விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Monday, 6 August 2012

வின(வு)விடம் வினவாதே விபரீதம்……!

ம.க.இ.க- வில் இருந்து விலகிய  சரவணராஜா, ரூபக்காந்த் காந்தன் மற்றும் ம.க.இ.க ஜனக்குமரன் ஆகியோருக்கிடையே அண்மையில் இணையத்தில் விவாதங்கள் நடைபெற்றுள்ளது.அதன் சுட்டி(https://www.facebook.com/photo.php?fbid=332810350143496&set=a.256342241123641.60945.100002436007436&type=1&theater) இதனூடாக சில சுவையான செய்திகள் வெளிவந்துள்ளது.



இந்தியாவிலேயே ஒரே புரட்சிகர அமைப்பு என்று தம்மை தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மகஇக கும்பல் தம்மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் கூறாததைப் பற்றியது அந்த விவாதம்.

மாநில அமைப்புக் கமிட்டி, இந்திய  பொதுவுடைமைக் கட்சி (மாலெ) என்ற  கட்சி ஆரம்பித்து ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. இந்த முப்பது ஆண்டுகளில் மகஇக, விவிமு, புமாஇமு, புஜதொமு, பெவிமு,ம.உ.பா.மையம் ஆகிய அமைப்புகளையும், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் ஆகிய இதழ்களையும், வினவு இணையத்தளத்தையும் நடத்தி வருகிறது.

மேலே கண்ட அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவைகளின் மூலம் இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தப் போவதாக இந்த கட்சி கூறிக்கொள்கிறது. இக்கட்சி தான் கூறிக்கொள்ளும் புதிய ஜனநாயக புரட்சி என்ற இலக்கை நோக்கி எந்த அளவிற்கு சென்றுள்ளது  அதற்காக அது கையாளும்  அமைப்பு முறைகள் பற்றிய மேற்கண்ட தோழர்களின் விவாதத்தில் எம்முடைய கருத்துக்களை இனி பார்ப்போம்.  

ஒரு புரட்சிகர அமைப்பை பற்றி விமர்சித்தால் அதுவும் சூறாவளி, சரவணராஜா போன்றோர் எழுதிய கட்டுரைக்கு பதில் ஏன் கூறவில்லை என்று இந்த இணையதள புரட்சியாளர்களிடம் கேள்வி கேட்டால் அவர்கள் தனி மனிதர்கள், தனி மனிதர்களின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் அளிப்பதெல்லாம் ஒரு புரட்சிகர அமைப்பிற்கு தேவையில்லாதது என்று சொல்கிறார்கள். ஏனென்றால் தனி மனிதர்கள் ஆயிரம் பொய்களை கூறுவார்கள் அதற்கு பதில் அளிக்க தேவையில்லாதது என்று கூறும் இவர்கள் அமைப்பு ரீதியாக, கட்சி ரீதியாக விமர்சனம் வந்தால் பதில் அளிப்பார்களாம்”

மகஇக கும்பலைப் பற்றி  ரூபக்காந்த் காந்தன்  கூறியுள்ள மேலே கண்ட செய்தியிலிருந்து தனி மனிதர்கள் அனைவரும் பொய் மட்டுமே சொல்வார்கள். அமைப்புகள் மட்டுமே உண்மையை பேசும் என்று பொருளாகிறது.ஆனால் பல நேரங்களில் தமிழகத்திலும், இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் உள்ள பல்வேறு அமைப்புகளும் பொய் சொல்வதாக இவர்கள் கூறியிருக்கிறார்கள்.  இப்படி கூறியிருக்கிறார்கள் என்று கூறுவதன் மூலம் அமைப்புகளும் பொய் சொல்லும் என்றும் கூறுகிறார்கள். அப்படியானால் தனி மனிதர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதற்காக பதில் கூறமாட்டோம் என்பதை விட அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற இவர்களின் அகம் பாவமும், இருமாப்பும் தான் இப்படி கூறவைக்கிறது.

 முன் வைக்கப்படும் விமர்சனங்களும், கேள்விகளும் தனிமனிதர்களால் வைக்கப்பட்டதா அல்லது அமைப்பு ரீதியாக வைக்கப்பட்டதா என்பதை விட, அவைகள் சரியானவையா, இல்லையா, அவைகள் புரட்சியின் நலன்களுக்கு ஏற்புடையதா, இல்லையா என்று பார்ப்பதுதான் நேர்மையான செயலாக இருக்க முடியும்.

சூறாவளி, சரவணராஜா போன்றோர் தனிமனிதர்கள் அவர்களுக்கு எல்லாம் பதில் அளிப்பது நம்முடைய வேலை இல்லை என்ற வதந்தியை இவர்கள் பரப்பினாலும் உண்மையில் இதற்கு நேர்மாறாகத்தான் அவர்களின் செயல்கள் அமைந்துள்ளது. தனி மனிதர்கள் என்று இவர்கள் கூறினாலும் உண்மையில் அவர்களைக் கண்டு இவர்கள் அஞ்சி நடுங்கவே செய்கிறார்கள். தமது பிழைப்பிற்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அலறுகிறார்கள். இதை நிரூபிக்கும் வகையில் சரவணராஜா பற்றி அந்த அமைப்பு கூறியதாக அந்த அமைப்பை சேர்ந்த ஜனக்குமரன் எழுதியுள்ளதையும், அதற்கு சரவண ராஜா அளித்துள்ள பதிலையும்  கீழே தருகிறோம் பாருங்கள்.

