விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Thursday, 10 November 2011

விவசாயிகள்: நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் 2

சென்றத் தொடரில் விவசாயிகள் தமது விளைபொருட்களுக்கு விலையை தீர்மானிக்கும் அதிகாரம் வேண்டும் என்பதையும் அதன்தேவை,அவசியம் பற்றியும் எழுதியிருந்தோம்.விவசாயிகளுக்கு விலை நிர்ணய உரிமை  தருவதுதான் நாட்டின் பொருளாதாரம்,மேம்படுவதற்கும்,புத்துயிர் பெறுவதற்குமான ஒரே வழியாகும்.இந்த விலை நிர்ணய உரிமை விவசாயத்தை லாபகரமான தோழிலாக மாற்றி 80 கோடி விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகிறது.இதன் மூலம் விவசாயிகளின் வாங்கும் திறன் அதிகரித்து,நாட்டின் ஒட்டுமொத்த தொழிற்துறையே புத்துயிர் பெறும்.இதன் மூலம் நாட்டில் வேலையில்லை என்ற நிலையை ஒரு ஐந்தாண்டுகளில் ஏற்படுத்த முடியும்.உலகின் முதன்மையான நாடாக இந்தியா உருவாகும்.



ஆனால் நமது நாட்டின் அரசுகளோ இதற்கு நேர்மாறாக நடக்கிறது.பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தியை ஒன்றுமில்லாமல் செய்யும் வகையிலான அனைத்து திட்டங்களையும் மேலைநாடுகளுக்கு சாதகமாக நடைமுறைப்படுத்துகிறது.அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகைக்கு இணையாக, அதாவது இந்தியாவில் வாங்கும் திறன் படைத்தவர்கள் மட்டுமே இருபது கோடி பேருக்கும் மேலாக உள்ளனர்.நாட்டிம் ஒட்டுமொத்த செல்வமும் இவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்பத்தான்  திருப்பிவிடப்படுகிறது.இவர்களுக்கு தேவையான திட்டங்களைத்தான் மத்திய அரசுகள் செயல்படுத்துகிறது.

இந்த இருபது கோடி பேருக்கு தேவையான நுகர் பொருட்களை மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் கொடுத்தது போக ,எஞ்சியவற்றைத்தான் இந்திய முதாலாளிகள் உற்பத்தி செய்ய அவைகள் அனுமதிக்கின்றன.அப்படி அனுமதிக்கும் துறைகளில் தான் இந்திய முதலாளிகள் ஈடுபடுகின்றனர்.நவீன மற்ற பெரும் நுட்பங்களை கொண்ட குறிப்பாக இரும்பு,எஃகு போன்ற துறைகளில்தான் இந்திய நாட்டின் முதலாளிகளை தாராளமாக அனுமதிக்கின்றன.இதன் மூலம் இந்திய முதலாளிகள் பொருள் உற்பத்தி செய்கின்றனர் என்பதைவிட ஏகாதிபத்திய நாடுகளுக்கு மாமா வேலை செய்கின்றனர் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

இந்திய மக்கள் தொகையில் 120 கோடி பேரில் 100 கோடி மக்கள் அதாவது 80 கோடி விவசாயிகளும்,எஞ்சிய பிற உழைக்கும் மக்களும் இந்திய ஆட்சியாளர்களின் கவனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.

மேலை ஏகாதிபத்திய  முதலாளித்துவ நாடுகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக திவாலாகி கொண்டிருக்கின்றன.இதற்கு அடிப்படை காரணமே இந்த நாடுகள் அனைத்தும் தமது நாட்டில் ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளில், ஒட்டுமொத்த நாட்டின் செல்வங்களையும்,மக்களின் உழைப்பையும் கொள்ளையடிப்பதற்கு அனுமதித்ததே காரணமாகும்.அதாவது ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் வாங்கும்சக்தி அவர்களிடமிருந்து தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது.

இதனால்  அனைத்து நாடுகளின் தொழிற்துறை உற்பத்தியும் மந்தமாகி திவாலாகிக்கொண்டிருக்கிறது.இப்படிபட்ட சூழலில் இந்தியா இந்த நெருக்கடிகளை,சவாலை எதிர்கொண்டு இவற்றை வெற்றிகரமாக சமாளித்துவிட்டது என்று இந்திய ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்.

