விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label புதியஜனநாயகம். Show all posts
Showing posts with label புதியஜனநாயகம். Show all posts

Monday, 21 April 2014

தமிழ்வழிக் கல்வியும் மகஇக‍வுக்கு பிழைப்புக்கான சாதனமே!

முலாயம் சிங் யாதவ் …. இவர் சமஜ்வாடி கட்சியின் தலைவர்.உத்திரபிரதேச முன்னால் முதல்வர்,இந்நாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் தந்தை.அண்மையில் இவர் தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது “ பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது இளைஞர்களின் இயல்பு .இதற்காக அவர்களுக்கு மரணதண்டனை விதிப்பது தவறு”, என்று பேசியுள்ளார்!

இப்படி அவர் பேசியது இந்தியா முழுக்க உள்ள ஜனநாயக உணர்வு படைத்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முலாயம் சிங்கின் கருத்து ஆணாதிக்க நிலையிலிருந்து சொல்லப்பட்டதாக விமர்சித்தனர். இப்படி விமர்சித்தவர்களில் உண்மையிலேயே ஜனநாயக உணர்வு படைத்தவர்கள் மட்டுமல்ல போலிகளும் அடங்குவர். ஒட்டுமொத்தத்தில் இப்போலிகள் முலாயம் சிங்கின் சிந்தானா முறையில் இருந்து வேறுபட்டவர்கள் இல்லை.இவர்களுக்கிடையே இப்படிப்பட்ட ஜனநாயக விரோத கருத்துகளை வெளிப்படுத்தும் வடிவங்களில்தான் வேறுபாடு உள்ளது.

இப்போதுமட்டுமல்ல எப்போதுமே முலாயம் சிங் அனைத்து வகையான பிற்போக்குத்தனங்களின் பிரதிநிதி என்றாலும் அவர் இதை இப்போது , இவ்வளவு வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டிய தேவையும், அவசியமும் என்ன வந்தது என்பதை புரிந்து கொண்டால்தான் முலாயமின் கருத்தை விமர்சித்தவர்களில் போலிகள் மற்றும் உணமையான ஜனநாயக உணர்வுள்ளோரின் நோக்கத்தை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.

இந்திய நாடாளுமன்றத்துக்கான 16- வது தேர்தல் நடைபெறும் போது இப்படியான அப்பட்டமான ஜனநாயக விரோத கருத்தை ஒருவர் வெளிப்படையாக கூறமுடிகிறது என்றால், இந்த நாடு எப்படிப்பட்ட ஜனநாயக அடிப்படையை கொண்டது என்பதை வெளிப்படுத்துவதற்கான சிறந்த சான்றாகும்.உண்மையில் முலாயமின் கருத்து தேர்தலில் வெற்றி  பெறுவதை நோக்கமாக கொண்டது.இப்படியான கருத்துகள் தமக்கு தோல்வியை தந்துவிடும் என்று அவர் கருதியிருந்தால் ஒருபோதும் அப்படி பேசியிருக்க மாட்டார்.முற்போக்கை பேசுகிறோமா, இல்லை பிற்போக்கை பேசுகிறோமா என்பது முக்கியமில்லை. எதை பேசினாலும் வெற்றி என்பதே தேர்தலின் இலக்காகும். அந்த வகையில் ஆணாதிக்க கருத்துடையவர்களின் அதிலும் ஹார்மோன் செயல்பாட்டின் ஆதிக்கத்தில் உள்ள இளைஞர்களின் வாக்குகளை கவர்வதே அவரின் தந்திரம்.இந்த வகையில் அவர், தான் பிற்போக்குவாதி என்பதை சிறிதும் மறைக்கவில்லை. முழுப்பொய்யை விட, அரை உண்மை ஆபத்தானது என்பதை போன்று வெளிப்படையான பிற்போக்குத்தனத்தை விட, போலித்தனம் மிகப்பெரிய ஆபத்தானதாகும். இவையிரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

இந்தியாவில் எப்போதும் பிற்போக்குத் தனத்தை விட, போலியான முற்போக்குத்தனந்தான் மிகப்பெரிய அபாயமாக உள்ளது. இந்தப் போலித்தனம் இந்திய சமூகத்தின்  சாரமாக விளங்குகிறது. எங்கும், எதிலும் நிறைந்து காணப்படுகிறது. அதுவன்றி இங்கு ஒர் அணுவும் அசைவதில்லை.