மகஇக வின் அருள் வாக்கு கட்டுரையில் அரசியல் விமர்சனத்தை விட அமைப்பு தலைமையை திட்டித் தீர்க்கும் வன்மையும், இழிவுப்படுத்துவதும் இருந்தது.

மேலும் அந்தக் கட்டுரையை ஒட்டி உங்களைப் பற்றி கேட்டதற்கு சொந்த வாழ்க்கையை பார்க்க போகிறேன். அமைப்பின் மீது எந்த விமர்சனமும் இல்லை”, என சொல்லி வந்தீர்கள் என சொன்னார்கள்.

ஜனக் குமரனின் மேற்கண்ட செய்திக்கு, ”பொது வெளியில் ஒரு விமர்சனம் வைத்த பிறகு அது யார் வைத்தால் என்ன அதற்கு பதில் சொல்ல கம்யூனிஸ்டுகளுக்கு கடமை உண்டு. அதை விடுத்து என்னைப் பற்றி என்னென்ன அவதூறுகள் தனிப்பட்ட முறையில் பரப்பபடுகின்றன என நன்கறிவேன்” என்று சரவண ராஜா கூறியுள்ளார். இந்த அனுபவம் சரவண ராஜாவுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் உண்டு.

உண்மையில் தனி மனிதர்கள் என்று இவர்கள் கூறும் நபர்களைக் கண்டு இவர்கள் அஞ்சவில்லை என்றால் எதற்காக அவர்களைப் பற்றி உண்மைக்குப் புறம்பான வதந்திகளை பரப்புகிறார்கள்? அச்சம்தான் இப்படி வதந்தி பரப்ப இவர்களை தூண்டுகிறது.

தனி மனிதர்களின் விமர்சனங்களுக்கு பதில் தரமாட்டோம் என்பதும்,அமைப்பு ரீதியாக விமர்சனங்கள் வந்தால் மட்டுமே பதில் கூறுவோம் என்று கூறுவதும் தமது பிழைப்பிற்கு ஆதாரமான அணிகளை தக்க வைத்துக் கொள்வதற்காகத் தான். ஆனால் பாவம் இந்த அணுகுமுறை மிகவும் கிழடு தட்டி போனதாகும்.

ஏனென்றால் இது எழுபதுகளில் உருவாக்கப்பட்ட அணுகுமுறை.அன்று தனிமனிதர்கள் ஊடகங்களை நட்த்த முடியாது,இதன் காரணமாக தனி மனிதனின் செயல்பரப்பு மிகவும் குறுகியதாகும்.ஆனால் இன்றோ விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இணையதளம் என்ற ஊடகம் ஒவ்வொரு மனிதனின் கைக்குள்ளேயே வந்து விட்டதால் இந்தக் கும்பல் செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கிறது. இதன் மூலம் இக்கும்பலின் நேர்மையின்மையும் தவிர்க்க வியலாமல் வெளிப்பட்டு விடுகிறது.
அடுத்து அமைப்பு ரீதியாக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மட்டுமே பதில் அளிப்போம் என்று கூறுவதும் இவர்களின் நேர்மையின் வெளிப்பாடல்ல. அது அமைப்பு ரீதியாக வைக்கப்படும் விமர்சனங்கள், அந்த விமர்சனங்களை வைக்கும் அமைப்புகளின் ஊடகங்களின் வாயிலாக வெளியிடப்படுவதால் அது தனது பிழைப்பிற்கு குந்தகத்தை ஏற்படுத்தி விடும் என்பதால்தான் பதில் கூறுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதிலும் ஒரு தந்திரத்தை இப்போது கையாள்கிறார்கள். அதாவது அவர்களின் கண்ணோட்டத்தின் படி அவர்களைத் தவிர தமிழகத்தில் வேறு புரட்சிகர அமைப்புகளே கிடையாது. இவர்களைத் தவிர வேறு புரட்சிகர அமைப்புகளே இல்லாதபோது அமைப்பு ரீதியாக விமர்சனங்களும் இல்லை, அதற்கு பதில் அளிக்க வேண்டிய தேவையும் இல்லை.
இதை அணிகளையும் ஏற்கவைத்துவிட்டால்,இப்போது இருக்கிற அணிகளை தக்கவைத்துக்கொள்வது,பிரச்சனையில்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.ஆனால் புதிய அணிகளை உருவாக்குவதிலும்,அதிலும் குறிப்பாக மக்களைத் திரட்டுவதில் இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப்பற்றி அவர்களுக்கு எந்தவித கவலையுமில்லை.ஏனென்றால் இந்த முப்பதாண்டு காலத்தில் மக்களைத்திரட்டுவதற்கு அவர்கள் தவறுதலாகக் கூட சிந்தித்தது கிடையாது.இந்த நிமிடம் வரை கட்சிக்கு முழுநேர,பகுதி நேர ஊழியர்களை உருவாக்குவதுதான் அவர்களின் இலக்கு.

