ம.க.இ.க வின் ஒரு பிரிவான மனித உரிமை பாதுகாப்பு மையம் கடந்த 8.6.2012 அன்று போலீசின் மனித உரிமை மீறலைக் கண்டித்து கடலூர்
மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள கருவேப்பிலங்குறிச்சி என்ற ஊரில் கண்டன
ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த அமைப்பின் மாநில
ஒருங்கிணைப்பாளர் சிறப்புறையாற்றினார்.
4.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2
அப்போது அவர், ”சில
தினங்களுக்கு முன் மாவு அரைக்க வந்த
நான்கு இளைஞர்களை கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய போலீசார் இருவர் காட்டுமிராண்டித்தனமாக
தாக்கி காயப்படுத்திள்ளனர். இப்படித் தாக்குதல் நடத்திய இரு போலீசார் மீதும்
வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி நடவடிக்கை
எடுக்காவிட்டால் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையம் தேவையில்லை எனக் கூறி
18.6.2012 அன்று அந்த காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடுவோம்”, என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின்
பலத்த ஆரவாரத்திற்கிடையே அறிவித்தார்.
இவருக்கு முன்பாக அந்த அமைப்பினரும், பொது மக்கள் பிரதிநிதிகள்
சிலரும் போலீசின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து ஆவேசமாக பேசினர். இவர்கள்
அனைவரின் பேச்சும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோராலும் கூடி நின்ற பொது
மக்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பலரின் மீது
போலீசு வழக்குப்பதிவு செய்தது. அதிலும் குறிப்பாக ஆர்ப்பாட்டத்தில் போலீசை மிகவும்
கடுமையாக தாக்கிப் பேசிய ராசேந்திரன் என்பவரை அன்று இரவே போலீசு கைது செய்துள்ளது.
மறுநாள் 9.6.2012 அன்று போலீசு அவரை நீதிமன்றத்தில் நிறுத்தியபோது அவருக்கு ஆதரவாக
பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வாதாடி உடனடியாக அவரை விடுவித்துள்ளனர். அவர்
நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தவுடன், உடனடியாக அவரை ஊருக்கு அழைத்துச்
சென்று தமது மகிழ்ச்சியையும், இந்த
கைதினால் மக்களிடையே உருவான அச்சத்தை
போக்கும் வகையிலும் வெடிவெடித்து கொண்டாடியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சூறாவளி சார்பில் மக்களிடையே தகவல் திரட்டினோம்.
சம்பவம் நடந்த இரவு பத்து மணியளவில் அவ்வூரில் உள்ள ஒரு கடைக்கு சம்மந்தப்பட்ட
நான்கு இளைஞர்களும் சென்று கடைக்காரரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம்
முற்றிய நிலையில் கடைக்காரரை நான்கு இளைஞர்களும் தாக்கியுள்ளனர். இதை பார்த்த
கடைக்காராரின் உறவுக்கார இளைஞர்கள் இருவர் கடைக்காரருக்கு ஆதரவாக அவர்களிடம்
வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறிது நேரத்தில் இந்த நான்கு இளைஞர்களோடு
மேலும் பல பேர் சேர்ந்துகொண்டு கடைக்காராரிடம் சண்டையிட்டுள்ளனர்.
மேற்கண்ட சம்பவங்கள்
அனைத்தும் போலீசு நிலையத்திற்கும் மிக அருகில்தான் நடந்துள்ளது. சண்டை மேலும்
மேலும் அதிகமானதால், அப்போது போலீசு நிலையத்தில் இருந்த இரு போலீசார் அந்த
இடத்திற்கு வந்துள்ளனர்.அவர்கள் வந்தவுடன் கடைக்காரர் தரப்பினர் அந்த இடத்தை
விட்டு சென்றுவிட்டனர். நான்கு இளைஞர்களுக்கு ஆதரவாக வந்தவர்களும் அங்கிருந்து
நழுவிவிட, எஞ்சிய நான்கு இளைஞர்கள்
மட்டும் போலீசுடன் வாக்குவாத்த்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றி
போலீசார் இளைஞர்களை தள்ள இளைஞர்களும் பதிலுக்கு தள்ள போலீசாரை தள்ளியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த இரு போலீசாரும் நான்கு இளைஞர்களையும் கடுமையாக
தாக்கியுள்ளனர்.
போலீசாரின் தாக்குதலில் காயம்பட்ட இளைஞர்கள் நால்வரும் ”இந்த ஊரில் இவ்வளவு படையாச்சிகள் இருந்து
என்ன புண்ணியம். பறப்பயலுவ போலீசை வச்சி எங்கள அடிச்சுட்டானுங்க”, என்று பகிரங்கமாகவும், ஆபாசமாகவும்
திட்டிக்கொண்டே சென்றுள்ளனர். பின்னர்
விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குச் சென்று உள் நோயாளியாக சிகிச்சைப்
பெற்றுள்ளனர்.
