விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்

Pages

Showing posts with label அன்னாஹாசரே. Show all posts
Showing posts with label அன்னாஹாசரே. Show all posts

Wednesday, 28 December 2011

லோக்பால்,அன்னா அசாரே:நாய் வாலை நிமித்த முடியுமா?

தமிழகத்தின் தற்போதைய பரபரப்பான,உணர்ச்சி பூர்வ நிகழ்வு என்றால் அது முல்லை பெரியாறு! இந்திய அளவில் பரபரப்பான செய்தியாக ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் செய்தி லோக்பால் மசோதா! அன்னா ஹசாரே என்ற கிழடை வைத்து பார்ப்பன கும்பல் நடத்தும் மாயாஜால வித்தைதான் லோக்பால் விவகாரம்.நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாகவும் ,சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கும் களங்கத்தையும் ஏற்படுத்தும் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் அதற்கு லோக்பால் மசோதாவே ஒரே வழியென்று பார்ப்பன ஊடகங்கள் ஒருமித்தக்குரலில் எழுதுகின்றன.

சமூக ஆர்வலர் என்று அன்னாவுக்கு பட்டமும் அளித்து கவுரவிக்கின்றனர்.இந்த கிழட்டு நரிக்கு இப்போது வயது என்பது.இத்துணை ஆண்டு காலம் வராத ஞானோதயம் இப்போதுதான் வந்துள்ளது.

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து 1990- களிலிருந்து நடந்துவரும் போராட்டத்தை மறைத்துவிட்டு,இத்தனை ஆண்டுகளாக போராடமால்,இப்போது அணு உலையை எதிர்த்து போராடும் போராட்டக்குழுவின் நோக்கம் என்ன? என்று கேட்கும் பார்ப்பன கும்பல்,இதே கேள்வியை அன்ன ஹசாரேவை கேட்காமல் அவருக்கு மலர் மகுடம் சூட்டுகிறார்கள்.

இந்தியாவில் ஊழல் வரலாறு நேருகாலத்திலிருந்து துவங்கிவிட்டது.மூக்கிருக்கும் வரை சளியிருக்கும் என்பதைப்போன்று அன்று தொடங்கிய ஊழல் இன்று 2G,3G என ஆலமரமாய் வளர்ந்து சமூகமெங்கும் வேர் பரப்பிவிட்டது.அது இல்லாத இடம் என்று எங்குமில்லை.ஊழல் இன்று ஒவ்வொரு இந்தியன் வாழ்விலும் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது.லஞ்சமும்,ஊழலும்!

கிராமத்தில் உள்ளூராட்சி அமைப்பிலிருந்து,டெல்லி செங்கோட்டை வரை அது இல்லாத இடமேயில்லை.அரசுத்துறையானாலும்,தனியார் துறையானாலும் அவற்றில் எது இருக்கிறதோ,இல்லையோ நிச்சயம் அது இருக்கிறது!

லோக்பால் மசோதா பற்றியும், அதை நிறைவேற்றுவதைப்பற்றியும் இந்த மசோதாவின் வரம்புக்குள் பிரதமர்,சிபிஐ,டி பிரிவு ஊழியர்கள் வரை சேர்க்கவேண்டும் என்று காரசாரமாக விவாதம் நடைபெறுகிறது.

ஆனால்,நாட்டின் எந்த ஒரு இடத்திலும் லஞ்சம்,ஊழலில் ஈடுபடுவர்களிடம் அதன் சுவடுகூட தென்படவில்லை.வழக்கம் போல அவர்களின் பணியை செவ்வனே செய்துவருகின்றார்கள்.
தமிழகத்தில் TNPSC முன்னால்,இன்னால் அதிகாரிகளின் வீடுகளில், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலிசார் தீவிர சோதனை நடத்துகிறார்கள் என்ற செய்தி நாளேடுகளிலும்,தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக பேசப்பட்டது.அதே நேரத்தில் சத்துணவு,அங்கன்வாடி பணியாளர்கள் 28 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒரு பணியிடத்திற்கு ஒன்றைரை லட்ச ரூபாய் விலை போகிறது.ஒரு ஆசிரியர் பணியிடம் 5 லட்சம் வரை …..இங்கு எங்கேயும் லோக்பாலின் எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இதோடு மட்டுமா, தமிழக அரசின் இலவசத்திட்டங்கள் கூட இதில் இருந்து தப்பிக்கவில்லை.

1.இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் பயன் பெற ரூபாய் 2 ஆயிரம்.

2.பசுமை குடில் பெறுவதற்கு ரூபாய் 25 ஆயிரம்.

3.சாதி மாற்றி சான்றிதழ் வாங்க வேண்டும் என்றாலும் அதன் விலை ரூபாய் ஐந்து ஆயிரம்.                   

