சமச்சீர் கல்வி....! கார்ப்ரேட் மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பன கும்பலுக்கு விழுந்த அடி
“சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும்,கருணாநிதி ஆட்சியில் ரூ.200 கோடி செலவில் அச்சடிக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடபுத்தங்களை ஜீலை 22 க்குள் பள்ளிகளுக்கு விநியோகிக்க வேண்டும்,திருத்தம்,சேர்த்தல் இருந்தால் துணைப்பாட புத்தகமாக அச்சடித்து மூன்று மாதங்களுக்குள் தர வேண்டும்”, என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது! இதை எதிர்த்து பார்ப்பன ஜெயா உச்சநீதி மன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஆக 2 க்குள் சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தை பள்ளிகளுக்கு விநியோகிக்குமாறு உச்ச நீதி மன்றம் 21.07.11 அன்று உத்தரவிட்டுள்ளது.இதன் மூலம் ஜெ தலைமையிலான பார்ப்பன கும்பலுக்கு மேலும் ஒரு பலத்த அடியை கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.
உயர்,உச்ச நீதிமன்றங்களின் இந்த தீர்ப்புகளை பார்த்து தமிழகத்தில் உள்ள ஒன்றிரண்டு ஜனநாயக சக்திகள் மட்டுமல்ல, புரட்சிகரசக்திகளும் திகைத்துப்போய் நிற்கின்றன.”இப்படிப்பட்ட தீர்ப்புகள் அபூர்வமானவை ”,என்று சொல்லி புரட்சிகர அணிகளிடையே திகைப்பூட்டுகின்றனர்.ஜெ தலைமையிலான பார்ப்பன கும்பல் தனியார் கல்வி கொள்ளைக்கு ஆதரவாகத்தான் சமச்சீர் கல்வியை ஒழிக்க நினைப்பதாகவும் கல்வியில் கார்ப்ரேட் மயத்தை ஆதரித்து தான் அதை ஒழிக்க நினைப்பதாகவும் கூறி உயர்நீதிமன்றம்,உச்ச நீதி மன்றம் மற்றும் சமச்சீர் கல்வியை கொண்டுவந்த கருணாநிதியும் தனியார் கல்வி கட்டண கொள்ளைக்கு எதிரானவர்கள் என்றும் கல்வியில் கார்ப்ரேட் மயத்திற்கு என்ற தோற்றத்தையும் மறைமுகமாக மக்களிடையே இவர்கள் விதைக்கின்றனர்.இதை விட மேலும் ஒரு படி கீழே சென்று ஒட்டுச்சீட்டு அரசியல் கட்சி பாணியில் அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாகத்தான் ஜெயா சமச்சீர் கல்வித்திட்டத்தை தடுக்க முனைவதாக மக இக வின் மனித உரிமை பாதுகாப்பு மையம் உயர்நீதிமன்றத்தில் வாதாடியுள்ளது.சமச்சீர் கல்வியை முடக்க வேண்டும் என்று ஜெயா நினைப்பதற்கான காரணங்கள் என்று மேற்கண்ட கருத்துகள் முன் வைக்கப்பட்டாலும்,இக்காரணங்களை கூறுவதன் மூலம் மேற்கண்ட புரட்சிகர சக்திகள் இவ்விடயத்தில் எளிதில் ஆதாயம் அடையும்,சீர்திருத்தவாத கண்ணோட்டத்துடன் ,குறுக்குவழியில் பயணிப்பதை, சென்ற கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை கொண்டுவந்த போது, அரசு கொண்டுவந்த பொது பாடப்புத்தகத்தை நீர்த்துபோகச்செய்யும் வகையில் தனியார் பள்ளிக்கொள்ளையர்கள் உச்சநீதிமன்றத்தின் உதவியோடு துணைப்பாட நூல் கொண்டுவருவதற்கான உரிமையை பெற்று கொண்டு, இதன் மூலம் சமச்சீர் கல்வித்திட்டத்திற்கு சென்ற கல்வியாண்டிலேயே சவக்குழி தோண்டியதை பற்றி புதிய ஜனநாயகத்தில் எழுதிய இவர்கள்,தற்போது அவற்றை மூடிமறைத்து விட்டு தனியார் கல்வி கட்டண கொள்ளையை தடுப்பதற்கும்,கல்வியில் கார்ப்ரேட் மயத்தை தடுப்பதற்கும் மாமருந்தாக சமச்சீர் கல்வியை மக்களிடையே பிரச்சாரம் செய்வதன் மூலமாகவும்,கல்வி கட்டண கொள்ளையை தனியார் பள்ளிகள் தொடர்வதற்கு, ’தேவையான அடிப்படை கட்டுமான வசதிகள் தங்களிடம் மட்டுமே உள்ளது,அரசு பள்ளி ஆசிரியர்களின் சமூக அக்கறையின்மை,தமிழக கல்வித்துறையில் மலிந்துள்ள நிர்வாக சீர்கேடு,லஞ்ச,ஊழல் ஆகிய முறைகேடுகள்’, இப்படி பல காரணங்களை காட்டி தனியார் பள்ளிக்கொள்ளையர்கள் கட்டணக் கொள்ளை அடிப்பதை தொடர்வார்கள் என்பதை எல்லாம் மிக எளிதாக மூடிமறைத்துவிட்டு,சமச்சீர்கல்விக்கு ஆதரவாக பரப்புரை செய்வதும், போராடுவதும் தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் செய்த நீதிபதி கோவிந்தராஜன் குழு,நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு ஆகியோரின் கட்டண நிர்ணயத்தை நடைமுறைப்படுத்தக் கோரி போராடுவதன் மூலமாகவும் இப்புரட்சிகர சக்திகள்,சீர்திருத்தவாத பாதையில் வழுக்கி வீழ்ந்து விட்டதை பறைசாற்றி கொண்டுள்ளன.
