சென்றத் தொடரில் ஒரு பாட்டாளிவர்க்க அமைப்பின் செயல்பாடுகள், இயங்கியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் அமைந்திருக்க வேண்டும் என்பதையும்,இயங்கியல் பொருள் முதல்வாதம் என்றால் என்ன என்பதை சுருக்கமாக எழுதியிருந்தோம்.இந்தத் தொடரில் தம்மை பாட்டாளிவர்க்க அமைப்புகள் என்று கூறிக்கொள்ளும்,மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும் கீழ்கண்ட விவகாரங்களில் இயங்கியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் செயல்பட்டனவா என்பதை பற்றி இனி சுருக்கமாக பார்ப்போம்!
3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2
தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விவகாரத்தில் மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும், எந்த விதமான ஒளிவும், மறைவும் இன்றி நேரடியாகவே அவற்றை நடமுறைப்படுத்தக் கோரி மாநிலமெங்கும் போராட்டங்களை, அதிலும் குறிப்பாக தமது 30 ஆண்டுகால வரலாற்றில் முதன் முறையாக, இந்த அமைப்புகளின் முதலாளித்துவ பிரிவான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மூலம் 48-மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.இதன் மூலம் இதுநாள் வரை தனியார்மயத்தை தாங்கள் எதிர்ப்பதாக கூறியது உண்மையல்ல என்பதை,தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயத்தை ஆதரித்ததின் மூலம் அறிவித்ததுடன்,தாங்கள் ஆளும்வர்க்கத்தின் ஒரு அங்கம்தான் என்பதையும் பறைசாற்றிக்கொண்டனர்.
தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயத்தை நடைமுறைப்படுத்தக் கோரி நடத்திய போராட்டத்தை, இப்போதைய சமூக சூழலில் போராடுவதற்கு மக்கள் தயாரில்லை. தனியார் பள்ளிகளின் வரைமுறையற்ற கட்டணக்கொள்ளையால் மக்கள் தனியார் பள்ளிகள் மீது ஆத்திரத்தில் உள்ளனர்.இந்தக் கட்டண நிர்ணயம் மக்களின் எதிர்பார்ப்புக்கு அதிகமாக இருந்தாலும் வரம்பு மீறி கொள்ளையிட துடிக்கும் தனியார் பள்ளிகளின் பேராசைக்கு முற்று புள்ளி வைக்கும். ஆகவே இதை அடிப்படையாகக் கொண்டு போராடினால் இந்தப் போராட்டம் சட்டத்துக்கு புறம்பான போராட்டமாக அல்லாது சட்டத்திற்கு உட்பட்ட போராட்டமாக அமைந்து, இப்போராட்டங்களில் பெருமளவிலான மக்களை பங்கேற்க வைக்க முடியும்.அதிலும் நடுத்தர பிரிவு மக்களை இந்த போராட்டத்தில் பங்கேற்கவைக்க அவர்கள் அச்சமடையாதிருக்கவே உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதாக கூறிக்கொண்டனர்.
மேற்கண்ட கருத்துகள் அனைத்துமே இவர்களே தமக்கு ஏற்ப உருவாக்கிகொண்டவைகளே ஆகும்.இவர்களின் இந்த கருத்துகளுக்கு சமூக அடித்தளம் ஏதுமில்லை என்பதும் முற்றிலும் இவைகள் இவர்கள் உருவாக்கிகொண்ட கருத்தியல் கண்ணோட்டமே என்பதைத்தான் இப்போராட்டங்கள் நிரூபித்தன.
இவர்கள் நடத்திய உண்ணாவிரதங்களில் இவர்களைத்தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை.இந்த உண்ணாவிரத போராட்டங்கள் மூலம் இவர்கள் சாதித்தது தமது பிள்ளைகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்தாமல் இருப்பதற்கு பள்ளி நிர்வாகங்களிடமிருந்து பெற்றுள்ள சலுகைதான்!
ஆகவே கல்வி கட்டண விவகாரத்தில் இவர்கள் கூறிய காரணங்கள் முற்றிலும் கருத்தியல் அடிப்படையிலானவையே!
சமச்சீர்கல்வி: ”சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டால் அது தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை தடுத்துவிடும்”, என்பது புதிய ஜனநாயகத்தின் நிலைப்பாடாகும்.
“சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தால் அது கல்வியில் கார்ப்பரேட் மயத்தை தடுத்துவிடும்”, என்பது புதியகலாச்சாரத்தின் நிலைப்பாடாகும்
”சமச்சீர்கல்வியை ஜெயலலிதா தடுத்து நிறுத்துவது கருணாநீதி மீதான அவரின் காழ்ப்புணர்ச்சியே காரணம்”,என்பது வினவின் நிலைப்பாடாகும்.
இந்த ஒவ்வொரு நிலைப்பாடுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைப் பற்றி ஏற்கனவே எமது கட்டுரைகளில் நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.ஆகவே அதைப்பற்றி இப்போது பரிசீலிக்கப்போவதில்லை.
சமச்சீர்கல்வி நடைமுறைக்குவந்தால், தனியார் பள்ளிகளிலும், அரசுப்பள்ளிகளிலும் ஒரே விதமான பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தனியார் பள்ளிகளுக்கு ஏன் அநியாயமாக கட்டணம் செலுத்தவேண்டும் என்று மக்கள் தமது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பார்கள் என்று தனது விரிவான கண்ணோட்டத்தையும் புஜ இதழ் எழுதியிருந்தது.
மேற்கண்ட விளக்கத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் தரமான பாடத்திட்டம் உள்ளது என்பதனாலேயே மக்கள் அதை நோக்கி செல்வதைப் போன்ற உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது.
“தவறை எதிர்க்க துணியாத,நியாயத்திற்காக போராட விரும்பாத தன்னலம்,இந்த தன்னலமும் ஆங்கில வழி கல்வி மீது அவர்களுக்கு இருக்கும் முட்டாள்தனமான மோகமும்தான் மெட்ரிக் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு அடிப்படையாக இருக்கிறது”, என்று 2010-ஜீன் இதழில் புஜ எழுதியிருந்தது.
இவ்விரு நிலைப்பாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டையும் கூட ஏற்கனவே எழுதியுள்ளோம்.
ஆங்கில வழி கல்வி மீதான மக்களிம் மோகம் பற்றி 2010-ஜீன் புதிய ஜனநாயகம் இதழில் மக்கள்மீது திணிக்கப்பட்ட, உண்மைக்கு புறம்பான கருத்துகளை அதே நேரத்தில் மக்கள் மனங்களில் எதார்த்தமாக இருக்கும் கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தது.மக்களிடம் உள்ள இந்த கருத்துக்கள் உண்மையல்ல.அதற்கான பொருளியல் அடிப்படை இல்லாவிட்டாலும் ஆளும்வர்க்கம் தனது கருத்தியல் கண்ணோட்டத்தை மக்கள் மனங்களில் திணித்துள்ளது.
ஆகவே இந்த திணிப்பு என்பது கருத்தியல் அடிப்படையிலானதேயாகும்.
ஆனால் 2011-ல் புதிய ஜனநாயகம் தனது சென்ற ஆண்டு நிலைப்பாட்டிற்கு எதிராக,முரணாக மக்களிடம் உள்ள ஆங்கில மோகம்,ஒரே விதமான கல்வி முறையின் மூலம் தகர்ந்துவிடும் என்கிறது.
இப்போது சமச்சீர்கல்வி நடைமுறைக்கு வந்து 2-மாதங்கள் ஆகிவிட்டன.ஆனால் புதிய ஜனநாயகத்தின் கருத்துப்படி ஒருவர் கூட தமது பிள்ளைகளை தனியார் ஆங்கில பள்ளிகளில் இருந்து, அரசுப்பள்ளிகளுக்கு மாற்றவில்லை.அதிலும் சமச்சீர் கல்விக்காக போராடிய இந்த அமைப்புகளின் உறுப்பினர்களே தமது பிள்ளைகளை தமிழ் வழியில் அரசுப்பள்ளிகளில் சேர்க்க முன் வரவில்லை.
சமச்சீர்கல்வியை ஆளும்வர்க்கங்கள் கொண்டுவந்ததற்கான பொருளியல் காரணங்களை கூறாமல்,ஆளும்வர்க்கத்தின் ஒரு பகுதியாகமாறி ஆளும்வர்க்கங்களின் சார்பில் அவற்றின் கருத்தியல் கண்ணோட்டத்தையே , புதிய ஜனநாயகம் இதழ் வெளியிட்டது.