4.குடும்ப அட்டை ரூபாய் 5 ஆயிரம்,அட்டை வீடு தேடி வரும்.

5.அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் சீட்டுவாங்க ஐந்து ரூபாய்.சீட்டே இல்லாமல்  பத்து ரூபாய் கொடுத்தால் இரண்டு ஊசி.

இவை எல்லாமே அன்றாடம் மிக இயல்பாக நடக்கிறது.இப்படி செய்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள்,நான் லஞ்சம் கொடுத்துதான் வேலைக்கு வந்தேன்.எவனாவது எனக்கு இலவசமாகவா வேலை கொடுத்தான்!

எந்த வேலையும் இலவசமாக கிடைப்பதுமில்லை!,லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருவோர்.அதை திருப்பி செய்வதற்கு கூச்சப்படுவதுமில்லை!.நூறு சதவீத வேலைகளும் லஞ்சம் பெற்றுதான் தரப்படுகிறது.எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் யாராவது ஒருவர் நேர்மையாக நடந்துகொண்டால், அவர் தனது வேலையை விரைவிலேயே இழந்துவிடுவார்.
ஊழலை தடுப்பதற்கு என்று எத்தனையோ துறைகளும், நூற்றுக்கணக்கான சட்டங்களும் உள்ளன.ஆனால் இந்த சட்டங்கள் அனைத்தும் லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருகின்றவர்கள் மூலம்தான்  நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

லோக்பால் சட்டம் வந்தாலும்,அந்த சட்டமும் மனிதர்களால்தான் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.எப்படிப்பட்ட சிறந்த சட்டமாக இருந்தாலும் அதை மனிதர்கள் தான் செயல்படுத்த வேண்டியுள்ளதால் தான் அதன் நோக்கம் நிறைவேறுவதில்லை.அதனால் மனிதர்களுக்குப் பதில் ரோபோக்களை பணி அமர்த்தலாம் என்றாலும், அந்த ரோபோக்களுக்கும் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பவர்களும் மனிதர்கள்தான்.சரி மிருகங்களை அமர்த்தலாம் என்றால் அவைகளை பழக்குபவர்களும் மனிதர்கள்தான்.

எனவே சட்டங்கள் ஆயிரங்கள் இருந்தாலும்.அவற்றை நடைமுறைப்படுத்துவது இந்த சமூக அமைப்பில் சாத்தியமில்லை.

இந்த எளிய உண்மை ஹசாரேவுக்கும்,பார்ப்பன ஊடகங்களுக்கும் தெரியாதா என்ன? தெரியும்!பிறகு எதற்காக உயிரற்ற சட்டத்திற்காக இவ்வளவு வரிந்துக்கட்டி கொண்டு நிற்கிறார்கள்?

இதற்கான பதிலும் மிகவும் எளிமையானதுதான்.நிலவுகிற இந்த சமூக அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும்  போக்கு மிக வேகமாகி வருகிறது.இது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் நடக்கிறது.

இந்த சமூக அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையின்மைதான் ’வால் தெரு’ போராட்டமாக உலகெங்கிலும் வெடித்திருக்கிறது.இதில் இருந்து மக்களின் கவனத்தை முடிந்தவரை திசை திருப்புவதுதான் இவர்களின் நோக்கம்.இதை போய் யார் நம்புவார்கள் என்கிறீர்களா? இந்த திசை திருப்பும் நாடகங்கள் உலகின் வேறு பகுதிகளில் எடுபடுகிறதோ, இல்லையோ இந்தியாவில் அது நிச்சயம் நடக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

ஒரு சாதிக்காரன் ஏற்றுக்கொண்டால்,அதை இன்னொரு சாதிக்காரன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.ஒரு மாநிலம் சரி என்றால் இன்னொரு மாநிலம் முடியாது எனக் கூறும்.ஒரு மதம் ஒப்புக்கொண்டால் இன்னொரு மதம் ஒப்புக்கொள்ளாது.இவர்கள் இவற்றில் ஏதோ ஒன்றை துணைக்கு வைத்துக்கொள்வார்கள்.பிறகென்ன! அவர்கள் நினைப்பது நடக்காமலா போய்விடும்!

சரி இதற்கு என்ன தான் வழி! லஞ்சம் ஊழலை எப்படித்தான் ஒழிப்பது! அது முடியாதா என்றால் அதற்கான பதில் இதுதான்.