இதற்கு ஏற்பத்தான் வர்கள் தமது அனைத்து செயல்பாடுகளையும் அமைத்துக்கொள்கிறார்கள்.வெகுசன அமைப்புகள்,ஊடகங்கள் ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றப்படும் மைய இயக்கங்கள்,பிரச்சாரங்கள்,தனிநபர்களை சந்திப்பது உட்பட அனைத்து செயல்பாடுகளும் இதற்காகத்தான்.இது நிறைவேறிய பிறகுதான் மக்களைத்திரட்ட முடியும் என்கிறார்கள்.

முழுநேர,பகுதி நேர ஊழியர்களை திரட்டிய பிறகுதான் மக்களை திரட்ட முடியும் என்று தலைமைக்கூறுவதை அந்த அமைப்பில் உள்ளவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்.

இதனடிப்படையில் தான் ஆண்டு இலக்குகளும்,மாதாந்திர வேலைத்திட்டமும் போடப்படுகிறது.இந்த முப்பதாண்டு காலத்தில் ஒரு ஆண்டில் கூட தம்முடைய இலக்கை இவர்கள் பத்து விழுக்காடு அளவுக்குக்கூட அடைந்ததில்லை.இப்படி இலக்கை அடைய முடியாததற்கு அணிகளின் திறமையின்மையும்,அற்பணிப்பு இன்மையும்தான் காரணம் என்று தலைமைக்கூறுவதை அணிகளும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்.

போகாத ஊருக்கு வழி சொல்லுவதைப் போன்று அடைய முடியாத, இயங்கியலுக்கு புறம்பான திட்டத்தை தருவதன் மூலம் அது தோல்வியடைகிறது.ஆனால் இந்த தோல்விக்கு அணிகள்தான் காரணம் என்றுக்கூறி அவர்களை குற்ற உணர்வுள்ளவர்களாக மாற்றுகிறார்கள்.அணிகளின் இந்த குற்றவுணர்வுதான் தலைமை மீதான விசுவாசமாக உருவெடுக்கிறது.

தாம் கொடுக்கும் திட்டம் நிறைவேறாது என்பது தெரியாமல் அல்ல,மிக நன்றாக தெரிந்தேதான் தருகிறார்கள்.இவர்கள் தரும் திட்டத்தின் உண்மையான நோக்கமே, இச்சமூகத்தில் சமூக உணர்வுள்ள ஒரு சிலரையும் குற்றவுணர்வுக்கு ஆளாக்கி அவர்களின் சிந்தனா சக்தியை இல்லாமல் ஆக்குவதுதான்.

கட்சியை பலப்படுத்தினால்தான் புரட்சியை சாதிக்க முடியும் என்பதை நாம் மறுக்கவில்லை.இப்படி கூறுவது தவறான கண்ணோட்டம் என்றும் கூறவில்லை.கட்சி அணிகளை வென்றெடுப்பதையும்,மக்களை அணி திரட்டுவதையும் தனித்தனியான,இரு வெவ்வேறான நடவடிக்கைகளாக காட்டுவதுதான் இயக்க மறுப்பியல் கண்ணோட்டம் என்கிறோம்.
மக்களை திரட்டுவதற்கு முழு நேர,பகுதிநேர ஊழியர்கள் குறிப்பிட்ட அளவிற்கு தவிர்க்கவியலாத தேவையை,அவசியத்தை நாம் உணராதவர்களில்லை.இந்த குறிப்பிட்ட அளவு சக்தி கிடைத்த பிறகு,அதைக்கொண்டு மக்களை திரட்டுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும்.இதன் மூலம்தான் வெகுசன அரங்கு வேலைகளின் மூலம் கட்சிக்கான முழுநேர,பகுதிநேர ஊழியர்களும் வென்றெடுக்கப்படுவதற்கான பரப்பு விரிவாக்கபடுகிறது.

இப்படி கட்சி ஊழியர்கள் மக்களைத் திரட்டுவதும்,இதன் ஊடாக கட்சி பலப்படுத்தப்படுவதுமான இயங்கியல் போக்கினால் புரட்சிகர செயல்பாடுகள் புதிய உத்வேகத்தோடு முன்னேற்றத்தைக் காணும்.
ஆனால் இதற்கு நேர்மாறாக கட்சி அணிகளை வென்றெடுப்பதையும்,மக்களைத் திரட்டுவதையும் இரு வெவ்வேறான, தனித்தனியான பணிகளாக பார்க்கும், இயங்கியலுக்கு புறம்பான இவர்களின் கண்ணோட்டமும்,செயல்பாடுகளுமே முப்பதாண்டுகளுக்கும் மேலாக இவர்களை முன்னேற விடாமல் தடுக்கிறது.