மேலை நாடுகள் தமது நாடுகளில் மக்களின் வாங்கும் சக்தியின் மூலம் நிரந்தரமான உள்நாட்டு சந்தையை வைத்திருந்தன.இப்போது அந்த சந்தையை இழந்ததன் மூலமும், உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாங்கும் சக்தியை ஏதும் இல்லாமல் செய்ததன் மூலமும்தான் இன்றைய நெருக்கடியை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.இப்படி ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நெருக்கடியில் சிக்கிக்கொள்வது முதலாளித்துவத்தின் தவிர்க்கவியலாத விதியாகும் என மார்க்ஸ் வரையறுத்துள்ளார்.

ஆனால் இந்தியாவோ எப்போதுமே இப்படி ஒரு நிரந்தர சந்தையை வைத்திருந்தும் அதை தமக்கானதாக வைத்திருக்கவில்லை.20 கோடி பேரை கொண்ட உலகின் மிகப்பெரிய சந்தையை கொண்டிருந்தும்,அதை மேலை நாடுகளின் சந்தையாகத்தான் வைத்துள்ளன இதனால் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் வாங்கும் சக்தி அற்றவர்களாகத்தான் ஆக்கப்பட்டுள்ளனர்,ஆக்கப்படுகின்றனர்.அதனால் இங்கு சந்தை நெருக்கடி என்று சொல்வதற்கு எதுவுமில்லை.

தற்போதும் இந்தியாவில் உள்ள ஆகப்பெரும்பான்மை உழைக்கும் மக்கள் அன்றாட உணவுக்கே அல்லல்படுகின்ற மக்கள்தான்.வறுமை என்பது இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு நிரந்தர அங்கம்.பிறந்ததில் இருந்து சாகும்வரை தலைமுறை தலைமுறையாக இப்படியே வாழ்ந்து பழகியவர்கள்.இது மாற்ற முடியாத தமது தலைவிதி என்று எண்ணி வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள்.

எனவே,இன்றைய முதலாளித்துவ உலகப் பொருளாதார நெருக்கடிகள் இந்திய மக்களின் வாழ்வில் புதிய அம்சங்கள் இல்லை.என்னதான் நெருக்கடி ஏற்பட்டாலும் அதிலும் வாழ்ந்து பழகிக்கொள்வதில் இந்திய மக்களுக்கு நிகர் உலகில் வேறு எவருமில்லை.

இன்று அமெரிக்காவையும்,மேலை ஐரோப்பிய நாடுகளையும் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளவால் தெருவை கைப்பற்றுவொம்என்ற இயக்கத்தில் பங்கேற்கும் மக்கள் அனைவரும்,இந்தியாவின் நூறுகோடி மக்களோடு ஒப்பிடும் போது மேம்பட்ட வாழ்நிலையை கொண்டவர்கள்தான்.ஆனால்,மேலை நாட்டு மக்கள் இந்திய மக்களோடு தம்மை ஒப்பிட்டு பார்த்திருந்தால் வால் தெரு இயக்கமே”, உருவாகி இருக்காது.ஆனால்,அவர்களோ இதுவரை தாம் வாழ்ந்த வாழ்க்கையோடு தம்மை ஒப்பிட்டு பார்த்துதான் போராடுகிறார்கள்.கம்யூனிசமே தீர்வு என எவரும் சொல்லித்தராமலேயே தனது சொந்த அனுபவத்தின் மூலம் முழங்குகிறார்கள்.அந்த அளவிற்கு மேலை நாட்டு மக்களின்  சிந்தனையும்,செயல்பாடும் ஜனநாயகத்தனமை வாய்ந்ததாக உள்ளது.

மேலை நாடுகளின் உழைக்கும் மக்களோடு, இந்திய மக்களை எந்த வகையிலும் ஒப்பிடவே முடியாது.அப்படி ஒப்பிட்டு பார்ப்பதற்கான சமூக அடிப்படையே இங்கில்லை.எப்போதுமே இந்திய ஆட்சியாளர்களும்,முதலாளிகளும் மாமா வேலை பார்ப்பதையே தமது தகுதியாக கொண்டிருப்பதால் தான் உலக பொருளாதார நெருக்கடி இந்தியாவின் உற்பத்தி துறைகளில் குறிப்பிடும் படியான பாதிப்பு ஏதையும் ஏற்படுத்திவிடவில்லை.

