”கடின உழைப்பாளர்கள் குடிப்பதில் தவறில்லை””எப்போதாவது குடிப்பதில் பிரச்சனையில்லை”என குடிப்பதை நியாயப்படுத்தும்,அங்கீகரிக்கும் கும்பல் தன்னை புரட்சிகர சக்தி என்றுக் கூறிக்கொள்வதற்கு சிறிதும் அருகதையில்லை என்பதை சென்றக்கட்டுரையில் எழுதியிருந்தோம்.மேலும் நமது மரபு என்று கள்,சாராயத்தை போற்றும் நயவஞ்சத்தையும்,இதைக்காட்டி மது குடிப்பதை நியாயப்படுத்தும்,அங்கீகரிக்கும் இக்கும்பலின் பித்தலாட்டத்தையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.
3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2
6.முரண்பாடுகளின் மூட்டையாகிப் போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-4
மேற்கண்டவற்றோடு இக்கும்பல் தனது நேர்மையற்ற செயலுக்கு பின்னே எப்படியான மக்கள் விரோத போக்குகளை கொண்டுள்ளனர் என்பதை பற்றி இனி பார்ப்போம்.
குடிப்பது நமது நாட்டில் சமூக பண்பாடாக இல்லாவிட்டாலும்,குடிப்பவர்கள் அதிகமாகிவிட்டதால் குடிப்பதில் தவறில்லை என்று அங்கீகரிப்பது, அதிகமாகிவிட்ட குடிகாரர்களின் தேவையை அங்கீகரிப்பது என்பதை போன்றதொரு தோற்றத்தை உருவாக்குவதன் மூலம், அப்படி குடிப்பவர்களின் ஆதரவை பெறுவதையே இவர்கள் தமது இலக்காக கொண்டுள்ளார்கள் என்பது பளிச்சென தெரிகிறது.இதுவரை குடிப்பவர்களை அமைப்பில் உறுப்பினராக சேர்த்துக் கொள்வதில்லை என்ற விதியை கடைபிடித்தவர்கள் இவர்கள்.இவ்விதியை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கினார்கள்.அப்போது சமூகத்தில் பெரும்பான்மையினர் குடிக்காதவர்களாக இருந்தனர்.இப்போது குடிப்பவர்களே பெரும்பான்மையினராக மாறிவிட்டதால் தமது கட்சிக்கு ஆள் கிடைக்கமாட்டார்கள் என்பதால் குடிப்பதில் தவறில்லை என்று மிகவும் ‘ஜனநாயகபூர்வமாக கொள்கை முடிவெடுத்துள்ளனர் போலும்’!
நிலவுகிற சமூகத்தில் குடிப்பவர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாகிவிட்டது என்பதால் அதை அங்கீகரிப்பது சரிதான் என்றால் இன்றைய நிலையில் பெரும்பான்மை மக்கள் லஞ்சம் கொடுப்பது மட்டுமல்ல,தேர்தலில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஓட்டும் போடுகின்றனர்.லஞ்சம் கொடுக்காதவர்களையும்,தேர்தலில் லஞ்சம் வாங்காதவர்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம்.இதை வைத்து பார்க்கும் போது லஞ்சம் கொடுப்பவர்களும்,வாங்குபவர்களுமே பெரும்பான்மையினராகி விடுகின்றனர்.
பெரும்பான்மையினர் குடிப்பதால் அதை அங்கீகரிக்கலாம் என்றால் லஞ்சத்தை அங்கீகரிக்கவும் வேண்டும்!
மக்கள் லஞ்சம் கொடுக்கும் போதும அதை தேர்தலில் பெறும்போதும் இழப்பை சந்திக்கிறார்கள்.தேர்தலில் பணம் கொடுத்து வாக்குப் பெறுபவர்கள் அதை திரும்ப எடுப்பதன் மூலம் இழப்பை சந்திக்கிறார்கள் மக்கள்.
இதையும்,அதையும் எப்படி ஒப்பிடலாம் என்று புரட்சியாளர்கள் சார்பில் சிலர் வாதிடக்கூடும்!
குடியை அங்கீகரிப்பதன் மூலம் குடிப்பவர்களுக்கு என்ன ஆதாயம்? அது குடிகாரர்களுக்கு இழப்பைத்தான் ஏற்படுத்துகிறது. உழைப்பினால் கடின உழைப்பாளர்களுக்கு ஏற்படும் அசதி,வலி ஆகியவற்றில் இருந்தும்,மன ஆறுதலுக்காவும் மது அருந்தி மூலம் நன்மை அடைகிறார்கள் என்று நமது புரட்சியாளர்கள் என்னதான் வாதாடினாலும் மதுவினால் மேற்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதில்லை.மாறாக அதை மூடிமறைக்கிற வேலையைத்தான் மது செய்கிறது என்பதுதான் உண்மை.