இயங்கியலின் படி இவ்வுலகில் உள்ள அனைத்தும் இடைவிடாது இயங்கிக்கொண்டும்,மாறிக்கொண்டும்தான் உள்ளது.எதுவும் நிலையாக அப்படியே இருப்பதில்லை. இந்தக்கும்பல் இயங்கியலுக்கு புறம்பான தமது செயல்பாடுகள் மூலம் வளர்ச்சிக்கு பதில் தேய்வையே சந்தித்து வருகிறது.
இந்த தேய்வின் மூலம் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்கு தவிர்க்கவியலாமல் முன்பு தான் கடைபிடித்த சில வழிமுறைகளுக்கு மாறாக, அதற்கு நேர்மாறான வழிமுறைகளை இப்போது கையாள தொடங்கிவிட்டனர்.

இதன்படிதான் மனித உரிமை பாதுகாப்பு மையம் என்ற அமைப்பையும்,வினவு என்ற ஊடகத்தையும் உருவாக்கி புதிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்திப் பார்த்து அவற்றை பிற அரங்குகளுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தி வருகின்றனர்.
*
* ஆதிக்க சாதிவெறி,இலஞ்சம்,ஊழல்,கந்துவட்டி,ஆரம்பர வாழ்க்கை உட்பட எப்படிப்பட்ட பிற்போக்குத்தனத்தோடும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தில் இணைந்துகொள்ளலாம்.இவைகளை கைவிட வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

* குடிக்கவே கூடாது,குடிப்பவர்களை அமைப்பில் உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று விதி வைத்திருந்தவர்கள்,இப்போது எப்போதாவது குடிப்பதில் தவறில்லை என்று அறிவித்து தம்மை தீவிரமான ஜனநாயகவாதிகளாக காட்டிக்கொள்கிறார்கள்.

* இழப்பதற்கு ஏதுமற்றவர்களாக தம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும்.இதன் படி கட்சி உறுப்பினர்கள் தமது வருவாயில் அத்தியாவசிய செலவுகள் போக ஏனையவற்றை கட்சிக்கு தரவேண்டும் என்று முன்பு விதி வைத்திருந்தனர்.

இப்போது இதற்கு நேர்மாறாக ஒருசில மாதங்களிலேயே அரைகோடி ரூபாய்க்கும் மேல் கட்சி உறுப்பினர் ஒருவர் சொத்து சேர்த்ததை,அது எப்படி வந்தது? என்றக் கேள்வியை அமைப்புரீதியாக நாங்கள் எழுப்பிய பின்னரும் கூட அந்த சொத்து தவறான வழியில் வந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால் கொடுங்கள்”,என்று கேள்வி எழுப்பிய எங்களிடமே கேள்வி கேட்டதன் மூலம் அதை நியாயப்படுத்துகிறார்கள்.ஆனால் இப்படிபட்ட உத்தமர்கள்தான் தனி மனிதர்களுக்கு பதில் சொல்ல மாட்டோம்,அமைப்பு ரீதியாக கேட்டால்தான் பதில் சொல்லுவோம் என்கிறார்கள்.

* தங்கையை தாரமாக்கிக்கொண்ட தனது அண்ணனின் இழிசெயலை ஆதரித்த ஒருவனை அன்று நாங்கள் அமைப்பில் இருந்து வெளியேற்றினோம்.இப்போது அவனை தமது அமைப்பில் மீண்டும் இணைத்துக்கொண்டு செயல்படுகின்றனர்.தனது முந்தைய தவறுக்காக சுயவிமர்சனம் செய்துகொண்டிருக்கலாம், அதனால் அந்நபரை மீண்டும் அமைப்பில் இணைத்துக்கொண்டிருக்கலாம் என்று பலரும் நினைத்துக்கொள்ளலாம்.ஆனால் அவனோ மேலும் இரு அண்ணன்,தங்கை தகாத உறவுக்கு ஆதரவளிப்பதுடன்,இப்படிபட்டவர்களை ஒருங்கிணைக்கும் வேலையிலும் ஈடுபட்டுவருகிறான்.

மேலே நாங்கள் பட்டியலிட்டுள்ளவைகளின் மூலம் இந்த கும்பல் அனைத்து பிற்போக்குதனங்கள் மூலமே தம்மை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.இவைகள் புத்தகங்களில் எழுத்தாக உள்ள கோட்பாட்டு விவகாரங்கள் மட்டுமல்ல,நடைமுறையில் அசைக்க முடியாத ஆதாரங்களாகவும் உள்ளன.

