வினவின் ரசிகர்கள் யார்? தோழர் ரெட்மீரா அவர்களுக்கான எமது பதில்.
ரசிகர்களின் ரத்ததானம்,கதாநாயகனுக்கான மூலதனம்
ரசிகர்களின் ரத்ததானம்,கதாநாயகனுக்கான மூலதனம்
அன்புத்தோழர் ரெட்மீரா அவர்களுக்கு வணக்கம்.03.08.2011 இன்றைய எமது கட்டுரைக்கான தங்களின் பின்னூட்டத்தை படித்தோம். எமது கட்டுரைகளில் நாங்கள் எழுதிய கருத்துகளை தாங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டதின் பிரதிபலிப்பாகவே தங்களின் பின்னூட்டம் அமைந்துள்ளதை எம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது.சீர்த்திருத்த கோரிக்கைகளுக்காக புரட்சிகர சக்திகள் போராடக்கூடாது,என்பது எமது கருத்தல்ல.மாறாக நமது போராட்டம் ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவுக்கு ஆதரவானதாக,வலுவூட்டுவதாக அமைந்து நிலவுகிற சமூக அமைப்பை பாதுகாக்ககூடியதாக நமது போராட்டங்கள் அமைந்துவிடக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு என்பதை,எமது முந்தையக்கட்டுரைகளில் மிகத்தெளிவாகவே நாங்கள் எடுத்துரைத்துள்ளோம்.ஆகவே எமது கட்டுரைகளை மீண்டும் கவனமாக வாசியுங்கள்.வினவின் ரசிகர்கள் என்ற எமது வார்த்தை தங்களின் மனதை புண்படுத்தியிருந்தால்,அதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.எமது சூறாவளியில் நாங்கள் சென்ற ஆண்டுவரை வெளியிட்டுள்ள கட்டுரைகளில் பாதி வினவின் கட்டுரைகளுக்கு எதிராக வாதிட்ட நபர்களை அரசியல் சித்தாந்த ரீதியாக முறியடிக்கும் வகையிலேதான் எழுதியிருக்கிறோம்.எஞ்சிய பாதிக்கட்டுரைகள் வினவும்,அதன் தோழமை அமைப்புகளும் எந்த லட்சியத்திற்காக போராடுகின்றவோ அந்த லட்சியத்திற்காகத்தான்,அந்த அமைப்புகளில் ஒன்றைசேர்ந்த தோழர் மூடக்கிழவன் தலைமையிலான குழுவினர்தான் எழுதியுள்ளனர்.வினவின் சரியான கட்டுரைகளை ஆதரிப்பவர்கள் அனைவரையும் தாங்கள் கருதுவது போல் நாங்கள் வரையறுப்பு செய்வதாக இருந்தால்.நாங்களும் வினவின் ரசிகர் என்றே ஆகிவிடுவோம்.நாம் இருவருமே அந்த வகையை சேர்ந்தவர்கள் இல்லை,ஆகவே எமது அந்த விமர்சனம் தங்களை போன்றவர்களை குறிக்காது.வினவை ஆதரிக்கக்கூடியவர்கள் எமது கட்டுரையை எதிர்த்தாலும்,ஆதரித்தாலும் அதற்குரிய பதிலை எமக்கு தருமாறு அவர்கள் வினவை கோரவில்லை,என்பது தான் எமது ரசிகர்கள் என்ற விமர்சனத்திற்கு அடிப்படையாகும்.வினவை வெளிப்படையாக ஆதரிப்பது போன்றே எமது விமர்சனத்திற்கு பதில் கூறுங்கள் என்று வெளிப்படையாக வினவை கோருவதும்,அதன் ஆதரவாளர்களின் கடமையே ஆகும்.இதை செய்ய மறுப்பது தான் ரசிகத்தனமாகும்.இதை விமர்சிப்பதே எமது நோக்கமே தவிர அவர்களை கொச்சைப்படுத்துவது எமது நோக்கமல்ல.
எமது செயல்பாடுகளைப் பற்றி எமது கட்டுரைகளில் உள்ளடக்கங்களில் நாங்கள் தெளிவுப்படுத்தியே வருகிறோம்.எமது அடுத்தடுத்த கட்டுரைகளையும் கவனமாக வாசியுங்கள்,உங்களின் கேள்விகளுக்கு அதில் விடைகிடைக்கும்.உங்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு எமது தோழமையான நன்றிகள்.
புரட்சிகர வாழத்துகளுடன்
சூறாவளி-நிர்வாகக்குழு.
2.சமச்சீர் கல்வி....! கார்ப்ரேட் மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பன கும்பலுக்கு விழுந்த அடி-1
3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் - 2
தொடப்புடைய கட்டுரை:
1.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்
2.சமச்சீர் கல்வி....! கார்ப்ரேட் மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பன கும்பலுக்கு விழுந்த அடி-1
3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் - 2

0 comments:
Post a Comment