அப்படியே நமது மாமாக்களுக்கு சில நெருக்கடிகள், வருவாய் இழப்பு ஆகியவை ஏற்பட்டாலும் அதையும் நூறு கோடி மக்களின் தலையில் எவ்வித தயக்கமும் இன்றி திணித்துவிடுகின்றனர்.தமது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியை தவிர்க்க மனைவி,பிள்ளைகளையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் பெரும் நெருக்கடியை சந்திக்காமல் இருக்கும் சில இழிபிறவிகளை போன்றுதான் இந்திய ஆட்சியாளர்களும்,முதலாளிகளும் தமது நெருக்கடியை தீர்த்துக்கொள்வதற்கு இந்திய நாட்டின் இயற்கை செல்வ வளத்தையும், மக்களின் உழைப்பையும் அன்னிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காட்டிகொடுக்கவும்,கூட்டிகொடுக்கவும் சிறிதும் தயங்குவதேயில்லை.
மேற்கண்ட வழிமுறைகளின் ஒரு பகுதிதான் அண்மை பெட்ரோல் விலை உயர்வுமாகும். மக்களின் தலையில் நெருக்கடியை சுமத்துவதில் இந்திய ஆட்சியாளர்களுக்கு நிகர் இந்திய ஆட்சியாளர்கள்தான்.எனவே தான் உலகப் பொருளாதார நெருக்கடி என்பது இந்தியாவிற்கு ஒரு பொருட்டேயல்ல.இந்த மாமா வேலையில் உலகில் உள்ள அனைத்து ஆட்சியாளர்களுக்கும் சிறந்த வழிகாட்டிகள் தான் மன்மோகன் சிங்கும்,மாண்டோக் சிங் அலுவாலியாவும்!

இந்தியாவில் உள்ள நூறு கோடி மக்களும் தமது வாழ்வை, நவீன சமூகத் தேவைகளோடு ஒப்பிட்டு பார்க்கும் ஜனநாயக உணர்வை எப்போது பெறுகிறார்களோ அதுவரை உலகப் பொருளாதார நெருக்கடி இந்தியாவை ஒருபோதும் பாதிக்காது!
அப்படி ஒப்பிட்டு பார்த்துவிட்டால் அந்தக் கணமே சமூக கொந்தளிப்பின் தலைமை சக்தியாக இந்தியா உலகத்தின் கண்களுக்கு தெரியவரும்.இப்படி ஒப்பிட்டு பார்க்கமுடியாத அளவுக்கு இந்திய மக்களின் உணர்வு மட்டம் ஜனநாயக தன்மையற்று தாழ்ந்துகிடக்கிறது.இந்த இழிநிலைக்கு எதிராக மக்களின் உணர்வு மட்டத்தை உயர்த்துவதே சமூக அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனின் தலையாய,உடனடிப் பணியாகும்.

ஆனால்,இந்தப் பணி அத்துனை எளிதான ஒன்றல்ல.ஏன் என்றால் மக்களின் உணர்வு மட்டத்திற்கும், அவர்களின் புரிதல் தன்மைக்கும் ஏற்பத்தான் இந்தப் பணியை மேற்கொள்ள முடியும்.மக்களின் சிந்தனாமட்டம்,வாழ்க்கை,அனுபவங்கள் ஆகியவற்றுக்கு உகந்தவாறுதான்  இப்பணியை மேற்கொள்ள வேண்டும்.