தனி மனிதர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று கூறுவதன் மூலம் தம்முடைய தவறுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று கருதுகிறது இந்தக்கும்பல்.நாங்கள் இவைகளை இப்போது எழுப்பவில்லை.அமைப்பில் இருந்த போதே எழுப்பினோம்.ஆனால் இவைகளுக்கு அவர்கள் தந்த பதில் எங்களை அமைப்பை விட்டு வெளியேற்றிவிட்டோம் என்பதுதான்.நாங்கள் குழுவாகத்தான் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டோம்.அன்றில் இருந்து அமைப்பாகவும்தான் செயல்பட்டுவருகிறோம்.         

இவர்களுக்கு வெளியில் புரட்சிகர அமைப்புகளே இல்லை என்று இவர்கள் கருதுவதால் இப்படிப்பட்ட விமர்சனங்கள் இவர்களின் அமைப்பிற்குள்ளே இருந்து வந்தால்தான் உண்டு. அப்படி வருமா? அப்படி வந்தால் அதை எப்படி சமாளிப்பார்கள் என்பதை இனி பார்ப்போம்.

இவர்களிடம் கட்சி, வெகுசன அரங்கு என்று இரண்டு உள்ளது.இதில் ஆதரவாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆதரவாளர்கள், பகுதி அமைப்பாளர்கள், செயலர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகள், அரங்கு பொருப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், விகு,கதுகு, பகுதி பொருப்பாளர்கள், மாவஅக,மாஅக, புஜ, புக பத்திரிக்கை ஆசிரியர் குழு, வினவு ஆசிரியர் குழு இப்படி எல்லாருமாக சேர்த்து ஒரு ஐநூறு பேர் தேறுவார்கள்.
இவர்கள் வகிக்கும் பொறுப்புகளுக்கான தகுதியே கேள்வி கேட்காத விசுவாசம் தான். அதாவது சுயமாக சிந்திக்கும் தகுதியை இழந்து விடுவதுதான் அந்த விசுவாசம். இவ்வளவு கடுமையான கோட்டைக்குள்ளே தான் சூறாவளி, சரவண ராஜா போன்றோர் நுழைந்து விடுகிறார்கள். தமது குழுக்களில் கேள்விகளையும், விமர்சனங்களையும் எழுப்புகிறார்கள். அவைகள் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு நிராகரிக்கப்பட்டும் விடும்.

தப்பித் தவறி எம்மைப்போன்ற போன்ற குழுவினர் ஒரு மனதாகவோ அல்லது பெரும்பான்மையாகவோ விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பி விட்டால் அவைகள் பகுதி பொருப்பாளர் அல்லது மாஅக  ஆகியோரால் நிராகரிக்கப்பட்டு விடும்.

இதன் பிறகும் தமது விமர்சனங்களின் மீது,  எழுப்பியவர்கள் உறுதியாக நின்றால் ஜனநாயக மத்தியத்துவ மீறல் என்று கதையை முடித்து விடுவார்கள். மொத்தத்தில் அங்கே விமர்சனம் வைப்பவர்கள் அனைவரும் தனி மனிதர்களாகி விடுவார்கள்.

அமைப்பிற்குள்ளவே விமர்சனம் வைப்பவர்கள் தனி மனிதர்கள் என்றால் அமைப்பிற்கு வெளியில் உள்ள கோடிக்கணக்கான மக்களும் இவர்களின் கோட்பாட்டின்படி தனி மனிதர்கள் தானே!?

எனவே இவர்களை கேள்வி கேட்கவோ, இவர்கள் மீது விமர்சனம் வைக்கவோ இந்த நாட்டில் எவருக்கும் தகுதி இல்லை. ஏனென்றால் இவர்கள் அகராதியில் கேள்வி கேட்பவர்கள், விமர்சனம் வைப்பவர்கள் அனைவரும் தனி மனிதர்கள்.

அமைப்பில் உள்ளவர்கள் விமர்சனங்கள் வைத்தால் அவர்கள் தனி மனிதர்களாக்கப்படுவதோடு, தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கப்படுகிறார்கள். இப்படி தீண்டத்தகாதவர்களோடு அமைப்பில் உள்ள யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. இதை மீறுபவர்களும் தீண்டத்தகாதவர்களாக மாற்றப்பட்டு விடுவார்கள். இதற்கு பயந்துதான் அங்கே உள்ளவர்கள் அதை மீறுவதே இல்லை.(இந்த பயத்திற்கான காரணம் பற்றி யாராவது தெரிந்து கொள்ள கேளுங்கள் அப்போது அதைப்பற்றி விவாதிப்போம்)

இந்த கோட்பாட்டின் அடிப்படையில் தான் அவர்கள் தனி மனிதர்களான மக்களிடத்திலே தொடர்பு வைத்துக் கொள்வதும் இல்லை.
ம்ம்..... என்றைக்கு நாட்டில் உள்ள மக்களில் பெரும்பான்மையினர் இவர்களின் அணிகளைப் போன்று சிந்திக்கும் திறனை மூட்டைக் கட்டி வைப்பது.... அதன் பிறகு இவர்கள் அவர்களை அமைப்பாக்கி புரட்சி நடத்துவது!

பிறகு எதற்காக மக்கள் திரள் பாதை என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?

