விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label சூறாவளி இணையம். Show all posts
Showing posts with label சூறாவளி இணையம். Show all posts

Wednesday, 7 September 2011

நாங்கள்.........

            இந்திய மக்களில் பெரும்பாலானோருக்கு அன்றும்,இன்றும் வாழ்வு தந்தது,தருவதுவிவசாயம்.அந்த விவசாயம் இன்று அன்னியர்களுக்காக ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு வருகிறது.விவசாயிகள் விவசாயத்திலிருந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.அப்படிஓடுபவர்கள் மற்றொரு பொருளுற்பத்தி துறைக்கு செல்லவில்லை.மாறாக நாட்டில் வாங்கும் திறன் உள்ளவர்களுக்கு சேவை செய்யும் வேலைகளில், ஏற்கனவே உள்ளவர்களின் வாய்ப்புகளை பங்கிட்டுக்  கொள்கிறார்கள்.






ஆகவிவசாயத்தின் அழிவு  மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்.இதை பல்வேறு வழிகளில் ஆட்சியாளர்கள் மூடி,மறைக்க முயன்று வருகிறார்கள். இவைகளை அம்பலப்படுத்தி,இதற்கு எதிராக விவசாயிகளை மட்டுமல்ல சமூக பொருப்புள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கிலே தான்.இந்த இணையதளத்தை நாங்கள் துவக்குகிறோம்.எமது இந்த முயற்சிக்கு ஆதரவும்,ஒத்துழைப்பும் நல்குமாறு அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம்.

Saturday, 6 August 2011

சமச்சீர்கல்வி முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -3(1)