இப்படித் தாங்கள் போலீசாரால் தாக்கப் பட்ட செய்தியை தமது உறவினர்
ஒருவர் மூலம் மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இளைஞர்களை
தாக்கிய போலீசார் மீது, மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குறைஞர்களோடு சென்று
புகார் தந்துள்ளனர். போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளனர். இதனால் புகாரை பதிவுத்
தபாலில் அனுப்பியுள்ளனர்.
இதன் பின்னர் இச்சம்பவத்தைக் கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின்
ஆர்ப்பாட்டத்திற்கும் போலீசு அனுமதி மறுத்துள்ளது. இதனால் மாவட்ட காவல் துறை
கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் போலீசுக்கு
மட்டுமல்ல அவ்வூர் தாழ்த்தப்பட்ட மக்களிடமும் மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்கு
எதிராக கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அந்த நான்கு இளைஞர்களும்
ஆதிக்க சாதி வெறியோடு தாழ்த்தப்பட்டவர்களை
தாக்கியும், அவர்களை சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தி ஆபாசமாக திட்டியதையும்
மூடிமுறைத்துவிட்டு, அந்த இளைஞர்கள்
மாவரைக்க வந்ததாக, நடந்த சம்பவத்தை இட்டுக்கட்டி பேசியதும், அதோடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான அந்த
இளைஞர்களின் ஆதிக்க சாதி வெறி நடவடிக்கைகளை கண்டிக்காததும்தான் இந்த அமைப்பினர்
மீது தாழ்த்தப்பட்ட மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்திற்கான நியாயமான அடிப்படையாகும்.
இது குறித்து அந்த அமைப்பில் உள்ளவர்களிடையே நாங்கள் கேட்டபோது,
நாங்களும் ஆர்ப்பாட்டத்திற்கு பின்புதான் இதைப்பற்றி தெரிந்துகொண்டதாக கூறினர்.
அதோடு இதைப்பற்றி மாநில ஒருங்கிணைப்பாளரிடமும் அவர்கள் கொண்டு சென்றதாகவும்.
அதற்கு அவர் நமக்கு தகவல் சொன்னவர் நடந்த சம்பவத்தை சரியாக சொல்லவில்லை என்றாராம்.
தீர விசாரிக்காமல் ஆர்ப்பாட்டம் நடத்த எப்படி முடிவு செய்தீர்கள்? என்று
கேட்டதற்கு, நமது அமைப்பின் உறுப்பினரின்
உறவினர் என்பதால் அவர் சொல்லியதை நம்பி முடிவெடுத்துவிட்டதாக கூறினாராம்.
நடந்த சம்பவத்தைப் பற்றி முழுமையாக விசாரித்து தெரிந்து கொள்ளாமல் முடிவெடுத்த
மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் திருவாளர் ராஜீ அவர்களின் செயல்
அவர் கூறுவதைப் போன்று தவறுதலாக நடந்த
தவறல்ல. இதுதான் அவரின் இயல்பான சிந்தனா முறையாகும். திருவாளர் ராஜீ
அவர்களின் வன்னிய சாதி வெறிப்பற்றி சூறாவளியில் நாங்கள் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளோம். இவர் தனது
சிந்தனா முறைக்கான தார்மீக பலத்தை, செயலுக்கான ஆதரவை ம.க.இ.க
கும்பல்களிடமிருந்துதான் பெறுகிறார் என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை முழுமையாக விசாரிக்கவில்லை என்பதும்,அமைப்பு உறுப்பினரின்
உறவினர் சொன்னதால் நம்பியதாக கூறுவதும் இவரின், இவர் சார்ந்த அமைப்புகளின் ஆதிக்க
சாதி வெறியை மட்டுமல்ல, இவைகள் உழைக்கும் மக்களுக்கான அமைப்புகளோ, ஜனநாயக
அமைப்புகளோ இல்லை என்பதற்குமான ஒப்புதல் வாக்குமூலமும் ஆகும்.
ஏனென்றால், உண்மையிலேயே இவர்கள் உழைக்கும் மக்களுக்கான அமைப்பாகவோ
அல்லது குறைந்தது ஜனநாயக அமைப்புகளாகவோ இருந்திருந்தால், தமது தவறான
நடவடிக்கைகளால் தாழ்த்தப்பட்ட மக்களிடையே உருவாகியுள்ள தமக்கு எதிரான கருத்தை தமது
சுயவிமர்சனங்களின் மூலம் மாற்ற முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் இவர்களோ
அதைப்பற்றி சிந்திக்ககூட இல்லை. அப்படி சிந்திக்கவு இவர்களால் முடியாது.
தொடர்புடைய கட்டுரைகள்:
3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-1

0 comments:
Post a Comment