ஆனால் நாங்களோ சமச்சீர் கல்வியை ஆளும்வர்க்கங்கள் கொண்டு வந்ததற்கான பொருளியல் அடிப்படையை பற்றி சமச்சீர்கல்வி:கார்ப்பரேட் மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பனக் கும்பலுக்கு விழுந்த அடி! என்ற கட்டுரையின் மூலம் சமச்சீர்கல்வி கொண்டு வந்த ஆளும்வர்க்கத்தின் பொருளியல் நோக்கத்தை இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் தெளிவாக வரையறுத்து கூறினோம்.
இதே போன்றுதான் சமச்சீர்கல்வி நடைமுறைக்கு வந்தால் அது கல்வியில் கார்ப்பரேட் மயத்தை தடுத்துவிடும் என்று உண்மைக்கு புறம்பான நிலைப்பாட்டை புதிய கலாச்சாரம் வெளியிட்டது.இந்திய முதலாளிகள் சங்கம் பல்கலை கழக மட்டத்தில்தான் கார்ப்பரேட் மயத்தை கோரி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.ஆனால் சமச்சீர்கல்வியோ 10-ம் வகுப்புவரைதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் புதிய கலாச்சாரமோ மொட்டைதலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு மக்களை பீதியூட்டி தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள முயற்சித்தது.ஆக புதிய கலாச்சாரத்தின் கருத்தும் உண்மைக்கு புறம்பான கருத்தியல் கண்ணோட்டமேயாகும்.
அடுத்து ராஜிவ் கொலையில் சென்னை உயர்நீதி மன்றம் மூவர் தூக்கை இடைநிறுத்தி அளித்த இடைக்காலத் தடையை “மூவர் தூக்கு: மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி”,என்று வினவு எழுதியது. அதோடு இந்த இடைக்காலத் தடை, நிரந்தர தீர்ப்பாக மூவரின் விடுதலையாக மாறவேண்டுமானால் தொடர்ந்து போர்க்குணமான போராட்டங்களை நடத்த வேண்டும் என்று இயங்கியலுக்கு புறம்பான கருத்தியல் அடிப்படையிலான கண்ணோட்டத்தை வெளியிட்டது.
இந்த இடைக்கால தீர்ப்பை வெற்றி என்று அறிவித்துவிட்ட பின்னர் அடுத்து இறுதி தீர்ப்பு என்னவாகுமோ,நம்முடைய போராட்டங்கள் இறுதி தீர்ப்புக்கு எதிராக போய்விடுமோ என்ற அச்சத்தையே, போராடியவர்களின் உள்ளங்களில் ஏற்படுத்தியுள்ளது.இதைத்தான் ஆளும்வர்க்கங்கள் இடைக்காலத்தீர்ப்பின் மூலம் சாதித்துள்ளன.
ஆனால் நாங்களோ மூவர்தூக்கை அடிப்படையாக வைத்து ஆளும்வர்க்கங்கள் சாதிக்க நினைக்கும் பொருளியல் நலன்களை பட்டியலிட்டு தெளிவுபடுத்தினோம்.இடைக்கால தீர்ப்பின் மூலம் நடப்பு போராட்டங்களை மட்டுமல்ல, இந்திய இலங்கை பொருளாதார ரீதியான நிரந்தர ஒத்துழைப்பிற்கும் தமிழர்களிடமிருந்து எதிர்ப்புவராமல் பார்த்துக்கொள்வதும் ஆகும் என்பதை தெளிவாக வரையறுத்து கூறினோம்.
எனவே
1.தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண நிர்ணயம்.
2.சமச்சீர் கல்வி.
3.மூவர் துக்கு.
மேற்கண்ட மூன்று விவகாரங்களிலும் இயங்கியல் பொருள்முதல்வாதத்தின் சுவடுகூட இந்த அமைப்புகளின் இந்த நிலைப்பாடுகளில் வெளிப்படவில்லை.
இயங்கியல் பொருள்முதல்வாதத்திற்கு நேர்ரெதிராக கருத்துமுதல்வாத கண்ணோட்டத்தினுடையே இந்த அமைப்பினர் தமது நிலைப்பாடுகளை எடுத்துள்ளனர்.
மக இக மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் நிலைப்பாடுகள் தத்துவார்த்த ரீதியாக கருத்துமுதல்வாத முகாமை சேர்ந்தவை.இந்த அமைப்புகள் ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகளை போன்று பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டு போகட்டும்.நாம் வேண்டாம் என்று சொல்லவில்லை.ஆனால் இதை பாட்டாளிவர்க்கத்தின் பெயரில் செய்வதை முறியடிப்பதே எமது நோக்கமாகும்.
