விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label சமச்சீர்கல்வி. Show all posts
Showing posts with label சமச்சீர்கல்வி. Show all posts

Tuesday, 6 September 2011

சமச்சீர்கல்வி:நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

சமச்சீர்கல்வி விவகாரத்தில் வினவும் அதன் தோழமை அமைப்புகளும்,எப்படியெல்லாம் முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது என்பதையும் சீர்த்திருத்த புதைகுழியில் சிக்கிகொண்டுள்ளது என்பதையும் பாகம்-4 வரை எழுதியுள்ளோம்.இறுதியாக புதிய ஜனநாயகம் இதழ் தமது தோழமை அமைப்பான மக இக-வின் புதிய கலாச்சாரத்தோடும் மட்டுமல்ல தனக்குள்ளேயே  முரண்பட்டு நிற்கிறது என்பதை சென்றத் தொடரில் எழுதியிருந்தோம்.சமச்சீர்கல்வி….!கார்ப்ரேட்மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பனக்கும்பலுக்கு விழுந்த அடி! என்ற எமது முதலாவது கட்டுரையில் “ஜெ தலைமையிலான பார்ப்பன மூடக்கும்பல் காலாகாலமும் தாம் அனுபவித்துவரும் சுகபோகங்கள்,இனிஎக்காலத்திலும் கேள்விகளுக்கு இடமில்லாமல் தொடரவேண்டும் என்ற பேராசை,அகம்பாவம் அதன் கண்ணை மறைக்க கார்ப்பரேட் மூலதனத்துடன் போட்டியிட்டு மண்ணைக் கவ்வியுள்ளது.இப்படி மண்ணைக் கவ்வுவது ஒன்றும் பார்ப்பனக்கும்பலுக்கு புதியது அல்ல.காலனி ஆட்சிகாலத்திலேயே,தான் காலாகாலமும் அனுபவித்து வந்த மனுதரும குலக்கல்விக்கு எதிரான,ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த மெக்கலே கல்வி முறையை எதிர்த்து மண்ணைக் கவ்வியது. ஆனாலும் காலனி ஆட்சியாளர்கள் கொண்டுவந்த மெக்காலே கல்வியை தன்னால் தடுத்து நிறுத்த முடியாது,என்று தெரிந்தவுடன் தான் கீழே விழுந்த அதே வேகத்தில்,மெக்காலே கல்வியை தனதாக்கிகொண்டது.தற்போதும் பார்ப்பனக்கும்பல் சமச்சீர்கல்வியை எதிர்த்து மண்ணைக் கவ்வினாலும்,கீழே விழுந்த அதே வேகத்தோடு அதை தமதாக்கிக் கொள்ள முயற்சிக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்”,என்று எழுதியிருந்தோம்.நாங்கள் எமது கட்டுரையில் மாக்சிய இயங்கியலின் அடிப்படையில் முன்னறிந்து கூறிய படியே ஜெயா தலைமையிலான பார்ப்பன கும்பல், ”சமச்சீர்கல்வியை தான் எதிர்க்கவில்லை என்றும்,அது தற்போது தரமற்றதாக அதாவது அப்பாடநூல்கள் தரமற்றவைகளாக உள்ளன.அதை மேம்படுத்தவே சமச்சீர்கல்வி நடைமுறையை இவ்வாண்டு தான் நிறுத்திவைத்ததாகவும் ஆனாலும் சமச்சீர்கல்வியை இந்தகல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால்,எனது அரசு இந்த ஆண்டே அதை நடைமுறைப்படுத்தும். சமச்சீர்கல்வி என்பது பொது பாடநூல்கள் மட்டுமல்ல,அதற்கு தேவையான அடிப்படைகட்டுமான வசதிகள்,மற்றும் ஏனைய வசதிகளை உருவாக்கித் தரவேண்டும்,இந்த அடிப்படையான வசதிகளை இந்த ஆண்டே உருவாக்க எனது அரசு ஏனைய துறைகளை காட்டிலும் கல்வித்துறைக்கு கூடுதல் நிதியாக ரூபாய் 1082.75 கோடியை ஒதுக்கியுள்ளதாக”, தற்போது நடைபெற்றுவரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார்.





இந்த நிதியைக்கொண்டு அரசுப்பள்ளிகள் அனைத்திலும் கூடுதல் வகுப்பறைகள்,கழிப்பறை வசதி,குடிநீர்வசதி,சுற்றுச்சுவர் ஆகியவை உருவாக்கப்படும்,ஆசிரியர்பற்றாக்குறையை போக்க 30,036 புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்,மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வைபோக்க ஒரேமாதிரியான புத்தகப்பைகள்,கணித உபகரணப்பெட்டி வழங்கப்படும்.இதோடு மாணவர்களுக்கு தனியார்பள்ளிகளை போன்று செயற்கைகோள் உதவியுடன் கணிணி மூலம் கற்பிக்கப்படும்.மாணவர்களின் சிந்தனைத்திறனை மேம்படுத்த பள்ளிகளில் சதுரங்க விளையாட்டு அறிமுகப்படுத்தப்படும்.மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க கல்விமுறை முப்பருவமாக மாற்றம் செய்யப்படும்”, என்று மிகவும் ஆரவாரமாக அறிவித்துள்ளார்.
மேற்கண்ட அறிவிப்புகள் மூலம் சமச்சீர்கல்வியை ரத்து செய்து, உயர்நீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்து,உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, பள்ளிகள் திறந்து இரண்டு மாத காலமாக புத்தகமே இல்லாமல் பள்ளிக்கு சென்று வந்த,மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரிடமும்,தான் சம்பாதித்துக் கொண்ட வெறுப்பை இல்லாமல் செய்துவிடுவதோடு,சமச்சீர் கல்வி நடைமுறையை தமதாக்கி கொள்ளவும்,அதனால் கிடைக்கும் அனைத்து நலனையும் தமதாக்கி கொள்ளவும் முயற்சிக்கிறார்.

இதன் மூலம் பார்ப்பனக்கும்பல் தான் அனுபவித்து வரும் சுகபோகங்களுக்கு பாதகம் வராமல் தடுத்துவிடுவதோடு,சமச்சீர்கல்வி மூலமும் தமது நலன்களைக் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.என்னதான் சமச்சீர்கல்வி மூலம் அனைத்து மாணவர்களும்,ஒரேவிதமான கல்வியை பெற்றாலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க போதுமான ஆசிரியர்களை நியமித்தாலும்,அப்படி நியமிக்கப்படும் ஆசிரியர்களை,அவர்களை தெரிவுசெய்யும் போது அதிகாரவர்க்கத்தின் மூலம் அவர்களுக்கு தரப்படும் சிரமங்கள் மூலம், அதாவது நியமனம் செய்யப்படுகின்ற ஆசிரியர்கள் தாங்கள் நியமனம் பெறுவதற்காக அரசின் செல்வாக்குள்ள நபர்களின் சிபாரிசு,அதிகாரவர்க்கத்தின் மூலம் அளிக்கும் லஞ்சம் ஆகிய நிர்வாக ரீதியான வழிமுறைகள், புதிதாக நியமிக்க படும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 4000 இருந்து 5000 வரை மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பும்,புதிய ஆசிரியர்களிடம் உள்ள அரைகுறை சமூக அக்கறையும் முற்றாக துடைத்தெரிந்து விடும்.இதனால் அரசுப்பள்ளிகளில் கற்பிக்கும் திறன் தற்போது நிலவுவதைக்காட்டிலும் மேம்படுவதற்கான அடிப்படை ஏதுமில்லை.

ஏற்கனவே அரசின் ஏனைய துறைகளைப் போன்று கல்வித்துறையும் லஞ்சம்,ஊழல் முறைகேடுகள் ஆகியவற்றின் மூலம் முற்றாக சீரழிந்து கிடக்கிறது.இதில் ஆசிரியர்களையும் அதிலும் குறிப்பாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் புதிய பள்ளி கட்டிடம் கட்டும் பொருப்பை ஒப்படைத்து,இவர்களிடமே பணமும் தந்து,கூடுதல் பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்படுகிறது.இதனால் இவர்கள் பள்ளி தலைமையாசிரியர் என்பதை விட ஒப்பந்ததாரராகவே உருமாற்றப்படுகின்றனர்.இவர்கள் ஏனைய ஒப்பந்ததாரர்களிடம் உள்ள கேடுகெட்ட அனைத்து பண்புகளையும் பெற்றுவிடுகின்றனர்.இப்படிப்பட்ட தலைமையாசிரியர்கள் பள்ளிகளில் கற்பிக்கும் பணிகளில் இருந்து முற்றாக ஒதுங்கிவிடுவது பள்ளிக்கட்டிட்டம் கட்டுவதில் ஊழல் செய்து சம்பாதிப்பது ஆகிய செயல்கள் ஏனைய ஆசிரியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி,அவர்களிடம் உள்ள அரைகுறை சமூக அக்கறையையும் ஒன்றுமில்லாமல் செய்து அவர்களின் கற்பிக்கும் ஆர்வத்தையும்  ஒன்றும் இல்லாமல் செய்துவிடுகிறது.இது மட்டுமல்ல மத்திய அரசு அனைவருக்கும் கல்வி திட்டம் என்ற திட்டத்திற்கு வழங்கும் நிதியை ஊராட்சிமன்றத்தலைவர் மற்றும் தலைமையாசிரியரின் பெயர்களில் கூட்டுக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.இப்பணத்தில் மேலதிகாரிகளுக்கு ஒரு பங்கை தந்துவிட்டு,ஏனையப் பணத்தை கையாடல் செய்வது தான் இவர்களின் முழுமுற்றான பணியாகவும் இருக்கிறது என்பதையும் இந்நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிகாரவர்க்கமும்,சமூகத்தில் வசதிபடைத்தோரும் முழுக்கவே தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளிலேயே படிக்கவைக்கின்றனர்.இதனால் அரசுப் பள்ளிகளை சீரழிப்பதில் அதிகாரவர்க்கத்திற்கும்,ஆட்சியாளர்களுக்கும் எவ்வித தயக்கமும் இருக்காது,ஆகவே பார்ப்பன ஜெயா கும்பல் ஆரவாரமாக அறிவித்துள்ள அறிவிப்புகள் அனைத்துமே மக்களை திசைதிருப்பும் தந்திர நடவடிக்கைகளே என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே சமச்சீர்கல்வி நடைமுறைக்கு வந்துவிட்டதாலேயே, அதை படிக்கும் நமது பிள்ளைகளுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டதாக நாம் கருதிக்கொள்ளக்கூடாது.இப்போது உள்ளது போலவேதான் நிலைமைகள் அப்படியேத் தொடரும்.உயர்கல்வி கற்பது அரசு வேலைவாய்ப்புகளை பெறுவது ஆகியவை முழுமுற்றாக பணத்தால்தான் தீர்மாணிக்கப்படும்.நாயோடு உடன் பிறந்தது அதன் வால் என்றால் இந்த சமூக அமைப்போடு உடன் பிறந்தது ஊழலும்,லஞ்சமும் ஆகும்.நாய் உயிரோடு இருக்கும் வரை அதன் வால் ஆடுவதை எப்படி நம்மால் தடுத்து நிறுத்த முடியாதோ, அதே போன்றுதான் நிலவுகிற இந்த சமூக அமைப்பு இருக்கும் வரை லஞ்சம்,ஊழல் ஆகியவற்றை எவராலும் ஒழித்துவிட முடியாது.

உண்மையிலேயே லஞ்ச,லாவண்யமற்ற ஒரு சமூகத்தை நீங்கள் விரும்பினால்,அதற்கு தற்போது நிலவும் இந்த சமூக அமைப்பு முற்றாக துக்கியெறியப்பட்டு,அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்கள் குழுக்களுக்கு வரவேண்டும்.சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல அரசின் நிர்வாக பணிகளுக்கு தேவையான பணியாளர்கள் முதற்கொண்டு அரசின் அனைத்து அங்கங்களுக்குமான பணியாளர்கள் அனைவருமே உழைக்கும் மக்களால்தான் தெரிவு செய்ய படவேண்டும்.இவர்கள் தவறு இழைக்கும் போது அவர்களை திருப்பி அழைக்கும் அதிகாரமும் உழைக்குமக்கள் குழுக்களுக்கு இருக்க வேண்டும்.இதுதான் மட்டுமே லஞ்சத்தையும்,ஊழலையும் தற்போது சமூகத்தில் நிலவும் அனைத்து அநீதிகளையும் களைவதற்கான ஒரேமாற்று வழிமுறையாகும்.இதை சாதிப்பதற்கு தேவை புதிய ஜனநாயக புரட்சி.வாருங்கள் உழைக்கும் மக்களே புதியதொரு சமூக அமைப்பை உருவாக்க ஒன்று சேருவோம்! போராடுவோம் வாருங்கள்!  



தொடர்புடைய கட்டுரைகள்:
                      



3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2

6.முரண்பாடுகளின் மூட்டையாகிப் போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-4

Friday, 19 August 2011

சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் - 2

                                                                    மீள்பிரசுரம்.



சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் - 2
பூனை கண்ணை மூடிக்கொண்டு,
பூலோகமே இருண்டுவிட்டதாக நினைத்துக்கொள்ளுமாம்!
சமச்சீர் கல்வி விவகாரத்தில் மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும்,அதிலும் குறிப்பாக இவர்களின் புதிய ஜனநாயகம்,புதிய கலாச்சாரம்,வினவு ஆகிய ஊடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான நிலைப்பாட்டை முதன்மையானது என கூறிவருகின்றன.இதை எமது முந்தைய கட்டுரைகளிலும் நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம்
எமது விமர்சனங்களுக்கு மேற்கண்ட அமைப்புகளும்,அவற்றின் ஊடகங்களும் இதுவரை பதிலேதும் தரவில்லை.அதற்குமாறாக தமது நாலாந்தர ஆதரவாளர் ஒருவர் மூலம் எமது விமர்சனத்துக்கு உள்நோக்கம்  கற்பித்து எம்மை கொச்சைப்படுத்தி வருகின்றனர்.நாங்கள் இப்படி கூறுவதற்கு என்ன ஆதாரம் என்று வாசகர்களும்,மேற்கண்ட அமைப்பினரும் கேட்பார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.மேற்கணட அமைப்புகளின் நாலாந்தர ஆதரவாளர் எமது நோக்கத்துக்கு உள்நோக்கம் கற்பித்து கொச்சைப்படுத்துவதையும்,எமது விமர்சனக்கட்டுரைகளுக்கு பதிலேதும் கூறாமல்,இவர்களின் மேற்கண்ட நாலாந்தர ஆதரவாளர் கூறுவதை போன்று எமது விமர்சனக்கட்டுரையை எவரும் சீந்தவில்லை என்ற கருத்துதான் இவர்களிடமும் உள்ளது.என்பதைத் தான் இவர்களின் மெளனம் எமது கணிப்புகளுக்கு ஆதாரம் ஆகும்.தம் மீது விமர்சனம் வைப்பவர்கள் யார் என்பதைவிட அவர்கள் என்ன விமர்சனம் வைத்திருக்கிறார்கள் என்று தான் எந்த ஒரு ஜனநாயகவாதியும்,அதிலும் பாட்டாளிவர்க்க சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் ஆகும்.
     எமது இரு கட்டுரைகளையும் பார்த்துவிட்டு அவற்றின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ளாமலேயே தியாகு,இயக்கம் ஆகியோர் மக இக மற்றும் அதன் தோழமை அமைப்பினர் என்ன எழுதுகிறார்கள் என்பதை பார்க்கமறுத்துவிட்டு அவர்கள் எதை செய்தாலும்,அதை எதிர்ப்பது என்ற கண்ணோட்டத்துடன் தமது இணையத்தளங்களில் அரைவேக்காட்டுத்தனமாக பிதற்றிவருகின்றனர்.தங்களை போன்றேதான் சூறாவளியும்,மக இக-வையும் அதன் தோழமை அமைப்புகளையும் எதிர்ப்பதாக எமது தலைப்புகளை மட்டுமே பார்த்துவிட்டு எமது கட்டுரைக்கு ஆதரவளிப்பதாக பின்னூட்டம் இட்டிருந்தனர்.இதன் பிறகு தான் நாங்கள் அவர்களின் இணையத்திற்கு சென்று அவர்களின் கட்டுரைகளை வாசித்து,அந்த கட்டுரைகளின் தரத்தை தீர்மானித்தோம்.அதே போன்று எமது இருகட்டுரைகளையும் வாசித்துவிட்டு தற்போது மக இக-அதன் தோழமை அமைப்புகளோடு ஈழ விவகாரத்தில் முரண்பட்டு மேற்கண்ட அமைப்புகளின் தோழமை உறவை இழந்திருக்கின்ற தோழர் இரயாகரன் அவர்கள் எமது இருக்கட்டுரைகளும் சரியான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுவருவதாகவும்,அவற்றை தாங்கள் கவனமாக அவதானித்து வருவதாகவும் பின்னூட்டம் இட்டிருந்தார்.ஈழ விடயத்தில் தோழர் இரயாகரனோடு, அவரின் நிலைப்பாட்டை விமர்சித்து சூறாவளியின் முன்னால் ஆசிரியர் தோழர் மூடக்கிழவன் கூர்மையான விமர்சனக்கட்டுரை ஒன்றை எழுதி, நாங்கள் சூறாவளி இணையம் ஆரம்பிப்பதற்கு முன்பே தோழர் இரயாகரனுக்கும்,வினவுக்கும் அனுப்பியிருந்தோம்.இன்னமும் தோழர் இரயாகரன் மீதான எமது விமர்சனத்தை நாங்கள் மாற்றிக்கொள்ளவில்லை.அதே போன்று வினவு எதை எழுதினாலும்,அதை ஆதரிப்பது என்ற அவர்களின்  ரசிகர்களைப் போன்று வினவுக்கு ஆதரவாக அந்த கட்டுரையை நாங்கள்  எழுதவுமில்லை.இப்படி ஈழவிடயத்தில் எமக்குள் முரண்பாடு நீடித்தாலும் கூட தோழர் இராயாகரன் அவர்களை மிகச்சிறந்த தோழராகவே சூறாவளி கருதுகிறது.தாம் எதை எழுதினாலும்,எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும்,அதை எந்த சந்தர்ப்பத்திலும்,எந்த காரணத்திற்காகவும் மாற்றிக்கொள்ளமாட்டேன் என்று கருதும் வரட்டுவாதியல்ல தோழர் இராயாகரன் என்பதை அவரின் இணையதளத்தில் அவர் வெளியிடும் கட்டுரைகளில் இருந்தே ,நாங்கள் கவனமாக ஆவதானித்து வருகிறோம்.அதோடு நாங்கள் மக இக-வையும் அதன் தோழமை அமைப்புகளையும் சமச்சீர்கல்வி விடயத்தில் அவர்களின் சீர்த்திருத்தவாத கண்ணோட்டத்தை எதிர்ப்பதை,எதிரிக்கு,எதிரி நண்பன் என்ற கண்ணோட்டத்தில் தோழர் இராயாகரன் எம்மை ஆதரிக்கிறார் என்று, வினவின் இரசிகர் பட்டாளம் கருதும்.ஆனால் நாங்கள் அப்படி கருதவில்லை.தோழர் இராயாகரனையும்,அவரது குழுவையும் இன்னமும் மிகச்சிறந்த தோழர்களாக கருதிதான் அவர்கள் எமக்கு தந்த ஆதரவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அதற்காக எமது நன்றியை அவர்களுக்கு தோழமை உணர்வோடு தெரிவித்திருக்கிறோம்.எமது கட்டுரைகளுக்கு போலியான பரபரப்பான, விளம்பரமும், ஆதரவும் தேவை என்பதற்காக.,யார் எம்மை ஆதரித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நேர்மையற்ற தனம்,குறுக்கு புத்தி எம்மிடம் கிஞ்சித்தும் இல்லை என்பதை சுட்டிக்காட்டவே மேற்கண்ட விடயங்களை நாங்கள் பதிவு செய்கிறோம்.
     மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும் எதை செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும்.என்று கருதுவர்களின் உளறல்களுக்கெல்லாம் பதில்சொல்லித்தான் தீரவேண்டும் என்று நாங்கள் வாதிடவில்லை.அப்படி செய்வது புரட்சிகர அமைப்புகளின் இணையம் நடத்துவதற்கான நோக்கத்தையையே திசைதிருப்பிவிடும்,என்பதையும் நாங்கள் மிக நன்றாகவே அறிவோம்.
     மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும்,எதை செய்தாலும் அதை எதிர்க்கவெண்டும் என்பதும் மக இக-விடமும் அதன் தோழமை அமைப்புகளிடமும் வெளிப்படுகிற தவறுகளையும்,திசைவிலகல்களையும்,புரட்சியின் மீதுள்ள மாளாகாதலாலும்,மேற்கணட புரட்சிகர அமைப்புகளின்,மீதான தோழமை உறவினாலும்.சூறாவளியில் வெளியிடப்படுகின்ற கட்டுரை என்று பார்க்காமல் அது எதுவாயினும்,எப்படிப்பட்டதாயினும்,அவற்றை தமக்கு எதிராக பார்ப்பது,அதை தமது நாலாந்தர ரசிகர்கள் மூலம் கொச்சைப்படுத்தி ரசிப்பதும்,மேற்கண்ட இருபிரிவினரும் எதிரும்,புதிருமாக நின்றாலும்,இவர்கள் இருவரிடமும் வெளிப்படும் மார்சிய-லெனினியத்திற்கு விரோதமான,அதிகாரவர்க்கத்தின் நலனை பிரதிபலிக்கும் சித்தாந்தமே அடிப்படையாகும்.
     முதலாளிகள் தமக்கிடையில் தொழிற்போட்டியின் காரணமாக இருவேறு முகாம்களாக பிரிந்துகிடப்பதின் பிரதிபலிப்புகள்தான் வினவையும்,அதன் எதிர்ப்பாளர்களையும் அதிகாரவர்க்கம் என்னும் ஒரே சித்தாந்தம் வழி நடத்தினாலும் இருவரும்  ஒரே குடையின் கீழ் ஒன்று சேருவதற்கான தேவை ஏதும் இப்போது இவர்களுக்கு எழவில்லை.ஒருவேளை மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும் சமச்சீர்கல்வி விவகாரத்தில் மட்டுமல்ல அனைத்துவிவகாரங்களிலும் சீர்திருத்த பாதையில் முழுமுற்றாக மூழ்கி அதிகாரவர்க்கம் என்னும் ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவாய் முற்றாகமாறிய பின்பு,இப்பிரிவினர்இருவரும் ஒன்றுசேர்வதற்கான தேவையும்,வாய்ப்பும் புரட்சிகர சக்திகள் தவிர்க்கவியலாத பெரும் சக்தியாய் ஆளும்வர்க்கத்தை முறியடிக்கும் அளவிற்கு பலம்பெரும் போது மட்டுமே ஏற்படும் என்பதை உலகின் பல நாட்டு பாட்டாளிவர்க்க வரலாறுகளில் நாம் பார்த்துதான் வருகிறோம்.
     எமது ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு இவ்வமைப்புகள் நேரடியாக பதிலேதும் தராமல்,பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டுவிட்டதாக கருதிக்கொள்ளுவதை போன்று எமது விமர்சனங்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பதன் மூலம் அப்படி ஒரு விமர்சனம் எழவில்லை என்றே கருதிக்கொள்கின்றனர்.எமது விமர்சனங்களுக்கு வாசகர்கள் மத்தியில் பெருத்தவரவேற்பு இல்லை என்றும்,எமது கட்டுரைகளை சீந்துவதற்கு நாதியில்லை என்று வினவின் ரசிகர் எம்மை ஏளனம் செய்வதை வாசகர்கள் அறிவார்கள்.இப்படி அவர் கூறுவதை பார்த்து நாங்கள் வருத்தப்படவில்லை.இப்படி அவர் கூறுவதன் மூலம் அவர் தனது அரசியல் தரத்தையையும்,தனது கதாநாயகன் அரசியல் தரத்தையுமே பறைசாற்றிகொள்கிறார்.அதற்காக அவருக்கும்,அவரை இயக்குபவருக்கும் எமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.    
     தமிழகத்தின் ஒரே புரட்சிகரசக்தி என்று மக இக-வையும் அதன் தோழமை அமைப்புகளையும் நாங்கள் வரையறுத்து கூறும்போதே சமச்சீர்கல்வி விவகாரத்தில் அவ்வமைப்புகள் சீர்த்திருத்த புதைகுழியில் சிக்கிவிட்டதாக நாங்கள் கூறுவது,முரண்பாடு என்றும்,இதன் மூலம் நாங்கள் எமது நேர்மையின்மையை வெளிப்படுத்துவதாகவும்,ஆள்காட்டி வேளை செய்வதாகவும்,வினவின் ரசிகர்மன்ற தலைவர் தனது அறியாமையை எம்மை கொச்சைப்படுத்துவதாக கருதிக்கொண்டு வெளிப்படுத்திக்கொள்கிறார்.அந்த நபரைப்பற்றி நாங்கள் அறிந்துகொண்டவகையில் அவர் அந்த அமைப்புகளில் ஏதோ ஒன்றில் உள்ளவர் என்பதும்,அதிலும் முக்கிய பொருப்பு வகிப்பவர் என்றும் அடையாளம் கண்டிருக்கிறோம்.எனவே அவர் கூறுகின்றவற்றை அவரின் தனிப்பட்ட பிதற்றலாக நாங்கள் கருதவில்லை.இந்த அமைப்புகளின் சார்பில் இணையதளங்களில் குரல் கொடுப்பவர் என்றே,அவர் எம்மோடு பேஸ்புக்கில் எழுதுவதில் இருந்தும் உறுதியாக நம்புகிறோம்.எனவே அவரின் கூற்றுகள் அனைத்தையும் மேற்கண்ட புரட்சிகர அமைப்புகளின் நிலைபாடாகவே எடுத்துக்கொள்ளுகிறோம்.
     சோவியத்யூனியனில் தோழர் ஸ்டாலின் ஆட்சியின் போது ஏகாதிபத்தியங்களும்,கட்சியில் இருந்த அதிகாரவர்க்க பாதையாளர்களின் சீர்குலைவு வேலைகளினாலும்,சோவியத்யூனியனும்,அதன் மக்களும் பெரும் இழப்புகளை சந்தித்தனர்.இதை சமாளிக்க தோழர் ஸ்டாலின் மிகக்கடுமையாக போரடினார்.இப்போரட்டத்தின் போது அதிகாரவர்க்க கயவாளிகள் உண்மையான கட்சி தோழர்களையும்,மக்களையும் சதிகாரர்கள், தேசத்துரோகிகள் என்று குற்றம்சாட்டி,படுகொலை செய்தனர்.நாட்டில் இவர்களால் ஏற்படுத்தப்பட்ட பெரும்குழப்பத்தின் விளைவாக கட்சியிலும்,ஆட்சியிலும் துரோகிகள் யார்,நேர்மையானவர்கள் யார் என்பதை மிகத்தெளிவாக வரையறுத்து,துரோகிகளை களையெடுக்க முடியாததால்,கட்சிக்குள் இருந்த துரோகிகள் மூலம்,ஏகாதிபத்தியங்கள் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டன.இவர்களின் இந்த எல்லா செயல்களுக்கும் தோழர் ஸ்டாலினே பொறுப்பு என்றும் அவரின் உத்தரவின் பேரிலேயே இப்படுகொலைகள் அனைத்தும் நிகழ்த்தப்பட்டதாகவும் உலகெங்கிலும் ஏகாதிபத்தியங்களும்,ஏகாதிபத்திய ஊடகங்களும் அவர்களின் ஆதரவாளர்களும்,தோழர் ஸ்டாலினை மட்டுமல்ல பொதுவுடமை சித்தாந்தத்தையும் கொச்சைப்படுத்தினர்.முற்றிலும் உண்மைக்கு புறம்பான கதைகளை,ஹாலிவுட் சினிமா பாணியில் ஏகாதிபத்தியங்கள் வீசிய எலும்புத்துண்டுகளை கவ்விக்கொண்டு தோழர் ஸ்டாலினுக்கு எதிராக புத்தகங்களை எழுதிக்குவித்தனர்.
     சோவியத்யூனியனில் நடந்த மேற்கண்ட நிகழ்வுகளைப்பற்றி ஆய்வு செய்து பரிசிலித்த தோழர் மாவோ,தோழர் ஸ்டாலின் அவர்களின் செயல்பாட்டை 60% சரியானது என்றும்,40% தவறானவை என்றும் வரையறுத்தார்.சோவியத்யூனியனின் அனுபவங்களில் இருந்து சீன கம்யுனிஸ்ட் கட்சியின் அதிகாரவர்க்க பாதையாளர்கள்,கட்சியிலும்,ஆட்சியிலும் பெரும்பான்மை பெற்று அவற்றை கைப்பற்றிய போது சீன மக்களின் தன்னிகற்ற தலைவராகவும்,நாட்டின் அதிபராகவும் இருந்த போதும் தோழர் மாவோ ராணுவரீதியான நடவடிக்கை எடுத்து,அதிகாரவர்க்க பாதையாளர்களை ஒடுக்கவில்லை.அதற்குமாறாக எமது மாபெரும் ஆசான் 6 மாதம் தலைமறைவாக இருந்து மக்களைத் திரட்டி மாபெரும் கலாச்சாரப்புரட்சியின் மூலம் அதிகாரவர்க்க பாதையாளர்களின் முதுகெலும்பை முறித்தார்.
     தோழர் ஸ்டாலினின் செயல்பாட்டில் 40% தவறானது என்று தோழர் மாவோ வரையறுத்ததால், தோழர் ஸ்டாலின் அவர்களை கம்யூனிஸ்ட் இல்லை என்று அறிவிக்கவில்லை.அதற்கு மாறாக தோழர் ஸ்டாலின் மக்கள் சக்தியை பயன்படுத்தி அதிகாரவர்க்க பாதையாளர்களை முறியடித்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.இச்சுட்டிக்காட்டுதலை ஊருக்கு உபதேசம் செய்யும் பாணியில்,போகிற போக்கில் சொல்லிவிட்டு போகாமல் தாம் கூறிய மக்கள் திரள் பாதை மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும்,ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்திய அதிகாரவர்க்க பாதையாளர்களுக்கு எதிராக செய்தும் காட்டினார்.
     மேற்கண்ட எமது ஆசான் தோழர் மாவோ உருவாக்கிய கோட்பாட்டு ஒளியில்தான் மக இக-வையும் அதன் தோழமை அமைப்புகளையும் நாங்கள் எமது நிலைப்பாட்டை வரையறுத்தோம்.சமச்சீர் கல்வி விவகாரத்தில் மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும் சீர்திருத்தவாத பாதையில் செயல்படுகின்றன என்ற ஒரு அம்சத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அந்த அமைப்புகளை புரட்சிகர சக்திகள் இல்லை என்று அறிவிக்கும் அளவுக்கு நாங்கள் ஒன்றும் கோட்பாட்டு ரீதியான வரட்டுவாதிகளோ,பத்தினிகளோ அல்லர்.அப்படி ஒரு முடிவுக்கு வருவது பாட்டாளிவர்க்க கண்ணோட்டமோ அணுகுமுறையோ அல்ல என்பதை நாங்கள் மிக நன்றாகவே அறிவோம்.
\     அதேவேளையில் மேற்கண்ட புரட்சிகர அமைப்புகளின் சீர்த்திருத்தவாத கண்ணோட்டம்,சமச்சீர்கல்வி விவகாரத்தின் மூலம் அப்பட்டமாக இப்போது வெளிப்பட்டுவிட்டாலும்,அவர்களின் இந்த சீர்த்திருத்தவாத கண்ணோட்டம்,இவ்விவகாரத்தில்தான் முதன் முறையாக ஏற்பட்டதாக நாங்கள் கருதவில்லை.இவர்களிடம் இச்சீர்த்திருத்தவாத சித்தாந்தம் எப்போது,எங்கிருந்து,எந்த வடிவத்தில் உள்ளே நுழைந்தது, அது தற்போது இப்புரட்சிகர அமைப்புகளில் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்துகிறது, இதற்கெதிராக இப்புரட்சிகர அமைப்புகளில் உள்ள உண்மையான,புரட்சிகர தோழர்கள் மத்தியில் இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.இதற்கெதிராக அவர்கள் உட்கட்சி போரட்டம் ஏதேனும் நடத்துகிறார்களா? என்பன போன்ற ஏராளமான விவரங்களை  நாங்கள் சேகரிக்க வேண்டியுள்ளதோடு,இவர்களின்  பல்வேறு கோட்பாட்டு முடிவுகளையும்,செயல்பாடுகளையும் இவர்களின் அதிகாரப்பூர்வ இதழ்களான புதியஜனநாயகம்,புதியகாலாச்சாரம்,வினவு ஆகிய ஊடகங்களில் வந்துள்ள கோட்பாட்டுரீதியான கட்டுரைகளையும்,செய்திகட்டுரைகளையும்,நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.அதற்கான பணியை நாங்கள் ஏற்கனவே துவக்கிவிட்டோம்.எமது இந்த ஆய்வுபணிக்கு இக்குறுகியகாலத்திலேயே மிகமுக்கியமான ஆதாரங்களை திரட்டியிருக்கிறோம்.எமது இந்த பணிக்கு உதவவிரும்பும் தோழர்கள் தம்மிடம் உள்ள ஆதாரங்களை எமக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்குமாறு தோழமையுடன் கோருகிறோம்.அப்படி மின்னஞ்சல் அனுப்பும் தோழர்களின் பெயர்களை எந்த சந்தர்பத்திலும் வெளியிடமாட்டோம்,அதே நேரத்தில் எமது பணி மக இக மற்றும் அதன் தோழமை அமைப்புகளிடம் வெளிப்படும் பாட்டாளிவர்க்கத்துக்கு விரோதமான கோட்பாடுகளை,இணையதளத்தில் எழுதி அதன் மூலம் திருப்தி அடைவதுமட்டுமே எமது நோக்கமோ,இலக்கோ அல்ல.மேற்கண்ட தோழமை அமைப்புகளின் புரட்சிகர நிலைப்பாடுகள்,செயல்பாடுகள் அனைத்தையும் இணையதளத்தின் மூலம் மட்டுமே ஆதரித்தவர்கள் இல்லை  நாங்கள்!மேற்கணட அமைப்புகளின் ஆதரவாளர்களாக இருந்து அவர்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றவர்கள் நாங்கள்.இன்னமும் கூட நாங்கள் மேற்கண்ட அமைப்புகளின் உண்மையான ஆதரவாளர்கள்தான்.இப்புரட்சிகர அமைப்புகளின் சீர்திருத்தவாத பாதையை எதிர்ப்பதாலேயே நாங்கள் இவ்வமைப்புகளுக்கு எதிரானவர்கள் இல்லை.இவ்வமைப்புகளோடு நாங்கள் சித்தாந்த ரீதியாக, அடிப்படை நிலைப்படுகளில் மாறுபடவில்லை, ஆயினும் அவர்களிடம் வெளிப்படுகிற புரட்சிகர சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்த எமது அகநிலை மட்டுமே காரணம் என மேற்கண்ட அமைப்புகளும்,அரசியல் சித்தாந்த ரீதியாக அனைத்தையும் சீர்தூக்கி பார்க்க முடியாத காரணத்தால் எம்மீது குற்றச்சாட்டையும்,அவதுறுகளையும் அதன் ரசிகர்கள் பரப்புவார்கள் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிவோம்.எமது இந்த எதிர்பார்ப்பின் படியேதான் மேற்கண்டவர்கள் செயல்படுவதையும்,வாசகர்கள் கவணமாக அவதானித்து வருகிறார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்.எமது கட்டுரைகளுக்கு இணையதள வாசகர்களிடையே போதிய ஆதரவு,பின்னூட்டங்கள்  வரவில்லை என்பதாலேயே எமது கருத்துகள்,நிலைபாடுகள் தோற்றுவிட்டதாக மேற்கண்ட அமைப்பினர் வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம்.
     மேற்கண்ட இந்த பணியை  கட்டாயம் செய்வோம் என்றோ,செய்யமாட்டோம் என்றோ முன் தேதியிட்டோ,பின் தேதியிட்டோ முடிவு எதையும் நாங்கள் எடுக்கவில்லை.வரலாறு எமக்கிட்டுள்ள பணியைத்தான் நாங்கள் துவக்கியுள்ளோம்.எமது இந்த பயணத்தில் நாங்கள் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டுமா,இல்லையா? என்பதை எமது குழுவின் அகநிலையல்ல,வரலாற்றின் தேவை தான் அதை தீர்மானிக்க வேண்டும்.வரலாறு எம்மிடம் எதை கோருகிறதோ,அதை எப்படி கோருகிறதோ,எந்த வடிவத்தில் கோருகிறதோ அதை இணையத்தில் மட்டுமே செய்தால் போதுமா அல்லது மக்கள் மத்தியிலும் செய்ய வேண்டுமா? என்பதை வரலாறுதான் தீர்மானிக்க வேண்டும்.ஆகவே இணையத்தில் எமது விமர்சனத்தை கண்டும்காணாமல் இருந்துவிட்டாலே,நாளடைவில் நாங்கள் சோர்ந்துபோவோம் என்று மேற்கண்ட அமைப்பினர் கருதினால் அது எவ்வளவு மூடத்தனம் நிறைந்தது என்பதை வரலாறு அவர்களுக்கு நிரூபிக்கும்.ஒருவேளை இப்பணியை எமது குழுவில் உள்ள தோழர்களின் இறப்பு போன்ற இயற்கை நிகழ்வுகளால் தடைபட்டு நின்று போனாலும்,இதை செய்வதற்கு நிச்சயம் வரலாறு பலரை படைக்கும்,என்பதை எம்மை ஏளனம் செய்யும் அன்பர்களுக்கு தோழமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.மார்சியத்தை வரட்டு சூத்திரமாக அல்லாது இயங்கியல் கோட்பாடாக சமூகவிஞ்ஞானமாக கற்றுத்தேறுங்கள்.இதன் மூலம் இந்தியாவில் புரட்சிக்கு தடைகற்களாக உள்ள அனைத்தையும் மக இக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அயாராது பாடுபட்டாலும்,குறிப்பிடும் படியான முன்னேற்றம் ஏதும் அடையவில்லை,இனியும் அடையாது என்று கருதுவோரின் கனவுகளை களைப்போம்.இவ்வமைப்புகளின் முன்னேற்றம் என்பது முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்டதற்கான காரணத்தை கண்டறிந்து அவற்றை களைய பாடுபடுவோம்! புரட்சிகர பயணத்தில் முன்னேறுவோம்!  
                                          தொடரும்…….
                                  புரட்சிகர வாழ்த்துகளுடன்  
                                  சூறாவளி நிர்வாகக்குழு. 

