விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Friday, 23 September 2011

கூடங்குளம்:ஆறப்போடு அணைந்துவிடும்!

கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டத்துக்கு எதிராக அவ்வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 12.09.2011 அன்று முதல் 21.09.2011 வரை தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.இந்த போராட்டத்திற்கு நெல்லை மாவட்ட மக்கள் மட்டுமல்ல கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில மக்களும் ஆதரவு தந்தனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது என்று அம்மாவட்ட போலிஸ் தடைவிதிக்கும் அளவுக்கு போராட்டம் பரவ ஆரப்பித்தது.

தமிழக முதல்வர் ஜெயா கூடங்குளம் அணுமின்நிலையம் மிகவும் பாதுகாப்பானது. ஆகவே மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் ஏற்கவில்லை.முதல் நாள் மிகவும் பாதுகாப்பானது என்று கூறிய ஜெயா மறுநாளே பேச்சுவார்த்தைக்கு வருமாறு போரட்டக்குழுவினருக்கு அழைப்புவிடுத்து பேசினார்.அணுமின்நிலைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு போராட்ட குழுவினர் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.அமைச்சரவைக்கூட்டத்தை 21.09.2011 அன்று கூட்டிய ஜெயா போராட்டக்குழு கோரியபடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.இதனால் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர் மக்கள்.



ஜெயா அமைச்சரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், மக்கள் ஏற்கும் வரை அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்குமாறுதான் கோரியுள்ளார்.மேற்குவங்கம்,ஹரிபூர் அணுமின்நிலையத்தை அம்மாநில முதல்வர் நிராகரித்ததை போன்று நிராகரிக்கவில்லை.அப்படி நிராகரிப்பதற்கான தார்மீக பலம் ஜெயாவிற்கோ முன்னால் முதல்வர் கருணாநீதிக்கோ சிறிதுமில்லை.ஏனேன்றால் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தவர்கள் இவர்கள் இருவருமே. மக்கள் ஏற்கும் வரை அணுமின்நிலைய பணிகளை நிறுத்தி வைக்குமாறு கோரியதன் மூலம் இனி மத்திய,மாநில அரசுகள் இத்திட்டத்தை ஏற்குமாறு மக்களிடையே தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்ளுவர்.போராட்டக்குழு மற்றும் மக்களிடையே துரோகிகளை உருவாக்கி போராட்டத்தை பிளவுபடுத்துவதற்கான வேலைகளையும் செய்வார்கள். ஏதோ ஒரு வகையில் ஒருமுறை மக்களை சமாதானப் படுத்திவிட்டால் மீண்டும் போராட்டம் தொடர்வதை தடுத்துவிட முடியும்,என்று தான் மத்திய,மாநில அரசுகள் திட்டமிட்டிருக்கும். போராட்டக்குழுவில் உள்ளவர்கள் ”எங்களது போராட்டம் மத்திய அரசுக்கு எதிரானது தானே தவிர, மாநில அரசுக்கு எதிரானது அல்ல”, என்று கூறியிருப்பதிலிருந்தே மாநில அரசின் மீது தங்களுக்குள்ள அச்சத்தையே வெளிப்படுத்தியுள்ளனர்.மாநில முதல்வரின் கருத்தோ அணுமின்நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்பது தான்.எனவே கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்தப்படுவதை மாநில அரசு விரும்பாது. அதற்கு மாறாக அவ்வட்டார மக்களை அணுமின்நிலைய பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி வேறுஇடத்தில் குடியமர்த்துவது போன்ற செயல்களில் தான் மத்திய அரசின் உதவியோடு செய்ய முற்படும்.இதையும் மீறி போராட்டம் நடத்தும் அளவிற்கு போராட்டக்குழுவிற்கு ஆற்றல் இல்லை என்பதைத்தான் அவர்களின் அண்மைய அணுகுமுறைகள் வெளிப்படுத்துகிறது.

ஜப்பானின் புகுஷிமா அணுமின்நிலையம் நிலநடுக்கத்தால் பாதிப்படைந்து அணுகதிர்வீச்சினால் அந்நாட்டு மக்கள் மிகக்கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.உலகம் முழுவதுமே அணுமின்நிலையங்கள் பாதுகப்பற்றது என்பது மட்டுமல்ல,அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி அளவும் மிகவும் குறைவானதே!

