விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label பெரியாறு. Show all posts
Showing posts with label பெரியாறு. Show all posts

Saturday, 10 December 2011

முல்லைப் பெரியாறு:பொருளாதார முற்றுகையே தீர்வு!

தமக்கு அன்றாட உணவுப்பொருட்களை ஏற்றிவரும் தமிழக சரக்கு வாகனங்களையும், இதர வாகனங்களையும், தமிழர்களையும் கேரள ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகள், தமது ஆதாயத்திற்காக தூண்டிவரும், மலையாள இனவெறிக்கு அடிமையாகி தாக்கும் கேரள மக்களின் செயல் தற்கொலைக்கு சமமானது என்பதை சென்றத் தொடரில் எழுதியிருந்தோம். 

தமிழக வாகனங்களை, தமிழர்களை தாக்குபவர்கள் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணைகட்ட கோருபவர்கள் மலையாளிகள் மட்டுமல்ல, முல்லைப் பெரியாறு அணைக்கு கீழ்ப்பகுதியில் உள்ள இடுக்கி மாவட்டம் உட்பட முன்று மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள தமிழர்களும்தான்! எனவே இந்த விவகாரம் இனவெறி ஊட்டப்பட்டதென்று கூறமுடியாது என்று தமிழகத்திலும் சிலர் வாதிடுகின்றனர்.

எமது சென்றக் கட்டுரையில் கேரளம், தமிழகத்திற்கு தண்ணீர் தரமறுப்பதால், அதற்கு எவ்வித நன்மையும் இல்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம். இது முழுக்க, முழுக்க கேரள ஓட்டு சீட்டு அரசியல் கட்சிகள், கேரள மக்களிடைய செல்வாக்குப் பெறவே அடவடித்தனமாக எழுப்பி வருகிறார்கள் என்பதையும் நிரூபித்திருந்தோம்.





கேரள ஓட்டு சீட்டு கட்சிகள் தமது அரசியல் ஆதாயத்திற்காக, பொய்யான பிரச்சாரத்தை மக்களிடையே பரப்பி, பீதியூட்டி வருகின்றனர். இந்த பிரச்சாரம் நியாயமான கோரிக்கையிலிருந்து அல்லாமல் மலையாள இனவெறியை அடிப்படையாகக் கொண்டது. இந்த மலையாள இனவெறி பிரச்சாரத்திற்குத்தான், கேரளத்தில் உள்ள தமிழர்களும்  பலியாகி, தமிழக நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இப்படி செயல்படுபவர்கள் தமிழர்களாயினும், அவர்களின் போராட்டத்தின் உள்ளடக்கமும் மலையாள இனவெறிதான்.
கேரளத்தில் உள்ள தமிழர்கள் மலையாள இனவெறியர்களின் பொய்பிரச்சாரத்திற்கு இருவகையில் ஆட்பட்டுள்ளனர்.

1.அணை உடைந்தால் அதனால் தாங்கள் உயிரிழக்க நேரிடும் என்ற அச்ச உணர்வு!

2.கேரளாவில் உள்ள பெரும்பான்மை மக்களோடு தாங்கள் இணைந்து செல்லாவிட்டால், இங்கு தமக்கு பாதுகாப்பு இருக்காது என்ற அச்ச உணர்வு!

மேற்கண்ட இரண்டு காரணங்களுமே கேரளத்தில் வாழும் தமிழர்களை, மலையாள இனவெறிக்கு அடிபணிந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும்.

இப்படி பெரும்பான்மையினரின் இனவெறிக்கு சிறுபான்மையாக உள்ளவர்கள் அடிபணிந்து செல்வது ஒன்றும் அதிசயமான விடயமல்ல. இதே அனுபவம்    மராட்டியத்தில் உள்ள தமிழர்களுக்கும் உண்டு.

சிவசேனாவின் மராட்டிய இனவெறிக்கு ஆரம்ப காலங்களில் பலியானவர்கள்தான் தமிழர்கள். இப்போது சிவசேனை குண்டர்கள் தமிழர்களை தாக்குவதில்லை. இதற்கு மாறாக இவர்களின் பார்வை இந்தி பேசும் வடமாநில மக்கள் மீது திரும்பியுள்ளது. இப்படி தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மராட்டிய இனவெறியர்கள் மட்டுமல்ல, மராட்டிய வாழ் தமிழர்களும்தான்.
வட இந்திய மக்களை மராட்டியத்தில் வாழும் தமிழர்கள் தாக்குவது, தமிழ் இனவெறியினால் அல்ல. இந்த தமிழர்கள் மராட்டிய இனவெறிக்கு அடிபணிந்து சிவசேனாவின் அடியாளாக செயல்படுகின்றனர். இப்படி இவர்கள் மாறியதற்கான அடிப்படை மராட்டிய இனவெறியர்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்குத்தான்.