சமச்சீர்கல்வி முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -3



மக இக மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் அரசியல்,சித்தாந்தத்தை சூறாவளி இணையதளத்தை துவங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றுக்கொண்டவர்கள் நாங்கள்.தோழர் மூடக்கிழவனிடம் அரசியல்,சித்தாந்தம் கற்றுக்கொண்டு இந்த அமைப்புகளின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டோம்.ஆனால் எமது சொந்த அலுவல்கள் காரணமாக அமைப்பில் இணைந்து எம்மால் செயல்படமுடியவில்லை.ஆனால் அமைப்பிற்கு எம்மால் முடிந்தவரை ஆதரவையும்,உதவிகளையும் செய்ய தீர்மானித்தோம்.
\     மேற்கண்ட புரட்சிகர அமைப்புகளில்  மிக பிரதான வர்க்க அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணிக்கு தனியாக இணையதளம் இல்லை என்பதை அறிந்து, அதை அமைத்துத்தர தோழர் மூடக்கிழவனிடம் பேசினோம்.அவரும் அதை ஒப்புக்கொண்டார்.நாங்கள் அனைவரும் விவசாயக்குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும்,விவசாயத்தை எமது தொழிலாக தெரிவு செய்யாதவர்கள்.இப்படி விவசாயத்தை எமது தொழிலாக தேர்ந்தெடுக்காதது என்பது எமது முடிவோ,விருப்பமோ அல்ல.அது எமது பெற்றோர்களின் மூலம் ஆளும்வர்க்கங்கள் திணித்த  விருப்பமும்,முடிவும் ஆகும்.தம்மை போல தமது பிள்ளைகளும் விவசாயம்  செய்து சிரமப்படக்கூடாது. இதற்காக தமது அன்றாட உணவுத் தேவைகளை கூட குறைத்துக்கொண்டு எம்மை உயர்கல்வி கற்கவைத்தனர்.இப்போது நாங்கள் உள்நாட்டிலும்,வெளிநாடுகளிலும் வேலை செய்தும், படித்தும் வருகிறோம்.இப்படி நாங்கள் பிரிந்து போனாலும் எம்மை  சித்தாந்தரீதியாக ஒருங்கிணைக்கிற,அரசியல்படுத்துகிற ஊடகமாக இணையத்தை பயன்படுத்த தீர்மானித்தோம்.அதிலும் இவ்வமைப்புகளின் ஏனைய ஊடகங்கள் போலல்லாது.நாங்கள் தொடங்கும் ஊடகத்தில் விவசாயம் சார்ந்த விடயங்களில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த தோழர்களின் அறிவை இவ்வுலகிற்கும்,எமக்கும்  எழுத வேண்டும் என்ற எமது விருப்பத்தை தோழர்களிடம் தெரிவித்தோம்.அவர்களும் எமது விருப்பத்திற்கு ஒப்புக்கொண்டதால்.இணையம் துவங்க தேவையான நிதியை நாங்கள் தந்தோம்.ஆசிரியர் குழு,தொழில்நுட்பக்குழு அமைப்பது,கட்டுரைகளையும்,அதன் உள்ளடக்கத்தையும் தீர்மானிப்பது,எழுதுவது,வெளியிடுவது,நிர்வகிப்பது ஆகிய அனைத்துப்பணிகளையும் ஆசிரியர் குழுவே ஏற்றுக்கொள்ளவது என தீர்மானிக்கப்பட்டது.இணையத்தின் பெயரும்,இலக்கும்,நோக்கமும் வரையறுக்கப்பட்டன.இணையத்தில் நாங்கள் முக்கியமாக எதிர்பார்த்தது விவசாயம் சார்ந்த கட்டுரைகளைத்தான். ஏனைய அரசியல்,சித்தாந்தம்,கலை,இலக்கியம்,பண்பாடு ஆகிய துறைகளிலான கட்டுரைகளை புதிய ஜனநாயகம்,புதிய கலாச்சாரம்,வினவு,தமிழரங்கம்,கலையகம் ஆகிய ஊடகங்கள் வழியே நாங்கள் பெற்றுக்கொண்டதால்,இப்படிப்பட்ட கட்டுரைகளை நாங்கள் சூறாவளியில் எதிர்பார்க்கவில்லை.ஆனால் சூறாவளியில் விவசாயமல்லாத,ஏனைய துறைகளிலான கட்டுரைகளும் மக்கள் மொழியில் ஆழ்ந்த செரிவுடன் வெளிவந்தன.
     உழுதவன் கணக்குப்பார்த்தால், உழக்கும் மீறாது என்ற சூறாவளியின் கட்டுரை சங்ககாலத்திலிருந்து தொடங்கி களப்பிரர்காலம் வரை மூன்று தொடர்கள் வெளிவந்தன.இதில் தமிழகத்தில் யாருமே இதுவரை நினைத்தும் பார்க்காத பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்,மிக நுட்பமான விவசாயத்துறை சார்ந்த கட்டுரைகள் வெளிவந்தன.இக்கட்டுரைகளில் களப்பிரர்காலம் பற்றிய வரலாற்றுச்செய்திகள் இதுவரை வெளிவந்துள்ளவை மிக குறைவே ஆகும்.ஆனாலும் அக்கட்டுரையில் சூறாவளி ஆசிரியர் குழுவின் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின் அடிப்படையிலான ஆய்வுமுடிவுகள்,தமிழக வரலாற்றில் உலகத்தரம் உடையவைகள் ஆகும். சூறாவளியின் இந்த கட்டுரைக்கு தமிழ்மணம் நடத்திய போட்டியில் பரிசும் கிடைத்தது.இவைகள் மூலம் எமது அறிவை மா-லெ-மா கண்ணோட்டத்தில் வளர்த்துக்கொள்வதற்கு எமக்கு பெரிதும் உதவின.
