செயலில் தான் ஈடுபடுவதன் மூலம் அடையும் ஆதாயத்தில் ஒருப்பகுதியை பங்காக தருகின்றனர்.

இந்த வகையில் இப்படிப்பட்ட குற்றங்களை தடுப்பதற்கான அதிகாரம் பெற்ற கட்டமைப்பை சேர்ந்தவர்களே முதன்மையான ஆதாயவாதிகளாக திகழ்கின்றனர்.

இந்த வலுவான அடித்தளம்  காரணமாகத்தான் குறிப்பிட்ட சில விவகாரங்கள் பெரும் அநீதியாக ஊடகங்களிலும், அபூர்வமாக சில நேரங்களில் சமூகத்திலும் விவாதிக்கப்பட்டாலும், அதனால் அதில் ஈடுபடுவோரிடம் அது பெருத்த மாற்றம் எதையும் ஏற்படுத்திவிடுவதில்லை. அதற்கு மாறாக தமது செயலை மேலும்  திறமையான வழிகளில் தொடர ஊக்கம் பெறுகிறார்கள்.

இந்திய சமூகத்தில் உள்ள ஒவ்வொரு சாதியும் தான் ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் அதே நேரத்தில் ஒடுக்கு முறையாளராகவும் உள்ளது. இது சிந்தனா முறை ஒடுக்கு முறையாக மட்டுமல்லாது நடைமுறை ரீதியான ஒடுக்கு முறையாகவும் உள்ளதால் அதிகார கட்டமைப்பில் உள்ளர்களின், சமூகத்தின் மேல்நிலையில் உள்ளவர்களின் செயல்பாடுகளை அநீதியானதாக காண்பதில்லை.  மாறாக அந்த இடத்தில் இருந்தால் அதைத்தான் தானும் செய்ய முடியும் என அங்கீகாரத்தையும் வழங்குவதோடு   தனது ஏக்கத்தையும் வெளிப்படுத்துபவர்களாகவும் உள்ளனர்.

சமூகத்தின் இந்த யதார்த்த நிலையை, சமூக நலனில் அக்கறை உடையோர் கணக்கில் கொள்வதேயில்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக சமூக அக்கறையற்றோர் இதை மிகத் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர். இதிலிருந்துதான் அவர்கள் தமது செயலை எவ்வித அச்சமும் இன்றி செய்கின்றனர்.

உண்மையில் சமூகத்தில் நடைபெறும் எந்த ஒரு அநீதியானாலும், அதிலும் குறிப்பாக பாலியல் சீரழிவுகள் சம்பந்தமாக சமூகத்தின் மேற்கண்ட எதார்த்த நிலையை சமூக நலனில் அக்கறையுடையோர் கணக்கில் கொண்டால் மட்டுமே தமது செயலில் முன்னேற்றம் எதையும் காணமுடியும்.

இதற்கு மாறாக சகோதர முறை திருமணங்கள் எனப்படும் ஒழுக்கக்கேட்டை பாலியல் சீரழிவாக கருதாமல் 
தனிமனித உரிமையாக காண்பதும், இவைகளுக்கு முற்போக்கு, இயங்கியல் முலாம் பூசுவதும் உலகமயமாக்கலுக்கு மேலும் வலுவையே தரும் என்பதை மறந்து விடக்கூடாது.

மனித இனத்தில் உறவு முறைகள் என்பவைகள் மனிதர்களால் இடையில் ஏற்படுத்தப்பட்டது. அவைகள் ஒரு நாளையில் இல்லாமலும் போகும்”.

”இப்போது நடைமுறையில் உள்ள உறவு முறைகள் நிலபிரபுத்துவ  கா பிற்போக்குத்தனம். இதை மதங்கள் தான் புனிதமானவைகளாக கருதி தூக்கிப் பிடிக்கின்றன”.

”மனிதர்களுக்கு இடையிலான உறவு முறைகள் சமூக வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் ஏற்ப மாறக்கூடியவைகள்  என்றும் இதனால் சகோதர முறை திருமண விவகாரங்களை இந்த வகையில் தான் பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் இது சரி, என்றோ, தவறு என்றோ கூறாமல் தந்திரமான நடைமுறைகளை கையாள வேண்டும்.