தொடர்புடைய கட்டுரைகள்:
                      


3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2

6.முரண்பாடுகளின் மூட்டையாகிப் போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-4
             
    

Monday, 15 August 2011

சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -1


சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-1(மீள்பிரசுரம்).





      சமச்சீர்கல்வி விவகாரத்தில் மக இகவும் அதன் தோழமை அமைப்புகளும் சீர்த்திருத்த கோரிக்கையை எடுத்துப் போராடி,சீர்திருத்த புதைகுழியில் சிக்கிக்கொண்டுள்ளன.தமிழகத்தில் ஒரே புரட்சிகர அமைப்பான இந்த அமைப்பைகளை இதில் இருந்து மீட்டு, மீண்டும் அவர்களை புரட்சிகர நீரோட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் சூறாவளியில் கட்டுரை ஒன்றை(சமச்சீர் கல்வி....! கார்ப்ரேட் மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பன கும்பலுக்கு விழுந்த அடி ) வெளியிட்டு இருந்தோம்.
இக்கட்டுரையை கண்ட இந்த அமைப்பினர் எமது விமர்சனத்துக்கு நேரிடையாக பதில் ஏதும் தராமல்,தனது ஆதரவாளர்கள் இருவர் மூலம் அரட்டை பாணியில் சில அர்த்தமற்ற கேள்விகளை கேட்டனர்.கட்டுரையின் உள்ளடகத்தில் என்ன உள்ளது என்பதைவிட யார் அதை எழுதியது என்பதில் தான் அவர்கள் முழுகவனத்தையும் செலுத்தினர்.போலிஸ் பாணியில் துருவித்,துருவி கேள்விகேட்டனர்.பெரியண்ணன் பாணியில் அவர்களின் அனுகுமுறை அமைந்துள்ளது.அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் தன்மீது தோழமை ரீதியாகக் கூட எவரேனும்  விமர்சனம் வைத்தால்,அப்படி விமர்சனம் வைத்தவர்கள் அமேரிக்காவின் சிஐஏ உளவுத்துறையினராக இருப்பார்களோ என்று யோசிக்கும் அளவுக்கு அவர்கள் அணுகுமுறை அமைந்துள்ளது.
      நாங்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில் மிகவும் அழுத்தமான உள்ளடக்கத்தை சுருக்கமாக எழுதியுள்ளதால் அதை வாசிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு சிரமப்படுவார்கள் என்பதாலும் இக்கட்டுரையை நாங்கள் தவறான அடிப்படையிலும்,நோக்கத்திலும் வெளியிட்டுள்ளோம்  என்று எம்மீது அவதூறு பரப்பப்பட்டு வருவதாலும்,எமது அந்த கட்டுரையை விரிவான முறையில் அரசியல்,சித்தாந்த ரீதியாக எழுதி வெளியிடுவது என முடிவுசெய்துள்ளோம்.
      நாங்கள் யார் என்ற வினவு ஆதரவு தோழர்கள் கேள்விக்கு எமது பதில் இதுதான்.நாங்களும் மேற்கண்ட புரட்சிகர அமைப்புகளின் உண்மையான ஆதரவாளர்கள் தான்.இதை அவர்கள் நன்றாகவே அறிவார்கள்.ஆனால் நாங்கள் அம்மா பாணி விசுவாச தொண்டர்கள் அல்ல,அரசியல் சித்தாந்தத்திற்கு மட்டுமே விசுவாசிகள்.நாங்கள் உண்மையான ஆதரவாளர்கள் என்பதால் அவர்களிடம் இருந்து வெளிப்படும் தவறுகளை சுட்டிக்காட்டி போராடுகிறோம்.இது நமது கடமை என உறுதியாக கருதுகிறோம்.ஒரு வேளை எமது கட்டுரையும்  அதில் எழுதப்பட்டுள்ள நிலைப்பாடும் தவறானவை எனறு வினவும்,அதன் தோழமை அமைப்புகளும் நிருபித்தால் எமது தவறுக்காக சுயவிமர்சனங்களை ஏற்க சிறிதும் தயங்கமாட்டோம்.அதே நேரத்தில் எந்த வகையிலும் அரசியல்,சித்தாந்த ரீதியாக சமரசம் எதையும் செய்துகொள்ளவும் மாட்டோம்.அப்படி சமரசம் செய்துகொள்ள இது ஒன்றும் எமது தனிப்பட்ட விவகாரம் அல்ல என்பதால்,அப்படி சமரசமாக போக எமக்கு உரிமை ஏதும் இல்லை.முன்பு சூறாவளி இணையத்தில் ஆசிரியராக இருந்தவரும்,மேற்கண்ட புரட்சிகர அமைப்புகளில் ஒருவருமான தோழர் மூடக்கிழவனிடம் அரசியல்,சித்தாந்தம் பயின்றவர்கள் தான் நாங்கள் அவர் எமக்கு தந்த பயிற்சியின் அடிப்படையில் தான் செயல்படுகிறோம்,அந்த அடிப்படையில் தான் எமது கட்டுரைகளை வெளியிடுகிறோம்.என்ன தோழர்களே எங்களை பற்றிய அறிமுகம் போதுமா என்ன?