மா-லெ-மா பெயரில் ஆளும்வர்க்கத்தின் நிலைப்பாடுகளை பாட்டாளிவர்க்கத்தின் நிலைப்பாடுகளாக சித்தரித்து சமூகத்தில் உள்ள முன்னணியாளர்களையும் ,மக்களையும் குழப்பும்,மயக்கும் இந்த அதிகாரவர்க்க கும்பலை முறியடித்து உண்மையான மா-லெ-மா அமைப்பைக்கட்டி புரட்சியை முன்னெடுத்து செல்வதெ புரட்சியை நேசிக்கும் அனைவரின் கடமையும்,பணியுமாகும்!
தொடர்புடைய கட்டுரைகள்:
2..சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-1

11 comments:
//மக இக மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் நிலைப்பாடுகள் தத்துவார்த்த ரீதியாக கருத்துமுதல்வாத முகாமை சேர்ந்தவை.//
ம.க.இ.க. வின் கருத்து முதல் வாதம் இருக்கட்டும் தோழர்களே...
//ஆங்கில வழி கல்வி மீதான மக்களிம் மோகம் பற்றி .....மக்களிடம் உள்ள இந்த கருத்துக்கள் உண்மையல்ல.அதற்கான பொருளியல் அடிப்படை இல்லாவிட்டாலும் ஆளும்வர்க்கம் தனது கருத்தியல் கண்ணோட்டத்தை மக்கள் மனங்களில் திணித்துள்ளது.// இது கருத்துமுதல்வாதம் அல்லாமல் பொருள்முதல்வாதமா?
ஆங்கிலத்தில் படித்தவர்களுக்குத்தான் வேலைவாய்ப்பு என்ற நிலை ஆங்கிலவழிக் கல்விக்கான பொருளியல் அடித்தளம் இல்லாமல் வேறென்ன? ஆங்கிலம் தெரிந்த அரியர்ஸ் உள்ள மாணவர்கூட வளாக நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்படும் போது ஆகக் கூடுதல் மதிப்பெண் பெற்றும் அனைத்துப் பாடங்களிலும் முதல் வகுப்பில் தேறிய பின்னும் ஆங்கிலத்தில் கம்யூனிகேசன் ஸ்கில் இல்லாததால் வேலை மறுக்கப்பட்ட மாணவர்கள் எத்தனை பேர் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஆங்கில அறிவு இல்லாமல் தமிழ்மட்டும் தெரிந்த ஒருவருக்கு இன்று சர்வதேச வேலைச்சந்தையில் மட்டுமல்ல உள்ளூர் சந்தையிலாவது வேலை கிடைக்குமா? இது பொருளியல் காரணமல்லாமல் வேறென்ன? மக்கள் எந்தமொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை சந்தையின் தேவையே தீர்மானிக்கும் என்ற லெனினது வழிகாட்டல் பற்றி ம.க.இ.க.வோ தோழர் மூடக்கிழவனோ உங்களுக்குச் சொல்லித் தரவில்லையா தோழர்களே.
திருவாளர் சிவக்குமார் அவர்களோ நீங்கள் சிவக்குமார் என்ற பெயரிலோ இயக்கம் என்ற பெயரிலோ வந்தாலும் உங்களை பற்றி நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ள நிலைபாட்டில்தான் இப்போதும் உறுதியாக இருக்கிறோம்.ஒவ்வொரு சமூகத்தையும் தனித்தனியாக பார்க்கும், நிகழ்கால சமூகத்திலேயே எதிர்கால சமூகத்தின் கரு உருவாகிவிடுகிறது என்ற இயக்கவியலை மறுக்கும் உங்களை போன்றோர்களின் பிதற்றல்களுக்கு பதில் கூறிக்கொண்டு இருப்பது எனக்கு தேவையற்ற செயலாகும்.
