டிசம்பர்-30 அன்று வீசிய தானேப் புயலில் புதுவை,கடலூர் மாவட்டங்கள் முற்றாக நிலைகுலைந்து போனது.இம்மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கே சில மாதங்கள் ஆகும்.விவசாயம் முற்றாக அழிந்துவிட்டது.தமிழகத்திற்கு முந்திரியின் கோட்டையாக விளங்கியதே கடலூர் மாவட்டம்தான்.இங்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் முந்திரி மரங்கள் நாசமாகிவிட்டது.மீண்டும் இவற்றை உற்பத்தி செய்ய பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டும்.
மொத்தத்தில் புதுவை,கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் இதுவரை வரலாற்றில் கேள்விபடாத ஒன்றாகும்.இந்தனைக்கும் தானே புயல் வானிலை ஆய்வு மையத்தால் நன்கு கணிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தமிழக அரசு நிர்வாகம் முழு கவணத்துடன் பின்பற்றியிருந்தால், இப்போது ஏற்பட்ட உயிரிழப்புகளை பெருமளவு தவிர்த்திருக்க முடியும்.
ஆனால் அரசு நிர்வாகமோ வழக்கம் போல ’எருமை மாட்டின் மீது மழை பொழிந்தது போல’ நடந்து கொண்டது.குறிப்பாக மணிக்கு 120 கிலோ மீட்டருக்கு அதிகமாக சூறைக்காற்று வீசும் என்பது முன்பே தெரிந்த செய்தியாகும்.இதன் காரணமாக மின்கம்பங்கள்,மின்சாதணங்கள் ஆகியவை முற்றாக அழிக்கப்பட்டுவிடும் என்பதும் அறியாதது அல்ல.இப்படி ஏற்படும் போது அதை சரி செய்வதற்கான சாதனங்கள்,ஊழியர்களை முன்னமே ஏற்பாடு செய்திருந்தால் மிக விரைவாக மின் வினியோகத்தை சீரமைத்திருக்க முடியும்.
நாட்டின் வருவாயில் பெருமளவு தின்று கொழுத்து சோம்பிக்கிடக்கும் ராணுவத்தை இப்பணிகளில் ஈடுபடுத்தியிருக்க வேண்டும்.ஆனால்,அது பற்றிய பேச்சே எழவில்லை.புயல் கடந்து பல நாட்களுக்கு பிறகும் குடிநீர் கொண்டு செல்ல போதுமான டேங்கர் லாரிகள் இல்லாமல் குடிநீர் விநியோகம் சீரடையவில்லை.
இவ்வளவு கோரமான நிகழ்விலும் ஆதாயமடையத்துடிக்கும் சமூக விரோதக் கும்பல்கள் தமது கைவரிசையை காட்டித்தான் வருகின்றனர்.
குறிப்பாக அரசு நிர்வாகத்தில் லஞ்சம்,ஊழல் முறைகேடுகள் இதிலும் தலை விரித்தாடுகிறது.புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர்,உணவு ஆகியவற்றிலும் இவர்கள் தமது கைவரிசையை காட்டி வருகின்றனர்.
மக்கள் இவ்வளவு கோரமான பேரழிவில் தவித்துக் கொண்டிருக்கும் போது ஜன-1-ம் தேதி நள்ளிரவில் புகம்பம் ஏற்பட்டுவிட்டதாகவும்,ஏற்படபோவதாகவும் இம்மாவட்டங்களில் ஒரே நேரத்தில் வதந்தி பரப்பப்பட்டது.இதையும் நம்பி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி நடுத்தெருவில் விடிய,விடிய உட்கார்ந்திருந்த அவலமும் நடந்தது.
இப்படிபட்ட வதந்திகள் தொலைத்தொடர்பு அதிகமாக வளராத காலங்களில் அதிலும் ஒன்றிரண்டு ஊர்களுக்கு மேல் பரவுவதில்லை.ஆனால் வீட்டுக்கு வீடு செல்போன் வந்துவிட்ட இப்போது ஒரு சில வினாடிகளில் இந்த வதந்திகள் ஒரே நேரத்தில் நாடுமுழுக்க பரப்பப்படுகிறது.
அதிலும் படித்தவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் மிகுநிலை பெற்றுள்ள இந்தக்காலத்தில், இப்படிபட்ட வதந்திகள் எவ்வித இடையூறும் இன்றி நடக்கிறது! இதிலிருந்து இவர்களின் படிப்புக்கும், அறிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையே வெளிச்சமிட்டு காட்டுகிறது.அதிலும் விஞ்ஞானத்திற்கு புறம்பான இப்படிபட்ட வதந்திகளை பரப்புவதை படித்த கும்பல்தான் மேற்கொள்கிறது.
பூகம்பத்தை முன்கூட்டியே கணித்துவிடும் அளவுக்கு இன்னமும் விஞ்ஞானம் வளரவில்லை.பூகம்பம் எப்போது ஏற்படும் என்பது எவராலும் முன்கூட்டியே கணிக்க முடியாத இயற்கை நிகழ்வாகும்.இதனால் பூகம்பத்தின் அழிவில் இருந்து மனிதர்கள் தற்காப்பு ஏற்பாடுகளை மட்டுமே செய்து கொள்ள முடியும்.பூகம்பம் ஏற்பட்டாலும் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் அல்லது குறைத்து கொள்ளும் வகையில் வீடுகளை அமைத்துக் கொள்ள முடியும்.