எனவே ஒரு செயலை செய்பவர்கள் யார் என்பதை விட, அவர்கள் எதை, எந்த அடிப்படையில் செய்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது. இதன் அடிப்படையில் தமிழக வாகனங்களையும், தமிழக மக்களையும் தாக்குபவர்கள், முல்லை பெரியாறு அணையை இடிக்கச் சொல்பவர்கள், அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் அவர்களின் செயலின் உள்ளடக்கமும் மலையாள இனவெறிதான்.

இந்த மலையாள இனவெறியின் மூலம் கேரள ஒட்டு சீட்டு அரசியல் கட்சிகள் கேரள மக்களிடையே செல்வாக்கு பெற முயலுகின்றன. இது கேரளத்தில் மட்டுமல்ல இந்தியாவின் எந்த பகுதியில் இனவெறி தூண்டப்பட்டாலும், அப்படி செய்பவர்கள் தமது இனத்தின், மாநிலத்தின் நலனுக்காகவே இதை செய்வதாக மக்களிடையே தமது செயலுக்கு நியாயம் கற்பித்துக்கொள்கின்றனர்!

ஆனால் உண்மையில் குறிப்பிட்ட மாநிலத்திற்கோ, மக்களுக்கோ இதனால் எவ்வித நன்மையும் இல்லை. இதற்கு மாறாக இழப்பைத்தான் பரிசாகப் மக்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
இப்படி இனவெறியை தூண்டுபவர்கள் தமது செயலுக்காக கூலியை மட்டுமே பெறுகிறார்கள். உண்மையில் இதனால் ஆதாயம் அடைபவர்கள் இந்திய தேசியவாதிகள்தான்.

இந்தியா என்பது ஒரே தேசம். இங்கு வாழ்பவர்கள் அனைவரும் இந்தியர்கள். இவர்கள் எந்த மாநிலத்தை, மொழியை சேர்ந்தவர்களாக,கொண்டவர்களாக இருந்தாலும் இவர்கள் அனைவரின் தேசிய அடையாளம் இந்துத்துவ-பார்ப்பனிய- பண்பாடு என்பதுதான் இந்திய தேசியத்தின் அடிப்படையாகும்.

இந்த இந்திய-இந்து-தேசியவாதிகள் ஒரு குறிப்பிட்ட இனம், மொழியை சேர்ந்தவர்கள் இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்தவர்கள். இவர்களால் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இன மக்களும் சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்

எனவே இந்தியா என்பது தேசிய இனங்களின் சிறைக்கூடம்தான். இந்த சிறைக்கூடத்தில் ஒடுக்கப்படுபவர்கள்,இந்தியை தாய் மொழியாக கொள்ளாதவர்கள் மட்டுமல்ல,இந்தி பேசும் மக்களும்தான்!

இந்தியை தாய் மொழியாகக் கொள்ளாத மக்களையும்,இந்தியை தேசிய மொழியாக ஏற்க நிர்ப்பந்திக்கும், இந்திய ஆட்சியாளர்களின் செயல்,இந்தியை தாய் மொழியாக கொண்ட இந்தி மொழி பேசும் மக்கள், இந்தியை தாய் மொழியாக கொள்ளாத மக்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதைப் போன்ற ஒரு தோற்றத்தை, இந்தி பேசாத மக்களிடையே தோற்றுவித்துள்ளனர்.ஆனால் இந்திய தேசியவாதிகளால், இந்தி பேசாத தேசிய இனங்கள் மீது திணிக்கப்படும் இந்தி, உண்மையில் வட இந்திய மக்களின் பாரம்பரிய இந்தி மொழியல்ல,பார்ப்பனிய சமஸ்கிருதத்தால் கற்பழிக்கப்பட்ட ஒரு மொழியேயாகும்.
இதன் மூலம்  பாரம்பரிய இந்தியை தாய்மொழியாகக் கொண்ட வட இந்திய மக்களின் மொழி,பண்பாடு,கலாச்சாரம் ஆகியவை சிதைக்கப்பட்டுதான் உள்ளது.

இதே போன்று பார்ப்பன சமஸ்கிருத ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்ட ஒரு மொழிதான் மலையாளம்.

