விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Thursday, 6 October 2011

இன்னமும் இங்கதான் புடுங்கினுக்கிறாரா?

நாங்கள் மகஇக-வும் அதன் தோழமை அமைப்புகளும் சீர்த்திருத்தவாத புதைகுழியில் சிக்கி முழ்கிவிட்டன என்று விமர்சித்து தொடர் கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்த பின்னர் தோழர் மூடகிழவன் முதன் முறையாக ஆக்கபூர்வமான கடிதம் ஒன்றை எமக்கு அனுப்பி வைத்துள்ளார்.அக்கடிதத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறோம்.

                                         -சூறாவளி நிர்வாகக்குழு

மதிப்பிற்குரிய சூறாவளி தோழர்களே செவ்வணக்கம்,நீங்கள் எமது அமைப்புகளான ”வினவும் அதன் தோழமை அமைப்புகளும் சீர்த்திருத்தவாத புதைகுழியில் முழ்கிவிட்டன”, என்று வெளியிட்ட உங்கள் கட்டுரை ஒன்றில் உங்களை பற்றிய அறிமுகத்தில், ”நாங்கள் தோழர் மூடக்கிழவனிடம்தான் அரசியல்,சித்தாந்தம் கற்றுக்கொண்டோம்”, என்று எழுதியதற்காகத்தான் விழுப்புரத்தை சேர்ந்த கதிர்நிலவன் என்கிற செல்வக்குமார் உதிர்த்துள்ள முத்துக்கள்தான் கட்டுரையின் தலைப்பாகும். தோழர் மூடக்கிழவன் இன்னமும் மகஇக சார்ந்த அமைப்பில்தான் செயல்படுகிறார் என்று நீங்கள் சொன்ன பிறகும் கூட, உங்களுக்கு நான் அரசியல்,சித்தாந்தம் பயிற்றுவித்தவன் என்பதற்காகவே இப்படி அவரும்,அவர் தலைமையிலான குழுவினரும் வசை பாடியுள்ளனர்.மேற்கண்ட வார்த்தைகளின் மூலம் சூறாவளி குழுவினரான உங்களுக்கு அரசியல் சித்தாந்தம் கற்றுத்தந்தேன் என்ற கரணத்திற்காகவே நான் தற்போது உள்ள அமைப்பில் இருப்பதற்கான தகுதியில்லை என்று மேனாமினுக்கி செல்வக்குமார் தனது ஆதங்கத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இவர் கருதுவது போல் என்னை போன்றவர்கள் அமைப்பின் நடைமுறைகளில்,அதன் செயல்பாடுகளில் உள்ள தவறை எதிர்த்து போராடினாலும் கூட அமைப்பில் இருந்து மாற்றுக்கருத்துடையோர் வெளியேற வேண்டிய அவசியம் ஏதுமில்லை.ஏனேன்றால் பாட்டாளிவர்க்க அமைப்பு எந்த ஒரு தனி நபரின் அல்லது குழுவின் அப்பன் வீட்டு சொத்தல்ல.பல்லாயிரக்கணக்கான தோழர்களின் வியர்வை,ரத்தம்,தியாகம் ஆகியவற்றின் மூலம் உருவானதுதான். ஆனால் இந்த அதிகாரவர்க்க மேனாமினுக்கிகள் அமைப்பையே இவர்கள் தமது அப்பன் வீட்டு சொத்தாக கருதுவதின் வெளிப்பாடுதான் மேற்கண்ட வசவுகள் ஆகும்.நீங்களும் கூட மேற்கண்ட வசவை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டணத்தை நிர்ணயித்த இரு நீதிபதி குழுக்களின் பரிந்துரைகள்,சமச்சீர்கல்வி,ராஜீவ் கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட மூவரின் விவகாரம் ஆகியவற்றில் எமது அமைப்புகள் சீர்திருத்தவாத புதைகுழியில் சிக்கிவிட்டன.”அதிகாரவர்க்க பாதையாளர்கள் எமது அமைப்புகளை கைப்பற்றிவிட்டார்கள்”, என்று கடந்த சில மாதங்களாக நீங்கள் சூறாவளியில் கட்டுரைகளை வெளியிட்டுவருவதை நாங்கள் அவதானித்தே வருகிறோம்.அரசியல் சித்தாந்த ரீதியாக உங்களின் இந்த நிலைப்பாட்டை நானும் எமது பகுதி தோழர்களும் முழு முற்றாக ஆதரிக்கிறோம்.
