விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Tuesday, 20 September 2011

தவளை தன் வாயால் கெடும் ...!

எமது சென்ற காயடிக்கும் கட்சி என்ற கட்டுரைக்கும்,”சமச்சீர் கல்வி :முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனதுவினவும் அதன் தோழமை அமைப்புகளும் என்ற தொடர் விமர்சனக்கட்டுரைக்கும் பல்வேறு நண்பர்கள்,பதிவர்கள்,தோழர்கள் கருத்துகளையும்,விமர்சனங்களையும், கூறியிருந்தீர்கள். அதற்கு தற்போது விடையளிக்கின்றோம்.

1.ஹைதர் அலி.
”வினவுக்கு எதிராக எழுத வேண்டும் என்ற வரட்டுத்தனம் உங்கள் பதிவுகளில் தெரிகிறது”.என்று கூறி இருக்கிறீர்கள்,அது என்னவென்று குறிப்பாக எழுதுங்கள் விவாதிப்போம்!

2.வலிப்போக்கன்.
பாடுபட்டு கட்சியை வளர்த்தவர்களில் எங்களின் பங்களிப்பும் உள்ளதை ஏற்கனவே நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.பிரச்சனை அதுவல்ல.நந்தவனத்தில் ஒர் ஆண்டி,அவன் ஆறேழு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டுவந்தானடி ஒரு தோண்டி,அதை கூத்தாடி,கூத்தாடி போட்டுடைத்தாண்டி”,என்ற பழமொழியை கேட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.இதைப்போன்று பல ஆயிரம் பேர் ரத்தம் சிந்தி,உயிர் துறந்து ,பல்வேறு தியாகங்களால் வளர்த்த அமைப்பை அதிகாரவர்க்கத்துக்கு பலி கொடுப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.இப்படி செய்வதுதான் உண்மையாகவே பாட்டாளிவர்க்க விடுதலையை நேசிப்போரின் கடமை.
இணையத்தளத்தின் தன்மைக்கு ஏற்ப, ஒரே பதிவாக அல்லாமல் எமது விமர்சனங்களை பலப் பிரிவுகளாக வெளியிடவேண்டியதாகிறது.இதைத்தான் நீங்கள் அவர்களை சுற்றி,சுற்றி வருவதாக கூறுகிறீர்கள்.அவர்கள் உங்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பது அவர்களின் பாட்டாளிவர்க்க தன்மையை வெளிப்படுத்தவில்லை.இதைப் பற்றி நீங்கள் அவர்களிடம் தான் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்!

3.கதிர்நிலவன்.
எமக்கு அரசியல், சித்தாந்தம் கற்பித்த தோழர் மூடக்கிழவனைப் பற்றி நாங்கள் எமது கட்டுரையில் ஏற்கனவே எழுதியுள்ளோம்.அவர் சார்ந்துள்ள அமைப்பு அவரை சூறாவளியில் எழுதக்கூடாது என்று தடைவிதித்ததால் அவர் சூறாவளியில் எழுதவில்லை.ஆனால் நாங்கள் மீண்டும் சூறாவளியை இயக்க ஆரம்பித்த பின்னர், தமது பகுதியில் நடந்த இருப்போராட்டச்செய்திகளை சூறாவளியில் வெளியிடுமாறு அனுப்பிவைத்தார்,அச்செய்திகள் இரண்டையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

நாங்கள் அமைப்பின் ஆதரவாளராக வெளியில் இருந்துதான் ஆதரவளித்தோம்,இப்போது நாங்கள் உங்கள் அமைப்பை ஆதரிக்கவில்லை என்பது எமது தொடர்கட்டுரைகளில் நாங்கள் எழுதியதிலிருந்து கூடவா உங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை?
தோழர் மூடக்கிழவன் தற்போது உங்கள் அமைப்பில் எந்த நிலையில் உள்ளார் என்பது எங்களுக்கு தெரியாது.எமக்கு அரசியல்,சித்தாந்தம் போதித்த தோழர் மூடக்கிழவன் தற்போது,தமது அமைப்பில் உட்கட்சி போராட்டம் நடத்துவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.அண்மையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய போது கூட உங்கள் அமைப்பினர் தரவிரும்புவதாக கூறிய பொருளாதார ரீதியான உதவியை அவர் நிராகரித்துவிட்டார்,என்பதில் இருந்துதான் மேற்கண்ட முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம்.அதே நேரத்தில் அவரின் இருதய அறுவை சிகிச்சைக்கு நாங்கள் அளித்த பொருளாதார உதவியை ஏற்றுக்கொண்டார் என்பதில் இருந்துதான், அவர் எம்மையும்,உங்கள் அமைப்பின் மீதான எமது விமர்சனங்களையும்,ஏற்றுக்கொண்டிருக்கலாம் எனவும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.


விவிமு போராட்ட லேபில்களை நாங்கள் பயன்படுத்துவதாக கூறியிருக்கிறீர்கள்,அது என்னவென்று குறிப்பாக கூறுங்கள்!


