தோழர் suryajeeva மற்றும் தோழர்கள்,வாசகர்களுக்கு ! மாஅக-வை வலிந்து குறை சொல்வது எமது இலக்கோ,நோக்கமோ அல்ல.இந்தியா அரைக்காலணி,அரைநிலபிரபுத்துவ நாடு இங்கு விவசாயிகளுக்கான விவசாயப்புரட்சி நடத்தப்பட வேண்டும் என்ற நக்சல்பரிகளின் அடிப்படை நிலைப்பாடுகளில் இருந்து இந்த அமைப்பினர் முற்றிலும் எதிராக கடந்த எட்டாண்டுகளாக, அடிப்படை நிலைப்பாடுகளில் மாற்றம் எதையும் செய்யாமலேயே, இந்தியாவில் விவசாயிகளுக்கான விவசாயப்புரட்சி சாத்தியமில்லை என்ற நிலைபாட்டை தன்னிச்சையாக எடுத்து அதை நடைமுறையும் படுத்தினர்.
இதன் அடிப்படையில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பையே கலைக்கப்போவதாகவும் எமக்கு தகவல் தந்தனர்.உழுபவருக்கே நிலம்,உழைப்பவருக்கே அதிகாரம் என்ற முழுக்கத்தை முற்றிலும் கைவிட்டு கிராமப்புற வேலைகளையே முற்றாக புறக்கணித்தனர்.இதை ஏற்க மறுத்த நாங்கள் விவசாயிகளிடம் விரிவான ஆய்வுகளை நடத்தி ஐந்து அம்ச கோரிக்கைகளை தொகுத்தோம்.இந்த ஐந்து அம்ச கோரிக்கைகள் இந்தியா ஒரு அரைக்காலணி,அரைநிலப்பிரப்புத்துவ நாடு என்ற அடிப்படை நிலைப்பாட்டின் பருண்மையான வடிவமாகும்.இதை நாங்கள் செய்ததற்காகவே கடந்த எட்டாண்டுகளுக்கும் மேலாக அமைப்பில் இருந்தே ஓரங்கட்டப்பட்டோம்.இந்த ஓரங்கட்டுதல் மாவட்ட அளவில்தான் நடப்பதை போன்று மாஅக-எமக்கு ஒரு பார்வையை உருவாக்கியது.இது அப்பட்டமான, நயவஞ்சகமான இரட்டை வேடமாகும்.எமது பகுதியை ஓரங்கட்டி,இழிவு படுத்திய செயல் மாஅக-வின் ஒப்புதலுடன் தான் நடந்தது என்பதை 2010-ம் ஆண்டு தொடக்கத்தில்தான் நாங்கள் ஆதாரத்துடன் கண்டுபிடித்தோம்.எமது ஐந்து அம்ச கோரிக்கை தொகுப்பிற்காக எம்மை ஓரங்கட்டியது என்பது மாஅக ஆவணங்களில் உள்ள அடிப்படை நிலைப்பாட்டிற்கு முற்றிலும் புறம்பாக நயவஞ்சகமாக நடந்து கொள்கிறது என்பதற்கான சிறந்த ஆதாரமாகும்.ஆகவே மாஅக-தான்,தான் வகுத்த அடிப்படை நிலைபாட்டிற்கே எதிராகவும் ,முரண்பாடாகவும் ,சொல்லொன்றும்,செயல் ஒன்றுமாக நேர்மையற்று நடந்துகொண்டது.நாங்கள் இந்த நிமிடம் வரை அடிப்படை நிலைப்பாட்டை உறுதியாக பற்றி நிற்கிறோம்.அதன் அடிப்படையிலேயே மக்கள் திரள்பாதையில் ஐந்து அம்ச கோரிக்கையை விவசாயிகள் மத்தியில் மட்டுமல்ல,அனைத்து தரப்பு உழைக்கும் மக்கள் மத்தியிலும் விரிவாக கொண்டு சென்றுள்ளோம்.