நிலவுகிற இந்த சமூக அமைப்பின் அடிப்படை போட்டி உற்பத்தி. பொருள் உற்பத்தியில் ஈடுபடும் முதலாளிகள் சந்தையை கைப்பற்றுவதற்கும் அதை தக்கவைத்து கொள்வதற்கும்,தமது அரசியல் பிரதிநிதியான அரசியல் கடசிகளுக்கும்,அரசு அதிகாரிகளுக்கும் கோடி,கோடியாய் கொட்டிகொடுக்கிறார்கள்.இவ்விரு பிரிவினரையும் வைத்துக்கொண்டு,தமக்கு வேண்டியதை சாதித்துகொள்கிறார்கள்.உலகில் உள்ள  ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு பிரிவு முதலாளிகளின் நலனை பாதுகாக்க செயல்படுபவைதான்.

இதுதான் ஊழலுக்கான ஆணி வேர்.அரசியல் கட்சிகளின் தலைமை, அரசு எந்திரத்தின் உயர்மட்டம் ஆகியோரின் செயல்கள் அனைத்தையும் கவனிக்கும் கீழ்மட்டங்களும் அதே வழியை பின்பற்றுகிறார்கள்.இது கிளையாக வளர்ந்து நிற்கிறது.

மொத்தத்தில் போட்டியும், பற்றாக்குறையும் சமூகத்தில் இருக்கும் வரை லஞ்சமும்,ஊழலும் இருந்துகொண்டே இருக்கும்.

நிலத்தில் கோரையை ஒழிக்கவேண்டுமானால்,அதன் கிழங்கோடு பிடுங்கி எறியவேண்டும்.கிழங்கை விட்டுவிட்டு அதன் மேல் பகுதியை கிள்ளுவதால் மட்டும் அது ஒழிந்துவிடாது.கிழங்கு மண்ணிற்குள் மறைந்து இருக்கும்வரை,அது வளர்ந்துகொண்டேதான் இருக்கும்.இதைப் போன்றுதான் ஊழலின் ஆணி வேரான போட்டி பொருளுற்பத்தியை தூக்கியெறியாமல் லஞ்சமும்,ஊழலும் மீண்டும், மீண்டும் முளைவிட்டுகொண்டேதான் இருக்கும்.

மறைந்து இருக்கும் ஆணிவேரை பற்றி பேசாமல் வெளியில் தெரியும் கிளையைக்காட்டி நம்மை திசை திருப்புவதுதான் ஹசாரே கும்பலின் இலக்கு,நோக்கம்!
அதுமட்டுமல்லாமல்,ஹசாரேவும் இதை இயக்கும் கும்பலும் நாய் வாலை நிமிர்த்தி விடப்போவதாக கொக்கரிக்கிறார்கள்.இதை நம்மையும் நம்ப சொல்கிறார்கள்!
இதை நம்புவதற்கு நீங்கள் தயாரா?  

(இக்கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகிறது)

Friday, 23 December 2011

அன்னா அசாரேவும்-நாய்வாலும்!

Thursday, 25 August 2011

அன்னா ஹாசரேவாக இல்லாமல் இருக்க விரும்புகிறேன். -அருந்ததி ராய்

அவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் இல்லவே இல்லை..
 
தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோ, அவைகள்தான் உண்மையில் புரட்சிகரமானதென கருதினால், அதுதான் சமீபத்தில் நடந்ததில் மிகவும் தர்மசங்கடமானதாகவும் புத்திசாலிதனமற்றதாகவும் இருந்திருக்கும்.. இப்போது ஜன் லோக்பால் மசோதா பற்றி, நீங்கள் என்ன கேள்வி யாரிடம் கேட்டிருந்தாலும், அந்த கேள்வி கீழ்கண்ட கட்டங்களில் ஏதாவது ஒரு பதிலைதான் சரியென அவர் 'டிக்' செய்திருப்பார்கள் () வந்தே மாதரம்! () பாரத அன்னைக்கு ஜே! () இந்தியா என்றால் அன்னா, அன்னா என்றால் இந்தியா! () இந்தியாவுக்கு ஜே!
 முற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காக, முற்றிலும் வெவ்வேறு வழிகளில், மாவோயிஸ்டுகளும் ஜன் லோக்பால் மசோதாகாரர்களும் ஒரே பொதுவான அம்சத்தை வலியுறுத்தி வருகின்றனர் என்று நம்மால் கண்டிப்பாகச் சொல்ல முடியும். இருவருமே இந்திய அரசைத் தூக்கி எறிய முயல்கிறார்கள். ஒருவர், ஏழைகளிலும் ஏழைகளான ஆதிவாசிகளினால் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் துணை கொண்டு, ஆயுதப் போராட்டத்தின் மூலம், கீழிருந்து தூக்கி எறிய முயல்கிறார். மற்றொருவர் மேலிருந்து, நகரம் சார்ந்த ஆனால் நிச்சயமாக நல்ல பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இராணுவத்தைக் கொண்டு, புத்துணர்வு கொண்ட ஒரு சாதுவின் தலைமையின் கீழ், இரத்தம் சிந்தாத காந்திய ஆட்சிக்கவிழ்ப்பு மூலம், அரசைத் தூக்கி எறியப் பார்க்கின்றனர். (இந்த முறையில் அரசு நிர்வாகமும் தன்னைத் தானே தூக்கி எறிந்து கொள்ள, அனைத்தையும் செய்து உடந்தையாக உள்ளது)