இதுவரையிலான உங்களுடைய பதிவுகளையும், அப்பதிவுகளில் குறிப்பாக இயக்கம் என்பவர்களுடைய பின்னூட்டத்தையும் வாசித்த பிறகு உங்களுடைய பிரச்சினை என்ன என்பது புரிகிறது. உங்களுக்கு உங்களுடைய அமைப்போடு சில விசயங்களில் தனிப்பட்ட முரண்பாடு. அந்த முரன்பாட்டில் அவர்களோடு பகையை தீர்த்துக்கொள்வதற்காக தான் நீங்களும் மூடக்கிழவனும் வினவையும் - ம.க.இ.க வையும் திரிபுவாதிகள், அதிகார வர்க்கத்தினர் என்றெல்லாம் எழுதி வருகிறீர்கள். தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்ள, காழ்ப்புணர்வுடன் சல்லித்தனமாக எழுதுவதையெல்லாம் மார்க்சியம் என்று நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா ?
//ஆங்கிலத்தில் படித்தவர்களுக்குத்தான் வேலைவாய்ப்பு என்ற நிலை ஆங்கிலவழிக் கல்விக்கான பொருளியல் அடித்தளம் இல்லாமல் வேறென்ன?//
மேற்கண்ட வாசகம் சரியாக இருக்கிறது.
ஆனால் மக்கள் மனங்களில் ஆளும் வர்க்கம் தனது கருத்தியலை திணித்துள்ளது என்ற வார்த்தையோடு இல்லாமல் “பொருளியல் அடிப்படை இல்லாவிட்டாலும்” என்பதுதான் கருத்துமுதல்வாத கண்ணோட்டத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
எந்த கருத்தும் பொருளியல் அடிப்படை இல்லாமல் உருவாவது கிடையாது. தேசியக் கருத்தியலாகட்டும், மதக் கருத்தியலாகட்டும், சாதி கருத்தியலாகட்டும் அனைத்துக்கும் பொருளியல் அடிப்படை இருக்கிறது. தேசியத்திற்கு முதலாளித்துவம் அடிப்படையானது. மதத்திற்கு தனியுடமையே அடித்தளமாக இருக்கிறது. சாதிக்கு நிலப்பிரபுத்துவம் அடித்தளமாக இருக்கிறது. இப்படி எந்த சமூகப் பொருளியல் இல்லாமல் ஒரு கருத்து உருவாகவோ திடப்படுவதோ இல்லை. அப்படி இல்லையென்றால் “தேசியம் என்பது கற்பிதம்” என்ற பின் நவீனத்துவ வாதிகளின் கருத்துக்கு எப்படி வந்தடைந்தார்களோ அதே நிலமைதா இருக்கும்.
அதை சரியான சுயவிமர்சனமாக ஏற்கவும். எதை எதிர்பார்க்கிறோமோ அதை நாம் செய்ய வேண்டும்.
//நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ள நிலைபாட்டில்தான் இப்போதும் உறுதியாக இருக்கிறோம்.//
என்று அடம்பிடிக்கக் கூடாது. ஒரு விசயத்தில் விளக்குவதில் சில தவறுகள் நிகழலாம் அதற்காக மொத்தக் கருத்தையும் நாம் மாற்றிகொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்தவில்லை.
//ஒவ்வொரு சமூகத்தையும் தனித்தனியாக பார்க்கும், நிகழ்கால சமூகத்திலேயே எதிர்கால சமூகத்தின் கரு உருவாகிவிடுகிறது//
ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிட்டு அல்லது மறுத்துவிட்டு பேசுகிறீர்கள். மேற்கோள்களை துண்டுதுண்டாக படிக்கக் கூடாது. அல்லது விளக்கக் கூடாது. இங்கு கரு என்பது கருத்து அல்ல. அதன் பொருளியல் அம்சமே அதுதான். நிலப்பிரபுத்துவ வர்க்கத்தில்தான் அதில் ஒரு துணை வர்க்கமான சிறு தொழில் செய்பவர்கள் கொல்லர்கள், நெசவாளிகள் போன்றவர்களும், வியாபாரிகளும், அறிவாளிகளும் ஆகியவர்களுள் ஒரு பிரிவினர் முதலாளித்துவ வர்க்கத்தில் ஆளும் வர்க்கமாக மாறுகின்றனர். அதே போல் முதலாளித்துவ வர்க்கத்தில் இருக்கிற உற்பத்தியில் ஈடுபடுகிற பாட்டாளி வர்க்கம்தான் அடுத்த சமூகத்தில் ஆளும் வர்க்கமாக மாறுகிறது. இந்த கரு என்பது கருத்து அல்ல அதன் சமூக பொருளியல் வர்க்கமே.