சமச்சீர் கல்வியை ஒழிப்பதற்கு முனையும்,பார்ப்பன ஜெயாவின் நோக்கம் என்ன என்பதையும்,சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ள நீதிமன்றங்களின்,மற்றும் சமச்சீர் கல்வித்திட்டத்தை கொண்டுவந்த கருணாநிதியின் நோக்கமும், தேவையும் என்ன என்பதை இனி பரிசீலிப்போம்.எந்த் ஒரு சமூக அமைப்பும் தன்னை பாதுகாத்து, நிலைநிறுத்திக்கொள்ளவே ,அதற்கு ஏற்பவே அரசியல்,சித்தாந்தம் உட்பட அனைத்து துறைகளையும்,நிறுவனங்களையும் உருவாக்கிகொள்கிறது.கல்வி என்பதும் நிலவுகிற சமூக அமைப்பின் தேவையை ஈடு செய்வதற்காகவே ஆளும் வர்க்கங்கள் தமது தேவைக்கு ஏற்ப உருவாக்கி மக்களுக்கு கற்பிக்கிறது.இதன் மூலம் தமக்கு தேவையான உடல் மற்றும் மூளை உழைப்பாளர்களை உருவாக்கிகொள்ளுவதோடு,அரசியல்,சித்தாந்த ரீதியாக நிலவுகிற சமூக அமைப்பை நியாயப்படுத்தி தக்கவைத்து கொள்ளவும் செய்கிறது.
காலனி ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட மெக்காலே கல்வி முறையே இதுநாள் வரை ஆளும்வர்க்கங்களின் தேவைக்கு ஏற்ப சிற்சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.காலனி ஆட்சியாளர்கள் தமக்கு தேவையான எழுத்தர்களை உருவாக்குவதற்கு கொண்டுவந்த மெக்காலே கல்வி 47 ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் சிற்சில மாற்றங்களுடன் தொடர்ந்தாலும்,தொன்னூறுகளுக்கு பின்னர் இந்திய ஆளும்வர்க்கங்களால் நடைமுறைப்படுத்தப்படும்,உலகமயமும் அது ஈன்றெடுத்துள்ள கார்ப்பரேட் மூலதனத்தின் பரந்து,விரிந்த தேவையை- மலிவான உழைப்பு சந்தையை -நிறைவு செய்ய மேலும் திருத்தம் கோருகிறது.இதுவே சமச்சீர் கல்வியை கொண்டு வருவதற்கான தேவையை ஆளும்வர்க்கங்களுக்கு உருவாக்கியது.அதன் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வியை கருணாநிதி தமிழகத்தில் கொண்டுவந்தார்.அதாவது ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவு கொண்டுவந்த சமச்சீர் கல்வியைத்தான் பார்ப்பன கொழுப்பெடுத்த ஜெயா தலைமையிலான முட்டாள் பார்ப்பன கும்பல் முடக்கிவிட முனைகிறது.காப்பரேட் மூலதனத்தின் தேவையை தம்மால் மட்டுமே வழங்கிவிட முடியும் என்கிற போது அதை மற்றாவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை,என்று பார்ப்பன் ஜெயா தலைமையிலான கும்பல் கருதுகிறது.ஆனால் பார்ப்பன கும்பலின் இக்கருத்தை ஏற்க கார்ப்பரேட் மூலதனம் தனது பரந்து,விரிந்த தேவை மற்றும் நலன்களில் இருந்து நிராகரிக்கும் உத்தரவுகள் தான் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்து என்ற உத்தரவுகள் ஆகும்.