சமச்சீர் கல்வியை கருணாநிதி ஆட்சியில் கொண்டு வந்ததற்கும்,உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் சமச்சீர்கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த உத்தரவிட்டதற்கும் கார்ப்பரேட் மூலதனத்தின் பரந்து விரிந்த தேவைதான் அடிப்படை காரணம் என்பதை இதற்கு முந்தையக் கட்டுரையில் எழுதியிருந்தோம்.
     சமச்சீர் கல்வியை நிறுத்தி கார்ப்பரேட் மூலதனத்தின் பரந்து விரிந்த தேவைக்கு முட்டுக்கட்டை போட்ட பார்ப்பன ஜெய தலைமையிலான பார்ப்பன மூடக்கும்பல் மூக்குடைப்பட்டது என்பதையும் எழுதியிருந்தோம்.
     சமச்சீர் கல்வியை கொண்டு வந்ததற்கான பொருளியல் காரணத்தை புறக்கணித்துவிட்டு,இதை கொண்டு வந்ததற்கும்,நீதிமன்றங்கள் அதை உறுதிபடுத்தியதற்கும் கல்வியில் தனியாரின் கட்டணக்கொள்ளையை தடுப்பதற்கும்,கார்ப்பரேட் மயத்தை தடுப்பதற்கு தான் என்றும் மக இக வும் அதன் தோழமை அமைப்புகளும் எதிரும்,புதிருமான இருவேறு கருத்துக்களை மக்களிடையே விதைப்பதையும்,இப்படி இவர்கள் செய்வதற்கு தமிழகத்தில் சமச்சீர் கல்வியை ஆதரித்து மக்களிடையே பிரச்சாரம் செய்யவோ,குறைந்தது நீதிமன்றங்களில் சட்ட    போரடுகிற அளவுக்கு கூட ஜனநாயக சக்திகள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒன்றிரண்டு தனிநபர்களைத் தவிர சமச்சீர் கல்வி மற்றும் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்த இருக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழ்கமெங்கும் மக்களிடையே பிரச்சாரத்தையும்,போரட்டங்களையும் நடத்தியதோடு,உயர்நீதிமன்றம்,உச்சநீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தியது மக இகவும் அதன் தோழமை அமைப்புகளும்.
     மக இக மற்றும்  அதன் தோழமை அமைப்புகளை தவிர மேற்கண்ட  கல்வி பிரச்சனைகளுக்காக மட்டுமல்ல வேறெந்த மக்கள் நலனுக்காக போரடக்கூடிய ஜனநாயக அமைப்புகளே ஒருவரும் இல்லை என்ற மிக அவலமான சூழலில் தமிழக மக்கள் அரசியல் ரீதியாக அனாதையாக்கப்பட்டுள்ளனர்.இந்த வெற்றிடத்தை நக்சல்பாரி புரட்சியாளர்களாகிய மக இகவும் அதன் தோழமை அமைப்புகளும் இட்டு நிரப்பும் வகையில் தான் தன்னுடைய முழுபலத்தையும் பயன்படுத்தி போராடி வருகிறது இந்த அமைப்புகளின் தோழர்கள் அள்ளும்,பகலும், அயராது போராடி வருகிறது.
     சமச்சீர் கல்வி,கல்விகட்டண நிர்ணயம் ஆகிய பிரச்சனைகளில் இப்புரட்சிகர அமைப்புகளின் போரட்டங்களை சமச்சீர் கல்வி ஆதரவு ஊடகங்கள் தவிர்க்கவியலாமல் வெளியிட்டே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் காரணமாக வரம்புக்கு உட்பட்டு வெளியிட்டு வருகின்றன.இப்படி கிடைத்த விளம்பரங்களின் மூலம் இவ்வமைப்புகள் வேறேப்போதும் இல்லாத வகையில் ஆளும்வர்க்க ஊடகங்களால் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக தாம் நடத்தும் போரட்டங்களில் பெருமளவில் மக்கள் அதிலும் பெற்றோர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் இதன் மூலம் தமது அமைப்புகளில் இணைவார்கள் என்றும் வேறேப்போதும் இல்லாதவகையில் தந்து சக்தியை அதிகரித்துக்கொள்ளமுடியும் என்று எதிர்பார்த்தனர்.ஆனால் இவர்களின் எதிர்பார்ப்பு,குறிப்பிட்டு சொல்லும்படியான அளவிற்கு நிறைவேறவில்லை.இதன் காரணமாக தமது வழமையான புரட்சிகர செயல்பாடுகளில் சிற்சில சமரசங்களை செய்துகொண்டனர்.இதை தம்து மக்கள் திரள் அமைப்புகளான மக இக,புமஇமு,புஜதொமு,விவிமு ஆகிய அமைப்புகள் மூலம் அல்லாது மனித உரிமை பாதுகாப்பு மையம் மூலம் நடைமுறைப்படுத்தினர்.இவர்கள் மூலம் நீதிபதி கோவிந்தராசன் குழு,நீதிபதி ரவிராசன் குழு ஆகிய இரு குழுகளும் நிர்ணயத்தை தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை நடைமுறைப்படுத்த கோரி தமிழகம் எங்கும் போரட்டங்களை நடத்தினர்.இது மக்களிடையே போதுமான தாக்கதை ஏற்ப்படுத்தாத காரணத்தினால் மக இக,புமாஇமு ஆகிய அமைப்புகளையும் களத்தில் இறக்கி மேலும் ஒரு சமரசத்தை செய்துகொண்டனர்.புஜதொமு,விவிமு ஆகிய அமைப்புகளை இவ்விரு விவகாரங்களிலும் ஈடுபடுத்தாமல் இருந்த இவர்கள் தற்போது விவிமு அமைப்பையும் களத்தில் இறக்கிவிட்டுள்ளனர் என்பதை 27.07.2011 அன்றைய நாளிதழ்களில் வந்துள்ள செய்திகளின் மூலம் அறிய முடிகிறது.இரு நீதிபதி குழுக்களின் கட்டணநிர்ணயத்தை நடைமுறைப்படுத்த கோருவது கல்வியில் தனியார்மயத்தை ஆதரிப்பதாகும் என்பதை பற்றிக்கூட கவலைப்படாமல்,எப்படியாவது மக்களிடையே பிரபல்யம் அடைந்து விட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுவருகின்றனர்.
     தமிழகத்தில் சமச்சீர்கல்விக்காக அமைப்பு ரீதியாக வேறு எவரும் போராடாத சூழலில் இவ்வமைப்புகள் மட்டுமே தன்னந்தனியாக நின்று போராடி இதில் வரலாற்றில் குறிப்பிடும் படியான வெற்றியையும் சாதித்துள்ளன.இவ்விவகாரத்தில் சிபிஎம் போலிகள் சமச்சீர்கல்விக்கு பார்ப்பன ஜெயா கொண்டுவந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு சமச்சீர்கல்விக்கு ஆதரவாக போராடி மக இகவும் அதன் தோழமை அமைப்புகளும் ஈட்டியுள்ள வெற்றியின் பலனை அறுவடை செய்துகொள்ளும் ஈனச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.தற்போது கருணாநிதி கட்சியும் களத்தில் குதித்துள்ளது இப்போரட்டத்தின் மூலம் மக்களிடையே தமக்கு கிடைத்துள்ள பிரபல்யம்,ஆதரவை தமது உழைப்புக்கேற்ற பலனை அறுவடை செய்துகொள்ளும் நோக்கில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தினால் அது தனியார் கல்விக்கட்டணக்கொள்ளைக்கு முடிவுகட்டிவிடும் என்று பரப்புரை செய்துவருகின்றனர்.சமச்சீர்  கல்வி நடைமுறைப்படுத்தினால்,அப்படி நடைமுறைப்படுத்திய ஒரிரு மாதங்களிலேயே தாம் கூறும் காரணம் உண்மையல்ல என்பது மக்களுக்கு தெரிந்து தாம் மக்களிடையே அம்பலப்பட்டு என்பதைப்பற்றி கூட சிறிது கவலைபடாமல் மீண்டும்,மீண்டும் அதையே கூறிவருகின்றனர்.அந்த அளவிற்கு இந்த விடயத்தை பயன்படுத்தி பிரபல்யம் அடைந்து விட வேண்டும் என்று துடியாய்துடிக்கின்றனர்.இதன் உச்சகட்டமாக உண்ணாவிரதம் என்பதையே சிறையை தவிர சமூகத்தில் வேறெங்கும் ஏற்காத இவர்கள்.மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மூலம் முதன் முறையாக உண்ணாவிரம் இருந்தனர்.
     கடந்த இருபந்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக போர்க்குணமான போரட்டங்களை மட்டுமே நடத்தி தனக்கென தனி  வரலாற்றை உருவாக்கி இருந்த இவர்களை ஆளும்வர்க்கங்களும் அதன் ஊடகங்களும் நக்சலைட் தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தியுள்ளதை காந்தியவழியிலான உண்ணாவிரம் போன்றவற்றை நடத்தினால் அதிலாது மக்கள் பெருமளவில் கலந்து கொள்வர்கள் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துவிட்டது.இந்த உண்ணாவிரதங்களில் மனித உரிமை பாதுகாப்பு மையம் தனது உறுப்பினர்களை கொண்டே நடத்த முடியாமல் தமது தோழமை அமைப்பு உறுப்பினர்களையும் மறைமுகமாக கலந்துகொள்ள செய்ததின் மூலம் ஆளும்வர்க்கங்களுக்கே உரித்தான உண்ணாவிரதம்  என்ற வடிவத்தோடு போலித்தனமும் இவர்களை தொற்றிக்கொண்டுவிட்டதை இந்நிகழ்வு அம்பலப்படுத்திவிட்டது.ஆனாலும் இப்புரட்சிகர அமைப்புகள் தம்முடன் நெருங்கி வரும் மகிழ்ச்சியில் ஆளும்வர்க்க ஊடகங்கள் இப்புரட்சிகர அமைப்புகளின் ஏனைய போரட்டங்களுக்கு தாம் தரும் முக்கியத்துவத்தை விட ஆக கூடுதலான முக்கியத்துவம் தந்து செய்திகளை வெளியிட்டன.சமச்சீர்கல்வியை கருணாநிதி கொண்டுவந்தற்கும்,இதை உயர்நீதிமன்றமும்,உச்சநீதிமன்றமும் ஆதரித்து தீர்ப்புகள் வழங்கியதற்கும்,கார்ப்பரேட் மூலதனத்தின் தேவை மற்றும் நலனுக்காகத் தான் என்ற அடிப்படை உண்மையை மக்களிடையே கூறிவிட்டால் இதன் வெற்றிக்காக சமுகத்திலும்,நீதிமன்றங்களிலும் தான் போரடியதால் தான் இவ்வெற்றி கிடைத்தது என்பதில் முக்கியத்துவம் குறைந்து மக்களிடையே தான் எதிர்பார்க்கும் பலனை அடையமுடியாது என்பதால் தான் தேர்தல் காலத்தில் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் மக்களிடையே உண்மைக்கு புறம்பான செய்திகளை கூச்சமோ,தயக்கமோ இல்லாமல் இவர்களும் சமச்சீர்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டால் அது தனியார் கல்விகட்டணக்கொள்ளையை தடுத்துவிடும் உண்மைக்கு புறம்பான செய்தியை எவ்வித தயக்கமும் இன்றி மக்களிடையே பரப்புரை செய்து வருகின்றனர்.சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தால் அது தனியார் கட்டணகொள்ளையை தடுத்துவிடும் என்ற கூற்றில் உண்மையில்லை என்பதையும் இக்கூற்று உள்முரண்பாடு நிறைந்துள்ளதையும் எமது சென்றக்கட்ரையிலேயே எழுதியிருந்தோம்.சமச்சீர் கல்வியை கொண்டுவந்த கருணாநிதியும் இதை உறுதிபடுத்திய உயர்நீதிமன்ற,உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கல்வியில் தனியார்மய எதிர்ப்பாளர்கள் என்ற கண்ணோட்டத்தை மக்களிடையே விதைப்பதையும்,இதன் மூலம் இப்புரட்சிகர அமைப்புகளின் அயராத உழைப்பை எதிர்வரும் தேர்தல்களில் கருணாநிதியும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் அருவடை செய்துகொள்ளபோகிறார்கள் என்பதற்கு மேல் இப்புரட்சிகர அமைப்புகள் வேறு எதையும் சாதிக்க போவது இல்லை.விரைவில் இவர்களுக்கு காலம் உணர்த்தும்.ஆனால் இவர்களை ஆளும்வர்க்க ஊடகங்களால் கிடைத்த விளம்பரமும்,பிரபல்யமும் மேற்கண்ட உணமையை காணவுட்டது இவர்களின் அறிவுக்கண்ணை மறைத்துவிட்டது.சரியோ,தவறோ தமது வழமையான பாணியில் அனைத்து அமைப்புகளும் ஒரே குரலில் தமது கருத்துகளை பிரதிபலிக்காமல் தம்க்குள்ளேயே முன்னுக்குபின் முரணாக பேசியும்,எழுதியும் வருகின்றனர்.இப்படு தாங்கள் செய்வதால் அது மக்களிடையே குழப்பத்தையும் தனது முரண்பட்ட நிலை குறித்த கேளிவியை ஏற்படுத்துமே என்பது பற்றிகூட இவர்கள் சிறிதும் கலைப்படவில்லை.இப்புரட்சிகர அமைப்புகள் வாழ்நாளில் முதன் முறையாக மக்களை முட்டாள்களாகவும்,மூடர்களாகவும் கருதுவதையே மேற்கண்ட நிகழ்வுகள் உறுதிபடுத்துகிறது.மேலும மக்களை ஆக்கமற்றவர்களாக கருதுவதால் தான் மக்கள் போரட தாயாரில்லை என்று மக்களை குற்றம் சாட்டிவிட்டு தம்மை கதாநாயகர்களாக காட்டிக்கொள்ளும் நோக்கில் தான் 48 மணி நேர உண்ணவிரத போரட்டத்தை நடத்தினர்.ஆளும்வர்க்க ஊடகங்கள் துணையேடு தமது அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பொருளாதார பலம்படைத்த ஒருவரை கதாநாயகனாக மக்கள் மனங்களிலே வலிந்து திணித்து வருகின்றனர்.
     அதோடு புதியஜனநாயக பத்திரிக்கைக்கு முரணான கருத்தை மக இகவின் புதிய கலாச்சாரம் முன் வைக்கிறது.இதைவிட மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் இணையதளமான வினவு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான் ஜெயா சமச்சிர்கல்வியை ரத்து செய்ய முனைவதாக தமது அமைப்பு நீதிமன்றத்தில் நிருபித்துள்ளதாக எழுதி புளகாங்கிதம் அடைகிறது.
     இப்படி இம்மூன்று ஊடகங்களும் மூன்று வெவ்வேறான காரணங்களை சமச்சீர்கல்வி விவகாரத்தில் முதன்மையான காரணம் என்று முன்னிலைப்படுத்துகின்றன்.ஒரே லட்சியத்திற்காக செயல்படும்  இவர்கள் இவ்விவகாரத்தில் தமக்குள்ளேயே எதிரும்,புதிருமான ,முன்னுக்குபின் முரணான கருத்துகளை முன் வைக்கிறோமே என்பதைப் பற்றி சிறிதும் இவர்கள் கூச்சப்படவில்லை.ஆனால் ஒரு விடயத்தில் மாத்திரம் இவர்கள் இடையேயான ஒற்றுமை மிக வலுவாகவே உள்ளது.
     சமச்சீர்கல்வியை ஆளும்வர்க்கங்கள் கொண்டுவந்ததற்கான அடிப்படையான பொருளியல் காரணத்தை மக்கள் தெரிந்துகொள்ளகூடாது என்பதில் மட்டும் இவர்களிடையே உள்ள ஒற்றுமை தான் அது.ஒருவேளை ஒரே கரணத்தை சொன்னால் அது சமூகத்தில் ஒரு தரப்பு மட்டுமே ஏற்க கூடிய இருக்கும்.ஆகையால் ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துகளை மக்களிடையே கொண்டுசென்றால்,அது சமுகத்தில் உள்ள அனைத்து பிரிவையும் திருப்தி செய்து தமக்கு வலுசேர்க்கும் என்று கருதி தமக்கிடையே வேலை பிரிவினை செய்துகொண்டிருக்கிறார்களோ என்னவோ!ஒரு வேலை சிபிஎம் இடமிருந்து இவ்வித்தையை இவர்கள் கற்றுக்கொண்டிருக்கலாம்.இதைபோன்ற நிகழ்வுகளைத் தான் அடிப்படையாக கொண்டு விரைவில் இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் அனைவரும் ஒன்று சேருவோம் என்று சில காம்ரேட்டுகள் கூறுகிறார்களோ!
     சரி,எது எப்படியோ நடக்கட்டும் நாம் இக்கட்டுரையின் விமர்சனத்துக்கு உட்படுத்தியுள்ள புரட்சிகர அமைப்புகள் வேறேப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது தமக்கிடையிலேயே ஒருவருக்கு எதிராய் ஒருவர் நிலைப்பாடுகளை முன்வைப்பது ஏன் என்பதையும்,அந்நிலைப்பாடுகள் ஒவ்வொன்றுக்குள்ளேயும் முரண்பாடுகள் உள்ளதையும்,அவைகள் என்ன,என்ன என்பதையும்,இவைகள் அரசியல் சித்தாந்த ரீதியாக எத்தகைய தன்மைகொண்டது என்பதையும்.இவைகள் எந்த வர்க்கங்களின் நலனை பிரதிபலிக்கின்றன என்பதையும்,ஒவ்வொரு சோல்லுக்கும்,செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் நலன் ஒலிந்துகொண்டிருக்கிறது என்ற ஆசான் மாவோ கூறிய கோட்பாட்டு ஒளியில் இனி அவற்றை பரிசிலிப்போம்.
                                                     
                           புரட்சிகர வாழ்த்துகளுடன்
                            சூறாவளி நிர்வாகக்குழு.
     .
                                                      தொடரும்


தொடர்புடைய கட்டுரைகள்:
                      


3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2

6.முரண்பாடுகளின் மூட்டையாகிப் போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-4

Friday, 12 August 2011

சமச்சீர்கல்வி முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -பாகம் 4

முரண்பாடுகளின் மூட்டையாகிப் போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-4