அடிப்படை நிலைப்பாட்டிற்கு விரோதமாகவும்,எதிராகவும் உள்ள மாஅக எப்படி மக்கள் விரோத நடைமுறையை கொண்டுள்ளது என்பதைத்தான் இப்போது அம்பலப்படுத்தி வருகிறோம்.எமது இந்தப் பணி கோட்பாட்டு ரீதியானதே தவிர,யாரையும் குறை சொல்வதோ,தனி நபர் தாக்குதலோ அல்ல என்பதை தோழமையுடன் அனைத்து தோழர்களுக்கும்,வாசகர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.
விரைவில் எமது எட்டாண்டுகால உட்கட்சி போராட்டம் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்து வெளியிட இருக்கிறோம்.அப்போது முழு உண்மையும் வெளிவரும்.
ஜெயாவின் மக்கள் விரோத விலைவாசி உயர்வு பற்றிய கட்டுரையில், இந்தியாவில் உள்ள ஓட்டுகட்சிகள் அனைத்தையுமே அம்பலப்படுத்தியுள்ளோம்.அவர்களின் வரிசையில் புரட்சிகர சவடால் அடித்துக்கொண்டு ஊழல்,லஞ்ச லாவண்கள் மூலம் முறைகேடாக மக்கள் விரோத தன்மையில் மாஅக-வின் அணிகளின் புதிய தலைமுறையை சேர்ந்தவர்கள் சொத்து சேர்த்து வருவதும், அதை மாஅக நியாயப்படுத்தி வருவதையுமே நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம்.இவர்கள் இப்படி சொத்து சேர்க்கும் விவகாரம் எமக்கு மட்டும் தெரிந்த ரகசியம் அல்ல.எமது பகுதியில் பெரும்பான்மை மக்கள் அறிந்து வைத்திருப்பதுதான்.
புரட்சியின் பெயரால் புரட்சிகர சவடால் அடித்துக்கொண்டு செயல்படும் இவர்கள்தான் புதிய ஜனநாயக புரட்சிக்கு முதன்மையான விரோதிகளும்,துரோகிகளும் ஆவார்கள்.இவர்களின் இந்த துரோகம்தான் ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகளின் பிழைப்புவாதத்தை விட மிகவும் தீவிரமான,நுட்பமான புரட்சிக்கு எதிரான செயல்களாலும்.ஆகவே ஓட்டு சீட்டு பொறுக்கிகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதை காட்டிலும்,இந்த புரட்சிகர சவடால் அடிக்கும்,துரோகிகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதுதான் உண்மையான புரட்சிகர சக்திகளின் உடனடிப்
பணியாகும்.
இப்பணியின் தொடக்கம்தான் அந்த கட்டுரையில் நாங்கள் எழுதியிருப்பது.அடுத்தடுத்து ஏராளமான செய்திகளை நாங்கள் தர இருக்கிறோம்.
அவை அனைத்தையும் படித்துவிட்டு துரோகிகளை அடையாளம் காணுங்கள்!
எமது இந்தப் பணிக்கு ஆதரவு தாருங்கள்! நன்றி.
13 comments:
துரோகிகள் எங்கும் இருக்கிறார்கள்.. நான் அதை மறுக்கவில்லை... இன்னும் சொல்லப் போனால் இந்த பதிலை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதத்தை தழுவலாம் என்று விவாதம் செய்து கொண்டிருப்பார்கள்.. மதம் ஒரு அபின் என்று கூறி விட்டு மார்க்சிய வாதிகள் மதத்தை தழுவினால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று கதைப்பது காமடியாக இருக்கிறது... இருந்தாலும் இவை தலைவர்கள் மட்டத்தில் இருக்கலாம்.. தொண்டர்கள் இன்னும் அறியாமை பிடியில் இருக்கலாம்.. அவர்களுக்கு நாசுக்காய் சொன்னால் தான் மண்டையில் புரிதல் ஏற்படும்... அதை விட்டு விட்டு தவறு செய்பவர்களை மொத்த இயக்கமாகவே சாடும் பொழுது, சாதாரணமாகவே நம் தொண்டனுக்கு உள்ள கட்சி விசுவாசம் அங்கு வெளிப் படுகிறது.. ஆகையால் நாம் ஒன்று சேர முடியாமல் பிரிந்தே இருக்கிறோம்... இது ஏகாதிபத்திய சக்திகளுக்கு சாதகமாகிறது... மாற்றம் வேண்டி ஆரோக்கியமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்... என் சிந்தனை முடிந்த உடன் அனைத்து பொது உடமை கட்சிகளுக்கும் என் சிந்தனையை ஆய்வுக்கு உட்படுத்துவேன்...