2011
ம் வருடம் ஏப்ரல் மாதம் அன்னா ஹசாரே முதலாவது "சாகும் வரை உண்ணாவிரதத்தை" சில நாட்கள் இருந்தார். அப்போது எழுந்த பெரும் ஊழல்கள், இந்திய அரசின் நம்பிக்கைத் தன்மையையே சிதைத்திருந்தது. அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப, அரசு நமது சிவில் சமூகத்தால் "அன்னா அணி" என்று அழைக்கப்பட்ட இந்த அணியினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அந்தக் குழுவை ஊழல் ஒழிப்பு சட்ட வரைவு கமிட்டியில் கூட்டு உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது. சில மாதங்கள் கடந்ததும் அரசு இந்த முயற்சியைக் கைவிட்டு, புதிய வரைவு மசோதாவைப் பார்லிமெண்டில் முன்வைத்தது. அந்த வரைவு மசோதா பலவித குறைபாடுகளுடன் இருந்ததால், விவாதிப்பதற்கே தகுதியற்றதாக அது இருந்தது.
பிறகு ஆகஸ்டு 16ம் தேதி காலையில் தனது இரண்டாம் "சாகும்வரை போராட்ட"த்தை அன்னா ஹசாரே துவங்கினார். அவர் தனது உண்ணாவிரதத்தைத் துவங்கும் முன்னர் அல்லது அவர் எந்தவித சட்டரீதியான குற்றத்தைச் செய்வதற்கு முன்னரே, கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். விளைவாக ஜன் லோக்பால் மசோதாவை நடைமுறைப்படுத்தும் போராட்டம் என்பது எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான போராட்டம், ஜனநாயகத்திற்கான போராட்டம் என மாற்றப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த இரண்டாம் சுதந்திர போராட்டத்தைத் துவங்கிய சில மணி நேரத்திற்குள், அன்னா விடுவிக்கப்பட்டார். ஆனால் புத்திச்சாதுரியத்துடன், அன்னா சிறைச்சாலையை விட்டு வெளியேற மறுத்து விட்டார்; விளைவாக தான் உண்ணாவிரத்தைத் துவங்கிய இடத்திலேயே, கெளரவம்மிக்க விருந்தாளியாகத் தொடர்ந்து இருந்தார். தனக்குப் பொதுவிடத்தில் உண்ணாவிரதம் இருக்கும் உரிமையைத் தரவேண்டுமென கோரிக்கையை விடுத்தவாறு, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். அந்த மூன்று நாட்களும் கூட்டமும் தொலைக்காட்சி வண்டிகளும் சிறைச்சாலைக்கு வெளியே கூடி நிற்க, அன்னா அணியின் உறுப்பினர்கள் திகாரில் என்ற உயர்காவல் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றைக் கிழித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்து சென்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் உள்ளேயிருந்து கொண்டு வந்த விடியோ செய்திகளை, அனைத்துத் தேசிய மற்றும் மற்றும் அனைத்து தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட கொடுத்து வெளியிட்டனர். (இந்த மாதிரியான ஆடம்பரம், வேறு நபருக்கு அங்கு அனுமதிக்கப் பட்டதில்லை.) இதற்கிடையில் தில்லி முனிசிபல் கமிஷனின் 250 ஊழியர்கள், 15 லாரிகள் மற்றும் 6 மண் புரட்டிப் போடும் இயந்திரங்களின் உதவியுடன், சகதியாகக் கிடந்த ராம்லைலா மைதானத்தில் நாள் முழுக்க வேலைப் பார்த்து, அடுத்த வாரம் அரங்கேறப் போகும் தமாஷாவுக்கு, அதைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். முடிவே இல்லாமல் காத்திருந்து விட்டு, கிரேனில் தொங்கவிட்ட காமிராக்களையும் உற்சாக கோஷமிட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் அவதானித்து விட்டு, இந்தியாவில் மிகவும் விலைகூடுதலான மருத்தவர்களின் மருத்துவ உபசரிப்புடன், அன்னாவின் மூன்றாவது கட்ட "சாகும் வரை உண்ணாவிரதம்" துவங்கியது. உடனே பல தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், “காஷ்மீரில் இருந்த கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றுதான்என்று முழக்கமிட ஆரம்பித்து விட்டார்கள்.
