இன்றளவும் நாட்டின் பெரும்பாண்மை மக்களுக்கு அதாவது 70 சதவீதம் மக்களுக்கு உயிர் வாழ்வதற்கான ஆதாரமாக இருப்பது விவசாயம்.நாட்டில் உள்ள 120 கோடி மக்களுக்கும் உணவளிப்பவர்கள் விவசாயிகள். நாட்டிலுள்ள எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த வெற்றியை தீர்மாணிப்பது விவசாயிகளின் வாக்குகள்தான். ஆனால் விவசாயிகளைப் பற்றி அரசியல் கட்சிகளும்,அதிகாரவர்க்கங்களும் கிள்ளுக்கிரையாகவே பார்த்துவருகின்றனர்.
5.ஊழல்:கயவாணி அண்ணா ஹசாரேவும், நக்சலைட்டுகளின் நேரடி நடவடிக்கையும்... !
நாட்டில் உள்ள அனைத்து ஓட்டுச்சீட்டு அரசியல் கட்சிகளும் அயோக்கியர்களின் கூடாரமே என்பதை மக்கள் அனைவருமே அறிவர்.தங்களால் அன்றாட வாழ்வுக்கே அல்லல்படும் தங்களால் இவர்களை எதிர்த்து போராட முடியாது என்றே பெரும்பான்மை மக்கள் எண்ணுகின்றனர்.இந்த இவர்களின் சிந்தனை இயல்பாக அவர்களின் வாழ்நிலைகளில் இருந்து வந்துவிடவில்லை.அதை அரசியல் கட்சிகளும்,ஆளும் வர்க்கங்கள் ,அதிகாரவர்க்கம் ஆகியோர் திட்டமிட்டே மக்களின் மனங்களில் பதியவைத்துள்ளனர்.
ஒட்டுச்சீட்டு அரசியல் கட்சிகள் மட்டுமல்ல,புரட்சிகர சவடால் அடித்தவர்களும், மக்களுக்கு துரோகம் இழைத்து ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவாக மாறுகிற போக்கு இந்திய புரட்சிகர வரலாற்றில் அடிக்கடி நிகழ்வதும், மக்களின் அவநம்பிக்கையை உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது,ஆனால் அதே நேரத்தில் உண்மையான புரட்சிகர ஜனநாயக சக்திகள் கிடைக்கும் போதேல்லாம் மக்கள் தமது இயல்பான போர்க்குணத்தை வெளிக்காட்டியே வருகின்றனர்.பெரும்பாலும் இந்த போராட்டங்கள் அதிகாரவர்க்கத்தின் அநீதிகளுக்கு எதிராகவே நடத்தப்படுகின்றன.இப்படிப்பட்ட போராட்டங்கள் அன்றாட பொருளாதார கோரிக்கைகளாகவே உள்ளன.
விவசாயத்தை ஆளும்வர்க்கங்கள் நன்கு திட்டமிட்டே சிதைத்து வருவதற்கு எதிரானதாக, பிரச்சனையை தீர்ப்பதற்கான நேரடியான கோரிக்கைகளையோ முழக்கங்களையோ புரட்சிகர ஜனநாயக சக்திகள் முன்வைப்பதில்லை.தமது வெவ்வேறு திட்டத்தின் ஊடாக விவசாயத்தையும்,விவசாய பிரச்சனைகளையும் தொட்டுவிட்டு செல்லுகின்றனர்.இவைகள் விவசாயிகள் அனுபவிக்கும் பிரச்சனைக்கான அடிப்படையைக் கவனத்தில் கொண்டதாக இருப்பதில்லை.ஆகவே விவசாயிகள் இவர்களை நேர்மையானவர்களாக மதித்தாலும் தமது பிரச்சனைகளை தீர்ப்பவர்களாக பார்ப்பதில்லை.இதற்கு மாறாக இப்படிப்பட்ட விவசாய அமைப்புகளில் உள்ளவர்களின் செயல்களைப் பார்த்து அனுதாபப்படவே செய்கின்றனர்.ஏனென்றால் இப்படிப்பட்டவர்கள் விவசாய அமைப்புகளில் இருந்தாலும், தாங்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு வைக்காத அதே நேரத்தில் தாங்களும் ஏனைய அரசியல் கட்சியினரைப் போன்று பொருளாதாரத்தில் முன்னேறாமல் நொடிந்து போவதால் மொத்தத்தில் இவர்களின் வாழ்க்கையை விழலுக்கு இறைத்த நீராக ஆக்கிக் கொள்வதால்தான், இவர்களைப் பார்த்து மக்கள் அனுதாபப்படுகின்றனர்.இந்த அனுதாபத்தைதான் இவர்களும் அப்பாவித்தனமாக மக்கள் வழங்கும அங்கீகாரமாக, ஆதரவாக பாமரத்தனமாக கருதிக்கொள்கின்றனர்.நாளடைவில் விவசாயிகள் தமது அமைப்பில் இணைய முன்வராததை ஏனென்று ஆய்வுக்கு உட்படுத்தாமல்,விவசாயிகளை விவரமற்றவர்களாகவும்,பிற்போக்குவாதிகளாகவும் கருதிக்கொண்டு, இவர்கள் எந்த ஒரு போராட்டத்திற்கும் வரமாட்டார்கள் என்ற இயங்கியலுக்கு புறம்பான முடிவுக்கு வருவதோடு தாமும் விரக்தி அடைந்துவிடுகின்றனர்.
