விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்

Pages

Showing posts with label ஜன் லோக்பால். Show all posts

Wednesday, 28 December 2011

லோக்பால்,அன்னா அசாரே:நாய் வாலை நிமித்த முடியுமா?

தமிழகத்தின் தற்போதைய பரபரப்பான,உணர்ச்சி பூர்வ நிகழ்வு என்றால் அது முல்லை பெரியாறு! இந்திய அளவில் பரபரப்பான செய்தியாக ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் செய்தி லோக்பால் மசோதா! அன்னா ஹசாரே என்ற கிழடை வைத்து பார்ப்பன கும்பல் நடத்தும் மாயாஜால வித்தைதான் லோக்பால் விவகாரம்.நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாகவும் ,சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கும் களங்கத்தையும் ஏற்படுத்தும் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் அதற்கு லோக்பால் மசோதாவே ஒரே வழியென்று பார்ப்பன ஊடகங்கள் ஒருமித்தக்குரலில் எழுதுகின்றன.

சமூக ஆர்வலர் என்று அன்னாவுக்கு பட்டமும் அளித்து கவுரவிக்கின்றனர்.இந்த கிழட்டு நரிக்கு இப்போது வயது என்பது.இத்துணை ஆண்டு காலம் வராத ஞானோதயம் இப்போதுதான் வந்துள்ளது.

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து 1990- களிலிருந்து நடந்துவரும் போராட்டத்தை மறைத்துவிட்டு,இத்தனை ஆண்டுகளாக போராடமால்,இப்போது அணு உலையை எதிர்த்து போராடும் போராட்டக்குழுவின் நோக்கம் என்ன? என்று கேட்கும் பார்ப்பன கும்பல்,இதே கேள்வியை அன்ன ஹசாரேவை கேட்காமல் அவருக்கு மலர் மகுடம் சூட்டுகிறார்கள்.

இந்தியாவில் ஊழல் வரலாறு நேருகாலத்திலிருந்து துவங்கிவிட்டது.மூக்கிருக்கும் வரை சளியிருக்கும் என்பதைப்போன்று அன்று தொடங்கிய ஊழல் இன்று 2G,3G என ஆலமரமாய் வளர்ந்து சமூகமெங்கும் வேர் பரப்பிவிட்டது.அது இல்லாத இடம் என்று எங்குமில்லை.ஊழல் இன்று ஒவ்வொரு இந்தியன் வாழ்விலும் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது.லஞ்சமும்,ஊழலும்!

கிராமத்தில் உள்ளூராட்சி அமைப்பிலிருந்து,டெல்லி செங்கோட்டை வரை அது இல்லாத இடமேயில்லை.அரசுத்துறையானாலும்,தனியார் துறையானாலும் அவற்றில் எது இருக்கிறதோ,இல்லையோ நிச்சயம் அது இருக்கிறது!

லோக்பால் மசோதா பற்றியும், அதை நிறைவேற்றுவதைப்பற்றியும் இந்த மசோதாவின் வரம்புக்குள் பிரதமர்,சிபிஐ,டி பிரிவு ஊழியர்கள் வரை சேர்க்கவேண்டும் என்று காரசாரமாக விவாதம் நடைபெறுகிறது.

ஆனால்,நாட்டின் எந்த ஒரு இடத்திலும் லஞ்சம்,ஊழலில் ஈடுபடுவர்களிடம் அதன் சுவடுகூட தென்படவில்லை.வழக்கம் போல அவர்களின் பணியை செவ்வனே செய்துவருகின்றார்கள்.
தமிழகத்தில் TNPSC முன்னால்,இன்னால் அதிகாரிகளின் வீடுகளில், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலிசார் தீவிர சோதனை நடத்துகிறார்கள் என்ற செய்தி நாளேடுகளிலும்,தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக பேசப்பட்டது.அதே நேரத்தில் சத்துணவு,அங்கன்வாடி பணியாளர்கள் 28 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒரு பணியிடத்திற்கு ஒன்றைரை லட்ச ரூபாய் விலை போகிறது.ஒரு ஆசிரியர் பணியிடம் 5 லட்சம் வரை …..இங்கு எங்கேயும் லோக்பாலின் எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இதோடு மட்டுமா, தமிழக அரசின் இலவசத்திட்டங்கள் கூட இதில் இருந்து தப்பிக்கவில்லை.