சென்ற ஆண்டு விஞ்ஞானத்தில் மிக முன்னேறிய நாடான ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் அந்த நாட்டில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது.புகுஷிமா அணு உலை தகர்க்கப்பட்டு அதனால் ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவு உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்தது.அணு உலைகள் பற்றிய புதிய கண்ணோட்டத்தையே உலக நாடுகளிலும்,மக்களிடமும் ஏற்படுத்தியுள்ளது.
புகம்பத்தை முன்கூட்டியே கணிக்க முடியவில்லை என்றாலும்,பூகம்பத்திற்கு பிறகு உருவாகும் சுனாமி என்கிற ஆழிப்பேரலையின் அழிவிலிருந்து மக்கள் தப்பித்துக்கொள்ள முடியும்.மக்களை எச்சரிக்கை செய்ய முடியும்.
ஆனால் சுனாமி வரப்போகிறது என்றத்தகவல் கிடைத்த பின்னரும் கூட அச்செய்தியை மக்களிடம் கொண்டு செல்லாமல் சோம்பிக்கிடந்த அதிகார வர்க்கத்தின் திமிர்த்தனத்தால் லட்சக்கணக்கான மக்களை நாம் பலிகொடுத்தோம்.
பூகம்பம் வரப்போவதாக வதந்திப்பரப்பும்,கும்பல் சுனாமி வரப்போவதை ஏன் முன்கூட்டியே கூறவில்லை? என்று மக்கள் யோசிப்பதில்லை.அந்த அளவிற்கு மக்கள் மூடத்தனத்தில் மூழ்கிக்கிடக்கிறார்கள்.படிப்பு என்பது வெறுமனே வேலைவாய்ப்புக்கானது மட்டுமே! அதில் உள்ள விஞ்ஞானபூர்வமான தகவல்கள் வெறும் செய்தி மட்டுமே.
இப்படிபட்ட வதந்திகளை சமூக விரோதக்கும்பல்கள் பரப்ப முடிகிறது என்றால் அதை ஏற்கும் அடித்தளம் சமூகத்திலேயே உள்ளது.இந்த அடித்தளத்தை பாதுகாப்பதில்தான் தமது வாழ்வும் அடங்கியிருப்பதால் ஆளும்வர்க்க கும்பலும் இதற்கு ஆதரவாகவே உள்ளது.
இந்த வதந்திகள் பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை.தமிழகத்தின் ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு வதந்தி இப்படிப்பரப்பப்பட்டு வருகிறது.இந்த வதந்திகளை பரப்புவதற்கு ஒவ்வொரு ஊரிலும் ஆட்கள் இருக்கிறார்கள்.இவர்களை ஒருங்கிணைக்கும் மையமும் மாநில அளவில் செயல்படுகிறது.இந்த வதந்திகளை பரப்புவோர் 99% பாலியல் ரீதியாக சீரழிந்தவர்களாகவும்,சாராயம் விற்பது,அதிகார வர்க்கத்திற்கு இடைத்தரகு வேலை செய்வது ஆகிய சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறவர்கள்தான்.
மக்களை மூடத்தனத்தில் ஆழ்த்துவதற்கு என்றே அந்த காலத்தில் அர்த்தசாஸ்த்திரம் என்ற நூலையே எழுதிவைத்துள்ளான்.ஒற்றர்கள் மூலம் பேய்,பிசாசுகள் போன்ற தோற்றத்தை உருவாக்கி மக்களை பயபீதி ஊட்டுவதும் அதில் ஒன்றாகும்!
இப்போது இதை நவீன வடிவில் ஆளும் கும்பலின் ஆசியோடு, இந்த சமூக விரோத கும்பல் வெளிப்படையாக செய்கிறது.சில வாரங்களுக்கு முன்பு ஆண்களுக்கு ஆகாது, வாசலில் விளக்கேற்றி வையுங்கள் என்றச்செய்தி தமிழகம் முழுவதும் பரப்பப்பட்டது.இப்படிபட்ட செய்தியை மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி என்னும் நிறுவனம் நடத்தும் கும்பல் பரப்பி வருகிறது.
இந்த சமூக விரோதக் கும்பலின் கிளைகள் அரசியல் கட்சிகள் போன்று ஒவ்வொரு ஊரிலும் உள்ளது.இந்தக் கிளைகளோடு பங்காரு தலைமையிலான கும்பல் மட்டுமல்ல RSS பார்ப்பன கும்பலும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு வதந்திகளை பரப்பி வருகிறது.
எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் ஆண்களுக்கு ஆகாது,பெண்களுக்கு ஆகாது,மாடுகளுக்கு ஆகாது என்று பரப்பப்படும் வதந்திகளையே நம்பி மக்கள் தமது வாசல்களில் விளக்கேற்றி வைக்கும் செயல்கள் மிகச் சாதாரணமாக நடைபெறுகிறது.
மக்களிடையே நிலவும் அறியாமையை சமூக விரோத கும்பல்களுக்கு சிறந்த மூலதனமாக விளங்குகிறது! இனி நாம் என்ன செய்யப்போகிறோம்!


0 comments:
Post a Comment