* 1921-ல் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தியதற்காக, தந்தை பெரியாருக்கு 1 மாதம் சிறை தண்டனை வழங்கியது அன்றைய ஆங்கிலேய அரசு.இதன் மூலம் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியும் என்ற ஆட்சியாளர்களின் கனவு பலிக்கவில்லை.இதற்கு மாறாக கள்ளுக்கடை மறியல் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது.போராட்டத்தை அடக்கமுடியாமல் ஆங்கில ஆட்சியாளர்கள் திணறினார்கள்.போராட்டம் நடத்த தடை விதித்தார்கள்.
தந்தை பெரியாரின் தங்கை கண்ணம்மாள்,துணைவியார் நாகம்மை ஆகியோர் தலைமையில் பெண்கள் பெரும் கூட்டம்,கூட்டமாக வீதியில் இறங்கி போராடினார்கள்.சிறைகள் நிரம்பி வழிந்தன.இதனால் கள்ளுக்கடை மறியல் நடத்த தாம் விதித்த தடையை திரும்ப பெற்றனர் ஆட்சியாளர்கள்.
கள்ளுக்கடை மறியல் போராட்டத்தின் உச்சகட்டமாக தந்தை பெரியார் தனது தோட்டத்தில் இருந்த 1000 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.
·
* மேற்குலக நாடுகளில் குடிப்பது என்பது தட்ப வெப்பம்,பண்பாடு,உணவு பழக்கம் காரணமாக ஒரு சமூக பண்பாக உள்ளது.அங்கேயும் குடிக்கு அடிமையான குடிகாரர்கள் இருக்கிறார்கள்.என்றாலும் அவர்கள் சிறு எண்ணிக்கையில்தான் உள்ளனர்.இங்கோ குடிப்பது சமூக பண்பாக இல்லாத நிலையிலும் குடிகாரர்களே அதிகம் உள்ளனர்.
ஆல்கஹாலின் அளவு அல்லது காரம் குறைந்த கள் போன்றவையே நமது மரபில் இருந்தது.இன்று அதிகம் காரம் நிறைந்த வெளிநாட்டு மது வகைகளை நமது மக்கள் குடித்து பழகிவிட்டனர்.
எனவே குடிப்பதை ஒரு ஒழுக்க பிரச்சனையாக பார்க்காமல்,சமூக பொருளாதாரத்தில் வைத்து பார்ப்பதே சரியாக இருக்கும்.குளிர் பிரதேசங்கள்,கடுமுழைப்பில் ஈடுபடுவோர் போன்ற காரணங்களுக்காக குடிப்பது தவறில்லை.அதேபோல என்றாவது ஒரு நாள் குடிப்பதும் பிரச்சனையில்லை.ஆனால் இங்கும்கூட காரம் குறைந்த மது வகைகளையே குடிப்பதே நமது நாட்டிற்கு பொருத்தமாக இருக்கும்”.
மது குடிப்பதைப் பற்றிய ஒரு வரலாற்று நிகழ்வையும்,அண்மையில் தமிழகத்தில் உள்ள ஒரு ’புரட்சிகர’அமைப்பு வெளியிட்டுள்ள நிலைப்பாட்டையும் மேலே தந்துள்ளோம்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள மேற்கண்ட நிலைப்பாட்டை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது தந்தை பெரியாரின் காலத்தில் மக்கள் குடித்ததற்கான சமூக,பொருளாதார காரணிகளை, மக்களின் தேவை,விருப்பத்தை மொத்தத்தில் மக்களின் ஜனநாயக உரிமையை மதியாத தந்தை பெரியாரின் சர்வாதிகார மனப்பாங்கையும்,மூடத்தனத்தையுமே வெளிப்படுத்துவதாக உள்ளது!
தந்தை பெரியாரின் போராட்டமும், மது குடிப்பது பற்றிய ஒரு அமைப்பின் நிலைப்பாடும் பெரும்பான்மை மக்களின் நல்வாழ்வோடு தொடர்புடைய விடயங்களாகும்.
எனவே,மக்களின் மீதும்,சமூகத்தின் மீதும் அக்கறையுள்ள அனைவரும் மேற்கண்ட விடயங்கள் பற்றி ஒரு தெளிவான முடிவிற்கு வரவேண்டிய அவசியத்தை உருவாக்கி இருக்கிறது.ஆகவே,மேற்கண்ட விடயம் பற்றி சமூக அக்கறையுள்ள அனைவரும் தமது கருத்துகளை எமக்கு அனுப்பிவைக்குமாறும்,விவாதத்தில் ஆக்கபூர்வமாக பங்கேற்குமாறும் அன்புடன் அழைக்கிறோம்.தொடரும்.............

1 comments:
பெரியாரின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் காங்கிரஸில் இருந்தபொழுது நடந்ததே கள்ளுக்கடை போராட்டம். பெரியார் மது குறித்த தனது எண்ணங்களை பின்னாட்களில் மாற்றி கொண்டார், 1971 தமிழ்நாட்டில் மதுவிலக்கு தற்காலிகமாக விளக்கிகொள்ளப்பட்டதை ஆதரித்து அவர் விடுதலையில் தலையங்கமே எழுதியுள்ளார். தகவல் ஆதாரம் http://www.keetru.com/thamizhar/oct08/chinnakuthusi.php
குடிப்பது ஒழுக்கம் சார்ந்த ஒரு விசயமல்ல என்பது சரியானதே! குடி என்பது மக்களை சுரண்டும் ஒரு கருவியாக அரசினால் தற்போது உபயோகப்படுத்தபடுகிறது, எனவே இந்த அடிப்படையிலேயெ இதை எதிர்ப்பது சரியானதாக இருக்கும். நீங்கள் சொல்லும் புரட்சிகர அமைப்பின் கருத்துக்களில் எனக்கு முரண்பாடு இல்லை. நீங்கள் முரண்படுவதானால் எதனால் முரண்படுகிறீர்கள் என விளக்கவும்.
Post a Comment