விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Saturday, 17 November 2012

மராட்டியத்தின் முசோலினி பால்தாக்கரே மரணம்!

சிவசேனாவின் தலைவர் பால்தாக்கரே நான்கு நாட்களுக்கு முன்னரே இறந்து போனாலும், இன்று 17.11.12 மாலை 3.30 மணியளவில்தான் இறந்து போனதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாகவே மும்பை நகரத்தின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கிப்போனது.



மக்கள் தங்களின் உயிருக்கும்,உடமைக்கும் தங்களால் முடிந்த வரையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு வாய்ப்பாக இருந்தாலும், என்ன நடக்குமோ என்று ஒவ்வொரு நொடிப்பொழுதும் அஞ்சி நடுங்கியே வாழ்ந்து வந்தனர்.



தமிழர்கள்,முஸ்லீம்கள் ,வட இந்தியர்கள் தாங்கள் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் உச்சத்தில் உள்ளனர்.தற்போதைய நிலையால் வட இந்தியர்கள் ஏராளமானவர்கள் தமது சொந்த மாநிலங்களுக்கு ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

மராட்டியத்தில் முஸ்லீம்களின் முதன்மையான எதிரி சிவசேனாவும்,பால்தாக்கரேவும் என்பதை நிரூபிக்கும் வகையில் மும்பையில் உள்ள முஸ்லீம்கள் பால்தாக்கரே நலம் பெற சிறப்புப்பிரார்த்தனை நடத்தினார்களாம்.

இறந்து போனாலும் தாங்கள் பாசிஸ்ட்டுகள் தான் என்பதை நிரூபிக்கின்றனர். சிவசேனாவின் தொண்டர்கள்-குண்டர்கள் சாவை சிறுபான்மையினரை அஞ்சி நடுங்கச் செய்து ,தமது தலைவனின் சாவை கொண்டாடுகின்றனர்.

பாசிஸ்டுகள் மக்களால் தண்டிக்கப்பட்டு சாவை எதிர்கொள்வதற்கு பதில் தாமே சாவது நமக்கு வருத்தம்தான் என்றாலும்,ஒரு மனித குல விரோதியின் மரணத்திற்காக மகிழ்ச்சி அடைவோம்!