கடந்த 11.04.2014 அன்று கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் ஆலிசிச்குடி என்ற கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் ஆண்டுவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை நேரில் பார்த்த அனைவரும் அரசுப்பள்ளியில் அதிலும் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு இப்படியும் திறமைகள் உண்டா என்று வியக்கும் அளவுக்கு, அதிலும் அம்மாணவர்களின் பெற்றோர்கள் கூட தன்னுடைய பிள்ளைகளிடமா இப்படிபட்ட திறமை இருக்கிறது என்று வியக்கும் அளவுக்கு அந்த ஆண்டு விழா அமைந்திருந்தது.
பன்னிரண்டு நடன நிகழ்ச்சிகள், அரசுப்பள்ளியா, தனியார் பள்ளியா என்ற பட்டிமன்றம், பாட்டுக் கச்சேரி , தமிழ்,ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நாடகங்கள் ஆகியவற்றை மாணவர்கள் நிகழ்த்தினர்.

மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த ஆசிரியர்களின் திறமை,பொருப்புணர்ச்சி மட்டுமே போதுமானதல்ல பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம் என்பதை வலியுறுத்தும் மறுபக்கம் என்ற குறும்படம் ஒன்றையும் இப்பள்ளியின் ஆசிரியர்களே தயாரித்து திரையிட்டும் காட்டியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

இப்பள்ளி மாணவர்களிடையே உள்ள திறமையை இப்படிபட்ட கலைநிகழ்ச்சிகளின் மூலமாக மட்டுமல்ல கல்வித்தரத்திலும் வெளிக்கொணர்ந்துள்ளனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள்.உண்மையில் இப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தானா என வியக்கும் அளவுக்கு அவர்களின் ஆற்றல் அமைந்துள்ளது.

தனது குழந்தையை தனியார் ஆங்கிலப்பள்ளியில்தான் சேர்ப்போம் என்று பிடிவாதம் பிடித்தவர்களை மட்டுமல்ல தமது பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்திருந்த பெற்றோர்கள் மனதையும் இந்த ஆண்டு விழா மாற்றிவிட்டது. தமது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்போம் என்று அறிவிக்கவும் செய்துள்ளது.

எத்துனை கருத்தரங்குகள் விவாதங்கள் நடத்தினாலும் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை ஒரு ஆண்டுவிழா செய்துகாட்டிவிட்டது. இந்த அதிசயிக்க தக்க மாற்றத்திற்கான பெருமை அனைத்தும் இப்பள்ளியின் ஆசிரியர் பெருமக்களையே சாரும்.இதற்காக அவர்களுக்கு நமது மன்மார்ந்த நன்றியை காணிக்கையாக்குவோம்.

ஆனால் இந்த ஆண்டுவிழாவில் அரசுப்பள்ளிகள் பற்றி தாங்கள் வெளிக்கொணர்ந்த கருத்துக்கள் எதுவும் தாங்களுக்கு பொருந்தாது என்றுதான் இப்பள்ளி ஆசிரியர்களின் நடைமுறையாகும். ஏனெனில் இந்த ஆசிரியர்கள் எவரும் தமது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்கவில்லை.மாறாக தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில்தான் படிக்க வைக்கின்றனர்.

அடுத்து மகஇக குழுமத்தின் ஒரு நிறுவனமான வினவு இணையதளம் கடந்த 11.04.2014 அன்று  அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாய் விருதையில் பிரச்சாரம் என்ற தலைப்பில் இதே கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்ட கிராமங்களில் தமது குழும அமைப்புகள் செய்த பிரச்சாரம் சம்பந்தமாக ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.