உண்மையில் மதுவினால் ஆதாயமடைபவர்கள் மது உற்பத்தியாளர்களும்,ஆட்சியாளர்களுமே! எனவே மதுவை அங்கீகரிக்கும் நமது ‘புரட்சியாளர்களின்’ செயலுக்கு பின்னே மேற்கண்டவர்களின் நலனே ஒளிந்து கொண்டிருக்கிறது.
மது குடிப்பதில் தவறில்லை என்பதற்குள்ளே,மது உற்பத்தி செய்வதும் தவறில்லை என்ற முதலாளிகளின் நலன் ஒளிந்து கொண்டிருக்கிறது.
மொத்தத்தில் நிலவுகிற சமூக அமைப்பை போலிசைப் போன்று துப்பாக்கி முனையில் அல்லாமல் உழைக்கும் மக்களின் நலன் என்றப் போர்வையில் மிகவும் சாதுர்யமாக பாதுகாக்கும் நயவஞ்சக அணுகுமுறைதான் ”குடிப்பதில் தவறில்லை” என்ற இந்த கும்பலின் நிலைப்பாடாகும்.
தான் வரையறுத்துள்ள கோட்பாட்டின் படியே மதுவை மட்டுமல்ல லஞ்சம்,ஊழல்,சாதி,தீண்டாமையையும் இந்தக்கும்பல் அங்கீகரித்தே செயல்படுகிறது.
இந்தக் கும்பல் நடத்தும் ஒரு வெகுசன அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜி என்பவர் ஒருசில மாதங்களில் அரைகோடி ரூபாய்க்கும் மேல் சொத்து சேர்த்துள்ளார்.அந்த சொத்து மனையாகவும்,வீடாகவும்,கடையாகவும் எகத்தாளமாக நின்றுகொண்டிருக்கிறது.
இந்த சொத்து அவருக்கு எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பியவர்களிடம், இது தவறான வழியில் வந்தது என்பதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்று கேட்கிறது இந்தக்கும்பல்.
கேட்டவர்கள் இந்த சொத்து தவறான வழியில் வந்தது என்றுக்கூறவில்லை.மாறாக எப்படி வந்தது என்றுதான் கேட்டார்கள்.பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நேர்மையாக பதில் சொல்லக்கடமைப்பட்டவர்கள்.ஆனால் இவர்களோ கேள்வி கேட்டவர்களிடமே,கேள்வி கேட்டதன் மூலம் இந்த சொத்து வெளியில் சொல்ல முடியாத வழியில் வந்தது என்பதையும்,அதை நியாயப்படுத்துவதையுமே தமது விதண்டாவாத அணுகுமுறையின் மூலம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றுக்கூறி நமது வேலையை சுலபமாக்கிவிட்டது.
மேற்கண்ட இதே நபர் தான் தாழ்த்தப்பட்ட பெண்ணையே திருமணம் செய்துகொள்வேன் என்று முதலில் கூறினார்.இவர்கேட்டப்பெண் இவரை திருமணம் செய்து கொள்ள மறுத்தவுடன் ”சாதிக்கு தகுந்தமாதிரிதான் புத்தி இருக்கும், எனவே என்னைவிட உயர்ந்த சாதியில் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்”, என்று அறிவித்தே தன்னைவிட உயர்சாதிப்பெண்ணை திருமணம் செய்து கொண்ட மாபெரும் ஜனநாயகப் போராளி இவர்.
தில்லைக் கோயிலில் தமிழில் பாட முற்பட்ட ஆறுமுகச்சாமி என்பவரை தில்லை தீட்சித பார்ப்பனர்கள் பாடவிடாமல் பல ஆண்டுகளாக தடுத்து வந்தனர்.ஆறுமுக சாமியையும் தாக்கினர்.இந்தப் போராட்டத்தை இந்த ’மாபெரும் ஜனநாயக போராளி’ தலைமையில்தான் இந்தக்கும்பல் நடத்தியது.
இந்தப்போராட்டம் தமிழர்களுக்கும்,தீட்சிதர்களுக்கும் இடையிலான போராட்டமாகத்தான் தமிழகம் முழுவதும் நாம் கருதினோம்.ஆனால் இந்த ஜனநாயக போராளியும்,இந்தக்கும்பலையும் பொருத்தவரை, ஆறுமுகசாமி வன்னியர் என்பதால் அது வன்னியர்களுக்கும்,தீட்சிதர்களுக்கும் இடையிலான போராட்டமாகவே கருதி நடத்தினார்கள்.
இப்போராட்டத்தை கடலூர்,விழுப்புரம்,புதுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அந்த அமைப்பினரே நடத்தினர்.இந்தப் போராட்டத்தை தீட்சிதர், வன்னியர் ஆகியோருக்கு இடையிலான போராட்டமாக நடத்தியதற்கு ஆதாரமாக போராட்டங்களில் தலைமையேற்க,அங்கு நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களில் பேச்சாளர்களாக இம்மாவட்டத்தை சேர்ந்தவர்களில் பிறப்பால் வன்னியர்களை மட்டுமே தேர்வு செய்தனர்.