ஏனேன்றால் நீங்கள் அமைப்புக்கு வெளியில் இருந்து செய்துவரும் இந்த வேலையைத்தான் நாங்கள் அமைப்புக்கு உள்ளே வைத்து கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறோம்.இந்த உட்கட்சி போராட்டம் இன்னும் முற்றுப்பெறாமலேயே தொடர்ந்தும் அதே தொடக்க நிலையில்தான் நடைபெற்று வருகிறது,என்பதோடு நாங்கள் எதற்கு எதிராக போராடி வருகிறோமோ, அந்த தவறான கருத்துகள் மேலும், மேலும் வலுப்பெற்று தனது முகத்திரையை தானே கிழித்துக்கொள்ளும் அளவுக்கு வலுப்பெற்று இருக்கிறது என்பதையும், எமது உட்கட்சி போராட்டத்தால் எவ்வித பயனும் இதுவரை ஏற்படவில்லை என்பதோடு அதிகாரவர்க்கபாதையாளர்களால் நாங்கள் பழிவாங்கவும் பட்டிருக்கிறோம்.இப்படிப்பட்ட சூழலில்தான் உங்களது விமர்சனக்கட்டுரைகளை நாங்கள் பார்த்தோம்.ஆனாலும் எமது போராட்டம் முற்று பெற்றுவிட்டதாக நாங்கள் இன்னமும் கருதவில்லை.
ஆனால் அதே நேரத்தில் இந்த போராட்டத்தை நீங்கள் வெளியில் இருந்து நடத்துவதற்கும்,நாங்கள் உள்ளே இருந்து நடத்துவதற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உள்ளது.உங்களை பொருத்தவரை நீங்கள் அமைப்பிற்கு வெளியில் உள்ள நண்பர்கள்-அன்னியர்கள் நாங்கள் அப்படியல்ல! அமைப்பின் வாழ்விலும்,வளர்ச்சியிலும் எம்மையே அர்ப்பணித்துக்கொண்டவர்கள்.அமைப்பு,அரசியல்,சித்தாந்தத்திற்கு வெளியில் ஒரு வாழ்வு இருப்பதாக நாங்கள் கருதவில்லை.இதனால் எடுத்தேன்,கவிழ்த்தேன் என்று அமைப்புடனான உறவை எம்மால் முறித்திக்கொள்ள முடியாது.இப்படி செய்வது அமைப்பை அதிகாரவர்க்க பாதையாளர்களுக்கு நாங்கள் கையளிப்பதற்கு ஒப்பாகும்.இப்படி அமைப்பை தவறான ஆட்களிடம் ஒப்படைப்பது என்பது அவர்களின் கரங்களை வலுப்படுத்தி புரட்சியை சீர்குலைக்கும் செயலாகும்.
இதுநாள் வரை-அதாவது சூறாவளி நிர்வாகக் குழு விமர்சிக்கும் வரை –அதிகாரவர்க்க பாதையாளர்களாக எம்மை கையாளும் பொருப்பாளர்கள் தான் சீரழிந்துவிட்டதாக கருதி, அதற்கு எதிராக நாங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தோம்.ஆனால் உங்களின் ஆக்கப்பூர்வமான விமர்சனத்துக்கு பிறகுதான்,எம்மை கையாளும் பொருப்பாளர்கள் மட்டுமல்ல அமைப்புதலைமையையே அதிகாரவர்க்க பாதையாளர்கள் கைப்பற்றிவிட்டார்களோ என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டு அதற்கு பிற்பாடுதான் இந்த கோணத்தில் சிந்திக்க தலைப்பட்டுள்ளோம்.

மேற்கண்ட அதிகாரவர்க்க போக்கிற்கான ஆதாரங்களை அரசியல்,சித்தாந்த ரீதியாக மட்டுமல்ல,அமைப்பு ரீதியாகவும் நாங்கள் திரட்ட வேண்டியுள்ளது.இந்த வகையில் ஆக்கபூர்வமாக பல்வேறு தகவல்களை திரட்டி ஒருங்கிணைத்து ஆய்வுக்குட்படுத்தி வருகிறோம்.ஒரு வேளை உங்கள் விமர்சனப்படியே அமைப்பு தலைமையையே அதிகாரவர்க்க பாதையாளர்கள் கைப்பற்றி இருந்தாலும் கூட அமைப்பில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் எமக்கு இதுவரை எழவில்லை.இந்த அமைப்பில் உள்ள 95 விழுக்காட்டு தோழர்கள் தமது வயிற்று பிழைப்பிற்காக  இந்த அமைப்பிற்கு வரவில்லை.இப்படிப்பட்ட தோழர்களை அமைப்பு தலைமை நயவஞ்சகமாக ஏமாற்றி வரலாமே தவிர எந்த ஒரு தோழரும் மனப்பூர்வமாக அதிகாரவர்க்க பாதையாளர்களுக்கு உடந்தையாக இருக்க மாட்டார்கள்.