நிலவுகிற சமூகத்தின் எல்லா அங்கங்களிலும் , அதிலும் குறிப்பாக அதிகார வர்க்கத்தின் எல்லா துறைகளிலும் உள்ள மேல்மட்டங்கள் அனைத்திலும் பார்ப்பனக்கும்பலே இன்று வரை ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், அப்படி இவர்கள் ஆதிக்கம் செலுத்தும் அதிகார வர்க்க துறைகளும்,நிறுவனங்களும் ஆளும்வர்க்கத்தின் நலனை பாதுகாக்கவே உள்ளவைகள்.இதை மறந்து மூலதனத்தின் நலன்களுக்கு எதிராக அதிகாரம் வர்க்கம் நடக்க முற்பட்டால், அது என்ன விளைவுகளை சந்திக்க நேரும் என்பதற்கான உதாரணம் தான், சமச்சீர் கல்வியில் உயர்நீதிமன்ற,உச்சநீதிமன்ற தீர்ப்புகள் ஆகும்.ஜெ தலைமையிலான பார்ப்பன மூடக்கும்பல் காலாகாலமும் தான் அனுபவித்து வரும் சுகபோகங்கள் இனி எக்காலத்திலும் கேள்விகளுக்கு இடம் இல்லாமல் தொடர வேண்டும் என்ற பேராசை,அகம்பாவம அதன் கண்ணை மறைக்க கார்ப்ரேட் மூலதனத்துடன் போட்டியிட்டு மண்ணைக் கவ்வியுள்ளது.இப்படி மண்ணைக் கவ்வுவது ஒன்றும் பாப்பனகும்பலுக்கு புதியது அல்ல. காலனியாட்சி காலத்திலேயே, தான் காலாகாலமும் அனுபவித்து வந்த மனுதர்ம குலக்கல்விக்கு எதிரான ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த மெக்காலே கல்வி முறையை எதிர்த்து மண்ணை கவ்வியது.ஆனாலும் காலனியாட்சியாளர்கள் கொண்டுவந்த மெக்காலே கல்வியை தன்னால் தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிந்தவுடன்,தான் கீழே விழுந்த அதே வேகத்தில் மெக்காலே கல்வியை தமதாக்கி கொண்டது.தற்போதும் பார்ப்பனக்கும்பல் சமச்சீர் கல்வியை எதிர்த்து மண்ணை கவ்வினாலும் கீழே விழுந்த அதே வேகத்தோடு தமதாக்கி கொள்ள முயற்சிக்கும் என்பதை நாம் கவணத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே உயர்நீதிமன்ற,உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அபூர்வமானவைகள் அல்ல என்பதும் கார்ப்பரேட் மூலதனத்தின் பரந்து,விரிந்த தேவையில் இருந்து இத்தீர்ப்புகள் வந்துள்ளது என்பதை கவனியாமல் பயணிப்பவர்களும்,கவனிக்காதது போல பாசாங்கு செய்பவர்களும் எவ்வளவு தான் அதை திறம்பட செய்தாலும் புவியீர்ப்பு விசைக்கு எதிராக மனிதர்களை அந்தரத்தில் நிறுத்துவதாக கூறிய செக்ஸ் சாமியார் நித்தியானந்தாவுக்கு ஏற்பட்ட அதே கதிதான் இவர்களுக்கும் ஏற்படும்.
கார்ப்ரேட் மூலதனத்துக்கு ஆதரவானது தான் நீதிமன்ற தீர்ப்புகள் என்றாலும், அது நிலவுகிற சமூக அமைப்பை பாதுகாக்கும் உள்ளடக்கத்தை கொண்டதுதான் என்ற போதும், அறிவு என்பது எப்போதும் தமக்கு மட்டுமே உரித்தானது என்ற பார்ப்பன கும்பலின் அகம்பாவத்திக்கு மேலும் ஒரு வலுவான அடி கொடுக்கும் என்பதோடு,அவர்களோடு போட்டியிடும் வாய்ப்பை சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் வழங்குவதற்கான ஒரு வாய்ப்பாக சமச்சீர் கல்வி அமையும் என்ற வகையில் இது ஒரு ஜனநாயக சீர்திருத்த தன்மை உடையது ஆகும்.
இச்சீர்திருத்த நடவடிக்கை மக்களிடையே ஜனநாயக சிந்தனையை உருவாக்கவும்,மேம்படுத்தவும் ஒரு காரணியாக ஆக்கிகொள்ள பயன்படும் என்ற வகையில் இதை புரட்சிகர சக்திகள் ஆதரிக்க வேண்டும்.அதற்காக போராடுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகளை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும்.அதே வேலையில் புரட்சிகர சக்திகள் இதை தமது சொந்த கோரிக்கையாக வரித்துக்கொண்டு போராட முடியாது.
ஆனால் இந்திய சமூக அடித்தளத்தின் காரணமாகவும்,அதிலும் தமிழகத்தில் நிலவும் பிழைப்புவாத அரசியல்,சமூக சூழலில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய ஒரு சில தனிநபர்களை தவிர அமைப்புரீதியாக திரட்டப்பட்ட ஜனநாயக சக்திகளே இல்லை என்ற சூழல் நிலவுவதை இவ்விவகாரத்தில் இருந்தே நாம் புரிந்து கொள்ள முடியும்.சமச்சீர் கல்வியை கொண்டுவந்த ஆளுவர்க்கத்தின் ஒரு பிரிவான கருணாநிதி தலைமையிலான கும்பலே அதை பாதுகாப்பதற்கு சட்டரீதியாக கூட போராடாததையும் நாம் பார்த்து வருகிறோம்.இக்கும்பலின் இந்த தன்மைக்கு காரணம் தேர்தலில் இவர்களுக்கு கிடைத்த தோல்வி மட்டுமே அல்ல என்பதும்,ஆளும் வர்க்கத்தின் ஒரு அங்கமாக உருவெடுத்துள்ள இக்கும்பலின் வர்க்க இயல்பே அதனுடைய செயல்பாடுகளுக்கு அடிப்படை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.இப்படிப்பட்ட சூழலில் சமச்சீர் கல்வி போன்ற சீர்திருத்த கோரிக்கைகளுக்காகவும் கூட புரட்சிகர சக்திகளே களத்தில் இறங்கி போராட வேண்டியது தவிர்க்கவியலாத கடைமைகளில் ஒன்றாகிவிடுகிறது.