விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Thursday, 26 December 2013

தேவயானி கைது! - இந்திய ஆளும் கும்பலுக்கு அமெரிக்காவின் ஆப்பு!

தேவயானி கோப்ரகடே - இவர் அமெரிக்காவிற்கான முன்னால் இந்திய துணைத்தூதர், இந்நாள் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர இந்திய பிரதிநிதி, உலகிலேயே அமெரிக்காவின் விசுவாச அடிமைகள் என்று வர்ணிக்கப்படும், இந்திய ஆட்சியாளர்களின் தேசபக்திக்கு ஆதாரமாக விளங்குபவர். இந்திய செய்தி ஊடகங்களின் தாகம் தணிக்கும் ஊற்றாகவும், மொத்தத்தில் இப்போதைய நிலையில் இந்திய மக்களால் அதிகமாக அறியப்பட்டவராகவும் திகழ்பவர் இவர்தான்.



இப்படி இந்தியாவிலுள்ள அனைவருக்கும் பரிச்சயமானவராக தேவயானியை ஆக்கிய பெருமை அமெரிக்காவையே சேரும். தனது வீட்டுப் பணிப்பெண்ணுக்கு விசா பெற்றதில் முறைகேடு செய்தார், பணிப்பெண்ணுக்கு உரிய சம்பளத்தை அளிக்கவில்லை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தேவயானியை அமெரிக்க போலிசார் நியூயார்க் கடைத்தெருவில் வைத்து கைவிலங்கிட்டு கைது செய்தனர். காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தேவயானியை நிர்வாணமாக்கி சோதனை செய்த அமெரிக்க போலிசு, பின்னர் போதைப்பொருள், பாலியல் குற்றச்சாட்டுக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் பெண் கைதிகளோடு சிறையில் சேர்த்து அடைத்தனர்.

"துணைத்தூதர் தேவயானியின் மீதான குற்றச்சாட்டு எதுவாயினும் அவரை கைது செய்த அமெரிக்காவின் நடவடிக்கை ஏற்புடையதல்ல. வெளிநாட்டு தூதர்களுக்கு வழங்கப்படும் சட்டப் பூர்வ உரிமையை அவருக்கு அமெரிக்கா அளிக்காதது தவறு. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தேவயானியை மட்டுமல்ல இந்தியாவையே அவமதிக்கும் செயலாகும்.

எனவே துணைத்தூதர் மீதான வழக்கை அமெரிக்கா கைவிடுவதோடு மன்னிப்பும் கோரவேண்டும்" என இந்திய அரசு பகிரங்க கோரிக்கை வைத்தது.
இந்தியாவின் இந்தக் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா தேவயானிக்கு தூதர்களுக்கு உரிய சலுகையை வழங்க முடியாது; அவர் மீது அமெரிக்க சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியது.

இந்தப் பிரச்சனை இந்தியப் பாராளுமன்றத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருமித்த குரலில் அமெரிக்காவின் ஆணவமிக்க நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதன் அடுத்த கட்டமாக இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து சிறப்பு சலுகைகளையும் இந்தியா திரும்ப பெற்றது. இதன் உச்சக்கட்டமாக அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு இந்திய அரசு வழங்கியிருந்த சிறப்பு அனுமதி அட்டைகளையும் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதோடு, அமெரிக்க தூதரகத்திற்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் திரும்பப் பெற்றுக்கொண்டது.

இந்தியாவின் இந்த பதிலடிக்குப் பின்னரும் கூட அமெரிக்கா தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

இதனால் வேறுவழியின்றி தேவயானிக்கு அமெரிக்க சட்டத்திலிருந்து விலக்கு பெறுவதற்கு ஏதுவாக ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரத் தூதராக அவருக்கு பதவி உயர்வு அளித்தது இந்திய அரசு. ஆனாலும் இந்த சலுகையை அளிக்கும் அதிகாரம் ஐநாவுக்கு இல்லை என்றும் இதை அமெரிக்க அரசாங்கம்தான் தர வேண்டும் என்றும் ஐநா கைவிரித்துவிட்டது.

அதே நேரத்தில் அமெரிக்காவோ தேவயானி செய்துள்ள குற்றம் கடுமையானது; அதிலிருந்து வியன்னா ஒப்பந்தத்தின் அடிப்படையில் விலக்கு அளிக்க முடியாது, தூதரக விவகாரங்களில் மட்டுமே இந்த விலக்கு வழங்கமுடியும் என்று இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்து விட்டது.

ஆனாலும் இந்திய, அமெரிக்க அதிகாரிகள் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வுகாண முயற்சித்து வருவதாக இந்திய வெளி உறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார்.

சரி, அப்படி என்னதான் அமெரிக்க சட்டத்திற்கு புறம்பாக தேவயானி செயல்பட்டார் என்பதை இனி பார்ப்போம்.

அமெரிக்காவில் தனது வீட்டில் வேலை செய்வதற்காக சங்கீதா என்ற பெண்ணை மாதம் ரூ 30,000/- சம்பளத்திற்கு அமர்த்தியுள்ளார் தேவயானி.

ஆனால் அமெரிக்க விசா விதிகளின் படி சங்கீதா சார்பில் விசா விண்ணப்பத்தை 2012 அக்டோபர் மாதத்தில் தேவயானி அனுப்பியுள்ளார். இந்த விண்ணப்பத்தில் பணிப்பெண் சங்கீதாவுக்கு மாத சம்பளம் 4500 டாலர் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தாராம்.

இந்த விண்ணப்பத்தின் படி சங்கீதாவை நவம்பர் – 1 ம் தேதி நேர்முகத்தேர்வுக்கு வருமாறு அழைத்த அமெரிக்க அதிகாரிகள் தேவயானியும், சங்கீதாவும் செய்து கொண்ட பணி ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்த பணி ஒப்பந்தத்தில் சங்கீதாவுக்கு வேலை நேரம் வாரம் 40 மணி நேரம் என்றும் ஒரு மணி நேரத்திற்கு சம்பளம் 9.75 டாலர் என்றும் குறிப்பிட்டிருந்ததாம். மேலும் வாரம் ஞாயிறு விடுமுறை நாள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, அமெரிக்க பணியாளர் நலன் சட்டப்படி சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள், மருத்துவ விடுமுறை நாட்கள், ஆண்டு விடுமுறை ஆகியவையையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த பணி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா, சங்கீதாவிற்கு நவம்பர் 14-ம் தேதி விசா வழங்கியது. நவம்பர் 24- ம் தேதி சங்கீதாவை நியூயார்க் அழைத்துச் சென்றுள்ளார் தேவயானி. அன்றிலிருந்து சங்கீதா 2013 ம் ஆண்டு ஜீன் மாதம் வரை 7 மாதம் தேவயானி வீட்டில் வேலை செய்துள்ளார்.
 
ஜீன் மாதம் தேவயானியின் வீட்டிலிருந்து வெளியேறிய சங்கீதா, நியூயார்க் போலிசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் இம்மாதம் டிசம்பர் 12-ம் தேதி தேவயானியை அமெரிக்கப் போலிசு கைது செய்துள்ளது.

தேவயானி, சங்கீதா சார்பில் விண்ணப்பித்த விசா விண்ணப்பத்தில் மோசடி செய்தார். ஒப்பந்தப்படி சங்கீதாவுக்கு சம்பளம் அளிக்காததுடன் கூடுதலாகவும் வேலை வாங்கியுள்ளார் என்பது தேவயானி மீது அமெரிக்கா சாட்டியிருக்கும் குற்றச்சாட்டாகும்.

அமெரிக்கப் பணியாளர் சட்டத்தை தேவயானி மட்டுமல்ல இந்தியாவிலிருந்து வீட்டு வேலைகளுக்காக பணியாட்களை யார் அழைத்துச் சென்றாலும் அவற்றை நிறைவேற்ற முடியாது. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு பணியாளர்களை அழைத்துச் செல்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள்தான். இந்த அடிப்படையில் விசாவிற்காக விண்ணப்பிக்கும் போதே அந்த விசாவை அமெரிக்கா நிராகரித்துவிட முடியும். பணியாளர்கள் புகார் அளிக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை..

அப்படியானால் இப்படிப்பட்ட விசாக்களை அமெரிக்கா அளிப்பதற்கான காரணம் உள்நோக்கமுடையது. தனக்கு தேவைப்படும்போது அமெரிக்கா விசா முறைகேட்டை பயன்படுத்திக் கொள்கிறது என்பதுதான் இதில் புதைந்திருக்கும் உண்மையாகும்.

சங்கீதா சார்பில் விசா விண்ணப்பம் அளித்த தேவயானி பணிப்பெண்ணுக்கு மாத சம்பளம் 4500 டாலர் என்று குறிப்பிட்டிருந்தார் என்றும் இது மோசடி என்றும் இப்போது கூறுகிறது.

அமெரிக்கா துணைத்தூதர் தேவயானியின் மாத சம்பளமே 4500 டாலர்கள்தான். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ2,70,000/- . இப்படி இருக்கும்போது தனது பணியாளருக்கு அவர் மாத சம்பளமாக ரூ2,70,000/- குறிப்பிட்டிருந்தது எப்படி சாத்தியம் என்பது அப்போதே அமெரிக்காவுக்கு தெரியதா? இது தவறானது, மோசடியானது என்று அப்போதே அந்த விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரிக்காதது ஏன்?

மோசடியான விசா விண்ணப்பத்தை நிராகரிக்காத அமெரிக்கா, அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் சங்கீதாவை நேர்முகம் கண்டுள்ளது. இந்த நேர்முகத்தில் அமெரிக்க பணியாளர்கள் நல சட்டப்படி பணி ஒப்பந்தத்தை சங்கீதா அளித்துள்ளார். அந்த ஒப்பந்தத்தில் வாரம் 40 மணி நேரம் வேலை நேரம் என்றும், ஒரு மணி நேர வேலைக்கு 9.75 டாலர் சம்பளமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார் என்றும் இப்போது அமெரிக்கா கூறுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 9.75 டாலர் என்றால் ஒரு மாதத்திற்கு 1560 டாலர்கள் சம்பளமாக ஆகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.93,600/- ஆகிறது.

விசா விண்ணப்பத்தில் பணியாளர் மாத சம்பளமாக ரூ 2,70,000/- என்று குறிப்பிட்டுவிட்டு, நேர்முகத்தில் அளித்த பணி ஒப்பந்த நகலில் மாத சம்பளம் ரூ93,600/- குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே இந்தத் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதால் விசா வழங்க முடியாது என்று விண்ணப்பத்தை அமெரிக்க அதிகாரிகள் அப்போதே நிராகரித்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக விசா வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு ரூ2,70,000/- சம்பளம் வாங்கும் ஒருவர் தனது பணியாளருக்கு ரூ93,600/- சம்பளமும், வீட்டு வாடகை, மருத்துவச் செலவு, உணவு உள்ளிட்ட சலுகைகளையும் வழங்கினால் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலாக மாத சம்பளமாக வழங்க வேண்டும். இது நடப்பது சாத்தியம் இல்லை என்பது அமெரிக்க அதிகாரிகளுக்கு மிக நன்றாகவே தெரிந்திருக்கும்.

எனவே தேவயானி மீதான அமெரிக்க நடவடிக்கை முற்றிலும் சட்டப்படியானது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரமாக காட்டுபவர்களின் வாதத்திற்குப் பொருந்துவதாக இல்லை.

மேற்கண்ட தகவலோடு, சங்கீதாவின் குடும்பத்தினரை அவசரம், அவரசரமாக இலவசமாக அமெரிக்கா அழைத்துச்சென்று அவர்களை இலவசமாக மீண்டும் அனுப்பிவைத்தார்கள் போன்ற தகவல்களும் அமெரிக்காவின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தும் செயலாகவே உள்ளது.

அமெரிக்க அரசின் நடவடிக்கை மட்டுமல்ல, இந்திய அரசின் நடவடிக்கைகளும் உள்நோக்கமுடையதாகத்தான் இருக்கிறது.