வினவி-ல்இருந்து நாங்கள் எடுத்து மறுபிரசுரம் செய்த செய்திக்கட்டுரை விருத்தாசலம் விவிமு செய்தி என்பதையும் அதை சூறாவளியில் வெளியிடுமாறு தோழர் மூடக்கிழவன் எமக்கு வேண்டுகோள் வைத்தார் என்பதால் தான், அச்செய்தியை நாங்கள் மறுபிரசுரம் செய்தோம்.
விருத்தாசலம் வட்டார விவிமு கல்விக்கான மக்களின் உரிமை,விருத்தாசலத்தில்நக்சலைட்டுகளின் நேரடி நடவடிக்கை,என்ற கட்டுரையை நாங்கள் 22.06.2011 அன்று சூறாவளியில் வெளியிட்டோம்.இதே செய்தியை செங்கொடி,பறையோசை ஆகியோர் தமது இணையதளத்திலும்,டாக்டர் ருத்ரன் அவர்கள் தனது முகநூலில்(face book) எழுதிய கட்டுரை ஒன்றிலும் கோடிட்டுகாட்டியிருந்தார்,ஆனால் வினவோ இந்தச் செய்தியை வெளியிடவில்லை.புதிய ஜனநாயகமும் தான் வெளியிட்ட கட்டுரையில், உண்ணாவிரதத்தின் மூலம் தனியார் ஆங்கில பள்ளிகளுக்கான கல்விக்கட்டண நிர்ணயக்குழுக்களின் நீதிபதி கோவிந்தராசன் குழு,நீதிபதி ரவிராச பாண்டியன் குழு அளித்த பரிந்துரைகள் மற்றும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக்கோரியும்,தமிழகத்தில் நடத்தப்பட்ட உண்ணாவிரதங்கள் பற்றி எழுதப்பட்டிருந்த விமர்சனங்களை தவிர்த்துவிட்டுத்தான் அச்செய்தியை வெளியிட்டிருந்தது.ஆனால் செங்கொடி,பறையோசை இணையதளங்களும்,சூறாவளியும் விருத்தாசலம் விவிமு-வினர் அனுப்பிய செய்தியை முழுமையாக வெளியிட்டிருந்தோம்.மேற்கண்ட செய்தியை அரைகுறையாக வெளியிட்ட புதிய ஜனநாயகம்,அதை முழுமையாகவே வெளியிடாத வினவு ஆகியோர்களின் செயல்களைப் பற்றி உங்களால் அவர்களை கேள்விகேட்கமுடியுமா?


அமைப்பின் பலதோழர்கள் இணையதளம் ஆரம்பித்தது போன்றுதான் நாங்களும் தோழர் மூடக்கிழவனுக்கு இணையதளம் ஆரம்பித்துத் தந்தோம்.ஆனால் சூறாவளியோ வினவின் ரசிகராக இருந்துவிசில் அடிக்காமல் விவிமு-விற்கும், விவசாயிகளுக்கும் எப்படிப்பட்ட செய்திகள் தேவையோ அதை மட்டுமே ஆக்கப்பூர்வமாக எழுதி வெளியிட்டு வந்தார்.”உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மீறாது”, என்ற பழமொழி எந்த காலத்தில் உருவானது என்பதை சங்காலத்தில் இருந்து தொடங்கி களப்பிரர் காலம் வரை  முன்று ஆய்வுக்கட்டுரைகளை, மல்லாந்து துப்பினால் மார்பில்” என்ற கட்டுரைகளின் மூலம் எழுதி வெளியிட்டு வந்தார்.அந்த கட்டுரைக்கு தமிழ்மணம் நடத்திய போட்டியில் பரிசும் கிடைத்தது.


விருத்தாசலம் பகுதி தோழர்கள் மட்டுமே சூறாவளிக்கு தமது பகுதி போராட்டச்செய்திகளை அனுப்பிவைத்தனர்.அதைத்தான் சூறாவளியில் நாங்கள் அப்போதும்,இப்போதும் வெளியிட்டு வருகிறோம்.பிற பகுதி தோழர்களும் தமது பகுதி செய்திகளை எங்களுக்கு அனுப்பிவைத்தால் அவைகள் அரசியல்,சித்தாந்த ரீதியாக சரியாக இருக்குமேயானால்.அவற்றையும் வெளியிட நாங்கள் இப்போது கூட தயாராகவே இருக்கிறோம்.


அது சரி! எங்களை இப்படி கேள்விகேட்கும் நீங்கள், உங்கள் அமைப்பில் சுமார் ஐம்பது பேர்வரை இணையதளம் நடத்துகிறீர்களே? அவர்கள் உங்கள் பல்வேறு பகுதி அமைப்புகளின் செய்திகளை தமது இணையதளங்களில் வெளியிடுகிறீர்களா என்ன? அது பற்றி இதுவரை  நீஙகள் கேள்வி எழுப்பி இருக்கிறீர்களா?

விருத்தாசலம் வட்டாரத்தில் நடக்கும் போராட்ட செய்திகளை,அவர்கள் மண்டபத்தில் வைத்து எழுதுகிறார்களா? வெறு எங்கு வைத்து எழுதித்தருகிறார்கள் என்பதை இன்னமும் உங்கள் அமைப்பில் இயங்கிவரும் விருத்தாசலம் வட்டார விவிமு தோழர்களிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும்.இப்போதும் உங்களோடு இணைந்து செயல் படும் ஒருவட்டார பகுதியின் தோழர்களையே,இவ்வளவு தரக்குறைவாக உங்களால் எழுத முடிகிறது என்றால்,எங்களை எவ்வளவு வன்மத்தோடு பார்ப்பீர்கள் என்பதை அரசியல்,சித்தாந்த ரீதியாக ஏற்கனவே நாங்கள் கணித்தே வைத்துள்ளோம்.உங்களின் கருத்துகள் அனைத்தையும்,உங்களின் தனிப்பட்ட கருத்தாக நாங்கள் கருதவில்லை.நீங்கள் சார்ந்துள்ள வினவு மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் கருத்தாகவே நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.இந்த அளவுக்கு ஒரு வட்டார பகுதி தோழர்களை நீங்கள் இழிவாக எழுதிய பின்னரும் கூட, விருத்தாசலம் விவிமு தோழர்கள்தான் இந்த அமைப்பில் தாங்கள் தொடர்ந்தும் இருப்பதை பற்றிய முடிவை  எடுக்க வேண்டும்.