இப்படி செய்வது புதிய ஜனநாயக புரட்சியை நடத்துவதை தமது இலக்காக கொண்டு செயல்படும் புரட்சிகர சக்திகளின் செயல்பாட்டிற்கு இசைவானது தானே தவிர அதற்கு எதிரானதோ முரண்பாடான செயலோ அல்ல.புதிய ஜனநாயக புரட்சியே சாராம்சத்தில் முதலாளித்துவ புரட்சி என்பதும்,அப்புரட்சியை நடத்தும் ஆற்றலை, தகுதியை முதலாளித்துவ சக்திகள் இழந்து விட்டதால். சமூக இயங்கியல் தேவை,அவசியம் காரணமாக இப்புரட்சியை கம்யுனிச புரட்சியாளர்களே பாட்டாளிவர்க்க தலைமையில் நடத்துவது தான். பாட்டாளிவர்க்கம் இப்புரட்சியை தலைமை ஏற்று நடத்துவதால் அது தனது வர்க்க நலன்களுக்கு உகந்தவாறு தேசிய முதலாளித்துவத்தை வளர்க்கும் அதே வேளையில் தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய முதலாளிகளின் சொத்துகளை இழப்பீடு இன்றி பறிமுதல் செய்து அதை அரசுடைமையாக்கும்.இதே வகையில் தான் சமச்சீர் கல்வி போன்ற விவகாரங்களிலும் பாட்டாளிவர்க்க நலன்களுக்கு உகந்த வகையில் இச்சீர்திருத்த கோரிக்கைகளை புரட்சிகர சக்திகள் சரியான முழக்கங்களுடன்,அதாவது ஆளும் வர்க்கங்களை வலுப்படுத்த கூடியதாக அம்முழக்கங்கள் அல்லாமல் புதிய ஜனநாயக புரட்சிக்கு மக்களை அணிதிரட்டுவதை நோக்கி பயணிப்பதற்கான ஒரு வாய்ப்பாக கொண்டு செல்ல வேண்டும்.இது மிகவும் கவனமுடன் செய்ய வேண்டியப் பணியாகும்.நோய்க்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியரையும் நோய் தாக்கிவிடுவதை போல இச்சீர்திருத்த கோரிக்கைகளுக்காக போராடுகிற புரட்சிகர சக்திகளை, சீர்திருத்த நோய் தாக்கிவிடாமல் பாதுகாக்கும் கவசமாக நாம் வைக்கும் முழக்கம் அமைய வேண்டும் என்பதில் மிக கவனமாக செயல் பட வேண்டும்.அதாவது கரணம் தப்பினால் மரணம் என்ற அளவுக்கு இது ஆபத்து நிறைந்தது என்பதை ஒரு கணமேனும் நாம் மறந்துவிடலாகாது.
குறிப்பாக இவ்விடயத்தை நாம் பார்ப்போமாயின் தனியார்பள்ளிகளுக்கான கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்க நீதிபதி கோவிந்த ராசன் குழு, நீதிபதி ரவிராசபாண்டியன் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டு அக்குழுக்களும் கட்டண நிர்ணயம் செய்துள்ளன.இவ்விரு குழுக்களும் நிர்ணயத்துள்ள கட்டணங்கள் குறைவாயினும்,கூடுதலாயினும் இவை இரண்டுமே கல்வியில் தனியார்மயத்தை நியாயப்படுத்தி, உறுதி படுத்தக்கூடியவை என்பதும் இதே போன்று சமச்சீர் கல்வி கார்ப்பரேட் மூலதனத்தின் பரந்து,விரிந்த தேவைக்கானது என்பது தான் இவற்றில் புரட்சிகர சக்திகள் பார்க்க வேண்டிய அடிப்படை அம்சங்களாகும்.இதற்கு முற்றிலும் புறம்பாக இரு கட்டண நிர்ணய குழுக்களின் கட்டண நிர்ணயத்தை ஆதரிப்பதும் தனியார் கல்விகட்டண கொள்ளைக்கு கடிவாளம் போடும் நடவடிக்கையாக சமச்சீர் கல்விக்கு வலிய தலைப்பிட்டு காட்டுவதும் கல்வியில் கார்ப்ரேட் மயத்தை தடுக்கும் என்று கூறுவதும் அதை நடைமுறைப்படுத்தக் கோரி போராடுவதும் முழுமுற்றான சீர்திருத்த கண்ணோட்டமே அன்றி புரட்சிகர கண்ணோட்டமோ, நோக்கமோ இதில் துளியும் இல்லை.சமச்சீர்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டால் தனியார் கல்விக்கொள்ளைக்கு முடிவுகட்டிவிட முடியும் என்று கூறும் இவர்கள், சென்ற கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை கொண்டுவந்த போது,அதை எதிர்த்து தனியார் பள்ளி கொள்ளையர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சமச்சீர் கல்வியை நீர்த்து போக செய்யும் வகையில் உச்சநீதிமன்ற ஒப்புதலுடன் துணைப்பாட நூல் கொண்டுவந்தனர் என்பதை அறிந்தே, இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை கொண்டுவந்தால், தனியார் கட்டண கொள்ளைக்கு முடிவுகட்டி விட முடியும் என்றும் கல்வியில் கார்ப்ரேட் மயத்தை தடுத்துவிடும் என்றும் மக்களிடையே சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாக சம்ச்சீர் கல்வியை இவர்கள் காட்டுகின்றனர்.நாம் பேருந்துகளில் பயணிக்கும் போது ”சார் ஒரு நிமிசம்! நான் சொல்ரத கவனிங்க! இது தேனி மாவட்டம் கம்பத்துல 18 வகையான மூலிகைகள் கலந்து தாயாரிக்கப்பட்ட தைலங்க,இதில தும்ப,துளசி... போன்ற மூலிகைகள் கலந்ததுங்க, இது அஞ்சி வகையான நோய்களை, இந்த தைலத்த தேய்த்த சில நிமிசங்கல தீர்க்குங்க.நான் சொல்ரதுல உங்களுக்கு சந்தேகம் இருந்திச்சினா, நான் இலவசமா கொடுக்கிற தைலத்தை வாங்கி தலைவலி உள்ளவங்க, ஒரே ஒரு சொட்டு நெத்தி பொட்டு இரண்டு பக்கமும் தேச்சி விடுங்க தலைவலி நின்னு போகும்.