1.இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் பயன் பெற ரூபாய் 2 ஆயிரம்.

2.பசுமை குடில் பெறுவதற்கு ரூபாய் 25 ஆயிரம்.

3.சாதி மாற்றி சான்றிதழ் வாங்க வேண்டும் என்றாலும் அதன் விலை ரூபாய் ஐந்து ஆயிரம்.                   

4.குடும்ப அட்டை ரூபாய் 5 ஆயிரம்,அட்டை வீடு தேடி வரும்.

5.அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் சீட்டுவாங்க ஐந்து ரூபாய்.சீட்டே இல்லாமல்  பத்து ரூபாய் கொடுத்தால் இரண்டு ஊசி.

இவை எல்லாமே அன்றாடம் மிக இயல்பாக நடக்கிறது.இப்படி செய்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள்,நான் லஞ்சம் கொடுத்துதான் வேலைக்கு வந்தேன்.எவனாவது எனக்கு இலவசமாகவா வேலை கொடுத்தான்!

எந்த வேலையும் இலவசமாக கிடைப்பதுமில்லை!,லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருவோர்.அதை திருப்பி செய்வதற்கு கூச்சப்படுவதுமில்லை!.நூறு சதவீத வேலைகளும் லஞ்சம் பெற்றுதான் தரப்படுகிறது.எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் யாராவது ஒருவர் நேர்மையாக நடந்துகொண்டால், அவர் தனது வேலையை விரைவிலேயே இழந்துவிடுவார்.
ஊழலை தடுப்பதற்கு என்று எத்தனையோ துறைகளும், நூற்றுக்கணக்கான சட்டங்களும் உள்ளன.ஆனால் இந்த சட்டங்கள் அனைத்தும் லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருகின்றவர்கள் மூலம்தான்  நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

லோக்பால் சட்டம் வந்தாலும்,அந்த சட்டமும் மனிதர்களால்தான் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.எப்படிப்பட்ட சிறந்த சட்டமாக இருந்தாலும் அதை மனிதர்கள் தான் செயல்படுத்த வேண்டியுள்ளதால் தான் அதன் நோக்கம் நிறைவேறுவதில்லை.அதனால் மனிதர்களுக்குப் பதில் ரோபோக்களை பணி அமர்த்தலாம் என்றாலும், அந்த ரோபோக்களுக்கும் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பவர்களும் மனிதர்கள்தான்.சரி மிருகங்களை அமர்த்தலாம் என்றால் அவைகளை பழக்குபவர்களும் மனிதர்கள்தான்.

எனவே சட்டங்கள் ஆயிரங்கள் இருந்தாலும்.அவற்றை நடைமுறைப்படுத்துவது இந்த சமூக அமைப்பில் சாத்தியமில்லை.

இந்த எளிய உண்மை ஹசாரேவுக்கும்,பார்ப்பன ஊடகங்களுக்கும் தெரியாதா என்ன? தெரியும்!பிறகு எதற்காக உயிரற்ற சட்டத்திற்காக இவ்வளவு வரிந்துக்கட்டி கொண்டு நிற்கிறார்கள்?

இதற்கான பதிலும் மிகவும் எளிமையானதுதான்.நிலவுகிற இந்த சமூக அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும்  போக்கு மிக வேகமாகி வருகிறது.இது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் நடக்கிறது.

இந்த சமூக அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையின்மைதான் ’வால் தெரு’ போராட்டமாக உலகெங்கிலும் வெடித்திருக்கிறது.இதில் இருந்து மக்களின் கவனத்தை முடிந்தவரை திசை திருப்புவதுதான் இவர்களின் நோக்கம்.இதை போய் யார் நம்புவார்கள் என்கிறீர்களா? இந்த திசை திருப்பும் நாடகங்கள் உலகின் வேறு பகுதிகளில் எடுபடுகிறதோ, இல்லையோ இந்தியாவில் அது நிச்சயம் நடக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

ஒரு சாதிக்காரன் ஏற்றுக்கொண்டால்,அதை இன்னொரு சாதிக்காரன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.ஒரு மாநிலம் சரி என்றால் இன்னொரு மாநிலம் முடியாது எனக் கூறும்.ஒரு மதம் ஒப்புக்கொண்டால் இன்னொரு மதம் ஒப்புக்கொள்ளாது.இவர்கள் இவற்றில் ஏதோ ஒன்றை துணைக்கு வைத்துக்கொள்வார்கள்.பிறகென்ன! அவர்கள் நினைப்பது நடக்காமலா போய்விடும்!