அவரது வழிமுறை வேண்டுமானால் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் எதுவும் இல்லை. அன்னாவின் கருத்துக்கு மாறாக, காந்தி அதிகாரத்தை மையப்படுத்துவதற்கு எதிராக நின்றார். அதிகாரக் குவியலை எதிர்த்து, அதை அமத்தியத்துவப் படுத்த காந்தி விரும்பினார். லோக்பால் மசோதாவோ காந்தியத்துக்கு ஒவ்வாத அதிகாரம் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு கொடுமையான ஊழல் எதிர்ப்புச் சட்டம். இந்த வரைவுச்சட்டத்தின் படி, ஜாக்கிரத்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்டு, ஒரு அதிகார மையத்தை நிர்வகிப்பார்கள். அம்மையத்திற்குக் காவல்துறையினருக்கு உள்ள அதிகாரம் உண்டு, அவர்கள் பிரதம மந்திரியில் இருந்து, நீதித்துறையைச் சார்ந்தவர்களில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர்களிருந்து, அதிகார மட்டத்திலுள்ள கீழ்மட்ட அரசு அதிகாரிகள் வரை, அனைவரையும் கண்காணிக்கலாம். லோக்பாலுக்கு ஒன்றை ஆய்வு செய்து துப்புத் துலக்கவும், கண்காணிக்கவும், அவர்கள் மேல் வழக்குத் தொடரவும் அதிகாரம் உண்டு. லோக்பாலிடம் சிறைச்சாலை மட்டும்தான் இல்லை. அதைத் தவிர அது ஒரு தனிப்பட்ட நிர்வாக அமைப்பாகக் கணக்கில் அடங்காமல் சொத்து வைத்திருப்பவர்களையும், அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருத்தவர்களையும், ஊழல் பேர்வழிகளையும் எதிர்கொள்ளும் வகையில் செயற்படும். அரசு நிர்வாகம் என்பதே இதற்காகதானே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அரசு நடுத்தும் சிறு குழுவினரின் ஆட்சி போதாதென்று, மற்றொரு சிறுகுழு ஆட்சியை லோக்பால் மசோதா ஏற்படுத்தித் தருகிறது. ,இதன் மூலம், இரண்டு சிறு குழு ஆட்சிக்கு வழிவகுப்பதாக இந்த லோக்பால் மசோதா அமைகிறது.
இந்த மசோதா பயன் தருமா இல்லை தராதா என்பது, நாம் ஊழலை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. ஊழல் என்பது வெறுமனே சட்ட சம்பந்தப்பட்டப் பிரச்சினையா? ஊழல் என்பது வெறுமனே நிதி மோசடியும் லஞ்ச லாவண்யமும் உள்ள பிரச்சினையா? அல்லது அதிகாரம் என்பது மிகச் சிறுபான்மையினரின் கையில் குவிந்து கிடக்கும் இந்தச் சமத்துவமற்ற சமுதாயத்தில், ஊழல் என்பது சமூக பட்டுவாடாவுக்கான கரன்சி நோட்டா? ஒரு உதாரணத்திற்கு நான் சொல்வதைச் சிந்தித்துப் பாருங்கள்! பெரிய பெரிய ஷாப்பிங் மால் உள்ள ஒரு நகரத்தில், வீதிகளில் கூவி விற்கும் சில்லறை வியாபராம் தடை செய்யப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் இந்தச் சில்லறை வியாபாரி இந்த ஷாப்பிங் மாலின் விலைக்கு ஈடு கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையளர்களுக்கு, தனது பொருளை விற்க வேண்டுமானால் கண்டிப்பாகச் சட்டத்தை மீறிதான் செயற்பட வேண்டும். அதற்காக அங்குள்ள போலிஸிக்கும் முனிசிபாலிடி ஆளுக்கும் அவர் சிறு தொகையைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்படிச் செய்வது ரொம்ப மோசமான செயலா? எதிர்காலத்தில் இந்தச் சில்லறை வியாபாரி தனது வணிகத்தைச் செய்ய இந்த லோக்பால் பிரதிநிதகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டுமா? சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது அமைப்புரீதியான சமத்துவமின்மைக்குத் தீர்வு காண்பதிலேயே உள்ளது. அப்படிச் செய்யாமல், அதற்குப் பதில், மக்கள் இன்னுமொரு அதிகார மையத்தை எதிர்கொள்ளட்டும் என்று விட்டு விடுவது எப்படி ஞாயமாக இருக்கும்?
இதற்கிடையில் அன்னாவின் புரட்சிக்கான கட்டமைப்பும் நடன இயக்கமும், அதற்கான உக்கிரமான தேசியவாதமும் கொடி அசைத்தலும், இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பு போராட்டத்தில் இருந்தும், உலகக்கோப்பை வெற்றி அணிவகுப்பிலிருந்தும், அணுச்சோதனை கொண்டாட்டத்தில் இருந்தும் கடன் வாங்கப்பட்டுள்ளது. அவர்களது உண்ணாவிரதத்தை நீங்கள் ஆதரிக்கா விட்டால், அவர்கள் உங்களை "உண்மையான இந்தியன் இல்லை" என்று அடையாளப் படுத்துவர்கள். அது போலவே இந்த 24 மணிநேர ஊடகங்களும், இந்த நாட்டில் இந்தச் செய்தியை விட்டால், வெளியிடுவதற்கு உருப்படியான வேறு செய்தியே இல்லாத போல, மாயையை உருவாக்கி வருகின்றன.