தேவயானிக்கு முன்பே அவரை விட உயர் பதவிகளில் இருந்துள்ள இந்திய குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரை எல்லாம் அமெரிக்கா அவமதித்தபோதெல்லாம் வாய் மூடி மவுனியாக இருந்த இந்திய அரசு, இப்போது தேவயானி விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கோரும்வரை ஓயமாட்டோம் என்று கொக்கரிப்பது தேசபக்தியைப் போன்று தோன்றினாலும், உண்மை அதுவல்ல.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அண்மை ஆண்டுகளில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது. தமது குடிமக்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் குட்டிநாடான இலங்கையின் செயல் இந்திய ஆட்சியாளர்களின் தேசபக்தியைத் தூண்டவில்லை. ஆனால் தேவயானி மீதான அமெரிக்காவின் கைது நடவடிக்கை இந்திய ஆட்சியாளர்களிடையே தேசபக்தியைத் தூண்டிவிட்டதாக கருதுவது கேழ்வரகில் நெய் வடியும் கதைதான்.

அமெரிக்காவும், இந்தியாவும் ஒருவருக்கு எதிராக ஒருவர் எதிர்ப்பதைப் போன்று காட்டிக்கொண்டாலும், இவைகள் நம்மை உசுப்பிவிடுவதற்கான நாடகமேயன்றி வேறல்ல.

இந்த நாடகத்தில் இருவரின் குரல்களும் வெவ்வேறாக தோன்றினாலும், இருவரின் நோக்கமும், இலக்கும் ஒன்றுதான். அது இந்திய மக்களாகிய நம்மை ஏய்ப்பதுதான். நமது இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிடுவதற்கு கதவை அகல திறந்துவைக்க எஞ்சியுள்ள தடைகளையும் உடனடியாக அகற்றிவிட வேண்டும் என அமெரிக்க கோருகிறது.



அமெரிக்காவின் இந்த கோரிக்கையை ஏற்பதில் இந்திய ஆட்சியாளர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் மாற்றுக் கருத்தேதும் இல்லை என்றாலும், உள்நாட்டில் நிலவும் சிக்கலான நிலைமைகளினால், அமெரிக்காவின் தேவையை இந்திய ஆட்சியாளர்களால் உடனடியாக நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். அதிலும் தற்போது மத்தியில் நிலவும் நிலையற்ற கூட்டணி ஆட்சி போன்றவைகள் இதற்கு அடிப்படையாக உள்ளன‌.

இப்படிப்பட்ட உள்நாட்டு நிலைமைகள் இந்திய ஆட்சியாளர்களுக்கு நிலவினாலும் அது அமெரிக்காவுக்குத் தேவையற்றது. பாராளுமன்றத்தில் காங்கிரசுக்குப் போதிய பலம் இல்லாத காரணத்தாலும் எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்பந்தத்திற்கு பணிந்து உலகமயமாக்கலை தீவிரப்படுத்தாமல் அரைகுறையாகவும், மந்தமாகவும் செயல்படுத்துகிறது.

இப்படிபட்ட நிலையில் அடுத்த சில மாதங்களில் இந்தியப் பாராளுமன்றத்திற்கு தேர்தல் வரவிருக்கிறது. இந்தத் தேர்தலில் மோடி பிரதமராவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக 4 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த மோடியின் குஜராத் மாநிலம்தான் இப்போதைய நிலையில் உலகமயமாக்கலின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. மோடி பிரதமரானால் உலகமயமாக்கல் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதை அமெரிக்கா மிக நன்றாகவே அறியும்.

எனவே வரப்போகும் ஆட்சியாளர்களின் உலகமயமாக்கல் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்தால் அப்படி செய்தவர்களுக்கு என்ன நேரும் என்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைதான் தேவயானி மீதான அமெரிக்க நடவடிக்கை.

ஆனால் இப்படிப்பட்ட உள்நாட்டு நிலைமைகள் இந்திய ஆட்சியாளர்களுக்கு இருந்தாலும் அவைகள் அமெரிக்காவின் நலன்களுக்கும், தேவைக்கும் எதிரானது. அதிலும் அமெரிக்காவில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலைக்கு இந்திய நிலைமைகள் தேவையற்றவைகளாகும்.

எனவே இந்திய ஆட்சியாளர்களை, அதிகார வர்க்கத்தை எச்சரிக்கும் நடவடிக்கைதான் தேவயானியின் கைது நடவடிக்கையாகும்.

அமெரிக்காவின் விருப்பத்திற்கு ஏற்ப முழுமுற்றாக நடந்து கொள்ளாததன் எதிர்விளைவாக அமெரிக்கா இந்தியா மீது அரசியல், பொருளாதார ரீதியான நெருக்கடிகளைத் தந்தால் அதனால் ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரம்தான் பாதிக்கப்படும். தனிப்பட்ட முறையில் இந்திய ஆட்சியாளர்களுக்கோ, அதிகார வர்க்கத்திற்கோ இழப்பு எதுவும் ஏற்பட்டுவிடாது.

இதற்கு மாறாக இவர்களுக்கு தனிப்பட்ட முறையில் இழப்பையும், பாதிப்பையும் தன்னால் ஏற்படுத்த முடியும் என்பதைக் காட்டும் நடவடிக்கைதான் தேவயானியின் கைது விவகாரம்.

இப்படியான பாதிப்புகளை இவர்களுக்கு அமெரிக்க மண்ணில் வைத்துமட்டுமல்ல, இந்தியாவிலேயே அமெரிக்காவால் ஏற்படுத்த முடியும். அதற்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் இந்தியாவிலேயே அமெரிக்க வைத்துள்ளது.

ஆகவே தேவயானி மீதான அமெரிக்காவின் கைது நடவடிக்கை இந்திய ஆளும் கும்பலுக்கும், தமக்கும் உள்ள முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வதற்கான அப்பட்டமான மிரட்டல் நடவடிக்கையாகும்.

உலகமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்நாட்டில் தமக்குள்ள நெருக்கடிக்கு அடிபணிவதா அல்லது அமெரிக்காவின் எதிர் நடவடிக்கைக்கு ஆளாவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும் தள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உண்மையில் தேவயானிக்கு மட்டுமே எதிரானது அல்ல. இந்தியாவின் வாங்கும் சக்தி அற்ற – தேவையற்ற – மக்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை.

அமெரிக்காவின் பார்வையில் மனிதர்கள் என்றால் அவர்கள் வாங்கும் சக்தி படைத்தவர்கள் மட்டுமே. அப்படிப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்த தேவயானிகளுக்கே அமெரிக்கா தரும் மரியாதை இதுதான் என்றால் தேவையற்ற மனிதர்களான 100 கோடி இந்தியர்களைப் பற்றிய அமெரிக்காவின் கண்ணோட்டத்தை சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன?

இரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்து இன்று வரை உலகில் பல கோடிக்கணக்கான மனித உயிர்களை காவுகொண்டு உலகின் கொடிய வில்லனாக வலம் வரும் அமெரிக்கா, சாதாரண பணிப்பெண் சங்கீதாவின் உரிமைக்காக போராடுவதாக நம்புவது, நம்பச் சொல்வது போன்ற மூடத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

மொத்தத்தில் நமக்கு தோண்டப்படும் சவக்குழியை நமது கண்களில் இருந்து மறைப்பதற்கும், அதன் ஓசை நமது காதுகளில் விழாமல் தடுப்பதற்கும்தான் தேவயானி, சங்கீதா விவகாரத்தை அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டுள்ளது.
இப்போது நம் முன் இரண்டு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1.                    பணிப்பெண் சங்கீதா மீதான துணைத்தூதர் தேவயானி ஒடுக்குமுறை.....
2.                    உலகமயமாக்கல் நடவடிக்கையை தீவிரப்படுத்த இந்திய ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா தரும் நெருக்கடி......

மேலே கண்ட இரண்டில் மிகத்தீவிரமான இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் நலனை பாதிக்கும் தன்மையுடையது எது என்பதிலிருந்துதான் நாம் சரியான முடிவுக்கு வரமுடியும்.

பணிப்பெண் சங்கீதாவை துணைத்தூதர் தேவயானி அநீதியாக நடத்தினார் என்பது சட்டத்தின் கண்களுக்கு வேண்டுமானால் நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கலாம். அது உண்மை என்பதை நாம் அறிவோம். ஏனென்றால் இந்திய சமூக நடவடிக்கையில் சங்கீதா நடத்தப்பட்ட முறைதான் மிக இயல்பான ஒன்றாகும்.

ஒரு சங்கீதா மட்டுமல்ல, இந்தியாவின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்வு அதைவிட கோரமானதாகும். இந்திய உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலும், ஒடுக்குமுறையும் உலகமயமாக்கல் நடவடிக்கைக்குப் பிறகே மிகவும் கோரமாக ஆக்கப்பட்டுள்ளது. இதை இன்னமும் குறிப்பாக சொல்வதென்றால் இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்கள் தேவையற்றவர்களாக ஆக்கப்பட்டுவிட்டோம்.

நாட்டின் பெரும்பான்மை மக்களை தேவையற்றவர்களாக மாற்றிய உலகமயமாக்கலை இன்னமும் முழுமையாக செயல்படுத்தக் கோருவதுதான் தேவயானி மீதான அமெரிக்க நடவடிக்கையின் உள்ளடக்கம்.
எனவே,
•                     சங்கீதா மீதான தேவயானியின் ஒடுக்குமுறையை வன்மையாகக் கண்டிப்போம்!
•                     தேவயானி கைதின் உள்ளே மறைந்துள்ள அமெரிக்க நோக்கத்தை முறியடிப்போம்!

•                     இந்தியா நாடு அந்நியர்களுக்கு காட்டிக் கொடுப்பவர்களுக்கு உரியதல்ல; இது நூறு கோடி உழைக்கும் மக்களின் நாடென்பதை நிலை நாட்டுவோம்!