பார்ப்பன சமஸ்கிருத மொழியையும்,பார்ப்பன ஆதிக்கத்தையும் இன்று மட்டுமல்ல 2000 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்த்து போராடி வரும் ஒரே தேசிய இனம் தமிழினம் மட்டுமே!
மேற்கண்ட காரணத்தினாலேயே இந்திய தேசியவாதிகள் மட்டுமல்ல,பார்ப்பன,சமஸ்கிருதத்திற்கும், பொய்மையான இந்திய தேசியத்திற்கும் அடிமையாகிப்போன மலையாளிகள் உட்பட பலரும் தமிழ் மக்களை தமது எதிரியாகத்தான் பார்த்துவருகின்றனர்.முல்லை பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழர்களுக்கு எதிரான கேரளத்தவரின் செயலுக்கு உள்ளேயும், இந்த விரோத மனப்பான்மைத்தான் மேலோங்கி நிற்கிறது.

உண்மை இவ்வாறு இருக்க, இதற்கு அடிப்படையான இந்திய பெருமுதலாளிகள்,இவர்களின் பிரதிநிதிகளான ஆட்சியாளர்கள்,அகில இந்திய ஓட்டுக்கட்சிகள் ஆகியவர்களுக்கு எதிராக மக்கள் சிந்திக்கவும்,செயல்படவும் முடியாமல், இவர்களின் தேசியம்’ என்ற பொய்மைக்கு அடிமையாகிப்போன திராவிட கட்சிகள், இந்தி பேசும் மக்கள் மீதுதான் வெறுப்பை உருவாக்கும் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.அதே நேரத்தில் இந்திய தேசிய வாதிகளுடன்,கூட்டுசேர்ந்துகொண்டு தமிழ்நாட்டின், தமிழ் மக்களின் நலன்களை, உரிமைகளை அடகுவைத்து சுகபோக வாழ்வு வாழுகின்றனர்.

எனவே,காவிரி,பாலாறு,முல்லைபெரியாறு ஆகியவற்றில் தமிழகத்திற்குள்ள பாரம்பரிய,சட்டபூர்வ உரிமைகள் மறுக்கப்படும் அநீதிக்கு, அடிப்படையான காரணகர்த்தாக்களே இந்திய தேசியவாதிகள்தான்!

தாங்கள் தமிழ் இனத்திற்கு மட்டுமல்ல,இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களின் நலன்களுக்கும்,உரிமைகளுக்கும் எதிரானவர்கள் என்பதை மூடி மறைப்பதற்கு, தேசிய இனங்கள் தமக்கிடையில் மோதிக்கொள்வதை திட்டமிட்டே ஊக்குவிக்கவும், செயல்படுத்தவும் முனைப்புடன் இந்த தேசியவாதிகள் பணியாற்றுகின்றனர்.மொத்தத்தில் இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் தமக்கிடையில் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளனர்.

தேசிய இனங்களுக்கிடையில் பகைமை உணர்வை வளர்ப்பதற்கு, அந்தந்த தேசிய இனங்களை சேர்ந்த ஓட்டுசீட்டு அரசியல்வாதிகள்தான், இந்திய ஆளும்வர்க்கங்களுக்கு முகவர்களாக-மாமாக்களாக- செயல்பட்டுவருகின்றனர்.

இவர்கள் தத்தமது மாநில மக்களின் நலன்களையும்,உரிமைகளையும் இந்திய ஆளும்வர்க்கங்களுக்கு அடகுவைத்து சுகபோகமாக வாழுகின்றனர்.இது தெரியாமல் இருப்பதற்கு மக்களை அற்ப உணர்ச்சிகளுக்கு ஆட்படுத்தி,மயக்கி திசை திருப்புகின்றனர்.
காவிரி,பாலாறு,முல்லைபெரியாறு ஆகியவற்றில் தமிழகத்திற்குள்ள சட்டபூர்வ உரிமைகளை மறுப்பதன் மூலம் கர்நாடக,ஆந்திர,கேரள மாநிலங்களை சேர்ந்த ஓட்டுசீட்டு அரசியல்வாதிகள் இந்திய தேசியவாதிகளின் நோக்கத்தை நிறைவேற்றுகின்றனர்.

மேற்கண்ட மூன்று விவகாரங்களிலும்,தமிழகத்துக்கான உரிமையை பெறுவதற்கு விடாப்பிடியான, தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தாமல்,நிலைமை தீவிரமடைந்து உச்சகட்டத்திற்கு செல்லும் போது மட்டும் தற்காலிகமாக குதித்துவிட்டு, பின்னர் இதை மறந்துவிடுவதன் மூலம் தமிழக ஓட்டுசீட்டு அரசியல்வாதிகள் இந்திய தேசியவாதிகளின் நோக்கத்திற்கு சேவை செய்கின்றனர்.