உலகம் முழுவதிலும் உள்ள அணுமின்நிலையங்கள் மின்சார உற்பத்திக்கென்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அவைகள் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு வேண்டிய மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.கல்பாக்கம் அணுமின்நிலையத்திலும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்பதே முழுமையான உண்மையல்ல. அணு மின்நிலையங்களால்  சாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும்,உலகம் முழுவதிலுமே அதனால் ஏற்படும் பாதகமே கூடுதலாகும். இதனால்தான் உலகம்முழுவதிலுமே அணுமின்நிலையங்களுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

கூடங்குளத்தில் மின் உற்பத்திக்குதான் அணு உலை கட்டப்படுவதாக கூறப்பட்டாலும்,இங்கு ரஷ்யாவின் அணுக்கழிவுகளை கொண்டுவந்து சேமித்து வைப்பதற்கான சாத்திய கூறுகளே அதிகமுள்ளது. இந்த அணுமின்நிலையத்தால் ஏற்பட போகும் பாதிப்புகள் பற்றி மிகக்குறைந்த அளவிற்கே மக்களிடம் பரப்புரை செய்யப்பட்டுள்ளது.ஆனால் பாதிப்புகளோ மிகக்கடுமையானதாகவும், தலைமுறை,தலைமுறையாக நீடிக்ககூடியதாகவும் இருக்கும்.அணுமின்நிலையங்களால் நிலம்,காற்று,நீர் ஆகியவை வெப்பமடைகிறது.அணுக்கழிவுகள் கடலில் கலப்பதால் மீன் வளம் அற்றுப்போகும்.இவைகளை பற்றிய முழு பரிமாணங்களை கூட ஜப்பான் மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்கள் உணர்ந்து கொண்டுள்ள அளவிற்கு தமிழக மக்கள் உணரவில்லை என்பதே உண்மையாகும்.இதனால் தான் இப்போராட்டம் ஒருவட்டார பகுதியின் போராட்டமாக வெளிப்படுகிறது.தமிழகத்தின் ஏனைய பகுதி மக்களை பொருத்தவரை கூடங்குளம் சம்பந்தமான நிகழ்வுகள் ஒரு பரபரப்பான செய்தி மட்டுமேயாகும்.

ஆட்சியாளர்களை பொருத்தவரை ரூபாய் 13 ஆயிரம் கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பரில் செயல்பட தயாராக உள்ள ஒரு திட்டத்தை இடைநிறுத்த முடியாது என்பதாகத்தான் இருக்கும்.தமிழக அமைச்சரவை ”மக்கள் ஏற்கும் வரை அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்குமாறு” தீர்மானம் நிறைவேற்றி  இருந்தாலும்,உண்மையில் இது இந்த விடையத்திற்காகத்தான் இயற்றாப்பட்டதாக நாம் முற்றிலும் நம்பிவிட முடியாது.மத்திய அரசை மிரட்டி பல்வேறு காரியங்களை சாதித்து கொள்வதற்கான ஒரு தந்திரமாகவும் இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கலாம்,என்பதையும் நாம் முற்றிலும் நிராகரித்துவிட முடியாது.ஏனேன்றால் இந்த அணுமின்நிலைய விவகாரத்தில் ஜெயா அரசுக்கு மத்திய அரசுக்கு மாற்றான கருத்தேதும் இல்லை,அதே பொன்று மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடிய நபரும் ஜெயா இல்லை என்பதையும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்
ஈழ இறுதிக்கட்ட போரின் போது இந்திய நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு போரை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொண்டது,அதே போன்று  தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள,உள்ளாட்சித்தேர்தலை கணக்கில் கொண்டுதான் ஜெயா அரசு இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பார் என்பதற்கான சாத்திய கூறுகளே அதிகமாகும்.
இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஈழமக்கள் மீதான தாக்குதலை மிகவும் மூர்க்கமாக நடத்தியதை போன்றே, கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடும் மக்கள் மீதும் ஜெயா அரசு மூர்க்கமான தாக்குதலை தொடுப்பதற்கான வாய்ப்புகளை நாம் நிராகரித்துவிட முடியாது.ஆனால் இதை எதிர்கொள்ளும் ஆற்றல் இப்போதையை போராட்டக்குழுவிற்கு இல்லை என்பதே உண்மையாகும்.இதை எதிர்கொள்வதற்குரிய ஆற்றல் புரட்சிகர,ஜனநாயக சக்திகளின் தலைமைக்கு மட்டுமே உண்டு.இப்படி போராட்டம் நடத்தப் பட்டால் மட்டுமே கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் வெற்றியை நோக்கி சொல்லும்!