Thursday, 26 September 2013

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி - எல்லாம் அவன் செயல்!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த ஆகஸ்ட் 28, 2013 அன்று ரூ.68.80 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி என்பது திடீரென ஏற்பட்டுவிடவில்லை. டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு இப்போது மட்டுமல்ல எப்போதுமே இருந்ததில்லை. இப்போதைய வீழ்ச்சியும் ஒரே நாளில் திடீரென ஏற்பட்டுவிடவில்லை. 1990 - களிலேயே ரூபாயின் மதிப்பு அதள பாதாளத்தில் விழத் தொடங்கிவிட்டது. அதிலும் கடந்த சில மாதங்களில் இதன் அளவு மிகத்தீவிரமாகியே வந்தது. கீழ்க்கண்ட புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே இதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு....
ஆண்டு மதிப்பு
1950-60 ரூ.4.76
1970-80 ரூ.11.36
1980-90 ரூ.16.22
1990-2000 ரூ.35.43
2000-2005 ரூ.45.31
2005-2013 ரூ.68.80
நடப்புக்கணக்கு பற்றாக்குறையே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என அரசும், பொருளாதார நிபுணர்களும் கூறுகின்றனர். இதன்படி இந்தியப் பொருளாதாரத்தில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பது இப்போது மட்டுமல்ல எப்போதுமே நீடிக்கிறது என்பதும் இந்தியப் பொருளாதாரம் ஒரு போதும் வளர்ச்சி நிலையில் இருந்ததே இல்லை என்பதும் தெளிவாகிறது.
நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்பது ஏற்றுமதியினால் கிடைக்கும் அந்நிய செலாவணிக்கும், இறக்குமதியினால் கிடைக்கும் அந்நிய செலாவணிக்கும் இடையிலான பற்றாக்குறையின் அளவே ஆகும். ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரித்தால் பற்றாக்குறையும், இறக்குமதியைவிட ஏற்றுமதி அதிகரித்தால் உபரியுமாகும்.
மேலே கண்ட புள்ளி விவரங்கள் நமக்கு உணர்த்துவது எப்போதுமே இந்தியா ஏற்றுமதியை விட இறக்குமதியையே அதிகமாக செய்து வருகிறது என்பதைத்தான். இறக்குமதி என்றால் ஒரே வகையிலானதாக அதாவது பாதகமானதாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மூலதனப் பொருள்களின் இறக்குமதி ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை பறைசாற்றும் கூறாகவும் இருக்க முடியும். அது இறக்குமதி செய்யப்படும் மூலதனப் பொருட்களை உற்பத்தி பொருட்களாக்கி ஏற்றுமதி செய்வதன்மூலம் மட்டுமே வலிமையானதாக அமையும். இந்த அடிப்படையிலேயே தற்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் “பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் தங்கத்தின் இறக்குமதிக்கு ஆகும் அந்நிய செலாவணி செலவை கட்டுப்படுத்த வேண்டும். இதுவே தற்போதையை பொருளாதார நெருக்கடிக்கு காரணம்” என்றும் கூறியிருக்கிறார். குறிப்பாக தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது மத்திய அரசு. ஆனால் மூலதனப் பொருட்களின் இறக்குமதியின் அதிகரிப்பைப் பற்றி அவர்கள் வாயே திறக்கவில்லை. இதன்முலம் மூலதனப் பொருட்களின் இறக்குமதி என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக ஆட்சியாளர்கள் உருவகப்படுத்துகின்றனர், அதே வேளையில் தங்கத்தின் மீதான முதலீடுகளை குறைக்குமாறும், பெட்ரோலிய பொருட்கள் பயன்பாட்டை குறைக்குமாறும் மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.
தங்கத்தின் இறக்கும‌தியை குறைப்பதற்கான வரி உயர்வு போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டாலும் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிக்கு இப்படிப்பட்ட தடைகளை அரசுகளால் ஏற்படுத்த முடியாது. ஏனென்றால் பெட்ரோலிய பொருட்களுக்கான தட்டுப்பாடு வாகன உற்பத்திக்கு பாதகத்தை ஏற்படுத்தி அது அந்நிய கார் உற்பத்தியாளர்களின் நலனைப் பாதிக்கும். இது அவர்களின் மூலதன நடவடிக்கைகளை சுருக்குவதோடு உலக அளவில் இந்தியாவின் மீது அவநம்பிக்கையை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தும். இது நேரடி முதலீடுகளை நீண்டகால அளவிலும், பங்குச்சந்தை வழியிலான முதலீடுகளை உடனடியாகவும் பாதிக்கும். பங்குச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறும் நடவடிக்கை அந்நிய செலாவணி கையிருப்பை திவாலாக்கிவிடக்கூடிய தன்மையை உள்ளடக்கியதாகும். ஆகவே மத்திய அரசின் அறிவிப்புகள் அனைத்தும் போலியானவைகளே ஆகும்.
எப்படியானாலும் அந்நிய முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளை தடையின்றி செயல்படுத்தவும், அதற்குரிய தடைகளை தூக்கியெறியவும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை அதற்குரிய சாதகமான அம்சமாகவும் கருதுகிறது.
அதாவது உலகமயமாக்கல் கோருகின்ற எஞ்சிய சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இதுவே சரியான வாய்ப்பாகவும் கருதுகிறது. இதை பிரதமர் மன்மோகன் சிங் ஆகஸ்ட் 30 அன்று ரூபாய் மதிப்பு சரிவு சம்பந்தமாக பாராளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கை மற்றும் ஆற்றிய உரையிலும் குறிப்பிட்டுள்ளார்.
”ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மத்திய அரசு மட்டுமே காரணமல்ல, சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தடையாக உள்ள அனைவருமே இதற்கு காரணம்”, என்று கூறியுள்ளார்.
அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குத் தேவையான தங்கு தடையற்ற வாய்ப்புகளையும், அவர்களின் லாபத்தை அதிகரிக்கச் செய்வதற்கான தொழிலாளர்களை சுரண்டுவதற்கு தடையாகவுள்ள தொழிலாளர்களின் காப்பீடு, ஓய்வூதிய உத்தரவாதங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்றும், நாட்டுமக்களின் நலன்களுக்கு மானியங்களைக் குறைப்பது, இல்லாமல் செய்வது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ள தடைகளையும் உடைக்க வேண்டும். இதற்கு நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் மேற்கண்ட கோரிக்கையை இந்தியாவில் உள்ள எந்த ஒரு எதிர்க்கட்சியும் சரியான மாற்றுத்தீர்வை முன்வைத்து நிராகரிக்க வில்லை. மாறாக அரசியல் உள்நோக்கிலேயே உப்பு சப்பற்ற வகையில் கூச்சல் போட்டுள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் கையாலாகாத்தனமே நெருக்கடிக்கான காரணம் என்றும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை சரிசெய்து விடுவோம் என்றும் பூடகமாக கூறுகின்றனர். ஆனால் தற்போதைய இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை எப்படி சரிசெய்வோம் என்பதை கூறுவதில்லை. இல்லாத ஒன்றை எப்படிக் கூறமுடியும்?!
மத்திய அரசு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு எஞ்சிய சீர்திருத்தங்களை நிறைவேற்றிவிட வேண்டும் என்று துடிக்கிறது. இந்த நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு தமது அரசியல் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் உள்ள வேறுபாடே தவிர அடிப்படையில் வேறுபாடு ஏதுமில்லை. இதை நிரூபிக்கும் வகையில்தான் நடப்புக்கணக்கு பற்றாக்குறையின் அளவின் அதிகரிப்பு மற்றும் மூலதனப் பொருள் இறக்குமதியின் அளவு அதிகரிப்பின் புள்ளி விவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
நடப்புக் கணக்கு பற்றாக்குறையின் அளவு
வ.எண்ஆண்டுடாலர் மதிப்பு
11991-20013500 கோடி
22004-052700 கோடி
32005-0710,000 கோடி
42007-0816,000 கோடி
52008-0928,000 கோடி
62009-1028,000 கோடி
72010-1148,000 கோடி
82011-1278,000 கோடி
92012-1389,000 கோடி
மூலதனப் பொருள் இறக்குமதியின் அதிகரிப்பு அளவு.
வ.எண்ஆண்டுடாலர் மதிப்பில்
12004-052550 கோடி டாலர்
22005-073800 கோடி டாலர்
32007-084700 கோடி டாலர்
42008-097000 கோடி டாலர்
52009-107200 கோடி டாலர்
62010-116600 கோடி டாலர்
82011-127900 கோடி டாலர்
92012-139900 கோடி டாலர்
102013-149150 கோடி டாலர்
மேலே கண்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான முன்னறிவிப்பு பலகை என்பதை அறியாதவர்கள் அல்ல அரசும், எதிர்கட்சிகளும்! ஆனால் இதை எதிர்பார்த்தே அவர்கள் காத்துக் கிடந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
மூலதனப் பொருள் இறக்குமதி 79 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் உள்நாட்டு உற்பத்தியோ 56 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது என்றால் ஏற்றுமதி மட்டுமல்ல, உள்நாட்டில் விற்பனைக்கான சந்தையும் அதற்கு இல்லை என்பதும் தெளிவாகிறது. இறக்குமதி செய்யப்படும் மூலதனப் பொருட்கள் ஏற்றுமதிக்காக அல்லாமல் இந்திய மக்களின் தலையில் கட்டுவதற்கே கொண்டு வரப்படுகின்றன.
உலக அளவில் ஏற்பட்டுள்ள முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி இந்தியாவிலிருந்து செய்யப்படும் ஏற்றுமதியின் அளவை வெகுவாக குறைத்துவிடுகிறது. இதுவும் நடப்புக்கணக்குப் பற்றாக்குறைக்கான காரணம் என்கிறார்கள். இது உண்மை என்றால் இதற்கு முன்னர் எப்போதுமே இதே நிலைதானே நீடித்து வருகிறது, எப்போதுமே ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என்ற உண்மை தெளிவாகத் தெரியும் போது, அதிலும் உலக மயமாக்கல் கொள்கை நடைமுறைப்பட்ட பின்னர் மூலதனப் பொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்கான நடவடிக்கை எதையுமே அரசுகள் எடுக்கவில்லை. மூலதனப் பொருட்களின் இறக்குமதிக்கு இணையாக சந்தைக்கான வாய்ப்புகள் பற்றி கணிக்காதது ஏன்? சந்தைக்கான வாய்ப்புகள் சுருங்கி வரும்போதோ (அ) அது இல்லாமல் போகும்போதே மூலதனப் பொருட்களின் இறக்குமதிக்கான அளவை குறைக்காதது ஏன்?
ஆகிய வினாக்களுக்கு ஆளும் கட்சியோ, எதிர்கட்சிகளோ பதில் ஏதும் கூறுவதில்லை. இதற்கு பதில் கூறமுடியாதவர்கள்தான் இந்த நெருக்கடியை தீர்க்கப் போவதாக கூறுவதை நாம் நம்பவேண்டும்!
ஒரு மனிதனின் உடல் தேவைக்கு ஏற்பவே உணவை உட்கொள்ள முடியும், உட்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு மாறாக திணிக்கப்படும் உணவு வாந்தியாகவோ, வயிற்றுப் போக்காகவோ நிராகரிப்பிற்கு உள்ளாகிறது. அதைப் போன்றுதான் இந்தியப் பொருளாதாரமும் அதன் சொந்த தேவைக்காக அல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்காக இந்தியாவின் மீது திணிக்கப்படுகிறது. இப்படி திணிப்பிற்கு உள்ளான இந்தியாவின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு மரணப் படுக்கையில் கிடத்திவிடப்பட்டுள்ளது.
இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் மூலதனப் பொருட்கள் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, அதன் நலன்களுக்காக என்று இந்திய ஆட்சியாளர்கள் எவ்வளவுதான் கூறினாலும், அவைகள் அனைத்தும் கட்டுக்கதைகள் என்பதைத்தான் நடப்புக்கணக்கு பற்றாக்குறையும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன.
மூலதனப் பொருட்களின் இறக்குமதி அளவின் அதிகரிப்பு பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கானதே ஆகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளோடும், உலகின் வேறு எந்த ஒரு நாட்டோடும் ஒப்பிடும் போது மிகக் குறைந்த மூலதனத்தில் அதிக லாபமீட்டும் வகையில் மிகக் குறைந்த கூலிக்கு மனித உழைப்பு மலிவாகக் கிடைக்கும் நாடு என்ற அடிப்படையிலேயே மனித உழைப்பை அதிகம் கோரும் உற்பத்தி பிரிவுகளை இந்தியாவில் அமைக்கின்றன. இதனோடு மிகக் குறைந்த விலையில், மிக மலிவாக இந்தியாவில் கிடைக்கும் மூலதனப் பொருட்களையும் பயன்படுத்திக் கொள்கின்றன. மேலும் இந்திய அரசினால் வழங்கப்படும் வரிவிலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளின் மூலமும் தமது லாப விகிதத்தை உயர்த்திக் கொள்கின்றன. இதை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே தொழிலாளர்களின் காப்பீடு, மற்றும் ஓய்வூதியத் திட்டங்களை இல்லாமல் செய்யுமாறு இந்திய அரசுக்கு நெருக்குதலும் தருகின்றன.