இருப்பவர்கள், அதை பெறுவதற்கு உரிமை உடையவர்களுக்கு அதை மறுக்கிறார்கள்.இவற்றை பெற்றுத்தர வேண்டியவர்கள் தமது சொந்த ஆதாயத்திற்காக அதை விட்டுக்கொடுக்கிறார்கள்.இதன் மூலம் இவர்கள் இந்திய தேசியவாதிகளின் நோக்கத்தை-தேசிய இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின்மையை, அவர்களின் முகவர்களாக-மாமாக்களாக- இருந்து நிறைவேற்றி, அதற்குரிய கூலியை ஆதாயமாக ஒவ்வொரு மாநில ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளும்  பெற்றுக்கொள்கின்றனர்.

இந்தியா என்ற நாடு,இந்த நாட்டில் உள்ள தேசிய இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, ஒற்றுமை ஆகியவற்றால் கட்டபடவுமில்லை! நீடித்திருக்கவுமில்லை!

தேசிய இனங்களுக்கிடையிலான பகைமை,ஒற்றுமையின்மை, ஆளும்வர்க்கங்களின் நயவஞ்சகம்,சூழ்ச்சி,ஒடுக்குமுறை ஆகியவற்றின் மூலமே இந்தியா என்ற கட்டமைப்பு இன்றுவரை உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால்,இந்த உண்மைக்கு மாறாக தேசிய இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின்மை, இந்தியா என்ற கட்டமைப்பை உடைத்து சிதறடித்துவிடும் என்று தமிழகத்தில் உள்ள ஓட்டுசீட்டு அரசியல்வாதிகள் மக்களை திசைதிருப்புகிறார்கள்.இதன் மூலம் இந்திய தேசியவாதிகளுக்கு எதிரான மக்களின் கோபத்தை அமைதிப்படுத்துகின்றனர்.

தேசிய இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையின்மைதான் இந்தியா என்ற கருத்து பலருக்கும் வியப்பாக இருக்கலாம்!ஆனால் இதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை.

னென்றால் இந்து என்ற பார்ப்பன மதம் ஏற்றத்தாழ்வையும்,சமத்துவமின்மையையும் அடித்தளமாக கொண்டிருந்தாலும் இந்துமதம் என்பது நீடித்து உயிர்வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.பார்ப்பனர் அல்லாத மக்கள் அனைவரையும் பார்ப்பனர்கள் தமது வைப்பாட்டிகளின் பிள்ளைகள் என்று அன்றாடம் இழிவு படுத்துகிறார்கள்.ஆனாலும்,இப்படி பார்ப்பனர்களால் இழிவு படுத்தப்படும் மக்கள், தம்மை இழிவு படுத்தும் பார்ப்பனர்களையும்,அவர்களின் பண்பாட்டையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.இப்படி ஏற்றுக்கொள்வதற்கான சாதிகளுக்கிடையிலான ஏற்றத்தாழ்வும்,பகைமையுமே அடிப்படைக்காரணமாகும், இதே அடிப்படையில்தான் இந்தியா என்ற கட்டமைப்பும் இன்றுவரை உயிர்வாழ்ந்து கொண்டு இருக்கிறது!

தேசிய இனங்கள் தமக்கிடையே புரிந்துணர்வையும்,ஒற்றுமையையும்,உருவாக்கிக்கொண்டால், இந்திய தேசியம் தம்மை சுரண்டுவதையும்,ஒடுக்குவதையும் எதிர்த்து போராட துவங்கிவிடுவார்கள்.இதனால்,இந்தியா என்ற கட்டமைப்பின் மூலம் கன்னியாக்குமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான, உலகிலேயே மிகப்பெரிய, பரந்துவிரிந்த சந்தையை இந்திய பெருமுதலாளிகள் இழந்துவிடுவார்கள்.

ஒன்று தேசிய இனங்கள் ஒன்றுபட்டுவிட்டால், இந்தியா என்ற இந்த கட்டமைப்பு சுக்குநூறாக உடைந்து சிதறிவிடும்.அல்லது தேசிய இனங்கள் தமக்கிடையே ஏற்றத்தாழ்வற்ற,சுரண்டலற்ற புதியதொரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொள்வார்கள்.இதை நோக்கிய பயணம்தான் இன்றைய அத்தியாவசிய தேவையாகும்.ஆனால் இதை சாதிப்பது அத்துணை எளிதான காரியமல்ல! அதுவரை காவிரி,பாலாறு,முல்லைபெரியாறு ஆகியவற்றில் தனக்கான உரிமைக்காக தமிழகம் காத்திருக்கவும் முடியாது!