     வினவும் அதன் தோழமை அமைப்புகளும் சமச்சீர் கல்வி விடயத்தில்  அதிலும் இவ்வமைப்பின் மூன்று ஊடகங்கள் ஒவ்வொன்றும் தமக்கிடையியே மட்டுமல்ல,தமக்குள்ளேயே முரண்பட்ட கருத்துகளை வைத்துள்ளன என்பதை கூர்ந்து பார்த்தபோது தான் இவைகள் பாட்டாளிவர்க்க அமைப்புகள்தானா?,ஏன் இந்த தடுமாற்றம் ஆகிய ஐயங்களை எமக்குள் ஏற்படுத்தியது.தமது முரண்பாடுகளையும்,தவறுகளையும் ஏனையோர் சுட்டுக்காட்டுகிறார்களா இல்லையா, என்பதைவிட தமது கருத்துகள் தவறானவை என்று தெரியவந்தால் யாரும் சுட்டிக்காட்டுவதற்கு முன்பே தனது தவறான கருத்துகளுக்காக சுயவிமர்சனம் ஏற்பது தான் தனிமனிதர்களாயினும்,ஒரு அமைப்பாயினும் பாட்டாளிவர்க்க சித்தாந்தத்தால் வழிநாடத்துபவர்களின் அனுகுமுறையாக இருக்கமுடியும்.
     ஆனால் இந்த அமைப்புகளோ தமக்கிடையில் மட்டுமல்ல தமக்குள்ளோயே எதிரும்,புதிருமான கருத்துகளை முன்வைத்துக்கொள்கின்றன.இதன் மூலம் தமது அமைப்பின் உறுப்பினர்களை மட்டுமல்ல, சமூகத்திலுள்ளவர்களையும் ஏமாளிகளாகவே பார்க்கின்றனர்.இந்த வரிசையில் நாம் முதலில் புதிய ஜனநாயகத்தையும்,இவ்விதழ் தனக்குள்ளேயே எப்படி முரண்பட்டு நிற்கிறது என்பதை இனி பார்ப்போம்
     2010 ஜீன் இதழில் தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை பற்றி….
சட்ட பூர்வமானது,கல்விக்கட்டணக் கொள்ளை”,என்ற தலைப்பில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளது.
     ”தவறை எதிக்க துணியாத,நியாயத்திற்காக போராட விரும்பாத தன்னலம்,இந்த தன்னலமும்,ஆங்கில வழிக்கல்வின் மீது அவர்களுக்கு இருக்கும் முட்டாள்தனமான மோகமும்தான் மெட்ரிக் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு அடிப்படையாக இருக்கிறது”, என்றும்,
     ”கல்வி வள்ளல்கள நடத்திவரும் கட்டணக்கொள்ளையை சட்டம் போட்டு தடுத்துவிட முடியும் என்பது ,கடப்பாறையை முழுங்கிவிட்டு,சுக்குக் கசாயம் குடிப்பது போன்றது.அரசுப்பள்ளிகளையும்,கல்லுரிகளையும் தரமாக நடத்தக் கோருவதும்,தாய்மொழி வழியாக ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரை கொடுக்க கோருவதும்தான்,இப்பிரச்சனைக்கு ஒரேத்தீர்வு,மாற்று.தனியார்மய மோகத்தாலும்,ஆங்கிலவழிக்கல்வி மீது இருக்கும் குருட்டுத்தனமான பக்தியின் காரணமாகவும் நடுத்தர வர்க்கம் இவ்வுண்மையை புரிந்துகொள்ள மறுக்கிறது.இதனை புரிந்து கொண்டு கல்வி தனியார்மயமாவதை எதிர்த்து போராடாத வரை இக்கட்டணக்கொள்ளை என்ற சிலுவையை அவ்வர்க்கம் சுமந்துதான் தீரவேண்டும்”, என்று தெளிவாகவும்,முரணற்ற வகையிலும் எழுதிய புஜ இதே விடயங்களில் இப்போது என்ன கருத்து,
     
      ”சமச்சீர் கல்வி ரத்து                                                                                                                         
     தனியார் பள்ளிக் கட்டண கொள்ளைக்கு
     ஜே! ஜே!! என்றக்கட்டுரையில்
    
       ”அரசுப்பள்ளிகளிலும்,தனியார் பள்ளிகளிலும் ஒரேவிதமான பொதுப்பாடதிட்டமும்,பொதுபாடநூல்களும் போதிக்கப்பட்டால்,தனியார் பள்ளிகளுக்கு அநியாயமன கல்விக்கட்டணம் எதற்கு செலுத்த வேண்டும் என்றக்கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்து அவர்கள் தனியார் பள்ளிகளை புறக்கணிக்கவும் தொடங்குவார்கள்”,என்று 2011 ஜீலை புஜ இதழில் எழுதி தனக்குள்ளே முரண்பட்டு நிற்கிறது.தமது நிலைப்பாடுகளை தமது உறுப்பினர்களால் ஒப்பிட்டு பார்க்க இயலாது என்பதால் தான் எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் என்று புஜ ஆசிரியர்குழு கருதுமானால் அதற்காக நாங்கள் மீண்டும் ஒரு முறை அதிர்ச்சியடைந்துவிடமாட்டோம்.ஆனால் புஜ இதழ் இவர்களின் உறுப்பினர்களுக்கு மட்டுமா கொடுக்கிறார்கள்.எங்களை போன்றவர்களுக்கும் அல்லவா தருகிறார்கள்! தாம் சார்ந்துள்ள தமிழ்ச்சமூகம் முழுவதின் ஒப்பீட்டு திறன்களையும் தாங்கள் மழுங்கடித்துவிட்டதாக இவர்கள் கருதுகிறார்களா?
     மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்பு உறுப்பினர்களின் புரிதலுக்காக,இதற்கு முன்னர் சற்று விரிவாக கருத்துகளின் சுருக்கமான வடிவத்தை கீழேத்தருகிறோம்.
     தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு காரணமும்,அதை தடுப்பதற்கான வழிமுறை என்றும் 2010 ஜீன் இதழில்……
     ”பெற்றோர்களின் ஆங்கில வழி கல்வி மீதான முட்டாள்தனமான மோகம்”,
     ”தனியார்மய மோகம்,ஆங்கில வழி கல்வி மீது இருக்கும் குருட்டுத்தனமான பக்தியும்”,என்று எழுதியது.
     ஆனால் 2011 ஆண்டு ஜீலையில் அதே இதழ் கூறுவதை கேளுங்கள்.
     ”அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே விதமான பாடத்திட்டம்,பாடநூல்கள் போதிக்கப்பட்டாலே தனியார் கல்விக்கட்டணம் ஒழிந்துவிடும்”,என்கிறது.
     தனியார் கல்விக்கட்டண கொள்ளையை தடுக்க சென்ற 2010 ஜீனில் இவர்கள் எழுதியக்காரணம் சரியானதா? அல்லது 2011 ஜீலையில் கூறும் காரணம் சரியானதா? ஒன்று சரியென்றால் மற்றொன்று தவறாகத்தானே இருக்க முடியும்?ஒருவேளை இவர்களின் அகராதியில் இரண்டுமே சரியான காரணமா?
     பெற்றோர்களின் ஆங்கில வழிக்கல்வி மீதான முட்டாள்தனமான மோகமும்”,சமச்சீர் கல்வி போதிக்கப்பட்டால் ஒழித்துவிடுமா? அது எப்படி?
     சமச்சீர் கல்வி என்பதே இவர்கள் குறிப்பிடுவது போன்று பொதுப்பாடநூல் தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில் கற்பிக்கப்படுவதுதான்.கற்பிக்கப்படும் பாடம் ஆங்கிலமா,தமிழா என்பது அல்ல?
     சமச்சீர் கல்வியானாலும் அவைகள் மெட்ரிக்பள்ளிகளில் ஆங்கிலத்தில்தான் கற்பிக்கப்படும்.ஒரேவிதமான பாடத்திட்டம்,பாடநூல்கள் வந்துவிட்டாலும் அது மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலத்திலும்,அரசு பள்ளிகளில் தமிழிலும் தானே கற்பிக்கப்படும்.இதன் மூலம் பெற்றோர்களிடன் ஆங்கில வழி கல்வி மீது இருக்கும் குருட்டுத் தனமான பக்தி”.எப்படி ஒழிந்துவிடும் எனபதை புதிய ஜனநாயகமும் அதன் தோழமை அமைப்புகளுமே நமக்கு விளக்க வேண்டும்.
     இவர்கள் குறிப்பிடுவதைப் போன்று அரசுப்பள்ளிகளிலும்,தனியார் பள்ளிகளிலும் ஒரேவிதமான பொதுப்பாடத்திட்டம்.பொதுப்பாட நூல்கள் போதிக்கப்பட்டால்,தனியார் பள்ளிகளுக்கு அநியாயமாக கல்விக்கட்டணம் எதற்காக செலுத்தவேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுவது இருக்கட்டும்!சமச்சீர் கல்விக்காக விண்ணுக்கும்,மண்ணுக்கும் இடையே எகிறி,எகிறி குதிக்கும் உங்கள் அமைப்புகளின் உறுப்பினர்களிடம் முதலில் அந்த உணர்வு ஏற்பட்டு விட்டதா?இந்த உணர்வு வந்த உங்கள் உறுப்பினர்களில் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை தனியார் ஆங்கிலப் பள்ளிகளிலிருந்து மாற்றுச்சான்றிதழ் திருப்பப்பெற்று அரசு தமிழ்ப்பள்ளிகளில் சேர்த்துவிட்டுள்ளனர் என்பதை சொல்ல முடியுமா உங்களால்? நீங்கள் ஊருக்கு உபதேசிப்பது இருக்கட்டும்! முதலில் உங்கள் தோழர்களிடம் உள்ள ஆங்கில வழி மோகம்,தனியார்மய மோகம்,ஆங்கிலவழி கல்வி மீதிருக்கும் குறுட்டுதனமான பக்தி ஆகியவற்றுக்கு எதிராக போராடுங்கள்.இவைகளெல்லாம் உங்கள் தோழர்களிடம் இல்லையேன்றால்.சம்ச்சீர் கல்வி வந்துவிட்டால் பொது பாடத்திட்டம்,பொது பாடநூல்கள் போதிக்கப்பட்டாலே.தனியாருக்கு எதற்காக அநியாயமாக கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அவர்களால் ஏன் யோசிக்க முடியவில்லை என்றாவது கூறுங்கள்?
     ஈரோடு மாவட்ட ஆட்சியர் தனது குழந்தையை தமிழ் வழியில் சேர்த்துவிட்டு,தனது குழந்தை எங்கு படித்தாலும் நன்றாகவே படிக்கும் என்று கூறி தனது நேர்மையை நிருபித்தாரே! அந்த நேர்மை உங்களில் எத்தனை பேருக்கு வந்தது என்பதை மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்க்கலாம்.



     நாட்டில் குழந்தைகள் சமச்சீர் கல்வி பெறுவது இருக்கட்டும் முதலில் உங்கள் அமைப்புகளில் உள்ள தோழர்களுக்கு சமச்சீரான சிந்தனையை போதியுங்கள்!
     சமூகத்தில் உள்ள சராசரி மனிதர்களைவிட-சமச்சீர் கல்விக்காக போராட முன்வராத,அதை புரிந்து கொள்ளாத-அந்த வகையில் சமச்சீர் கல்விக்காக போராடுகின்ற உங்கள் உறுப்பினர்களில் எத்துனைபேர் நேர்மையானவர்கள்?அப்படி நேர்மையிருந்தால் அவர்கள் தங்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் சேர்த்திருக்கலாமே?
     உங்கள் அமைப்புகளில் வர்க்க அடிப்படையில் தான் ஏழைகள் தமது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளிலும்,வசதி படைத்தோர் தமது பிள்ளைகளை தனியார் ஆங்கிலப்பள்ளிகளிலும் தான்,படிக்க வைக்கின்றனர்.சமச்சீர் கல்விக்காக உச்சநீதிமன்றம் சென்று போராடி வெற்றி பெற்ற நீங்கள் வழக்கு வெற்றி பெற்ற பிறகாவது உங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் சேர்த்திருக்கலாமே? சமச்சீர் கல்விக்காக போராடி புர்ரச்சிகர சிந்தனையை சமூகத்தில் நீங்கள் கொண்டு வருவது இருக்கட்டும்.முதலில் உங்கள் அமைப்புகளில் உள்ள பணக்கார உறுப்பினர்களுக்கு போதியுங்கள்.எல்லாம் தெரிந்த உங்கள் பணக்கார உறுப்பினர்களே தமது பிள்ளைகளை தமிழ்வழி அரசுப்பள்ளிகளில் படிக்கவைக்க முன்வராத போது சமச்சீர் கல்விக்காக போராடாத,சமச்சீர் கல்வி என்றால் இன்னமும் புரிந்துகொள்ளாத மனிதர்களான நாட்டின் பெரும்பானமை மக்கள் தமது பிள்ளைகளை தமிழ் வழி அரசுப்பள்ளியில் சேர்ப்பார்கள்  என்று இன்னமும் நீங்கள் காதில் பூ சுற்ற நினைக்கிறீர்கள்.எதையாவது சொல்லி தொலையட்டும் என்பது தான் 09.08.11 வரையிலான மக்களின் கருத்து ஆகும்.சமச்சீர் கல்வியில் பார்ப்பன ஜெயாவின் பிடிவாதமும்,அகம்பாவமும்தான் ஜெயாவுக்கு எதிரான கருத்தாக உருவெடுத்துள்ளது.ஒருவேளை உங்கள் நிலைபாட்டின்படி தனியார்ப்பள்ளி முதலாளிகளின் கல்வி கொள்ளையை ஆதரித்து,நீதிபதிகள் சமச்சீர்கல்வியை தடை செய்திருந்தால் இந்த தீர்ப்புக்கு எதிராக நீங்கள் மேல் முறையீடு செய்துவிட்டு தெருவிற்கு வந்திருந்தால் போகிற,வருகிற பெற்றோர்களில் நூற்றுக்கு தொன்னூறு பேர் நீங்கள் மேல்முறையீடு செய்தற்காகவே உங்களை கல்லாலேயே அடித்திருப்பார்கள்.
     மக்களிடையே இன்று ஜெயாவுக்கு எதிராக உள்ள கோபம் நாளை கருணாநிதிக்கு ஓட்டாக மாறப்போகிறது.ஒரு வேளை அந்த கோபம் உங்களுக்கு எதிராக மக்களிடையே வந்திருந்தால்.அது கல்லடியாக மாறியிருக்கும்.இதுதான் உங்கள் நிலைப்பாட்டிற்குள் நிறைந்துள்ள முரண்பாட்டின் இயல்பான விளைவாகும்.  
     சமச்சீர் கல்வி கார்ப்ரேட் மூலதனத்தின் தேவை என்பதால்தான் அது சமச்சீர் கல்விக்கு ஆதரவான நீதிமன்ற தீர்ப்பாய்,நீதிபதிகளின் வழியாய் வெளிப்பட்டு,அதன் மூலம் மக்களிடையே ஜெயாவுக்கு எதிரான கருத்தாய் உருவாகி கருணாநிதிக்கு ஓட்டாய் மாறப்போகிறது.நீங்கள் கூறுவதை போன்று சமச்சீர்கல்வி தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக்கொள்ளைக்கு எதிரானதாக இருந்திருந்தால் அது நீதிபதிகளின் தீர்ப்பாய் வெளிவந்து மக்களிடையே அது ஜெயாவுக்கு ஆதரவான நிலையையும்,உங்களுக்கு எதிரானதாகவும் மாறி இருக்கும்.உங்களின் காலம் கார்ப்ரேட் முதலாளித்துவம் உங்களை காப்பாற்றி விட்டது.உங்களை மட்டுமா, உங்கள் ஆதரவாளர்களான எங்களையும் அல்லவா அது,காப்பாற்றி விட்டது! எங்களுக்கு நல்ல காலம்தான் போங்கள்.
     இந்த நல்ல காலம் உங்களுக்கு எத்தனை மாதம் என்பதுதான் இப்போதைய அடுத்த பிரச்சனை,ஆனாலும் முதலில் இருந்த கல்லடி ஆபத்து இப்போது உங்களுக்கு ஏற்படாது,ஏனென்றால் ,கருமம் ஏதோ ஒரு புத்தகம் பிள்ளைகளுக்கு கிடைத்துவிட்டதே என்ற திருப்தியில் தனியார் கல்விக்கட்டணம் குறையும் என்ற உங்களின் ஆருடம்,புவி ஈர்ப்புவிசைக்கு எதிராக மனிதர்களை அந்தரத்தில் இருத்துவேன் என்ற நித்யானந்தாவின் ஆருடத்தை போன்று பொய்த்துப்போனாலும் கல்லடியாய் மாறாது,ஆனால் இனி உங்களின் நிலைப்பாடுகள்,கணிப்புகளுக்கு உங்கள் ஆதரவாளர்கள் இடையே மதிப்பு இருக்காது.இன்னமும் நீங்கள் புரட்சிகர சக்திகள்தான் என்றால்,இப்போதாவது யோசித்து பாருங்கள் உங்களின் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்காக பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்து கொள்ளுங்கள்.சீர்திருத்த பாதையில் இருந்து,புரட்சிகர பாதைக்கு திரும்புங்கள்.
     இதை நீங்கள் செய்ய மறுத்தால் பார்ப்பன ஜெயா,கருணாநிதி என்ற இருவரோடு நீங்கள் மூன்றாவது சக்தியாக மாறுவதை நோக்கிதான் பயணிக்க வேண்டியிருக்கும்.மூன்றாவது சக்தியாக மாற நீங்கள் முடிவெடுத்து விட்டால் விஜயகாந்த்,டாக்டர் ராமதாஸ்,தொல்.திருமா ஆகிய அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிவிடுவீர்கள்.
     அது,எப்படியப்பா,எங்கள் ஆருடம் பொய்த்து போய்விட்டதே! பிறகு எப்படி எங்களை மக்கள் மூன்றாவது சக்தியாக ஏற்றுக்கொள்ளுவார்கள் என்ற நுட்பமான சந்தேகத்தை உங்களின் ‘ஏழர’ போன்ற ரசிகர்கள் மூலம் வெளிப்படுத்தலாம்.அந்த அளவுக்கு கூட எதற்கு உங்களுக்கு சிரமம் தருவானே,அப்படி ஒரு சிரமமே இல்லாமல் இப்போதே அதையும் நாங்களே சொல்லிவிடுகிறோம்.தனியார் கல்வி கட்டணம் குறைந்துவிடும் என்ற ஆருடம் பொய்த்து போனதால்,மொத்த பெற்றோர்களில் உங்கள் கணக்குப்படியே வெறுமனே 2% மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் மட்டுமே அதுவும் இப்போது உங்கள் பிரச்சாரத்தில் மயங்கி ஏமாந்து உங்கள் பெற்றோர் சங்கத்தில் செர்ந்திருக்கிறார்களே,அவர்களிடம் மட்டுமே ஏமாற்றத்தை ஏற்படுத்தும்.அப்படிப்பட்ட பெற்றோர்களின் எண்ணிக்கை எத்தனை பத்துபேர் என்பது எங்களை விட உங்களுக்கு தானே துல்லியமாக தெரியும்.என்னைய பெரிதாய் மிரட்டுகிறாய் உயர்நீதிமன்றம்,உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடிய எங்களால் புரட்சி தலைவியையே தோற்கடித்த எங்களால், இதை சமாளிக்கத்தெரியாதா என்கிறீர்களா! அதுவும் உண்மை தான்.நித்தி,ஜெயா போன்று அதை பற்றி சிறிது காலம் வாயை மூடிக்கொண்டாலே அவன்,அவன் மறந்துவிட்டு போகிறான் என்கிறீர்களா? அதுவும் சரிதான்

