ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மூன்று தமிழர்களுக்கு இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கின்ற மரண தண்டனை,இன அடிப்படையில் ஆனது என்றால்,மத்தியில் அஃப்சல் குருவிக்கு வழங்கப்பட்டு இருக்கிற மரண தண்டனை மத அடிப்படையில் ஆனது.இன்றைக்கு இருக்கும் சட்டங்கள் எல்லாம் செல்வந்தர்களுக்கு சாதகமானதாகவே இருக்கின்றன.பணம் படைத்தவனுக்குதான் நீதி; கை ஏந்துபவனோ நிர்க்கதியில் தான்.சமூகத்தில் கீழ்த்தட்டில் இருப்பவனைக் காக்க வேண்டிய சட்டமே.அவனை அழித்து,ஒழிக்கும் முயற்சியில் இறங்குகிறது.
இன்றைக்கு மரண தண்டனைக் கைதிகளைப் பாருங்கள்….. அவர்கள் நசுக்கப்பட்ட இனத்தை சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.மாறாக,ஒரு பணக்காரரை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?அல்லது இதுவரை எந்த ஒரு பணக்காரராவது தூக்குமேடை ஏறி இருப்பாரா?
நமது சட்டங்கள் ஒரு வகையில் பண்ணையார் தத்துவத்தையே நியாயப்படுத்துகின்றன.ஒரு சிவில் வழக்கில் தனிநபர் ஒருவர் இன்னொரு தனி நபருடன் வாதாடலாம்.ஆனால் கிரிமினல் வழக்குகளிலோ தனிநபர் ஒருவருக்கு எதிராக,அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதாடுவார்.அதாவது,ஒவ்வொரு குற்ற வழக்கும் போலீசால் பதிவு செய்யப்பட்டு,அரசு தனக்கு எதிரானவரை எதிர்க்க வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கிறது.வழக்கில் ஒவ்வொரு நகர்வையும் போலீசுதான் தீர்மானிக்கிறார்கள்.வாக்குமூலம் பெறுவதிலேயே எவ்வளவு வன்முறைகளைப் பிரயோகிக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததுதானே?
’அரிதிலும்,அரிதான’ குற்றங்களில் தான் மரண தண்டனை வழங்கப்படுகிறது என்கிறார்கள்.போலீசாரால் என்கவுன்ட்டர் என்ற பெயரில் பலர் சாகடிக்கப்படிகிறார்களே…..அதுவும் கூட ’அரிதிலும் அரிதானது’ தானே? ஆக சட்டத்துக்கு புறம்பாக போலீசார் கொலை செய்தால்,அது என்கவுன்ட்டர்கள்.அதையே நியாயப்படி செய்ய வேண்டும் என்றால்,அதற்குப்பெயர் மரண தண்டனை.இது தான் உங்கள் நீதி?
பண்டைய கிரேக்க,எகிப்திய நாடுகளில் இருந்த அடிமைகள் அந்த நாட்டின் குடிமகன்களாக அங்கிகரிக்கப்படவில்லை.அவர்களின் உரிமையாளர்கள் மட்டுமே குடிகளாக அங்கிகரிக்கப்பட்டார்கள்.உரிமையாளர்களுக்கு மட்டுமேதான் சட்டம்,நீதி,நியாயம்,தீர்ப்பு எல்லாம்…………………அடிமைகளுக்கு எப்போதும் மரணம் ஒன்றுதான்.தண்டனையாகவும்,தீர்ப்பாகவும்,நியாயமாகவும்,நீதியாகவும் அவர்களுக்கே இருந்து வந்ததிருக்கிறது.இன்றைக்கு நிராகரிக்கப்பட்டு இருக்கிற கருனை மனுக்களைக் குறித்து நாம் எண்ணிப்பார்க்கையில்,ஒருவகையில் நாம் எல்லோரும் இந்த நாட்டில் அடிமைகள் தானோ?
சாமன்யன் செய்த குற்றம் ஒன்றுக்கு மரண தண்டனை வழங்குவதன் மூலம் சட்டம் இன்னொறு குற்றம் செய்வது எப்போதும் சமமாகாது;நீதியும் ஆகாது


2 comments:
/*எண்ணிப்பார்க்கையில்,ஒருவகையில் நாம் எல்லோரும் இந்த நாட்டில் அடிமைகள் தானோ?*/
ஒருவகையில் அல்ல பலவகையில் நம் இனமும், நம் மொழியும் இந்திய நாட்டில் அடிமையாய்தான் உள்ளோம்
என்ன பொருத்தவரை இந்தியா என்னும் கூட்டாட்ச்சியில் இருக்கும்வரை தமிழை வளர்ப்பது என்பது மிக கடினமான ஒன்று
தமிழக அரசால் தனிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்க இயலாது.