இதைப் போன்ற உலகமயமாக்கல் கொள்கையின் நடைமுறை கடப்பாடுகளை ஏற்க மறுக்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் நேரடி ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் திணிக்கின்றன. இந்த வகையில் இந்தியா முதல் வகையைச் சேர்ந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதனாலேயே தனது தகுதிக்கு ஏற்ப முதலாவதாக திவாலாகும் நாடாகவும் உள்ளது.
மூலதனப் பொருட்களின் இறக்குமதி சுமை பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களுக்காக இந்திய மக்களின் தலையில் சுமத்தப்படுகின்றன.
அமெரிக்க மக்களின் மொத்த மக்கள் தொகைக்கு நிகராக வாங்கும் சக்திபடைத்த மக்கள் தொகையையும், அளவிலா இயற்கை வளங்களையும் கொண்டுள்ள நாடு இந்தியா. இதனோடு மலிவான மனித உழைப்பும் அளவில்லாமல் கொட்டிக்கிடக்கும் நாடும் இதுதான்.
எனவேதான் இந்தியாயில் மலிவாக கிடைக்கும் மூலப்பொருட்களையும், மனித உழைப்பையும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிடுகின்றன, அதிக மனித உழைப்பைக் கோராத நுட்பமான உயரிய தொழில் நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படும் உதிரிபாகங்களை பன்னாட்டு நிறுவனங்கள் தமது தாய்நாடுகளில் அமைத்துள்ள உற்பத்தி பிரிவுகளில் உற்பத்தி செய்து, அதைக் கொண்டு பிணைக்கப்படும் பொருட்களை இந்திய மக்களின் தலையிலேயே கட்டுகின்றன. எந்திர உதிரிப்பாகங்களை மூலதனப் பொருட்களாக அதாவது கச்சாப்பொருட்களாக காட்டி இறக்குமதி செய்து ஏய்க்கின்றன. இந்த உண்மை மிக நன்றாகவே தெரிந்தே இந்திய அரசு அவற்றை அனுமதிக்கிறது, இதன் மூலம் அந்நிய செலவானி கையிருப்பு கரைவதுடன், அரசுக்கான வரிவருவாயும் பெருமளவில் குறைகிறது. உண்மையில் நாட்டு நலனின் மீது அக்கறையுள்ள அரசாக இருக்குமானால் பன்னாட்டு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் உயரிய தொழில்நுட்ப உதிரிப்பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்கவும், ஒட்டுமொத்தமாக உற்பத்தி செய்யப்படும் உற்பத்திப் பொருட்களை பெருமளவு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அவைகளுக்கு இந்தியாவில் உற்பத்திக்கான அனுமதியை வழங்க வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்க மறுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எவ்வித சலுகைகளும் கிடையாது என்ற நிபந்தனையையும் விதிக்க வேண்டும்.
இதற்கு மாறாக, இந்திய மக்களின் வாங்கும் சக்தியை மேலும் அதிகரிக்கும் வகையிலான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய அரசுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் நெருக்குதல் தருகின்றன.
இதற்காக இந்திய மக்களின் வரிப்பணத்தை, - அந்நிய நாடுகளிடம் பெறும் கடன் உட்பட – இந்திய மக்களின் மேட்டுக்குடியினர் கொள்ளையடிப்பதற்கு கதவுகள் அகல திறக்கப்பட்டுள்ளன. இவர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் முகவர்களாக செயல்பட்டு நாட்டின் இயற்கை செல்வங்களையும், மக்களின் உழைப்பையும் தம் பங்குக்கு இரண்டாம் முறையாக கொள்ளையடிக்கின்றனர்.
ஆனாலும் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப்பசிக்கு இவைகளும் போதுமானவைகளாக இல்லை.
பன்னாட்டு நிறுவனங்களின் கோரப்பசிக்கு தன் பங்குக்கு தீனி போடும் வழிமுறைகளை இந்தியாவில் மத்திய அரசும், மாநில அரசுகளும் கையாளுகின்றன. இந்த வழிமுறைகள் மூலமாக கரும்பு சாறு பிழியப்படுவதைப் போன்று பலமுறை மக்கள் சாறு பிழியப்படுகிறார்கள்.
இதற்காகவே பல்வேறு இலவசத் திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து நடைமுறைப்படுத்துகின்றன. இந்திய மக்களில் இன்னமும் 80 கோடி பேர் ஊட்டச்சத்து பற்றாக் குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ளோரில் 60 விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர்.
உலகிலேயே மிகவும் வறுமையான நாடுகள் என்று கருதப்படும் ஆப்பிரிக்க நாடுகளைவிட இந்தியாவில்தான் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம் என்று ஐநா புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
மனிதர்களின் அடிப்படைத் தேவையான உணவைக் கூட முழுமையாக பெறமுடியாத இந்தியாவில்தான் செல்போன்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது இந்திய மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டையும், இதன் மூலம் இந்தியா வல்லரசாகி வருவதன் ஆதாரம் என்றும் இந்திய ஆட்சியாளர்களால் பெருமை பொங்க பேசப்படுகிறது.
இந்தப் பெருமை போலியானதும், பொய்யானதும் என்பது அதைக் கூறுபவர்களுக்கே நன்றாகத் தெரியும் என்றாலும் அதை அவர்கள் விடாப்பிடியாக கூறுவதற்குக் காரணம் நாட்டைப் பற்றி மக்களாகிய நமக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதால்தான்!
மக்கள் தமது உழைப்பிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்து தமது அன்றாட உணவுத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடிவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் செல்போன் உள்ளிட்ட பொருட்களை எப்படி வாங்க முடிகிறது?
இதற்கான அடிப்படையான காரணம் இந்திய மக்களிடையே நிலவும் போலியான, நேர்மையற்ற வாழ்வியல்முறையும் பண்பாட்டுக் கூறுகளும் மற்றும் இதை ஊக்குவிக்கும் ஆட்சியாளர்களின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள்.
இந்தியாவில் எல்லா காலங்களிலும் அன்றிலிருந்து இன்று வரை சமூகத்தில் முன்னேறிய பிரிவினரின் பண்பாடுகளும், வாழ்க்கை முறைகளுமே ஒட்டுமொத்த மக்களுக்கான வழிகாட்டிகளாக உள்ளன. உழைக்கும் மக்கள் என்றுள்ள மக்கள் பிரிவினர் அன்றிலிருந்து இன்றுவரை தமக்கான வாழ்வியல் நெறிமுறைகள் என்று எதையும் உருவாக்கிக்கொண்டதும் இல்லை, உறுதியாக அவற்றை கடைபிடித்ததுமில்லை. சமூகத்தில் மேல்நிலையில் உள்ளவர்களின் வாழ்வியல் முறைகளும், பண்பாடுகளுமே தமக்கானவைகளாக கொண்டிருப்பவர்கள்.
அக்காலத்தில் நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வியல் முறையை தீர்மானிப்பவர்களாக மேல் வகுப்பினரே இருந்தனர், எனவே அவைகள் நிச்சயமான ஏற்றத் தாழ்வுகளை வெளிப்படையாக கொண்டிருந்தன. இன்று அவைகள் அதே வடிவத்தினால் அல்லது ’பார்த்து ஒழுகுவது’ என்ற அடிப்படையில் பின்பற்றப்படுகின்றன. இதன் மூலம் ஆளும் வர்க்க பண்பாடுகள் தவிர்க்க வியலாத பெரும் சக்தியாக வளர்ந்துள்ளன‌. இவைகள் தவிர்க்கவியலாமல் ஒவ்வொருவரிடத்திலும் தம்மையும் சுரண்டுவோரின் ஒரு பகுதியினராக தம்மை கருதிக் கொள்ளும் மனோநிலையை உருவாக்கி உள்ளது.
இப்படியான பரவலாக்கம் மேட்டுக்குடியினரின் பண்பாட்டைப் பாதுகாக்கும் பாதுகாவலர்களின் எண்ணிக்கையை மேலும் விரிவடையச் செய்துள்ளது. இதனால் ஒடுக்குவதற்கு தேவையான வாய்ப்புகள் அனைத்தும் ஒவ்வொருவரிடமும் மேலும் கூர்மைப்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக மேட்டுக் குடியினரின் – மேல்சாதி – மேல் குலத்தினரின் பண்பாடுகள், வாழ்வியல் முறைகள் அனைவருக்குமானவைகளாக ஆக்கப்பட்டுள்ளன. இது ஒரு வகையில் இவர்களிடையே இடைவெளியை இல்லாமல் செய்து விட்டதைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. உண்மை இதற்கு நேர்மாறானதாகும்.
நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய மேல்சாதி – மேட்டுக்குடிகளின் வாழ்க்கைத் தரத்தையே நாற்பது ஆண்டுகளுக்குப் பின் கீழ்சாதி, கீழ்தட்டு மக்களில் ஒருசிலர் அடைவதற்கான வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. ஆனாலும் இவ்விரு பிரிவினருக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வின் இடைவெளி குறையவில்லை என்பதோடு மேலும் அது அதிகரித்துச் செல்கிறது. ஆனாலும் இந்த உண்மையை அடையாளம் காண முடியாத அளவுக்கு அவைகளின் வழிமுறை வடிவம் மாறிவிட்டுள்ளது. முன்பு அது நேரடி ஒடுக்குமுறையின் மூலம் செய்யப்பட்டது. இப்போது அது தனிநபர் திறமை என்ற அடிப்படையில் நயவஞ்சகமாக செய்யப்படுகிறது.
இந்த நயவஞ்சகமான வடிவமாற்றம் மேல்சாதி, மேட்டுக்குடியினரின் பண்பாட்டு வாழ்வியல் முறைகளையே தமது வாழ்க்கையின் வழிகாட்டியாக சுதந்திரமாக கற்பனை செய்து கொள்ளும் வாய்ப்பை அனைவருக்கும் வழங்கியுள்ளது.
இப்படி பெரும்பான்மை மக்களுக்கு ’அதைப் போல’ என்ற கருத்தாக்கம் உலக மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு பெரும் ஆதாயத்தை பெற்றுத் தரும் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
’அதைப் போல’ என்ற போலியான வாழ்வியல் கோட்பாடுதான் அனைவரையும் செல்போன் வாங்கத் தூண்டுகிறது. இதுதான் கஞ்சிக்கு வழி இல்லாதவனையும் திருமணத்தின் போது பெண்வீட்டாரிடம் இருசக்கர வாகனத்தை வரதட்சணையாக கட்டாயமாக வாங்கத் தூண்டுகிறது. இதைத்தான் சமூகவியலாளர்கள் நுகர்வு மோகம் என்று அழைக்கின்றனர்.
’அதைப் போல’ என்ற வாழ்வியல் முறையை, பண்பாட்டை, நுகர்வு மோகத்தை – மேலும் ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் அனைத்தையும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ந‌டைமுறைப்ப‌டுத்துகின்றனர். மக்களின் வாங்கும் சத்தியை அதிகரிக்க அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கித் தருதல் என்ற வகையிலான பொருள் உற்பத்தியை உருவாக்குவதற்கு மாறாக, இலவசங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதாயத்தைத் தரும் வகையிலான திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனர். இதற்காக அரசின் நிதி, மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கொட்டித்தரப்படுகிறது. இவ்வகையான நடவடிக்கைகள் மூலம் மக்களிடமிருந்து அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் கறக்கும் நிதி, மக்களுக்கான இலவசங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு திருப்பிவிடப்படுகிறது. அப்பொருட்கள் இல்லாமல் இனி வாழமுடியாது என்ற பண்பாட்டு அடிமைகளாக மக்கள் ஆக்கப்படுகின்றனர்.இந்த அடிமைத்தனம் மக்களின் சமூக அக்கறை இன்மையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
இதனோடு இலவச உணவு தானியங்கள் வழங்குதல் போன்றவைகளின் மூலம் மக்களின் உழைப்பு வருவாயையும் நுகர்வு மோகத்தை பிரபலமாக்குவதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் பிடுங்கிக் கொள்கின்றன.
அரசின் ஒவ்வொரு சிந்தனையும் செயல்பாடும் நாடு, நாட்டு மக்களின் நலன் என்பதற்கு மாறாக பன்னாட்டு நிறுவனங்களின் நலனாக மட்டுமே உள்ளது என்பதை இது தெளிவாக்குகிறது.
இலவசத் திட்டங்களுக்கு செலவழிக்கப்படும் நிதியை நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வியல் ஆதாரமான விவசாயத்தை லாபகரமாக மாற்றுவதற்கு பயன்படுத்தினால், நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து நிலையான, உத்தரவாதமான தேசிய சந்தை உருவாக்கத்திற்கான அடித்தளத்தை கட்டமைக்க முடியும். இது தேசிய முதலாளித்துவதை வளர்த்து நேர்விகிதத்தில் இது தன்பங்கிற்கு மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும்.
இப்படி கட்டப்படும் சங்கிலிப் பிணைப்பிலான பொருளாதார அடித்தளம்தான் இப்போது வீசுவதைப் போன்ற சூறாவளிகளை தடுத்து நாட்டைப் பாதுகாக்கும் மாங்குரோவ் காடுகளாகத் திகழும்.