வலிப்போக்கன்,கதிர்நிலவன் ஆகியோர் எம்மிடம் எழுப்பியுள்ள கேள்விகள் மூலம் வினவும் அதன் தோழமை அமைப்புகளும் கேள்விகளுக்கும்,விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்பதைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். இந்த கண்ணோட்டம்தான் அதிகாரவர்க்கத்தின் இயல்பான கண்ணோட்டம் ஆகும்,சோவியத் மற்றும் சீன சோசலிச குடியரசுகளில் பொருளுற்பத்தி சாதனங்கள் அனைத்தும் சமூக உடைமைகளாக ஆக்கப்பட்டு இருந்தன,இவற்றை சோவியத்தில் தோழர் ஸ்டாலினுக்கு பின்னரும்,மக்கள் சீனத்தில் தோழர் மவோவிற்கு பின்னரும் கட்சியையும்,ஆட்சியையும் கைப்பற்றிய அதிகாரவர்க்க பாதையாளர்கள்,அதிகாரவர்க்க உடைமையாக, கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக உருமாற்றம் செய்தனர்.அவர்களின் சீடர்களாகிய நீங்களும் அப்படித்தான் தங்களை கேள்விகளுக்கும்,விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர்களாக கருதிக்கொள்கிறீர்கள்.உங்களது அதிகாரவர்க்க மனோபாவத்தை இதன் மூலம் மீண்டும் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இதற்காக உங்களுக்கு எமது நன்றியை உரித்தாக்குகிறோம்.


4.கடவுள்.
சமச்சீர்கல்வியால் தனியார்  பள்ளிகளில் கல்விக்கட்டணம்,குறையாது என்பதற்கான பதிலை எமது முதலாவது கட்டுரையான சமச்சீர்கல்வி….!கார்ப்ரேட்மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பனக்கும்பலுக்கு விழுந்த அடி! என்ற கட்டுரையிலேயே மிகத்தெளிவாக எழுதியுள்ளோம்.அக்கட்டுரையையும் அதனோடு தொடர்புடைய ஏனைய கட்டுரைகளையும் கவனமாக வாசியுங்கள்.உங்களது கேள்விகளுக்கான விடை அவற்றில் நீங்கள் பெறலாம்.


புரட்சி,புரட்சிக்கு பின்னால் அமையும் சமூக அமைப்பு ஆகியவற்றின் மீது நக்சல்பாரி அமைப்பின் நிலைப்பாடே ,எமது நிலைப்பாடாகும்.அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஒரே புரட்சிகர அமைப்பாக விளங்கிய மக இக சார்ந்த அமைப்பின் நிலைப்பாடே எமது நிலைப்பாடாகும்,இந்த நிலைபாடுகளுக்கு விரோதமாகத்தான் இந்த அமைப்புகள் தற்போது செயல் படுகின்றன என்பதே எமது விமர்சனமாகும்.


நாங்கள் தற்போதைய  சமூக சூழலில் மேற்கண்ட நிலைபாடுகளில் ஏதேனும் மாற்றம் தேவையா என்பதைப் பற்றி இனிமேல்தான் ஆய்வு செய்ய வேண்டும்.


எமது சென்ற கட்டுரையில்”இந்த அமைப்புகள் பற்றி நாங்கள் கட்டுரை எழுதுவதற்கு முன்பே முழுமையாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரவில்லை.கட்டுரைகளின் வளர்ச்சிப் போக்கில்தான் ஆய்வு செய்தோம்.இதனால்தான் இந்த அமைப்புகளைப் பற்றி எமது ஆரம்பக்கட்டுரைகளில்,அரசியல்,சித்தாந்த ரீதியாக உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் அதே நேரத்தில்,இந்த அமைப்புகளிடம் தோழமை ரீதியான அணுகுமுறையை வெளிப்படுத்தியிருந்தோம்”, என்று எழுதியுள்ளோம்.இந்தகட்டுரையும் இது தொடர்புடைய ஏனைய கட்டுரைகளையும் கவனமாக வாசியுங்கள்! நன்றி!..

தொடர்புடைய கட்டுரைகள்:
                      


3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2




பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

17 comments:

வலிப்போக்கன் said...

வினவும் அதன் தோழமை அமைப்புகளும் கேள்விகளுக்கும்,விமசனசத்துக்கும் அப்பாற்பட்வர்கள் என்று தாங்களாக நினைத்து கொள்ளக்கூடாது.யரும் எவரும் விமசர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவர்கள் அல்ல.நான் குறிப்பிட்டது சமீபமாகத்தான் வினவை
எதிர்த்து கட்டுரை வெளியிட்டு வருகிறீர்களே, அதைக்கண்டுதான் குறிப்பிட்டுள்ளேன்.தவளை தன் வாயால் கெடும் என்பது உங்களுக்கும் பொருந்தும்தானே?

Anonymous said...

1. சமச்சீர் கல்வி குறித்த கட்டுரையைப் படித்தேன். ஆனால் நீங்கள் அதில் காரணங்களை மட்டுமே சொல்லியிருக்கிறீர்கள் அனால் மக்களைத் திரட்டுவதற்கு நீங்கள் வைத்திருக்கும் திட்டம் என்ன என்பதற்கான தெளிவு இல்லையே?

2. புரட்சி குறித்த உங்களின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கவும். நக்சல்பாரிகளின் நிலைப்பாடு எனக்குத் தெரியாது. புரட்சியை எப்படி நடத்துவதாக திட்டம் இருக்கிறது உங்களிடம்?

மேலும் என்னுடைய கீழ்கண்ட கேள்விகளுக்கு இன்னும் நீங்கள் பதில் சொல்ல வில்லை.

//இந்த சமூக அமைப்பு முற்றாக துக்கியெறியப்பட்டு,அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்கள் குழுக்களுக்கு வரவேண்டும்.சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல அரசின் நிர்வாக பணிகளுக்கு தேவையான பணியாளர்கள் முதற்கொண்டு அரசின் அனைத்து அங்கங்களுக்குமான பணியாளர்கள் அனைவருமே உழைக்கும் மக்களால்தான் தெரிவு செய்ய படவேண்டும்//

1. புதிய ஜனநாயக புரட்சியில் பாராளுமன்றம் இருக்குமா?

2. புதிய ஜனநாயகப் புரட்சி குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

3. அதை எப்படி நடத்துவது?

வலையுகம் said...

நண்பரே

தவளை தன் வாயால் கெடும் ம்ம்ம்..