சரி இதற்கு என்ன தான் வழி! லஞ்சம் ஊழலை எப்படித்தான் ஒழிப்பது! அது முடியாதா என்றால் அதற்கான பதில் இதுதான்.

நிலவுகிற இந்த சமூக அமைப்பின் அடிப்படை போட்டி உற்பத்தி. பொருள் உற்பத்தியில் ஈடுபடும் முதலாளிகள் சந்தையை கைப்பற்றுவதற்கும் அதை தக்கவைத்து கொள்வதற்கும்,தமது அரசியல் பிரதிநிதியான அரசியல் கடசிகளுக்கும்,அரசு அதிகாரிகளுக்கும் கோடி,கோடியாய் கொட்டிகொடுக்கிறார்கள்.இவ்விரு பிரிவினரையும் வைத்துக்கொண்டு,தமக்கு வேண்டியதை சாதித்துகொள்கிறார்கள்.உலகில் உள்ள  ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு பிரிவு முதலாளிகளின் நலனை பாதுகாக்க செயல்படுபவைதான்.

இதுதான் ஊழலுக்கான ஆணி வேர்.அரசியல் கட்சிகளின் தலைமை, அரசு எந்திரத்தின் உயர்மட்டம் ஆகியோரின் செயல்கள் அனைத்தையும் கவனிக்கும் கீழ்மட்டங்களும் அதே வழியை பின்பற்றுகிறார்கள்.இது கிளையாக வளர்ந்து நிற்கிறது.

மொத்தத்தில் போட்டியும், பற்றாக்குறையும் சமூகத்தில் இருக்கும் வரை லஞ்சமும்,ஊழலும் இருந்துகொண்டே இருக்கும்.

நிலத்தில் கோரையை ஒழிக்கவேண்டுமானால்,அதன் கிழங்கோடு பிடுங்கி எறியவேண்டும்.கிழங்கை விட்டுவிட்டு அதன் மேல் பகுதியை கிள்ளுவதால் மட்டும் அது ஒழிந்துவிடாது.கிழங்கு மண்ணிற்குள் மறைந்து இருக்கும்வரை,அது வளர்ந்துகொண்டேதான் இருக்கும்.இதைப் போன்றுதான் ஊழலின் ஆணி வேரான போட்டி பொருளுற்பத்தியை தூக்கியெறியாமல் லஞ்சமும்,ஊழலும் மீண்டும், மீண்டும் முளைவிட்டுகொண்டேதான் இருக்கும்.

மறைந்து இருக்கும் ஆணிவேரை பற்றி பேசாமல் வெளியில் தெரியும் கிளையைக்காட்டி நம்மை திசை திருப்புவதுதான் ஹசாரே கும்பலின் இலக்கு,நோக்கம்!
அதுமட்டுமல்லாமல்,ஹசாரேவும் இதை இயக்கும் கும்பலும் நாய் வாலை நிமிர்த்தி விடப்போவதாக கொக்கரிக்கிறார்கள்.இதை நம்மையும் நம்ப சொல்கிறார்கள்!
இதை நம்புவதற்கு நீங்கள் தயாரா?  

(இக்கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகிறது)

Friday, 23 December 2011

அன்னா அசாரேவும்-நாய்வாலும்!

Saturday, 27 August 2011

ஊழலை ஒழிக்குமா, லோக்பால்?- பிரபல பத்திரிக்கையாளர் பி. சாய்நாத்

ஜூலை 8, 2011 அன்று 'தி இந்து' பத்திரிக்கையில் பி. சாய்நாத் எழுதிய கட்டுரையின் சாரம்

"
எது எப்படி இருந்தாலும் நமது பிரதமர் மிகவும் நேர்மையானவர்" என்று பெருமையாகவும் பிறகு தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்ளவும் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், சமீபத்தில் இந்த வாக்கியம் நம் காதிற்கு வருவதில்லை. ஏனெனில், மிக நேர்மையான நம் பிரதமர் வரலாறு காணாத ஊழல் நிறைந்த அரசுக்கு தலைமை தாங்கி நடத்தி வருகிறார். 