ஆனால் தற்போதைய நிலையில் இந்தியப் பொருளாதாரமோ அதன் உள்ளிருந்தே உறிஞ்சிக் கொழுக்கும் குடற்புழுக்களைப் போன்று பன்னாட்டு நிறுவனங்களால் உறிஞ்சப்பட்டு மரணப்படுக்கையில் வீழ்ந்து கிடக்கிறது.
இந்தியப் பொருளாதாரத்தைப் போன்று உலகில் உள்ள வேறு எந்த ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த அளவிற்கு உறிஞ்சியிருந்தால் அவைகள் முற்றாக பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே வீழ்ந்திருக்கும். ஆனால் இந்தியப் பொருளாதாரம் அப்படிப்பட்ட நிலையை அடையாததற்கு இந்தியப் பண்பாடே நம்மை பாதுகாப்பதாகவும் பார்ப்பன பயங்கரவாத கும்பலான இந்து மதவெறி அமைப்புகள் கூறுகின்றன. இதையே அவைகள் மிகப் பெரிய அளவிலான பிரச்சாரமாகவும் செய்து வருகின்றன.
மேற்கண்ட பார்ப்பன பயங்கரவாத அமைப்புகளின் கூற்றை நாம் முற்றாக நிராகரித்து விடவும் முடியாது. அவற்றில் அடிப்படை உண்மை இருக்கவே செய்கிறது. ஆனால் அது நேர்மறையில் அல்லாது எதிர்மறையில் உள்ளது என்பதுதான் கசப்பான உண்மை.
’கட்டியாக தின்ன‌ முடியாவிட்டால் கரைத்துக் குடிப்போம்’, என்ற இந்திய மக்களின் பண்பாடுதான் மிகத்தீவிரமான நிலையிலும் இந்தியப் பொருளாதாரத்தில் வெளிப்படையான விளைவுகளை தடுத்து நிறுத்துகின்றன.
வெங்காயம் விலை நாற்பது ரூபாய் விற்கும்போது ஒரு கிலோ வாங்கும் ஒருவன், அதுவே நூறுரூபாய் அளவுக்கு உயரும் போது அரைகிலோவோ, அதற்கு குறைவாகவோ குறைத்துக் கொள்கிறான். எந்த அளவுக்கு விலைவாசி உயர்கிறதோ அந்த அளவிற்கு வாங்கும் அளவை குறைத்துக் கொள்கிறான்.
’விரலுக்கு ஏற்ற வீக்கம்’ என்ற இந்த முறை இந்திய மக்களின் வாழ்வியலின் பிரிக்க முடியாத அங்கமாக இன்னமும் திகழ்கிறது. இந்தப் பண்பாடு அனைவராலும் உயர்வானதாகவும் போற்றப்படுகிறது. இது நுகர்வுப் பண்பாட்டுக்கு எதிரான ஆயுதமாகவும் புகழப்படுகிறது.
ஆனால் இந்திய மக்களின் இந்த இயல்பு மற்றவர்களால் கூறப்படுவதைப் போன்று சிக்கனம் என்பதை மட்டுமே மையக்கருவாக கொண்டது அல்ல. இந்தியாவில் கர்ப்பிணி பெண்களில் பெரும்பான்மையினர் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்களாக உள்ளனர் என்ற தகவலும், இந்த ஊட்டச்சத்து குறைபாட்டால் வருங்கால சந்ததியினரின் மூளை வளர்ச்சி, உடல் வளர்ச்சி மோசமான பாதிப்பிற்கு உள்ளாவதால் மொத்த நாட்டின் நலனும் பாதிக்கப்படுகிறது என்பது அதன் விளை பொருளாக இருக்கும்போது இந்தப் பண்பாட்டின் மையக்கரு சிக்கனம் என்பதையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல. மனிதர்களின் உயிர்வாழ்வுக்கான அத்தியவாசியத் தேவையான உணவுத் தேவை நிறைவடைந்த பின்னர்தான் சிக்கனம் என்பதற்கான தேவையைப்பற்றி பரிசீலிக்க முடியும்.
ஆனால் உணவுத்தேவை கூட நிறைவடையாத ஒரு நாட்டில் இந்தப் பண்பாடு சிக்கனம் என்ற வறையறைக்கு உட்பட்டதாகக் கூறுவது இட்டுக்கட்டி கூறுப்படும் கட்டுக்கதையே ஆகும்.
’கட்டியாக தின்ன‌ முடியாவிட்டால்’, என்ற நிலை ஏற்படுகிற போதே, அது ஏன் என்ற கேள்வி மனிதர்களிடையே எழவேண்டும். அதை எப்படி சரி செய்வது என்ற ஆய்வு தொடங்கியிருக்க வேண்டும. ஏன் என்ற கேள்வி மிருகங்க‌ளிடம் எழாதது என்பது அதன் இயல்பு. மனிதர்களிடம் அந்த வினா எழவில்லை என்றால் அம்மனிதர்களிடம் சமூகத்தன்மையை விட மந்தத் தனமே மேலோங்கி இருக்கிறது என்பதையே காட்டுகிறது. இது தான் ’எல்லாம் அவன் செயல்’ என்ற மத சிந்தனா முறையாக இந்திய மக்களிடையே வேரூன்றியுள்ளது. இதுதான் இந்துத்துவப் பண்பாடாகவும் புகழப்படுகிறது.
இதுதான் பார்ப்பன பயங்கரவாத முகாமைச் சேர்ந்த குருமூர்த்தி போன்றவர்கள் குறிப்பிடும் அந்த இந்துப் பண்பாடாகும். இந்த மந்தைத்தனம் மேலோங்கியுள்ள இந்திய மக்களின் பண்பாடுதான் உலகில் உள்ள நாடுகளிலேயே பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்ட நாடாக, இதன் காரணமாக அதன் நேர்விகிதத்தில் சுரண்டப்படும் நாடாக இந்தியா மாற்றப்பட்டிருந்தாலும், ஏதும் நடவாததைப் போன்ற பாவனையுடன் இருக்க இந்நாட்டு மக்களால் முடிகிறது.
இப்போது மட்டுமல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அலெக்சாண்டர் அதன்பின்னர் அலை, அலையாக இந்த நிலப்பரப்பின் மீது படையெடுத்த படையெடுப்பாளர்கள் அத்துனை பேருக்கும் இன்று வரை இந்தியா என்று இன்று அறியப்படும் இந்தப் நிலப்பரப்பு கொள்ளையிடுவதற்கான சாதகமான களமாக திகழ்கிறது என்றால் அதற்கு இந்த சமூகத்தன்மை குறைவான இந்நாட்டு மக்களின் சிந்தனாமுறையும் அதற்கான அடித்தளமும் உள்ளதே காரணமாகும்.
எனவே தற்போது ஏற்பட்டுள்ள ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மட்டுமல்ல, இந்நாட்டில் நிலவும் அத்துனை இழிவுகளையும், சீர்கேடுகளையும் களைவதற்கான முதன்மையான தேவை சமூகத்தன்மையை உயர்த்துவதே ஆகும்.
இந்த சமூகத்தன்மையின் வளர்ச்சியும், மேம்பாடுமே நாடு, நாட்டுப்பற்று, தேசம், தேசிய நலன், தேசியப் பொருளாதாரம் ஆகியவற்றுக்கான தேவையை உணர்த்தும். இப்படியான வளர்ச்சி நாட்டின் நலன் என்ற அடிப்படையிலான தீர்வுகளை அரசுகள் முன்வைக்க முன்நிபந்தனையாகும்.
நிர்பந்தமாயினும், தற்காலிகமானதாயினும், உறுதியற்றதாயினும் கூட இந்த விவகாரத்தில் தேச நலன் என்ற அடிப்படையிலான அரசின் தலையீடுதான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தற்காலிகமாக தடுத்து நிறுத்துகிறது.
இது நமக்கு உணர்த்துவது இவைகள் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பதைத்தான். அதாவது தேசியப் பொருளாதாரம் கட்டியெழுப்பட வேண்டும் என்பதை உறுதியாக நமக்கு உணர்த்தியுள்ளது.
மொத்தத்தில் தேசியப் பொருளாதாரத்திற்கும் அதன் நலன்களுக்கும் எதிரான உலகமயமாக்கலுக்கு எதிரான செயல்பாடுகள் உடனடியாகவே துவக்கப்பட வேண்டும்.
உலகப் பொருளாதார மந்தநிலை இந்தியாவிற்கு மட்டுமல்ல அனைத்து நாடுகளையுமே பாதிக்கக் கூடிய ஒன்றாகும்.
அமெரிக்க மத்திய வங்கி மாதத்திற்கு 8500 கோடி டாலர் அளவுக்கு பத்திரங்கள் வாங்கும் தனது திட்ட அளைவை வெகுவிரைவில் குறைக்கப் போவதாக அமெரிக்க கூட்டரசு வங்கித் தலைவரின் மே 22 அன்றைய அறிவிப்புதான் இந்தியா மற்றும் உலகமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்தும் நாடுகளை அதிலும் குறிப்பாக பிரேசில், இந்தோனேசியா ஆகிய நாடுகளின் நாணய மதிப்பையும் வீழ்ச்சி அடைவதற்கான முதல் தூண்டுதலாக அமைந்தது. அதனோடு நாணய மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ள இந்தியா, பிரேசில், இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் முற்றாக பன்னாட்டு நிறுவனங்களையே சார்ந்துள்ளன என்பதையும் காட்டிவிட்டது.
அமெரிக்க வங்கித் தலைவரின் அறிவிப்பு வெளிநாடுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களிடம் தமது முதலீட்டுக்கு உரிய லாபம் இல்லாமல், அவைகள் தமக்கு இழப்பை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்திவிட்டது. இதன்காரணமாக அவர்கள் தங்கள் முதலீடுகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகளில் இறங்கி இந்தியாவில் தாங்கள் முதலீடு செய்த 1100 கோடி டாலர்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். இதனால் இந்தியாவின் டாலர் மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது. டாலருக்கான தேவை அதிகரிப்பு அதன் மதிப்பை செயற்கையாக சந்தையில் உயர்த்தி ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைய வைத்தது.
இந்த விளைவுகளை எதிர்பார்த்தே அமெரிக்க மத்திய வங்கி, பத்திரங்கள் மீதான தனது முதலீட்டை குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டது. இது நன்கு திட்டமிட்ட அமெரிக்காவின் அறிவிப்பாகும்.
ஆனால் அமெரிக்காவின் இந்த அக்கிரமமான நடவடிக்கையைப் பற்றி இந்தியாவிலுள்ள எந்த ஒரு அரசியல் கட்சிகளும், பொருளாதார நிபுணர்களும் வாய்திறப்பதே இல்லை.
மாறாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான காரணத்தையும் அதற்கான தீர்வையும் கூட தனிநபர்களின் திறமை மீதே ஏற்றி வைக்கின்றனர்.
இதன்மூலம் அமெரிக்காவும், அதன் தலைமையிலான உலகமயமாக்கல் கொள்கையும் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட எல்லாம் வல்ல இறைவனின் இடத்திற்கு உயர்த்தப்படுகின்றன. இதன் வாயிலாக இதை சரி செய்வதற்கான பாதையும் ஏதுமில்லை என்று சாராம்சமாக அறிவிக்கின்றனர்.
ஆனால் அமெரிக்காவின் திட்டமிட்ட நடவடிக்கைகளால் வளரும் நாடுகள் மட்டுமல்ல உலகப் பொருளாதார வல்லரசுகளில் ஒன்றான ஜப்பான் மற்றும் அமெரிக்காவையே இன்று மிரளவைக்கும் சீனா ஆகிய நாடுகளின் நாணய மதிப்பையும் நெருக்கடிக்கு தள்ளிவிட்டன.
இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு இவ்விரு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அவற்றில் இவ்விரு நாடுகளும் தமக்கிடையிலான வர்த்தகத்தை அமெரிக்க டாலரில் அல்லாது தமது சொந்த நாணயங்களின் மூலம் செய்து கொண்டன. இதன் மூலம் டாலருக்கான தேவையை குறைத்துக் கொண்டு தமது நாணய மதிப்பை நிலைநிறுத்திக் கொண்டன. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை திக்குமுக்காட வைத்தது.
ஆனால் இப்படியொரு எதிர் நடவடிக்கையை எடுக்க வேண்டுமானால் அதற்கு தேசியப் பொருளாதாரம் என்பது முன் நிபந்தனையாகும். தேசியப் பொருளாதார அடித்தளமில்லாத அல்லது பலவீனமான அடித்தளத்தை கொண்ட நாடுகளால் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது. இந்தப் பொருளாதார அடித்தளம் இருந்தால் மட்டுமே அமெரிக்காவிற்கு எதிராக எதிர்வினையாற்றும் ஆற்றலையும், துணிவையும் ஆட்சியாளர்களுக்கு வழங்கும்.
அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளாக ஐரோப்பிய நாடுகள் விளங்கினாலும், அவைகள் தமது நாடுகளின் நலனைப் பாதுகாப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தையும், தமக்கிடையே பொது நாணய முறையையும் ஏற்படுத்திக் கொண்டு அமெரிக்க கொள்ளையனிடமிருந்து தற்காத்துக் கொள்ள தகுந்த பாதுகாப்பு அரணை அமைத்துக் கொண்டன.
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்ற கனவிலும் கூட நினைக்க முடியாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் அடித்தளமற்றதாக (அ) பலவீனமானதாக உள்ளது என்பதைத்தான் இந்திய ஆட்சியாளர்களின் செயல்பாடுகளும், அறிவிப்புகளும் காட்டுகின்றன.
பத்திரங்கள் மீதான முதலீட்டை குறைப்பதான அறிவிப்பு அமெரிக்க ஆட்சியாளர்களால் எந்த நோக்கத்திற்காக செய்யப்பட்டதோ அந்த நோக்கத்தை, "சீர்திருத்தங்கள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும், இதன் மூலமே வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியா மீது நம்பிக்கை ஏற்படும்" என்ற மன்மோகன் சிங் அறிவிப்பாக தீர்வாக வெளிப்படுகிறது.
எனவே இப்போதைய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இந்திய அமெரிக்க ஆட்சியாளர்களின் கூட்டுச்சதியே ஆகும். இந்த சதியை முறியடிப்பதற்கான ஆற்றல் தேசியப் பொருளாதாரத்திலும், தேசியப் பொருளாதாரம் உருவாக்கப்படுவதற்கான ஆற்றல் நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாங்கும் திறனிலும், பெரும்பான்மை மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பிற்கான ஆற்றல் விவசாயம் லாபகரமாக்கப்படுவதிலும், விவசாயம் லாபகரமானதாக ஆக்கப்படுவதற்கான ஆற்றல் சமூக சிந்தனா முறையின் உயர்வு, அதன் அடிப்படையிலான மக்களிடையேயான கூட்டுத்துவ சிந்தனாமுறை, செயல்பாடுகளிலும் பொதிந்து கிடக்கிறது.
இந்த சுற்றுவட்ட பாதை செயல்பாடுகளில் பயணிப்பதே இவைகளை தீர்ப்பதற்கான சிறந்த வழிமுறையாகும்