ஒன்னத்துக்கும் உபயோகப் பாடம அநியாயங்களை கண்டும் பேசமடந்தையாக இருப்பதை விட

அதிகார வர்க்கத்தை அவர்களின் பலம் தெரிந்தும் எதிர்த்து குரல் கொடுத்து அவர்களுக்குதிராக கலகம் செய்து சாவது தவளை போல் ஒருவகையில் ஒத்த சூழல் கொண்டது தான்

வலையுகம் said...

//1.ஹைதர் அலி.
”வினவுக்கு எதிராக எழுத வேண்டும் என்ற வரட்டுத்தனம் உங்கள் பதிவுகளில் தெரிகிறது”.என்று கூறி இருக்கிறீர்கள்,அது என்னவென்று குறிப்பாக எழுதுங்கள் விவாதிப்போம்!//

நண்பரே தங்களுடைய பதிவுகள் உங்களுடைய எதிர்கால கொள்கை மற்றும் உங்கள் சித்தாந்த நிலைப்பாடு இவைகளைப் பற்றி பெரும்பாலும் பேசு பொருள் இல்லாமல் வினவை சுற்றியே வந்தது தங்களின் கட்டுரைகளை தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருக்கிறேன்.

புரட்சியின்ன என்ன கம்யூனிஸ சித்தாந்தம் என்றால் என்ன இப்படி கற்றுக் கொடுப்பீர்கள் என்று நினைத்தால் வினவைப் பற்றியே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.

பாதையை மாத்துங்க ராசா

கதிர் நிலவன் said...

உங்க பதிவ படிச்சதும் அப்றமா டைம் கெடச்சதும் பதில் சொல்லனும்னு முடிவு பண்ணி இருக்கேன். ஒரு சின்ன சந்தேகம், அத மட்டும் கேட்டுர்ரன்.

அதாவது வினவின் கட்டுரைகளை நங்கள் மறுபதிப்பு செய்யவில்லை என்ற வரலாற்று உண்மையை தங்கள் கூறியிருப்பது குறித்து...

சமச்சீர் கல்வி குறித்து வினவையும், அதன் தோழமை அமைப்புகளையும் அம்பலப்பத்தி எழுதுவதாக நீங்கள் ஆரம்பித்த தேதி "ஜூலை -28" அதாவது வினவையும், அதன் தோழமை அமைப்பையும் நம்பி மோசம் போய்ட்டோம் என்ற ஒப்பாரியை நீங்க ஆரம்பிச்சு இதுவரைக்கும் "ரொம்ப நேர்மையா" தொடர்றீங்க வாழ்த்துக்கள்!

சின்ன சந்தேகம்,
கேக்கலாம்ன பயமா இருக்கு, என்னென்னா திடிர்னு ஒருத்தர் 'தைவான்ல இருந்து நெட் லைன்ல வந்து அதன் 'பதில் சொல்றோம்னு சொல்லிருக்கோம்ல...' மெரட்டற மாதிரி பதில் சொல்வர்'!

இல்லேன்னா நீங்களே உங்க பதில்ல ##உமக்கோ,உமது ஆஸ்தான குருநாதர்களுக்கோ நேர்மை என்று ஒன்று இருந்தால் எமது விமர்சன்ங்களுக்கு அரசியல்,சித்தாந்தரீதியாக பதில் கூறுங்கள் பார்ப்போம்### என்று தனிநபர் தாக்குதலில் இறங்குவீர்கள்!

மேலும் இதற்க்கெல்லாம் மகுடம் வைத்தது போன்று 'அகில உலக டெஸ்க்டாப் புரட்சியாளர் சங்கதலைவர் மெனக்கெட்டு இதுக்கு வாழ்த்துரை வேற வழங்குவாரு(வேற என்ன வேல), .... இருந்தாலும் இதையெல்லாம் மீறி அந்த சந்தேகத்த கேட்டுர்ரனே.

அது இன்னான்னா
வினவு இணைய தளத்தில் வெளியிட்ட "செங்கொடி தீக்குளிப்பு குறித்த இடுகையை ஆகஸ்ட்-29 ந்தேதியும், 7 தலித்துகள் படுகொலை குறித்த இடுகையை செப்டம்பர் 14 ந்தேதியும்", உங்க சைட்ல போட்ருக்கீங்க. ஆனால் உங்க பதில்ல ###நாங்கள் அமைப்பின் ஆதரவாளராக வெளியில் இருந்துதான் ஆதரவளித்தோம்,இப்போது நாங்கள் உங்கள் அமைப்பை ஆதரிக்கவில்லை என்பது எமது தொடர்கட்டுரைகளில் நாங்கள் எழுதியதிலிருந்து கூடவா உங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை?### என்று புழுகி இருக்கீங்க மன்னிக்கணும், எழுதி இருக்கீங்கன்னு தான் டைப் பண்றேன் ஆனால் புழுகி இருக்கீங்கண்ணே டைப் ஆகுது. (அறிவியல் கண்டுபிப்பெல்லாம் உண்மையத்தான் சொல்லும்னு சொன்னதா கேள்வி!) தயவுசெய்து திட்டமா, மெரட்டாம உண்மைய சொல்லுங்களேன்!
ஜூலை மாசம்... ஆகஸ்ட், செப்டம்பர் க்கு அப்புறம் வருமா இல்ல பின்னாடி வருமா?

^~"மா.சே"~^ said...

தவளை தன் வாயால் கெடும்...

அட்டா என்ன ஒரு பொருத்தமான தலைப்பு!

இப்படி ஒரு சுயவிமரிசனபூர்வமான தலைப்பை விஞ்ஞான கம்யூனிச ஒளியில், இயக்கியல் பொருள்முதல் வாத பார்வையால், வரலாற்று பொருள்முதல்வாத பாதையில் பீடு நடைபோட்டு வந்து தமிழக முற்போக்கு சக்திகளை காப்பாற்ற எழுந்தருளியுள்ள தமிழகத்தின் ISO 2011:2012 சான்றிதழ் பெற்ற ஒரே அக்மார்க் புரட்சியாளர்களான நயம் சூறாவளி குழுவினரால் மட்டுமே வைக்க முடியும்.

இவண்
துணை செயலாளர்
அகில ஒலக சூறாவளி இரசிகர் மன்றம்
துபாய் மெயின் ரோடு கிளை

superlinks said...