மக்கள் திரள் பாதை என்றால் நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதைப் போன்று மக்களை திரட்டி புரட்சியை நடத்துவது அல்ல. பேருந்துகளிலும்,ரயில்களிலும் உண்டியல் குலுக்குவதற்கு பெயர்தான் மக்கள் திரள் பாதை!

அங்கேயும் எவனாவது கேள்வி கேட்டு விட்டால் என்ன செய்வார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்? சந்தேகமே வேண்டாம். அப்படிப் பட்டவர்களிடம் உண்டியலை காட்டவே மாட்டார்கள் நமது தோழர்கள்! வற்புறுத்தி தந்தாலும் புரட்சிகர உறுதியோடு அவற்றை நிராகரித்து விடுவார்கள்! அவ்வளவு கொள்கை உறுதியுடையவர்கள் அவர்கள்.
அமைப்பில் கேள்விகள், விமர்சனங்கள் வைப்பவர்களை தீண்டத்தகாதவர்களாக ஆக்குவதில் இவர்களின் நிபுணத்துவம் உங்களை மலைக்க வைக்கிறதா?

அந்த நிபுணத்துவம் அவர்களின் ரத்தத்தில் அவர்களின் பார்ப்பன மூதாதையர்களின் வழியே வந்ததாகும்.

சங்க காலத்தில் தமிழகத்தில் ஊடுருவிய இவர்களின் பார்ப்பன மூதாதையர்கள் தமது சாதிய சித்தாந்தத்தை ஆளுவோர் மூலம் மக்கள் மீது திணித்தார்கள். அதை ஏற்காமல் கேள்வி கேட்டவர்களையும், விமர்சனம் வைத்தவர்களையும் தீண்டத்தகாத சாதிகளாக வட இந்தியாவைப் போன்றே ஊரை விட்டே ஒதுக்கி வைத்தனர்.

சாதிய சமூகத்தை கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக படிநிலை வடிவத்தின் மூலம் இன்று வரை அவர்களால் பாதுகாக்க முடிகிறது. இதே போன்று தான் மகஇக கும்பலும் கீழிருந்து மேலாக படியடுக்கு முறையில் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு குழுவும் எதில் உறுதியாக இருக்கிறதோ, இல்லையோ விமர்சனம் வைப்பவர்களை தீண்டத்தகாதவர்களாக கருதுவதில் மட்டும் மிகவும் உறுதியாக இருந்து தமது விசுவாசத்தை தலைமைக்கு நிரூபிக்கின்றனர்.இதன் பிறகும் அவர்களோடு விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது?இந்த கழிசடைகளை மக்களிடையே அம்பலப்படுத்தி விரட்டியடிக்கின்ற பணிதான் நம்முன்னே காத்திருக்கின்றது.

தொடர்புடைய கட்டுரைகள்:

 1.  காயடிக்கும் கட்சி 
                      


4.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2













        

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

9 comments:

Prakash said...

உங்களது அமைப்பை பற்றி தெரிந்துகொள்ளலாமா?

குமரன் said...

இந்த கட்டுரையில் மகஇக ஜனக்குமரன் என குறிப்பிடுகிறீர்கள். நான் மகஇக அமைப்பில் இல்லை. அப்படி எந்தவொரு சமயத்திலும் என் தளத்திலோ, முகநூலிலோ பகிர்ந்துகொண்டவன் இல்லை. ஆனால், ஆதரவாளர் என்று சொல்வதில் பெருமைபடுகிறேன்.

ஆனால், உறுதி செய்யாமலே இப்படி என்னை மகஇக இயக்கம் சார்ந்தவன் என்று ஏன் சூறாவளி சுழலும் அறிவிக்கவேண்டும். சந்தில் சிந்து பாடுவது என்பார்கள். அது இது தான் போல! இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

குமரன் said...

'பேனை பெருச்சாளியாக்குவது!' என்ற சொலவடையை கேட்டிருக்கிறேன். அதன் அர்த்தத்தை உங்களின் மூலமாக தான் அனுபவப்படுகிறேன்.

மகஇக இயக்கம் சாராத நான் சொன்ன ஒரு கருத்தை மகஇக அமைப்பே சொன்ன கருத்தாக உங்களால் எப்படி எடுத்துக்கொள்ள முடிந்தது? ஏனய்யா உங்களுக்கு வினவைப் பற்றி, மகஇக பற்றி எழுதுவதற்கு விஷயம் இல்லையென்றால், என்னை ஏன் ஊறுகாய் போல தொட்டுகொள்ள வேண்டும்? உங்க போதைக்கு நான் ஊறுகாயா?

வார்த்தைக்கு வார்த்தை இயங்கியல், அறிவியல் பூர்வமான அணுகுமுறை என்கிறீர்கள்? இதில் எங்கேய்யா உங்களது அறிவியல் பூர்வமான அணுகுமுறை இருக்கிறது?

suraavali said...