Sunday, 11 August 2013

மே 17 இயக்கத்தின் இயலாமையைப் பழிக்கும் வினவின் 'வீராவேசம்'!

இளவரசன் மரணத்தையடுத்து அவருக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக பல்வேறு இயக்கத்தினர் தமிழகம் எங்கும் சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.அந்த வரிசையில் மே-17 இயக்கமும் சுவரொட்டி ஒட்டியது.மகஇக குழுமமும் சுவரொட்டி ஒட்டியது.

இப்படி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் மிகச்சிறந்தது எது என்ற அதிமுக்கிய விவாதத்தை,தமிழ்ச்சமூகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும், ஏன் அதற்கு மேலும் பார்ப்பனியம் உயிர்வாழும் நேபாளம்,இலங்கை உட்பட அனைத்து சமூகங்களுக்கும் அவசியமான விவாதத்தை மக இக குழுமத்தின் வினவு இணையதளம் துவக்கி வைத்திருக்கிறது.

இளவரசன் – திவ்யா தம்பதியினர் பிரிக்கப்பட்டு , இளவரசனும் மரணத்தை தழுவிய பிறகு இந்த விவாதத்தை துவக்கிய வினவு அதற்கு முன்பே அவர்களை எப்படிக்காப்பது, வாழவைப்பது என்பதை பற்றிய விவாதத்தை துவக்கியிருந்தால் போட்டியிட்டிருந்தால் சாதிமறுப்பு தம்பதிகளை காப்பாற்றி இருக்க முடியும்.

அப்படி செய்திருந்தால் அதை ஆலோசனைகளாக மட்டுமல்லாது ,அந்த ஆலோசனைகளை நடைமுறையோடு இணைக்கவும் பாடுபட வேண்டிய தேவை தவிர்க்கவியலாத ஒன்றாக ஆகியிருக்கும்.

எல்லாம் முடிந்த பிறகு யார்வைக்கும் ஒப்பாரி சிறந்தது என்ற பட்டிமன்றத்தை காரசாரமாக துவக்கியிருக்கிறது வினவு.

இளவரசன் தம்பதியை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியில் தாங்கள் சுயவிமர்சனத்தோடு சுவரொட்டி முழக்கத்தை எழுதியுள்ளதாக மே-17 இயக்கம் கூறுவதில் நிச்சயம் ஒரு நேர்மை இருக்கிறது.

அதே நேரத்தில் மக இக கூறுவதைப் போன்று இளவரசனை போன்றே மே-17 இயக்கமும் பாமகவை கண்டு அச்சம் அடைந்தது உண்மையோ,இல்லையோ சாதி வெறியர்களை வெல்ல முடியாது என்று இளவரசன் மட்டுமல்ல மே-17 இயக்கமும் விரக்தியடைந்ததுள்ளது  என்பதுதான் உண்மை.

இப்படி விரக்தியடைந்ததின் வெளிப்பாடுதான் மே-17 இயக்கத்தின் சுவரொட்டி முழக்கங்கள்.இந்த விரக்தி மனப்பான்மை மே-17 இயக்கத்தின் தனித்தன்மையோ,பலவீனமோ மட்டுமல்ல! அதுதான் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சமூக உணர்வுள்ள இயக்கங்களின் நிலையுமாகும்.

இப்படி விரக்தியடைவதின் வெளிப்பாட்டு அளவு ஒவ்வொரு தனிநபரிடமும், இயக்கங்களிடமும் வேறுபடலாம்.ஆனால் இது பொதுத்தன்மையாகும். மகஇக குழுமம் தங்களுக்கு அப்படியொரு உணர்ச்சியே எழவில்லை,எழாது என்று உறுதியாக வாதிடுகிறது.
சாதிய விவகாரங்களில் மட்டுமல்ல வேறு எந்த ஒரு விவகாரத்திலும் ஒருத்தனிநபரோ,இயக்கமோ விரக்தி மனப்பான்மைக்கு உள்ளாகவில்லை என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும்.

·           குறிப்பிட்ட விவகாரத்தின் ஆதரவாளராகவும் அதன் மூலம் அவர்கள் ஆதாயமடையக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.

அல்லது

·          குறிப்பிட்ட அந்த விவகாரத்தைப் பற்றிய ஞானமும் அதை சரிசெய்வதற்கான தீர்வையும் உடையவர்களாக இருக்க வேண்டும்.

மேலே உள்ளவற்றில் மகஇக குழுமம் எந்தக் காரணத்தினால் விரக்தி நிலைக்கு செல்லவில்லை என்பதைப்பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.அப்போதுதான் நேர்மறையான அல்லது எதிர்மறையான படிப்பினையை அதிலிருந்து நாம் பெறமுடியும்.

”இந்துக்களிடம் இந்து மதவெறியையும்,இஸ்லாமியர்களிடத்தில் இசுலாமிய மதவெறியையும் ,வன்னியர்களிடத்தில் வன்னிய சாதிவெறியையும் , தலித் மக்களிடம் பிழைப்புவாத தலித் அரசியல் கட்சிகளையும் கண்டித்து பேசுகிறோம்.இதில் எங்களுக்கு அச்சமில்லை என்பதோடு அந்த பிரிவு மக்களை மெல்ல,மெல்ல உணர வைத்து இறுதியில் வர்க்க உணர்வுக்கு கொண்டு வருகிறோம்.மேலும் மதஉணர்வு,சாதி உணர்வு அனைத்தும் அந்தந்த மக்களுக்கும் சேர்ந்தே பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை தொடர் போராட்டத்தின் மூலம் புரியவைக்கிறோம்”

இது மகஇக குழும அமைப்பான வினவின் கட்டுரையில் அவர்கள் எழுதியுள்ள வாசகங்களாகும்.

மேலே கண்ட நிலைப்பாட்டின் மூலம் சாதியம் பற்றிய முரண்பாட்டை கையாள்வதில்,அதை முறியடிப்பதில் தாங்கள் மிகச்சிறந்த ஞானத்தையும் மிகத் துள்ளியமான வழிமுறைகளையும் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளார்கள்.இதன் மூலம் தாங்கள் சாதித்தவற்றை பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுவதாக சொக்குப்படியும் போட்டுள்ளார்கள்!

இதன் மூலம் அந்தச்சாதனையைப் பற்றி கூறுங்கள் என்று நாம் கேட்டுவிடாமல்  நமது வாயை அடைத்துவிட்டார்கள்!
மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பார்ப்பனியத்தை எதிர்த்து அனைவரும் தோற்றுப் போயுள்ளனர் அல்லது அதனுடன் ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்து கொண்டுள்ளனர்.

கடந்த ஒரு நூற்றாண்டாக இந்திய கம்யுனிச இயக்கங்கள் சாதிய முரண்பாட்டை தீர்க்க முடியாததால் மக்களிடையே வர்க்க உணர்வை ஏற்படுத்த முடியாமல் தோல்வி கண்டுள்ளனர்.

சாருவாகனர்கள்,புத்தர்,மகாவீரர்,சித்தர்கள்,களப்பிரர்கள்,அம்பேத்கார்,பூலே,பெரியார் ஆகியோர் சாதிக்க முடியாததை மகஇக குழுமம் சாதித்திருக்கிறது என்றால் நோய்நாடி நோய் முதல் நாடி என்பது போல சாதியத்தின் மூலத்தைப் பற்றிய நிபுணார்களாகத்தான் அவர்கள் இருக்க வேண்டும். அப்படியானால் இதுவே இந்திய வரலாற்றில் தலையாய சாதனையாகவும் இருக்க முடியும்.

இந்த வரலாற்றுச் சாதனையை பற்றி இவ்வளவு காலம் மகஇக குழுமம் மௌனம் சாதித்தாலும் இப்போதாவது அதைப்பற்றி 

வெளியில் சொல்லப் போவதாக அறிவித்திருப்பது நமது பெரும் பாக்கியமாகும்!

அண்மையில் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் ”இந்து மதம் இத்தனை ஆயிரம் ஆண்டு காலம் நிலைத்து நிற்கிறது என்றால் அதற்கு ஏதோ ஒரு சக்தி இருக்கிறது”, என்று அருள்வாக்கு தந்துள்ளார்.ஆனால் அது என்ன என்று கூறவில்லை.

மகஇக குழுமம் கடந்த 35 ஆண்டுகளாக தமிழகத்தில் நீடித்து, நிலைத்து இருக்கிறது என்றால் அதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது.அந்த ஏதோ ஒன்று என்னவென்று எவருக்கும் புரியவில்லை.இந்தப்புதிருக்கான விடை ஒரு வேளை அவர்கள் எழுதப்போகும் சாதனைப்பட்டியலில் ஒளிந்து கொண்டிருக்கலாம்.அனைவரும் தமது ஐம்புலன்களையும் ஓருமுகப்படுத்தி வைத்துக்கொண்டிருங்கள். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதாக அவர்கள் அருளப்போகும் அருளாசியை தவறவிட்டுவிடாதீர்கள்!

அப்படி அவர்கள் எழுதப்போகும் சாதனைப்பட்டியலில் எமக்குத்தெரிந்த ஒன்றிரண்டு நிகழ்வுகளை உங்களுக்கு முன்கூட்டியே தருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

·          தில்லை நடராசர் ஆலயத்தில் தமிழில் தேவாரம்,திருவாசகத்தை பாடக்கூடாது என்று பல நூற்றாண்டுகளாக தீட்சித பார்ப்பனர்கள் தடுத்து வந்ததை பெரியார் அவர்களுக்கு பின்னர் அதிகாரத்திற்கு வந்த எந்த திராவிட கட்சியின் ஆட்சிகளால் கூட தடுக்க இயலவில்லை.

இந்த அநீதிக்கு எதிராக தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக மகஇக குழுமம் போராடி வெற்றி பெற்றது.

தமிழில் தேவாரம் ,திருவாசகத்தை ஆறுமுகசாமி என்ற சிவனடியாரை பாடவைத்து சாதனைப்படைத்தது.

இந்தப் போராட்டத்தில் பாமக,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரையும் தன்னோடு இணைத்துக்கொண்டு இந்தச் சாதனையை செய்து காட்டியது.இதனோடு கருணாநிதி தலைமையிலான ஆட்சியையும்,நீதிமன்றத்தையும் கூட மிகவும் லாவகமாக பயன்படுத்திக்கொண்டது.

இந்த எட்டு ஆண்டுகால போராட்டத்தில் மகஇக குழுமம் அமைப்பு தமது தோழர்கள் பலரை இப்போராட்டத்தில் முன்னிறுத்தியது. இப்படி முன்னிறுத்தப்பட்ட அனைவரும் பிறப்பால் வன்னிய சாதியை சேர்ந்தவர்கள்.தவறியும் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் எவரையும் முன்னிறுத்தவோ,மேடை ஏற்றவோ இல்லை.

தொடர்ச்சியாக சாதிவெறியை சுட்டிக்காட்டிப் போராடி மெல்ல,மெல்ல மக்களிடையே வர்க்க உணர்வை ஏற்படுத்தி சாதனை புரிந்துள்ள மகஇக குழுமம் தில்லைப் போராட்டத்தை பார்ப்ப்பனியத்திற்கு எதிரான தமிழர்களின் அல்லது உழைக்கும் மக்களின் போராட்டமாக நடத்தாமல்.ஆறுமுகசாமி என்ற சிவனடியார் வன்னியர் என்பதாலும், அவரே இப்போராட்டத்தின் கதாநாயகன் என்பதாலும், அவர் வன்னிய சாதி உணர்வாளார் என்பதாலும், இப்போராட்டத்தை தீட்சித பார்ப்பனர்களுக்கும், வன்னியர்களுக்கும் இடையிலான முரண்பாடாகவே கையாண்டது என்பதற்கான ஆதாரம்தான் பிறப்பால் வன்னிய சாதியினரை மட்டுமே இப்போராட்டத்தில் இவர்கள் முன்னிறுத்திய செயலாகும்.

