விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label குறைகள். Show all posts
Showing posts with label குறைகள். Show all posts

Sunday, 26 June 2011

முழுமனத்துடன் பாராட்டுகிறேன்-டாக்டர் ருத்ரன்










பொதுவாய் என்னைப் பற்றிச் சொல்லப்படும் குறை நான் எல்லாவற்றிலும் குறை கண்டு வருகிறேன் என்பதும், எதையும் பாராட்டுவதில்லை என்பதுமானதால், அடுத்து பாராட்டித்தான் எழுதுவது என்று தீர்மானித்தேன், பாராட்டு சொல்ல விஷயம் இன்று காலையே கிடைத்தது!
1928ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பள்ளி நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் சாலையின் அந்தப்பக்கம் போவிட்டது, வேகமான பெரிய வாகனங்கள் மீறி குழந்தைகள் பள்ளி செல்ல முடியவில்லை -5 ஆண்டுகளாக!கிராம மக்கள் கோரியதால் அரசின் ஒரு துறை பள்ளியை கிராமத்தில் கட்ட அங்கிருந்த கோயில் தரிசு நிலத்தின் ஒரு சிறு பகுதியை பயன்படுத்த உத்தரவிட்டது, அறநிலையத் துறை ஒப்புதல் அளிக்கவில்லை (இதே அரசின் இன்னோர் அங்கம்!).
5 ஆண்டுகளாக பாடம் நடத்தாமலேயே பிள்ளைகளுக்குப் பாஸ் போட்ட வாத்தியார்களுக்கும்  சம்பளம் கொடுக்கப்பட்டதாம்! சத்துணவு மட்டுமே நடந்து கொண்டிருந்த இல்லாத பள்ளி வேண்டும் என்று கிராம மக்கள் கோரியதையும் சிறு அளவில் போராடியதையும் பொருட்படுத்தாத அரசு அடுத்த கட்சி ஆட்சியிலும் காட்டிய அசிரத்தையைத் தொடர்ந்து தோழர்கள் முன்னின்று நடத்திய போராட்டத்தில் மக்களும் முன்வந்து இணைந்து, ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஒரு கொட்டகை நிர்மாணித்தார்கள். பிரச்சினை பெரிதாக வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் விரைவில் நல்ல முடிவு தருவதாக வாய்மொழி ஒப்புதல் தந்தபின் மக்கள் காத்திருக்கிறார்களாம்.

மேலும் விவரங்கள் கிடைத்தவுடன் பகிர்கிறேன், இப்போதைக்கு பாராட்டுகிறேன்.
போலி யோக்யனையும் போலி யோகியையும் ஆராதித்து ஆடிய ஊடகங்களை மட்டும் நம்பி மெழுகுவத்தி ஏந்தினால் நாடு மாறாது, களத்தில் இறங்கி மக்கள் சக்தியுடன் காரியமாற்றுவதே மாற்றத்துக்கான சாத்தியம் எனும் என் நம்பிக்கை இன்னும் துளிர்க்க வைத்த தோழர்களுக்கும் மக்களுக்கும் நன்றியும் மீண்டும் பாராட்டுகளும். இதில் ஓர் அதிகாரி,”குடிசை போட்டுட்டா வாத்தி வந்துருவானா, அவனுக்கு சம்பளம் யார் தருவாங்க?” என்றானாம்! மக்கள் அந்தக் கொட்டகை அமைப்பதைத் தடுக்க வந்த போலீஸில் ஒருவர் சொன்னாராம், “ பள்ளிக்கூடன் வேணும்னு தானே கேக்குறாங்க..எப்படி அவங்களை அடிக்கறது?” அந்த மனிதாபிமான புரிதலுக்கும் பாராட்டுகள்.

குறிப்பு:   ( மேற்கண்ட குறிப்பு மருத்துவர் ருத்ரன் அவர்கள் தனது face book notes பகிர்ந்துகொண்டது.)
விருத்தாசலம் அருகே உள்ள சிறுநெசலூர் கிராமத்தில், கடந்த ஐந்தாண்டு காலமாக பள்ளி இல்லாமல், ஒரு தலைமுறை மாணவர்களை கல்வி அறிவு இல்லாமல் பாழாக்கிய அரசு அதிகாரிகளை எதிர்த்து போர்க்குணத்துடன் மக்கள் நடத்திய போரட்டம் பற்றி.

தொடர்புடைய பதிவுகள்: 


                                             1.கல்விக்கான மக்களின் உரிமை:-விருத்தாசலத்தில் நக்சலைட்டுகளின் நேரடி   நடவடிக்கை
                                             
                                             2.முழுமனத்துடன் பாராட்டுகிறேன் மருத்துவர் ருத்ரன் (face book notes)