அமைப்பின் தலைமை என்பதே கட்சி காங்கிரஸ் எதை இறுதி செய்கிறதோ அதை நடைமுறைப்படுத்துவதற்காகத்தான்! இதற்கு மாறாக கட்சி காங்கிரஸின் அடிப்படை வரையறுப்புகளுக்கு மாறாக தலைமை நடந்து கொண்டால் அப்போதே அந்த தலைமை தனது தலைமை அதிகாரத்தை, உரிமையை இழந்துவிடுகிறது.கட்சி காங்கிரஸ் தீர்மானித்த அடிப்படை நிலைப்படுகளை செயல் படுத்துவதற்கு மட்டுமே தலைமைக்கு உரிமை உண்டு.இந்த அடிப்படை நிலைப்பாடுகளை நிலைநாட்டத்தான் ஜனநாயக மத்தியத்துவம் என்ற உயரிய கோட்பாடு கட்சித்தலைமைக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உயரிய அதிகாரத்தை அமைப்பின் அடிப்படை நிலைப்பாடுகளுக்கு எதிராக தனது தவறான,அமைப்பு விரோத,மக்கள் விரோத செயல்கள் ஆகியவற்றுக்கு தலைமை பிரயோகிக்குமேயானால் அந்த தலைமைக்கு கட்டுப்பட வேண்டிய தேவையோ,அவசியமோ அணிகளுக்கு எழவில்லை.ஆனால் அமைப்புத்தலைமை அமைப்பின் அடிப்படை நிலைப்பாடுகளுக்கு எதிராகத்தான் செயல்படுகிறது என்பதை எப்படி யார் உறுதி செய்வது என்ற கேள்வி எழுப்பப்படலாம்.
இதற்கு பதில் அமைப்பு அணிகள் மா-லெ-மா கோட்பாடுகளை கற்றுத்தேறுவதேடு நடைமுறையில் அவற்றை இடைவிடாமல் பிரயோகித்து சிறந்த அனுபவங்களை பெறவேண்டும்.தத்துவத்தில் இருந்து நடைமுறைக்கும்,நடைமுறையில் இருந்து தத்துவத்திற்கும் என்ற இடைவிடாத செயலின் மூலம் மட்டுமே சரி,தவறுகளை நாம் புரிந்துகொள்ள முடியும்.மார்க்சியத்தை உயிரோட்டமான தத்துவத்தை உயிரோட்டமான தத்துவமாக நடைமுறையில் பிரயோகிக்க வேண்டும்.தேவைப்பட்டால் ஆயுதப் போராட்டம்,விவசாயிகள் விடுதலை முன்னணி தேவையா? ஆகிய வதந்திகளை அமைப்பில் உலவவிடும் அமைப்பின் தலைமை, அடிப்படை நிலைப்பாடுகளுக்கு எதிராக நடந்துகொள்கிறது.என்பதை நிருபிக்க மூன்றாவது நபர் ஒருவர் தேவையில்லை.இதை போன்றவற்றை எடுத்த எடுப்பிலேயே ஒருவர் அமைப்பின் அடிப்படை நிலைப்பாடுகளுக்கு எதிரானது என்பதை கண்டுகொள்ள முடியும்.இதை தீர்மாணிப்பதற்கு ஒரு நீதிபதி தேவையில்லை.ஆனால் அமைப்பில் உள்ள தவறான ஆட்கள் எந்த ஒரு சூழலிலும் இவற்றை அமைப்பின் அடிப்படை நிலைப்பாடுகளுக்கு எதிரானது என்று ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.என்னதான் அரசியல்,சித்தாந்த ரீதியாக நாம் இவற்றை நிருபித்தாலும் இவற்றை அவர்களை ஏற்கவைக்கவும் முடியாது.இந்த நிரூபணங்களால் இப்படிபட்டவர்களை அம்பலப்படுத்த மட்டுமே முடியும்.