இது பற்றி அந்த குழும அமைப்பின் ஒருப்பகுதியை சேர்ந்தோர் கேட்டபோது அதை அவர்கள் மறுக்கவில்லை. அதற்கு மாறாக “ஒரு போராட்டத்தில் யாரை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிப்பது அமைப்பு தலைமையின் உரிமையாகும் இதில் யாரும் தலையிட முடியாது ,என்று பதிலளித்தனர்.

·          ஆணோ,பெண்ணோ ஒருவர், மற்றவரை விரும்பலாம், தனது விருப்பத்தை குறிப்பிட்ட நபரிடமும் வெளிப்படுத்த, விரும்புவதும் , விருப்பத்தை வெளிப்படுத்துவதும் ஒருவரின் உரிமை.அதே போல அவ்விருப்பத்தை ஏற்பதும்,நிராகரிப்பதும் கூட மற்றவரின் உரிமை. இவைகளை ஒவ்வொரு தனி மனிதனின் ஜனநாயக உரிமையாக – தனி மனித உரிமையாக நாம் அங்கீகரித்துள்ளோம்.

ஆனால்,தனது விருப்பத்தை மற்றவரிடம் தெரிவிப்பது மட்டும்தான் தனிமனித உரிமை, அதை நிராகரிப்பது,நிராகரிப்பவரின் ’சாதி புத்தி’ என்று பட்டம் சூட்டிய ஒருவரைத்தான் மகஇக குழுமத்தினர் தனது மனித உரிமை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக, மனித உரிமை போராளியாக முன்னிறுத்தியுள்ளது. அந்த மனித உரிமைப் போராளியை பற்றியும் மே-17 இயக்கம் தன்னுடைய கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ளது.

·          இளவரசன் , திவ்யா தம்பதியினரைப் போன்றே சாதிமறுப்பு திருமம் செய்து கொண்ட இருவர் ஒரு கிராமத்தில் தனது நண்பர் வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்தனர்.இதை தெரிந்து கொண்ட பெண் வீட்டாரும்,போலிசும் அந்த பெண்ணை நள்ளிரவில் அடித்து இழுத்துச் சென்றனர். இந்த அக்கிரமச்செயலை அத்தெருவில் உள்ள பொதுமக்களும் , மகஇக குழும அமைப்பைச் சேர்ந்த சிலரும் தடுத்து அப்பெண்ணை காப்பாற்றினர்.மறுநாள் காலையில் அத்தம்பதியினரை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைப்பதாக எழுதித் தந்த பின்னரே அப்பெண் அப்போதைக்கு விடுவிக்கப்பட்டார்.

ஆனால் தாங்கள் காவல்துறைக்கு எழுதித்தந்ததை போன்று நடந்துக் கொள்ளாமல், நேர்மையற்ற வகையில் அவர்களை பாதுகாப்பாக வேறு ஒரு கிராமத்துக்கு கொண்டு சென்றனர் அவ்வூரில் இருந்த மகஇக குழும அமைப்புத் தோழர்கள். இது பற்றி அவர்கள் தமது தலைமையான மகஇக குழும அமைப்பிற்கு தகவல் தந்த போது தலைமை அவர்களுக்கு இட்ட உத்தரவை கேட்டால் அனைவரும் புல்லரித்துப் போவீர்கள்!

“தம்பதிகளைக் காப்பாற்றியதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இதற்கு மேல் நேரடியாக அந்த விவகாரத்தில் ஈடுபடாதீர்கள்.ஆலோசனைக் கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இப்படிப்பட்ட வேலைகளால் நமது அமைப்பு வேலை கெட்டுப்போகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.இனிமேல் இப்படிப் பட்ட சந்தர்ப்பங்களில் எங்களுக்கு தகவல் கொடுங்கள், நாங்கள் கொடுக்கும் ஆலோசனைப் படிதான் நீங்கள் நடக்க வேண்டும்.அமைப்பு வேலை பாதிக்கும் வகையில் நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படக்கூடாது,அப்படி செயல் பட்டால் அது மத்தியத்துவத்தை மீறிய அமைப்பு விரோத செயலாகும்”!

சாதிவெறியை முறியடிப்பதில் இவர்களுக்கு எவ்வளவு அக்கரையுள்ளது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள்!

·          விடுதியில் தங்கி படித்த 13 வயது பாரத் தலித் என்ற மாணவன் விடுதியில் மர்மமான முறையில் இறந்து போனான்.விடுதி காப்பாளரும்,போலிசும் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.பெற்றோரும் ,உறவினர்களும் அது கொலை என்றனர்.இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணர இதில் தலையிடுமாறு மகஇக குழும மனித உரிமை அமைப்பை குழும அமைப்பின் மற்றொரு அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி கோரியது.

இறந்து போன மாணவனும், குற்றம்சாட்டப்படும் விடுதிக் காப்பாளரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். “அது ஒரு சாதிக்குள் நடந்த விவகாரம் அவர்கள் பின்னர் ஒன்றாகி விடுவார்கள். நாம் அதில் தலையிடத் தேவையில்லை”.இதுதான் மனித உரிமைப் போராளிகளின் பதில்! மக்களிடையே சாதி கடந்த வர்க்க உணர்வை சாதித்ததற்கான வழிமுறை இதுதான் போலும்!

மேலே கண்டுள்ள செயல்பாடுகளின் மூலம் அவர்கள் மக்களிடையே சாதி கடந்த வர்க்க உணர்வை உருவாக்கியதை,உருவாக்குவதை பற்றி மிக விரிவாக பிரிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுவார்கள் காத்திருங்கள்..........!

மேலே நாங்கள் கொடுத்துள்ள தகவல்களில் இருந்து மகஇக குழுமம் பார்ப்பனியத்தால் ஆதாயம் அடையும், அதை ஆதரிக்கும் பிரிவினரா அல்லது சாதியத்தை ஒழிப்பதற்கான மிகத்தெளிவான புரிதலையும், அதன் அடிப்படையிலான வழிமுறைகளையும் கொண்டுள்ள அமைப்பா என்பதைப் பற்றி வாசகர்கள் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று நம்புகிறோம்.

பார்ப்ப்பனியத்தை- சாதியத்தை பழைமைவாத பார்ப்பனியத் தலைமைகள் போன்று நடைமுறைப் படுத்தும் ,ஆதாயம் அடையும் பழமைவாதிகளில்லை மகஇக குழுமத்தினர்.காலத்திற்கு ஏற்ப பார்ப்பனியத்தை நடைமுறைப்படுத்துபவர்கள். நால்வருணத் தருமத்தை தமது கட்சியிலும், வெகுசன அரங்குகளிலும் மிகலாவகமாக எவரும் அறிந்து கொள்ளவோ,உணர்ந்து கொள்ளவோ முடியாத வடிவத்தில் நடைமுறைப்படுத்தும் நிபுணர்கள் வர்கள்.

யாரை எந்த வேலையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற தீர்மானிப்பது தலைமையின் உரிமை.இதை பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது.

·          மகஇக என்ற மக்கள் கலை இலக்கியக்கழகம் அமைப்பின் தலைமைக்கு தகுதியானவர் மருதையன்தான்.இவர் பிறப்பால் பார்ப்பனர் என்பதால் அல்ல.அவருக்குத்தான் இயல்பாகவே அந்த அறிவாற்றல் உள்ளது.

·          கீழைக்காற்று வெளியீட்டகத்திற்கு துரைசண்முகம்தான் தலைமை ஏற்க முடியும்.அவர் வைசியர் என்பதால் அல்ல.அவரிடம் தான் இயல்பாகவே வியாபார ஞானம் இருக்கிறது.

அவரவர்க்கு விதிக்கப்பட்ட வேலையைத்தான் அவரவர் செய்ய வேண்டும். அடுத்தவர் வேலையில் தலையிடக்கூடாது.அப்படி செய்வது இந்துமதத்தில் நால்வருண தர்மத்திற்கு எதிரானது.

மகஇக குழுமத்தில் மீறுவதோ,கேள்வி எழுப்புவதோ ஜனநாயக மத்தியத்துவத்திற்கு எதிரானது.

தமக்கு விதிக்கப்பட்ட வேலைக்கு மாறாக, அமைப்புக்கு தெரியாமல் அதை மீறி மகஇக குழும அமைப்பில் சிலர் விவசாயிகளிடம் ஆய்வுசெய்து அந்த ஆய்வறிக்கையை தலைமைக்கு அளித்தனர்.

“கொடுத்த வேலையை செய்ய வக்கில்லை, ஆய்வு பண்றாங்களாம் ஆய்வு”, இதுதான் புரட்சிகர தலைமையின் மறுமொழி.இப்படி ஆய்வு செய்தவர்களின் நடவடிக்கை, மத்தியத்துவத்தை மீறும் அமைப்பு விரோத செயல்.இதற்காக அவர்களுக்கு இவர்கள் வழங்கிய தண்டனை என்ன தெரியுமா? ஒதுக்கி வைத்தல்!

அன்று பார்ப்பனியத்தை ஏற்க மறுத்தவர்களையும்,மீறியவர்களையும் பள்ளு,பறை,சக்கிலி என்று சேரிகளில் ஒதுக்கி வைத்ததார்கள் இவர்கள் அமைப்பிற்குள்ளேயே ஒதுக்கி வைக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் மே-17 இயக்கத்தினரே மகஇக குழுமத்தின் இந்த திறமையும், சாதுரியமும் உங்களுக்கு வருமா? அது இருந்தால் மட்டுமே அவர்களோடு போட்டியிட நீங்கள் தகுதி உள்ளவர்களாவீர்கள்.

அவர்கள் உங்களை மட்டுமல்ல அனைவரையும் எதிர்ப்பதற்கும் , ஒதுக்கி வைப்பதற்கும் காரணமே அவர்களின் அகராதியில் நால்வருண தர்மத்தை நீங்களெல்லாம் மீறுவதே ஆகும்.

முற்போக்கு, புரட்சிகர சக்திகளில் நவீன வர்ணதர்மத்தின் உலகலாவிய தலைமை மகஇக குழும தலைமை மட்டுமே.அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட புரட்சிகர பூசாரி வேலையில் உங்களைப் போன்றோர் தலையிட்ட பின்னரும் அவர்கள் சும்மா இருக்க வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள்!?

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் 69% இடஒதுக்கீட்டால் நாங்கள் எவ்வளவுதான் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் எங்களுக்கு மருத்துவ படிப்பில் இடம்கிடைக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மேல்வர்ணத்தார் மனு செய்தார்கள். இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் 69%  இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் மேல்வர்ணத்தாருக்கு 19% கூடுதல் இடங்களை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதை மே-17 இயக்கத்தினர் அறிந்திருக்க மாட்டார்களா என்ன!

யார் இந்த உரிமையை முற்போக்கு , புரட்சிகர அமைப்புகளுக்கான பூசாரி – தலைமை – பொருப்பை மகஇக குழுமத்திற்கு வழங்கியது!? நாங்கள் இதை ஏற்க மாட்டோம் என்று மே-17 இயக்கத்தை போன்றோர் வாதிடலாம்.

பார்ப்பனர்களுக்கு இந்துமதத்தின் தலைமையை தந்தது யார்?

காஞ்சி மடத்தை போன்று இந்தியா முழுக்க உள்ள மடங்களுக்கு பார்ப்பனர்களை மட்டுமே சங்கராச்சாரிகளாக நியமிப்பது யார்?
உங்களை போன்றோர் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இந்துக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.அவர்கள்தான் இந்தியாவில் பெரும்பான்மை. உங்களால் என்ன செய்ய முடியும்?

மகஇக- குழுமத்தலைமை உங்களைப் போன்றோர் ஏற்றுக்கொண்டால் என்ன, ஏற்றுக்கொள்ளவிட்டால் என்ன?

அவர்களை அவர்களின் அணிகள் ஏற்றுக்கொள்கிறார்கள் தலைமையாக!