போலி கம்யூனிஸ்ட்கள் களை போல் எங்கும் பரவி உள்ளனர்.. அவர்களை களை எடுப்பது முக்கியம்.. அதே நேரத்தில் அங்கே ஒன்றி நிற்கும் பயிருக்கும் பங்கம் வராமல் களை எடுக்க வேண்டும் என்றே கூறுகிறேன்...
மாற்றம் தேவை என்றும் மாற்றம் நிகழும் என்று காத்திருக்காமல் மாற்றத்தை ஏற்படுத்த ஏதாவது சிந்திக்க வேண்டும் என்று நான் இருக்கிறேன்... உங்கள் கருத்துக்கும் காத்திருக்கிறேன்
jeevansure@gmail.com
///மாஅக-வின் அணிகளின் புதிய தலைமுறையை சேர்ந்தவர்கள் சொத்து சேர்த்து வருவதும், அதை மாஅக நியாயப்படுத்தி வருவதையுமே நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம்.///
நண்பரே அது யாரு மாஅக கேள்விப் படாத கட்சியாக இருக்கு
ம.க.இ.க தான் தெரியும்
விளக்கவும்
தோழர் suryajeeva அவர்களுக்கு, தங்கள் கருத்தை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம்.நாங்கள் அந்த அமைப்பில் உள்ள அணிகளை குற்றம் சொல்லவில்லை.அவர்கள் உண்மையாகவே புரட்சியை நேசிப்பவர்கள். நாங்கள் அம்பலப்படுத்தியுள்ள நபர் அந்த அமைப்பின் முக்கிய தலைவராக, அந்த அமைப்பினரால் முன் நிறுத்துபடுபவர்.அவரைத்தான் நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம்.
நண்பர் ஹைதர் அலி அவர்களுக்கு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ)மாஅக இந்த கட்சியின் வெகுசன அரங்கு அமைப்புகள்தான் மகஇக-வும் அத்ன் தோழமை அமைப்புகளும்.இக்கட்சியின் கட்டுப்பாட்டில் இயங்குபவைதான் வெகுசன அரங்கு அமைப்புகள்.நன்றி.
புரட்சியின் பெயரால் புரட்சிகர சவடால் அடித்துக்கொண்டு செயல்படும் இவர்கள்தான் புதிய ஜனநாயக புரட்சிக்கு முதன்மையான விரோதிகளும்,துரோகிகளும் ஆவார்கள்.இவர்களின் இந்த துரோகம்தான் ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகளின் பிழைப்புவாதத்தை விட மிகவும் தீவிரமான,நுட்பமான புரட்சிக்கு எதிரான செயல்களாலும்.ஆகவே ஓட்டு சீட்டு பொறுக்கிகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதை காட்டிலும்,இந்த புரட்சிகர சவடால் அடிக்கும்,துரோகிகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதுதான் உண்மையான புரட்சிகர சக்திகளின் உடனடிப்
பணியாகும்.