நண்பர் pk.edison அவர்களுக்கு.நிச்சயம் தெரிந்துகொள்ளலாம்.அதற்கு இக்கட்டுரைகளை படியுங்கள்.சுட்டிகீழே


1.விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -1
http://suraavali.blogspot.com/2011/10/1.html


2.விவசாயிகள்: நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் 2
http://suraavali.blogspot.com/2011/11/2_10.html

3.விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -3
http://suraavali.blogspot.com/2011/11/3.html

விவசாயிகள் நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்-4
http://suraavali.blogspot.in/2011/11/4.html

suraavali said...

நண்பர் ஜனக்குமரனுக்கு, நாங்கள் உங்களை மகஇக-வைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளதை ’வன்மையாக கண்டிக்கிறேன்’ என்று கூறியிருக்கிறீர்கள்.நீங்கள் அந்த அமைப்பின் ஆதரவாளர் மட்டும்தான் என்பதை இப்போது நீங்கள் கூறித்தான் நாங்கள் தெரிந்துகொண்டோம்.மகஇக-விற்கு ஆள்பிடித்து அனுப்புவது எமது வேலையில்லை.சரவணராஜா ,ரூபகாந்த் காந்தன் ஆகியோரோடு நடத்திய விவாதத்தில் இருந்துதான் நீங்கள் மகஇக உறுப்பினர் என்று எம்மை கருதவைத்தது.அப்படி எங்களை கருதவைத்த அந்த விவாதத்தில் உள்ள சில வாக்கியங்களை கீழே தருகிறோம்.

1.Roobakanth Kanthan: Jana Kumaran// தாங்கள் அமைப்புரீதியாக சில சந்தேகங்களை உங்கள் ம.க.இ.க வில் கேள்வி எழுப்புங்கள் பார்க்கலாம்.

2.Roobakanth Kanthan: Jana Kumaran// நல்லா தப்பித்துக்கொள்கிறீர்கள். நன்றி. என்னிடம் விவாதித்ததை உங்கள் குழுவிடம் தெரிவிக்காதீர்கள். தெரிவித்தீர்கள் என்றால்????????????

மேலே கண்ட இரண்டு வாக்கியங்களிலும் நீங்கள் மகஇக –வை சேர்ந்தவர் என்றுதான் தோழர் ரூபகாந்த் காந்தன் அவர்கள் குறிப்பிடுகிறார்.ஆனால் இதை நீங்கள் மறுக்கவில்லை,நீங்கள் அப்படி மறுத்திருந்தால், நாங்கள் உங்களை மகஇக-வைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருக்க மாட்டோம்.எனவே உங்களை மக இக-வைச் சேர்ந்தவர் என்று நாங்கள் கருதியதற்கு உங்களின் செயல்பாடுகள்தான் காரணமே தவிர, இதில் எங்களின் தவறு ஏதுமில்லை.

//”மகஇக வின் அருள் வாக்கு கட்டுரையில் அரசியல் விமர்சனத்தை விட அமைப்பு தலைமையை திட்டித் தீர்க்கும் வன்மையும், இழிவுப்படுத்துவதும் இருந்தது.


மேலும் அந்தக் கட்டுரையை ஒட்டி உங்களைப் பற்றி கேட்டதற்கு சொந்த வாழ்க்கையை பார்க்க போகிறேன். அமைப்பின் மீது எந்த விமர்சனமும் இல்லை”, என சொல்லி வந்தீர்கள் என சொன்னார்கள்.//
மேற்கண்ட உங்களின் செய்தியைத்தான் எடுத்து எங்கள் கட்டுரையில் நாங்கள் பயன்படுத்தியுள்ளோம்.இதைத்தான் நீங்கள்

//மகஇக இயக்கம் சாராத நான் சொன்ன ஒரு கருத்தை மகஇக அமைப்பே சொன்ன கருத்தாக உங்களால் எப்படி எடுத்துக்கொள்ள முடிந்தது?//என்று கூறியிருக்கிறீர்கள்.

உங்களின் மேற்கண்ட செய்திக்கு நாங்கள் //ஜனக் குமரனின் மேற்கண்ட செய்திக்கு, ”பொது வெளியில் ஒரு விமர்சனம் வைத்த பிறகு அது யார் வைத்தால் என்ன அதற்கு பதில் சொல்ல கம்யூனிஸ்டுகளுக்கு கடமை உண்டு. அதை விடுத்து என்னைப் பற்றி என்னென்ன அவதூறுகள் தனிப்பட்ட முறையில் பரப்பபடுகின்றன என நன்கறிவேன்” என்று சரவண ராஜா கூறியுள்ளார். இந்த அனுபவம் சரவண ராஜாவுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் உண்டு.//

என்று சரவணராஜாவின் அனுபவத்தை குறிப்பிட்டு அந்த அனுபவம் எங்களுக்கும் உண்டு என்றுதான் குறிப்பிட்டுள்ளோம்.