நெஞ்சில சளி இருக்கிறவங்க பஸ்சுல போகும் போதோ,தூங்கும் போதோ சளிய துப்பறதுக்கு சோம்பேறித்தனப்பட்டு அப்படியே முழுங்கிவிடுவாங்க. இனிமே நீங்க அப்படி செய்ய தேவையிருக்காது,இதை பாருங்க,இது தர்மாகோல் சீட்டு. இதை மிக்சி,கிரைண்டர் இதுல எதுல போட்டு ஆட்டுனாலும்,எத்தன வருசம் ஆட்டுனாலும் இதை மாவாக்க முடியாதுங்க அப்படிப்பட்ட இந்த தர்மகோல் சீட்ட இந்த ஒரே ஒரு சொட்டு தைலத்தை உங்க உள்ளங்கையில வுட்டு, அதுல இந்த தர்மகோல் சீட்ட கிழிச்சி ஒரு துண்ட போட்டிங்கன்னா இந்த பாருங்க சார் அப்படியே தண்ணியா கரஞ்சி ஊத்திருங்க. இதை போலதான் உங்க நெஞ்சியில ஒட்டிக்கிட்டு இருக்கிற எத்தனை வருசத்து சளியாக இருந்தாலும், இந்த தைலத்துல ஒரே ஒரு சொட்டு உங்க கர்சீப்புலவுட்டு, மூக்கில ரெண்டு பக்கமும் வச்சி மோந்திங்கனா சளியெல்லாம் தண்ணியா கரைஞ்சி இப்பவே வெளியில வர ஆரம்ப்பிச்சிடும் “என்று கூறி தைலத்தை விற்றுவிட்டு சென்று விடுவதை நாம் பார்த்திருப்போம்.தைலத்தில் பதினெட்டு வகையான மூலிகைகள் கலந்து இருப்பதாக அவர்கள் பட்டியல் சொல்லும் போது பதினெட்டு வகையான மூலிகைகளின் பெயர்களையும் அவர்கள் கூறுகிறார்களா? என்பது யாருக்கும் தெரியாது.அப்படி பதினெட்டு வகையான மூலிகைகளையும் சொன்னார்களா என்று கவனித்து, வாங்குபவர்கள்,தைலத்தை வாங்குவதும் இல்லை. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் நிகழ்வு தர்மகோல் சீட் தைலத்தில் கரைந்து விடுவது மட்டும் தான்.இதைப் போன்று தான் தனியார் பள்ளி கொள்ளையர்கள் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டால் தமது கல்வியே தரமானது என்று சொல்லுவதற்கு என்று உள்ள பட்டியலில் தனது பாடத்திட்டம் மட்டுமே சிறந்தது என்று சொல்லுவதை வேண்டுமானால் சொல்லாமல் விட்டுவிடலாம்.ஆனால் ஏனைய அம்சங்கள் அப்படியே இருக்கும் பொது ஒன்றை மட்டும் சொல்லாமல் இருந்துவிடுவதால் தைல விற்பனை எப்படி பாதிப்பதில்லையோ,அதை போன்று கட்டண கொள்ளையும் பாதித்துவிட போவதில்லை.மூலிகை விற்பனையில் முக்கிய அம்சம் தர்மகோல் சீட் தைலைத்தில் கரைவது,தனியார் பள்ளி கல்வி விவகாரத்தில் முக்கிய அம்சம், ஆங்கிலத்தில் படித்தால் வேலை கிடைத்துவிடும் என்ற பெற்றோர்களின் அறியாமை தான். ஆகவே எந்த வகையிலும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதால் தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை தடுத்துவிட முடியாது.மூலதனத்தின் இயல்பு அது எங்கு இருந்தாலும்,எப்படி இருந்தாலும்,எந்த வடிவத்தில் இருந்தாலும் லாபம் சம்பாதிப்பது தான்.இதை எல்லாம் மூடி மறைத்து விட்டு சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டால் தனியார் கல்வி கொள்ளையை தடுத்துவிடும், கல்வியில் கார்ப்ரேட் மயத்தை தடுத்து விடும் என்று கூறுவது தைல விற்பனைக்கு விளம்பரம் தருவது போன்றது தான்.சமச்சீர் கல்வி,கல்வி கட்டண நிர்ணயம் ஆகியவற்றில் அரசுக்கு எதிராகவும்,தனியார் பள்ளிகளுக்கு எதிராகவும் செயல்படுபவர்களிடையே தடுமாற்றங்களும்,குழப்பங்களும் போலித்தனமும் ஒரு அமைப்பில் எதிரும்,புதிருமான கருத்துகள் நிலவினாலும் இதனால் ஆதாயம் அடையக்கூடிய பார்ப்பன ஜெயா கும்பலிடமும், தனியார் பள்ளி கொள்ளையர்களிடமும் குழப்பமோ,தடுமாற்றமோ சிறிதும் இல்லை.தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்த இரு நீதிபதி குழுக்களும் நிர்ணயித்த கட்டணம் கூடுதலா? குறைவா? என்பதை விட,கட்டண நிர்ணயத்தில் தலையிடும் உரிமை அரசுக்கோ,நீதிமன்றங்களுக்கோ இல்லை என்பது தான் இவர் களின் நிலைப்பாடு.ஆகவே இவ்விவகாரத்தில் நம்முடைய எதிர் தரப்பு தாம் எடுத்துள்ள நிலைப்பாட்டின் மூலம் எதிர்மறையில் நமக்கு வழிகாட்டுகிறது.இங்கே நாமும் கல்விகட்டண விவகாரத்தில் இரு குழுக்களும் கல்விக்கட்டணத்தை கூடுதலாக அல்லது குறைவாக நிர்ணயத்தனவா என்பதை விட,கல்விக்கட்டண நிர்ணயத்தில் தலையிடும் உரிமை அரசுக்கு உள்ளது என்ற வகையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை ஏற்காத அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்கு என்று முழக்கம் வைத்து,மக்களை திரட்டி போராடுவது தான் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவின் சீர்திருத்த புதைகுழியில் சறுக்கி விழுந்து, முழ்கி விடாமல் புரட்சிகர சக்திகளை பாதுகாக்கும் சிறந்த கவசமாக அமைவதோடு,மக்களையும் முரணின்றி தனியார்மயத்திற்கு எதிராக வளர்த்தெடுக்க முடியும்.