ஆகவே ஆரோகியமாக விவாதிக்கவும். நீங்கள் எந்த அமைப்பிலிருந்து வந்ததாக கூறுகிறீர்களோ அந்த அமைப்பின் பண்பையும் சேர்த்தே எடுத்து வந்துவிட்டீர்களா? ஜனநாயகத் தன்மையோடு விவாதியுங்கள். அதைவிடுத்து அவர் எந்த பெயரில் விவாதித்தால் என்ன? பெயரே இல்லாமல் விவாதித்தால் என்ன? இதற்கெல்லாம் ஒரு பதிலா. கருத்துக்களை விவாதிக்கவே தளம்.
நம்மை அறியாமலே எல்லோரும் கருத்துமுதல்வாதத்தையும், இல்லையென்றால் கலவை வாதத்தையும் வைத்துக்கொண்டிருக்கலாம். சில நேரங்களில் வெளிப்படுத்தி விடுவதும் உண்டு. சுட்டிக் காட்டும்போது திருத்திக்கொள்வதுதான் கம்யூனிஸ்டுகளின் முதல் பண்பு.
ஆரோகியமாக தொடர வாழ்த்துக்கள்
//உங்களுக்கு உங்களுடைய அமைப்போடு சில விசயங்களில் தனிப்பட்ட முரண்பாடு. அந்த முரன்பாட்டில் அவர்களோடு பகையை தீர்த்துக்கொள்வதற்காக//
பகத் அவர்களே அப்படி என்ன விசயத்தை அவர்களுடைய தனிப்பட்ட பகையாக கண்டுபிடித்தீர்கள். அதை தெரிந்துகொள்ள எனக்கும் ஆவல். நீங்கள் கண்டுபிடித்த அந்த அறிவை அடுத்தவர்களுக்கும் கொஞ்சம் கொடுங்களேன்.
வாங்கும் சக்திகொண்டோரின்-சொத்துடைமை வர்க்கத்தின் ஜனநாயகத்தையே சமூகத்தில் உள்ள அனைவருக்குமான ஜனநாயகமாக ஏமாற்றும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஜனநாயகம் என்ற சொல் வெறுமனே கருத்தியல் கோட்பாடு அல்ல.வரம்புக்குட்பட்ட தனது பொருளியல் நலன்களையே அனைவருக்குமான நலனாக, ஜனநாயகமாக சித்தரித்து சமூகத்தில் பெரும்பான்மை மக்களை ஏமாற்றுகிற முதலாளித்துவ வர்க்கத்தின் கருத்து உழைக்கும் மக்களுக்கு,கருத்தியல் அடிப்படைக் கொண்டதே தவிர பொருளியல் தன்மை கொண்டதல்ல.உலகில் இதுவரை தோன்றியுள்ள சொத்துடைமை வர்க்கங்களின் கருத்தியல் கண்ணோட்டத்திலேயே மிகவும் நயவஞ்சகமான வடிவத்தை கொண்டதுதான் முதலாளித்துவ ஜனநாயக வடிவமாகும்.இந்த வடிவத்தின் மூலம்தான் தம்மால் சுரண்டப்படும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஏமாற்றி தமது வர்க்கநலனை பாதுகாத்து கொள்ளும் சிறந்த கவசமாக ஜனநாயகத்தை பயன்படுத்துகிறது.
ஆகவே இயங்கியல் பொருள்முதல்வாதம் என்பதும் அனைத்துவர்க்கத்துக்குமான பொது கோட்பாடு அல்ல.அது பாட்டாளிவர்க்கத்தின் நலன்களை உள்ளடக்கிய வர்க்க சார்பு கோட்பாடேயாகும்.இயங்கியல் பொருள்முதல்வாதத்தை அனைவருக்குமான கோட்பாடாக புரிந்துகொள்வோரும் அல்லது திட்டமிட்டு குழப்புவோரும் உங்களை போன்றுதான் கருத்துகளை முன்வைப்பார்கள்.இதில் நாங்கள் ஆச்சரியம் அடைவதற்கு ஒன்றுமில்லை.
விவாதத்தை சகிப்புத்தன்மை- ஜனநாயக தன்மையுடையதாக நெறிப்படுத்த முயலும் தோழர் விவாதகனுக்கு நன்றி
தோழர் சூறாவளிக்கு, நான் இயக்கம் சார்புடையவன் என்பதை கண்டுபிடிக்க இத்தனை சிரமப் பட்டிருக்க வேண்டாம். அது ஊரறிந்த ரகசியம். என் தனிப்பட்ட கருத்துக்களை இயக்கத்தின் சார்பாக வெளியிடும் உரிமை எனக்கு இல்லை என்பதால் என் பெயரில் பதிவிட்டுள்ளேன். உங்களுக்குத் தெரியுமா சிவக்குமார் என்பது என் சொ....ந்...த..ப் பெயர். பொய்ப்பெயரல்ல. இது உங்கள் தகவலுக்காக.