     என்னப்பா சென்ற மூன்று கட்டுரைகளை ஒரு மாதிரியாக எழுதிவிட்டு,இதை ஒரு மாதிரியாக எழுதுகிறார்களே என்று பார்க்கிறீர்களா? என்ன செய்வது! இதை யாருக்கு எழுதுகிறோமோ அவர்களுக்கு சென்று சென்று சேரவேண்டுமே! அதனால்தான் அவர்களுக்கு புரிகிற மொழியில்,புரிகிற பாணியில் எழுத வேண்டியிருக்கிறது.
     இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்,சித்தாந்த நிலைப்பாடுகளை இவ்வளவு எளிமையாகவும்,எழுத முடியுமா? என்கிறீர்களா? வேறென்ன செய்வது தமது சமூக அடித்தளம் அப்படியாயிற்றே! இதனால்தான் ஆடுற மாட்டை,ஆடிக் கறக்கனும்,பாடுற மாட்டை பாடிக்கறக்கனும் என்று மெட்ரிக் பள்ளிகளில் படிக்காத எமது முட்டாள் பாட்டன்மார்கள் ஒரு பழமொழியை எங்களை போன்று மெட்ரிக்பள்ளிகளில் தமது பிள்ளைகளை சேர்க்காத,முட்டாள் பேரண்களுக்கு சொல்லிவிட்டு வேறு சென்றிருக்கிறார்கள்.ஒன்று அப்படி இருக்கனும்,இல்லனா இப்படி இருக்கனும் இரண்டுமே இல்லாம மூன்றாவது ஒன்னா! நாங்க இருக்க விரும்பல அதனாலதா நாங்க எங்களுக்கு தெரிந்தவகையில் இப்படி இருக்கிறோம்.
     சரி! நமது வழமையான ஏனைய மூன்று கட்டுரைகளின் பாணிக்கு,சிறிது திரும்புவோம்.மா-லெ-மா என்பது சமூகவிஞ்ஞானம்,இந்த விஞ்ஞானம் ஒரு போதும் தோற்காது.அதே நேரத்தில் இந்த விஞ்ஞானம் மனிதர்களால் மிகச்சரியாக பிரயோகிக்கப் படாவிட்டால்,வெற்றியும் பெறாது.ஆகவே,மா-லெ-மா வின் வெற்றி அதன் அடிப்படையில் அமைப்பாக்கப்பட்ட மக்கள் சக்தியின் மூலமே சாத்தியம் ஆகும்.பூமி தட்டை என்று கூறுவது மிகவும் எளிமையானது அதற்கு நிரூபணம் எதும் தேவையில்லை.ஆனால், பூமி உருண்டை என்று சொல்பவர்கள் தாம் கூறியதை நிரூபணம் செய்யாமல் சென்றுவிட முடியாது.அதை ஆதாரத்துடன் நிரூபித்தாக வேண்டும்.இதற்கு உட்கார்ந்த இடத்திலேயே,உட்கார்ந்துகொண்டு மூளையை மட்டுமே பயன்படுத்த முடியாது உழைத்தாக வேண்டும்.முளையால் மட்டுமல்ல உடலாலும்! உழைக்க தயங்குபவன் உண்மைக்கு புறம்பான கட்டுக்கதைகளைத்தான் கட்ட வேண்டியிருக்கும்.இதை தொடர்ந்தும் ஆபத்தின்றி செய்ய வேண்டுமானால்,இதை கேட்டுக்கொண்டு இருப்பவர்கள்,கேள்விக்கேட்காமல் இருக்க வேண்டும்.அதற்கு அவர்களை முட்டாள்களாகவே வைத்திருக்க வேண்டும்.
     எந்த மக்களை வென்றெடுத்து புதிய ஜனநாயக புரட்சியை நடத்தப்புறப்பட்டீர்களே,அந்த பாதையில் நீங்கள் எடுத்த சீர்திருத்தவாத பாதை உங்களை,உங்களுக்கு எதிராகவே நிறுத்திவிட்டது.இன்னமுமா உங்களுக்கு புரியவில்லை! சமச்சீர்கல்வி விவகாரத்தில் சந்தர்ப்பவாத,சீர்திருத்தவாத நிலைப்பாடு,மா-லே-மா விற்கு விரோதமானதே என்று!
     தோழர்களே குறுக்குவழியில் பயணப்பட்டு நிலவுகிற சமூக அமைப்பிலேயே ஆட்சியை கூட பிடித்துவிடலாம்.ஆனால் அதன் மூலம் புரட்சியை சாதித்து விட முடியாது,முப்பதாண்டுகளாய் முரணற்று சிந்திக்க முடிந்த உங்களால் இப்போது ஏன் இந்த தடுமாற்றம் முரண்பாடுகளின் மூட்டைகளாய் மாறிப்போனீர்களே ஏன்? பிடிவாதம் பிடிக்காதீர்கள் உங்களின் பிடிவாதத்திற்கும் பார்ப்பன ஜெயா-வின் பிடிவாதத்திற்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.விமர்சனமும்,சுயவிமர்சனமும் கம்யுனிஸ்டுகளின் இரு கண்கள் அதுவே நம்மை,நமது பாதையில் தெளிவாய் போக வழிகாட்டும் ஒளிவிளக்கு இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வாருங்கள் தோழர்களே மீண்டும் ஒன்றாய் பயணிப்போம்…..
                                        தொடரும்……………

                                         புரட்சிகர வாழ்த்துகளுடன்
                                         சூறாவளி நிர்வாகக்குழு.

Wednesday, 10 August 2011

சமச்சீர் கல்வி....! கார்ப்ரேட் மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பன கும்பலுக்கு விழுந்த அடி (மீள் பிரசுரம்)



         தற்போது
உச்சநீதி மன்றத்தில் சமச்சீர் கல்விக்கான இறுதி தீர்ப்பின் மூலம் ஜெய தலைமையிலான பார்ப்பன கும்பல் மண்ணை கவ்வியுள்ள வேளையில்,ஜெயா தலைமையிலான பார்ப்பன கும்பல் கார்ப்ரேட் மூலதன நலனுக்கு எதிராக செயல்பட்டதால் ஏற்பட்ட தோல்வியும்,அதே நேரத்தில் இதற்காக தமிழகம் முழுவதும் அமைப்பு ரீதியாகவும்,நீதிமன்றத்தில் சட்டரீதியாகவும் போரட்டங்களை நடத்திய வினவும் அதன் தோழமை அமைப்புகளின் சீர்த்திருத்தவாத போக்கையும் இத்தருணத்தில் உங்களின் கவனத்துக்கு கொண்டு வரும் நோக்கில் தான் இக்கட்டுரையை மீள்பிரசுரம் செய்கிறோம்








         “சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும்,கருணாநிதி ஆட்சியில் ரூ.200 கோடி செலவில் அச்சடிக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடபுத்தங்களை ஜீலை 22 க்குள் பள்ளிகளுக்கு விநியோகிக்க வேண்டும்,திருத்தம்,சேர்த்தல் இருந்தால் துணைப்பாட புத்தகமாக அச்சடித்து மூன்று மாதங்களுக்குள் தர வேண்டும்”, என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது! இதை எதிர்த்து பார்ப்பன ஜெயா உச்சநீதி மன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஆக 2 க்குள் சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தை பள்ளிகளுக்கு விநியோகிக்குமாறு உச்ச நீதி மன்றம் 21.07.11 அன்று உத்தரவிட்டுள்ளது.இதன் மூலம் ஜெ தலைமையிலான பார்ப்பன கும்பலுக்கு மேலும் ஒரு பலத்த அடியை கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.
உயர்,உச்ச நீதிமன்றங்களின் இந்த தீர்ப்புகளை பார்த்து தமிழகத்தில் உள்ள ஒன்றிரண்டு ஜனநாயக சக்திகள் மட்டுமல்ல, புரட்சிகரசக்திகளும் திகைத்துப்போய் நிற்கின்றன.”இப்படிப்பட்ட தீர்ப்புகள் அபூர்வமானவை ”,என்று சொல்லி புரட்சிகர அணிகளிடையே திகைப்பூட்டுகின்றனர்.ஜெ தலைமையிலான பார்ப்பன கும்பல் தனியார் கல்வி கொள்ளைக்கு ஆதரவாகத்தான் சமச்சீர் கல்வியை ஒழிக்க நினைப்பதாகவும் கல்வியில் கார்ப்ரேட் மயத்தை ஆதரித்து தான் அதை ஒழிக்க நினைப்பதாகவும் கூறி உயர்நீதிமன்றம்,உச்ச நீதி மன்றம் மற்றும் சமச்சீர் கல்வியை கொண்டுவந்த கருணாநிதியும் தனியார் கல்வி கட்டண கொள்ளைக்கு எதிரானவர்கள் என்றும் கல்வியில் கார்ப்ரேட் மயத்திற்கு என்ற தோற்றத்தையும் மறைமுகமாக மக்களிடையே இவர்கள் விதைக்கின்றனர்.இதை விட மேலும் ஒரு படி கீழே சென்று ஒட்டுச்சீட்டு அரசியல் கட்சி பாணியில் அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாகத்தான் ஜெயா சமச்சீர் கல்வித்திட்டத்தை தடுக்க முனைவதாக மக இக வின் மனித உரிமை பாதுகாப்பு மையம் உயர்நீதிமன்றத்தில் வாதாடியுள்ளது.சமச்சீர் கல்வியை முடக்க வேண்டும் என்று ஜெயா நினைப்பதற்கான காரணங்கள் என்று மேற்கண்ட கருத்துகள் முன் வைக்கப்பட்டாலும்,இக்காரணங்களை கூறுவதன் மூலம் மேற்கண்ட புரட்சிகர சக்திகள் இவ்விடயத்தில் எளிதில் ஆதாயம் அடையும்,சீர்திருத்தவாத கண்ணோட்டத்துடன் ,குறுக்குவழியில் பயணிப்பதை, சென்ற கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை கொண்டுவந்த போது, அரசு கொண்டுவந்த பொது பாடப்புத்தகத்தை நீர்த்துபோகச்செய்யும் வகையில் தனியார் பள்ளிக்கொள்ளையர்கள் உச்சநீதிமன்றத்தின் உதவியோடு துணைப்பாட நூல் கொண்டுவருவதற்கான உரிமையை பெற்று கொண்டு, இதன் மூலம் சமச்சீர் கல்வித்திட்டத்திற்கு சென்ற கல்வியாண்டிலேயே சவக்குழி தோண்டியதை பற்றி புதிய ஜனநாயகத்தில் எழுதிய இவர்கள்,தற்போது அவற்றை மூடிமறைத்து விட்டு தனியார் கல்வி கட்டண கொள்ளையை தடுப்பதற்கும்,கல்வியில் கார்ப்ரேட் மயத்தை தடுப்பதற்கும் மாமருந்தாக சமச்சீர் கல்வியை  மக்களிடையே பிரச்சாரம் செய்வதன் மூலமாகவும்,கல்வி கட்டண கொள்ளையை தனியார் பள்ளிகள் தொடர்வதற்கு, தேவையான அடிப்படை கட்டுமான வசதிகள் தங்களிடம் மட்டுமே உள்ளது,அரசு பள்ளி ஆசிரியர்களின் சமூக அக்கறையின்மை,தமிழக கல்வித்துறையில் மலிந்துள்ள நிர்வாக சீர்கேடு,லஞ்ச,ஊழல் ஆகிய முறைகேடுகள்’, இப்படி பல காரணங்களை காட்டி தனியார் பள்ளிக்கொள்ளையர்கள் கட்டணக் கொள்ளை அடிப்பதை தொடர்வார்கள் என்பதை எல்லாம் மிக எளிதாக மூடிமறைத்துவிட்டு,சமச்சீர்கல்விக்கு ஆதரவாக பரப்புரை செய்வதும், போராடுவதும் தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் செய்த நீதிபதி கோவிந்தராஜன் குழு,நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு ஆகியோரின் கட்டண நிர்ணயத்தை நடைமுறைப்படுத்தக் கோரி போராடுவதன் மூலமாகவும் இப்புரட்சிகர சக்திகள்,சீர்திருத்தவாத பாதையில் வழுக்கி வீழ்ந்து விட்டதை பறைசாற்றி கொண்டுள்ளன.
        சமச்சீர் கல்வியை ஒழிப்பதற்கு முனையும்,பார்ப்பன ஜெயாவின் நோக்கம் என்ன என்பதையும்,சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ள நீதிமன்றங்களின்,மற்றும் சமச்சீர் கல்வித்திட்டத்தை கொண்டுவந்த கருணாநிதியின் நோக்கமும், தேவையும் என்ன என்பதை இனி பரிசீலிப்போம்.எந்த் ஒரு  சமூக அமைப்பும் தன்னை பாதுகாத்து, நிலைநிறுத்திக்கொள்ளவே ,அதற்கு ஏற்பவே அரசியல்,சித்தாந்தம் உட்பட அனைத்து துறைகளையும்,நிறுவனங்களையும் உருவாக்கிகொள்கிறது.கல்வி என்பதும் நிலவுகிற சமூக அமைப்பின் தேவையை ஈடு செய்வதற்காகவே ஆளும் வர்க்கங்கள் தமது தேவைக்கு ஏற்ப உருவாக்கி மக்களுக்கு கற்பிக்கிறது.இதன் மூலம் தமக்கு தேவையான உடல் மற்றும்  மூளை உழைப்பாளர்களை உருவாக்கிகொள்ளுவதோடு,அரசியல்,சித்தாந்த ரீதியாக நிலவுகிற சமூக அமைப்பை நியாயப்படுத்தி தக்கவைத்து கொள்ளவும் செய்கிறது

