விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label இந்திய ஐரோப்பிய ஒப்பந்தம். Show all posts
Showing posts with label இந்திய ஐரோப்பிய ஒப்பந்தம். Show all posts

Sunday, 2 October 2011

சுத்தமா அவுத்து போட்டுட்டு, நில்லுங்கரான்!

”இந்தியாவுடனான தடையற்ற வாணிபம் கைவிடப்படும்”, என ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஒன்றியம் அறிவித்துள்ளது.இந்தியா 2012 பிப்ரவரிக்குள் இறுதி முடிவு எடுக்க வேண்டும் எனவும் கெடுவும் விதித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டால் இந்தியாவுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் முதலைக்கண்ணீர் வடித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம். உண்மையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் ஆதாயமடைய போவது இந்தியாவா,ஐரோப்பிய ஒன்றியமா என்பதை இனி பார்ப்போம்.
*ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உற்பத்தி பொருட்களுக்கு குறைவான வரியே விதிக்கப்படுகிறது.அப்பொருட்கள் இந்திய சந்தைகளில் நுழையும் போது இந்திய பொருட்களோடு ஒப்பிடும் போது மலிவான விலையில் விற்கும் இது இந்திய  உற்பத்தி பொருட்களுக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தும். இதனால் வேறுவழியின்றி இந்தியாவும் தனது பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்,அரசு வரியை குறைத்தால் அரசு வருவாயில் மிகப்பெரும் இழப்பு ஏற்படும்.அரசு வரியை குறைக்காவிட்டால் இப்பொருட்களை உற்பத்தி செய்யும் சிறுதொழில்கள் அனைத்தும் அழிந்து போகும்.

*வர்த்தகத்தின் துவக்க நிலையில் இந்தியாவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் 56.8 சதவீதம் உயரும்!
                           ஆனால்
ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் வர்த்தகமோ வெறுமனே 18.7 சதவீதமே உயரும்!

*ஐரோப்பிய சந்தைகளில் இந்தியாவின் ஜவுளி மற்றும் தோல் பொருட்களின் ஏற்றுமதி குறிப்பிட்ட அளவுக்குதான் உயரும். ஆனால் இந்திய சந்தையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆட்டோ மொபைல் வாகனங்களும்,அதன் உதிரி பாகங்களும் 700 சதவீதம் வளர்ச்சியடையும்

*இப்படி இந்திய சந்தைக்குள் ஐரோப்பிய ஒன்றிய பொருடகள் குவிந்தால் இந்தியாவுக்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படும் என மத்திய வர்த்தகம் மற்றும்  தொழில் துறை அமைச்சகமே ஒப்புக்கொண்டு வெளிப்படையாக அறிக்கையே விட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்த அளவுக்கு, இந்தியாவுக்கு இழப்பு ஏற்படும் போது,ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா இன்றுவரை எதற்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்? இந்திய ஆட்சியாளர்கள் எதற்காக பேச்சுவார்த்தையில் வாலாட்டுகின்றனர் என்றால் இழப்பை சிறிதுகுறைப்பதற்குதானாம்!

ஏற்கனவே உலகமயமாக்கலால் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கும்,நிறுவனங்களுக்கும் இந்தியா அளித்துவரும் வரிச்சலுகைகளால் நாட்டிற்கு பல லட்சம்  கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது,இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்திய சந்தையில் வெள்ளமென பெருக்கெடுக்கும் ஐரோப்பிய ஒன்றிய பொருட்களுடன் போட்டியிட முடியாமல் இந்தியாவின் சிறு தொழில்கள் அனைத்தும் அழிந்து போகும்.இங்கு வேலை செய்யும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.

அன்று ராணுவத்தை வைத்துக்கொண்டு 200 ஆண்டுகள் இந்தியாவை சுரண்டியது பிரிட்டன்,இன்று ஒரு ஒப்பந்தத்தின் மூலம் அதை சாதித்துவிட துடிக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொழிற்துறைக்கு மட்டுமேயல்ல, சேவைத்துறைகளுக்கும் சேர்த்துத்தான்.

கல்வி,விமானம்,ரயில்,தரைவழி போக்குவரத்து,தண்ணீர்,சுகாதாரம்,சுற்றுலா,வங்கி,சில்லரை வணிகம்,செய்தித் துறை,பொழுதுபோக்கு,விளையாட்டுத்துறை,நூலகம்,சட்டம்,கணிப்பொறி ஆராய்ச்சி,ரியல் எஸ்டேட்,தொலை தொடர்பு துறை,தபால்துறை உட்பட அனைத்து சேவைத்துறைகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்ளைக்கு திறந்துவிடப்படவேண்டும்.

தமது ஐரோப்பிய பண்பாட்டின் படி நம்மையும்  உடலில் ஒரு ஒட்டு துணிக்கூட இல்லாமல் நிற்குமாறு நிர்பந்தம் தருகிறது ஐரோப்பிய ஒன்றியம்.