ஆனால் இதற்கு மாறாக தாமே ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவாக மாறி, அதன் வர்க்க நலனில் இருந்து எழும் கோரிக்கைகளுக்காக போராடுவது என்பதன் வெளிப்பாடு தான் இவ்விருக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்து என்பதும்,சமச்சீர் கல்வி தனியார் கல்விக்கட்டண கொள்ளையை தடுக்கும்,கல்வியில் கார்ப்ரேட் மயத்தை தடுக்கும் என்பதும் ஆகும்.இவ்விருகுழுக்களின் கல்வி கட்டண நிர்ணயத்தை நடைமுறைப்படுத்து என்ற கோரிக்கையின் மூலம் கல்வியில் தனியார்மயத்தை ஏற்றுக்கொண்டுவிட்ட இவர்கள் அதோடு கருனாநிதியும்,உயர்,உச்ச நீதி மன்ற நீதிபதிகளும் தற்போதைய தனியார் பள்ளி கொள்ளையர்களுக்கு எதிரானவர்கள் என்று புதிய ஜனநாயகமும்,ஆதரவானவர்கள் என்று புதிய கலாச்சாரமும் தமக்குள்ளேயே எதிரும்,புதிருமாக முரண்பட்டு நிற்கின்றனர். அதே மூச்சில் கல்வியில் தனியார்மயத்தை எதிர்ப்போம் என்பது முற்றிலும் சுயமுரண்பாடு ஆகும்.இவர்கள் என்ன தான் முயற்சித்தாலும் ஒரே நேரத்தில் புரட்சிகர சக்தியாகவும்,சீர்திருத்த சக்தியாகவும் அரிதாரம் பூசிக்கொள்ள முடியுமே தவிர, இரண்டுமுமாக இருக்க முடியாது.இரண்டில் ஏதோ ஒன்றாத்தான் இருக்க முடியும்.என்ன தான் நரி பரியாக வேடமிட்டாலும் மழைவரும் போது அதன் வேடம் கலைந்தே தீரும்.
நாம் இப்படி கூறுவது ஏதோ வெறுமனே ஊகம் அல்ல.சம்பந்தப்பட்ட புரட்சிகர அமைப்புகளின் நடைமுறைகளில் இருந்து தான் இப்படிக் கூறுகிறோம்.தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டண நிர்ணயம் சமச்சீர் கல்வி ஆகிய விவகாரங்களில் மகஇக - வின் மனித உரிமை பாதுகாப்பு மையம் திடுதிப்பென, எவருமே எதிர்பாராத வகையில் அண்மையில் 48 மணி நேர உண்ணாவிரதத்தை தமிழகத்தில் பல இடங்களில் நடத்தியது.உண்ணாவிரதம் என்பதே மக்களின் போராட்ட உணர்வை காயடிக்கும்,திசை திருப்பும்,நீர்த்து போகச் செய்யும், ஆளும் வர்க்கத்தின் ஒரு கருவி என்பது தான் இவர்களின் நிலைப்பாடு ஆகும். உண்ணாவிரதம் நடத்துவதை நியாயப்படுத்துவதற்கு அதை நடத்துபவர்கள் எதை வழக்கமாக கூறுவார்களோ அதையேதான் இவர்களும் இப்போது கூறுகிறார்கள்.அதாவது மக்கள் போராட தயாராக இல்லை எனறும், மக்களின் போராட்ட உணர்வை மேம்படுத்தவே தாங்கள் உண்ணாவிரதம் இருப்பதாக தமது செயலுக்கு இவர்கள் நியாயம் கற்பித்துக்கொள்ளுகின்றனர்.மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பெயரில் உண்ணாவிரதம் நடத்திய இவர்கள் அவ்வுண்ணாவிரதங்களில், அதன் தோழமை அமைப்புகளின் தோழர்களை கலந்து கொள்ள செய்த இவர்கள்,அவர்கள் சார்ந்த அமைப்புகளின் பெயர்களை மட்டும் போடாமல் கவனமாக தவிர்த்துவிட்டுள்ளனர்.உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினால் தான் மக்களின் உணர்வை மேம்படுத்த முடியும் என்று கூறி உண்ணாவித போராட்டத்தை நடத்திய இவர்கள்,வழக்கமாக இவர்கள் நடத்தும் போராட்டங்களில் எத்தனை பேர் கலந்துகொள்ளுவர்களோ,யார்,யார் கலந்து கொள்ளுவார்களோ அவர்கள் மட்டுமே இப்போதும் கலந்து கொண்டார்கள் என்பதில் இருந்தே இவர்கள் உண்ணாவிரதத்தை நியாயப்படுத்த கூறிய காரணம் உண்மையானது அல்ல என்பது தெளிவாகிவிட்டது.