 

அதில் தமது குழுமத்தின் மனித உரிமை பாதுகாப்பு மையம்.புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திற்கு உட்பட்ட தொட்டிக்குப்பம்,பெரிய வடவாடி,சத்தியவாடி, சாத்துக்கூடல்,செம்பளக்குறிச்சி, கோமங்கலம் ஆகிய கிராமங்களில் அரசு ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் அக்கிராம மக்களிடையே அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

இக்கூட்டங்களில் உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு.வீரபாண்டியன் என்பவர் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

அரசுப்பள்ளிகளில் , தமிழ்வழியில் படிக்க வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கூட்டங்களை நடத்திய மகஇக குழும அமைப்புகளின் செயலை பலரும் பாராட்டுவார்கள்.இப்படி பாராட்டுவதற்கு முன்பு இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

“அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணார்வு கூட்டங்களில் கலந்துகொண்ட மகஇக குழும அமைப்பின் உறுப்பினர்களான செந்தாமரை கந்தன்,வேலுமணி,வீரகாந்தி அதிலும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருவாளர் வழக்கறிஞர் ராஜீ இவர்களின் அனைவரின் வீட்டுப்பிள்ளைகளும் ஆங்கில வழியில், தனியார் பள்ளிகளில்தான் தமது வாரிசுகளை படிக்க வைக்கின்றனர்.தமது பிள்ளைச் செல்வங்களின் கல்வி உரிமைக்காகத்தான் இப்பிரட்சியாளர்கள் பெற்றோர்கள் சங்கத்தை ஆரம்பித்துள்ளனர். இச்சங்கத்தின் மூலம் போராட்டம் நடத்தி தமது வாரிசுகளுக்கு கட்டணச் சலுகை வெற்றெடுத்துக் கொண்ட சாதனை புரிந்துள்ளனர்.

இப்புரட்சியாளர்கள் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்தான் படிக்க வைக்கின்றனர் என்ற உண்மையை சென்ற ஆண்டும் நாங்கள் அம்பலப்படுத்தியிள்ளோம்.ஆனால் அதைப்பற்றி அவர்கள் ஒரு சிறிதும் அதாவது அவர்களின் மனசாட்சி கூட அவர்களை உறுத்தவில்லை.எந்த கூச்சமும் இன்றி இந்தக் கழிசடைகள் இந்த ஆண்டும் அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேருங்கள் என்று பிரச்சாரம் செய்ய கிளம்பி விட்டனர்.

பாலியல் பலாத்காரம் பெரிய குற்றமல்ல என்று பேசிய முலாயமின் நோக்கம் அரசியல் ஆதாயமடைவது , அதாவது அரசியல் அவரின் பிழைப்புக்கான சாதனம்.இதைப் போன்றுதான் புரட்சி , முற்போக்கு, சமூக சேவை ஆகியவை மகஇக குழுமத்தின்  பிழைப்புக்கான சாதனங்கள்.இதனால்தான் இவர்களின் மனசாட்சி கூட இவர்களை  உறுத்துவதில்லை. அப்படியென்று ஒன்று இருந்தால் தானே உறுத்துவதற்கு!

இந்த வகை பிழைப்புவாதத்தில் இந்தியாவிலேயே இந்தக்குழுமம்தான் முதலிடத்தில் திகழ்கிறது.அதிலும் தென்னிந்தியாவிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கே உரிய வடிவத்தில்.

அதாவது வட இந்தியாவில் பார்ப்பனியம் முரட்டுத்தனமானது தென்னிந்திய அதிலும் தமிழக பார்ப்பனிய வடிவமோ நாசுக்கான,நயவஞ்சகமானது, அதைப்போன்றதுதான் மகஇக குழுமத்தின் பிழைப்புவாதமும்.


