விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label பெத்த வயிறு எரியுதே. Show all posts
Showing posts with label பெத்த வயிறு எரியுதே. Show all posts

Wednesday, 6 October 2010

பெத்த வயிறு எரியுதே! கேக்குற உங்க நெஞ்சு கொதிக்கலையா?!



மாணவன் பாரத் படுகொலை பற்றிய வினவு கட்டுரை,பின்னூட்டத்தில்  யோவ் இணைய பதிவர்  இட்ட கவிதை கதறல்!. 


உச்சி வெயிலும்
பொளக்காத
என் மண்டையில
அந்நேரம்
இடி வந்து எறங்கியதே!
என் உசுரு என்ன விட்டு
போயிருச்சே!
பெத்து பாத்த
ஒம்மொகத்த
செத்து எப்படி
நான் பார்ப்பேன்!
பதினஞ்சு வயசு புள்ளைக்கு
தற்கொலைனா
என்னனென்னும்
அத செய்யுறது
எப்புடினும்
எப்புடியா தெரியும்?
புழுத்த அரிசி சோத்த
தின்னு செமிக்கும்போதே
தற்கொலைக்கு
தன்ன ஒப்புவிச்சவன்
மறுபடியும் எப்புடியா
தற்கொலைய
செஞ்சிருப்பான்?
இந்த மடசிருக்கி
பரம்பரையில
எல்லாரும்
கலக்டரு உத்தியோகமா
பாத்தாக?
போகமாட்டேன்னு
சொன்ன புள்ளைய
திரும்ப அனுப்பிவச்சேன்
சித்தாளு வேலைக்கு
சேத்துவிட்டாவது
நாலு நல்ல கறி
ஆக்கிப் போட்டிருப்பேனே!
களவாணித்தனம்
செய்யவும்,
குடிச்சிக் கூத்தடிக்கவும்,
பொம்பளைய பொறுக்கித் திரியவும்
பள்ளிகூட விடுதி
எடமில்லன்னு போராட
சங்கம் கட்டிய
என் தங்கமே! உசுரே!
பாவிங்க
உன் கழுத்த நெரிச்சு
மூச்சு முட்டயில
அம்மாவை நெனச்சிருப்பியே!
அந்தக் கன
நெனப்பு வந்து
என்ன சேரலியே!
தானா
தூக்கு மாட்டிக்கிட்டானாம்
பிரச்சனை ஏதும் பன்னினா
துப்பாக்கியால சுடுவானாம்!
மிரட்டிப்பாக்குறான்
போலிசு!

அநியாயத்துக்கு
சாட்சியமா
எம்புள்ள செத்துக்கெடக்கான்
உன் அராசகத்துக்கு
சாட்சியமா
சாவதுக்கு எனக்கென்ன?
நல்ல சாவு வராதுடா
பாவிகளே
மண்ணைவாரி தூத்துறேன்
நாசமாபோயிடுவீங்கடா!
பெத்த வயிறு எரியுதே!
கேக்குற உங்க நெஞ்சு
கொதிக்கலையா?!
                                          - யோவ்