வணக்கம்.

எனது முகநூல் பக்கத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் உங்களுடைய பதிவுகளை போட்டிருக்கிறீர்கள். தற்போது தான் அவற்றை பார்த்தேன்,
உடன் நீக்கியுள்ளேன் இனிமேல் இது போன்ற பதிவுகளை போடாதீர்கள்.

Unknown said...

மறுபக்கமும் நிழலும் இல்லா மனிதர் இல்லை என்பதும், வல்லவனுக்கும் உண்டு வழுக்குப்பாறை என்பதும் கண்கூடு!

please remove word verification!

superlinks said...

இந்த தளத்தில் பின்னூட்டமிட்டுக்கொண்டிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

புரட்சிகர சவடால் அடித்துக்கொண்டிருக்கும் இந்த கூட்டம் ஒரு குட்டி முதலாளித்துவ கோஷ்ட்டிகளின் கதம்பம்.

ஏற்கெனவே தியாகு என்கிற ஒரு நடுத்தர வர்க்க மனநோயாளி இருபத்து நான்கு மணி நேரமும் ம.க.இ.க வையும் வினவையும் திட்டி திட்டியே எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் எழுதுவதில் ஏதாவது அரசியல் இருக்கிறதா என்றால் இல்லை, அனைத்தும் மட்ட ரகமான குப்பை. சுய அரிப்பும், வெறுப்பும், மன நோயுமே தியாகுவின் பதிவுகள்.

அப்பேர்பட்ட மாமேதை தியாகு, அந்த மாமேதையை விட பெரிய மாமேதை றயாகரன், இந்தியாவிலேயே தூய்மையான ஜென்யூன் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து வந்த மிக மிக ஜென்யூனான இயக்கம் என்கிற பிளாக்காரர்கள், இவர்கள் அனைவரோடும் இவர்கள் என்று இது ஒரு கதம்ப கூட்டமாக செயல்படுகிறது.

இந்த கூட்டத்தின் நோக்கமே கலைப்புவாதம் தான். எனவே இவர்களுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை. இவர்களுடைய நோக்கம் இவ்வாறு இருக்கும் பொழுது எதற்காக நீங்கள் எல்லோரும் இப்படி மாய்ந்து மாய்ந்து இவர்களுக்கு பதிலளித்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்த கூட்டத்தை புறங்கையால் ஒதுக்கித்தள்ளிவிட்டு வேறு வேலைகளை பாருங்கள் தோழர்களே.

இவர்கள் ஒட்டு மொத்த அமைப்பை பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நீங்களும் நானும் அமைப்பிலிருக்கிறோமே தவிர அமைப்பின் பிரதிநிதிகள் அல்ல. அமைப்பை அவதூறு செய்து, இழிவுபடுத்துவதன் மூலம் நம்மை சீண்டி அதன் மூலம் நம்மிடமிருந்து வெளிப்படும் கோபத்தை தான் இவர்கள் எதிர்பார்க்கிறாகள். நாம் கோபமாக கூறும் பதில்களை இவர்கள் ம.க.இ.க வின் அதிகாரப்பூர்வமான பதிலாக மாற்றுவார்கள். உதாரணத்திற்கு கதிர் நிலவன் என்கிற தோழர் சென்ற பதிவிலிட்ட பின்னூட்டத்திற்கு (அந்த பின்னூட்டம் தவறானது விருதாச்சலம் வி.வி.மு தோழர்கள் தான் இவர்களுக்கு செய்திகளை கொடுத்திருக்கிறார்கள். எனவே தோழர் அவசரத்தில் அவ்வாறு எழுதியிருக்க வேண்டியதில்லை.) இந்த பதிவில் அதை அமைப்பின் கருத்தாக தான் எடுத்துக்கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் ஒரு பகுதியிலிருக்கும் அமைப்பு தோழர்களை ஒட்டுமொத்த அமைப்பும் இழிவுபடுத்துவதாக சித்தரிப்பதன் மூலம் மொத்த அமைப்பிற்கெதிராகவும் அவர்களை திருப்ப முயல்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் குறிப்பிட்ட பகுதியிலிருக்கும் தோழர்களை அதிருப்திக்குள்ளாக்கி பிளவுக்கு தள்ளி விடும் கலைப்புவாத திருப்பணியை தான் இவர்கள் செய்கிறார்கள் என்பதை தோழர்கள் அனைவரும் உணர்ந்து கொண்டு இதற்கு மேல் இவர்களுக்கு தயவு செய்து பதிலளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

^~"மா.சே"~^ said...

தோழர் சூப்பர்லிங்க்ஸ், இந்த டக்கால்டி வேலையை அவர்கள் முதல் பதிவிலேயே முகப்புத்தகத்தில் செய்தார்கள். அதை அங்கேயே தோழர் ஏழர அம்பலப்படுத்தியும் விட்டார். அதற்கெல்லாம் அசந்து போபவர்களா இவர்கள், இப்போது உங்களுடைய கருத்தையும் அமைப்பின் கருத்தாக மாற்றி அமைப்பே சூறாவளியில் பின்னூட்டம் போடக்கூடாது என்று தடை விதிக்கிறது. அங்கே ஜனநயாகமே இல்லை என்று பிலாக்கணத்தை துவங்குவார்கள் பாருங்கள்...

சரியான காமெடி பீசுகளப்பா :))))))

suraavali said...

//இந்த சமூக அமைப்பு முற்றாக தூக்கியெறியப்பட்டு,அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்கள் குழுக்களுக்கு வரவேண்டும்.சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல அரசின் நிர்வாக பணிகளுக்கு தேவையான பணியாளர்கள் முதற்கொண்டு அரசின் அனைத்து அங்கங்களுக்குமான பணியாளர்கள் அனைவருமே உழைக்கும் மக்களால்தான் தெரிவு செய்ய படவேண்டும்//

1. புதிய ஜனநாயக புரட்சியில் பாராளுமன்றம் இருக்குமா?

2. புதிய ஜனநாயகப் புரட்சி குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

3. அதை எப்படி நடத்துவது?