இதுமட்டுமா,ஒருவனுக்கு ஒருத்தி, அண்ணன், தங்கை உறவு முறைகள் ஆகியவை நிலபிரபுத்து பிற்போக்குத் தனமாம்.அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவ நாடான இந்தியாவில் அவற்றை புரட்சியின் மூலம் இல்லாது ஒழிப்பதை இலக்காக கொண்டுள்ளார்களாம். இவர்கள்! இதனால் மேற்கண்ட நிலப்பிரபுத்துவ பண்பாட்டையும் ஒழிப்பதையும் இலக்காக கொண்டவர்களாம்.
அந்த வகையில்தான் சகோதர முறை திருமணம் செய்து கொண்டவர்களையும் பாலியல்  ரீதியாக சீரழிந்தவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு மாறாக அதன்மீது பெருமைப்பட வைத்து , அதைத் தொடர ஊக்கம் தருவதன் மூலம் அவர்களை தமது ஆதரவாளர்களாக அணிதிரட்டியும் வருகிறார்கள். இப்போலிகள். உலகில் இப்படிபட்ட புரட்சியாளர்களை வேறெங்காவது காண முடியுமா?

இதன் மூலம் தமது பிழைப்புவாதத்திற்கு இவர்கள் எதையும் செய்வார்கள். அந்தவகையில்தான் அரசுப்பள்ளிகளில் உங்களின் பிள்ளைகளை சேருங்கள் என்ற இவர்களின் பிரச்சாரத்தையும் மேற்கொள்கின்றார்கள்.

இப்போது சொல்லுங்கள் மகஇக குழும அமைப்புகளின் கல்வி விழிப்புணர்வு! பிரச்சாரத்தை பாராட்டலாமா என்பதை?! இவர்களுக்கும் முலாயம் சிங் போன்றவர்களுக்கும் இடையே சாராம்சத்தில் என்ன வேறுபாடு உள்ளது என்பதை!
இந்தக் கட்டுரையில் நாங்கள் குறிப்பிட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தாம் சொல்வதை தமது குடும்பத்தில் நடைமுறை படுத்தவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளோம். ஆனால் மகஇக குழும உறுப்பினர்களின் செயலை விமர்சித்த அளவுக்கு ஆசிரியர்களின் செயலை விமர்சிக்கவில்லை என்று நீங்கள் கருதலாம்.

அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேருங்கள் என்ற தமது பிரச்சாரத்திற்கு ஏற்ப அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நடந்து கொள்ளாவிட்டாலும், தாம் பணியாற்றும் பள்ளியில் உள்ள மாணவர்களின் கல்வித்தரத்தையும் ,கலைத்திறமைகளையும் வளார்த்தெடுத்து, சாதித்துக் காட்டியுள்ளனர். அரசுப்பள்ளியில் , தாய்மொழியில் கல்வி அளிப்பதன் மூலம் குழந்தைகளின் புரிதலை உயர்த்தி,பகுத்தறிவாளிகளாக பிறப்பிள்ளைகளை உயர்த்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தமது பிள்ளைகளுக்கு அதை அளிக்க முன்வருவதில்லை.

இதற்கான காரணம், பிள்ளைகள் பகுத்தறிவற்றவர்களாக, ரோபாக்களாக இருந்தால்தான் எதிர்காலத்தில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறமுடியும்.தனியார் நிறுவனங்களுக்கு தேவை மனிதர்கள் இல்லை. மனித உருவில் நடமாடும் ரோபாக்கள்தான். இதனால்தான் தெரிந்தே தமது பிள்ளைகளை அவர்கள் மூடர்களாக வளர்த்தெடுக்கின்றனர்.
இப்படிபட்ட ஆசிரியர்கள்,பெற்றோர்கள் தனியார்மய அநீதியை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையோ,வழிமுறைகளோ ஏதும் இல்லாதவர்கள். சமூகத்திற்கு பின்னே வால்பிடிப்பவர்கள்.

ஆனால் மகஇக குழுமத்தினரோ தனியார்மயம்,தாராளமயம்,உலகமய கொள்கைகளுக்கு தாங்கள் எதிரானவர்கள்,இவைகளை ஒழிப்பதற்கான வழிமுறைகளை உலகிலேயே நாங்கள் மட்டுமே வைத்துள்ளோம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். இதை இந்த கல்வி விழிப்புணர்வு கூட்டங்களிலும் பேசியுள்ளனர்.

தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் பிள்ளைகளை படிக்க வைப்பதால் ஏற்படும் கேடுகளை அறிந்தவர்கள் இவர்கள்.அவற்றை ஒழிப்பதற்கான வழிமுறைகளையும் அறிந்தவர்கள் தாங்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்,ஆங்கிலவழியில் படிக்க வைப்பதுதான் பெருங்குற்றம்.

ஏனென்றால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழியில் படிக்க வைக்கும் செயலுக்கான அடிப்படை கையாலாகாத்தனமே காரணமாகும்.

ஆனால் மகஇக குழுமத்தினர் தமது பிள்ளைகளை இப்படிசெயவதற்கான காரணம் புரட்சி, முற்போக்கு ,சமூக சேவை ஆகியவற்றை தமது பிழைப்பிற்கான சாதனமாக ஆதாரமாக கொண்டிருப்பதுதான்.

சமூக மாற்றம் என்ற உன்னதமான மனிதகுல செயல்பாட்டையே தமது பிழைப்புக்கான ஆதாரமாக கொண்டிருப்பதால்தான் அதாவது சாரம்சத்தில் தனியார்மயம்,தாராளமயம்,உலகமயத்தை பாதுகாப்பவர்கள் என்ற வகையில்தான் இவர்களை நாங்கள் முதலாளித்துவ குழும அமைப்புகளில் ஒன்றாக  மக இக குழுமம் என்று வரையறுத்துள்ளோம்.

சமூக வளர்ச்சிக்கும் ,மாற்றத்திற்கும் , முன்னேற்றத்திற்கும் பெரும் தடைகற்களாக திகழும் மகஇக குழுமத்தை போன்ற போலிகளை களையெடுக்காமல் இவைகளை சாதிப்பது ஒருபோதும் சாத்தியமில்லை. 

தொடர்புடைய கட்டுரைகள்:

 1.  காயடிக்கும் கட்சி 
                      



 







10.தவளை தன் வாயால் கெடும் ...!                           