தவறு என்று முடிவெடுத்தால் அது நம்மை இயங்கியல் வாதிகள் என்பதை மறுப்பதோடு, பிற்போக்கு வாதிகளாகவும் ஆக்கிவிடும். இதனால் மக்களை சமூக மாற்றத்திற்காக திரட்டும் நமது இலக்கும், நோக்கமும் சீர்குலைந்து போகும் என்றும்”, நீண்ட நெடிய வகுப்பொன்றையும் நடத்துகின்றனர்.
இதன் மூலம் ஏகாதிபத்திய நுகர்வு வெறி, சீரழிவு ஆகியவற்றையும் சமூக இயக்கதின் தவிர்க்கவியலாத அங்கமாக வாழ்வியல் முறையாக அங்கீகரித்து விடுகிறார்கள். அவைகளை இவர்கள் சீரழிவுகளாக காண்பதில்லை.

இதன் மூலம் இத்தகையோர் இப்பண்பாடுகளை உருவாக்குகிற உற்பத்தி முறையையும், சமூகத்தையும் தாங்கள் அங்கீகரிக்கிறோம் என்பதை நாம் அறியமாட்டோம் என்று கருதுகின்றனர் போலும்
மேலும் மனிதன் இன்று கடைபிடிக்கும் வாழ்வியல் முறைகள் நாகரீகம், பண்பாடு அனைத்தும் மனிதன் குரங்கிலிருந்து மனிதானக மாறிய காலத்திலிருந்து மனித சமூகம் அடைந்துள்ள வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றின் தொடர்ச்சி, தொகுப்புதான்.

மனித சமூகம் தன்னுடைய வளர்ச்சி, முன்னேற்றங்கள் ஒவ்வொன்றின் போதும் தனது செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் முன்னையதிலிருந்து மேலும், மேலும் மேம்படுத்திக்கொள்கிறது. ஒரு சமூக மாற்றம் நிகழ்ந்தவுடன் முந்தைய சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் தூக்கியெறிந்துவிட்டு, முந்தையதற்கு முற்றிலும் தொடர்பற்ற, முற்றிலும் புதியனவற்றை கட்டிக்கொள்வதில்லை.

அதற்கு மாறாக முந்தையதிலிருந்து சரியானதை, தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையற்றதை புறந்தள்ளுகிறது. மொத்தத்தில் ஒவ்வொரு சமூக முன்னேற்றம், மாற்றங்களின் போதும் தனது வாழ்வியல் முறையை மனித சமூகம் மேலும் செழுமைப்படுத்திக் கொள்கிறது. குறிப்பாக நாம் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ள மனிதர்களுக்கிடையிலான உறவு முறைகள் அதாவது இனப்பெருக்கத்திற்கான உறவு முறைக்கான வரையறை என்பது மனித இனம் உள்ளவரை  தவிர்க்கவியலாத தேவையாகும்.

இவற்றை நிராகரிப்பது என்பது மனிதனை மீண்டும் மிருக நிலைக்கு தாழ்த்தும் செயலாகும். அதாவது மனிதனை சமூக உணர்வற்றவனாக மாற்றும் உள்ளடக்கத்தைக் கொண்டதாகும்.

மனிதனை சமூக உணர்வற்றவனாக ஆக்குவதே, ஏகாதிபத்திய உற்பத்தியின் வாழ்வுக்கு அத்தியாவசியத் தேவையாகும். இந்த சமூக உணர்வின்மை பூமியில் உயிரினங்கள்  உயிர்வாழ்வதற்கு தேவையான வளங்கள் அனைத்தையும் சூறையாடும் ஏகாதிபத்திய உலகமயமாக்கலை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் இப்பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் அழிவுக்குள் தள்ளிவிடுகிறது. 

இச்சூறையாடும் பொருளாதார நலன்களுக்கு ஆதரவான வறைமுறையற்ற இனப்பெருக்க உரிமையான சகோதர முறை திருமணங்களை நிலபிரபுத்துவ  கால பிற்போக்குத்தனங்களுக்கு எதிரான கலகம் என வெட்கமின்றி இவர்கள் பிதற்றித் திரிகின்றனர்.

இக்கேடுகெட்ட தனத்திற்கு எதிராக போராட வக்கற்றவர்கள், இவைகளில் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்ளும் தந்திரத்தை கையாள வேண்டும் என்று உபதேசிக்கிறார்கள்.

இனப்பெருக்கத்திற்கான உறவு முறைகள் நிலபிரபுத்துவ கால பிற்போக்குத்தனம், தந்திரமாக  ஒதுங்கிக் கொள்ளல்  ஆகிய செயல்பாடுகள், அவற்றை வளர்தெடுத்து மனிதர்களை கார்த்திகை மாதத்து நாய்களாக மாற்றிவிட்ட பிறகு, இம்மிருகத்தனத்தை முன்னேற்றமாகத் கருதுவோர். இம்மிருகங்களை வைத்துத் கொண்டுதான் சமூக மாற்றத்தை  சாதிக்கப் போகிறார்களாம்?!