என்று பதிவர் கடவுள் கேள்வி எழுப்பியுள்ளார்.கடவுள் அவர்கள் ஏதோ விவரம் தெரியாமல் கேள்விகளை எழுப்பவில்லை.தெரிந்தேதான் கேள்வி எழுப்புகிறீர்கள்.ஆனால் பதில் சொல்ல வேண்டியது எமது கடமையாகும்.நீங்கள் கூறியிருப்பதை போன்று தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமல்ல, திருப்பி அழைக்கும் உரிமையும் மக்களுக்கு இருக்கும்.புதிய ஜனநாயக புரட்சியை எப்படி நடத்துவீர்கள் என்று வினா எழுப்பி இருக்கிறீர்கள், அது மக்கள் திரள் பாதையில் தான் நடைபெறும்.தற்போது மக்கள் திரள் பாதை என்றால் அமைப்பின் செயல் பாடுகளுக்கு வேண்டிய நிதியை ரயில் மற்றும் பேருந்துகளில் பிரச்சாரம் செய்வது என்ற ஒரு வடிவத்தில் மாத்திரமே வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.இந்த பணிகள் முழுக்க, முழுக்க நகர்ப்புறங்களில் மட்டுமே செய்யக்கூடிய பணியாகவும் உள்ளது.புதிய ஜனநாயக புரட்சியின் அடிப்படை வர்க்கமான விவசாயிகளுக்கும் ,இப்போது மக்கள் திரள் பாதை என்று கூறப்படும் பாதைக்கும் ஏறத்தாழ எந்த தொடர்புமில்லை.கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக மக இக –வும் அதன் தோழமை அமைப்புகளும் முன்னணியாளர்களை வென்றெடுப்பது என்ற அடிப்படையில் நகர்புற குட்டி முதலாளித்துவ சக்திகளை சார்ந்தே இயங்கிவருகின்றனர்.மக்களை திரட்டுவது என்பதையும் முன்னணியாளர்களை வென்றெடுப்பது என்பதையும் இருவேறு நிகழ்வுகளாக, இயங்கியலுக்கு புறம்பான செயல்பாட்டையே கொண்டுள்ளனர்.தற்போது இந்த அமைப்பினருக்கு கிராமப்புற மக்களிடம் ஆதரவோ,செல்வாக்கோ ஏறத்தாழ இல்லை என்றே கூறிவிடலாம்.தமிழகத்தை பொருத்தவரை கிராமப்புற விவசாயிகளின் பிள்ளைகளில் ஆகப்பெரும்பான்மையோர் நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகள்,கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்,தொழில்நுட்ப கல்லூரிகளில்தான் படித்து வருகின்றனர்.அங்கே சென்று இந்த அமைப்பினர் பிரச்சாரம் செய்தாலும் கூட, இப்பிரச்சாரங்கள் கிராமப்புற விவசாய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களை ஈர்ப்பதில்லை.ஏனேன்றால் இவர்களின் பிரச்சாரத்தில் கூறப்படும் செய்திகள் இம்மாணவர்களின் வாழ்நிலைக்கு பொருந்தமற்றதாகவே உள்ளன.

எனவே,மக்கள்திரள் பாதை என்பதை நாங்கள் அதன் முழுமையான கண்ணோட்டத்துடன் பார்ப்பது மட்டுமல்ல, நடைமுறையிலும் தோழர் மூடக்கிழவன் தலைமையிலான குழுவினருடன் இணைந்து நடைமுறையில் பணியாற்றியும் உள்ளோம்.முன்னணியாளர்களை வென்றெடுப்பது என்ற பணியையும் மக்களை திரட்டுவது என்ற பணியையும் இருவேறு , தனித்தனியான செயல்களாக அல்லாமல் ஒன்றுடன் ஒன்று இணைந்த பணியாகவே கருதுகிறோம்.இந்த பாதையைத்தான் தோழர் மூடக்கிழவன் எமக்கு அரசியல், சித்தாந்தம் கற்பித்த அதே நேரத்தில், அதை தமது செயல்பாட்டு தளத்திலும் தமது குழுவினருடன் நடைமுறையில் தற்போது செய்துகாட்டியும் வருகிறார். உங்களின் கேள்விக்கு இந்த அளவிற்கு மட்டுமே இணையதளத்தின் மூலம் எம்மால் பதில் கூற இயலும்.இதற்கு மேலும் இதைப் பற்றிய செய்திகளை நீங்கள் அறியவிரும்பினால் எம்மோடு நேரிடையாக தொடர்புகொள்ளுங்கள்.

நாங்கள் ஏற்கனவே கட்டுரை ஒன்றில் வரலாறு எமக்கிட்ட பணியைத்தான் செய்ய ஆரம்பித்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளோம்.புதிய ஜனநாயக புரட்சி பற்றிய எமது முழுமையான கண்ணோட்டத்தையும்,செயல் திட்டங்களையும் நாங்கள் ஏற்கனவே ஆவணங்களாக தொகுத்து வைத்துக்கொண்டு மக இக-வையும் அதன் தோழமை அமைப்புகளையும் அதிகாரவர்க்க பாதையாளர்கள் என்று வரையறுக்கவில்லை.இனிமேல்தான் புதிய ஜனநாயக புரட்சி பற்றிய எமது திட்டங்களை ஆவணங்களாக தொகுக்க வேண்டும்.இந்த பணியை நினைத்தமாத்திரத்தில் செய்துவிட இயலாது.இப்பணி செய்து முடிக்கப்படும் வரை காத்திருப்பதை தவிர வேறுவழியில்லை!

இயக்கம் said...