இப்போராட்டம் வெற்றி பெற்றவுடன் அடுத்தக்கட்டமாக ”நந்தன் நுழைந்த வாயிலை திறப்போம்”,என்றப் போராட்டத்தை அறிவித்தனர்.இப்போராட்டத்தில் நான் பங்கேற்க மாட்டேன் என்று கூறிவிட்டு ஆறுமுகசாமி ஒதுங்கிக் கொண்டார்.இவரின் இந்தச் செயலை ஒரு ஆர்ப்பாட்டத்தில் சுட்டிக்காட்டிய அந்த அமைப்பை சேர்ந்த ஒருத்தோழரை இந்த மாபெரும் ஜனநாயக போராளி அந்த ஆர்ப்பாட்டத்திலேயே கண்டித்து பேசினார்.
தமிழில் பாடும் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய அந்த அமைப்பை சேர்ந்த ’போராளி’ ஒருவர் நந்தன் நுழைந்த வாயிலை திறப்போம் என்ற போராட்டத்தைப் பற்றி கூறும்போது தாழ்த்தப்பட்டவர்கள் அவசரப்படுகிறார்கள் என்றுக்கூறி தனது முற்போக்குத் தனத்தைக் வெளிப்படுத்தினார்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சமூகத்தில் தீண்டத்தகாதவர்களாக ஒடுக்கப்படும் மக்கள் சாதி,தீண்டாமை ஒழிய வேண்டும் என்று அவசரப்படுகிறார்களாம்? இதைப்போன்ற புரட்சியாளர்களை உலகில் வேறு எங்காவது நாம் பார்க்க முடியுமா?இதோடு நந்தன் நுழைந்த வாயிலை திறப்போம் என்றப் போராட்டத்தையும் மூட்டைக் கட்டிவிட்டு .இப்போது தமது வழமையான ‘புரட்சிகர’ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது கட்சி ஆவணங்களில் எவ்வித மாற்றமும் செய்யாமலேயே தமது அனைத்து செயல்பாடுகளிலும் முதலாளித்துவ சீர்த்திருத்தவாத போக்கையே நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
சமச்சீர் கல்வி விவகாரம்,தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம்,ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட மூவர் தூக்கு விவகாரம் ஆகியவற்றிலும் இந்தக்கும்பல் சீர்த்திருத்தவாத நிலைப்பாட்டையே கொண்டு செயல்பட்டதையும் ஏற்கனவே நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம்.
நிலவுகிற சமூக அமைப்பை பாதுகாக்கும் தமது சீர்த்திருத்தவாத கோட்பாடு ,செயல்பாடு ஆகியவற்றையே புரட்சிகர கோட்பாடாகவும் ,செயல்பாடாகவும் இக்கும்பல் முலாம் பூசித்திரிகிறது.தனது இந்த கேடுகெட்டச் செயலை யாரும் அறிந்து கொள்ள முடியாது என்று பகல்கனவு காண்கிறது.யாராவது தனது செயலைப் பற்றி கேள்வி எழுப்பிவிட்டால் ’தமக்கே உரிய புரட்சிகர வழியில்’கேள்வி எழுப்பியவர்களின் வாயை அடைத்துவிடுகிறது.
இதற்காகவே அம்மாவின் விசுவாசிகளை விட தீவிரமான விசுவாசிகளை உருவாக்கிவைத்துள்ளது.அரசியல்,சித்தாந்த ரீதியாக அம்மாவுக்கு தமிழகத்தில் போட்டியாளர்கள் யாராவது உண்டென்றால் அவர்கள் இவர்கள்தான்.இவர்கள் மட்டும் தேர்தல் களத்தில் குதித்துவிட்டால் அம்மாவின் கதி,அதோ கதிதான்!
புரட்சித் தலைவிக்கே சவால் விடும் அப்பேற்பட்ட புரட்சியாளர்கள் யார் என்கிறீர்களா?
அவர்கள்தான் மக்கள் கலை இலக்கியக் கழகம்,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,விவசாயிகள் விடுதலை முன்னணி,புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,மனித உரிமை பாதிகாப்பு மையம்,புதிய ஜனநாயகம்,புதிய கலாச்சாரம்,வினவு இணையதளம் ஆகிய நிறுவனங்களை நடத்துபவர்கள்!
தயவு செய்து இவர்களைப் பற்றி அம்மாவின் காதில் யாராவது கொஞ்சம் போட்டு வையுங்களேன்…..!
தொடர்புடைய கட்டுரைகள்:
2..சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-1
0 comments:
Post a Comment