இப்போது மிகவும் அபாயகரமான கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் முல்லைபெரியாறு விவகாரத்தில், தமிழகம் தனது சட்டபூர்வமான உரிமையை நிலைநாட்டிக்கொள்ள வேண்டுமானால், மலையாள இனவெறியை நாம் எதிர்த்து முறியடித்தாக வேண்டும்.

மேற்கண்ட செயலை கேரள மக்களை வைத்தேதான் சாதிக்க வேண்டும்.இதை அறிவுபூர்வமான வாதங்கள்,பரப்புரையின் மூலம் சாதிப்பது என்பது, மலையாள இனவெறியால் நோய்வாய்பட்டுள்ள கேரள மக்களுக்கு மருந்தாக இருக்க முடியாது.
பொருளாதார முற்றுகை ஒன்றுதான் இந்நோயைத்தீர்ப்பதற்கான சிறந்த மருந்தாகும்.இம்மருந்து மிகவும் கசப்பானதாயினும்,இதைத்தவிர சிறந்த மருந்து வேறெதுவுமில்லை.

ஆரம்பக்கட்டத்தில் தமிழகத்தின் இந்த எதிர்வினைக்கு எதிராக, கேரள மக்கள் மேலும் மலையாள இனவெறிக்கு ஆட்பட்டாலும்,தொடர்ச்சியான,விடாப்பிடியான பொருளாதார முற்றுகை என்ற இந்த சிகிச்சை நீண்டகால நோக்கில் சிறந்த பலனைத்தரும்.இதன் மூலம் கேரள மக்களே,இந்திய ஆளும்வர்க்கங்களின் கேரள பிரதிநிதிகளான காங்கிரசு,போலி கம்யூனிஸ்ட் கட்சிகள்,பாரதிய ஜனதா ஆகியோரை எதிர்த்து முறியடிப்பார்கள்!

தமிழகத்தின் இந்தப் பொருளாதார முற்றுகைக்கு, இந்திய தேசியவாதிகளின் தமிழக பிரதிநிதிகளான, தமிழக ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகள் நிச்சயம் துரோகமிழைக்கவே செய்வார்கள்.

எனவே,இந்த ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகளுக்கு வெளியில் வலுவான மக்கள் கூட்டமைப்பு ஒன்றை, உறுதியான தலைமையில் கட்டமைக்க வேண்டும்.இது சாத்தியமா? என்றால் நிச்சயம் சாத்தியமானதுதான்.எப்படி என்றால்,அணு உலைக்கு எதிரான போராட்டத்தை கூடம்குளம் மக்கள் ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகளுக்கு வெளியே, வலுவான மக்கள் கூட்டமைப்பின் மூலம்தான் இன்றுவரை நாட்டிற்கே முன்னுதாரணமாக நடத்திவருகின்றனர்.

எனவே,முல்லைபெரியாறு அணை விவகாரத்திலும் வலுவான மக்கள் கூட்டமைப்பை, உறுதியான தலைமையில் கட்டமைத்து,மலையாள இனவெறியை முறியடித்து,தமிழகத்தின் சட்டபூர்வமான உரிமைகளை வென்றெடுப்போம்!

*இந்திய தேசியத்தினால் ஆதாயம் அடையும் இந்திய பெருமுதலாளிகள்,ஆட்சியாளர்கள்,ஓட்டு சீட்டு அரசியல்வாதிகளை முறியடிப்போம்!

*இந்திய தேசியத்தினால் சுரண்டலுக்கும்,ஒடுக்குமுறைக்கும் உள்ளாகும், அனைத்து தேசிய இனங்களும் ஒன்றுபட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்!

*காவிரி,பாலாறு,முல்லைபெரியாறு ஆகியவற்றில் தமிழகத்திற்குள்ள தார்மீக மற்றும் சட்டபூர்வ உரிமைகளை சர்வதேச விதிகளுக்கும்,சட்டத்திற்கும் உட்பட்டு தீர்த்துக்கொள்வோம்!

*இதை சாதிப்பதற்கு வலுவான மக்கள்திரள் கூட்டமைப்பை கட்டமைப்போம்!



தொடர்புக்கு: 9842529188


கம்பம் சுற்றுவட்டார விவசாயிகள்,பொதுமக்கள் எழுச்சிகரமாக சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டு கேரளாவிற்கு எதிராக நடத்திக்கொண்டிருக்கும் பொருளாதார முற்றுகை போராட்டக்காட்சிகள்:
















தொடர்புடைய பதிவுகள்:




2.முல்லை பெரியாறு:தற்கொலைக்கு முயலும் கேரளா!