Tuesday, 6 March 2012

காயடிக்கும் கட்சி- பகுதி – 3

கடின உழைப்பாளர்கள் குடிப்பதில் தவறில்லை””எப்போதாவது குடிப்பதில் பிரச்சனையில்லைஎன குடிப்பதை நியாயப்படுத்தும்,அங்கீகரிக்கும் கும்பல் தன்னை புரட்சிகர சக்தி என்றுக் கூறிக்கொள்வதற்கு சிறிதும் ருகதையில்லை என்பதை சென்றக்கட்டுரையில் எழுதியிருந்தோம்.மேலும் நமது மரபு என்று கள்,சாராயத்தை போற்றும் நயவஞ்சத்தையும்,இதைக்காட்டி மது குடிப்பதை நியாயப்படுத்தும்,அங்கீகரிக்கும் இக்கும்பலின் பித்தலாட்டத்தையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.
மேற்கண்டவற்றோடு இக்கும்பல் தனது நேர்மையற்ற செயலுக்கு பின்னே எப்படியான மக்கள் விரோத போக்குகளை கொண்டுள்ளனர் என்பதை பற்றி இனி பார்ப்போம்.
குடிப்பது நமது நாட்டில் சமூக பண்பாடாக இல்லாவிட்டாலும்,குடிப்பவர்கள் அதிகமாகிவிட்டதால் குடிப்பதில் தவறில்லை என்று அங்கீகரிப்பது, அதிகமாகிவிட்ட குடிகாரர்களின் தேவையை அங்கீகரிப்பது என்பதை போன்றதொரு தோற்றத்தை உருவாக்குவதன் மூலம், அப்படி குடிப்பவர்களின் ஆதரவை பெறுவதையே இவர்கள் தமது இலக்காக கொண்டுள்ளார்கள் என்பது பளிச்சென தெரிகிறது.இதுவரை குடிப்பவர்களை அமைப்பில் உறுப்பினராக சேர்த்துக் கொள்வதில்லை என்ற விதியை கடைபிடித்தவர்கள் இவர்கள்.இவ்விதியை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கினார்கள்.அப்போது சமூகத்தில் பெரும்பான்மையினர் குடிக்காதவர்களாக இருந்தனர்.இப்போது குடிப்பவர்களே பெரும்பான்மையினராக மாறிவிட்டதால் தமது கட்சிக்கு ஆள் கிடைக்கமாட்டார்கள் ன்பதால் குடிப்பதில் தவறில்லை என்று மிகவும்ஜனநாயகபூர்வமாக கொள்கை முடிவெடுத்துள்ளனர் போலும்’!
நிலவுகிற சமூகத்தில் குடிப்பவர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாகிவிட்டது என்பதால் அதை அங்கீகரிப்பது சரிதான் என்றால் இன்றைய நிலையில் பெரும்பான்மை மக்கள் லஞ்சம் கொடுப்பது மட்டுமல்ல,தேர்தலில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஓட்டும் போடுகின்றனர்.லஞ்சம் கொடுக்காதவர்களையும்,தேர்தலில் லஞ்சம் வாங்காதவர்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம்.இதை வைத்து பார்க்கும் போது லஞ்சம் கொடுப்பவர்களும்,வாங்குபவர்களுமே பெரும்பான்மையினராகி விடுகின்றனர்.
பெரும்பான்மையினர் குடிப்பதால் அதை அங்கீகரிக்கலாம் என்றால் லஞ்சத்தை அங்கீகரிக்கவும் வேண்டும்!
மக்கள் லஞ்சம் கொடுக்கும் போதும அதை தேர்தலில் பெறும்போதும் இழப்பை சந்திக்கிறார்கள்.தேர்தலில் பணம் கொடுத்து வாக்குப் பெறுபவர்கள் அதை திரும்ப எடுப்பதன் மூலம் இழப்பை சந்திக்கிறார்கள் மக்கள்.
இதையும்,அதையும் எப்படி ஒப்பிடலாம் என்று புரட்சியாளர்கள் சார்பில் சிலர் வாதிடக்கூடும்!
குடியை அங்கீகரிப்பதன் மூலம் குடிப்பவர்களுக்கு என்ன தாயம்? அது குடிகாரர்களுக்கு இழப்பைத்தான் ஏற்படுத்துகிறது. உழைப்பினால் கடின உழைப்பாளர்களுக்கு ஏற்படும் அசதி,வலி ஆகியவற்றில் இருந்தும்,மன ஆறுதலுக்காவும் மது அருந்தி மூலம் நன்மை அடைகிறார்கள் என்று நமது புரட்சியாளர்கள் என்னதான் வாதாடினாலும் மதுவினால் மேற்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதில்லை.மாறாக அதை மூடிமறைக்கிற வேலையைத்தான் மது செய்கிறது என்பதுதான் உண்மை.
உண்மையில் மதுவினால் ஆதாயமடைபவர்கள் மது உற்பத்தியாளர்களும்,ஆட்சியாளர்களுமே! எனவே மதுவை அங்கீகரிக்கும் நமதுபுரட்சியாளர்களின்செயலுக்கு பின்னே மேற்கண்டவர்களின் நலனே ஒளிந்து கொண்டிருக்கிறது.
