கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தனியார்
பள்ளி விடுதியில் 27.06.2012 அன்று இரவு 12-ம் வகுப்பு மாணவன்
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.இந்த தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம்
என்று குற்றம்சாட்டி மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்தவர்கள் பள்ளியில்
முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
(வினவு கட்டுரை:
4.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2
(வினவு கட்டுரை:
விருத்தாசலம்: தஷ்ணாமூர்த்தியைக் கொன்ற தனியார் பள்ளி!)
இவர்கள் நடத்திய முற்றுகை போராடட்த்தின்
விளைவாக அரசின் அனுமதி பெறாமல் பள்ளி நிர்வாகம் நடத்தி வந்த விடுதியை கல்வித்துறை
அதிகாரிகள் மூட உத்தரவிட்டுள்ளனர்.நிர்வாகிகள் மீது வழக்கும்பதிவும் செய்யதுள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட மாணவன்
தட்சணாமூர்த்தி விருத்தாசலம் நகரத்தின் முன்னால் நகரமன்றத்தலைவரும், பாமக வின் முக்கிய
பிரமுகருமான முருகன் என்பவரின் தம்பி மகன் ஆவார்.விருத்தாசலம் நகரத்தில் வீடு
இருந்தும் தன்னை பெற்றோர்கள் விடுதியில் சேர்த்ததால் மனமுடைந்தே மாணவன் தற்கொலை
செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.இதன் காரணமாக பள்ளி நிர்வாகத்திற்கு
எதிராகப் போராடுவதில் பெற்றோரும், உறவினர்களும் போதிய ஆர்வம் காட்டவில்லை.
ஆனாலும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தை
சேர்ந்தவர்கள் தம்மால் முடிந்த அளவிற்கு நிர்வாகத்திற்கு எதிராக போராடி உள்ளனர்.இப்போராட்ட்த்தின்
மூலம் தனியார் பள்ளிகள் தமது கொள்ளை லாபத்திற்காக அரசின் அனுமதி பெறாமலேயே
விடுதிகள் நடத்தி வருவதும்,இதற்கு கல்வித்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதிக்கும்
செயலும் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விருத்தாசலம் மாணவனின் தற்கொலைக்கு
எதிராக தீவிரமாக போராடிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர், அனைத்து மனித உரிமை
மீறல்களிலும் ஒரே மாதிரியாகத்தான் நடந்துகொள்கிறார்களா? என்றால் அதுதான்
இல்லை.அப்படியானல் இவர்களின் மனித உரிமைக்கான அளவுகோல் என்ன என்பதை இனி
பார்ப்போம்.
2010-ம் ஆண்டு பெண்ணாடம் என்ற ஊரில்
உள்ள அரசு மாணவர் விடுதியில் பட்டப் பகலில் 10-ம் வகுப்பு மாணவன் பாரத் விடுதி
காப்பாளர் மற்றும் சமையல்காரர்களால் படுகொலை செய்யப்பட்டான் ஆனால் இந்தக் கொலையை
தற்கொலை என போலிஸ் கதைக்கட்டியது.பெற்றோர் மற்றும் உறவினர்களின் கடுமையான
போராட்ட்த்திற்கு பிறகு சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விடுதி
காப்பாளரையும்,இரு சமையல்காரர்களையும் ஒப்புக்கு கைது செய்தது.
போலிசின் இந்த அநீதிக்கு எதிராகவும்,
கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் அன்று நாங்கள் விவிமு என்ற
அமைப்பில் இருந்த போது தொடர் போராட்டங்களை நடத்தினோம்.
(பெண்ணாடம் பள்ளி விடுதியில் அநீதியை தட்டிக்கேட்ட மாணவன் படுகொலை)
எமது போராட்டத்தில் எங்களோடு இணைந்து செயல்பட மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்கு பல முறை நாங்கள் கோரிக்கை வைத்தோம்.ஆனால் அவர்களோ எமது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.அதற்கு அவர்கள் கூறிய காரணம் கொலை செய்யப்பட்ட மாணவனும்,கொலை செய்தவர்களும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால்,அவர்கள் சமாதானமாக போய்விடுவார்கள்.அதனால் இதில் ஈடுபடுவதில் பயனேதுமில்லை என்றார்கள்.ஆனால் கொலை செய்யப்பட்ட மாணவன் பாரத்தின் பெற்றோர் இன்று வரை மகனின் கொலைக்கு எதிராக போராடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவரும்,கொலை
செய்தவர்களும் ஒரே சாதியாக இருந்தால்,அப்படிப்பட்ட நிகழ்வுகளில் மனித உரிமை
பாதுகாப்பு மையத்தினர் ஈடுபடமாட்டார்கள்.வெவ்வேறு சாதியினர் சம்பந்தப்பட்ட கொலையில்
மட்டுமே ஈடுபடுவார்கள் என்றால் இவர்களின் மனித உரிமைக்கான அளவுகோல் சாதிதான்.
சில தினங்களுக்கு முன் நாங்கள்
வெளியிட்ட கட்டுரையிலும் (
ஆதிக்கச் சாதி கண்ணோட்டம்: பிடிபட்டது வினவு-ம.க.இ.க கும்பல்
) இந்த அமைப்பு தலைமையின் வன்னிய ஆதிக்க சாதி வெறியை அம்பலப்படுத்தியிருந்தோம்.அதே சாதி வெறிக்கண்ணோட்டம்தான் விருத்தாசலம் மாணவன் தற்கொலையில்,தற்கொலை செய்து கொண்ட மாணவன் வன்னிய சாதியை சேர்ந்தவன் என்பதால் மாணவனின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக போராட முன் வராவிட்டாலும்,இவர்களை அதில் போராட உந்தித்தள்ளுகிறது.
ஆனால் பெண்ணாடம் பள்ளி மாணவன் கொலை
செய்யப்பட்டான் என்பதும் அவனின் பெற்றோர்கள் கொலையாளிகளுக்கு எதிராக முழு
ஈடுபாட்டுடன் போராடினார்கள்,போராடுகிறார்கள் என்பதும் தெரிந்திருந்தாலும் கூட கொலை
செய்யப்பட்ட மாணவன் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவன் என்பதால் நாங்கள் எவ்வளவுதான்
வற்புறுத்தியபோதும் மிகத்தெளிவாக இதில் ஈடுபட அவர்கள் மறுத்துவிட்டனர்.
நாட்டில் உள்ள பிழைப்புவாதக் கும்பல் ஒவ்வொன்றும்
ஏதாவது ஒரு முகமூடியை அணிந்து கொண்டு பிழைப்பு நட்த்துகின்றனர்.வினவு,மகஇக,HRPC கும்பலோ மார்க்சியம்-லெனினியம் என்ற முகமூடியை
அணிந்து கொண்டு பிழைப்பு நடத்துவதோடு, ஆளும் வர்க்க நலனை பாதுகாக்கும் அனைத்து
பிற்போக்குத் தனங்களையும் தனது செயல்களுக்கான அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.இப்படிபட்ட பிழைப்புவாதக்
கும்பல்களை உழைக்கும் மக்கள் அடையாளம் கண்டு,முறியடிக்க வேண்டியதே இன்றைய
அவசிய,அவசர தேவையாக உள்ளது.
தொடர்புடைய கட்டுரைகள்:
3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-1

0 comments:
Post a Comment