விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label வறுமை. Show all posts
Showing posts with label வறுமை. Show all posts

Tuesday, 17 January 2012

இந்தியாவின் தேசிய அவமானங்கள்: ’மண்ணு’ மோகன்களும்,மாமாக்களுமே!

உலகில் ஊட்டச்சத்து குறைபாட்டுன் பிறக்கும் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவில் பிறக்கிறது.இது ஒரு தேசிய அவமானம்.நாட்டின் பொருளாதாரம் துரித வளர்ச்சி கண்டு வரும் நிலையில்,இது போன்று அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பிறப்பது ஏற்புடையது அல்ல.



கடந்த ஏழு ஆண்டுகளில் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பிறப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.அவற்றில் தாய்மார்களின் கல்வி,குடும்ப பொருளாதார சூழல்,குடும்பத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஆகியவற்றை முக்கியமாக கூறலாம்.

எனவே நாட்டின் கொள்கையை வகுப்பவர்களும்,அதை செயல்படுத்துபவர்களும், இந்த பிரச்சனையை ஒரு கோணத்தில் பார்க்காமல்,பல்வேறு கோணத்தில் பார்க்கவேண்டும்.
மேற்கண்ட செய்தியின் தன்மையை பார்க்கும் போது இதை கூறுபவர் மீது சமூகத்தின் அக்கறையுள்ள ஒருவர் ஆட்சியாளர்களுக்கு முன்வைக்கும் கோரிக்கை என்றுதான் யாரும் கருதுவார்கள்.

ஆனால் இப்படி பேசியவரே நாட்டை அன்னியர்களுக்கு கூட்டிக்கொடுக்கவும்,காட்டிகொடுக்கவும் சகல அதிகாரத்தையும் வைத்துள்ள இந்திய பிரதமர் என்று சட்டபூர்வமாக அழைக்கப்படும், மாமா மன்மோகன் சிங்குதான் ஊட்டச்சத்து குறைபாட்டை களைவதற்கு கொள்கைகளை வகுப்பவர்களும் அதை செயல்படுத்துபவர்களும் இப்பிரச்சனையை பலகோணத்தில் பார்க்கவேண்டுமாம்அப்படியானால் இவர் எதை பிடுங்கிக்கொண்டு இருக்கிறார்?
நாட்டின் வளங்களை அந்நியர்களுக்கு கூட்டிக்கொடுக்கும் அதிகாரம் உள்ள இந்த கழிசடைக்கு, ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கான கொள்கையை வகுப்பதற்கு அதிகாரம் இல்லையா?



அதிலும் கடந்த ஏழு ஆண்டுகளாக ஊட்டச்சத்து குறைபாட்டுடன் அதிக குழந்தைகள் பிறப்பதாக ஆய்வுகள் கூறுகிறதாம்! கடந்த ஏழு ஆண்டுகளில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பது அதிகரித்திருக்கிறது என்றால் அதற்கு முதன்மையான காரணம் பெண்களின் கல்வியாம்?

வெள்ளையர் ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் பல லட்சக்கணக்கானோர் பட்டினியால் செத்து மடிந்துள்ளனர்.ஆனால்,பஞ்சமில்லாத காலங்களில் யாருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு இருந்ததாக கூற முடியுமா? அப்போது பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாகத்தானே பிறந்தது? பெண் கல்வி முற்றாக மறுக்கப்பட்ட காலம் அது! அப்படியானால் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கும், பெண் கல்விக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?



எந்தெந்த உணவுப்பொருளில் என்னென்ன சத்துள்ளது என்று தெரிந்து கொண்டாலே, அப்படி தெரிந்து கொண்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் பிறந்து விடுமா?

இன்று தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள் அரசு வழங்கும் இலவச அரிசியை நம்பித்தான் உயிர் வாழுகின்றனர்.நாட்டில் பட்டினிச்சாவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்தான் தமிழக ஆட்சியாளர்கள் இலவச அரிசித்திட்டத்தை செயல்படுத்துகின்றனர்.உயிர் வாழவதற்கே அரசின் இலவச அரிசியை நம்பியுள்ள மக்கள் ஊட்டச்சத்துக்கு எங்கே போவார்கள்?

மளிகை பொருட்களையும்,காய்கறிகளையும் மக்களுக்கு எட்டாக்கனியாக்கி விட்டுள்ளனர்.இந்த நிலையில் அவர்களுக்கு படிப்பறிவு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன?

இந்தக் கட்டுரையை எழுதும் எனக்குக் கூட எந்தெந்த உணவு பொருளில், என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பது தெரியும் தான்! தெரிந்து என்ன செய்வது.அதை வாங்குவதற்கு பணம் வேண்டாமா?

1950-களில் 90 சதவீத பொருளாதார வளர்ச்சி விவசாயத்தை சார்ந்து இருந்தது.ஆனால் 2010- ல் 18 முதல் அது 20 சதவீதம் மட்டுமே உள்ளது.எனினும் 80 சதவீத மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ளனர் என்று கூறிருப்பவர் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன்.
நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியிலேயே விவசாயத்தின் பங்கு வெறுமனே 20 சதவீதத்திற்குள்தான் என்றால் அந்த தொழிலை நம்பி வாழும் 80 சதவீத மக்களின் வாழ்க்கையின் அவலத்தை விளக்குவதற்கு இதை விட வேறு ஏதேனும் ஆதாரம் வேண்டுமா?

விவசாயத்தில் இருந்து விவசாயிக்கு லாபம் கிடைப்பது இருக்கட்டும்........ விவசாயின் உழைப்புக்கு கூலியாவது கிடைக்கிறதா? இல்லையே!
அப்படியானால் அந்தத் தொழிலை நம்பியுள்ள விவசாயிகள் ஊட்டச்சத்துக்கு எங்கே போவார்கள்?

அதிலும் நாடு துரித வளர்ச்சி கண்டுவருகிறதாம்? நாட்டு மக்களில் 80 விழுக்காட்டு பேர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமது வாழ்வை இழந்து 20 விழுக்காட்டை தருகிற ஒரு நாடு துரித வளர்ச்சி கண்டுவருகிறதாம்? நம்புங்கள்!
அப்படியானால் நாடு என்றால் யார்? பன்னாட்டு,உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகள்,இவர்களுக்கு மாமா வேலை பார்க்கும் ஆட்சியாளர்கள் மட்டும்தானா? அப்படித்தான் சொல்கிறார் மாமா மன்மோகன் சிங்!

உண்மையில் இவர்களின் நாடு துரித வளர்ச்சி அடைந்துதான் வருகிறது.இதற்கு நேர்மாறாக நம்முடைய நாடு ஏழ்மை அடைந்து வருகிறது.இவர்கள் வளர்ச்சி,முன்னேற்றம் என்று கூறும் அனைத்தும் இந்த நாட்டின் நூறு கோடி மக்களின் வாங்கும் சக்தியை பறித்து,அவர்கள் ஏதும்மில்லாதவ்ர்களாக ஆக்குவதுதான்.

நாட்டின் செல்வம் அனைத்தும் ஒரு சிலரின் கைகளில் குவிந்து வருகிறது.அதை மேலும்,மேலும் துரிதப்படுத்தும் திட்டங்களைத்தான் இவர்கள் செயல்படுத்துகிறார்கள்,செயல் படுத்துவார்கள்!

இப்போதைய சமூக அடித்தளமும்,ஆட்சியும் நீடிக்கும் வரை  ஊட்டச்சத்து குறையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறையப் போவதில்லை!