இதற்குமாறாக சமூகத்தின் முன்னணியாளர்கள் தமக்கு தெரிந்ததையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதுவதும்,தமக்கு புரிந்ததையெல்லம் மக்களுக்கும் புரிய வேண்டும் என்று கருதுவதும் மக்கள் மீதான திணிப்பாகவே முடியும்.இப்படித்தான் இதுநாள் வரை நாட்டின் புரட்சிகர,ஜனநாயக சக்திகள் செயல்பட்டு வருகின்றனர்.இதனால் மக்களிடம் இருந்து தனிமை பட்டு மக்கள் மீதே அவநம்பிக்கை கொள்கின்றனர்.இதன் விளைவாக இச்சக்திகள் சமரச சீர்திருத்தவாத,இடது தீவிரவாத செயல்பாடுகளில் அமிழ்ந்து போகின்றனர்.வலது சந்தர்ப்பவாதமும்,இடது தீவிரவாதமும் மக்கள் மீதான அவநம்பிக்கையின் எதிர்விளைவேயாகும்.(தமிழகத்தில் செயல்பட்டுவரும் மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும் 80கோடி விவசாயிகளின் மீதான அவநம்பிக்கையின் காரணமாகத்தான் வலது சந்தர்ப்பவாத சகதியில் முழ்கிவிட்டுள்ளது.இந்த வலது சந்தர்ப்பவாதத்திற்கு எதிராகத்தான் கடந்த 8 ஆண்டுகளாக தோழர் மூடக்கிழவன் தலைமையிலான குழுவினர் உட்கட்சி போராட்டத்தை நடத்தி வந்தனர்.அமைப்பின் வலது சந்தர்ப்பவாத தன்மைக்கு எதிராக வெறுமனே விமர்சனம் செய்து கொண்டிருக்காமல், விவசாயிகளை அணிதிரட்டுவதற்கான மாற்றுத்திட்டத்தை முன்வைத்தே உட்கட்சிப் போராட்டத்தை நடத்தி வந்தனர்.இதை அந்த அமைப்பினர் ஏற்காமல் விவசாயிகள் விடுதலை முன்னணியை கலைத்து விடுவதற்கு அமைப்பு பரிசீலித்து வருவதான செய்தியை பகுதிகளுக்கு பரப்பியதுடன் நடைமுறையிலும் கிராமப்புறங்களிலும் வேலை செய்ய வேண்டாம் எனவும் விவசாயிகள் விடுதலை முன்னணியில் இருந்தாலும் அந்த தோழர்களும் நகர்ப்புறங்களில் வேலை செய்யவே நிர்பந்திக்கப்பட்டனர்.இந்த உட்கட்சி போராட்டம் அதன் எல்லையை தாண்டியதால்தான் தோழர் மூடக்கிழவன் தமது உட்கட்சிப்போராட்டம் பற்றி சூறாவளியில் கட்டுரை ஒன்றை எழுதினார்.இதையே காரணம் காட்டி தோழர் மூடக்கிழவன் தலைமையிலான குழுவினரை ஒட்டுமொத்தமாக அமைப்பில் இருந்து விலக்கிவிட்டதாக அறிவித்துள்ளனர்.இனி தோழர் மூடக்கிழவனும் அவரோடு உள்ள தோழர்களும் கடந்த 8 ஆண்டுகளாக தமது உட்கட்சி போராட்டம் பற்றி இனி சூறாவளியில் எழுத உள்ளனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.)

  இதை தவிர்ப்பதற்கு சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் முதலில் தம்மை மக்களில் ஒருவராக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.மக்களின் ஒவ்வொரு அசைவிற்கும், செயல்பாடுகளுக்குமான அர்த்தத்தை அறிந்திருக்க வேண்டும்.இது ஒன்றே இந்தியாவில் உழைக்கும் மக்களை அதிலும் குறிப்பாக இந்திய விவசாயிகளை அமைப்பாக திரட்டுவதற்கு இருக்கும் ஒரே வழிமுறையாகும்.இதற்கு பொறுமையும் மக்களின் உணர்வு பற்றிய நுட்பத்தையும் தெரிந்திருக்க வேண்டும்-கற்றுக்கொள்ள வேண்டும்.

இதை சாதிப்பதற்கும்,இலக்கை அடைவதற்குமான வழிமுறைகள் என்ன என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்…..

குறிப்பு:அன்பார்ந்த வாசகர்களுக்கு, தோழர் மூடக்கிழவன் தலைமையில் சூறாவளி ஆசிரியர் குழு மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சூறாவளியின் பொருப்பை ஆசிரியர்குழுவே ஏற்றுள்ளது.இதனால் தற்காலிகமாக செயல்பட்டுவந்த சூறாவளி நிர்வாகக்குழு கலைப்பட்டுவிட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

ADMIN said...

நல்ல பதிவு.. நன்றி!!

தேன் நிலா said...

நல்ல பல ஆக்கங்களை தங்கள் தளத்தில் காண முடிகிறது. பகிர்வுக்கு நன்றி..!!!