இந்த உண்ணாவிரதம் ஐரம் சர்மிளாவின் பத்து வருட உண்ணாவிரதத்திற்கு எந்த விதத்திலும் அர்த்தமும் வழங்கவில்லை. சந்தேகத்தின் பேரிலேயே யாரையும் கொல்லலாம் என மணிப்பூரில் வழங்கப்பட்டிருக்கும் அப்ஸ்பா சட்டத்திற்கு எதிராக AFSPA (Armed Forces [Special Power] ACT) பத்து வருடமாக உண்ணாவிரதம் இருந்து (அவருக்கு வலுகட்டாயமாக உணவு புகட்டப் பட்டாலும்) தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறாரே ஐரம் சர்மிளா, அவரை இப்போராட்டம் எந்த அர்த்தமும் இல்லாமல் கைவிட்டு விட்டது. அணு ஆலை வரக்கூடாது என்று பத்தாயிரம் கணக்கான கிராமத்துவாசிகள் கூடங்குளத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்களே, அந்த உண்ணாவிரத்திற்கு இந்த அன்னாவின் உண்ணாவிரதம் எந்த அர்த்தத்தையும் வழங்கவில்லை.
அன்னாவின் போராட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார்? ஐரம் சர்மிளாவின் உண்ணாவிரத்தை ஆதரித்த மணிப்பூரிகள் மக்கள் இல்லையா? ஜகத்சிங்பூரிலும், கலிங்காநகரிலும், நியாம்கிரியிலும், பஸ்தாரிலும், செய்தாபூரிலும், சுரங்கக் கொள்ளைக் குண்டர்களுக்கு எதிராகவும், குண்டாந்தடிப் போலிஸ்காரர்களுக்கு எதிராகவும், திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் இல்லையா? போபால் வாயு கசிவில், முடமானவர்கள், இறந்தவர்கள், மக்கள் இல்லையா? அல்லது நர்மதா பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட அணையால் இடம்பெயர்ந்தவர்கள் மக்கள் இலலையா? தனது நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்புத் தெரிவித்த, நோயிடா அல்லது புனே அல்லது ஹரியானாவைச் சார்ந்த விவசாயிகள் மக்கள் இல்லையா? அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் இவர்கள் இல்லை.
பின்னர் அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் யார்? தான் கோரும் லோக்பால் மசோதா பார்லிமெண்டில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு, சட்டமாக மாற்றப்படா விட்டால், உணவருந்தாமலேயே உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று கோரும், அன்னா என்ற 74 வயது மனிதனை, ஊடகத்தில் பார்க்கும் இந்த பார்வையாளர்கள்தான், அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் ஆவர். எப்படி பசித்தவர்கள் புசிப்பதற்காக இயேசு கிறிஸ்து மீன்களையும் உணவுத் துண்டங்களையும் பல மடங்குகளாக ஆக்கினாரோ, அது போலவே தொலைக்காட்சி ஊடகங்கள் பல மடங்குப் பார்வையாளர்களைப் பெருக்கி, இந்த மக்களை பன்மடங்காக்கியது. "ஒரு பிலியன் குரல்கள் ஒலித்து விட்டன,” என்று நமக்குச் சொல்லப்பட்டு விட்டது. "இந்தியா என்றால் அன்னாதான்.”
மக்களின் குரலான இந்தப் புதிய சாது உண்மையிலேயே யார்? உடனடி அவசர தேவையான மக்கள் விசயங்கள் குறித்து, இவர் எதுவும் போதுமான அளவுக்கு பேசியதாக நாம் கேட்டதே இல்லை. நமது பக்கத்தில் நடந்த விவசாயிகளின் தற்கொலை குறித்தோ, அல்லது நக்சலைட்டுக்கு எதிராக நடந்த பச்சை வேட்டை ஆபரேசனைக் குறித்தோ, இவர் ஒரு வார்த்தை கூட உகுத்தது கிடையாது. சிங்கூர் பற்றியோ, நந்திகிராம் பற்றியோ, லால்கார்க் பற்றியோ, போஸ்கோ பற்றியோ, விவசாயிகள் போராட்டம் பற்றியோ, அல்லது விசேச பொருளாதார மண்டலத்திலுள்ள பிரச்சினைப் பற்றியோ, இவர் எதுவும் பேசியதில்லை. மத்திய இந்தியாவிலுள்ள காடுகளில் இந்திய இராணுவத்தை நிறுத்தி வைக்க திட்டமிட்டிருக்கும் அரசின் திட்டங்கள் குறித்து, அவருக்கு எந்த அபிப்பராயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