சூறாவளிக்கு இயக்கத்தின் மறுப்பு

சூறாவளி தோழர்களே,
தாங்கள் "சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் - 2"(http://suraavali.blogspot.com/2011/08/2.html) என்ற கட்டுரையில் //எமது இரு கட்டுரைகளையும் பார்த்துவிட்டு அவற்றின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ளாமலேயே தியாகு,இயக்கம் ஆகியோர் மக இக மற்றும் அதன் தோழமை அமைப்பினர் என்ன எழுதுகிறார்கள் என்பதை பார்க்கமறுத்துவிட்டு அவர்கள் எதை செய்தாலும்,அதை எதிர்ப்பது என்ற கண்ணோட்டத்துடன் தமது இணையத்தளங்களில் அரைவேக்காட்டுத்தனமாக பிதற்றிவருகின்றனர்.தங்களை போன்றேதான் சூறாவளியும்,மக இக-வையும் அதன் தோழமை அமைப்புகளையும் எதிர்ப்பதாக எமது தலைப்புகளை மட்டுமே பார்த்துவிட்டு எமது கட்டுரைக்கு ஆதரவளிப்பதாக பின்னூட்டம் இட்டிருந்தனர்.இதன் பிறகு தான் நாங்கள் அவர்களின் இணையத்திற்கு சென்று அவர்களின் கட்டுரைகளை வாசித்து,அந்த கட்டுரைகளின் தரத்தை தீர்மானித்தோம்.// என்று சொல்லியுள்ளீர்கள்.

ஆனால் உண்மையில் இயக்கம் உங்களுக்கு ஆதரவளிப்பதாகப் பின்னூட்டம் எதுவும் இடவில்லை. இயக்கம் தங்களின் http://suraavali.blogspot.com/2011/07/blog-post_28.html கட்டுரைக்கு அளித்த பின்னூட்டம் இதுதான்: //சூறாவளி தோழர்களுக்கு வணக்கம் மாற்றுக்கருத்து இதழில் சமச்சீர் கல்வி - ஆளும் வர்க்க சதி கட்டுரை வந்துள்ளது அதை படிக்க
http://ieyakkam.blogspot.com/2011/07/blog-post_1768.html
http://ieyakkam.blogspot.com/2011/07/blog-post_5602.html
30 July 2011 08:40//
இதில் தங்களுக்கு ஆதரவளிப்பதாக எந்த வார்த்தையும் இல்லாத போதும், நாங்கள் உங்களுக்கு ஆதரவளித்ததாக நீங்களே சொல்லிக் கொள்வது வினோதமாக உள்ளது. ஒருவேளை நீங்கள் மாஞ்சு மாஞ்சு எழுதியும் வினவும் மகஇக‌வும் நம்மை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையே என்ற உளவியல் பாதிப்பில், உங்களையும் ஒரு பொருட்டாக மதித்து பின்னூட்டம் போட்டதையே உங்களுக்கான ஆதரவு- அங்கீகாரம் என்று தவறாகப் புரிந்து கொண்டுவிட்டீர்களோ என்னவோ. அந்தப்பின்னூட்டமும் சமச்சீர்கல்வியில் உள்ள ஆளும் வர்க்க சதியை சரியாக‌ப் புரிந்துகொள்ளாமல் அதுபற்றிய‌ கட்டுரைகளை தாங்கள் எழுதியதால் இந்தக்கட்டுரையைப் படியுங்கள் என்று பரிந்துரை செய்வதற்கே இடப்பட்டது. உங்களின் தரநிர்ணயத்திற்கல்ல. எனவே மீண்டும் நாங்கள் தெளிவாக அறிவித்துக் கொள்கிறோம் நாஙகள் உங்களுக்கு ஆதரவளிப்பதாகப் பின்னூட்டம் எதுவும் இடவேயில்லை.

இயக்கம் said...

சூறாவளி தோழர்களே,
உங்களது கட்டுரைகளின் உள்ளடக்கத்தை நாங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களது கட்டுரைகளின் உள்ளடக்கத்தை மட்டுமல்ல; உங்கள் முரண்பாட்டின் உள்ளடக்கம் பற்றியும் எங்களுக்குப் புரிதல் உண்டு. அதையும் தெளிவுபடுத்திவிடுகிறோம். வினவு-மகஇக வுடன் உங்களுக்கு ஏற்பட்டுள்ள முரண்பாடு கொள்கை அடிப்படையிலானது அல்ல. ம.க.இக.வின்அடிப்படைக் கொள்கைக்கும் அவர்களது நடைமுறைக்கும் இடையிலான முரண்பாட்டை சூறாவளி சுட்டிக்காட்டத் தொடங்கி அதனால் அந்த‌ இணையதளம் அந்த அமைப்பால் தடை செய்யப்படவில்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக‌ அமைப்பால் சூறாவளி இணையதளம் தடை செய்யப்பட்ட பின்னர் தடையை நீக்க முயன்று முடியாமல் போனதால் அப்போது அமைப்பு கையில் எடுத்திருந்த சமச்சீர்கல்விக்கான போராட்டத்தில் குறை கண்டுபிடிக்க முயன்று....அதற்கு அமைப்பிடமிருந்து எதிர்பார்த்த விளைவு (ஒருவேளை ஒரு கௌரவமான சமரசம்) வராததால் இன்னும் படிப்படியாக முன்னேறி ம.க.இ.க. ஒரு திரிபுவாதக் கட்சி என்ற நிலையை வந்து சேர்ந்திருக்கிறீர்கள். எனவே அமைப்பில் 50 பேருக்கு மேல் தனிநபராக இணையதளம் நடத்தும் போது தோழர் மூடக்கிழவனுக்கு நாங்கள் துவக்கிக் கொடுத்த சூறாவளி இணையத்தை மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை என்ற மனஸ்தாப‌த்தில் இருந்து எழும் குற்றம் கண்டுபிடிக்கும் குழுவாதப் போக்கின் வெளிப்பாடே உங்களது விமர்சனம். இதுவே எங்களது புரிதல்.