இந்த உண்ணாவிரதங்களில் மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டாலும் அவர்கள சார்ந்த அமைப்பின் பெயர்களை போட்டுக்கொள்ளாததன் மூலம் தாங்கள் இன்னமும் புரட்சிகர சக்தியாகவே தனித்தன்மையுடன் செயல்படுவதாக ஒரு தோற்றத்தையும் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.இந்த உண்ணாவிரதங்களில் தமது அமைப்புகளின் பெயரை போட்டுக்கொள்ளாமல் அதில் கலந்து கொண்டு, அதில் தம்மை யாரென்று அடையாளப்படுத்திக்கொள்ளாத இவர்கள் உண்ணாவிரதத்தை, அதிகாரபூர்வ மற்ற வகையில் ஆதரித்து பேசுகின்றனர்.இப்படி ஆதரிப்பவர்கள் உண்ணாவிரதத்தை தாமே நடத்தாதது ஏன்?தமது பெயரில் நடத்தாமல் தமது பினாமி அமைப்பின் பெயரில் நடத்துவதும்,அதில் மறைமுகமாக பங்கேற்பதும் தான் புரட்சிகர நேர்மை போலும்! இவர்கள் இப்படிப்பட்ட கூத்தை நடத்திக்கொண்டு இருக்கும் போதே இவர்களின் இணையதள ஊடகமான ’வினவு’ அன்னாஹசாரே,பாபாராம் தேவ் ஆகியோரின் உண்ணாவிரத போராட்டங்களை எதிர்த்து சாடுகிறது,ஏளனம் செய்கிறது.ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் வழி அல்ல என்றும் அதை ஒழிப்பதற்கு மக்களை அணிதிரட்டிய போர்க்குணமான போராட்டங்கள் மூலம் தான் முடியும் என்றும், இதற்கு ஆதாரமாக தமது தோழமை அமைப்பான விவிமு- வின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு எதிரான போராட்டத்தையும், அதன் வெற்றியையும் காட்டி கும்மாளமிடுகிறது.மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டங்களை,நீதி மன்ற நடவடிக்கைகளையும் வரிக்குவரி எழுதி குதூகளிக்கும் ’வினவு’ இணையதளம் அவர்கள் நடத்திய உண்ணவிரத செய்தியை மட்டும் மிக கவனமாக தவிர்த்து தனது புரட்சிகர நேர்மையை நிருபித்துக்கொண்டுவிட்டது
சமச்சீர் கல்வியை ஆளும்வர்க்கம் கொண்டுவந்ததற்கான பொருளியல் அடிப்படையை தவிர்த்துவிட்டு சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டால் அது தனியார் கல்விக்கட்டணக்கொள்ளையை தடுத்துவிடும்,கல்வியில் கார்ப்ரேட் மயத்தை தடுத்துவிடும் என்று உண்மைக்கு புறம்பான ஆளும் வர்க்கத்தின் கருத்தியல் கண்ணோட்டத்தை சமூகத்தின் மீது திணித்து, இதன் முலம் ஆளும்வர்க்க ஊடகங்களின் விளம்பரத்தின் மூலம் கிடைத்த குறுகிய கால ஆதாயத்தை முழுமையாக அறுவடைசெய்துகொள்ளும் குறுக்கு புத்தியால் மேலும், மேலும் சீர்திருத்த சகதியில் முழ்கிக்கொண்டிருக்கிறார்கள்.தமிழகதில் ஒரே புரட்சிகர சக்தியாக விளங்கும் மக இக -வும் அதன் தோழமை அமைப்புகளும் சீர்திருத்தவாத சகதியில் சிக்கிக்கொண்டு இருப்பது தமிழக மக்களுக்கு மட்டும் அல்ல இந்திய உழைக்கும் மக்களுக்கும், புதிய ஜனநாயக புரட்சிக்கும் பெருத்த பின்னடைவாகும்.இதில் இருந்து இவர்களை மீட்க போராடுவது புரட்சியை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.இக்கடமையின் காரணமாகவே சூறாவளி நிர்வாகக்குழு இக்கட்டுரையை வெளியிடுகிறது.
எமது இந்த விமர்சனக்கட்டுரை மேற்கண்ட புரட்சிகர அமைப்புகளின் தவறுகளை களைந்து அவர்களை மீண்டும் உறுதிமிக்க புரட்சியாளர்களாக மாற்றுவதற்கு உதவும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.எமது இந்த விருப்பத்திற்கு வாசகர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்று கோருகிறோம்.