     சூறாவளி ஆசிரியர் குழுவிடம் இருந்த பல்துறை அறிவும்,வரலாற்றுத்துறையில் அவர்களுக்கு இருந்த முரணற்ற பொருள்முதல்வாத கண்ணோட்டமும் தமிழக வரலாற்றை பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் எழுதி சூறாவளியில் வெளியிட வேண்டும் என்ற எமது விருப்பத்தை ஆசிரியர் குழுவிடம் வெளியிட்டோம்.
     இப்படி ஒரு திட்டம் எமது அமைப்பில் உள்ளதாகவும்,ஆனால் இடைவிடாத பல்வேறு அமைப்பு வேலைகளில் தோழர்களால் இன்றுவரை அதை செய்ய இயலவில்லை என்றும் எமக்கு பதில் அளித்தது ஆசிரியர் குழு.ஆனால் தமிழக வரலாற்றையே பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் எழுதுவது என்பது மிகப்பெரிய சவாலான பணியாகும்.அதை எம்மால் செய்ய முடியமா என்பதை பற்றி தற்போதைக்கு எமக்கு தெரியவில்லை.இதை செய்வதற்கு தேவையான தரவுகளை இதுவரை தமிழகத்தில் வெளிவந்துள்ள வரலாற்று நூல்களையும் பள்ளி,கல்லூரி,பல்கலைகழகங்களில் பாடங்களாக வைக்கப்பட்டுள்ள நூலகள்,ஆய்வுக்கட்டுரைகள் இவைகளை தமிழகத்தில் மட்டுமல்ல,உலகெங்கும் உள்ள தமிழர்கள் இப்படிபட்ட தரவுகள் அடங்கிய நூல்களை,வெளியிட்டிருந்தால் அவைகள்,அனைத்தையும் சேகரிக்க வேண்டும்.அதிலும் குறிப்பாக ஈழத்தமிழர்கள் வெளியிட்ட நூல்களை சேகரிக்க வேண்டும்.இவற்றை தலைப்புவாரியாக தொகுத்து ஆய்வுசெய்ய வேண்டும்.இவை அனைத்து பணிகளையும்,செய்வதற்கே பல ஆண்டுகள் ஆகும்.இதனிடையே சூறாவளியின் வழமையான பணிகளையும் செய்ய வேண்டும்.சூறாவளி ஆசிரியர்குழு தோழர்கள் தமது சொந்த குடும்ப பராமரிப்பு பணியிலும் ஈடுபட வேண்டும்.இவை எல்லாவற்றையும் விட அமைப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை ஆசிரியர் குழு எமக்கு விவரித்தபோது நாங்கள் ஆதிர்ந்து போனோம்.ஆனாலும் நாங்களும் ஆசிரியர் குழுவுடன் இணைந்து அதற்கு தேவையான ஒத்துழைப்பு தருவது என்றும்,பணியாற்றுவது என்றும் தீர்மானித்தோம்.இப்பணியை செய்வதற்கு ஆசிரியர் குழு பட்டியலிட்ட நூல்களில் ஆக பெரும்பான்மையை சேகரித்தோம்.எஞ்சிய நூல்களை பெறுவதற்கு அனைத்து முயற்சிகளிலும் இறங்கினோம்.இப்படிப்பட்ட சூழலில் தான் சூறாவளி நடத்துவதற்கு ஆசிரியர்குழுவிற்கு அமைப்பு தடை விதித்துவிட்டதாகவும்,ஆனாலும் அமைப்பில் பல தோழர்கள் இணையம் நடத்துவதை சுட்டிக்காட்டி தமக்கும் அனுமதியளிக்க வேண்டும் என்று தாங்கள் கோரியிருப்பதாகவும் கூறி எமது தலையில் கல்லை தூக்கிப்போட்டது ஆசிரியர்குழு. அமைப்பில் பலரும் இணையம் நடத்தும்போது உங்களை மட்டும் நடத்தக்கூடாது என்று தடை விதித்தது ஏன்? என்ற எமது கேள்விக்கு தமது அமைப்பு முறையை காரணம் காட்டி ஆசிரியர் குழு எமக்கு உருப்படியான பதிலேதும் தரவில்லை.இதனால் சூறாவளி ஏறத்தாழ 6 மாதகாலம் முடங்கிப்போனது.இதனால் மீண்டும் ஆசிரியர் குழு தமது பொருப்பை ஏற்கும் என்ற எமது நம்பிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்தது.
     மேற்கண்ட நிகழ்வு சூறாவளி ஆசிரியர் குழு அங்கம் வகித்த புரட்சிகர அமைப்புகள் மீது, அதன் ஆதரவாளர்களாகிய எமது பார்வையை கூர்மையாக்க கோரியது.இவ்வமைப்புகளில் உட்கட்சி ஜனநாயகம் இருப்பதற்கான சுவடுகள் மிகபலவீனமாகவே இருப்பதாக எமக்கு தோன்றியது.இதன் பின்பே சூறாவளி நிர்வாகக்குழுவே இணையத்தை நடத்துவது என்று தீர்மானித்தோம்.இதன் முதற்படியாக புரட்சிகர ஜனநாயக அமைப்புகளின் போராட்ட செய்திகள் மற்றும் அவர்களிடம் இருந்து பெறப்படும் தகுதியான கட்டுரைகளை சூறாவளியில் வெளியிடுவது எனவும் தீர்மானித்தோம்.இதை அறிவிப்பாகவும் இணையத்தில் வெளியிட்டோம்.இதன் போக்கிலேயே தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டண நிர்ணயம் மற்றும் சமச்சீர் கல்வி விவகாரங்களில், இவ்வமைப்புகள் சென்றாண்டு எடுத்திருந்த நிலைப்பாட்டிற்கும்,இந்த ஆண்டு எடுத்துள்ள நிலைபாட்டிற்கும் இடையே அடிப்படையிலேயே வேறுபாடு இருப்பதையும்,முரண்படுவதையும் அவதானித்தோம்.