சேவைத்துறைகளிலேயே சில்லரை வணிகமும்,வங்கித்துறையும்தான் இவர்களின் பிரதான இலக்கு.சில்லரை வணிகத்துறையில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டால், அதை நம்பி வாழும் பல கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வை இழப்பார்கள்.இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விநியோகமும்,வணிகமும் 97 விழுக்காடு அமைப்புசாரத்துறையில்தான் நடைபெற்று வருகிறது.அதிலும் பெண்கள்தான் இத்துறையில் பெருமளவு ஈடுபட்டுவருகின்றனர்.சில்லரை வணிகத்துறையில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டால் அதில் ஈடுபட்டுள்ளோர் தமது வாழ்வை இழந்து தற்கொலைக்கு தள்ளப்படுவார்கள்.

மருந்து உற்பத்தி துறையில் இந்த ஒப்பந்தம் நடமுறைக்கு வந்தால்,தற்போது ஒரு மருந்தின் உற்பத்தி முறைக்கு தரப்படும் காப்புரிமைக்கு பதிலாக, அந்த மருந்துக்கே காப்புரிமை தரவேண்டும்.இதன் மூலம் ஒரு மருந்தை ஒரு நிறுவனம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.இதனால் ஒவ்வொரு மருந்தின் விலையும் 200 சதவீதம் முதல் 700 சதவீதம் வரை விலைஉயரும்.அதாவது தலைவலிக்கு சாப்பிடும் ஒரு பாராசிட்டமல் மாத்திரை ரூபாய் 500 வரை விற்கும்.இதை எல்லாம் சமாளிக்கும் பொருளாதார ஆற்றல் இந்திய மக்களுக்கு உள்ளதா?

ஒரே ஒரு ஊழலில் மட்டும் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி சுருட்டிய மன்மோகன் அமைச்சரவை சகாக்களுக்கும்,இவர்களின் எஜமானர்களான டாடா,பிர்லா,அம்பானிக்களும்தான் இவற்றை சமாளிக்க முடியும்.
குதிரைக்கு கொம்பு முளைத்தால் செத்தவர்கள் எல்லாம் எழுந்துவந்துவிடுவார்கள் என்பதை போன்று,நாம் கடினமாக உழைத்தால் 2020-ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று பிதற்றி திரியும்,சென்னை வரும் போதெல்லாம் அன்ன லெட்சுமியில் ரூபாய் 750-க்கு மதிய சோறு தின்னும் அரை லூசு அப்துல் கலாம் வேண்டுமானால் இதையெல்லாம் சமாளித்து கொள்ளலாம்.ஆனால் இந்திய மக்களில் ஆகபெருன்பான்மையோர் ஒரு நாள் வருவாயாக ரூபாய் 20 மட்டுமே பெற்று, அதிலேயே காலமும் தள்ளுகின்றனர்.அப்படிப் பட்டவர்களால் இந்த ஒப்பந்தத்தினால் விளையும் விளைவுகளை எதிர்கொள்ள முடியுமா?

*உலக பட்டினி பட்டியலில் உள்ள 88 நாடுகளில் 66-ம் இடத்தில் உள்ளது இந்தியா

*யுனிசெப் நிறுவனத்தின் தகவல்படி, இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சரிபாதி பேர் ஊட்டச்சத்து இன்மையால் அவதிப்படுகின்றனர்.

*மனிதவளர்ச்சியில் 170-நாடுகளில் இந்தியா 128-வது இடத்தில் உள்ளது.
இப்படி இந்தியா வல்லாரசு ஆகப்போவதை பற்றி இன்னும் ஏராளமான செய்திகளையும்,தகவல்களையும் அடுக்கிக்கொண்டே போகலாம்!
ஆனால் நமக்கு ஒரு சந்தேகம்.நாட்டில் மேற்கண்ட நிலைமைகளெல்லாம் இருந்தால், நமது ஆட்சியாளர்களுக்கு என்ன வந்ததாம்? ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தையை, ஒரு முடிவுக்கு கொண்டு வரமாட்டேன் என்கிறார்களே?!

ஒருவேளை அவர்களுக்கும் எங்காவது ஒரு மூலையில் தேசபக்தி ஒட்டிக்கொண்டிருக்குமோ?

ச்சீ,ச்சீ இப்படியெல்லாம், நமது ஆட்சியாளர்களை நாமே கேவலப்படுத்தக்கூடாது! இப்படிப்பட்ட ஒப்பந்தங்களை போட்டு பழங்குடி மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தப்போய்,அந்த எமகாத பயல்கள் இதுதான் சமயம் என்று தமது பாரம்பரிய வில்,அம்போடு கையில் துப்பாக்கியும் தூக்கிக்கொண்டு நக்சலைட்டுகளாக மாறிப்போனார்கள்!

அதைப்போன்று இந்த ஒப்பந்தத்தால் வாழ்விழப்போர் நக்சலைட்டுகளாக மாறிவிட்டால்……இதுதான் நமது ஆட்சியாளர்களின் வயிற்றை கலக்குகிறது.எத்தனை அன்னாஹசாரேக்களை உருவாக்கினாலும் வாழ்விழப்போர் தமது கைகளில் ஆயுதம் தூக்குவதை தடுக்க முடியாதே!
அதனால்தான்,ஐரோப்பிய ஒன்றியம் சுத்தமாக அவிழ்த்து போட்டுவிடு என்று போடும் உத்தரவை நடைமுறைடுத்த முடியாமல்,ஒரு கோவணமாவது கட்டி கொள்கிறேன் என்கிறார்கள் நமது ஆட்சியாளர்கள்.இப்படி கேட்பதற்கு பெயர்தான் பேச்சுவார்த்தை!