இந்தியா தமிழனின் தாய் நாடாம் ஆனால் இந்தியாவின் முதன்மை மொழியோ இந்தி, ஆங்கிலம்.
எடுத்து காட்டாக சில
இந்தியாவின் பாராளுமான்றத்தில் இந்தியும், ஆங்கிலம் மட்டுமே
நடுவன அரசின் அத்தனை தேர்வுகளும் இந்தி, ஆங்கிலத்தில்தான் நடத்தபடுகின்றன,
தமிழில் நடத்த போராட்டம் நடத்த வேண்டியுள்ளது, போராடினால் நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என சில கூட்டங்கள் திரித்து பேசுகின்றன
எந்த ஒரு விசயமானாலும் இந்தியை அனைத்து பொது இடங்களிலும் மலிவாக்கி
இந்தியை தேவையுள்ள மொழிபோலவும் தமிழை படித்தால் ஒரு பயனும் இல்லாததுபோல் மாற்ற முயற்சிக்கிறது இந்த ஈன இந்திய அரசு அதில் முடிந்த அளவிற்க்கு வெற்றியும் பெற்றுள்ளது.
Central government trying to make hindi as a soft corner among tamilnadu
and making them as a part of day-2-day life.
தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட
இந்திய அரசின் காலை பிடித்து தமிழகம் கெஞ்சிகொண்டிருக்கிறது
என்றால் நாம் என்ன விடுதலையை அடைந்துள்ளோம்.
தமிழை மட்டும் அல்ல தமிழினின் உயிரை காப்பாற்ற இந்தியாவின் காலை நக்க வேண்டிய அவல நிலை.
இலங்கை கடற்படை தமிழனை நாயை சுடுகிற மாதிரி சுட்டு கொன்று குவிக்கிறான் இந்தியா இதன் நிமத்தமாக இலங்கைக்கு ஒரு கண்டன குரலோ, இல்ல ஒரு பதிலடியோ கொடுத்ததில்லை இது தமிழனின் சொந்த நாடா இருக்கவே முடியாது
தமிழனின் வரிபணத்தை பறித்து கொண்டு தமிழனை அடிமைகளாக வைத்திருக்கிறது.
இந்தியை தமிழகத்தின்மேல் வலுகட்டாயமாக திணித்து அதை எதிர்த்து போராடிய மாணவர்களை நசுக்கியது,
விளைவு நூற்றுகண்கான தமிழர்கள் உயிர்கள் பலியாயின, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தார்கள். இது வெள்ளையினின் ஆட்சியைவிட எவ்வளவு கொடுங்கோல் ஆட்சி இது.
இதை நாம் பாடமாக படிக்க முடியுமா முடியாது ஏன் என்று விடை உங்களுக்கே தெரியும்!!
ஆக மொத்தம் இந்தியா என்ற அரசியல் அமைப்புக்கு தமிழகத்தின் வளங்களும், தமிழனினெ வரிபணம் வேண்டும் தமிழ் மொழியை பற்றியோ, தமிழினின் உயிரை பற்றியோ எந்த ஒரு கவலையும் கிடையாது.
இலங்கைகாரன் அடித்து கொன்றாலும், கர்நாட்டகாரன் அடித்தாலும், தண்ணிர் தர மறுத்தாலும்,
மலையாளத்தான் தண்ணிர் தராவிட்டாலும்,
இலங்கை இராணுவத்துக்கு இந்தியா பயிற்ச்சி, போர் கருவிகள், தளவாடங்கள் என எதுவேண்டுமானாலும் கொடுக்கலாம்.
இப்படி எல்லாத்தையும் பொத்திகொண்டு இந்தியா விளையாடும் கிரிக்கெட்டுக்கு(அதில் ஒரு தமிழனாவது விளையாட மாட்டானா என்ற ஏக்கம் ஒருபுறம்) கைதட்டிகொண்டு இருக்கவேண்டும்
இவன்,
புகல் - pugal.na@gmail.com
தமிழ்நாடு இந்தியா என்னும் கூட்டாட்சியில் இருக்கும்வரை,
தமிழனுக்கு உரிய பாதுகாப்பும், உரிமைகளும் கிடைக்கபோவதில்லை.
இந்தியா என்னும் துரோகியை தமிழன் என்று இனம் காண்கிறானோ அன்றுதான் அவனுக்கு விடிவுகாலம்.
நாம் பல வகையில் இந்திய தேசியத்தால் ஏமாற்ற பட்டாலும்
மறந்து மீண்டும் அடுத்த எமாற்றத்துக்கு ஆயத்தமாகிறோம்.
இந்தியா என்னும் அடிமை மோகத்தில் இருந்து விடுபடு தமிழா
இந்தியா தமிழனின் துரோகி
இவன்,
புகல் - pugal.na@gmail.com
Post a Comment