உங்கள் தளத்தில் word verification -ஐ எடுத்துவிடுங்கள். இதனால் பல வாசகர்களும் சிரமமின்றி தங்களது கருத்துக்களை வெளியிட ஏதுவாக இருக்கும்..

word verification எப்படி எடுப்பது? என்பதற்கு இந்தப் பதிவு உங்களுக்கு கட்டாயம் பயன்படும்.

உங்கள் பிளாக்கரில் கருத்துப்பெட்டியின் கீழ் வரும் word verfication நீக்க

நன்றி அன்பானவரே..!!

suraavali said...

suppudu அவர்களுக்கு தங்களின் ஆலோசனைக்கு நன்றி.தாங்கள் கோரியபடியே மாற்றம் செய்துள்ளோம்.

suraavali said...

தங்கம் பழனி அவர்களுக்கு,தாங்கள் பயனுள்ள பல தகவல்களை பகிர்ந்து கொள்கிறீர்கள்.தங்களின் பணிக்கு எமது வாழ்த்துக்கள்.

tamilcircle.net said...

மூடக்கிழவனின் உட்கட்சி போராட்டத்தை உள்ளிருந்து நடத்த முடியமால் போனது என்பது நல்ல அறிகுறியல்ல. ஒரு வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் வர்க்கக் கட்சிக்கு, அதன் வர்க்க அரசியலுக்கு பின்னடைவுதான். இந்த இடத்தில் "கணிப்பு பிரதானமானது, அணுமுறை இரண்டாம் பட்சமானது" என்ற -இ.பொ.க (மா.லெ) மாநில அமைப்புக் கமிட்டியின் அனுகுமுறை இங்கு சரியாக கையாளப்பட்டத என்பது எமக்கு தெரியாது.

நிற்க அண்மையில் வினவு தளத்தில் " முவாம்மர் அல் கடாஃபி ஒரு முழுமையான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி என்று சொல்லி விட முடியாது." என்று கூறுகின்ற அரசியல் மூலம், எகாதிபத்திய பற்றி திரிபை காணமுடியும்;. எகாதித்திய எதிர்ப்பில் இத்தனை சதவீதம் என்று கூறுகின்ற அனவுக்கு மார்க்சியத்தை புரட்டிவிடுகின்றனர். இதுபற்றி விரிவாக வேறு ஒரு இடத்தில் விவாதிக்க உள்ளோம்.

"முழுமையான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி" அல்ல பகுதி அளவு என்ற கூறும் சந்தர்ப்பவாத மார்க்சிய புரட்டுக்கு, 1981 ம் ஆண்டு இதையொத்த மற்றொரு வாதத்துக்கு -இ.பொ.க (மா.லெ) மாநில அமைப்புக் கமிட்டியின் விமர்சத்தில் இருந்து அதை பதிலாக இங்கு முன்வைப்பது சாலப்பொருந்தும்;.


1."லிபரேஷ" இல் வி.மி.குழு கூறிய "எந்த அளவிற்கு ஒரு கட்சி மூன்றுலகக் கோட்பாட்டை அமுலாக்குகிதோ அந்த அளவுக்கு அது சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் ஒரு சக்தியாகும். இந்த வகையில் திரிபுவாத கட்சிகள் கூட சர்வதேசிய கம்யூனிச இயக்கத்தின் ஓர் அங்கமாகும்." என்பதை விமர்சித்த இ.பொ.க (மா.லெ) மாநில அமைப்புக் கமிட்டி தன் விமர்சனத்தில் " ஒரு கட்சி 100 சதவீதம் அமுல்படுத்தினால் அது சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் 100 சதவீதம் அங்கமாகின்றது. வேறொன்று 40 சதவீதம் அமுல்படுத்தினால் அது 40 சதவீதம் கம்யூனிச இயக்கத்தின் அங்கமாகின்றது. இவ்வாறு ஒரு சதவீதம் அமுல்படுத்துகிற கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து 100 சதவீதம் அமுல்படுத்துகிற கம்யூனிஸ்கட்சி வரை பல்வெறு அளவுகளில் அமுல்படுத்துகிற கம்யூனிஸ்ட் கட்சி வரை பல்வேறு அளவுகளில் அமுல்படுத்துகிற பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகளுடைய (அந்தக் கட்சிகள் மார்க்சிய – லெனினிய அடிப்படை நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டு அவைகளை நடைமுறையில் நாணயமாக அமுல்படுத்துன்றனவா என்பதைப் பற்றி 0.0001 சதவீதம் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது) நடவடிக்கைகளின் தொகுப்பு தான் சர்வதேச கம்யூனிச இயக்கமென்று வி.மி.குழு சொல்லுகின்றது."