மனிதன் காட்டு மிராண்டி நிலையிலிருந்து நாகரீகமடைந்த காலத்திலிருந்து உருவாக்கிக் கொண்ட இனப்பெருக்கத்திற்கான உறவு முறைகள் தனது, வளர்ச்சி முன்னேற்றம் ஆகிய தேவையிலிருந்து உருவாக்கிக் கொண்டதே ஆகும்.

அதாவது இந்த இனப்பெருக்கத்திற்கான உறவு முறைகளை எந்த ஒரு தனிமனிதனின் கருத்துகளில் இருந்தும் அல்லாமல், அதற்கு முந்தைய சமூக நிகழ்வுகள், விளைவுகளில் இருந்து எழுந்த தேவையில் இருந்து உருவாக்கிக் கொண்டவைகள். இதை இன்னமும் பச்சையாக கூறுவதென்றால் உலகில் உள்ள உயிரினங்களில் மனிதனை தவிர்த்த ஏனையவற்றில் ஆண், பெண் சேர்க்கைக்கான காலம் குறிப்பிட்ட பருவகாலம் மட்டுமே ஆகும்.

ஆனால் மனிதனின் இனச்சேர்க்கைக்கான உந்துதல் மிருகங்களைப்போன்று வெறுமனே உடல் சார்ந்த தேவையாக மட்டுமல்லாது, அது மனம் சார்ந்த தேவையாகவும் இருப்பதால் இதற்கு பருவகாலம் ஏதுமில்லை. ஆண்டுமுழுக்க இதற்கான உந்துதல் மனிதர்களை ஆட்கொள்கிறது.

பருவமே ஆனாலும் இக்குறிப்பிட்ட காலத்தில் மிருகக் கூட்டத்தில் பெருத்த ஒற்றுமை இன்மையை ஏற்படுத்தி விடுகிறது. இப்பருவ காலம் முடிந்த பின்னர் அவைகள் இயல்பு நிலைக்கு திரும்புகினறன. இதற்கு நேர்மாறான விளைவுகளை மனிதர்களிடையே உருவாக்கும். நிரந்தர பகை, பழிவாங்குதல் ஆகியவைகள் ஒற்றுமை இன்மையையும், அழிவையும் நிரந்தரமாக்குவதில் இருந்து மனிதர்கள் காக்கும் தவிர்க்க வியலாத தேவைதான் உறவுமுறைகள்.

இந்த தவிர்க்க வியலாத தேவை, இன்றைய வரலாற்றுக் கட்டத்தில் மனித இனத்திற்கு இல்லாமல் போய்விட்டதா?

ஆண், பெண் இனச்சேர்க்கைக்கான உறவு முறைகளை மீறுபவர்களும், இதை ஆதரிப்பவர்களும், மேலே கண்ட நிலையிலிருந்துதான் இதை மீறுகிறார்களா, ஆதரிக்கிறார்களா?

நாகரீக மனித சமூகம் உருவாக்கியுள்ள பாலியல் உறவுகளுக்கான உறவு முறைகளை மீறுபவர்கள் மனித குலத்தின் முன்னேற்றம் நலன் ஆகியவற்றின் தேவையிலிருந்து இவற்றை மீறவில்லை. இவற்றை அழிவுகுள்ளாக்கும், மனிதனை மிருக நிலைக்கு தாழ்த்தும், ஏகாதிபத்திய சூறையாடும் பொருளாதார நலன்களிலிருந்து எழும் உந்துதல்களிலிருந்து இவற்றை மீறுகின்றனர்.

இந்திய சமூக அமைப்பை பற்றிய மிகையான தமது விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை அதன் மீது திணிக்க முயன்று தோற்றுப் போனவர்களும், திணிக்க முயல்பவர்களும் எந்த சமூக மாற்றத்திற்காக, முன்னேற்றத்திற்காக தாங்கள் பாடுபடுவதாக கூறிக் கொள்கிறார்களோ, இவர்கள் சமூக யதார்த்தத்திற்கு புறம்பான சமூக மதிப்பீடுகளால் வலது, இடது சந்தர்ப்பவாதிகளாக மக்களிடமிருந்து தனிமைப்பட்டு, எப்படியாவது தம்மை  நிலைநிறுத்திக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயங்குவதில்லை என்பதற்கான ஆதாரம் தான்.சகோதர முறை திருமண விவகாரங்களில் கையாளும் வழிமுறைகள் ஆகும்.