.
        காலனி ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட மெக்காலே கல்வி முறையே இதுநாள் வரை ஆளும்வர்க்கங்களின் தேவைக்கு ஏற்ப சிற்சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.காலனி ஆட்சியாளர்கள் தமக்கு தேவையான எழுத்தர்களை உருவாக்குவதற்கு கொண்டுவந்த மெக்காலே கல்வி 47 ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் சிற்சில மாற்றங்களுடன் தொடர்ந்தாலும்,தொன்னூறுகளுக்கு பின்னர் இந்திய ஆளும்வர்க்கங்களால் நடைமுறைப்படுத்தப்படும்,உலகமயமும் அது ஈன்றெடுத்துள்ள கார்ப்பரேட் மூலதனத்தின் பரந்து,விரிந்த தேவையை- மலிவான உழைப்பு சந்தையை -நிறைவு  செய்ய மேலும் திருத்தம் கோருகிறது.இதுவே சமச்சீர் கல்வியை கொண்டு வருவதற்கான தேவையை ஆளும்வர்க்கங்களுக்கு உருவாக்கியது.அதன் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வியை கருணாநிதி தமிழகத்தில் கொண்டுவந்தார்.அதாவது ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவு கொண்டுவந்த சமச்சீர் கல்வியைத்தான் பார்ப்பன கொழுப்பெடுத்த ஜெயா தலைமையிலான முட்டாள் பார்ப்பன கும்பல் முடக்கிவிட முனைகிறது.காப்பரேட் மூலதனத்தின் தேவையை தம்மால் மட்டுமே வழங்கிவிட முடியும் என்கிற போது அதை மற்றாவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை,என்று பார்ப்பன் ஜெயா தலைமையிலான கும்பல் கருதுகிறது.ஆனால் பார்ப்பன கும்பலின் இக்கருத்தை ஏற்க கார்ப்பரேட் மூலதனம் தனது பரந்து,விரிந்த  தேவை மற்றும் நலன்களில் இருந்து நிராகரிக்கும் உத்தரவுகள் தான் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்து என்ற உத்தரவுகள் ஆகும்.
        நிலவுகிற சமூகத்தின் எல்லா அங்கங்களிலும் , அதிலும் குறிப்பாக அதிகார வர்க்கத்தின் எல்லா துறைகளிலும் உள்ள மேல்மட்டங்கள் அனைத்திலும் பார்ப்பனக்கும்பலே இன்று வரை ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், அப்படி இவர்கள் ஆதிக்கம் செலுத்தும் அதிகார வர்க்க துறைகளும்,நிறுவனங்களும் ஆளும்வர்க்கத்தின் நலனை பாதுகாக்கவே உள்ளவைகள்.இதை மறந்து மூலதனத்தின் நலன்களுக்கு எதிராக அதிகாரம்  வர்க்கம் நடக்க முற்பட்டால், அது என்ன விளைவுகளை சந்திக்க நேரும் என்பதற்கான உதாரணம் தான், சமச்சீர் கல்வியில் உயர்நீதிமன்ற,உச்சநீதிமன்ற தீர்ப்புகள் ஆகும்.ஜெ தலைமையிலான பார்ப்பன மூடக்கும்பல் காலாகாலமும் தான் அனுபவித்து வரும் சுகபோகங்கள் இனி எக்காலத்திலும் கேள்விகளுக்கு இடம் இல்லாமல் தொடர வேண்டும் என்ற பேராசை,அகம்பாவம அதன் கண்ணை மறைக்க கார்ப்ரேட் மூலதனத்துடன் போட்டியிட்டு மண்ணைக் கவ்வியுள்ளது.இப்படி மண்ணைக் கவ்வுவது ஒன்றும் பாப்பனகும்பலுக்கு புதியது அல்ல. காலனியாட்சி காலத்திலேயே, தான் காலாகாலமும் அனுபவித்து வந்த மனுதர்ம குலக்கல்விக்கு எதிரான ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த மெக்காலே கல்வி முறையை எதிர்த்து மண்ணை கவ்வியது.ஆனாலும் காலனியாட்சியாளர்கள் கொண்டுவந்த மெக்காலே கல்வியை தன்னால் தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிந்தவுடன்,தான் கீழே விழுந்த அதே வேகத்தில் மெக்காலே கல்வியை தமதாக்கி கொண்டது.தற்போதும் பார்ப்பனக்கும்பல் சமச்சீர் கல்வியை எதிர்த்து மண்ணை கவ்வினாலும்  கீழே விழுந்த அதே வேகத்தோடு தமதாக்கி கொள்ள முயற்சிக்கும் என்பதை நாம் கவணத்தில் கொள்ள வேண்டும்.
        ஆகவே உயர்நீதிமன்ற,உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அபூர்வமானவைகள் அல்ல என்பதும் கார்ப்பரேட் மூலதனத்தின் பரந்து,விரிந்த தேவையில் இருந்து இத்தீர்ப்புகள் வந்துள்ளது என்பதை கவனியாமல் பயணிப்பவர்களும்,கவனிக்காதது போல பாசாங்கு செய்பவர்களும் எவ்வளவு தான் அதை திறம்பட செய்தாலும் புவியீர்ப்பு விசைக்கு எதிராக மனிதர்களை அந்தரத்தில் நிறுத்துவதாக கூறிய செக்ஸ் சாமியார் நித்தியானந்தாவுக்கு ஏற்பட்ட அதே கதிதான் இவர்களுக்கும் ஏற்படும்.       
        கார்ப்ரேட் மூலதனத்துக்கு ஆதரவானது தான் நீதிமன்ற தீர்ப்புகள் என்றாலும், அது நிலவுகிற சமூக அமைப்பை பாதுகாக்கும் உள்ளடக்கத்தை கொண்டதுதான் என்ற போதும், அறிவு என்பது எப்போதும் தமக்கு மட்டுமே உரித்தானது என்ற பார்ப்பன கும்பலின் அகம்பாவத்திக்கு மேலும் ஒரு வலுவான அடி கொடுக்கும் என்பதோடு,அவர்களோடு போட்டியிடும் வாய்ப்பை சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் வழங்குவதற்கான ஒரு வாய்ப்பாக சமச்சீர் கல்வி அமையும் என்ற வகையில் இது ஒரு ஜனநாயக சீர்திருத்த தன்மை உடையது ஆகும்.
        இச்சீர்திருத்த நடவடிக்கை மக்களிடையே ஜனநாயக சிந்தனையை உருவாக்கவும்,மேம்படுத்தவும் ஒரு காரணியாக ஆக்கிகொள்ள பயன்படும் என்ற வகையில் இதை புரட்சிகர சக்திகள் ஆதரிக்க வேண்டும்.அதற்காக போராடுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகளை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும்.அதே வேலையில் புரட்சிகர சக்திகள் இதை தமது சொந்த கோரிக்கையாக வரித்துக்கொண்டு போராட முடியாது.   
        ஆனால் இந்திய சமூக அடித்தளத்தின் காரணமாகவும்,அதிலும் தமிழகத்தில் நிலவும் பிழைப்புவாத அரசியல்,சமூக சூழலில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய ஒரு சில தனிநபர்களை தவிர அமைப்புரீதியாக திரட்டப்பட்ட ஜனநாயக சக்திகளே இல்லை என்ற சூழல் நிலவுவதை இவ்விவகாரத்தில் இருந்தே நாம் புரிந்து கொள்ள முடியும்.சமச்சீர் கல்வியை கொண்டுவந்த ஆளுவர்க்கத்தின் ஒரு பிரிவான கருணாநிதி தலைமையிலான கும்பலே அதை பாதுகாப்பதற்கு சட்டரீதியாக கூட போராடாததையும் நாம் பார்த்து வருகிறோம்.இக்கும்பலின் இந்த தன்மைக்கு காரணம் தேர்தலில் இவர்களுக்கு கிடைத்த தோல்வி மட்டுமே அல்ல என்பதும்,ஆளும் வர்க்கத்தின் ஒரு அங்கமாக உருவெடுத்துள்ள இக்கும்பலின் வர்க்க இயல்பே அதனுடைய செயல்பாடுகளுக்கு அடிப்படை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.இப்படிப்பட்ட சூழலில் சமச்சீர் கல்வி போன்ற சீர்திருத்த கோரிக்கைகளுக்காகவும் கூட புரட்சிகர சக்திகளே களத்தில் இறங்கி போராட வேண்டியது தவிர்க்கவியலாத கடைமைகளில் ஒன்றாகிவிடுகிறது.இப்படி செய்வது புதிய ஜனநாயக புரட்சியை நடத்துவதை தமது இலக்காக கொண்டு செயல்படும் புரட்சிகர சக்திகளின் செயல்பாட்டிற்கு இசைவானது தானே தவிர அதற்கு எதிரானதோ முரண்பாடான செயலோ அல்ல.புதிய ஜனநாயக புரட்சியே சாராம்சத்தில் முதலாளித்துவ புரட்சி என்பதும்,அப்புரட்சியை நடத்தும் ஆற்றலை, தகுதியை முதலாளித்துவ சக்திகள் இழந்து விட்டதால். சமூக இயங்கியல் தேவை,அவசியம் காரணமாக இப்புரட்சியை கம்யுனிச புரட்சியாளர்களே பாட்டாளிவர்க்க தலைமையில் நடத்துவது தான். பாட்டாளிவர்க்கம் இப்புரட்சியை தலைமை ஏற்று நடத்துவதால் அது தனது வர்க்க நலன்களுக்கு உகந்தவாறு தேசிய முதலாளித்துவத்தை வளர்க்கும் அதே வேளையில் தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய முதலாளிகளின் சொத்துகளை இழப்பீடு இன்றி பறிமுதல் செய்து அதை அரசுடைமையாக்கும்.இதே வகையில் தான் சமச்சீர் கல்வி போன்ற விவகாரங்களிலும் பாட்டாளிவர்க்க நலன்களுக்கு உகந்த வகையில் இச்சீர்திருத்த கோரிக்கைகளை புரட்சிகர சக்திகள் சரியான முழக்கங்களுடன்,அதாவது ஆளும் வர்க்கங்களை வலுப்படுத்த கூடியதாக அம்முழக்கங்கள் அல்லாமல் புதிய ஜனநாயக புரட்சிக்கு மக்களை அணிதிரட்டுவதை நோக்கி பயணிப்பதற்கான ஒரு வாய்ப்பாக கொண்டு செல்ல வேண்டும்.இது மிகவும் கவனமுடன் செய்ய வேண்டியப் பணியாகும்.நோய்க்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியரையும் நோய் தாக்கிவிடுவதை போல இச்சீர்திருத்த கோரிக்கைகளுக்காக போராடுகிற புரட்சிகர சக்திகளை, சீர்திருத்த நோய் தாக்கிவிடாமல் பாதுகாக்கும் கவசமாக நாம் வைக்கும் முழக்கம் அமைய வேண்டும்  என்பதில் மிக கவனமாக செயல் பட வேண்டும்.அதாவது கரணம் தப்பினால் மரணம் என்ற அளவுக்கு இது ஆபத்து நிறைந்தது என்பதை ஒரு கணமேனும் நாம் மறந்துவிடலாகாது.
        குறிப்பாக இவ்விடயத்தை நாம் பார்ப்போமாயின் தனியார்பள்ளிகளுக்கான கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்க நீதிபதி கோவிந்த ராசன் குழு, நீதிபதி ரவிராசபாண்டியன் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டு அக்குழுக்களும் கட்டண நிர்ணயம் செய்துள்ளன.இவ்விரு குழுக்களும் நிர்ணயத்துள்ள கட்டணங்கள் குறைவாயினும்,கூடுதலாயினும் இவை இரண்டுமே கல்வியில் தனியார்மயத்தை நியாயப்படுத்தி, உறுதி படுத்தக்கூடியவை என்பதும் இதே போன்று சமச்சீர் கல்வி கார்ப்பரேட் மூலதனத்தின் பரந்து,விரிந்த தேவைக்கானது என்பது தான் இவற்றில் புரட்சிகர சக்திகள் பார்க்க வேண்டிய அடிப்படை அம்சங்களாகும்.இதற்கு முற்றிலும் புறம்பாக இரு கட்டண நிர்ணய குழுக்களின் கட்டண நிர்ணயத்தை ஆதரிப்பதும் தனியார் கல்விகட்டண கொள்ளைக்கு கடிவாளம் போடும் நடவடிக்கையாக சமச்சீர் கல்விக்கு வலிய தலைப்பிட்டு காட்டுவதும் கல்வியில் கார்ப்ரேட் மயத்தை தடுக்கும் என்று கூறுவதும் அதை நடைமுறைப்படுத்தக் கோரி போராடுவதும் முழுமுற்றான சீர்திருத்த கண்ணோட்டமே அன்றி புரட்சிகர கண்ணோட்டமோ, நோக்கமோ இதில் துளியும் இல்லை.சமச்சீர்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டால் தனியார் கல்விக்கொள்ளைக்கு முடிவுகட்டிவிட முடியும் என்று கூறும் இவர்கள், சென்ற கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை கொண்டுவந்த போது,அதை எதிர்த்து தனியார் பள்ளி கொள்ளையர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சமச்சீர் கல்வியை நீர்த்து போக செய்யும் வகையில் உச்சநீதிமன்ற ஒப்புதலுடன் துணைப்பாட நூல் கொண்டுவந்தனர் என்பதை அறிந்தே, இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை கொண்டுவந்தால், தனியார் கட்டண கொள்ளைக்கு முடிவுகட்டி விட முடியும் என்றும் கல்வியில் கார்ப்ரேட் மயத்தை தடுத்துவிடும் என்றும் மக்களிடையே சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாக சம்ச்சீர் கல்வியை இவர்கள் காட்டுகின்றனர்.நாம் பேருந்துகளில் பயணிக்கும்  போதுசார் ஒரு நிமிசம்! நான் சொல்ரத கவனிங்க! இது தேனி மாவட்டம் கம்பத்துல 18 வகையான மூலிகைகள் கலந்து தாயாரிக்கப்பட்ட தைலங்க,இதில தும்ப,துளசி... போன்ற மூலிகைகள் கலந்ததுங்க, இது அஞ்சி வகையான நோய்களை, இந்த தைலத்த தேய்த்த சில நிமிசங்கல தீர்க்குங்க.நான் சொல்ரதுல உங்களுக்கு சந்தேகம் இருந்திச்சினா, நான் இலவசமா கொடுக்கிற தைலத்தை வாங்கி தலைவலி உள்ளவங்க, ஒரே ஒரு சொட்டு நெத்தி பொட்டு இரண்டு பக்கமும் தேச்சி விடுங்க தலைவலி நின்னு போகும்.