2. "….மூன்றாம் உலக நாடுகளுக்குள்ளாகவே ஓப்பிட்டு ரீதியில் பொருளாதார மற்றும் இராணுவப் பலம் வாய்ந்த பிராந்திய துணை வல்லரசுகள் தோன்றியுள்ளன. வியத்நாம், இந்தியா, ஈராக், இஸ்ரேல், தென் ஆஃபிரிக்கா, எகிப்து, லிபியா, அர்ஜெண்டினா, பிரேசில், தென் கொரியா, போன்றவை இக்தகைய துணை வல்லசுரகள். இவை ஏதாவது ஓன்று அல்லது இரண்டு மேல்நிலை வல்லரசுகளின் இளைய பங்காளிகளாக உள்ளன."

பொ.க (மா.லெ) மாநில அமைப்புக் கமிட்டியின் மேற்கூறிய கூற்றுகளை பார்க்க

1. 1.புதிய உலக நிலைமைகளின் கீழ் சர்வதேசப் புரட்சிக் கடமைகள் -இ.பொ.க (மா.லெ) மாநில அமைப்புக் கமிட்டி

2. இரு முக்கிய முடிவுகள் -இ.பொ.க (மா.லெ) மாநில அமைப்புக் கமிட்டி

tamilcircle.net said...

எமது பின்னோட்டம் தெளிவாக கருத்தை முன்வைக்கவில்லை என்று நிலையில், நாம் இரண்டு விடையத்தை இங்கு பேசி இருக்கின்றோம்.

1.மூடக்கிழவன் உட்கட்சி போராட்டத்தை உள்ளிருந்து நடந்த முடியாமல் போனது, தவறான அரசியல் போக்கு சாதகமானது. இந்த இடத்தில் மகஇக வின் கட்சி ஆவணத்தில் மாக்சிய லெனினியவாதிகாள என்றதில் "கணிப்பு பிரதானமானது, அணுமுறை இரண்டாம் பட்சமானது" என்ற கூற்றை தோழர் மூட்க்கிழவன் விடையத்தில் கையாண்டர்களா என்பதை சந்தேகத்துடன் இங்கு நாம் எழுப்பினேன். எங்கள் விடையத்தில் இப்படிக் கையாளவில்லை.

2. "முழுமையான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி" அல்ல என்ற அரசியல் 100 சதவிதம் முதல் 000.1 சதவிதம் வரை, ஏகாதிபத்திய எதிர்ப்பு போhராளியாக வரையறுத்து காட்டும் அரசியல் விலகள்களை காண்கின்றோம். இதை இனம்காட்ட அவர்கள் முந்தைய விமர்சனத்தை அவர்களுக்கு எடுத்துக் காட்டி இருந்தோம்;.

இதில் ஒன்றுக்கு மேட்பட்ட திரிபுகள் உண்டு

1.அமெரிக்காவை மட்டும் எகாதிபத்தியமாக இனம் காட்டுவதும், அன்றைய சமூக எகாதிபத்தியத்தை இனம் காட்டாது மறுப்பதும்.

2.அமெரிக்காவுடன் கடாபி மோதியும் கொஞ்சியும் விளையாடிய காலத்தையும், சூழலையும் வைத்து எகாதிபத்திய எதிர்ப்;பு பற்றிய அரசியல் வரையறைக் கொடுப்பது

3.எந்த வர்க்கத்தையும் சாராத ஒன்றின் ஊடாக, அதாவது வாக்கம் சாராத ஏகாதிபத்திய எதிர்ப்பாக வரையறுத்துக் காட்டுவது

4.அன்று முதல் இன்று வரை லிபிய மக்களுக்கும் கடாபிக்கும் உள்ள முரண்பாட்டை காணமறுத்தன் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்வைப்பது

இதுபற்றி விரைவில் விரிவாக எழுத உள்ளேன்.

பி.இரயாகரன்