அவர் மராத்தியராக இல்லாதவர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ராஜ் தாக்கரேயின் அரசியலை ஆதரித்தவர். 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களைத் நேரடியாக நிர்வகித்த குஜராத் முதலமைச்சரின் "வளர்ச்சி மாதிரி"யை மனமார புகழ்ந்தவர். (இதைச் சொன்னதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பைக் கண்டு அன்னா, தனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொண்டாலும், மோடி மீதான தனது உவப்பை என்றுமே வாபஸ் பெற்றதில்லை)
இந்த மாதிரியான கும்மாளத்திற்குப் பிறகும், சில அமைதியான பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்துள்ளார்கள். ஆர் எஸ் எஸ்சுடன் அன்னாவுக்குள்ள பழைய உறவுகள், தற்போது அம்பலத்துக்கு இப்பத்திகையாளர்கள் மூலமாக வந்துள்ளது. அன்னாவின் கிராம குழுமமான ரலேகன் சித்தியில் பயின்ற, முகுல் சர்மாவைப் பற்றி நாம் இப்போது கேள்வி படுகிறோம். அங்கோ கடந்த 25 வருடமாக ஒரு கிராம பஞ்சாயத்தோ அல்லது கூட்டுறவு சொசைட்டியோ கிடையாது என்பது தெரிகிறது. ஹரிஜன் குறித்து அன்னாவின் கருத்தை அவரது வார்த்தைகள் மூலமாகவே வந்தடையலாம்: “இந்த மகாத்தமா காந்தியின் பார்வையையே ஒவ்வொரு கிராமமும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு சமார், ஒரு சுனார், ஒரு கும்ஹர் இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பாத்திரம் அறிந்து, தங்களது வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான், ஒரு கிராமம் சுயசார்புள்ளதாக இருக்கும். இதைதான் நாங்கள் ரலேகன் சித்தியில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.” இப்படிப் பேசும் அன்னாவின் அணியில் இருக்கும் உறுப்பினர்கள், "சமத்துவத்திற்கான இளைஞர்கள்" என்ற இடஒதுக்கீட்டுக்கு எதிரான அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்றால், அதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது?
கோகோ கோலாவில் இருந்தும், லெக்மென் பிரதர்ஸில் இருந்தும் தாரளமாய் நிதி வாங்கிக் கொண்ட அரசு சாரா நிறுவனங்களை நடத்துபவர்கள்தான், அன்னாவின் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை முன்னின்று கையெடுத்து நடத்தியவர்கள். அன்னா அணியில் முக்கியப் பிரமுகர்களான அரவிந்த கெஜிர்வாலும் மணிஜ் சிசோடியாவும் நடத்தும் கபீர் நிறுவனம், போர்ட் பெளன்டேசனிடம் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு, 4 லட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது. "ஊழலுக்கு எதிரான இந்தியா" பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்தவர்களில் அலுமினியம் ஆலைகளுக்குச் சொந்தமான கம்பெனிகளும் பெளன்டேசன்களும், பல துறைமுகங்களைக் கட்டிய கம்பெனிகளும் பெளன்டேசன்களும், பல விசேச பொருளாதார பகுதிகளைக் கட்டிய கம்பெனிகளும் பெளன்டேசன்களும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் பெளன்டேசன்களும் அடக்கம். பல கோடிக் கணக்கிலான நிதி சாம்ராஜ்யத்தை நடத்துபவர்களே அந்த அவர்கள். அவர்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களில் பலர் ஊழலில் ஈடுபட்டதற்காக கண்காணிப்பில் இருப்பவர்களாகவும் மற்றும் பலவித பாதகக் கிரிமினல் செயற்களில் ஈடுபட்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஏன் அன்னாவுடன் இவ்வளவு உற்சாகத்துடன் பங்கெடுக்கிறார்கள்?
எப்போது ஜன் லோக்பால் மசோதாவிற்கான பிரச்சாரம் உச்சகட்டமடைகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! 2G ஸ்பெட்ரம் உள்ளிட்ட பெரும் ஊழல்களும் பெரும் மோசடிகளும் விக்கிலீக் மற்றும் வெவ்வேறு மூலங்களின் வழியாக அம்பலமான போது, பல முக்கியமான கார்பரேசன்களும் மூத்த பத்திரிகையாளர்களும் காங்கிரஸ் மற்றும் நேச கட்சிகளின் மந்திரிகளும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவைச் சார்ந்த அரசியல்வாதிகளும் ஒவ்வொருவருடன் அனுசரித்து பல நூற்றுக்கணக்கான ஆயிரங்கோடி ரூபாய் பணத்தைப் பொது கருவூலத்தில் இருந்த கரந்து கொண்டு சென்றனர் என்பது தெரிந்தது. இவ்வளவு நாட்களிலும் முதன் முறையாக பத்திரிகையாளர்களும் பரிந்துரையாளர்களும் பெரும் அவமானப் பட்டார்கள். இந்தியாவிலுள்ள பெரும் கார்பரேட் தலைவர்கள் பலர், சிறைச்சாலையில் வாசம் செய்ய வேண்டிய அளவுக்குச் சிக்கிக் கொண்டுள்ளார்கள். இதுதானே மக்களின் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு மிகவும் அவசியமான நேரமாகும், இல்லையா?