நெஞ்சில சளி இருக்கிறவங்க பஸ்சுல போகும் போதோ,தூங்கும் போதோ சளிய துப்பறதுக்கு சோம்பேறித்தனப்பட்டு அப்படியே முழுங்கிவிடுவாங்க. இனிமே நீங்க அப்படி செய்ய தேவையிருக்காது,இதை பாருங்க,இது தர்மாகோல் சீட்டு. இதை மிக்சி,கிரைண்டர் இதுல எதுல போட்டு ஆட்டுனாலும்,எத்தன வருசம் ஆட்டுனாலும் இதை மாவாக்க முடியாதுங்க அப்படிப்பட்ட இந்த தர்மகோல் சீட்ட இந்த ஒரே ஒரு சொட்டு தைலத்தை உங்க உள்ளங்கையில வுட்டு, அதுல இந்த தர்மகோல் சீட்ட கிழிச்சி ஒரு துண்ட போட்டிங்கன்னா இந்த பாருங்க சார் அப்படியே தண்ணியா கரஞ்சி ஊத்திருங்க. இதை போலதான் உங்க நெஞ்சியில ஒட்டிக்கிட்டு இருக்கிற எத்தனை வருசத்து சளியாக இருந்தாலும், இந்த தைலத்துல ஒரே ஒரு சொட்டு உங்க கர்சீப்புலவுட்டு, மூக்கில ரெண்டு பக்கமும் வச்சி மோந்திங்கனா சளியெல்லாம் தண்ணியா கரைஞ்சி இப்பவே வெளியில வர ஆரம்ப்பிச்சிடும்என்று கூறி தைலத்தை விற்றுவிட்டு சென்று விடுவதை நாம் பார்த்திருப்போம்.தைலத்தில் பதினெட்டு வகையான மூலிகைகள் கலந்து இருப்பதாக அவர்கள் பட்டியல் சொல்லும் போது பதினெட்டு வகையான மூலிகைகளின் பெயர்களையும் அவர்கள் கூறுகிறார்களா? என்பது யாருக்கும் தெரியாது.அப்படி பதினெட்டு வகையான மூலிகைகளையும் சொன்னார்களா என்று கவனித்து, வாங்குபவர்கள்,தைலத்தை வாங்குவதும் இல்லை. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் நிகழ்வு தர்மகோல் சீட் தைலத்தில் கரைந்து விடுவது மட்டும் தான்.இதைப் போன்று தான் தனியார் பள்ளி கொள்ளையர்கள் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டால் தமது கல்வியே தரமானது என்று சொல்லுவதற்கு என்று உள்ள பட்டியலில் தனது பாடத்திட்டம் மட்டுமே சிறந்தது என்று சொல்லுவதை வேண்டுமானால் சொல்லாமல் விட்டுவிடலாம்.ஆனால் ஏனைய அம்சங்கள் அப்படியே இருக்கும் பொது ஒன்றை மட்டும் சொல்லாமல் இருந்துவிடுவதால் தைல விற்பனை எப்படி பாதிப்பதில்லையோ,அதை போன்று கட்டண கொள்ளையும் பாதித்துவிட போவதில்லை.மூலிகை விற்பனையில் முக்கிய அம்சம் தர்மகோல் சீட் தைலைத்தில் கரைவது,தனியார் பள்ளி கல்வி விவகாரத்தில் முக்கிய அம்சம், ஆங்கிலத்தில் படித்தால் வேலை கிடைத்துவிடும் என்ற பெற்றோர்களின் அறியாமை  தான். ஆகவே எந்த வகையிலும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதால் தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை தடுத்துவிட முடியாது.மூலதனத்தின் இயல்பு அது எங்கு இருந்தாலும்,எப்படி இருந்தாலும்,எந்த வடிவத்தில் இருந்தாலும் லாபம் சம்பாதிப்பது தான்.இதை எல்லாம் மூடி மறைத்து விட்டு சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டால் தனியார் கல்வி கொள்ளையை தடுத்துவிடும், கல்வியில் கார்ப்ரேட் மயத்தை தடுத்து விடும் என்று கூறுவது தைல விற்பனைக்கு விளம்பரம் தருவது போன்றது தான்.சமச்சீர் கல்வி,கல்வி கட்டண நிர்ணயம் ஆகியவற்றில் அரசுக்கு எதிராகவும்,தனியார் பள்ளிகளுக்கு எதிராகவும் செயல்படுபவர்களிடையே தடுமாற்றங்களும்,குழப்பங்களும் போலித்தனமும் ஒரு அமைப்பில் எதிரும்,புதிருமான கருத்துகள் நிலவினாலும் இதனால் ஆதாயம் அடையக்கூடிய பார்ப்பன ஜெயா கும்பலிடமும், தனியார் பள்ளி கொள்ளையர்களிடமும் குழப்பமோ,தடுமாற்றமோ சிறிதும் இல்லை.தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்த இரு நீதிபதி குழுக்களும் நிர்ணயித்த கட்டணம் கூடுதலா? குறைவா? என்பதை விட,கட்டண நிர்ணயத்தில் தலையிடும் உரிமை அரசுக்கோ,நீதிமன்றங்களுக்கோ இல்லை என்பது தான் இவர் களின் நிலைப்பாடு.ஆகவே இவ்விவகாரத்தில் நம்முடைய எதிர் தரப்பு தாம் எடுத்துள்ள நிலைப்பாட்டின் மூலம் எதிர்மறையில் நமக்கு வழிகாட்டுகிறது.இங்கே நாமும் கல்விகட்டண விவகாரத்தில் இரு குழுக்களும் கல்விக்கட்டணத்தை கூடுதலாக அல்லது குறைவாக நிர்ணயத்தனவா என்பதை விட,கல்விக்கட்டண நிர்ணயத்தில் தலையிடும் உரிமை அரசுக்கு உள்ளது என்ற வகையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை ஏற்காத அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்கு என்று முழக்கம் வைத்து,மக்களை திரட்டி போராடுவது தான் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவின் சீர்திருத்த புதைகுழியில் சறுக்கி விழுந்து, முழ்கி விடாமல் புரட்சிகர சக்திகளை பாதுகாக்கும் சிறந்த கவசமாக அமைவதோடு,மக்களையும் முரணின்றி தனியார்மயத்திற்கு எதிராக வளர்த்தெடுக்க முடியும்.
        ஆனால் இதற்கு மாறாக தாமே ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவாக மாறி, அதன் வர்க்க நலனில் இருந்து எழும் கோரிக்கைகளுக்காக போராடுவது என்பதன் வெளிப்பாடு தான் இவ்விருக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்து என்பதும்,சமச்சீர் கல்வி தனியார் கல்விக்கட்டண கொள்ளையை தடுக்கும்,கல்வியில் கார்ப்ரேட் மயத்தை தடுக்கும் என்பதும் ஆகும்.இவ்விருகுழுக்களின் கல்வி கட்டண நிர்ணயத்தை நடைமுறைப்படுத்து என்ற கோரிக்கையின் மூலம் கல்வியில் தனியார்மயத்தை ஏற்றுக்கொண்டுவிட்ட இவர்கள் அதோடு கருனாநிதியும்,உயர்,உச்ச நீதி மன்ற நீதிபதிகளும் தற்போதைய தனியார் பள்ளி கொள்ளையர்களுக்கு எதிரானவர்கள் என்று புதிய ஜனநாயகமும்,ஆதரவானவர்கள் என்று புதிய கலாச்சாரமும் தமக்குள்ளேயே எதிரும்,புதிருமாக முரண்பட்டு நிற்கின்றனர். அதே மூச்சில் கல்வியில் தனியார்மயத்தை எதிர்ப்போம் என்பது முற்றிலும் சுயமுரண்பாடு ஆகும்.இவர்கள் என்ன தான் முயற்சித்தாலும் ஒரே நேரத்தில் புரட்சிகர சக்தியாகவும்,சீர்திருத்த சக்தியாகவும் அரிதாரம் பூசிக்கொள்ள முடியுமே தவிர, இரண்டுமுமாக இருக்க முடியாது.இரண்டில் ஏதோ ஒன்றாத்தான் இருக்க முடியும்.என்ன தான் நரி பரியாக வேடமிட்டாலும் மழைவரும் போது அதன் வேடம் கலைந்தே தீரும்.
நாம் இப்படி கூறுவது ஏதோ வெறுமனே ஊகம் அல்ல.சம்பந்தப்பட்ட புரட்சிகர அமைப்புகளின் நடைமுறைகளில் இருந்து தான் இப்படிக் கூறுகிறோம்.தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டண நிர்ணயம் சமச்சீர் கல்வி ஆகிய விவகாரங்களில் மகஇக - வின் மனித உரிமை பாதுகாப்பு மையம் திடுதிப்பென, எவருமே எதிர்பாராத வகையில் அண்மையில் 48 மணி நேர உண்ணாவிரதத்தை தமிழகத்தில் பல இடங்களில் நடத்தியது.உண்ணாவிரதம் என்பதே மக்களின்  போராட்ட உணர்வை காயடிக்கும்,திசை திருப்பும்,நீர்த்து போகச் செய்யும், ஆளும் வர்க்கத்தின் ஒரு கருவி என்பது தான் இவர்களின் நிலைப்பாடு ஆகும். உண்ணாவிரதம் நடத்துவதை நியாயப்படுத்துவதற்கு அதை நடத்துபவர்கள் எதை வழக்கமாக கூறுவார்களோ அதையேதான் இவர்களும் இப்போது கூறுகிறார்கள்.அதாவது மக்கள் போராட தயாராக இல்லை எனறும், மக்களின் போராட்ட உணர்வை மேம்படுத்தவே தாங்கள் உண்ணாவிரதம் இருப்பதாக தமது செயலுக்கு இவர்கள் நியாயம் கற்பித்துக்கொள்ளுகின்றனர்.மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பெயரில் உண்ணாவிரதம் நடத்திய இவர்கள் அவ்வுண்ணாவிரதங்களில், அதன் தோழமை அமைப்புகளின் தோழர்களை கலந்து கொள்ள செய்த இவர்கள்,அவர்கள் சார்ந்த அமைப்புகளின் பெயர்களை மட்டும் போடாமல் கவனமாக தவிர்த்துவிட்டுள்ளனர்.உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினால் தான் மக்களின் உணர்வை மேம்படுத்த முடியும் என்று கூறி உண்ணாவித போராட்டத்தை நடத்திய இவர்கள்,வழக்கமாக இவர்கள் நடத்தும் போராட்டங்களில் எத்தனை பேர் கலந்துகொள்ளுவர்களோ,யார்,யார் கலந்து கொள்ளுவார்களோ அவர்கள் மட்டுமே இப்போதும் கலந்து கொண்டார்கள் என்பதில் இருந்தே இவர்கள் உண்ணாவிரதத்தை நியாயப்படுத்த கூறிய காரணம் உண்மையானது அல்ல என்பது தெளிவாகிவிட்டது.இந்த உண்ணாவிரதங்களில் மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டாலும் அவர்கள சார்ந்த அமைப்பின் பெயர்களை போட்டுக்கொள்ளாததன் மூலம் தாங்கள் இன்னமும் புரட்சிகர சக்தியாகவே தனித்தன்மையுடன் செயல்படுவதாக ஒரு தோற்றத்தையும் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.இந்த உண்ணாவிரதங்களில் தமது அமைப்புகளின் பெயரை போட்டுக்கொள்ளாமல் அதில் கலந்து கொண்டு, அதில் தம்மை யாரென்று அடையாளப்படுத்திக்கொள்ளாத இவர்கள் உண்ணாவிரதத்தை, அதிகாரபூர்வ மற்ற வகையில் ஆதரித்து பேசுகின்றனர்.இப்படி ஆதரிப்பவர்கள் உண்ணாவிரதத்தை தாமே நடத்தாதது ஏன்?தமது பெயரில் நடத்தாமல் தமது பினாமி அமைப்பின் பெயரில் நடத்துவதும்,அதில் மறைமுகமாக பங்கேற்பதும் தான் புரட்சிகர நேர்மை போலும்! இவர்கள் இப்படிப்பட்ட கூத்தை நடத்திக்கொண்டு இருக்கும் போதே இவர்களின் இணையதள ஊடகமான வினவுஅன்னாஹசாரே,பாபாராம் தேவ் ஆகியோரின் உண்ணாவிரத போராட்டங்களை எதிர்த்து சாடுகிறது,ஏளனம் செய்கிறது.ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் வழி அல்ல என்றும் அதை ஒழிப்பதற்கு மக்களை அணிதிரட்டிய போர்க்குணமான போராட்டங்கள் மூலம் தான் முடியும் என்றும், இதற்கு ஆதாரமாக தமது தோழமை அமைப்பான விவிமு- வின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு எதிரான போராட்டத்தையும், அதன் வெற்றியையும் காட்டி கும்மாளமிடுகிறது.மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டங்களை,நீதி மன்ற நடவடிக்கைகளையும் வரிக்குவரி எழுதி குதூகளிக்கும் வினவுஇணையதளம் அவர்கள் நடத்திய உண்ணவிரத செய்தியை மட்டும் மிக கவனமாக தவிர்த்து தனது புரட்சிகர நேர்மையை நிருபித்துக்கொண்டுவிட்டது.
சமச்சீர் கல்வியை ஆளும்வர்க்கம் கொண்டுவந்ததற்கான பொருளியல் அடிப்படையை தவிர்த்துவிட்டு சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டால் அது தனியார் கல்விக்கட்டணக்கொள்ளையை  தடுத்துவிடும்,கல்வியில் கார்ப்ரேட் மயத்தை தடுத்துவிடும் என்று உண்மைக்கு புறம்பான ஆளும் வர்க்கத்தின் கருத்தியல் கண்ணோட்டத்தை சமூகத்தின் மீது திணித்து, இதன் முலம் ஆளும்வர்க்க ஊடகங்களின் விளம்பரத்தின் மூலம் கிடைத்த குறுகிய கால ஆதாயத்தை முழுமையாக அறுவடைசெய்துகொள்ளும் குறுக்கு புத்தியால் மேலும், மேலும் சீர்திருத்த சகதியில் முழ்கிக்கொண்டிருக்கிறார்கள்.தமிழகதில் ஒரே புரட்சிகர சக்தியாக விளங்கும் மக இக -வும் அதன் தோழமை அமைப்புகளும் சீர்திருத்தவாத சகதியில் சிக்கிக்கொண்டு இருப்பது தமிழக மக்களுக்கு மட்டும் அல்ல இந்திய உழைக்கும் மக்களுக்கும், புதிய ஜனநாயக புரட்சிக்கும் பெருத்த பின்னடைவாகும்.இதில் இருந்து இவர்களை மீட்க போராடுவது புரட்சியை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.இக்கடமையின் காரணமாகவே சூறாவளி நிர்வாகக்குழு இக்கட்டுரையை வெளியிடுகிறது.
        எமது இந்த விமர்சனக்கட்டுரை மேற்கண்ட புரட்சிகர அமைப்புகளின் தவறுகளை களைந்து அவர்களை மீண்டும் உறுதிமிக்க புரட்சியாளர்களாக மாற்றுவதற்கு உதவும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.எமது இந்த விருப்பத்திற்கு வாசகர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்று கோருகிறோம்.
புரட்சிகர வாழ்த்துகளுடன்    
சூறாவளி நிர்வாகக்குழு