எனவே மேற்கண்ட விடயத்தில் இவ்வமைப்புகளின் நிலைபாடுகளை எமக்குள்ள மா-லெ-மா அறிவைக்கொண்டு ஆழமான பரிசிலனைக்கு உட்படுத்தினோம்.நீண்ட விவாதங்கள்,பரிசீலனைக்கு பின்னர் தான் இவ்வமைப்புகள் சமச்சீர்கல்வி மற்றும் தனியார் கல்வி கட்டண நிர்ணயம் ஆகிய விடயங்களில் ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவாக தம்மையே மாற்றிக்கொண்டு செயல்பட்டுவருவதை எம்மால் உறுதியாக அவதானிக்க முடிந்தது.எமது இந்த நிலைப்பாட்டை அந்த அமைப்புகளுக்குள் ஏதாவது ஒரு வழியில் கொண்டு செல்ல முயற்சிக்கலாம் என்றாலும்,இவ்வமைப்புகள் இதில் ஏற்கனவே வெகுதூரம் பயணப்பட்டுவிட்டதையும் உணர்ந்தோம்.இந்த அமைப்புகளின் ஊடகங்கள்,ஆளும்வர்க்க ஊடகங்கள்,நீதிமன்ற நடவடிக்கைகள் இவற்றின் மூலம் கோடிக்கணக்கான மக்களிடம்,தமது நிலைப்பாட்டை கொண்டு சென்றுவிட்டனர்.இதன் காரணமாக இவ்வமைப்புகள் மக்களிடையே வேறெப்போதும் இல்லாத அளவிற்கு கிடைத்த அறிமுகம் பிரபல்யம்.இதை போன்ற பல காரணங்களால் இவர்கள் சீர்திருத்தவாத புதைகுழியில் மூழ்கி மேலும்,மேலும் அதில் அமிழ்ந்து போவதை அவர்களின் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளும் எமக்கு உணர்த்தின.இவ்வமைப்புகள் தமது அமைப்பின் ஆயிரக்கணக்கான தோழர்களின் தியாகங்கள்,உழைப்பை மட்டுமல்ல கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் உரிமைகளையும் ஆளும்வர்க்கங்களுக்கு அடகுவைத்துவிட்டதை உணர்ந்த பிறகுதான் நாம் இனி இவர்களோடு பேசுவதிலோ,விவாதிப்பதிலோ பயனில்லை.மக்களிடையே இவர்களை அம்பலப்படுத்தி விமர்சிப்பதன் மூலம் தான்,இவ்வமைப்புகளில் இன்னமும் ஆயிரக்கணக்கில் நிறைந்துள்ள உண்மையான தோழர்களை உணர்வு பெறச்செய்து அவர்கள் மூலம் மீண்டும் இவர்களை புரட்சிகர பாதைக்கு கொண்டுவர இயலும்.இதுதான் எமது இப்போதைய இலக்கும்,பணியும் ஆகும்.இதையே இப்போது நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
     இந்த அமைப்புகளின் மூன்று ஊடகங்களும் சமச்சீர் கல்வி விவகாரத்தில் அதை தாம் ஆதரிப்பதற்கான மூன்று வெவ்வேறு விதமான காரணங்களை முதன்மையானதாக முன்னிறுத்துகின்றன.இதன் மூலம் இவ்வமைப்புகள் தமக்குள்ளேயே முரண்பட்டு நிற்பதுடன்,மக்களை நிலவுகிற சமூக அமைப்பிலேயே, தமது அனைத்து பிரச்சனையையும் தீர்த்துக்கொள்ள முடியும்.அதற்கு தம்மை போன்று விடா முயற்சியும்,ஆற்றலுமே வேண்டும் என்ற ஆளும்வர்க்கத்துக்கு ஆதரவான கருத்தை மக்களிடையே ஆழமாக ஊன்றுகின்றன.இக்கருத்தை இவ்வமைப்பின் மூன்று ஊடகங்களும் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவு மக்களிடமும் கொண்டு சென்றுள்ளனர்.இதன் மூலம் இவர்கள் பார்ப்பன ஜெயாவுக்கு எதிரான மக்களின் கோபத்தை கருணாநிதி தலைமையிலான ஆளும்வர்க்க கும்பல் எதிர்வரும் தேர்தல்களில் ஓட்டுக்களாக மாற்றிக்கொள்ளும் வகையில்தான் இவர்களின் பணிகள் அமைந்துள்ளதை எமது முதலாவது கட்டுரையிலேயே நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.இதை நாங்கள் மீண்டும் சுட்டிக்காட்டுவதன் நோக்கம், வினவு மற்றும் அதன் தோழமை அமைப்பினர் அதன் ஆதரவாளர்கள் எமது கட்டுரைகளின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ளாததை போன்று பாவனை செய்வதாலும்,அவ்வமைப்புகளில் உள்ள பெரும்பான்மையான தோழர்கள் இடையே தமது அமைப்புகளின் சென்றாண்டு,இந்தாண்டு நிலைப்பாடுகளையும் அது பற்றிய எமது அம்பலப்படுத்துதல்கள், இவ்விடயங்களில் எமது நிலைப்பாடுகள் ஆகியவற்றை ஒப்பிட்டு புரிந்துகொள்வதில் பெரும் ஏற்றயிறக்கம் காணப்படுவதை மாநிலமெங்கும் உள்ள அதன் உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் மத்தியிலே கண்டுவருகிறோம்.இதனாலேயே எமது கருத்தை வெவ்வேறு முறைகளில் நாங்கள் வலியுறுத்தி எழுத வேண்டியுள்ளது.
                                               
