இந்திய மக்களில் பெரும்பாலானோருக்கு அன்றும்,இன்றும் வாழ்வு தந்தது,தருவது விவசாயம்.அந்த விவசாயம் இன்று அன்னியர்களுக்காக ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு வருகிறது.விவசாயிகள் விவசாயத்திலிருந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.அப்படிஓடுபவர்கள் மற்றொரு பொருளுற்பத்தி துறைக்கு செல்லவில்லை.மாறாக நாட்டில் வாங்கும் திறன் உள்ளவர்களுக்கு சேவை செய்யும் வேலைகளில், ஏற்கனவே உள்ளவர்களின் வாய்ப்புகளை பங்கிட்டுக் கொள்கிறார்கள்.ஆக விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்.இதை பல்வேறு வழிகளில் ஆட்சியாளர்கள் மூடி,மறைக்க முயன்று வருகிறார்கள். இவைகளை அம்பலப்படுத்தி,இதற்கு எதிராக விவசாயிகளை மட்டுமல்ல சமூக பொருப்புள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கிலே தான்.இந்த இணையதளத்தை நாங்கள் துவக்குகிறோம்.எமது இந்த முயற்சிக்கு ஆதரவும்,ஒத்துழைப்பும் நல்குமாறு அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம்.