இந்து மதம் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்வதற்கு அது ,அதில் உள்ளோரை சாதியாக கூறுபோட்டு, அதை தொடர்ந்து பாதுகாப்பதே காரணமாகும்.

மகஇக குழுமமும் 35 ஆண்டுகளாக உயிர்வாழ்வதற்கு அவர்களின் அணிகளுக்கிடையே ஒற்றுமைக்கான கூறுகள் ஏற்படாத வண்ணம் பாட்டாளி வர்க்க அமைப்பு பெயரிலான விதிகளை கறாராக கடைபிடிப்பதுதான் காரணமாகும்.

கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் மனித சமூகத்தில் எவ்விதமான முன்னேற்றமும், மாற்றமும் ஏற்பட்டாலும் அவைகள் அனைத்தையும் தமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்வதுதான் பார்ப்பனியத்தின் ஆற்றல்.

பாட்டாளி வர்க்க அமைப்பின் ஜனநாயக மத்தியத்துவம், பட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உட்பட அனைத்து கோட்பாடுகளையும், தமது புதிய பார்ப்பனிய வர்ண தர்மத்திற்கு ஏற்ப திரித்து செயல்படுத்துவதுதான் மகஇக குழுமத் தலைமையின் ஆற்றல்.

இந்து மதம் நீடிக்க எது காரணமோ அது , அதுவேதான் மகஇக குழுமமும் நீடித்திருப்பதற்கான காரணமுமாகும்.

பார்ப்பனியத்தில் உள்ளார்ந்த புலமை உள்ளவர்களால் மட்டுமே அதன் நிபுணர்களாக இருக்க முடியும்.அந்த வகையில் மகஇக குழுமம் பார்ப்பனிய நிபுணர்களைக் கொண்ட தலைமையாகும்.

இவர்கள் அதில் வல்லவர்கள் என்பதற்கான ஆதாரம் சிலவற்றைப் பார்ப்போம்.

நால்வருணத்தில் முதல் வருணமான பார்ப்பனர்களுக்கு ஏனைய வர்ணத்தாருக்கு இல்லாத பல்வேறு சிறப்புரிமையை பார்ப்பனியம் வழங்கியுள்ளது.அதில் இந்த பூலோகத்தில் உள்ள எந்த ஒரு பொருள் மீதும் அவர்களுக்கு உரிமை உண்டு. 

தேவைப்படும் போது அதன்மீது அவர்கள் உரிமை கோரமுடியும். எந்த வர்ணத்தாரின் உழைப்பின் மீதும், அதிலும் சூத்திர வர்ணத்தாரின் உழைப்பின் மீது எல்லாவித உரிமையும் பார்ப்பனர்களுக்கு உண்டு என்று மனுதர்மம் கூறுகிறது.

மொத்தத்தில் தான் உழைக்காமலேயே , மற்றவர்களின் உழைப்பில் வாழ்வதைப்பற்றி சிறிதும் அவர்கள் வெட்கப்படுவதில்லை.அதற்கு மாறாக உடல் உழைப்பே இழிவானது என்பதுதான் அவர்களின் உரத்த சிந்தனை!

இதை மகஇக குழுமத்தினர் நவீன வடிவத்தில் செயல்படுத்துகின்றனர்.

·          முத்துக்குமார் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார்.சாராம்சத்தில் முத்துக்குமார் புலி ஆதரவு தரப்பைச் சேர்ந்தவர்.இதன் மூலம் புலிகளின் அரசியல், சித்தாந்த மேலாண்மையால் கவரப்பட்டு அதற்காகவே தன்னுயிரை ஈந்த தியாகி.

ஆனால் மகஇக குழுமமோ புலிகளை பாசிச அமைப்பாகவும்,புலிகளின் தலைவர் பிரபாகரனை ஈழத்து எம்.ஜி.ஆர் ,பாசிச கோமாளி என்றும் இன்றுவரை கூறிவருகிறது.

அந்த பாசிச கோமாளியின் அரசியல்,சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு உயிரிழிந்த முத்துக்குமாரின் சாவை தனது அரசியல் நோக்கத்திற்காக அறுவடை செய்துகொள்ள தேவையான அனைத்து தந்திரங்களையும் கையாண்டனர் மகஇக குழுமத்தினர்.

பார்ப்பனர்கள் எங்கு சென்றாலும் அங்கு தமது மேலாண்மையை நிருவுவதற்கு பல்வேறு தந்திரங்களை கையாளுவார்கள்.

அதில் முதன்மையாக தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்வது.இதற்காக தம்முடைய தனித்த அடையாளங்களை அதாவது பூணூல்,பேச்சு முறை ஆகியவற்றை வெளிப்படுத்துவார்கள்.மற்றவர்களை பேசவிடாமல் சள,சளவென்று வாயடிப்பார்கள். அதே போன்றுதான் மகஇக குழுமம் முத்துகுமாரின் தியாகத்தை அறுவடை செய்து கொள்ள தாம்தான் தமிழகத்திலேயே ஈழத்தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரே அமைப்பு என்பதைப் போன்று காட்டிக்கொள்ள திட்டமிட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தமது அமைப்புக் கொடிகளோடு சென்று முழக்கம்மிட்டு அனைவரும் சோகத்தில் முழ்கியும்,இந்திய,இலங்கை அரசுகள் மீதும் தீராக் கோபம் கொண்டிருந்த தருணத்தை, சூழலை உனார்ச்சியைப் பயன்படுத்திக்கொண்டு தம்மை முதன்மைப்படுத்திக் காட்டிக்கொண்டனர்.

இதன்மூலம் அங்கு யாருடைய தியாகத்தினைலோ, உழைப்பினாலோ திரட்டப்பட்டிருந்த, திரண்டிருந்த ஈழ ஆதரவாளர்களை அபகரித்துக்கொள்ள முயன்றனர். இப்படிச் செய்வது தமது உரிமை என்று தமது அணிகளுக்கு பாடமும் புகட்டுகின்றனர்.

·          கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களைத்திரட்டி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உதயகுமார் தலைமையிலான போராட்டக்குழுவினர் போராடி வருகின்றனர். இப்போராட்டம் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் பேசப்படும் ஒன்றாக மாறியது.இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் எழுந்த மிகச்சிறப்பான போராட்டம் இதுவே ஆகும்.

இப்போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக கூடங்குளம் பகுதி மக்களிடம் உருவாக்கப்பட்டுள்ள எழுச்சியில் மகஇக குழுமத்திற்கு எள் முனையளவு பங்கு கூட கிடையாது.ஆனால் அந்தப் போராட்டக் களத்தில் திடீரென நுழைந்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு உதயகுமார் தலைமையிலான போராட்டக்குழுவிடம் இருந்து தலைமையைக் கைப்பற்ற இக்கும்பல் மிகத்தீவிரமான திட்டத்துடன் சென்று முயற்சி செய்தது. ஆனால் இது எதையும் அப்பகுதி மக்களோ, போராட்டக்குழுவோ கண்டு கொள்ளாததால் இறுதியில் ச்சீ,ச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்று வந்த வழியே திரும்பிவிட்டது.

மேற்கண்ட இரண்டு சம்பவங்களும் இக்கும்பலின் பார்ப்பனிய குணாம்சத்தை அம்பலப்படுத்தும் உதாரணங்களாகும்.

உழைக்காமலேயே வாய்வீச்சின் மூலம் மட்டுமே அனைவரையும் பழித்து, அதன்மூலம் ஏனைய இயக்கங்களின் உறுப்பினர்கள், அதரவாளர்களை வென்றெடுத்துவிட முடியும் என்று முப்பத்து ஐந்து ஆண்டுகளாக கனவு காண்கிறது இக்கும்பல்.இந்த அடிப்படையில் மே-17 இயக்கத்தையும் வம்புக்கு இழுத்திருக்கிறது. இளவரசன் சாதிமறுப்பு திருமண விவகாரத்தில் எவ்வித உழைப்பை செலுத்தாமலேயே வாயிருக்கிறது என்பதற்காக ஓங்கி ஊளையிடுகிறது.பேனா இருக்கிறது என்பதற்காக ஒன்றுக்கும் ஆகாதவற்றை அள்ளித் தெளிக்கிறது.

ஆலோசனை கொடுப்பது மட்டுமே தன்னுடைய வேலையாக கருதும் இக்கும்பல் ஏரி மதகு நொண்டித்திருடன் என்பதை நெருங்கிப் பார்த்தவர்களுக்கு மட்டுமே நன்றாகத் தெரியும்.அது தெரியாதவர்கள்தான் ஏரிப்பக்கம் போவதையே தவிர்த்து விடுகிறார்கள்.

“ ஒரு மனிதனின் அறவிழுமியங்கள் வேறு,வேறு பிரச்சனைகளுக்கு வேறு மாதிரி இருக்காது”,  என்று மகஇக குழுமம் கூறுவது உண்மைதான்.இது மற்றவர்களுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் பொருந்தக்கூடியதுதான்.ஆனால் அது தனக்கு பொருந்தாது என்பதுதான் இவர்களின் அறக்கோட்பாடு!

நால்வருண அறவிழுமியங்களே இவர்களின் செயல்பாட்டுக்கான ஆதாரமாக அடிப்படையாக இருக்கிறது.
அதனால்தான் உழைக்காமலேயே மற்றவர் உழைப்பை சுரண்டத்துடிக்கிறது இக்கும்பல்.

பார்ப்பனியத்திற்கு எதிராக குலமரபை இக்கும்பல் முன்னிறுத்துகிறது.குல தெய்வ வழிபாட்டை உயர்த்திப் பிடிக்கிறது.
ஆரிய வருகைக்கு முன்பே பூர்வகுடி மக்களிடமிருந்த பண்பாடான குலமரபுகளை பார்ப்பனியத்திற்கு மாற்றாக உயர்த்தி பிடிக்கிறார்கள் இவர்கள்.

அதாவது புலிக்கு பயந்து புற்றுக்குள் கையை விடுங்கள் என்கிறார்கள்.

இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் தாங்கள் வரும் போதே பூர்வகுடி மக்களை ஒடுக்குவதற்கு தயாராக பார்ப்பனிய – சாதிய – கோட்பாட்டை இங்கு கொண்டு வரவில்லை.பூர்வகுடி குலக்குழு மக்களிடையே நிலவிய குல மரபுகள் , பகை ஆகியவற்றின் விளை பொருளான ஒற்றுமையின்மையை ஆதாரமாக , அடிப்படையாக கொண்டுதான் அவற்றை நிரந்தரப்படுத்தும் பார்ப்பனியத்தை- சாதியத்தை – வளர்த்தெடுத்தனர்.

அதாவது பார்ப்பனியத்திற்கான மூலமான குலமரபு காட்டுமிராண்டித்தனங்கள்தான் பார்ப்பனியத்திற்கு மாற்றாம்!
இந்த குலமரபு அறவிழுமியங்கள்தான், தாய்வழிச் சமூக காட்டுமிராண்டித்தனமான சகோதர முறை திருமணங்களை மகஇக குழுமத்தினரை ஆதரிக்க வைக்கிறது. சகோதர முறைத்திருமண உறவை எதிர்ப்போரை ஜனநாயக விரோதிகள் என்றும் பேச வைக்கிறது.

இந்த காட்டுமிராண்டி அறவிழுமியங்கள்தான் அடுத்தவர் உழைப்பை , பொருளை கொள்ளையடிப்பதையும் நியாயம் என்று இவர்களை சிந்திக்கவும் தூண்டுகிறது.

இளவரசன் சாவை ஒட்டி மே-17 இயக்கத்தின் சுவரொட்டி முழக்கங்கள் பார்ப்பனியத்திற்கு எதிரான அதன் கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தும் முழக்கங்கல்தான்.

ஆனால் மே-17 க்கு எதிராக கிளம்பியுள்ள மகஇக குழுமத்தினரோ பார்ப்பனியத்தை –சாதியத்தை –தமது பிழைப்பிற்காக உயர்த்திப் பிடிக்கும் ,பாதுகாக்கும் கருங்காலிகள்!

கருங்காலித்தனத்தோடு ஒப்பிடும் போது கையாலாகாத்தனம் பெரும் குற்றமல்ல!


தொடர்புடைய கட்டுரைகள்:


 1.  காயடிக்கும் கட்சி 
                      





 















11. சகோதர முறை திருமணங்கள் : தனி மனித உரிமையா? பாலியல் சீரழிவா?

 

12. அக்காவையும், தங்கச்சியையும் கட்டிக்கலாங்கிற, மகஇக காரன பார்த்தா கேளுங்க..