சிவசேனாவின் தலைவர் பால்தாக்கரே நான்கு நாட்களுக்கு முன்னரே இறந்து போனாலும், இன்று 17.11.12 மாலை 3.30 மணியளவில்தான் இறந்து போனதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாகவே மும்பை நகரத்தின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கிப்போனது.
மக்கள் தங்களின் உயிருக்கும்,உடமைக்கும் தங்களால் முடிந்த வரையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு வாய்ப்பாக இருந்தாலும், என்ன
நடக்குமோ என்று ஒவ்வொரு நொடிப்பொழுதும் அஞ்சி நடுங்கியே வாழ்ந்து வந்தனர்.
தமிழர்கள்,முஸ்லீம்கள் ,வட
இந்தியர்கள் தாங்கள் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் உச்சத்தில் உள்ளனர்.தற்போதைய
நிலையால் வட இந்தியர்கள் ஏராளமானவர்கள் தமது சொந்த மாநிலங்களுக்கு
ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
மராட்டியத்தில் முஸ்லீம்களின்
முதன்மையான எதிரி சிவசேனாவும்,பால்தாக்கரேவும் என்பதை நிரூபிக்கும் வகையில்
மும்பையில் உள்ள முஸ்லீம்கள் பால்தாக்கரே நலம் பெற சிறப்புப்பிரார்த்தனை
நடத்தினார்களாம்.
இறந்து போனாலும் தாங்கள்
பாசிஸ்ட்டுகள் தான் என்பதை நிரூபிக்கின்றனர். சிவசேனாவின் தொண்டர்கள்-குண்டர்கள்
சாவை சிறுபான்மையினரை அஞ்சி நடுங்கச் செய்து ,தமது தலைவனின் சாவை
கொண்டாடுகின்றனர்.
பாசிஸ்டுகள் மக்களால்
தண்டிக்கப்பட்டு சாவை எதிர்கொள்வதற்கு பதில் தாமே சாவது நமக்கு வருத்தம்தான்
என்றாலும்,ஒரு மனித குல விரோதியின் மரணத்திற்காக மகிழ்ச்சி அடைவோம்!


2 comments:
பால்தாக்கரே மறைந்து விட்டாராம்!
அவரை கைது செய்யாமல் கைபிசைந்து கொண்டிருந்த கால்துறையினர்..
அவரை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவைத்துக் கொண்டிருந்த நீதித்துறையினர்..
அவரின் பயங்கரவாதங்களை மூடிமறைத்த ஊடகத்துறையினர்..
அவருக்கு பயந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காங்கிரஸ் ஆட்சியினர்..
அனைவருக்கும் எமது கண்டனங்கள்!
மும்பை கலவரத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் வாரிசுகள்..
மும்பையிலிருந்து விரட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள்..
மும்பையில் அச்சத்தின் பிடியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள்..
மும்பைக்குள் நுழையவே தயங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மராட்டியர் அல்லாதவர்கள்..
அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்!
ஆளூர் ஷாநவாஸ்
ஒரு மனித குல விரோதியின் மரணத்திற்காக மகிழ்ச்சி அடைவோம்!
Post a Comment