மது குடிப்பதில் தவறில்லை என்பதற்குள்ளே,மது உற்பத்தி செய்வதும் தவறில்லை என்ற முதலாளிகளின் நலன் ஒளிந்து கொண்டிருக்கிறது.
மொத்தத்தில் நிலவுகிற சமூக அமைப்பை போலிசைப் போன்று துப்பாக்கி முனையில் அல்லாமல் உழைக்கும் மக்களின் நலன் என்றப் போர்வையில் மிகவும் சாதுர்யமாக பாதுகாக்கும் நயவஞ்சக அணுகுமுறைதான் குடிப்பதில் தவறில்லை என்ற இந்த கும்பலின் நிலைப்பாடாகும்.
தான் வரையறுத்துள்ள கோட்பாட்டின் படியே மதுவை மட்டுமல்ல லஞ்சம்,ஊழல்,சாதி,தீண்டாமையையும் இந்தக்கும்பல் அங்கீகரித்தே செயல்படுகிறது.
இந்தக் கும்பல் நடத்தும் ஒரு வெகுசன அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜி என்பவர் ஒருசில மாதங்களில் அரைகோடி ரூபாய்க்கும் மேல் சொத்து சேர்த்துள்ளார்.அந்த சொத்து மனையாகவும்,வீடாகவும்,கடையாகவும் எகத்தாளமாக நின்றுகொண்டிருக்கிறது.
இந்த சொத்து அவருக்கு எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பியவர்களிடம், இது தவறான வழியில் வந்தது என்பதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்று கேட்கிறது இந்தக்கும்பல்.
கேட்டவர்கள் இந்த சொத்து தவறான வழியில் வந்தது என்றுக்கூறவில்லை.மாறாக எப்படி வந்தது என்றுதான் கேட்டார்கள்.பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நேர்மையாக பதில் சொல்லக்கடமைப்பட்டவர்கள்.ஆனால் இவர்களோ கேள்வி கேட்டவர்களிடமே,கேள்வி கேட்டதன் மூலம் இந்த சொத்து வெளியில் சொல்ல முடியாத வழியில் வந்தது என்பதையும்,அதை நியாயப்படுத்துவதையுமே தமது விதண்டாவாத அணுகுமுறையின் மூலம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றுக்கூறி நமது வேலையை சுலபமாக்கிவிட்டது.
மேற்கண்ட இதே நபர் தான் தாழ்த்தப்பட்ட பெண்ணையே திருமணம் செய்துகொள்வேன் என்று முதலில் கூறினார்.இவர்கேட்டப்பெண் இவரை திருமணம் செய்து கொள்ள மறுத்தவுடன் சாதிக்கு தகுந்தமாதிரிதான் புத்தி இருக்கும், எனவே என்னைவிட உயர்ந்த சாதியில் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்”, என்று அறிவித்தே தன்னைவிட உயர்சாதிப்பெண்ணை திருமணம் செய்து கொண்ட மாபெரும் ஜனநாயகப் போராளி இவர்.
தில்லைக் கோயிலில் தமிழில் பாட முற்பட்ட ஆறுமுகச்சாமி என்பவரை தில்லை தீட்சித பார்ப்பனர்கள் பாடவிடாமல் பல ஆண்டுகளாக தடுத்து வந்தனர்.ஆறுமுக சாமியையும் தாக்கினர்.இந்தப் போராட்டத்தை இந்த மாபெரும் ஜனநாயக போராளி தலைமையில்தான் இந்தக்கும்பல் நடத்தியது.
இந்தப்போராட்டம் தமிழர்களுக்கும்,தீட்சிதர்களுக்கும் இடையிலான போராட்டமாகத்தான் தமிழகம் முழுவதும் நாம் கருதினோம்.ஆனால் இந்த ஜனநாயக போராளியும்,இந்தக்கும்பலையும் பொருத்தவரை, ஆறுமுகசாமி வன்னியர் என்பதால் அது வன்னியர்களுக்கும்,தீட்சிதர்களுக்கும் இடையிலான போராட்டமாகவே கருதி நடத்தினார்கள்.
இப்போராட்டத்தை கடலூர்,விழுப்புரம்,புதுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அந்த அமைப்பினரே நடத்தினர்.இந்தப் போராட்டத்தை தீட்சிதர், வன்னியர் ஆகியோருக்கு இடையிலான போராட்டமாக நடத்தியதற்கு ஆதாரமாக போராட்டங்களில் தலைமையேற்,அங்கு நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களில் பேச்சாளர்களாக இம்மாவட்டத்தை சேர்ந்தவர்களில் பிறப்பால் வன்னியர்களை மட்டுமே தேர்வு செய்தனர்.
