விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label வரி. Show all posts
Showing posts with label வரி. Show all posts

Tuesday, 5 June 2012

பெட்ரோல் விலை உயர்வு: கொலைகாரனே நீதிபதி!


ண்மையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூபாய் ஏழு உயர்த்திவிட்டு, இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டவுடன் லிட்டருக்கு இரண்டு ரூபாயை குறைத்திருக்கிறது இந்திய அரசு. இந்த விலை குறைப்புக்கான அளவை விலையை உயர்த்தியபோதே குறைப்பதற்கென்றே தீர்மானித்த அளவாகும். உண்மையில் தான் உயர்த்த விரும்பும் விலை உயர்வின் அளவிற்கு மட்டுமே இவர்கள் விலையை உயர்த்தவதில்லை. அதற்கு மாறாக குறைப்பதற்கான அளவையும் சேர்த்தே விலையை உயர்த்துகின்றனர். எதிர்ப்பு ஏற்பட்டவுடன் தாங்கள் ஏற்கனவே தீர்மானித்த அளவிற்கு விலை குறைப்பு அறிவிப்பை வெளியிடுகின்றனர்.



இதைவிட நாட்டு மக்களை முட்டாள்களாகவும், ஏமாளிகளாகவும் வேறு யாரும் கருதி செயல்பட முடியாது.

நாடு முழுக்க அன்றாடம் மோசடி கும்பல்கள், மக்களை மோசடி செய்து ஏமாற்றி வருவதை நாம் பார்த்துதான் வருகிறோம். இவர்கள் தமது மோசடி செயல்களுக்கான தார்மீக பலத்தை அரசுகளிடமிருந்துதான் இயல்பாக பெற்றுக்கொள்கின்றனர்.

பெட்ரோல் விலை உயர்வு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொருத்தே, எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிப்பதாக தனது மக்கள் விரோத செயலுக்கு நியாயம் கற்பித்துக் கொள்கிறது இந்திய அரசு. 
உண்மையில் இந்திய அரசின் மேற்கண்ட வாதமே அப்பட்டமான மோசடித்தனம் நிறைந்ததாகும். இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலையில் பாதிக்கும் மேல் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளே ஆகும். உலகிலேயே பெட்ரோலிய பொருட்களின் மீது மிக அதிகமான வரிவிதிப்பது இந்தியாவில் தான்.

ஆனால் இம்முறை பொட்ரோல் விலையை உயர்த்தியபோது இந்த கேடுகெட்ட வாதத்தைக்கூட இவர்கள் முன் வைக்கவில்லை. அதற்கு மாறாக டாலருடனான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால்தான் பெட்ரோலின் விலையை உயர்த்தியதாக கூறினர்.

”சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கு இல்லை. ஆகையால் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை உயர்வை மக்கள் ஏற்கத்தான் வேண்டும்”, என்று அரசு கூறும் வாதத்தில் ஒரு வித தர்க்க நியாயம் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

ஆனால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதற்கும் மக்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? யாருடைய தவறால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது? இதற்கு மிக எளிமையாக, இந்திய அரசின் தவறான, மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளினால்தான் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது என்று கூறிவிடலாம். இதன்படி பார்த்தால் தவறு செய்த குற்றவாளி இந்திய அரசு. ஆனால் குற்றவாளியே தான் செய்த தவறுக்கான தண்டனையை மக்களாகிய நமக்கு வழங்குகிறது!

உண்மையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதற்கு காரணமான அரசுக்குத்தான் மக்களாகிய நாம் தண்டனை தரவேண்டும். ஆனால் அதற்கு நேர் மாறாக குற்றவாளியே, குற்றமற்ற நமக்கு தண்டனை தருகின்ற விநோதம் நடைபெறுகிறது!

தொடர்புடைய கட்டுரைகள்:

1.ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 23.37; வரி ரூ. 40.33 ! கொள்ளையடிப்பதை ம‌த்திய அரசு ஒப்புதல்!!




.

Friday, 16 September 2011

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 23.37; வரி ரூ. 40.33 ! கொள்ளையடிப்பதை ம‌த்திய அரசு ஒப்புதல்!!


புது தில்லி, ஆக.23: ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 23.37, ஆனால் அதற்கு விதிக்கப்படும் வரியோ ரூ. 40.33. இத்தகைய வரி விதிப்பு வேறெந்த நாட்டிலும் அல்ல. இந்தியாவில்தான் பொருளின் உற்பத்தி விலையை விட அதிக வரி விதிக்கப்படுகிறது.


அமெரிக்காவை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்தார்.
தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 63.70-க்கு விற்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 42.82 என்று அவர் குறிப்பிட்டார்.
இதேபோல இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம்.
பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 41.81, இலங்கையில் ரூ. 50.30, வங்கதேசத்தில் ரூ. 44.80, நேபாளத்தில் ரூ. 63.24-க்கு விற்கப்படுகிறது.
இருப்பினும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவு என்று அவர் குறிப்பிட்டார். பிரான்ஸில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 94.97, ஜெர்மனியில் ரூ. 95.99, இங்கிலாந்தில் ரூ. 96.39, இத்தாலியில் ரூ. 96.79-க்கு விற்பனையாகிறது.
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு அதிகப்படியான வரி விதிப்பு முக்கியக் காரணமாகும். வரி விதிப்பின்றி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டால் ஒரு லிட்டர் ரூ. 23.37-க்கு விற்பனை செய்ய முடியும்.
தில்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 41.29. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை விடக் குறைவானதாகும். ஆனால் இலங்கை, வங்கேதசம் ஆகிய நாடுகளை விட அதிகமாகும்.
வரி விதிப்பின்றி ஒரு லிட்டர் டீசலை ரூ. 24.90-க்கு விற்பனை செய்ய முடியும்.
அமெரிக்காவில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 45.84. பிரான்ஸில் ரூ. 69.87, ஜெர்மனியில் ரூ. 72.54, இங்கிலாந்து ரூ. 82.93, இத்தாலியில் ரூ. 74 விலையில் விற்பனையாகிறது. பாகிஸ்தானில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 46.70, நேபாளத்தில் ரூ. 45.38, இலங்கையில் ரூ. 34.37, வங்கதேசத்தில் ரூ. 27.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொது விநியோக முறையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ. 14.83-க்கு விற்கப்படுகிறது. இப்பிராந்தியத்தில் இது மிக மிகக் குறைவான விலையாகும். பாகிஸ்தானில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ. 44.06, இலங்கையில் ரூ. 24.67, வங்கதேசத்தில் ரூ. 45.38-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர் விலை (14.2கி.கி) ரூ. 399. இது பாகிஸ்தானில் ரூ. 757.04, இலங்கையில் ரூ. 863.40, வங்கதேசத்தில் ரூ. 469.24, நேபாளத்தில் ரூ. 819.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நன்றி: தினமணி