இந்த ஊழலுக்கான காரணங்களை பற்றி பலர் பல கருத்துக்களை சொல்கிறார்கள். ஆனால், முக்கியமான இந்த மூன்று விசயங்களை ஆராயாவிட்டால் இந்திய ஊழலை பற்றிய எந்த ஆய்வும் முழுமை கிடையாது. 

1.
இந்திய சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு, பணமும், வசதியும் ஒரு இடத்தில் குவிப்பது. வர்க்கம் மற்றும் சாதிகளினாலான ஏற்றத்தாழ்வு மற்றும் பல. 

2.
இந்த ஏற்றத்தாழ்வுகலை வலுப்படுத்தி, அதை நியாயப்படுத்தும் இந்திய பொருளாதாரக்கொள்கை. 

3.
பல விதிவிலக்குகள், தனிச்சையான முடிவெடுக்கும் தன்மை மற்றும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத கலாச்சாரம். இவற்றினால் பணம், பதவி உள்ளவர்கள் எதை வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் எனும் நிலைமை. ஆளும் வர்க்கத்தை பகைத்துக் கொள்ளாமல் இருந்தால், எந்த வரிச்சட்டத்தையும் உடைத்து வரி காட்டாமலேயே சமாளித்துவ்ட முடியும் என்கிற நிலைமை. 

ஊழலை அதன் அடிப்படையிலிருந்து சரி செய்ய தவறுவது, குழாய் திறந்திருக்கும் பொழுது தரையை துடைத்து ஈரத்தை போக்க முயற்சிப்பது போல் ஆகும். 

கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வரும் பொருளாதார கொள்கையினால் இந்திய அரசு கம்பெனிகளை மேலும் செல்வச் செழிப்புமிக்கவைகளாக்கும் கருவியாய் குறுகிவிட்டது. தனியார் முதலீட்டுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவே அரசு இயங்கி வருகிறது. 

கடந்த 6 பட்ஜெட்களில் மட்டும் ரூ. 21 லட்சம் கோடி அரசு, வரிவிலக்கு என்ற பெயரில் கம்பெனிகளுக்கு நன்கொடை வாரிவழங்கியிருக்கிறது. அதே காலகட்டத்தில் உணவு மற்றும் விவசாயத்திற்கான மானியங்களும் பெருவாரியாக குறைக்கப்பட்டுள்ளன. 

புதிய பொருளாதார கொள்கை, கம்பெனிகளின் தேவைகளை மிக விசுவாசமாக பூர்த்தி செய்யும் பணியாளராக அரசை மாற்றியுள்ளது. அதுவும் மக்கள் வரிப்பணத்தில். நிலம், தண்ணீர், அலைவரிசை போன்ற இந்தியாவின் வளங்களை கொண்டு தனியார் கம்பெனிகளின் லாபத்தை அதிகரிக்க அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது. 

இந்து மாநிலங்களில் கடந்த மே மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 825 எம்.எல்.ஏக்கள் வெளியிட்ட தகவ்ல் படி அவர்களது மொத்த சொத்து மதிப்பு ரூ. 2128 கோட். இவர்கள் வெளியிடாத சொத்து மதிப்பு இன்னும் எவ்வளவோ? தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் 825 பேர் இதே பணத்தை சம்பாதிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா? வெறும் 2000 ஆண்டுகளே. இதை 10,000 பேர் சேர்ந்து சம்பாதித்தால் கூட 170 ஆண்டுகளாகும். இது தான் நம் நாட்டை சூறையாடிக்கொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வு. 

நாட்டின் பல இடங்களில் தன்னுடைய வலமான நிலங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுதல், கட்டாயமாக வளமான நிலங்களை கையகப்படுத்துதல் போன்ற அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். ஊழலை எதிர்த்து போராட வேண்டுமா? அதற்கு லோக்பால் மட்டும் போதாது. 

சமுதாய ஏற்றத்தாழ்வு, பொருளாதார கொள்கை போன்ற போராட்டங்களுடன் ஊழல் எதிர்ப்பை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு சின்ன லோக்பால் கூட்டம் செய்துவிடமுடியாது. மக்களின் மிகப்பெரிய போராட்டமாக இது அமையும். 

-
மொழிபெயர்ப்பாளர் : திரு. பாலாஜி 

ஆகஸ்ட் மாத தோழமை இதழிலிருந்து.