இவர்கள் எவருமே சமூக வாழ்வையும், தனது சொந்த வாழ்வையும் ஒன்றாக பார்ப்பவர்கள் இல்லை. இரண்டுக்கும் வெவ்வேறான வழிமுறைகளை கொண்டவர்கள்.
சகோதர முறை திருமணங்களை ஆதரிப்பவர் எவரும் தனது பிள்ளைகளுக்கும் அது பொருந்தும் என்பதை ஏற்பதில்லை!

சமூகத்தில் நடைபெறும் சகோதர முறை திருமணங்களில் தலையிடாமல் நைச்சியமாக நடந்து கொள்பவர்கள் தமது குடும்பத்திடம் அந்த முறையை கடைபிடிப்பதில்லை!

இவர்கள்தான் நம்முடைய அனைத்து உரிமைகளுக்காகவும் போராடும் தலைவர்கள், பிரதிநிதிகள்!
இப்படிப்பட்டவர்கள் இந்தியாவின் 120 கோடி மக்களுக்கும் தலைமை ஏற்க எப்படி முடிகிறது? நமது 

அறியாமையினாலா?
இல்லை! அவர்கள் ஜாடிக்கேற்ற மூடிகள்!

தொடர்புடைய கட்டுரைகள்:

 1.  காயடிக்கும் கட்சி 
                      


4.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2







Monday, 18 March 2013

மாணவர் போராட்டம் - அன்று அறுவடை செய்தது அண்ணா! இன்று?

இராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தண்டனையை நிறுத்தக்கோரி தமிழகம் எங்கும் எழுந்த உணர்வலைகளுக்கு பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி தமிழகம் எங்கும் மீண்டும் ஓர் உணர்வலை தற்போது எழுந்துள்ளது.அதிலும் கல்லூரி மாணவர்களிடையே உருவாகியுள்ள இந்த உணர்வலை, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எழுந்த எழுச்சிக்கு இணையானதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
தமிழகத்தை கடந்த இரண்டாண்டுகளாக இருளில் மூழ்கடிக்கும் மின்வெட்டுக்குக் எதிராகக் கூட எழாத இந்த உணர்வலை ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராக எழுந்துள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களை அதிலும் மாணவர்கள், இளைஞர்களை உணர்ச்சி கொள்ள ஒரே அம்சமாக இருந்து வருவது ஈழத்தமிழர் பிரச்சனை மட்டுமே என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இல்லை.
ஆனால் இந்த உணர்வலை ஒரே சீரானதாக, ஒருங்கிணைக்கப்பட்டதாக அல்லாமல் வெவ்வேறான அளவிலும், தன்மையிலும் குழுக்குழுவான நடவடிக்கையாக சிதறிய அளவில் மட்டுமே இருந்துள்ளது. இந்த ஒப்புமை இப்போது எழுந்துள்ள உணர்வலைக்கும் பொருந்துவதாகும்.தமிழக அரசியல் கட்சியினரிடையே எத்துனை பிளவுகள், குழுக்கள், கருத்துக்கள் உள்ளனவோ அத்துணையும் மாணவர்களின் போராட்டங்களின் ஊடாக வெளிப்பட்டு வருகிறது.
இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற வகையிலான குரல்கள்தான் பெரும்பான்மையாக வெளிபட்டு வருகிறது.அமெரிக்காவின் இந்தத்  தீர்மானம் உண்மையில் இலங்கையின் போர்க்குற்ற நடவடிக்கையை அம்பலப்படுத்தக் கூடிய உள்ளடக்கத்தை கொண்டதல்ல என்ற மிகச்சாதரண உண்மைக் கூட மாணவர்களிடையே  காணப்படவில்லை.
இந்த தீர்மானத்திற்கு இந்தியா முன்மொழிந்துள்ள திருத்தம் இதை முழுமுற்றாக சாகடித்துவிட்டது.அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை மட்டுமல்ல இறுதிகட்டப்போரில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களையும் அன்று கொலைசெய்ததும் இந்தியாதான்.இந்திய நேரடி ராணுவ பங்கேற்புடன் தான் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தனது சொந்தநாட்டு அரசின் இந்த அநீதிக்கு எதிராக போராட முடியாத, நாம் இலங்கை அரசுக்கு எதிராக குரல் கொடுக்கிறோம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போவானாம்!
நமது தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் நித்தம், நித்தம் சாகடிக்கப்படுகிறார்கள். இந்திய அரசின் ஆதரவோடுதான் நாங்கள் உங்களைத் தாக்குகிறோம் என்று இலங்கை கடற்படையினர் நமது மீனவர்களிடையே பகிரங்கமாக அறிவிக்கும் அளவுக்கு நமது பலவீனம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டப் பிறகும், அதற்கு எதிராக கிளர்தெழாமல் மீனவர்களை தன்னந்தனியாக தவிக்கவிட்டு வேடிக்கை பார்க்கும் நாம் ஈழத்தமிழர் உரிமைகளை  எப்படி பெற்றுத்தர முடியும்?
தனது அரசியல், பொருளாதார நலன்களுக்காக சொந்த நாட்டு மக்களின் உயிரைக் கூட காவு – காட்டி – கொடுக்கும் இந்திய அரசின்  கோரமுகத்தைக் கூட முற்றாக அடையாளம் காண முடியாமல், பாமர்களாக உள்ள நமக்கும், நமது போராட்டங்களுக்கும் இலங்கை அரசு எந்த அளவிற்கு மதிப்புக் கொடுக்கிறது என்பதற்கு ஆதாரம்தான் தமிழக மீனவர்கள் மீதான அதன் தாக்குதல்கள்.தமிழகத்தில் எந்த அளவிற்கு இலங்கை இனவெறிக்கு எதிரான உணர்வுகள் மேலோங்குகிறதோ, அந்த அளவிற்கு அது இலங்கை கடற்படையின் சிங்கள இனவெறியாய் தமிழக மீனவர்கள் மீது  பாய்கிறது.
தனது இரு கடற்படை வீர்ர்களுக்காக இத்தாலி அரசு இந்திய அரசுடனான தனது உறவையே முறித்துக் கொள்ள தயாராக இருக்கிறது.ஆனால் இந்திய அரசோ, தனது சொந்தநாட்டு மக்களின் ஆயிரக்கணக்கான உயிரையே இலங்கை அரசுக்கு காவு கொடுத்து அதனுடனான தனது உறவை பாதுகாத்துக்கொள்கிறது.
இத்தாலி அரசு தனது இரு கடற்படை வீரர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினால், அதனால் தனது சொந்த நாட்டு மக்களின்  எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்று அஞ்சுகிறது. இந்தியாவுடனான உறவை விட தனது நாட்டு மக்களின் உணர்வே மேலானது என்று தீர்மானிக்கிறது.ஆனால் இந்திய அரசோ இந்தியாவிலுள்ள எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளைப் பற்றி மயிரளவிற்கு கூட கவலைப்படவில்லை.
இப்படி இந்திய அரசு நமது உணர்வுகளை இந்த அளவிற்கு உதாசீனப்படுத்துகிறதே அது ஏன் என்பதைப்பற்றி என்றைக்காவது நாம் பரிசீலித்திருக்கிறோமா?இப்படி பரிசீலிப்பதற்கு அன்று நமது தந்தை பெரியார் இருந்தார். நமது  தந்தையின் கருத்துக்கள் நம்மை ஒருங்கிணைத்தது. இந்த ஒருங்கிணைப்புகள் இந்தி எதிர்ப்புப் போராட்டமாக, மாணவர்களிடையே வெடித்தது அன்று!இப்போது தமிழக மாணவர்களிடையே எழுந்துள்ள உணர்வலைகளை இந்தி எதிர்ப்பு  போராட்டத்தோடு ஒப்பிடுவதாலேயே இப்போராட்டம் அதனோடு இணைந்து விடாது.
இப்போராட்டம் ஒரு தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். சரியான இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.அன்று நமது தந்தையையே காட்டிக் கொடுக்க ஒரு அண்ணதுரை இருந்தார். இன்று ஆயிரம் அண்ணாதுரைகள் அணி, அணியாக  அணிவகுத்து நிற்கிறார்கள்!ஆயிரம் தடைகள் அணி வகுத்தாலும் அதையெல்லாம் தகர்க்கும் ஆற்றல் மாணவர்களுக்கு உண்டு. அதை அவர்கள் செய்து முடிக்க உறுதுணையாய், ஓரணியில் அணிதிரள்வோம், ஆதரவளிப்போம் !
தொடர்புடைய பதிவுகள்:

1.தீ:நமக்கல்ல இனி எதிரிக்கு வைப்போம்!