     அடுத்து வரும் தொடரில் புதிய ஜனநாயகத்தின் முரண்பாடுகளை பற்றி பார்ப்போம்………
                                                             தொடரும்….
                           தோழமையுடன்
                     சூறாவளி நிர்வாகக்குழு.  

தொடப்புடைய கட்டுரை: 



        






        

Tuesday, 21 June 2011

மீண்டும் சூறாவளி இணையம் (சில மாத இடைவெளிக்கு பின்)

       
        அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.சூறாவளி இணையம் கடந்த சில மாதங்களாக தவிர்க்க இயலாத காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.ஆசிரியர் குழு பொருப்பேற்றிருந்த இரு தோழர்கள் தமது பொருப்பில் இருந்து தற்காலிகமாக விலகியதால் தொடர்ந்து எம்மால் சூறாவளி இணையத்தை நடத்த இயலாமல் இருந்தோம்.தற்போதும் அதே நிலை நீடிக்கிறது.ஆகவே ஆசிரியர் குழு மூலம் கட்டுரைகள் வெளியிடுவது தொடர்ந்தும் இயலாத ஒன்றாகவே உள்ளது.ஆகையால் ஆசிரியர் குழு மறுபுணரமைக்கும் வரை வெளியில் இருந்து பெறப்படும் ஆக்கப்பூர்வமான சமூக கண்ணோட்டம் உள்ள,மக்கள் போராட்டச் செய்திக் கட்டுரைகளை பெற்று வெளியிடுவது என முடிவு செய்திருக்கிறோம்,ஆகவே வாசகர்கள் எமது முடிவிற்கு ஆதரவு தரும்படியும்,தாங்களும் கட்டுரைகள், செய்திகளை அனுப்புமாறும், தொடர்ந்து சூறாவளி இணையத்திற்கு ஆதரவு தருமாறும் சூறாவளி நிர்வாகக் குழு சார்பில் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
                           
                                   -இப்படிக்கு சூறாவளி நிர்வாகக்குழு

தொடர்புடைய பதிவிகள்
                                                          1.நன்றி. 
                          2.சூறாவளி இணையம் அறிமுகம்