சூறாவளி//ஒவ்வொரு சமூகத்தையும் தனித்தனியாக பார்க்கும், நிகழ்கால சமூகத்திலேயே எதிர்கால சமூகத்தின் கரு உருவாகிவிடுகிறது என்ற இயக்கவியலை மறுக்கும் உங்களை போன்றோர்களின் பிதற்றல்களுக்கு பதில் கூறிக்கொண்டு இருப்பது எனக்கு தேவையற்ற செயலாகும்.// என்று என்மீது குற்றம்ச்சாட்டியுள்ளீர்கள்.
ஏற்கனவே இப்படித்தான் இயக்கத்தின்மீதும் குற்றம் சாட்டினீர்கள் இயக்கமும் "இப்போதாவது இயக்கம் முன்வைத்துள்ள விமர்சனங்களில் எது அரைவேக்காட்டுத்தனமானது; எது பிதற்றல் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா தோழர்களே." என்று பின்னூட்டம் இட்டால் http://suraavali.blogspot.com/2011/09/blog-post_20.html அதற்குப்பதில் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்.
எதை வைத்து என்மீது இந்தக் குற்றச் சாட்டைக் கூறுகிறீர்கள். குறிப்பிட்டுக் குற்றம்சாட்டினால்தானே விவாதிக்க முடியும். தவறிருந்தால் சுயவிமர்சனம் செய்துகொள்ள முடியும். அதைவிடுத்து // உங்களை போன்றோர்களின் பிதற்றல்களுக்கு பதில் கூறிக்கொண்டு இருப்பது எனக்கு தேவையற்ற செயலாகும்.// என்று நீங்கள் பதிலளிக்க மறுப்பதை எப்படிப் புரிந்து கொள்வது? "கூடை வச்சிருக்கிறவங்களுக்கெலாம் பெட்ரோமாக்ஸ் லைட் தற்றதில்லை" என்று கவுண்டமணி சொல்றது மாதிரி என்று புரிந்து கொள்ளலாமா?
//ஆகவே இயங்கியல் பொருள்முதல்வாதம் என்பதும் அனைத்துவர்க்கத்துக்குமான பொது கோட்பாடு அல்ல.அது பாட்டாளிவர்க்கத்தின் நலன்களை உள்ளடக்கிய வர்க்க சார்பு கோட்பாடேயாகும்.இயங்கியல் பொருள்முதல்வாதத்தை அனைவருக்குமான கோட்பாடாக புரிந்துகொள்வோரும் அல்லது திட்டமிட்டு குழப்புவோரும் உங்களை போன்றுதான் கருத்துகளை முன்வைப்பார்கள்.//
ஒரு தவறான புரிதலை சரியான புரிதல் போல் அடித்துப்பேசுவதற்கு எங்கிருந்து கற்றுக் கொண்டீர்கள் சூறவளி?
நீங்கள் புரிந்து கொண்டிருப்பதுபோல் இயங்கியல் பொருள்முதல்வாதம் என்பது பாட்டாளி வர்க்கச்சார்புக் கோட்பாடல்ல. இயங்கியல் பொருள்முதல்வாதம் என்பது கருத்துமுதல்வாதப் பார்வைக்கு மாறான மனிதகுலத்தின் உலகப் பார்வை- அது ஒரு சிந்தனைமுறை. அதுவே சரியான சிந்தனைமுறையும்கூட. உண்மையை உயர்த்திப் பிடிக்கும் துணிவிருக்கும் எந்த வர்க்கமும் இயங்கியல் பொருள்முதல்வாதப் பார்வையைக் கைக்கொள்ளலாம். ஆனால் இன்றைய நிலையில் உண்மையை உயர்த்திப் பிடிக்கும் துணிவுள்ள வர்க்கமாக பாட்டாளி வர்க்கம் மட்டுமே இருப்பதால் பாட்டாளிவர்க்கத்தின் உலகப் பார்வையாக இயங்கியல் பொருள்முதல்வாதம் உள்ளது. நீங்கள் தலைகீழாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் சூறாவளி.
Post a Comment