இப்போராட்டம் வெற்றி பெற்றவுடன் அடுத்தக்கட்டமாகநந்தன் நுழைந்த வாயிலை திறப்போம்”,என்றப் போராட்டத்தை அறிவித்தனர்.இப்போராட்டத்தில் நான் பங்கேற்க மாட்டேன் என்று கூறிவிட்டு ஆறுமுகசாமி ஒதுங்கிக் கொண்டார்.இவரின் இந்தச் செயலை ஒரு ஆர்ப்பாட்டத்தில் சுட்டிக்காட்டிய அந்த அமைப்பை சேர்ந்த ஒருத்தோழரை இந்த மாபெரும் ஜனநாயக போராளி அந்த ஆர்ப்பாட்டத்திலேயே கண்டித்து பேசினார்.
தமிழில் பாடும் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய அந்த அமைப்பை சேர்ந்த  போராளிஒருவர் நந்தன் நுழைந்த வாயிலை திறப்போம் என்ற போராட்டத்தைப் பற்றி கூறும்போது தாழ்த்தப்பட்டவர்கள் அவசரப்படுகிறார்கள் என்றுக்கூறி தனது முற்போக்குத் தனத்தைக் வெளிப்படுத்தினார்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சமூகத்தில் தீண்டத்தகாதவர்களாக ஒடுக்கப்படும் மக்கள் சாதி,தீண்டாமை ஒழிய வேண்டும் என்று அவசரப்படுகிறார்களாம்? இதைப்போன்ற புரட்சியாளர்களை உலகில் வேறு எங்காவது நாம் பார்க்க முடியுமா?இதோடு நந்தன் நுழைந்த வாயிலை திறப்போம் ன்றப் போராட்டத்தையும் மூட்டைக் கட்டிவிட்டு .இப்போது தமது வழமையானபுரட்சிகரநடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது கட்சி ஆவணங்களில் எவ்வித மாற்றமும் செய்யாமலேயே தமது அனைத்து செயல்பாடுகளிலும் முதலாளித்துவ சீர்த்திருத்தவாத போக்கையே நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
சமச்சீர் கல்வி விவகாரம்,தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம்,ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட மூவர் தூக்கு விவகாரம் ஆகியவற்றிலும் இந்தக்கும்பல் சீர்த்திருத்தவாத நிலைப்பாட்டையே கொண்டு செயல்பட்டதையும் ஏற்கனவே நாங்கள்  அம்பலப்படுத்தியுள்ளோம்.
நிலவுகிற சமூக அமைப்பை பாதுகாக்கும் து சீர்த்திருத்தவாத கோட்பாடு ,செயல்பாடு ஆகியவற்றையே புரட்சிகர கோட்பாடாகவும் ,செயல்பாடாகவும் இக்கும்பல் முலாம் பூசித்திரிகிறது.தனது இந்த கேடுகெட்டச் செயலை யாரும் அறிந்து கொள்ள முடியாது என்று பகல்கனவு காண்கிறது.யாராவது தனது செயலைப் பற்றி கேள்வி  எழுப்பிவிட்டால்தமக்கே உரிய புரட்சிகர வழியில்’கேள்வி எழுப்பியவர்களின் வாயை அடைத்துவிடுகிறது.
இதற்காகவே அம்மாவின் விசுவாசிகளை விட தீவிரமான விசுவாசிகளை உருவாக்கிவைத்துள்ளது.அரசியல்,சித்தாந்த ரீதியாக அம்மாவுக்கு தமிழகத்தில் போட்டியாளர்கள் யாராவது உண்டென்றால் அவர்கள் இவர்கள்தான்.இவர்கள் மட்டும் தேர்தல் களத்தில் குதித்துவிட்டால் அம்மாவின் கதி,அதோ கதிதான்!
புரட்சித் தலைவிக்கே சவால் விடும் அப்பேற்பட்ட புரட்சியாளர்கள் யார் என்கிறீர்களா?
அவர்கள்தான் மக்கள் கலை இலக்கியக் கழகம்,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,விவசாயிகள் விடுதலை முன்னணி,புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,மனித உரிமை பாதிகாப்பு மையம்,புதிய ஜனநாயகம்,புதிய கலாச்சாரம்,வினவு இணையதளம் ஆகிய நிறுவனங்களை நடத்துபவர்கள்!
தயவு செய்து இவர்களைப் பற்றி அம்மாவின் காதில் யாராவது கொஞ்சம் போட்டு வையுங்களேன்…..!  
தொடர்புடைய கட்டுரைகள்:
                      



3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2


6.முரண்பாடுகளின் மூட்டையாகிப் போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-4