ஆனால் உங்கள் அமைப்பிற்குள் நடக்கும் குழு முரண்பாடுகளை வெளிப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஊடகம் இணையதளமெனும் பொதுவெளி என்பதால் அது எல்லோருக்கும் வெளியில் தெரிகிறது. கண்ணாடி வீட்டுக்குள் நடப்பது வெளியில் தெரிகிறது என்பதற்காக உங்கள் வீட்டுக்குள் நடக்கும் குழுச்சண்டையில் ஒருபக்கச் சார்பெடுத்து அதில் அரசியல் குளிர்காயும் அளவிற்கு நாங்கள் அரசியல் இல்லாதவர்கள் அல்ல. எங்களுக்கென்று புரட்சிகர அரசியல் உள்ளது. அந்த அரசியல் வழியில் உங்கள் நிலைபாடுகளை நாங்கள் விமர்சிக்கிறோம், அவ்வளவுதான். அது உங்களுக்கு ஆதரவானதோ அல்லது சூப்பர்லிங்க்ஸ் சொல்வதுபோல்கலைப்பு வாதமோ அல்ல. எங்களின் விமர்சனங்களே உங்களை கலைத்துப் போட்டுவிடும் என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

இயக்கம் said...

சூறாவளி தோழர்களே,
//எமது இரு கட்டுரைகளையும் பார்த்துவிட்டு அவற்றின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ளாமலேயே ....இயக்கம் ஆகியோர் மக இக மற்றும் அதன் தோழமை அமைப்பினர் என்ன எழுதுகிறார்கள் என்பதை பார்க்கமறுத்துவிட்டு அவர்கள் எதை செய்தாலும்,அதை எதிர்ப்பது என்ற கண்ணோட்டத்துடன் தமது இணையத்தளங்களில் அரைவேக்காட்டுத்தனமாக பிதற்றிவருகின்றனர்.// என்று சொல்கிறீர்கள். இது உண்மையில் மக இக மற்றும் அதன் தோழமை அமைப்பினரை மனம்குளிரச் செய்வதற்காகவே இதனைச் சொல்கிறீர்கள் என்று கருதுகிறோம். அவ்வாறு இல்லை என்றால், இயக்கம் தளத்தில் http://ieyakkam.blogspot.com/ மக இக மற்றும் அதன் தோழமை அமைப்பினருக்கு எதிராக இயக்கம் முன்வைத்துள்ள விமர்சனங்களில் எது அரைவேக்காட்டுத்தனமானது; எது பிதற்றல் என்று குறிப்பிட்டு விமர்சித்தால் விவாதிக்க ஏதுவாக இருக்கும். வினவு-ம.க.இ.க-விடம் நீங்கள் எதிர்பார்க்கும் விமர்சன நேர்மை உங்களிடமும் இருக்கிறது என்றால் அவற்றை குறிப்பிட்டு விமர்சித்திருக்கவேண்டும். அல்லது இப்படி மறைவாக உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்வதை விடுத்து நாங்களும்அறியுமாறு எங்கள் தளத்திலேயேவிமர்சித்திருக்கலாம். அல்லது லிங்க்-ஆவது கொடுத்திருக்கலாம். என்ன ஒரு புரட்சிகர நேர்மையோ! போகட்டும் இப்போதாவது இயக்கம் முன்வைத்துள்ள விமர்சனங்களில் எது அரைவேக்காட்டுத்தனமானது; எது பிதற்றல் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா தோழர்களே.

thiagu1973 said...

//ஏற்கெனவே தியாகு என்கிற ஒரு நடுத்தர வர்க்க மனநோயாளி இருபத்து நான்கு மணி நேரமும் ம.க.இ.க வையும் வினவையும் திட்டி திட்டியே எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் எழுதுவதில் ஏதாவது அரசியல் இருக்கிறதா என்றால் இல்லை, அனைத்தும் மட்ட ரகமான குப்பை. சுய அரிப்பும், வெறுப்பும், மன நோயுமே தியாகுவின் பதிவுகள்.//

இத்தகைய தாக்குதல்களை ஒரு பதிலாக சொல்ல உங்களுக்கு வெக்கமாயில்லையா சூப்பர் லிங்க்ஸ்

தெனாலி ராமன் said...

ப‌கத் சிங் இன் அரசியலை பகத் சிங் பிறந்த நாளில் சொல்லாமல் உங்களது அரசியலை ஏன் ஏற்றி சொல்கிறீர்கள் என்கிறீர்கள். பகத் சொன்ன அரசியல்தான் இது. அவர் கம்பெனியை எதிர்த்தாரா அல்லது மகாராணியை எதிர்த்தாரா என்ற வாதம் விபர அடிப்படையிலானது. விபர அடிப்படையில் கூட முரணாக ஏதும் சொல்லப்படவில்லை.

தெனாலி ராமன் said...

ச‌மச்சீர் பாடங்கள் எதுவும் தரம் குறைக்கப்பட்டதல்ல• முத்துக்குமரன் கமிட்டி அறிக்கையை நீங்கள் படிக்காமல் எழுதியது இது (நீங்களே சொன்னது). 13 வயது வரை குழந்தை எந்த மொழியையும் கற்கும். ஆனால் அறிவியலையும், வரலாற்றையும், புவியியல், கணிதம் போன்றவற்றையும் ஆங்கிலத்தில் கற்பதுதான் சாத்தியம் உயர்ந்த்து என்பது எந்த வர்க்கமாக நீங்கள் மாறி உள்ளீர்கள் என்பதற்கு நல்ல உதாரணம். சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிக் பள்ளிகளை தேர்வு செய்ய பெற்றோருக்குள்ள உரிமையை காப்பாற்ற வேண்டுமென நீங்களும் சொல்கிறீர்கள். இதைத்தான் மெட்ரிக் பள்ளி தாளாளர்களும் சொல்கிறார்கள். கல்வி தனியார்மயமானதற்கு அறிவின் சமூக விளைவை பார்த்து முதலாளிகள் பயம்தான் எனச் சொல்வதெல்லாம் உங்களுக்கே அதிகாமா தெரியலயா? கல்வி வேலைக்கே என்ற முழக்கமும், 1 டூ 8 ஆல் பாஸ் மீதான உங்களது வன்மமும் எந்த வர்க்கத்தின் கோரிக்கை ஐயா ? வர்க்க சார்பற்ற அரசு வரும்வரை போராடாமல் இருக்க வேண்டும் என்பது என்ன வகை அரசியல் அய்யா ?