உண்மைதான். இந்த அமைப்பில் உள்ள ஜெய்காந்த்சிங் என்பவர் தன்னை ஒரு மாபெரும் புரட்சியாளனாக சித்தரித்துக்கொள்வார். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாதபோது அமைப்பின் தோழர்கள் பொருளுதவியும், செய்வுதவியும் செய்தனர். ஆனால் அவர்களையெல்லாம் இவர் ஏளனமாக பேசினார். இது போன்ற சிலரால்தான் அமைப்பின் பெயரே கெடுகிறது என நினைக்கின்றேன். இது போன்றவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
என்னுடைய பின்னூட்டம் இங்கு வெளியிடப்படவில்லை. என்ன காரணம் சூறாவளி.
சூறாவளி எனது பின்னூட்டம் ஏன் மட்டறுத்தப்பட்டிருக்கிறது என கூறவும்.
நண்பரே,யாரோ உங்களுக்கு தவறான தகவல் தந்துள்ளனர்.தோழர் ஜெயகாந்த் சிங் அவர்களின் மருத்துவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு அல்ல, 2004-ம் ஆண்டு அவர் செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்குதான் அந்த அமைப்பினர் பொருளுதவி செய்தனர்.இந்த ஆண்டு அவர் செய்துகொண்ட அறுவைசிகிச்சைக்கு அந்த அமைப்பும்,HRPC-ஐ சேர்ந்தவர்களும் அமைப்பின் தனி நபர் சிலரும் பொருளுதவி செய்ய முன் வந்ததை தோழர் ஜெயகாந்த்சிங் தேவையில்லை என மறுத்துவிட்டார்.2004 அறுவைசிகிச்சைக்கு அந்த அமைப்பினர் பொருளுதவி செய்தனர் என்பதற்காக அவர்களின் தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதுவது புரட்சிகர கண்ணோட்டம் அல்ல.
தோழர்,
பின்னூட்டங்கள் மட்டுறுத்தப் படுவது வருத்தம் தருகிறது..
கொச்சையாக பேசும் பட்சத்தில் அதை மட்டுறுத்துவது உங்கள் உரிமை...
அதே நேரத்தில் மாற்றுக் கருத்தை முன் வைக்கும் பொழுது அதை வெளியிட வேண்டும்...
என்னிடம் சில தோழர்கள் தொலை பேசியில் அழைத்து வருத்தப் பட்டார்கள், ஏனெனில் இந்த கட்டுரையின் தொடக்கத்தில் எனது பெயரை போட்டு உள்ளதால்...
நான் எந்த கட்சியிலும் இல்லை, அனைத்து பொது உடமை கட்சிகளும் என் நண்பர்கள் என்ற ரீதியில் தான் நான் இருக்கிறேன்.
நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் தோழர். வ்லடிமிர் லெனின் முன் வைத்தது போல் பிற கட்சியினர் கருத்துக்களையும் முன் வைக்க அனுமதிக்கலாமே
தோழர் suryajeeva அவர்களுக்கு தங்களின் பின்னூட்டத்தின் கருத்தே எமது கருத்து.எமது கட்டுரைகளின் மீது மாற்று கருத்தை முன் வைப்பவர்களின் பின்னூட்டத்தை நாங்கள் பிரசுரம் செய்தே வருகிறோம்.எமது கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத விளம்பரங்கள்,எமது கட்டுரையை படித்துவிட்டு அதன் அடிப்படையில் பின்னூட்டம் இடாமல் சம்பந்தமே இல்லாமல் தரப்படும் பின்னூட்டங்களை மட்டும்தான் நாங்கள் பிரசுரிப்பதில்லை.
தங்களிடம் புகார் தெரிவித்தவர்கள் எமக்கு அனுப்பியதாக கூறும் பின்னூட்டங்களை கேட்டு படித்துப்பாருங்கள்.அவைகள் எமது கட்டுரைகளோடு சம்பந்தமுடைய பின்னூட்டங்கள்தான் என்று நீங்கள் கருதினால், அவைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். அவைகள் பற்றி அப்போது நாங்கள் உங்களோடு விவாதிக்கிறோம்.நன்றி.
தோழர்
பதில் கொடுத்தற்கு நன்றி...
Post a Comment