ஏனேன்றால் இவர்கள் செய்யும் தவறுகள் அறியாமையாலோ அல்லது தவறான புரிதல்களாலோ ஏற்படுவதில்லை.இவைகள் திட்டமிட்டு செய்யக்கூடிய செயல்களாகும்.வேறுவழியேயின்றி-அதாவது தமது தவறுகள் பெரும்பான்மை அமைப்பு தோழர்கள்,அணிகள், உழைக்கும் மக்கள் மத்தியிலே அம்பலமாகிவிடும் போது-சுய விமர்சனம் செய்து கொள்வதை போன்று நடிப்பார்கள்.அவர்கள் நடிக்கிறார்கள் என்பது தெரிந்து இருந்தாலும் அதை பெரும்பான்மை அணிகள், உழைக்கும் மக்களுக்கு புரிய வைக்கும் வரை உட்கட்சி போராட்டம்  என்ற கோட்பாட்டிற்கு இணங்க போராடுவதை தவிர வேறு மாற்றுவழிகள் ஏதுமில்லை.அதே நேரத்தில் இந்த தவறான போர்வழிகள்-இந்த அதிகாரவர்க்க பாதையாளர்கள் தம்மை எதிர்ப்போரை அரசியல்,சித்தாந்த ரீதியாகத்தான் எதிர்கொள்வார்கள் என்று நாம் பாமரத்தனமாக எண்ணி ஏமாந்து விடக்கூடாது.இதை ரஷ்ய,சீன வரலாறுகளில் இருந்து நாம் படிப்பிணையாக பெற்றுக்கொண்டு, அதற்கு ஏற்ப இவர்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த வழிமுறை என்ன என்பதை நமது ஆசான் மவோ நமக்கு வழிகாட்டி சென்றுள்ளார்.கட்சியின் தலைவர்,செம்படைத்தலைவர்,அரசுத்தலைவர் ஆகிய பொருப்புகள் இருந்தாலும் கட்சிதலைமையில் அதிகாரவர்க்க பாதையாளர்கள் பெரும்பான்மை பெற்ற போது தோழர் மாவோ கட்சிக்கட்டுப்பாடு,ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாடுகளின் பெயரில் இவர்களுக்கு அடிபணிந்து போய்விடவில்லை.அதற்கு மாறாக 6 மாதகாலம் தலைமறைவாக இருந்து மக்களை திரட்டி கட்சியில் பெரும்பான்மை பெற்றுவிட்ட அதிகாரவர்க்க பாதையாளர்களை கலாச்சார புரட்சி நடத்தி முறியடித்து, மீண்டும் கட்சியை பட்டாளிவர்க்க பாதைக்கு கொண்டு வந்தார்.ஆனால் இந்த கலாச்சார புரட்சியை சீனாவிலும்,உலகெங்கிலும் இருந்த அதிகாரவர்க்க பாதையாளர்கள் கட்சி விரோத செயலாகத்தான் சித்தரித்தனர்.எனவே கட்சிக்கட்டுப்பாடு,ஜனநாயக மத்தியத்துவம் ஆகியவை நிபந்தனைக்கு உட்பட்ட கோட்பாடுகளேயாகும்.அதாவது அமைப்பின் அடிப்படை நிலைபாடுகளுக்கு உட்பட்டதேயாகும்,அதனினும் மேலானதல்ல.ஆனால் அதிகாரவர்க்க பாதையாளர்கள் அமைப்பின் அனைத்திலும் மேலான,முதன்மையான கோட்பாடாக தமது வர்க்க நலன்களுக்கு உகந்தவாறு ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டையே உயர்த்தி,திரித்து,புரட்டி காண்பிப்பார்கள்.இவைகளை கண்டு உண்மையான புரட்சியாளர்கள்,மயங்கவோ,அச்சமடையவோ கூடாது.இவைகள் அனைத்தையும் உழைக்கும் மக்களின் துணையோடு முறியடிக்கவே போராட வேண்டும்.