இதன் மூலம் விவசாயிகளின் அன்றாட பிரச்சனைகளைக் கூட பேசுவதற்கோ,போராடுவதற்கோ ஆளில்லாமல் போகிறது.இது ஆளும் வர்க்கங்களுக்கு மிகுந்த தைரியத்தை தந்து, விவசாயிகளுக்கு எதிராக எந்தவிதமான சிரமங்களாயினும்,துரோகமாயினும் அதை தருவதற்கும், இழைப்பதற்கும் தயங்குவதே இல்லை!
இது நாள் வரை விவசாயிகளுக்கு உரமானியம் என்ற பெயரில் விவசாயிகளின் பெயரில், மக்களின் வரிப்பணத்தை உரக்கம்பெனி முதலாளிகளுக்கு அளித்த மத்திய அரசு,தற்போது அந்த மானியத்தை நிறுத்திவிட்டது.அதற்கு மாறாக உரத்திற்கான விலையை முதலாளிகளே உயர்த்திக்கொள்ளலாம் என முதலாளிகளின் கொள்ளைக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டது.அரசு, உரக்கம்பெனி முதலாளிகளுக்கு மானியம் தந்த போதே அவர்கள் செயற்கையாக உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கூடுதல் விலைக்கு விற்று கொள்ளையடித்தனர்.அப்படி கொள்ளை அடித்த நிறுவனங்களுக்கு இனி அதைப் பற்றி சொல்லித்தரவா வேண்டும்!
சென்றாண்டு சம்பா பருவத்தில் 50 கிலோ டி.ஏ.பி உரம் ரூபாய் 585-க்கு விற்பனை செய்யப்பட்டது நடப்பு சம்பா பருவத்தில் அதிலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் செயற்கையான உரத்தட்டுப்பாட்டை உருவாக்கி இந்த ஆண்டோ அதே டி.ஏ.பி உரம் ரூ 825-க்கு விற்கிறார்கள்.இதனால் நடப்பு சம்பா பருவத்திலேயே இந்த வகை உரத்தின் விலை ரூபாய் 1000 வரை உயர வாய்ப்புள்ளது.விலை உயர்வு மட்டுமல்ல உரத்தின் மணி மற்றும் தழைச்சத்தின் அளவு 18:46 என்ற அளவில் இருந்து 16:44 என்ற அளவாக குறைத்தும் இரட்டிப்பு வழிகளில் உரமுதலாளிகள் கொள்ளை அடிக்க ஆட்சியாளர்கள் துணை போகிறார்கள்.
உரத்தட்டுப்பாடு,மின்தடை,மழை,வெள்ளம்,பூச்சி,நோய்,டீசல் விலை உயர்வு என ஆயிரம் பிரச்சனைகளைச் சந்தித்து,சமாளித்து நெல்லை உற்பத்திச் செய்து விற்பனைக்குக் கொண்டு சென்றால்,ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வியாபாரிகள் தமக்கிடையே கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு போட்டியை தவிர்த்து விடுகின்றனர்.இதனால் தற்போதைய குறுவை சாகுபடியில் நெல் கிலோவுக்கு ரூபாய் 7 மட்டுமே விலை போகிறது,ஆனால் அரிசியோ கிலோவுக்கு ரூபாய் 30 விற்கிறது.ஒப்பீட்டு அளவில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை விட, கூடுதல் விலை கிடைக்கும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நடப்பு குறுவை பருவத்தில் பெரும்பாலானவை திறக்கப்படாதது,நெல் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
ஆனால்,அதே நேரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழில் தொடங்க வெளிநாட்டு,உள்நாட்டு முதலாளிகளை மத்திய,மாநில அரசுகள் உருவுகின்றன,சலுகைகளை வாரி இறைக்கின்றன.
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கினால் 5 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு,தனியாக சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைத்தால் 10 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு,இலவசமாக தண்ணீர்,மின்சாரம் அனைத்தையும் அள்ளித்தருகின்றனர்.சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அனுமதி பெற்ற 37 நிறுவனங்கள் அவற்றை இன்னும் அமைக்காததால்,அவர்கள் அவற்றை அமைக்க கால அவகாசத்தை நீட்டித்து வாலாட்டுகின்றனர் ஆட்சியாளர்கள்.இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில் 5-10 ஆண்டுகள் சலுகை என்று அறிவித்தாலும்,இந்த சலுகை காலம் முடிந்தவுடன் தமது நிறுவனங்களின் பெயர்களை மாற்றிக்கொண்டு வேறு புதிய பெயர்களில் தொடர்ந்து இலவச சலுகைகளை அனுபவிக்கின்றனர்.இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழில் தொடங்கும் உள்நாட்டு,வெளிநாட்டு முதலாளிகள் அரசின் சலுகைகளை பெறுவதற்காகவே தொழில் தொடங்கி கொள்ளை அடிக்கின்றனர்.தனியே சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க அரசிடம் அனுமதி பெற்ற பல நிறுவனங்கள் அரசின் மூலம் தமக்கு கிடைத்த நிலங்களை ரியல் எஸ்டேட்டாக மாற்றி விற்றுவிடுவதும் நடந்தே வருகிறது.
இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களின் மூலம் நாட்டிற்கு எந்தவிதமான லாபமும் இல்லை.இந்த மண்டலங்களில் இந்திய அரசின் சட்டங்கள் எதுவும் செல்லுபடியாகாது.இதனால் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அவர்களால் கொலையே செய்யப்பட்டாலும், நாம் நமது நாட்டின் சட்டப்படி கேட்க முடியாது! இதுதான் இந்தியா வல்லரசு ஆகும் லட்சணமாம்! நம்புங்கள்!
ஓட்டு சீட்டு அரசியல்வாதிகளோ,அதிகாரவர்க்க கும்பலோ சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உற்பத்திச் செய்யப்படும் பொருளையா அன்றாடம் தமது பசிக்கு தின்கிறார்கள்? அல்லது அம்முதலாளிகள் சாப்பிட்டுவிட்டு பேளும் பீயை தின்கிறார்களா? இவர்கள் அதையும் செய்ய தயங்க மாட்டார்கள் மானம் கெட்டவர்கள்!
ஆனால்,நாம் நமது வாழ்வை இந்த நாய்களுக்கு பலிகொடுக்க முடியாது!
ஆகவே, விவசாயத்தை பாதுகாப்போம்! விவசாயிகளை பாதுகாப்போம்!! நாட்டை பாதுகாப்போம்!!! வாரீர்!
தொடர்புடைய பதிவுகள்:

3 comments:
ஒரு விவசாயி உண்ணும் உணவு கஞ்சியும் கூழும், நிலத்தில் அவன் இடும் மூலதனாமான உழைப்புக்கு சம்பளம் நிர்ணயிக்கப் படுவதில்லை... அவன் போடும் மூலதனமான பணத்தை மட்டும் கணக்கிட்டு விவசாயிகள் தங்கம் வாங்க கடைக்கு வரும் பொழுது எதோ அனைத்து விவசாயிகளும் சந்தோஷமாக பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்ற மாயை நடுத்தர வர்க்கத்தினரிடம் இருக்கிறது... அது மாறும் வரை, விவசாயிகள் விழிப்படையும் வரை, தங்கள் உரிமைகளுக்காக போராடாத வரை வெற்றி விலகி சென்று கொண்டே இருக்கும்...
சூறாவளி தோழர்களே
இந்த அரசு விவசாயத்தை புறக்கணிக்கிறது; விவசாயிகளுக்கு எதிரானதாக உள்ளது என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள். அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். நிலப்பிரபுவின் தொழிலே விவசாயம்தான். அதைத்தாண்டி அவன் வேறு துறையில் முதலீடு செய்கிறான் என்றால் அவன் நிலப்பிரபுவாகவே இருக்க முடியாது. அப்படியிருக்க, நிலப்பிரபுவின் விவசாயத்திற்கே இந்த அரசு முன்னுரிமை வழங்கவில்லை என்பதைப் பார்க்கும் போது நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கு இந்த அரசில் என்ன பங்கு உள்ளது? நிலப்பிரபுத்துவ வர்க்கமும் ஓர் ஆளும் வர்க்கமாக இருந்தால் இந்த அரசின் அணுகுமுறை ஏன் அதன் வாழ்வாதாரமான விவசாயத்தையே புறக்கணிப்பதாக உள்ளது? அது ஆளும் வர்க்கமாக இல்லை ஆளப்படும் வர்க்கமாகவே இருக்கிறது என்றாலோ அல்லது நிலப்பிரபுத்துவ வர்க்கமே இந்தியாவில் இல்லை என்றாலோ "இந்தியாவின் அடிப்படை முரண்பாடு நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலானது" என்ற மா.லெ அரசியல் சித்தாந்தத்தின் வரையறுப்பு இன்றும் செல்லுபடியாகக் கூடியதுதானா? கிராமப்புரத்தில் வர்க்கப் போராட்டம் எந்தெந்த வர்க்கங்களுக்கிடையில் நடைபெறுகிறது அல்லது நடத்தப்பட வேண்டும்?
//கிராமப்புரத்தில் வர்க்கப் போராட்டம் எந்தெந்த வர்க்கங்களுக்கிடையில் நடைபெறுகிறது அல்லது நடத்தப்பட வேண்டும்//
இந்த கேள்விகளுக்குள் போகாமல் சூறாவளி தோழர்கள் வேறு எதேதோ பேசுவது ஏன்
Post a Comment