அதாவது //மேலும் அந்தக் கட்டுரையை ஒட்டி உங்களைப் பற்றி கேட்டதற்கு சொந்த வாழ்க்கையை பார்க்க போகிறேன். அமைப்பின் மீது எந்த விமர்சனமும் இல்லை.// என்று சரவணராஜா பற்றி அமைப்பு சொன்னதாக நீஙகள் கூறியுள்ள தகவலைத்தான் நாங்கள் எடுத்துக் கையாண்டிருக்கிறோம்.இதிலே உங்களின் தனிப்பட்ட கருத்து எங்கேயுள்ளது.ஆகவே மீண்டும் ஒரு முறை எமது கட்டுரையையும்,எமது கட்டுரையோடு தொடர்புடைய ரூபாகாந்த் காந்தன்,சரவணராஜா ஆகியரோடு நீங்கள் நடத்திய விவாதத்தையும் மீண்டும் ஒரு முறை நன்றாக வாசியுங்கள்.அப்போது ’பேனை பெருச்சாளியாக்குவது!' யார் என்பது தெரியும்.பரவாயில்லை மகஇக-வின் தீவிர ஆதரவாளர் என்று கூறிக்கொள்ளும் நீங்களே இந்த அளவிற்கு அந்த அமைப்பின் மீது தீவிரமான விசுவாசியாக இருக்கும் போது, அந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளவர்கள் எப்படிப்பட்ட விசுவாசிகளாக இருப்பார்கள் என்பதை புரியவைத்ததற்கு உங்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

//வார்த்தைக்கு வார்த்தை இயங்கியல், அறிவியல் பூர்வமான அணுகுமுறை என்கிறீர்கள்? இதில் எங்கேய்யா உங்களது அறிவியல் பூர்வமான அணுகுமுறை இருக்கிறது?//

என்று எமது கட்டுரையைப்பற்றி குறிப்பிடும் நீங்கள்தான் // Jana Kumaran நிறைய கோட்பாடு வார்த்தைகள் போட்டு பேசுகிறீர்கள். எனக்கு அந்த அளவிற்கு மார்க்சிய பரிச்சயம் உள்ளவன் அல்ல! உங்கள் பதிலில் நிறைய முரண்பாடுகள் வெளிப்படுகிறது.// என்று ரூபகாந்தனோடு விவாதிக்கும் போது கூறியிருக்கிறீர்கள்.

தோழர் ரூபகாந்தனோடு விவாதிக்கும் போது ”எனக்கு அந்த அளவிற்கு மார்க்சிய பரிச்சயம் உள்ளவனல்ல”,என்று கூறும் நீங்கள்தான் எங்களோடு உரையாடும் போது எமக்கு இயங்கியல் தெரியவில்லை என்று சான்றளிக்கிறீர்கள்.இப்போது கூறுங்கள் யாருடைய பதிலில் முரண்பாடுகள் வெளிப்படுகிறது என்று!

இப்படி நீங்கள் முன்னுக்குபின் முரணாக கூறுவதே நீங்கள் மகஇக-வைச் சேர்ந்தவரா,சேராதவரா என்பதை காட்டிக்கொடுத்துவிடுகிறது.மொத்தத்தில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று கூறிய உங்களுக்கு மீண்டும் எமது நன்றிகள்.

குமரன் said...

உங்கள் நீண்ட பதில் பார்த்ததும், "நான் பில்லா இல்ல!" என்ற வடிவேல் ஜோக் தான் நினைவுக்கு வருகிறது. நான் மகஇக காரன் என உறுதிப்படுத்துவதில் எவ்வளவு பிரயத்தனப்படுகிறீர்கள்? மகஇகவையும், வினவையும் திட்டித்தீர்ப்பதில் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறீர்கள். இதில் என்னை மாதிரி ஆளையெல்லாம் இழுப்பது எல்லாம் உங்களின் நிலை பரிதாபத்திற்குரியது என்பதை தான் காட்டுகிறது!

Prakash said...

அய்யா,

படித்துவிட்டேன். அதில் உங்களது அமைப்பு பற்றிய விபரம் இல்லை. உங்களது அமைப்பு பற்றியும் நீங்களிதுவரை நடத்தியிருக்கிற போராட்டங்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்

suraavali said...

நண்பர் pk edison அவர்களுக்கு நாங்கள் விவசாயிகளை அணிதிரட்டும் விவசாய அமைப்பாக செயல்படுகின்றோம்.

ஐந்தம்ச கோரிக்கையை விவசாயிகளிடம் கொண்டு சென்று அணிதிரட்டுவதுதான் எங்கள் முதன்மையான பணி.

அமைப்பின் பெயர்: விவசாயிகள் விடுதலைப் பேரவை-தமிழ்நாடு

suraavali said...

நண்பர் pk edison அவர்களுக்கு

//உங்களது அமைப்பு பற்றியும் நீங்களிதுவரை நடத்தியிருக்கிற போராட்டங்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்//

ஊழல்:கயவாணி அண்ணா ஹசாரேவும், நக்சலைட்டுகளின் நேரடி நடவடிக்கையும்... !
http://suraavali.blogspot.in/2011/08/blog-post_16.html