அரசு தனது வழக்கமான கடமைகளைக் கைக்கழுவி வரும் போது, கார்பரேசன்களும் அரசு சாரா அமைப்புகளும் அரசின் கடமைகளைத் (நீர் விநியோகம், மின்சார விநியோகம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுரங்கம், சுகாதாரம், கல்வி) தங்களது கரங்களில் எடுத்துக் கொண்டுள்ள காலமிது. கார்பரேட்டிற்குச் சொந்தமான ஊடகங்கள் பொது மக்களது எண்ணங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள காலகட்டமிது. ஆகவே தற்போது இந்த கார்பரேசன்களும் ஊடகங்களும் அரசுசாரா அமைப்புகளும் இந்த ஏதாவது ஒரு லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள முயலும். அதற்குப் பதில், தற்போது பரிந்துரைக்கப் பட்டுள்ள மசோதா, அவர்களை முழுவதுமாய் நிராகரித்து விட்டது.
தற்போது மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் கூச்சல் போடுவதின் மூலமும், கேடுகெட்ட அரசியல்வாதி என்றும் அரசின் ஊழல் என்ற சங்கதியை அழுத்திப் பிரச்சாரமாகக் கொண்டு போவதின் மூலமும், தங்களை ஊழலின் கொடுக்குப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள அவர்கள் முயல்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய தர்மாபோதச மேடையான அரசையே கொடூரமாகச் சித்தரித்து, அரசை பொதுவெளியில் இருந்த இன்னும் அகற்ற வேண்டுமென கோருவது, கண்டிப்பாக இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தை கொண்டுச் செல்வதற்காகதான். இதன் மூலம் இன்னும் தனியார் மயமாக்குதலை ஊக்குவிப்பதுவும், பொது கட்டுமானத்திலும் இந்தியாவின் இயற்கையான வளங்கைள இன்னும் அதிகமாக அணுகும் வாய்ப்பை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் செய்யும் முயற்சிகளே இவையாகும். இதன் மூலமாக கார்பரேசன் ஊழல்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டு, அதற்குப் பரிந்துரைக்கும் கட்டணம் என்று பெயர் சூட்டப்படும்.
இந்தியாவின் 83 கோடி மக்கள் இன்னும் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான வருமானத்துடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இன்னும் பராதிகளாக்கும் கொள்கைகளை வலுவாக்குவதின் மூலம், நாம் நமது நாட்டை ஒரு சிவில் சண்டைக்குள் முண்டித் தள்ளுகிறோம் என்றுதானே பொருள்?
இந்த அவலமான பிரச்சினை இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கையாலாகாதத் தன்மை மூலம் ஏற்பட்டுள்ளது. இதில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாதவர்களான கிரிமினல்களும் கோடிஸ்வரர்களும் பாராளுமன்றவாதிகளாக ஆக்கப்படுகிறார்கள். இவ்வமைப்பில் உள்ள எந்தவொரு ஜனநாயக அமைப்பும், சாதாரண மக்களால் அணுக முடியாததாக உள்ளது. அவர்கள் கொடியாற்றுவதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்! நாம் நமது உள்நாட்டு இறையாண்மையை அதீதபிரபுக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடத்தப் போகும் ஒரு போருக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்போர் ஆப்கானிஸ்தானத்தின் போர்கிழார்கள் நடத்தும் சண்டையைப் போல் உக்கிரமாக இருக்கும். அதுதான் நமக்கு விதிக்கப் பட்டதாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆங்கிலத்தில் : அருந்ததி ராய் (21/08/2011, தி இந்து)
தமிழில் : சொ.பிரபாகரன்