தொடர்புடைய பதிவுகள்:

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

Unknown said...

அணு மின்சாரம் வேண்டாமெனில் அனல் மின்சாரமும் நிறுத்தப்பட வேண்டும்!

தண்ணீரை எரிப்பான் வைத்து சூடாக்கி மின்சாரம் தயாரிப்பைத் தவிர்த்து, வேறு மாற்று வழி இருந்தால் சொல்லவும்!

நிலக்கரி,கச்சா எண்ணெய் கொண்டு நீரை சூடாக்கி மின்சாரம் தயாரித்தால் மட்டும் புற்று நோய் வராது என்று எந்த புண்ணியாத்மா சொன்னது?

அணு உலை உலகில் எங்காவது என்னிக்காவது ஒருநாள் வெடிக்கும்!ஆனா எல்லாரும் எண்ணெய தினசரி எரிக்கிறோம்!முன்னது சடர்ன்!பின்னது ஸ்லோடெத்!

இப்பவே இமயத்திலயும்,இரு துருவத்திலேயும் ஐஸ்கட்டியே இல்லையாம்! நாம எண்ணெயையும் கரியையும் எரிச்சு பூமிய சூடாக்குனா, 30 வருஷத்துல சங்குதான்!

காற்றாலை மின்சாரம் பருவக் காற்றடித்தால், அந்த மாதங்களில் மட்டுமே கிடைக்கும்! அதுவும் சராசரியாக ஒரே குறிப்பிட்ட அளவில் கிடைக்காது!ஒவ்வொரு நிமிடமும் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு வேறுபடும்! சூரியவழி மின்சாரம் தயாரிக்க அதிக இடம் தேவை! இடம் கொடுக்க அரசியல்வியாதிகளும், புரட்சியாளர்களும் விடுவார்களா?

தமிழகத்தில் 2008 முதல் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம், சுமார் 40 - 55 சதம் தடைபட்டுக் கொண்டிருக்கிறது! தொடர் உற்பத்தித் தொழில்கள் 2 சிப்ட் மட்டுமே இயங்கி வருகின்றன! ( பகலில் 2 மணி. நேர கட்டாய வெட்டு, மாலை 6 T 10, ஓடும் நேரங்களில் 20 சதம் குறைப்பு)

தொழிற்சாலைகளை மூடி விடுவோம்! குடும்பத்தை அரசாங்கம் பார்த்துக் கொள்ளும்! தனி மனித நுகர்வுக்குப் பின் மீதமிருக்கும் மின்சாரம் மட்டுமே தொழிற்சாலைகளுக்கு! அதுவும் சாராய ஆலைகளுக்கும்,சினிமா/ தொலைக் காட்சி தொழிற்நிலையங்களுக்கு முன்னுரிமை!

SURYAJEEVA said...

அருமையான கட்டுரை, கீழே பின்னூட்டம் எழுதியுள்ள ரம்மிக்கு, சூரிய ஒளியின் மூலமும் காற்றாலை மூலமும் மின்சாரம் தயாரிப்பதை கூறியிருக்கலாமே

suraavali said...

நன்பர் ரம்மி,suryajeeva அவர்களுக்கு நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகள்,சந்தேகங்களுக்கு ஒரிரு வரிகளில் பதில் தரமுடியாது,ஆகையால் விரைவில் ஒரு தனி இடுக்கையாகவே வெளியிடுகிறோம்.நன்றி,தொடர்ந்து விவாதிப்போம்.

source said...

freinds,
have a look over this
http://www.youtube.com/watch?v=7eJBWD1orNk&feature=player_embedded

source said...

related posted for more information
1. http://www.ndpfront.com/?p=24435
2. http://www.tamilpaper.net/?p=4108
3. http://www.tamilpaper.net/?p=4115
4. கூடங்குளம் அணு மின் நிலையம் — சில கேள்விகளும் , சில பதில்களும்.
http://icarusprakash.com/tamil/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/