மேற்கண்ட பணியைத்தான் இப்போது நாங்கள் அமைப்பிற்குள் செய்துவருகிறோம்.இதை உட்கட்சி போராட்டத்தின் மூலம் தீர்க்க முடியவில்லை என்றால் தோழர் மாவோவின் பாதையில் மக்களைத்திரட்டுவதன் மூலம் இப்பணியை செய்வோம்.ஆனால் தோழர் மாவோ நடத்திய காலாச்சார புரட்சியின் காலம்,இடம்,கட்சியின் நிலை, கட்சிக்கான மக்களின் செல்வாக்கு ஆகியவற்றோடு ஒப்பிடும் போது தற்போதைய நம்முடைய நிலைமை அடிப்படையிலேயே வேறு,வேறானவை. ஆகவே இறுதி வரை அமைப்பிற்குள்ளேயே இருந்து மக்களை திரட்டி அதிகாரவர்க்க பாதையாளர்களை முறியடிப்பது என்பது சாத்தியமில்லை.மக்களை திரட்டி முறியடிப்பது என்பதை இங்கே புதியதொரு வடிவத்தில்தான் செய்தாகவேண்டும்.இந்த வடிவம் அதிகாரவர்க்க பாதையாளர்களை மக்களிடம் அம்பலப்படுத்தி, தனிமைப் படுத்துவது என்பதையே பிரதானமாக கொண்டிருக்கும்.இப்படி அம்பலப்படுத்தி தனிமைப் படுத்தும் அதே நேரத்தில் மக்களை அமைப்பாக்குவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாக இருக்கும்.இதை நாங்கள் அறிவிக்கும் போதே தொடர்ந்தும் எம்மை அதிகாரவர்க்க பாதையாளர்கள் அமைப்பில் விட்டுவைப்பார்களா? முடிவிற்கே வராத உட்கட்சி போராட்டத்தை நடத்துவதால் பயனேதும் இல்லை என்று நாங்கள் அந்த அமைப்பில் தொடர்ந்து நீடிப்போமா?என்பது விரைவில் முடிவுக்கு வந்துவிடும்.ஆகவே எமது இந்த போராட்டத்துக்கு அமைப்பிற்கு வெளியேயிருந்து போராடுகிற நீங்களும்,உள்ளே இருந்து போராடுகிற நாங்களும் ஒருங்கிணைந்து செயல்படமுடியும் என்று நாங்கள் கருதுகிறோம்.சூறாவளி இணையதளத்தின் ஆசிரியர் பொருப்பில் இருந்து எமது அமைப்பு ஒருதலை பட்சமாக விலகிக்கொள்ளுமாறு எனக்கு உத்தரவிட்டதை அடுத்து நான் விலகிக்கொண்டேன்.எமது அமைப்பில் உள்ள சுமார் 50-க்கும்  மேற்பட்டோர் இணையதளம் நடத்தினாலும் எனக்கு மட்டுமே இணையதளத்தில் எழுதுவதற்கு தடைவிதிக்கப்பட்ட செயல் எமது அமைப்பின் தலைமை அதிகாரவர்க்க பாதையாளர்களால் கைக்கற்ற பற்றுவிட்டது என்பதற்கான நிருபணங்களில் ஒன்றாக எடுத்துக்கொள்கிறோம்.ஆகவே நாங்கள் இப்போது உட்கட்சி போராட்டம் என்ற எல்லையை கடக்கும் தருணம் வந்துவிட்டது.எனவே எமது இந்த கடிதத்தின் மூலம் முன்வைத்துள்ள செய்திகளையும், கோரிக்கையையும் விரைவில் பரிசீலித்து உங்கள் முடிவை எமக்கு தெரிவிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு:சூறாவளி குழுவினராகிய நீங்கள் எமது அமைப்புகளை விமர்சித்து வெளியிட்டுவரும் விமர்சனங்கள் அனைத்திற்கும் காரணம் நான்தான் என்று 04.10.2011 அன்று என்னை சந்தித்த அமைப்பின் மிக்கிய நபர் ஒருவரின் குறுக்கு விசாரணையில் இருந்து அவர்கள் சந்தேகப்படுகிறார்கள்,என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.இவ்வாறு அவர்கள் சந்தேகப்படுவதற்கு உங்களுக்கு நான் அரசியல் பயிற்சி தந்தேன் என்ற உங்களின் வாக்குமூலம் ஒன்றையே ஆதாரமாக அவர்கள் கொண்டிருக்கின்றனர்.இதன் மூலம் தெளிவான அரசியல் பயிற்சிக்கொடுத்தேன் என்பதையே குற்றச் செயலாக பார்க்கும் அளவிற்கு அதிகாரவர்க்க போதை அவர்களின் கண்ணை மறைத்துவிட்டுள்ளது.நான் தான் இதற்கு பிண்ணனி என்பதை நிரூபிக்க ஏதும் ஆதாரம் இல்லாவிட்டாலும்,தமது சந்தேகத்தையே தீர்ப்பாக்கி விழுப்புரம் மேனாமினுக்கி கர்சீப் புரட்சியாளர் திருவாளர் செல்வக்குமார் மூலம் என்னை சாடுகின்றனர்.இந்த நபரை இயக்குவதே என்னை சந்தித்த முக்கிய நபர்தான் என்பதை அவர் உளறியதில் இருந்துதான் நாங்கள் உறுதிசெய்துகொண்டோம்.இதோடு மட்டுமல்ல எமக்கு மேலும்பல வகையிலும் அவர்கள் தொந்தரவுகளை தருவார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்.மேற்கண்ட நிகழ்வுதான் எம்மை இறுதி முடிவுக்கு செல்லுமாறு எம்மை நிர்பந்திக்கிறது.    
தோழமையுடன்
மூடக்கிழவன் மற்றும் தோழர்கள்.