புரட்சிகர வாழ்த்துகளுடன்
சூறாவளி நிர்வாகக் குழு

5 comments:
மேற்கணட கட்டுரையை facebook க்குல் படித்துவிட்டு சூறாவளி நிர்வாகக்குழு தோழர் ஒருவரை புலணய்வு செய்து கண்டுபிடித்து சூறாவளிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று ஏதே கிரிமினல் இடம் போலிஸ் பாணியில் கிடுக்குபிடி கேள்விகளை கேட்டுள்ளனர்.மேற்க்கணட கட்டுரை குறிப்பிட்ட விசயத்தின் மீது எமது கருத்தை சுருக்கமாக எழுதி வெளியிட்டோம்.வாரகர்கள் பலர் எமது அந்த கட்டுரையில் கூறியுள்ள கருத்துகளை புரிந்துகொள்ள முடியவில்லை எனவும் தமக்கு நெருடலான ஒரு சில வார்த்தைகளை மட்டுமே எடுத்துகொண்டு ஐயங்களை எழுப்பியுள்ளனர்.ஆகவே வசகர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் எமது நோக்கத்தை தெளிவாக புரியவைக்கவும் மேற்க்கண்ட கட்டுரையில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு விரிவான பதில் கொண்ட கட்டுரைகளை வெளியிடுவது என முடிவு செய்துள்ளோம்.இதற்கு நாங்கள் யார் மீது விமர்சனம் வைத்துள்ளோமோ அவர்களுடைய பதிலையும் எதிர்பார்க்கிறோம்.அப்பதில் கிடைத்தவுடன்,எமது பதில் கட்டுரைகள் வெளிவரும்.அதுவரை வாசகர்கள் காத்திருக்குமாறு கோட்டுக்கொள்கிறோம்.ஆனால் அதற்கு முன்னல் ஒரு விடயத்தில் மாத்திரம் எமது கருத்தை இப்போது கூறுகிறோம்
சமச்சீர் க்ல்வியில் விவகாரத்தில் மட்டுமே மக இகவும் அதன் தோழமை அமைப்புகளும் சீர்திருத்த பாதையில் சென்றுவிட்டதாக நாங்கள் கருதுகிறோம்.ஏனைய அனைத்து விவகாரங்களிலும் நாங்கள் அவர்களை புரட்சிகர சக்தியாகத்தான் உறுதியாக நம்புகிறோம்.இதில் எமக்கு தடுமாற்றமோ,குழப்பமோ ஏதும் இல்லை.ஏனேன்றால் நாங்கள் மேற்கண்ட அமைப்புகளிடம் தான் அரசியல்,சிந்தாந்தம் ஆகியவற்றை கற்றுக்கொண்டோம்.அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட சித்தாந்ததில் இருந்து தான்,அதன் ஒளியில் தான் மேற்கண்ட கட்டுரையை எழுதுனோம் என்பதை இதன் மூலம் பதிவுசெய்கிறோம்.
தோழமையுடன் சூறாவளி நிர்வாகக்குழு
சூறாவளி தங்களுடைய விமர்சனத்தை வரவேற்கிறேன்.புரட்சிகர அமைப்புகள் உண்ணாவிரதம் இருப்பது என்பது ஏற்றுக்கொள்வதற்கு இல்லை தான்.ஆனால் சமச்சீர் கல்விக்காக ம.க.இ.க போராட்டம் என்பது சரியானது தான்.அது சீர்திருத்தமாக இருந்தாலும்,அதை செய்வதற்கு யவரும் இல்லையே. சாதி ஒழிப்புக்கூட சீர்திருத்தமாக தான் தெரியும் உங்களுக்கு, புரட்சி என்பது ஆயுதம் எடுப்பதுதானோ அல்லது எல்லாவற்றையும் எதிர்ப்பது தானோ! புரியவில்லை கொஞ்சம் விளக்குங்கள்.இந்தியாவில் எந்த செயல்பாடுகள் புரட்சிகர செயலில் வரும். தொழிலாளர்களை ஒன்று இணைக்காமல் தடுத்துக்கொண்டு இருக்கும் சாதி ஒழிப்பு புரட்சிகர செயலில் வருகிறதா? அல்லது சீர்திருத்ததில் வருகிறதா?
சகோதரி ரெட்மீரா அவர்களுக்கு வணக்கம்.
மகஇக-வும் அதன் தோழமை அமைப்புகளும் சமச்சீர்கல்வி விவகாரத்துக்காக போராடியதை தவறு என்றோ சீர்த்திருத்தவாதம் என்றோ நாங்கள் கூறவில்லை.அவர்களின் போராட்டத்தை வரவேற்கிறோம்.இப்போராட்டத்தை அவர்கள் நடத்துவதற்கு கூறும் நிலைப்பாடான “சமச்சீர்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டால் தனியார் கல்விக்கட்டணக்கொள்ளையை தடுத்துவிடும்”,என்பதைத்தான் தவறு,உண்மைக்கு மாறானது என்றும் சீர்த்திருத்தவாதம் என்றும் கூறுகின்றோம்.
நாங்கள் இதுவரை வெளியிட்டுள்ள இருக்கட்டுரைகளையும் இனி வெளிவரவுள்ள கட்டுரைகளையும்,கவனமாக வாசியுங்கள்.அப்போது எமது நிலைப்பாடு உங்களுக்கு தெளிவாக புரிவதோடு,உங்கள் சந்தேகத்திற்கும் அது விடையளிக்கும்!நன்றி!
உங்களுக்கு சில கேள்விகள்:
சமச்சீர் கல்வியால் தனியார் கட்டணக் கொள்ளை குறையாது என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள்?
அப்படி குறையாது என்றால் அதற்கு நீங்கள் வைத்திருக்கும் தீர்வு என்ன? என்ன செய்து தனியார் கொள்ளையைத் தடுப்பீர்கள்?
புரட்சி என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன?
நேர்மையிருப்பின் பதில் சொல்லவும்.
விரைவில் பதில் கூறுகிறோம்.
Post a Comment